ஜெயமோகன் இருளிச் செய்த மஜாபாரதம்​

September 26, 2018

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன்.

நுடம் கொண்ட செடல்கள் நொறுங்கின. மரம் கொண்ட மதில்கள் மாறின. வெங்கல உருளியும், மங்கல வாவியும், சங்குலர் மங்கையும், வேங்கையின் கொங்கையும், ஸிங்குலர் ப்ளூரலும் முகிழ்ந்துதித்தன.

வெண்டைக்காய்ப் பொரியலும் சுண்டைக்காய் அவியலும் கத்தரிக்காய்க் கதையும் கலந்து முயங்கிய மரப்பாவைகள் பார்வையை வீசின. அனைவரும் போரின் நடுவிலே பொரியலா எனப் பொச்சரிப்புக் கொண்டு இஃது சரியல்லவோ என நனிமறந்து நற்சுவையாடினர்.

நெடுநெல்வாடை மிகுந்த அறுவடைக் காலத்தில் செம்பொன் அரிசிக்கதிர்கள் குதிர்களில் நிரம்பின. அசப்பில் அசிங்கமாக இருந்த அசங்கன் எனும் சங்கக் கவிஞன் புன்னகையை முகத்தில் சதிராட வரவழைத்துக்கொண்டான்.

பிற இசைச்சூதர்கள் சூது மிக வேறெங்கோ புன்னகைக்க, அசங்கனின் கரங்களை முறுக்கிப் பற்றி மும்முறை மண்ணில் தங்கள் மண்டையை அறைந்தனர். நான்மறை பற்றி நான் அருளியதுபோல நான்முறை நாவால் நாரைப்பறவைகளை குத்தீட்டிகளால் தீண்டிக் குலவையிட்டனர்…

‘அறுதியில் இல்லாத அறம் குருதியில் போம்’ என்றான் யுதிஷ்டிரன். ‘எனக்கு மாரத்தான் ரன் செய்யவேண்டும்’ என உத்திஷ்ட கருடத்வஜன் சொன்னதற்கு “விதையின்றி முளைத்த செடி விதையின்றி அமையாது இந்த ஆழி சூழ்வுலகத்தில்” எனக் கலகக் கலக்கத்துடன் விடை செப்பினான் செப்பினன் மாதேவ அர்ஜுனன்.

‘உளவிழிக்குள் விழிப்பதுவுக்கும் உளறிக்கொட்டி விழிப்பதுவுக்கும் உள்ள ஆறு வித்யாசங்கள் யாவை’ என யட்சன் கேட்டதற்கு, யட்சிணி சொன்னாள், ‘என் சகோதரி உலக்கை உலூபி, உன் மண்டையில் பொளேறென்று போட்டால் உடனே தெரியவரும்’ என்று.

ஆகவே யட்சனுக்கு விடை கிடைத்துவிட்டது. உடனே போர்க்கால ரீதியில் அங்கிருந்து அகன்று, மூங்கில் வேய்ந்த அங்காடிக்குச் சென்று இரானி டீ குடித்துவிட்டு, கோட்டையிலுள்ள அண்ணாவை அண்ணாந்து பார்த்து ‘புதுமைப்பதுமை புண்ணியகண்ணியம், புறப்பாடு என்பாடுஉன்பாடு’ எனப் பரவசத்துடன் பம்மினான். உடனடியாக அண்ணா சதுக்கப்பூதமானார்.

… ‘வாட் டு யூ மீன்?’ எனக் கொதித்தெழும்பிச் சலம்பிய இடும்பி, ‘செக் என்று நினைத்தாயா செம்படவா, தமிழ்படவா? என்னிடம் இருப்பது ஏடிஎம் கார்ட். பின் கொடுக்கமுடியாது. பொதுவிற்பனை வரி 18%. கூடுதலாக, ஜெயமோகனின் வெண்முரசு வரிகள் தனி – பதிவுக்குச் சுமார் 1,00, 000. வந்து அள்ளிக்கொள்ளவும், ஸ்டாக் இருக்கும்வரை விற்பனை; இன்றுமுதல் நாளை கடன். கண்ணைப் பார் சிரி. ஸவுண்ட் வோக்கே ஹார்ன். மழை நீர் சேமிப்போம்!’ என்றாள்.

