காளிமார்க் – குறிப்புகள்

July 19, 2019

…என்னுடைய சிறுவயதில் இதனைக் காமுற்று, ஏங்கிஏங்கி, ஆனால் ஒரிரு தடவை மட்டுமே குடித்திருக்கிறேன் என நினைவு.

காளியைப் பொறுத்தவரை இந்தத் தரவு மட்டும்தான் என்னிடமிருக்கிறது என்பதையும் முன்னமேயே சொல்லிவிடுகிறேன்.

…ஆனால், ஐய்யய்யோ – ஆகவே, உடனடியாக எனக்கே தெரியாமல், ஒரு தமிழலக்கியக் காரன்போல, இதிலும் நான் மேதாவி-விற்பன்னன் ஆகிவிட்டேனே! ஐயகோ! என் ஞானத்துக்கு அளவேயில்லையா? :-(

சரி. எனக்கு அறிமுகமான காளியின் தற்போதைய பரிணாம வளர்ச்சி, மூன்று திக்குகளில் திடுக்கிடவைக்கும் வகையில் திக்கிக்கொண்டே இருக்கிறது எனவொரு அனுமானம்.

முதல் திக்:

காளிமார்க் கோலிசோடாகாரர்கள் வளர்ந்து பொவோண்டோ கிவண்டோ எனப் பெரிய அளவில் வியாபாரத்தை விஸ்தரித்துவிட்டார்கள். இது நல்லதுதான்.

ஆதாரம்: https://kalimarkbovonto.com/ 

இரண்டாம் திக்திக்:

சிலபல வருடங்களுக்கு கணிநித் தொழில்நுட்பம் தொடர்பான காளி லீனக்ஸ் எழவின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தேன்; இந்தச் சனியனை, எங்கள் சிலபல ஸாஃட்வேர்களின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பரிசோதனை செய்துபார்ப்பதற்காக உபயோகித்தோம்.

ஆதாரம்: https://www.kali.org/ 

மூன்றாம், அல்டிமேட் திக்திக்திக்:

ஆதாரம்: https://www.jeyamohan.in/123946

சிலிகா நீர்ப்பரப்பின் ஒரு தீவுக் குன்றில் காளிஜெய் எனும் கடவுளாயினிக்குக் கோவில் இருப்பதும் அது சிலபல நூற்றாண்டுகளாகப் படு ஃபேமஸ்ஸாக இருப்பதும் (ஆனானப்பட்ட ஜெயமோகனாலுமே கண்டுகொள்ளாமல் விடப்பட்டாலும்) உண்மைதான்.

…ஆனாலும்… இந்த அட்ச்சிவுட்ட வெளாசல், காளி பவுண்டரி என்ன, ஸ்டேடியத்துக்கு வெளியே வாகனங்கள் நிறுத்திவைக்குமிடத்திற்கே பந்தை அனுப்பிவிட்டதே! பந்தரபுர விட்டலா! காப்பாற்றப்பா!!

ஐயா, இப்படியே மானேதேனே மண்டைமாலையே எனத் தொடர்ந்து — வெண்முரசுக்கு அடுத்து காளிபுராணம் அல்லது செங்குருதிஉடுக்கை என எழுத ஆரம்பித்து, நம் இடுக்கண்களையெல்லாம் நட்புரீதியில் களைந்துவிடுவாரோ?

ஏஎல்பாஷம், பாவம். இந்தப் புகழ்ச்சியைக் கேட்டு ‘என்னது? நான் அப்டீ சொன்னேனா??’ எனத் திடுக்கிடமுடியாமல் எப்போதோ போய்ச்சேர்ந்துவிட்டார்.

…ஆனாலும், ஒதிஷாவில் இருக்கும் பிரமாதமான நதிவளம், அவற்றின் ஒழுக்கிற்கு மத்தியபாரதப்பகுதிகளின் ஊற்றுக்கண்களே, பேஸின் நிலப்பரப்புகளே/வாட்டர்ஷெட்களே காரணம் என்பதை மறந்து, புரட்சிப் புயலாக இப்படியா ‘ஒரிசாவுக்கு நீரை அள்ளித்தருவது புயல்களே’ எனச் ஒதிஷாப்புலப்புயல்நீரார் என நீட்டி முழக்குவது? ஹ்ம்ம்??

