என்னது? ஜெயமோகன் மறுபடியும் பாண்டாக்களால் தாக்கப்பட்டாரா?
July 21, 2019
இது என்னடா, நம்ப தமிளிளக்கியத்துக்கு வந்த சோதனே! :-(
முதலில் இதனைத் தவறுதலாகப் படித்துவிட்டேன். அதாவது, போண்டாக்களால் அடிக்கப்பட்டாரென்று. ஏற்கனவே இட்லிதோசைமாவு குறித்து ஏதோ தள்ளுமுள்ளு மாவோயிஸ்ட் (என்னது? என் பெரும்பேராசான் ஜெயமோகனை மாவோயிஸ்ட்கள் என்கௌன்டர் செய்துவிட்டார்களா? ) விவகாரங்களில் மாட்டிக்கொண்டும் இருக்கிறாரல்லவா அவர், பாவம்? ஆக, பின்னர் இந்தக் கதையாடல், போர்க்காலரீதியில் வடை பொங்கல் பக்கோடா புரோட்டா இன்னபிறவற்றாலும் வரிசையாகப் பந்தியில் பரிமாறுவது போலத் ‘தாக்கப்பட்டார்’ என நீளுமோ என்றும் கவலைப் பட்டேன். :-(
நல்லவேளை, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தக் கட்டுரையைத் தேடிப்பிடித்துப் படித்தேன்; எப்போதோ நடந்த(?) விஷயத்தைப் பற்றித்தான் அவரும் ஒரு பில்ட்-அப் கொடுத்து எழுதியிருக்கிறார்.
நானும் ஜெயமோகனின் நலம்விரும்பிதான். நான் அகங்காரம் பிடித்த கர்வி என்றாலும், வெறுப்பியத்தால் கம்ப்ளீட்டாக மூழ்கடிக்கப்பட்டவன் என்றாலும் – அவர் ஒரு மகத்தான புனைவு எழுத்தாளர் என்றாலும் அப்படித்தான், என்னை மன்னித்துவிடுங்கள்! பலமுறை கொனாரக் பூரி கெளங்கு கயா என்று ஊர்சுற்றியிருந்தாலும், சிலபல பண்டாக்களுடன் ஃபேண்டா அருந்திக்கொண்டே ஃபண்டாஸ்டிக்கல்லி சுவைமிகுந்த(!) வாக்குவாதங்களில்(!!) ஈடுபட்டிருந்தாலும், எனக்கே ஆச்சரியம் தரக்கூடிய விதத்தில், எந்த பண்டாவும் என்னை அடிக்கவில்லையென்றாலும்கூட, நான் சர்வநிச்சயமாக ஜெயமோகனின் உடல்/மனநல விரும்பிதான். அலக்கியச் சனியனையே விடுங்கள்!
ஆகவே, எதிர்காலத்தில் செஞ்சீனாவுக்கு அவர் செல்லக்கூடும்போது, நம் டகீல் எழுத்தாளப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இப்படியும் ஒரு செய்தி வரலாம். ஆக உங்களுக்கு மிக முன்கூட்டியே அச்செய்தியை முந்தித் தந்து, தங்களுடைய தாங்குதிறனை அதிகரிப்பதற்காக (=very salty crowlike) ஒரு முன்னேற்பாடாகத்தான் உங்களைத் தயார் செய்கிறேன், சரியா? (உங்கள் நலம்விரும்பியும் நானேதான்!)
-0-0-0-0-0-
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் சீனாவிலும் பாண்டாக்களால் தாக்கப்பட்டார்!
பெய்ஜிங், 1 ஏப்ரல் 2020: உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், உயிரியல் பூங்கா ஒன்றுக்குச் சென்றிருந்தபோது பாண்டாக்களால் துரத்தித்துரத்தித் தாக்கப்பட்டார். முழுச் செய்தி கீழே.
உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், உலகப் புகழ் பெற்றவர் என்பது நாமறிந்ததே.
பாண்டா விஜயம்
உலகப் புகழ் பெற்ற ஏழாவதுஅறிவப் பாண்டியப்பெருவழுதி இளம்பொறை மற்றும் உலகப் புகழ் பெற்ற குங்க்பூ, உலகப் புகழ்பெற்ற நாகர்கோவிலில் இருந்து சீனா சென்ற வரலாற்றுத் தடத்தை ஒட்டி அவர் தம் வடகிழக்குத்திசைதேர்வெள்ளப் பயணத்தை, தம் கஷ்டமித்திர பந்துக்களுடனும் பேட்களுடனும் கிரிக்கெட்டாலும் மேன்மக்கள் கீழ்மக்களே, என செய்துகொண்டிருக்கும்போது, பாண்டாக்கள் வசிக்கும் பிரசித்திபெற்ற பெய்ஜிங் உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருக்கிறார்.