அடுத்த, 345679ஆம் பாகம்: வெண்குமிழ்மூக்கு வரிக்குதிரை (குருக்ஷேத்திர யுத்த ஸீனில் எக்ஸ்ட்ரா வீரனாக ஸ்பெஷல் எஃபெக்டுகளுடன் பங்குபெற்ற கர்த்தபகுமாரன் எனும் பாண்டிய அரசன், கடைச்சங்கம் விரித்து நடத்தி நட்டப்பட்டதால், கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என, தம் பரிக்காகக் கொள்ளைக் கொள்ளையிடாமல், வெறுமனே கொள்முதல் செய்த படலம் (அல்லது) கழுதை கெட்டால் குட்டிச்சுவர்)

-0-0-0-0-0-0-

ஆ!

-0-0-0-0-0-0-

“டேய் ராம் – இப்படியா கண்ணைத் திறந்துகொண்டு தூங்கிவழிந்து இப்படி வாரிச் சுருட்டி உளறிக்கொட்டிக்கொண்டு எழுந்திருப்பாய்? ஏதாவது கெட்ட கனாவா என் கண்ணே?” என என் துணைவி கேட்டாள்.

நான் மூக்கில் சளியொழுக அழுதுகொண்டே சொன்னேன், “ஆம், என் கண்ணின் மணியே, மணியின் ஒளியே! ஒளிரும் மணி புனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே! வழக்கம்போலவே வெறுமனே வெண்முரசு படிக்கையில் தூங்கிவிட்டேன், ஆக, கொடுங்கனாக் கண்டேன் தோழீ!”

…இப்படியாகத்தானே பாவப்பட்ட பீமனும் அவன் இணைத் துணைவி இடும்பியும் – கடோத்கசன் எனும் பிள்ளையைப் பெற்றெடுத்தனர்.

ஆனால் அய்யன்மீர், அப்பிள்ளையின் பெயர் கடோத்கசன், கடோத்கஜன் அல்ல. கடோத்முழன் கூட அல்ல. ஆக சர்வ நிச்சயமாக, கடோத்சாண் எனவும்கூட இருந்திருக்கமுடியாது என்பதை ஜாக்கிசாண்  கங்க்-ஃபூ படம் பார்த்த உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

சரி. பொதுவாகவே, மஹாபாரதப் பெயர்களில் பெரும்பாலானவை ​காரணப் பெயர்கள். கடோத்கசன் (घटोत्कच) என்கிற பெயர் கடம் ( घटः  கடஹ், பானை) + உத்கசம் ( उत्कच: உத்கசஹ், முடியில்லாமை/மசுரில்லாமை) எனும் இரண்டு அர்த்தங்களை இணைத்து  உருவாக்கப்பட்டது.

கடோத்கசனின் மண்டை  பானை போலவும் அதுவும் தலைமுடியில்லாமலும் இருந்ததால் அவனுக்கு இப்பெயர். வழுக்கைப்பானைமண்டையோன். அடிப்படை மஹாபாரதக் குறிப்புகளைத் தெரிந்துள்ளவர்களுக்கு இது பாலபாடம்தான். மன்னிக்கவும்.

ஆனால் – ஜெயமோகன் அவர்கள் எழுதுவது – தொடர்ந்து கடோத்கஜன் என்று – ஆனால் இதனை ஒருவழியாக மண்டையில் அடித்துப் புரிந்துகொள்வதென்றால், அது பானையானை அல்லது யானைப்பானை என்று. ஆ!

ஜெயமோகன் இப்படியொரு அடிப்படைத் தவறுடன் எழுதுவது – அதாவது – தமிழில் அவ்வார்த்தையை முடிந்தவரை அதன் மூல ஓசைகளுடன் ஒத்திசைந்து சொல்லமுடியும் என்றாலும், விடாமல் தவறாகவே எழுதுவதற்குக் காரணங்களாக 1) உதாசீனம் 2) யார் சரிபார்க்கப் போகிறார்கள் எனும் மனப்பான்மை 3) அறியாமை 4) விசைப்பலகை தட்டச்சுப் பிரச்சினைகள் போன்றவை இருக்கலாம்.

ஆனால், மூன்றாவது இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஜெயமோகன் சர்வ நிச்சயமாக, மஹாபாரத மூலங்களையும், உரைகளையும் படித்திருக்கவேண்டும். நான்காவதும் அப்படியே. ஏனெனில் ச ஜ ஸ எனத் தொடர்புள்ள அனைத்து சப்தங்களையும் தட்டச்சு செய்யமுடியும்.

ஆகவே 1 அல்லது 2 தான் சரியாக இருக்கவேண்டும். சோகம்.

