ஜெயமோகன், வீழ்ச்சிகள், வருத்தங்கள் – சில குறிப்புகள்

September 28, 2018

ஆ!

-0-0-0-0-0-

இரண்டு நாட்கள் முன் நான், ஜெயமோக மஜாபாரதத்தைப் பற்றி ‘ஐயகோ, இதனை யாரும் கேட்பாரே இல்லையா’ என ஏகத்துக்கும் பெட்டைப்புலம்பியதற்கு இரண்டொரு சக-வேலையற்றவர்கள் உதவிக்குக் கூடவந்து, ஆசுவாசம் அளிக்கும் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டத்திலிருப்பதைப் போல, அவர்களும் புலம்பினார்கள். :-(

புலம் பெயர்ந்த தமிழர்களை விட, புலம்பியே பெயர்க்கும் தமிழர்கள் அதிகம் என்பது இதனால் அறியப்பட்டது. அதில் ஒருவர் நவீண நந்தனார் கதை சொன்னார். இன்னொருவர் குலசேகரன்  பற்றி. பாவம்.

சரி. தற்காலத் தமிழ் இலக்கியம்/அறிவுஜீவியம் எனும் மகாகொடுமையான பாலைவனத்தைப் பற்றிப் புலம்பாமல் வேறென்னதான்செய்வதாம், சொல்லுங்கள்?

-0-0-0-0-0-

ஸ்ருதி ஸ்ம்ரிதி என ஆன்மிக மெய்ஞானத் தேடலில், சதா தத்வார்த்தமாகவே விஷயங்களைப் பகுத்துப் பிரித்து, வணக்கத்துக்குரிய மேயராக மேய்ந்து, தன் வாசகர்களை மேம்படுத்தும் மேய்ப்பராக தன்னை வரித்துக் கொண்டு மேய்த்து… ஓ அம்மே!

ஸ்ருதி என்பதற்கு சரியான உச்சரிப்புகள் முக்கியம். செய்நேர்த்தி முக்கியம். எந்தவொரு சொல்லிலும் செயலிலும் ஒத்திசைவு வேண்டும். சிறுசிறு செயல்களில் நாம் காட்டக்கூடும் கரிசனம்தான் பெருவெள்ளச் செய்நேர்த்தியாக பரிமாண வளர்ச்சியை அடைய முடியும்?

…ஜெயமோகனின் ஆக்கங்கள்/ஆகிருதி தொடர்பாக – இம்மாதிரி விஷயங்களில் எட்டு பெரிய பிரச்சினைகள் உருவாகிவிடுகின்றன.

அ.  நம் பாரம்பரியங்களில் நாம் போற்றத்தக்கவை என இருப்பவற்றைச் சரியாக அறியாமல் உதாசீனம் செய்வதை, நம் அசட்டையை — நம் பராக்கிரமத்தால், தேர்ந்த-செப்பனிடப்பட்ட செப்படிவித்தை நுண்கலையாக மாற்றும் ரஸவாதம்.

ஆ. ஆதார ஸ்ருதி என்று சொல்லிக்கொண்டே, ஸ்ருதிகளைப் படுகொலை செய்வது ஒரு புறம். இது தமிழ் மொழியில் இருக்கும்,  வரிவடிவம்-ஒலிவடிவம் குறித்த உறவுகள் சார்ந்த சிடுக்கல் பிரச்சினை என்றாலும் — இருக்கும் ஒலிவடிவங்களையாவது ஒழுங்காக உபயோகிக்கலாமே என்றால்… மாட்டவேமாட்டேன், என் சராசரி வாசகனுக்கு அது போதுமே எனும் மனப்பான்மை.

இ. இன்னொரு புறம் – படுகொலை செய்யப்பட்ட சொற்கள், மூல அர்த்தத்துக்குக் கிட்டேகூடப் போகாமல் வேறெங்கோ செல்வது. அனர்த்தம். ஹோம்வர்க் எனவொன்றைச் செய்யாமல் ஏன் மினுக்கிக் கொள்ளவேண்டும்? தெரியாத விஷயங்களைத் தெரிந்தவைகளாகக் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் தானென்ன?