அப்போதும் அவருக்கு முன்னெப்போதோ பலமுறை பாண்டாக்களினால் தான் குரூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறேன் எனப் பலமுறை சொன்னது நினைவுக்கு வந்திருக்கிறது. ஆகவே கொஞ்சம் நிதானமில்லாமல் பதற்றத்துடன் இருந்திருக்கிறார் என்று நம்பத்தக்க வட்டாரங்களும் சதுரமூலைவிட்டங்களும் சொல்கின்றன.
பாண்டாக்களுடன் விவாதம்
அப்போது, பாண்டாக்களுடன் 1) அவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள ஆழ்மனக் கனவிலி நனவிலித் தொடர்பு + 2) பாரதப் பாண்டாக்களுக்கும் சீனப் பாண்டாக்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு போன்ற கலாச்சார, ஆன்மீகமரபுரீதிகளில் உள்ள உள்வாங்கிய அடிப்படைப் புரிதல்களுடன் – நுண்ணுணர்வுடன் நுணுக்கமாக அணுகவேண்டிய முக்கியமான விஷயங்களை நுனிவரை பேசிக் கலந்துரையாட முயன்றார்.
ஆனால், அப்போதே அசிரத்தையுடன் இவரைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாண்டாவை இவர் அவதானிக்கவில்லை.
அது மூங்கிக் குருத்தைக் கடித்துக்கொண்டிருந்த அளவு சுவாரசியத்தைக் கூட ஜெயமோகனின் கருத்தின்மேல் காண்பிக்கவில்லை.
பிற பாண்டாக்களும் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. அவைகளுக்கு, உலகப்புகழ் பெற்ற ஆன்மீக இலக்கியவாதியின் ஆகிருதி பற்றித் தெரியவில்லை. எப்பபாண்டா இந்தமனிதன் வாயை மூடுவான் என மூங்கில்குருத்தே கண்ணாயினார் எனச் சலித்திருந்தின. பசித்திருந்தன. விழித்துக்கொண்டிருந்தன.
பிரச்சினைக்குரிய பாண்டா
அச்சமயம் கொஞ்ச நேரம் பொறுமையுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த முதல் மூங்கில் குருத்துப் பாண்டா (அதுதான் தலைமைப் பாண்டா, ஆனால் கண்ணைச் சுற்றி மையிட்டிருந்ததாம்! என்ன மையலோ!) இயம்பியது, “யோவ் எள்த்தாளர்! நீ வார்த்தைவார்த்தையா அல்லது வரிவரியா ஜீப்ரா மாரீ பேசு! இப்டியா பத்திபத்தியா பக்கம்பக்கமா மூச்சுவிடாம பேசுவே?”
பதிலுக்கு, பெரும்பேராசான் என மிக அன்புடனும் வாஞ்சையுடன் தமிழ் ஆர்வலர்களால் அழைக்கப்படும் ஜெயமோகன் சொன்னார்: “என் தமிழில் ‘அக்கம்பக்கம் பார்த்துப் பேசு’ என்று சொல்லியிருப்பதால் நான் பக்கம்பக்கமாகப் பேசுகிறேன். ரொம்பத் துள்ளினால், உன்னையும் ஒரு மஜாபாரதப் பாத்திரமாகச் சேர்த்து விம்பார் தேய்த்துக் கழுவி ஊற்றிவிடுவேன், ஜாக்ருத்!”
தலைமைப் பாண்டாவுக்கு இதனைக் கேட்டதும் ஒருங்கே பயமும் கோபமும் வந்துவிட்டதன் படம் கீழே:
பாண்டாவ யுத்தம்
இந்த உரையாடல் சூடு பிடித்து, ஜெயமோகன் பாண்டா கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்து, “டேய்! நீதான் பாயும்புளி பாண்டாரக வன்னியன் என நினைத்திட்டாயா?” எனக் கோபத்துடன் வினவியிருக்கிறார்.
பதிலுக்கு அந்தப்பாண்டாவும், “யோவ்! நீ மட்டுந்தான் கர்ணாநிதி பட்ச்சிக்கீறியா? அந்தாள் எள்தினதே எங்க சாப்பாட்டத் திருடி அதக் கூழாக்கி செஞ்ச காய்தத்லதாண்டா! எங்ககிட்டயே டகீல் வுட்றயா? றொம்ப பேஸ்னா மருத்வர் ராம்தாஸ்கிட்ட போட்டுக்குட்த்ருவேன்!” எனக் கோபத்துடன் சொல்லியிருக்கிறது.
ஜெயமோகனும் பதிலுக்கு, “டேய் பாண்டா, என்னப் பத்தீ வேணும்னா சொல்லு, ஆனா, மு.கருணாநிதியப் பத்தீ ஒண்ணும் சொல்லாத! திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன்.” என்றார்.