​ஜெயமோகன் அவர்கள் எழுதிக்கொண்டேஏஏஏஏஏஏ இருக்கும் மஹாபாரதத்தில் இப்படிப் பல உச்சரிப்புப் பிழைகள். சரி, இவற்றை என் பொச்சரிப்பு காரணமாகச் சொல்கிறேன் எனக் கடாசலாம்.

ஆனால் பல சமயங்களில் தம் கற்பனைப் புரவியைத் தட்டிவிட்டு எங்கெல்லாமோ சஞ்சாரம் செய்து விடுகிறார். இவற்றுக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டாக, வெண்டி டொனிகர் போல மனோதத்துப்பித்துவ ரீதியில் தன் மனம்போனபோக்கில் காமப் பார்வை சேர்த்து கண்டமேனிக்கும் எழுதிவிடுகிறார் வேறு. இவர் எழுதுவதில் ஆக, (நான் படித்த சில சமயங்களில்கூட) மஹாபாரதத்தைத் தேடவேண்டியிருக்கிறது. சோகம். :-(

ஆக, பல சமயங்களில் வெண்முரசு மகாபாரதம் போலவே இல்லாமல் அவருக்கும் அவருடைய ரசிக அடிப்பொடிகளுக்கும் உற்சாகமும் ‘மஜா’வும் ​கொடுக்க – மஜாபாரதம் ஆகி விடுகிறது.

அங்கிருந்து – சிலபல சமயங்களில் மஹா அலுப்புதரும்படிக்கு, மஹாபோரதம் எனக்கூட ஆகிவிடுகிறது. இந்த வீழ்ச்சி என்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

நடக்குமா?

32 Responses to “ஜெயமோகன் இருளிச் செய்த மஜாபாரதம்​”

 1. Kannan Says:

  போராசனையே கிண்டலடிக்கும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா?, ம்ம், இருந்தாலும் அவுருதான் பெஷ்ட்டு !


  • இலுப்பைப் பூ, வேறென்ன சொல்ல. வரவர மிக அலுப்பாக இருக்கிறது. கோர நகைச்சுவை தேவை – ஆகவே எஸ்ரா, சாரு போன்றவர்களை மட்டும்தான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் படிக்கப் போகிறேன். பயமாக இருக்கிறது, கொஞ்சம் என் கையைப் பிடித்துக்கொள்கிறீர்களா?

   ரா.

 2. JeMoFan Says:

  தல, ஜெமோ போல அச்சீவ் பண்ணிட்டு இப்டி எழிது. கிண்டல் செய்றது ஈசி.


  • ஐயா, அறிவுரைக்கு நன்றி.

   மேற்கண்ட பதிவில், உங்கள் ஆசான் ஜெயமோகன் அவர்களைப் போலத்தான் ‘அச்சீவ்’ செய்ய முயன்றேன்.

   உங்கள் கருத்திலிருந்து அதனைச் சாதித்துவிட்டேன் எனத் தெரிகிறது. இதைத் தானன்றி ஆகச்சிறந்த பிறிதொன்றை எழுதவும் முயற்சிக்கவில்லை என்பதும். :-(

   அச்சீவ்க சிந்தாமணியான உங்களுக்கு ஒரு கேள்வி: இவ்ளோ ஈஸியா, ‘அச்சீவ்’ செய்வது என்பது? ஹ்ம்ம்??

   ரா.

   • JeMoFan Says:

    ​புரமுதுகா? ஒடாமல் பதில் கொடுக்க்வும்​


   • :-( என்ன உளறல், ஓட்றா புண்ணாக்கு.

    முதலில் உம்முடைய தமிழ் தட்டச்சுத் திறனைக் கவனிக்கவும். பின்னர் சாவகாசமாக உளறலாம். நல்ல ஆசான். நல்ல வாசகன். போங்கடா!

   • JeMoFan Says:

    வருத்த்மாக இருக்க்கிர்றது.பெண்ணைக் கேவலப்படுத்தவதில் உன்னைPப்ப்போன்dர ஆணியியக்கவாதிக்கு ​இருக்கும் ஆர்வம் பயம்மளிக்கிரது.


   • Oh! You are a MADAM?

    I did not realize that. So, sorry I used the wrong gender to refer to you. Obviously, you have been rattled, your harried typing in tamil via english shows.

    But as a true ‘Nail Movement Advocate’ I would request you to please get the hell out of here.

    Being a lady does NOT give you a right to be ignorant, sorry. Go the original sources – not to the stupid konaar notes of your freakin’ asaan. I do not want to nail you down any further.