ஈ. வேர்ச் சொற்கள், வார்த்தை உருவகங்கள், அவற்றின் கலாச்சாரப் பின்னணி டட்டடா டட்டடா – என ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ள முனைப்பில்லாமல், புத்தம்புதிதாக டகீல் அர்த்தங்களைக் கண்டுபிடித்து, மேம்போக்காக (ஆனால் உண்மையான, சரியான விஷயத்தை அறிந்துகொண்டுவிட்டாற்போல, ஒரு பிரமையில்) அட்ச்சிவுடுவது. அதாவது, தரமான செயலூக்கமோ – ஒருவிஷயத்தின் அடிவேர்-ஆணிவேரின் ‘நுனி’ வரை சென்று பரிசோதிக்கும் தன்மையோ இல்லாமல் கண்டமேனிக்கும் வாய்க்கு வந்ததை எழுத்தில் வடிப்பது.

உ. என் வாசகனுக்கு இதுபோதும். அவன் இந்த லெவல்தான். ஆக இதற்குமேல் எதற்குப் பிரயத்தனப் படவேண்டும்? உழைக்க வேண்டும்? இப்படி எழுதும்போதே குருவே எனக் காலடியில் விழுந்து புரளுபவர்கள் அதிகமாக இருக்கையில் நான் ஏன் செய்நேர்த்தி குறித்துக் கவலைப் படவேண்டும்? வேகமய்யா வேகம், அடுத்தடுத்து பதிவுகள் வந்துகொண்டே இருக்கவேண்டுமே!

ஊ. சுத்தமாகவே தெரியாத விஷயங்களை, முழுவதும் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவேண்டி வருவது ஒரு துர்பாக்கியமான நிலைமை.​

ஒரு விஷயத்தின் ஆழத்தையும் வீச்சையும் அடைந்துவிட்டதாக (ஆனால், வருத்தத்துக்குரிய அளவில், அதன் அடிப்படைகளையும்கூட அறிந்துகொள்ளாமல்!) நம்பிக்கொண்டு – பின்னர் ஆட்டோமேடிக்காக அனைத்து, பிற ஸப்ஜாட் ஸப்ஜெக்ட்களிலும் தனக்குத் துறை வல்லுநர்தனம் வந்துவிட்டதாக பிரமையில் மூழ்குவது சாதாரண, என்னைப் போன்ற போக்கற்ற ஆசாமி அரைகுறைகளுக்கு ஒத்துவரலாம். ஆனால் சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒருவராக, கலாச்சாரத்தின் ஆத்மாவாக, உலாவரும் ஒளிக்கதிர் மனச்சாட்சியாக, அறத்தின் மறமாக… வளைய வருவதாக … … தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவர் இப்படி நடந்துகொண்டால், அது கொஞ்சம் அசிங்கம்; என்ன செய்வது சொல்லுங்கள்?

எ: பொதுவாகவே, தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்தாம், நான் ‘அத்தைச் செய்தேன், இத்தைச் செய்தேன்!’ என என்னைப் போலக் கூவுவார்கள். தாங்கள், ஒருவிதத்திலும் ஒரு மசுரையும் பிடுங்கவில்லை என நன்றாகவே அறிந்துகொண்டவர்கள்தாம் இப்படி எதற்கெடுத்தாலும் தங்கள் மேலான, உள்ளீடற்ற, முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைப் பிறர் மேல் திணித்துக் கொண்டிருப்பார்கள்.