பாண்டா, “யோவ் எள்த்தூ! நிற்த்தூ!! Don’t bloody overdo it!” என்ற தருணத்தின் படம் கீழே.
இப்படியே ஜெயமோகனும் பாண்டாவும் விபாண்டாவாதத்தைத் தொடர்ந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஜெயமோகனுக்கு பலத்த அடி (என்று சொல்கிறார்).
மருத்துவமனையில் அவர் உடனடியாகச் சேர்க்கப்பட்டு, படுபீதியளிக்கும் வகையில், அந்த அனுபவங்களையும் 48 பதிவுகளாக எழுதித் தொடர்ந்து வெளியிடவிருக்கிறார் என்பதைக் கலவரமடைந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, கிலியுற்ற பாண்டாக்களும் சமாதானத்தையே விரும்புகின்றன.
தலைமைகண்மைப்பாண்டா ஒரு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கிறது: “எங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இடுக்கண்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இனி இந்த விஷயத்தை ‘உங்களுக்கும் வேண்டா எங்களுக்கும் பாண்டா’ என விட்டுவிடுகிறோம். ‘தமிழ் மக்கள் என்றுமே பாண்டாக்களின் நண்பர்கள்’ என அன்றே சொன்னாரல்லவா அண்ணா, பிரதிவாதி பயங்கம் ஐயங்கார்?”
ஆனால் இந்த விஷயத்தை அப்படியே லூஸ்ல வுட்டுவுடாமல், காவல்துறையினரும், சீன நிருபர்களும், மேலே ஜெயமோகனைத் தூண்டித் துருவி, ‘நீங்கள் ஏன் பாண்டாக்கூண்டிக்குள் சென்று உரையாட முயன்றீர்கள்? அதுதானே முதற்தவறு?” எனக் கேட்டதற்கு அவர், “அபாண்டவக் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிப்பதாக இல்லை. இத்துடன் இதனை முடித்துக்கொள்கிறேன்!” என்றார்.
மேலும் தொடர்ந்து, “என் வாசகர்களுக்காகத் தான் நான் அந்த உரையாடலைச் செய்தேன். நீங்கள் ஹிந்துத்துவாவா?” எனப் பதில் கேள்வி கேட்டதும் சீனக் காவல்துறையினரும் நிருபர்களும் மிகவும் குழம்பிப்போய், வாய்மூடி மௌனிகளாகி, எவற்றின் நடமாடும் பின் தொடரும் நிழலின் குரல்வளைகளானோம் என இருப்பின் அவஸ்தையை உடனடியாக உணர்ந்து புறமுதுகிட்டோடி பக்கத்து முருங்கமரங்களில் திரும்பவும் ஏறிக்கொண்டனர்.
தற்போதைய நிலவரம்
தற்போது அவர் நிலை ஸீரியஸ்ஸாக இல்லை. நண்பர்களுடனும் வாசக அன்பர்களுடனும் அருமையாக வெண்முரச ஜோக்கடித்துக்கொண்டும் பகடி செய்துகொண்டும் வழக்கம்போலவே மஜாபாரதத்தில் இருக்கிறார் என ஷின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
-0-0–0-0-
பின்பாண்டாகுறிப்பு:
மேற்கண்ட நிகழ்வைக் குறித்து அவருடைய வெண்முரசு புத்தகம் 1008, அத்தியாயம் 10008 குறித்த வெண்முரசுடிஸ்கஷன் தள வியாக்கியானத்தில் இப்படிக் குறிப்புகள் வரலாம்.
“…சீனதேச பாண்டாக்களிலிருந்துதான் பாண்டவர்கள் என்ற படிமம், மஜாபாரதத்தில் உருவாகியிருக்கவேண்டும் என டிடிகோஸம்பியும் தேவிப்ரசாத் சட்டோபாத்யாயாவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்… அதையேதான் மோனியர்வில்லியம்ஸ் அகராதியும் வழிமொழிகிறது.
…டாலமியும் ப்ளூடார்க்கும் இப்படியேதான் சொல்லியிருப்பர் என என் கிரேக்க வாசகர் ஸாக்ரடீஸ், பல நாட்கள்முன் எனக்கு ஃபோன் போட்டுச் சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது.
…சீன பாண்டாக்களுக்குப் பிடித்தது மூங்கில். பாரத பாண்டவர்களுக்குப் பிடித்தவர் வேணுகானம் இசைக்கும் வேணுகோபாலன். கிருஷ்ணன். வேணு என்றால் மூங்கில். இப்போது புரிகிறதா ஆதிகாலப் பாண்டா-பாண்டவத் தொடர்புகள்? இதனை மேலும் நேரடியாக ஆய்ந்தறியத்தான் சீனா சென்றேன்.