காளியின் வரலாறோ காளிமார்க்கின் வரலாறோ தெரியாமல் இப்படியா “<துறை வல்லுநர்> சொன்னார் என <ஜெயமோகனின் சொந்த சரக்கை>” அட்ச்சிவுடுவது?

ஃபானி புயலைத் பின்தொடர்ந்த நிழலான, மேலும் ஃபன்னியான குறிப்பு இதுதான். என்ன செய்ய.

“புரியே ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது என்று பயணியாகிய டாலமியின் குறிப்புகள் சொல்கின்றன.”

! அப்படியா என்ன? என்னடா இது விபரீதம்! :-(இப்படியா வெட்கமின்றி அட்ச்சிவுடுவார், மனிதர்? இவற்றுக்கெல்லாம் ஒரு சான்று, ஒரேயொரு சான்றாவது கொடுக்கமுடியுமா?

1. இந்த டாலமி, பயணியல்லர். மார்க்கோபோலோ இப்ன்பதூதா யுவான் ஷாங் போன்றவர்கள் போலல்ல அவர். அலெக்ஸாண்ட்ரியாவில் உட்கார்ந்துகொண்டு, அவருக்கு வந்துசேர்ந்த விவரங்களை வைத்து எழுதியவர்தாம்.

2. டாலமி, புரி பற்றியும் எழுதவில்லை.  குருமா பற்றியோ குருமாபூர்ணிமா பற்றியோகூட எழுதவில்லை. அது துறைமுகமாக இருந்தது எனவும் எழுதவில்லை; மாறாக பௌலூர் அல்லது பலூர் பற்றி எழுதியிருக்கிறார். அது கஞ்சம் பக்கத்திலிருக்கும் சிற்றூர். ஒரு, அக்காலத் துறைமுகம். (இந்தவிவரணையும் இழுபறியில் இருக்கிறது)

3. டாலமி, வெறும் குறிப்புகளை எழுதவில்லை. மாறாக, அவரால் முடிந்த அளவில் கறாராக, ஒரு ‘புவியியல்’ புத்தகத்தை எழுதினார். இருந்தாலும் – அவர் எழுதியவைக்கும் உண்மை புவியியல்/கலாச்சார நிலவரங்களுக்கும் பெரும்பான்மையான சமயங்களில், சுத்தமாகத் தொடர்பேயில்லை, இருந்திருக்கவில்லை என்பதுதான் அறிஞர்களின் ஒருமித்த கருத்து.

…என்ன, “டாலமி என் வீட்டுக்குவந்து கிரேக்கத் தத்துவமரபுகளைப் பற்றிய அரிய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்; நாங்கள் கம்போளத்திற்குச் சென்று பழம்பொரி சாப்பிட்டோம். பேச்சுவாக்கில், வெண்முரசு குறித்து ஒரிருமுறை என்னைச் சிலாகித்துக் கடிதம் எழுதிய என் கிரேக்க வாசகர் ஸாக்ரடீஸ் நலமாக இருக்கிறாரென அறிந்தேன். இரண்டு பாக்கெட் இட்லிதோசைமாவு வாங்கி அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன்” என அவர் எழுதவில்லை. இதற்கு நாமெல்லாம் அவருக்குக் கடன் பட்டிருக்கிறோமல்லவா?

…சொல்லப்போனால் – அவருடைய இந்தக் கட்டுரையிலும் பெரும்பாலான தகவல்பூர்வ விவரணைகள் தவறு. (அம்மாதிரித் தவறான விஷயங்களின்மீது அவர் மகிழ்ச்சியுடன் சமைத்துப் பரிமாறியுள்ள கருத்துகளையே விடுங்கள்!)

கொசுறு திக்திக்திக்திக்:

‘சேக்காளி’ என, நம் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் பரவலாக உபயோகிக்கப்படும் சொல்லும் ஒதிஷா காளியிடமிருந்து கடன்பெற்றதுதானாம்.

ஆனால் வக்காளி எனும் சுந்தரவசைச் சொல்லுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனவும், தொ.பரமசிவம் போன்ற அறிஞ்ஜர்கள் சொல்கிறார்களாம், நல்லவேளை!

யாதுமாகி நின்றாயே காளீ!

என் ஆத்தா!!

எம்மைக் காப்பாற்றம்மா!!!