உருப்படியாகச் சிலபல விஷயங்களைச் செய்தவனிடம், தொடர்ந்து குப்பை கொட்டிக்கொண்டிருப்பவனிடம் இருக்கும் அடிப்படை அமைதியோ சமனமோ அவர்களிடம் இருக்காது – ஆகவே, தாங்கள் அவர்களாகவே வரிந்து போட்டுக்கொண்டிருக்கும் ‘கருத்துதிர்ப்பு அறிவுஜீவிய’ வேடத்தின்படி – எந்தவொரு விஷயத்திலும் கருத்து சொல்லவேண்டிய வன்கொடுமைக்கு (வாசகர் கடிதங்களுக்கு நன்றியுடன்) ஆளாகிறார்கள், தம் கருத்துரிமை வெளியிடலுக்கான அவசரக் கருத்தரிப்புக்காக எங்கேஎதைப் புணரலாம், அல்லது பிறரால் வன்கொடுமை செய்யப்படலாமென ஆலாகப் பறக்கிறார்கள் – இந்த அலைமோதல்களின் விளைவாகக்  குறைப் பிரசவக் குற்றுயிர்களை வழி நெடுக வெளியிட்டுக்கொண்டே செல்கிறார்கள். ​வாசகர்களின் புல்லரிப்புக்குக் கேட்பானேன்!

ஆனால் ஜெயமோகன், சர்வ நிச்சயமாக, சிலபல சாதனைகளைச் செய்திருக்கிறார். அவர் கட்டுரைகளில் சுமார் 10% ஓரளவாவது தரம் வாய்ந்தவை. குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தொடர்ந்து அயர்வேயில்லாமல் படைப்புப் படையல் (அவருடைய திரைக்கதைவஜனங்களைப் பற்றி, எனக்கு ஒரு சுக்கும் தெரியாது) வைக்கிறார். ஆகவே அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கவேண்டிய அவசியமேயில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

ஏ: ஜெயமோகன் இப்படிச் செய்வது அவரோடு நின்றால் அது பரவாயில்லை. ஆனால் பலப்பல இளைஞர்களுக்கு (என்னைப் போன்ற சிலபல போக்கற்ற முட்டாக்கூ கிழங்கட்டைகளுக்கும்!) அவர் ஆதர்சமாக இருக்கிறார். வெறும் தமிழ் அலக்கியத்தில் மட்டுமல்ல, பிற அனைத்துத் துறைகளிலும் அவர் தம் முத்திரையைப் பதித்து நிரந்தர நித்திரையில் இருக்கும் என்னைப் போன்ற சாதா தமிழ்க்கூவான்களைச் சீண்டியவண்ணம் இருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்கையிலே – அவர் சொன்னதுதான் உண்மை, அவர் சுட்டிக்காட்டுவதுதான் தரம் வாய்ந்தது, அவருடைய தரவுகோல்களை மட்டும் திறவுகோல்களாக வைத்துக்கொண்டு ஞானப் புலங்கள் அனைத்தையும் தெரிந்து அறிந்து தெளிந்து உய்ய முடியும் என ஒரு கும்பல் கிளம்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அவரை ஒரு உதாரணபுருஷராகக் கொண்டு அவர் அணுகுமுறைகளை அப்படியே அச்சிட்டு ஒற்றி எடுக்கும் சராசரிகள் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஜெயமோகன் தான் வழியும் சத்தியமும் ஜீவனும்!  (இந்த அனுமானம், சரியாக இல்லாமல் இருக்கவே எனக்கு ஆசை! – அதே சமயம் – அவரை ஒரு உதாரணபுருடர் எனச் சுருக்கி எள்ளி நகையாடவும் ஆசையில்லை, சரியா?)

மேற்கண்ட, அடிப்படை அறமற்ற எண்வகைப் பிறழ்வுகளையும் ஜெயமோகன் தொடர்ந்து, சிரமேற்கொண்டு செய்து வருகிறார் – அல்லது அம்மனப்பான்மைகள் உருவாவதைக் கண்டுகொள்வதில்லை அல்லது அட்ச்சிவுட்டாலஜிஸ்டாக ஊக்குவிக்கிறார்.