    Please get lost. Thanks in advance!

    __r.

  • Swami Says:

   Dear JeMoFan

   I think you need to see this article in its context
   I don’t thinkJeMo’s scholarship or his contributions to modern Tamil fiction is being questioned(I guess I can safely speak for ‘Othisaivu Ram’ also here)

   But his ‘Venmurasu’ seems to be one massive ego trip, one that he could do well without. The constant egging on by his ‘adivarudis’ don’t seem to help either. His time and scholarship are definitely spent better elsewhere. He now seems to be spreading himself thin

   What is also irritating is his proclivity to give definitive judgement on topics that he knows little about (e.g. carnatic music, economics, governance). The ‘Guru manapangu’ is something that now seems entrenched, no thanks again to his band of ‘sishyas’

   Best regards

 3. A.Seshagiri Says:

  இது நீங்கள் எழுதியது ……
  “சரி. பொதுவாகவே, மஹாபாரதப் பெயர்களில் பெரும்பாலானவை ​காரணப் பெயர்கள். கடோத்கசன் (घटोत्कच) என்கிற பெயர் கடம் ( घटः கடஹ், பானை) + உத்கசம் ( उत्कच: உத்கசஹ், முடியில்லாமை/மசுரில்லாமை) எனும் இரண்டு அர்த்தங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

  கடோத்கசனின் மண்டை பானை போலவும் அதுவும் தலைமுடியில்லாமலும் இருந்ததால் அவனுக்கு இப்பெயர். வழுக்கைப்பானைமண்டையோன். அடிப்படை மஹாபாரதக் குறிப்புகளைத் தெரிந்துள்ளவர்களுக்கு இது பாலபாடம்தான்.”

  இது எங்கள் ஆசான் எழுதியது …..

  ” கடோத்கஜனின் உடலில் எங்கும் மயிரே இல்லை என்று முகம் அவன் மார்பில் அழுந்திய போதுதான் அசங்கன் உணர்ந்தான். ஆகவே அவன் உடலின் ஒவ்வொரு நரம்பும் எலும்பும் தசையும் நன்றாகத் தெளிய அவன் கருங்கல்லில் செதுக்கப்பட்டவன்போல தெரிந்தான்….
  கடோத்கஜன் தவிர பிறருக்கு உடலில் மயிர் இருந்தது. உத்துங்கனின் உடலில் காய்ந்த பாறைப்புல்போல செம்மைகலந்த மயிர் புறங்கையிலும் அடர்ந்திருந்தது. தாடி தேன்கூடுபோல் முகவாய்க்கு கீழே தொங்கியது. மீசை மென்மையாக மென்பாசிப்படர்வு போலிருந்தது.”

  “ஆம், இவரேதான். நமக்கெல்லாம் மூத்தவர், குருகுலத்து முதல் மைந்தர்” என்றான் அசங்கன். “இவரது தலைதான் குடம் போன்றிருக்கும். ஆகவே தான் இவருக்கு கடோத்கஜன் என்று பெயர்” என்றபின் சினி “ஆனால் இங்கிருந்து தலை தெரியவில்லை. மிக உயரம்…”

  எனவே நீங்கள் கூறியதும் ஆசான் கூறியதும் கிட்டத்தட்ட ஒன்றேதான் அவரை நீங்கள் குறை கூறியது தவறு என்றே நான் கருதுகிறேன்.


  • ஐயா, மன்னிக்கவும். அவர் தவறுகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவையெல்லாம் கவித்துவமோ என்ன எழவோ!

   நீங்கள் அவர் சொல்லியோ அவர் குழுமத்தில் விவாதித்தோ இப்படி எழுதுகிறீர்களா எனத் தெரியவில்லை.

   நான் எழுதியதை ஒழுங்காகப் படிக்கவும். மேலும், தாராளமாக – தயவுசெய்து நான் எழுதிய விஷயங்கள் சரியா என மட்டும் பார்க்கவும். அவர் எழுதிய மட்டம் எனக்குப் படிக்கவே பயமாக இருக்கிறது. ​ஒரு ஆரம்பித்தலுக்காக: குடம் எனும் கும்பத்துக்கும், மண்பானை எனும் கடத்துக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை.