சுயவெறுப்புக்குறிப்பு: ஜெயமோகனுடைய ஆகிருதிக்கும் அடிப்படைத் திறமைக்கும் இப்படியெல்லாம் விக்கீபீடியா படித்துவிட்டுப் பீலாவிடவேண்டிய அவசியமேயில்லையே! ஏனிப்படித் தொடர்ந்து, பலப்பலப்பல வருடங்களாக இப்படியே ஓட்டிக்கொண்டிருக்கிறார்?

 

14 Responses to “காளிமார்க் – குறிப்புகள்”

  1. JEMO Says:

    காழ்ப்பு பாப்பார புத்தி இப்டிதா எழுதச் சொல்லும. ஏதாச்சும் ஒரு விஷயத்த்த சாதிச்சிரிஉக்கியா சொல்லு

    நீ ஆயரம் சொல்லு, என்னப்போல ஆயிரம பேரு அவர் பின்னாடி. உன் பின்னால?போடா

  2. Vijayaraghavan Says:

    ஐயா, நீர் கில்லாடி தான் , தெருவில் போவது, வருவது எல்லாவற்றையும் உமது பதிவை படிக்க வைத்து விட்டீர்.சக ஏழரை களான எங்களை விட ஜெமோ கூட்டம் தான் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


    • ;-) ஐயா, ஆனால் அப்படியில்லை. படிப்பவர்கள் ஏழரையிலிருந்து நாலரைக்குக் குறைந்துவிட்டார்கள். ஐந்தரை சமயம் நிலவரம் இது. கலவரமாக இருக்கிறது. மார்க்கெட் டவுன்.

      மேலும், ஜெயமோகனுக்கு இளம்வாசகர்கள் (புதிதாக மதம்மாறியவர்கள்?) தொடர்ந்து வந்துவிழுகிறார்கள் என நினைக்கிறேன். ஆகவே இப்படியாகிறது. ஆனால், திருந்திவிடுவார்கள், கவலை வேண்டேல். ;-)

      • nparamasivam1951 Says:

        ஐயா, ஜெமோ இருக்க கவலை ஏன்? அவர்/அவரின் அபிமானிகள் ஒத்திசைவின் மார்க்கெட்டை டவுனிலிருந்து ‘அப்’ ஆக்கி விடுவார்கள்.


      • ஐயா, ஆதரவுக்கு நன்றி. சகஓத்திசைவு ஏழரைகளின் தானைத் தலைவராக உடனடியாக நீங்கள் ஏகோபித்து நியமிக்கப்படுகிறீர்கள்.

  3. Gopalasamy Says:

    I am a big fan of Ven murasu. I will complete the reading within fifteen seconds. But in Puri picnic , he told one important matter. he is still in liquid diet. I hope this would hurt the feelings of 5.5.

  4. Aathma Says:

    Kasappu Raman,

    Leave alone JeMo and Seenu.. please comment on the new education policy


    • Sir, thanks for the suggestion. I understand your best intentions. I have already submitted a very detailed personal feedback to MHRD. Also am part of a couple of groups/orgs which are in the process of feedback submitting docs.

      Many of my friends are very involved.

      The above ALL are in angrezi. Translation takes time and…

      The thing is, anyway there is way too much of ‘commenting’ happening in our dear TN circles and it is a rather easy job too. I don’t want to join the exalted club involving the likes of surya, isutair kurumavalavan et al. My inability. Apologies.

      However, I have made one public comment about DNEP – more like a comment(comment) – here – https://twitter.com/othisaivu/status/1150392003336630274

      Thanks for course-correcting me. I am irredeemable.

  5. Kannan Says:

    “ஜெயமோகனுடைய ஆகிருதிக்கும் அடிப்படைத் திறமைக்கும் …”

    I feel he is little overrated, Few weeks back, in an article about Namakkal Kavi and his friend it was mentioned that a conflict occurred between them and Pandas in Gujarat.

    Now Jemo says he was attacked similarly by Pandas in Odihsa, that too long back in 80’s. Never reported this previously in his writings as far as I could say or did he.

    It could be a coincidence, but a nice coincidence :)

    In the meantime I am busy reading “டீயுடன் வடை 25”


    • See, next in the exciting series, it could be the turn of the poor, bamboo shoot eating Pandas from China. Please wait with bated breath, okay?

      I think he is not overrated, but he is overrating himself. Sad fall. Or existence. what to do.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s