தேவையா? :-(

 

-0-0-0-0-

சரி – படுகேவலர்களான சாருநிவேதிதா, எஸ்ராமகிருஷ்ணன், பிற கவைக்குதவாத குளுவான்கள் (யுவகிருஷ்ணா, வினவு, விடுதலைத் தறுதலைகள் இன்னபிறர்) இப்படிச் செய்கிறார்கள் என்றால், மண்டையிலும் …ண்டையிலும் அடித்துக்கொண்டு அல்லது ஏகோபித்துச் சிரித்துக்கொண்டு அகன்று விடலாம்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை – ஜெயமோகனுக்கு, இப்படியாப்பட்ட விவகாரங்களில் ஈடுபடவேண்டிய அவசியமேயில்லை.

ஆனால், தொடர்ந்து – பல மாமாங்கங்களாக ஏனிப்படிச் செய்கிறார்?

–0-0-0–

சரி. கீழே – ‘கிரி’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு அன்பருடன் நடந்த உரையாடலின் பகுதி:

…திண்ணைக்குப் போய் கொஞ்சம் தேடியபோது (வாழ்க்கையின் தேடல் எனவொ​ரு மகத்தான எழவு இருக்கிறதே! அதன் பின்நவீனத்துவக் கட்டுடைப்பு அமைப்பியல் பற்றிப் பின்னர் எழுதுகிறேன், சரியா?) கீழே இந்த மாணிக்கம் கிடைத்தது.

கிரி அவர்கள் சொன்னது சரிதான். சபாஷ்!

குலசேகரன் ஜெயமோகன் ருத்திரபாண்டியப் பெருவழுதி இளஞ்சேரல் கடைக்கண் முதுகுடுமிப் பெரும்பொறை வெந்தயத் தேவ பல்லவ கரிகால்பெட்ரோல்கை சோழன் அவர்களின் பராக்கிரமம் பெரிதுதான்! ஒப்புக்கொள்கிறேன்! :-(

இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு, சுட்டி.

​ ​

ஆனால் – மேற்கண்டபடி அட்ச்சுவிடப்பட்டதைப் படித்தவுடன் எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஒரு ஆதங்கம்தான்.

​குலசேகரன் என்பது குலஷேகர் எனும் ஸம்ஸ்க்ருத வார்த்தையின் தமிழ்ப் படுத்தியெடுத்தல்.

குலம் என்றால் நமக்கெல்லாம் அறிமுகமான குளம் என்பதன் மெல்லின நுனி வடிவம். ஐயோ, மன்னிக்கவும்.  ​​அது குழு அல்லது சமூகம் அல்லது மக்கள்திரள் என விரியும்.

ஷேகர் எனும் சேகரன் – சேகரிப்பு எனும் வார்த்தையுடன் தொடர்பற்றது. ஆனால் ஜெயமோகன் அவர்களுக்குக் கொஞ்சம் வளமான கற்பனை, என்ன செய்வது சொல்லுங்கள். அவருக்கு, தொகுப்பு பருப்பு சிவப்பு என்பவற்றில் அப்படியொரு ஈர்ப்பு.​

ஆகவே சேகரம் செய்வது என்பதுடன் –  ‘ஷ்வல்ப அட்ஜஸ்ட் மாடி‘ என சொல்லிக்கொண்டே தமிழர்கள், பெங்களூரில் கன்னட காலட்சேபம் செய்வதுபோல – சேகரனை இணைத்து ஒரு அவியல் கூட்டான் எரிசேரி ஆப்பம் மலையாள புரோட்டா செய்து ‘தொகுப்பு’ எனப் பரிமாறிவிட்டார்.

எனக்கு இதனைப் படித்தவுடன் தொ குப்பென்று வேர்த்து விறுவிறுத்து விட்டது! ஐயகோ! :-(

शेखर எனும் ஷேகர் – ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல்; இதன் பொருள் — க்ரீடம், உச்சி, தலைமேல், தலைவர், செய்யுளின் முதல் முதல் வரி, முதன்மையானது, முருங்கையின் வேர் எனப் பலவாறு விரியும். ஆனால் ஒருபோதும் அது தொகுப்புக்குக் கிட்டேகூடப் போகாமல், டூ விட்டுக்கொண்டிருக்கும், பாவம்.