…என் ஆகிருதிக்கு, பாண்டவர்கள் என்னுடைய வெண்முரசு ஆட்டத்தில் இருந்து கௌரவமாக எப்போதோ விலகியிருக்கவேண்டும். ஆனால் நேர்மையான முரணியக்கத்துடன் என்னை எதிர்கொள்ளாமல், முரட்டுத்தனமாகச் சூதின் வடிவான விசையுடன் மேலெழும்பிய கசையுடன் கிழக்குப்பூர்வ திசையிலிருக்கும் அயோக்கியன் பாண்டாவன், பேருரையாடிச் சலித்த நான் சற்றே அயர்ந்திருக்கும் தருணத்தில் கீழே தரையில் அறைந்து ஆணையிடுவதற்குப் பதிலாக, ஆக்கியோனாகிய என்னையே பளாரென்று அறைந்துவிட்டானே! ஐயகோ!!”
–எனக்குத் தெரியும், எம் சகதமிழ்வாசகர்களின் கல்நெஞ்சமும் எதையும் தாங்கும் இதயமும். அவர்கள் இதனையும் கடந்துவிடுவார்கள் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.
நன்றி.
July 21, 2019 at 11:46
பாப்பார திமிர் அடக்கறவிதத்ததில அடக்குவோம்
July 21, 2019 at 13:43
உண்மைதான். நான், போப்பாண்டாவர் இல்லையானாலும் நீங்கள் சொல்வதுபோல பாப்பாண்டாவர்! ;-) போதுமா?
ஆனால் வெறுமனே பயமுறுத்தாதீர்கள்! நடுக்கமாக இருக்கிறது. :-(
மற்றபடி, தாங்கள் முடிந்ததைச் செய்துகிழித்துக்கொள்ளவும். உங்கள்வழி அடக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
July 21, 2019 at 13:52
[removed this comment in toto; was in atrociously bad/unacceptable language, EVEN by my standards! (ed)]
July 21, 2019 at 17:46
எஸ்ரா நினைத்திருப்பார்: நல்ல வேளை, இப்ப ஜெமோ மாட்டிக்கிட்டார். அப்பப்ப மொழிபெயர்த்து நம்மை அப்பினாலும், மொத்தமாக ஒரு காட்டுரையை இப்போதெல்லாம் ஒத்திசைவு ஒதுக்குவதில்லை.
July 21, 2019 at 19:10
ஐயா! தாங்கள் நல்லவரா, கெட்டவரா?
எஸ்ரா அனுதாபியா, அல்லது ஜெமோ தேம்பித்தேம்பியா? அல்லது சாருவின் லத்தீ அமெரிக்க சினேகிதரா? அல்லது ‘மேற்பட்டவர்களின் கன்யாயாஸ்த்ரீயா?’ (nun of the above)
உங்கள் முயற்சியில் தளர்ச்சியடையாமல் உடனடியாகப் பதில் சொல்லாவிட்டால், என் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும் (dried ginger hundred like leave) போலிருக்கிறதே?
:-(
July 22, 2019 at 08:58
வெ ரா அவர்களே அந்த nun of the above முடியலே முடியலே ரொம்பவும் முடியலே.எப்படி இப்படி யோசிக்கிள்றீர்கள்? சிரித்து சிரித்து வயிறு வலிக்கிள்றது. டாக்டர் செலவு நீங்கள் தான் தரவேண்டும்.
July 22, 2019 at 09:47
ஐயா, நான் வேலைவெட்டியற்றவன். அதனால்தான். கொஞ்சம் விரைவாக, விரைவீக்கத்துடன் தட்டச்சு செய்யக்கூடியவன். அதனாலும்தான்.
மற்றபடி, உங்களுக்கு வேறேதோ பிரச்சினை. மகப்பேறு மருத்துவர்களை அணுகவும். நன்றி.
July 21, 2019 at 19:32
Pandastic :)
July 21, 2019 at 19:38
யோவ், ண்ண்றீ! ஆனாக்க, அந்த குச்சியத்தான அந்த பாண்டா வாய்ல வெச்சி மென்னுக்கினே நம்ப பெரும்பேராசான மொறக்கற போட்டோவ சின்னுவா ஏஜண்சி காரனுவோ போட்ருக்கானுவளே!! பாக்லியா?
July 21, 2019 at 20:33
really humorous. Thanks for the entertainment.
July 22, 2019 at 09:45
முத்தூ!
இப்பதாம்பா படாரிலீஃப்! கோச்சிப்பியோ நென்ச்சி கொஞ்சம் பேஜாராரேய்ட்டேன்.
இப்ப ஜாலி.
நண்றீ.
July 23, 2019 at 08:27
[…] ஜெயமோகன் மாவோயிஸ்ட்களாலும் பாண்டாக்களாலும் கருணையற்றுத் […]