   “கடோத்கஜனின் உடலில் எங்கும் மயிரே இல்லை” என உங்கள் ஆசான் அட்ச்சிவுடுவதற்கு

   ஒரு

   ஆதாரமாவது காண்பிக்க முடியுமா? ப்ரைமரி ஸோர்ஸ் வகையறாவாக?? (சும்மா அவசரமாக விக்கிபிடியா எழவை எடிட் செய்து காண்பிக்கவேண்டாம்; ‘அறம்’ வகை பம்மாத்தை நான் அறவே வெறுக்கிறேன்.)

   என்னுடைய இன்னொரு பிரச்சினை கசன் என்பதற்கும் கஜன் என்பதற்கும் உள்ள வித்தியாசம்.

   மறுபடியும் சொல்கிறேன், நான் எழுதியதை ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறேன். அவருடைய மஹாபாரதத் தவறுகளில் இது ஒரு சிறுதுளிதான்.

   அலுப்பாக இருக்கிறது.

   நன்றி.​

 4. K.Muthuramakrishnan Says:

  பல மாதங்களுக்கு முன்பு, மகாபாரதம் கும்பகோண‌ம் பதிப்பில் உள்ள வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் வேண்டி, ஆசானின் குழும உறுப்பினர் ஒருவர் ஒரு தொடரைத் துவங்கினார். நான் அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டேன்.அவர் தமிழ் மொழி பெயர்ப்பு வேண்டும் சொற்களைப் பட்டியல் இடுவார்.நான் அதற்கு தமிழ்ச் சொற்களைப் பதிவிடுவேன்.ஒரு சொல் ‘நந்தன்’ என்பது.அதற்கு நான் வாரிசு எனப்பொருள் கூறினேன். ஆசான் ‘ஆனந்தம்’ என்பதிலிருந்து வருவது நந்தன். எப்படி வாரிசு எனப்பொருள் கொள்ளலாகும்’ என்று குறுக்கிட்டார். நான் மோனியர் வில்லியம்ஸின் அகராதியில் இருந்து குறிப்புக் காட்டினேன்.மேலும் தசரதநந்தனன் என்றால் தசரத‌னின் மகன், என்றும்
  சகதிநந்தனன் என்றால் சக்தி குமாரன் என்றும் பொருள் கூறினேன்.பதில் இல்லை. அந்தத் தொடர் குழுமத்தில் நீகப்பட்டது. நான் குழுமத்தில் இருந்து விலகிக் கொண்டேன். ஆசானின் வடமொழி அறிவு பரந்தது அல்ல‌. எனவே கஜன், கசன் எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். நமக்கு எதற்கு இந்தக் கசம் எல்லாம்.


  • ஐயா முத்துராமகிருஷ்ணன், நவீண நந்தனார் புராணத்துக்கு நன்றி!

   கற்றது கைப்பிடியளவு என்றால் ஆசான், ‘”கற்றது என் பராக்கிரம முஷ்டியில் நான் சுளுவாகப் பதுக்கிக்கொள்ளக்கூடும் பெண்யானை அளவுக்கு!” என அட்ச்சிவுடும் தெகிர்யம் பெற்றவர்தாம்.

   நீங்கள் ஒரு உம் விகுதியைச் சேர்க்காமல் (உங்கள் நல்லமனதுகாரணமாக) விட்டுவிட்டீர்களோ? ‘ஆசானின் வடமொழி அறிவும்’ என இருந்திருக்கவேண்டுமோ?

   எது எப்படியோ, கோமாளித்தனங்களைக் கவனித்து, வெறுமனே சிரித்துக்கொண்டே அகலவேண்டும். அவ்வளவுதான்.

   இதுதாண்டா தமிழ் அலக்கியவாதி, வேறென்ன சொல்ல.

   ரா.

 5. Giri Says:

  அவர் குலசேகரன் என்பதற்கு குலங்களை சேகரிப்பவர் என்று பொருள் சொல்கிறார். அப்படி என்றால் சந்திரசேகரன் என்றால் சந்திரனை சேகரிப்பவரோ?


  • ஹ்ம்ம், ஐயா கிரி – அவர் எங்கு அப்படி எழுதினார் என்பதைக் குறிப்பிடமுடியுமா?

   எது எப்படியோ – இது கொஞ்சம் போல எஸ்ராதனமாக இல்லை? என்ன சொல்கிறீர்கள்? அட்ச்சுவுட்டாலஜிக்கும் ஒரு அளவு வேண்டாமா, சொல்லுங்கள்? :-(

   வரவர ஜெயமோகன், எஸ்ரா போல ஆனாராம்!

   • Giri Says:

    சில வருடங்களுக்குமுன் திண்ணை தளத்தில் படித்த ஞாபகம். குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.