कुलशेखर / குலஷேகர் எனும் குலசேகர் எனும் குலசேகரன் என்றால் – குலத் தலைவன், ராஜன், எம்ஜிஆர் (மக்கள் தலைவர்) என்றெல்லாம் விரியும். ஊக்க போனஸாக: ஒரு ஆங்கிலேய ராக் இசைக் குழு.

அவ்வளவுதான். இதைத் தெரிந்துகொள்வதற்கு இணையத்தில் ஆயிரத்தெட்டு களஞ்சியங்கள் உள்ளன. அவற்றை field ginger tin toddy என எஸ்ராத்தனமாகப் புரிந்துகொள்ளவேண்டா. நன்றி.

-0-0-0-0-0-

ஏனிப்படியாகிறது? ஜெயமோகனுக்கு என்ன அவசியம், இப்படியெல்லாம் எழுதுவதற்கு?

தனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயலாமல் (அல்லது அத்துறை நிபுணர்களைக் கலந்தாலோசித்து உணராமல்) – மேதாவித் தனமாக அட்ச்சுவுடுவதற்கான மனோதத்துவக் காரணிகள் யாவை?

நம் பிம்பங்களை அப்படியே (நல்லவற்றையும், ஒதுக்க வேண்டியவற்றையும்) நமக்குக் காட்ட, நம்மைப் பற்றியுணர்ந்து நாம் நம்மைச் செம்மைப் படுத்திக்கொள்ள – தரமான நிலைக்கண்ணாடிகள் தேவை, அதாவது, நம் வளர்ச்சியில் ஆர்வமும் சுடரிடும் நேர்மையுடன் நமக்கு அறிவுரை சொல்லவும், ஆப்த நண்பர்கள் தேவை. இம்மாதிரி ஆசாமிகள் அவரிடம் கைவசம் இல்லையோ?

சரி. புகழ்பாடிச் சராசரிக் கும்பல்கள் கொடுக்கும் லாகிரியிடமிருந்து தப்புவது எப்படி?

முதல் வழி – சுய எள்ளல் + வாய் விட்டுச்சிரித்தல் இது முக்கியமான விஷயம்.

இரண்டாம் வழி – நாம் மதிக்கும் சான்றோர்களுடன், நம் மண்டையில் ஓங்கிக் குட்டக் கூடியவர்களுடன், நம் சூத்தாமட்டையில் அன்புடன் உதைப்பவர்களுடன் – தொடர்பில் இருத்தல், அவர்களிடம் தொடர்ந்து அறிவுரை கேட்டல், அவற்றின் படி ஒழுகுதல்.

மூன்றாவது வழி – சுய, ஆத்ம பரிசோதனை.

நான்காவது வழி – நம் வளர்ச்சியில் கரிசனம் கொண்ட ஜீவன்களை – நம்மிடம் நேர்மையாக விமர்சனம் வைக்கும் முதுகெலும்பு படைத்தவர்களை நண்பர்களாக வளர்த்து, வரித்துக்கொள்ளல். இவர்களிடம் எல்லாமறிந்த ஆசான் <-> அசமஞ்ச மாணவன் எனும் உறவு ஒத்துவரக் கூடாது.

ஐந்தாம் வழி – நமக்கு இதுவரை தொடர்பேயில்லாத ஒரு துறையில் நுழைநிலை மாணாக்கனாக (தம் தவறுகளைத் திருத்திக்கொள்வது இதில் சுலபம், ஏனெனில் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக’ அத்துறையில் நாம் இல்லை என்பது நமக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியும்; பிறருக்கும் தெரியும் என்பதும் நமக்குத் தெரியும். வேடம் போடவேண்டிய அவசியமில்லை. ஆக பிறரிடம், நம் மானம் போய்விடுமோ எனப் பயப்படவேண்டியதேயில்லை, நம் ஜாக்கிரதைத்தனங்களைத் தாராளமாக லேசாக்கிக் கொள்ளலாம்!)  அத்துறை வல்லுநர்களுடமிருந்து – அடிப்படைகளிலிருந்து பணிவுடன் கற்றுக்கொள்வது…

ஹ்ம்ம்… ஆக – வழிகள் எனப் பலப்பல இருக்கின்றன, ஆனால் முனைப்பு வேண்டுமே, ஐயா!

நம்மில் தவறுகளே செய்யாதவர்கள் என யார்தான் இருக்கிறார்கள்? ஆக  – தரவுகளுடனும் தர்க்கரீதியாகவும் – அவை பிரத்தியட்சமாகச் சுட்டிக் காட்டப்பட்டால் அவற்றைத் திருத்திக்கொள்ள, நம்மைச் செழுமைப்படுத்திக்கொள்ள நம் மேலேயே நமக்குக் கரிசனமும் சுயநம்பிக்கையும் வேண்டும். ஆனால்…

ஹ்ம்ம்… நம் சுயபிம்பம் உருவாதல் என்பது நேர்மையாக இருக்கவே சாத்தியக் கூறுகள் இல்லையோ? ஆகவே வீக்கங்கள் மட்டுமே சாத்தியமோ?

கேள்விகள், கேள்விகள்

-0-0-0-0-0-0-

இலவச இணைப்பு

…புதிய தமிழ்ச் சொற்களை மறுபடியும் மறுபடியும் ஒளித்துவைத்துக் கண்டுபிடித்து, ஆசான் மிகவும் அலுத்துவிட்ட படியால் – சில ஊர்களுக்கான ‘ஜெயமோக உவாச‘ வகையறா காரணப் பெயர்கள்: (ஏதோ என்னாலான கைங்கர்யம், வேறென்ன சொல்ல!)

சிந்தாதிரிப் பேட்டை: இது பல்லவர்கள் காலத்தில், ஒருமாதிரி விசேஷ கோயில்விளக்குத் திரியை உருவாக்கும் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இந்தத் திரியை உபயோகித்த விளக்குகளிலிருந்து, எண்ணைய் கீழே சிந்தாது என என் குரு நித்யாவுக்கு நான் விளக்கிச் சொன்னேன்.

சேலம்: கடைச்சங்க காலத்தில் இந்த ஸ்தலத்தில் நிறைய மொத்த விற்பனை சாலைகள் இருந்ததால் இது – ஸேல் + ஸ்தலம் மருவி சேலம்.

திருச்சி: ஒரு இந்து ஆன்மிக மரபு கோயில், ஒரு மலை உச்சிநுனியில் இருக்கும் ஊர். திரு + உச்சி = திருச்சி.

நாகர்கோவில்: மேற்குத்தொடர்மலை நுனியிலிருந்து பார்த்தால் பாம்புகளின் அரசனின் வில் போல வளைந்து காட்சியளிப்பதால் அப்படி.

பெங்களூர்: இடைச்சங்க காலத்தில், இளம்பெண்கள் தங்கள் இடையை இசகுபிசகாக இடக்காகக் காட்டி அசைந்தாடிக் கொண்டு ஊர்ந்து சென்ற இடம்; பெண்கள் + ஊர்.

சென்னை: இது அந்தவூரில் (இப்போதும் உள்ள! ஆச்சரியமாக இல்லை?) ‘சென்னை ஸில்க்ஸ்’ எனப் புகழ்பெற்ற ஒரு மாகடையின் பெயரைக்கொண்டு அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: முற்காலச் சோழர்கள், இந்த ஊரில் தஞ்சமடைந்து கஞ்சா அடித்ததால் இந்தப் பெயர் வந்தது.

 

நன்றி.

38 Responses to “ஜெயமோகன், வீழ்ச்சிகள், வருத்தங்கள் – சில குறிப்புகள்”

  1. Kannan Says:

    ஐயா, சூதர்கள் காரணப்பெயர் சொல்லமுடியுமா ? 

    எனக்கென்னவோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தெரியுது.

    ;(

    on a serious note, most of the Chase and Sherlock Holmes novels are well researched and crafted IMHO.

    JeMo’s craft is is too transparent and we can guess where he is leading.