   • ஐயா, சரி. வேறென்ன சொல்ல. ஆசான் சர்வ நிச்சயமாக அட்ச்சிவுடக்கூடியவர்தான்…

  • Swami Says:

   I would doubt if Jemo would have gone this far! This is more of YesRaw or Charu territory


   • Sir, that’s what we would think. But, he has in fact, said that! ATROCIOUS. :-(

    O tempora, O mores!

    (please stay tuned for the next installment) :-((

   • Swami Says:

    Dear Giri

    Just read the Ram’s latest post !

    My deep apologies for doubting the veracity of your statement/ memory

    I am sorry

    (Even more sorry to realise how deep has JeMo fallen :( )

 6. viji Says:

  Jeyamohan is great writer, don’t discourage him writing like this, moreover he won’t get hurt for this silly things . Try to read from the beginning . Telling fault is easy .


  • ஆ! நீங்கள் அம்மணி பெயரில் எழுதும் அம்மணரா அல்லது அம்மணி பெயருடைத்த அம்மணியேவா என்பது புரிபடவில்லை.

   அவர் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார் என்கிறீர்கள், ஆனால் நிறுத்து என்கிறீர்கள். புரியவில்லை.

   ஆனால் சர்வ நிச்சயமாக நீங்கள் அந்த 7.5களில் இல்லை என்பது புரிகிறது.

   உங்கள் மகாமகோஎழுத்தாளரைத் தலையில் வைத்துக்கொண்டு கூத்தாட, ஆண்டி அவர்களே, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.

   __ரா.

 7. Balaji Says:

  Sir,

  Thanks for giving us a good laugh.

  quote:ஸிங்குலர் ப்ளூரலும் முகிழ்ந்துதித்தன.
  Unquote : coup de maître of your jocularity !

  We tended to ask ‘ why this kolaveri?’
  We can easily recollect Thiruvillayadal and echoes of Nakeerer’s (Kutram Kutramee!) in your queries but as you got your ‘ conviction in the power of goodness’ , we hope this leads to more fine-tuning of Venmurasu (an avid reader pointed out this to Mr.JMo who responded to graciously / equivocally (?) !

  If you would keep going like this ( please read below), you could replace Mr.Seenu as a prime shisya of Jemo. All the best.

  https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_34.html

  Regards
  SB


  • இனிய பயம்,

   எனக்கு இனிமேல் பயமன்றி வேறொன்றுமில்லை. பிறிதொன்று உணர்ச்சி வரப்போவதில்லை.

   சிம்மம் விரும்பாத இரைகளுண்டு. எடுத்துக்காட்டாக, தயிர்சாதம்+ஆவக்காய் ஊறுகாய்.

   இதைக் கேள்விப்பட்ட அபிமன்யு உடனடியாக பீஷ்மரின் தலையைச் சீவினான்; நல்லவேளை, இதனால் சாந்திபர்வம் ஒன்று தப்பித்தது.

   பார்த்தன். சிரித்தன். பக்கம் வரத் துடித்தன். யுதிஷ்டிரர் சொன்னார் – எனக்குக் கண்ணனைப் பிடித்தாலும் கண்ணதாசனைப் பிடிக்காது.

   பிடிக்காது என்றால் வியாசன் விளக்கிச் சொல்வான் – அது பெண்யானையின் செவியென்று.

   (அடுத்த பகுதி: களிறின் கையறு நிலை)

   அன்புடன்,

   வடலூர் டேக்கு (எனும் சுடலூர் ஷாட்டு)

 8. Sathish Says:

  Simply a wow “post” – just got to this post by chance. Serendipity!!!! Well done R. அலக்கியவாதிகளின் அட்ராஸிட்டீஸ் அலுப்பாகத் தான் இருக்கிறது. This post is such a relief to my mind. Thanks for saving minds. Reading this again and again!! :-)

 9. K Muthuramakrishnan Says:

  பழைய பதிவில் என் பின்னூட்டம் உள்ளது. அதனை ஆசான் சுட்டி அவர் தளத்தில் எழுதினார் என்ற பெருமை எனக்கு உண்டு.


  • ஆகச்சிறந்த கொடும்பாவிகளுக்கு எதற்கெல்லாம் பெருமைப் படவேண்டும் எனும் பகுத்தறிவே இல்லை; ஆசான் கண்டமேனிக்கும் திட்டினாலும், அதையும் புகழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறார்கள்; என்ன செய்ய…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s