    பத்தாதுக்கு எல்லாத்திலேயும் கடைசில ஒரு தத்துவத்த வேற புடிங்கி விடுகிறார். புளிய வெச்சு ஒரு கத, எலிய வெச்சு ஒன்னு, என்னத்த சொல்ல. :(


    • ஐயா, சூதர்கள் என்பதற்கு ஜெயமோகன் எப்படி வந்து சேர்ந்திருக்கலாம் என வியாக்கியானம் கொடுக்கக் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது.

      *அம்பேல்*

      அன்புடன்,

      __ரா.


    • அம்மணீ!

      ஓடிவிட்டீர்கள் என நினைத்து ஏமாந்துவிட்டேன். நன்றி. :-)

      என் புறமுதுகுக்கான உங்கள் அரைகூவலுக்கு நன்றி. குறித்துக்கொண்டேன். விலகியும் விடுகிறேன், சரியா?

      நான் சொல்லவந்தது – தமிழ்-ஸம்ஸ்க்ருதம் தொடர்பான வெறும் சொல்/ஒலிச்சிக்கல்களை மட்டுமல்ல (அவருடைய இதுகுறித்த குறிப்புகள், சர்வ நிச்சயமாக ஒப்புக்கொள்ளத் தக்கவைதான்) – அவருடைய திரித்தல்கள், மனம்போன போக்கில் அட்ச்சிவுடல்கள், ‘கவித்துவமான’ அத்துமீறல்கள், ஆழமறியாமல் பொத்தாம்பொதுவாகக் ப்ரியா தார்க்குளத்தில் (https://en.wikipedia.org/wiki/La_Brea_Tar_Pits) காலைவிடல் என்பவற்றைப் பற்றியும்தான்.

      ஒரு எடுத்துக்காட்டாக, கக-வின் ‘உடலெல்லாம் முடியில்லை’ என்பதற்கு ஒரு அடிப்படை நூலில் இருந்தாவது ஆதாரம் கொடுக்கமுடியுமா எனவும் கேட்டிருந்தேன். (அம்மணீ, இதுமட்டுமல்ல – நான் படித்தவரை, ஒவ்வொரு பதிவிலும் குறைந்த பட்சம் ஏழெட்டு அமோக அட்ச்சிவுடல்கள் இருக்கின்றன (சில சமயம் இவை படுமோசமானவை), இத்தனைக்கும் நான் ஸம்ஸ்க்ருதத்திலோ, தமிழிலோ, மஹாபாரதத்திலோ, ஏன் ஜெயமோகனத்திலோகூட விற்பன்னன் அல்லன், சரியா? நான் வெறும் மாணவ நுகர்வோன் தான்!)

      இன்னொரு விஷயம்: அவருடைய விளக்கத்தின் முடிவில் இப்படி எழுதியிருக்கிறார்:

      “வெண்முரசு தடுத்துநிறுத்தப்படவேண்டும் என ராமசாமி சொல்கிறார். பலமுயற்சிகள் அதற்கு நிகழ்ந்தன. அதைமீறி இப்படைப்பு கிட்டத்தட்ட முடியவிருக்கிறது.”

      :-) நான் அப்படிச் சொல்லவில்லை. நான் எழுதியது:

      “அங்கிருந்து – சிலபல சமயங்களில் மஹா அலுப்புதரும்படிக்கு, மஹாபோரதம் எனக்கூட ஆகிவிடுகிறது. இந்த வீழ்ச்சி என்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும். நடக்குமா? ”

      வீழ்ச்சிதான் தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனச் சொன்னேன். அவர் – ஒரு சாதாரணவிஷயத்தை இப்படித் திரிப்பது – படுபீதியளிக்கும் சுயபச்சாத்தாபக் கழிவிரக்கத்தின் காரணமாக இருக்கலாம். :-(

      பாவம். இத்துடன் இவ்விஷயத்தை விட்டுவிடுகிறேன். அவரும் தொடர்ந்து இப்படியே தொடர்வார் என நினைக்கிறேன்.

      நீங்களும் அப்படியே செய்து சுபிட்சமாக வாழவும். அனாவசியமாக இங்கு வந்து வீழ்ந்து உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளவேண்டாம். சரியா?

      புறமுதுகிட்டபடி: :-)

      __ரா.


  2. இன்னொரு விஷயம்: சமையலை முடிக்கவேண்டியிருந்ததால் இதனை எழுதாமல் விட்டுவிட்டேன் – இப்போது தொடர்கிறேன்…

    அவருடைய எதிர்வினையில் பல ஆச்சரியங்கள், ஆகவே ஆதங்கங்கள்…

    ஜெயமோகன் எழுதுகிறார்:

    ” அந்த தளத்திலேயே நோக்குக. ஒருவர் மகன் என்பதற்கு நந்தனன் என்று சொல்லலாம் என முன்பெப்போதோ ஏதோ ஒரு தளத்தில் சொல்லியிருக்கிறார். நான் அது நந்த எனும் வேர் கொண்டது, மகிழ்விப்பவன் என்று அதற்கு நேர்ப்பொருள் என விளக்கினேன். இன்னொரு சொல்லுடன் இணைகையில் [உதாரணமாக தேவகி நந்தனன் ] அது மகன் என்றாகும். தனியாக மகன் என பொருள் அளிக்காது என்றேன். அவர் புண்பட்டு, நான்காண்டுகளுக்குப்பின் வந்து என்னை முட்டாள் என்று சொல்லி தலையிலறைந்து சலித்துக்கொள்கிறார். நான் எழுதியது இந்தியாவின் தலைசிறந்த சம்ஸ்கிருத அறிஞர் ஒருவரை கலந்துகொண்டபின்பு. ”

    …ஆனால் அந்த அன்பர், முத்துராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாகவும் நேரடியாகவும் கீழ்கண்டவாறுதான் எழுதியிருக்கிறார்:

    ” பல மாதங்களுக்கு முன்பு, மகாபாரதம் கும்பகோண‌ம் பதிப்பில் உள்ள வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் வேண்டி, ஆசானின் குழும உறுப்பினர் ஒருவர் ஒரு தொடரைத் துவங்கினார். நான் அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டேன்.அவர் தமிழ் மொழி பெயர்ப்பு வேண்டும் சொற்களைப் பட்டியல் இடுவார்.நான் அதற்கு தமிழ்ச் சொற்களைப் பதிவிடுவேன்.ஒரு சொல் ‘நந்தன்’ என்பது.அதற்கு நான் வாரிசு எனப்பொருள் கூறினேன். ஆசான் ‘ஆனந்தம்’ என்பதிலிருந்து வருவது நந்தன். எப்படி வாரிசு எனப்பொருள் கொள்ளலாகும்’ என்று குறுக்கிட்டார். நான் மோனியர் வில்லியம்ஸின் அகராதியில் இருந்து குறிப்புக் காட்டினேன்.மேலும் தசரதநந்தனன் என்றால் தசரத‌னின் மகன், என்றும்
    சகதிநந்தனன் என்றால் சக்தி குமாரன் என்றும் பொருள் கூறினேன்.பதில் இல்லை. அந்தத் தொடர் குழுமத்தில் நீகப்பட்டது. நான் குழுமத்தில் இருந்து விலகிக் கொண்டேன். ஆசானின் வடமொழி அறிவு பரந்தது அல்ல‌. எனவே கஜன், கசன் எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். நமக்கு எதற்கு இந்தக் கசம் எல்லாம். ”

    https://othisaivu.wordpress.com/2018/09/26/post-892/#comment-9485

    1. முத்துராமகிருஷ்ணன் ஒருபோதும் ஜெயமோகனை முட்டாள் என விளிக்கவில்லை, ஏன் கோடிட்டுக் காட்டக்கூட இல்லை. (ஆனால் ஜெயமோகனுக்கு தன்னை முட்டாள் எனச் சொல்லிக் கொள்வதற்கு உரிமை இருக்கலாம் – ஆனால் சர்வ நிச்சயமாக, ‘பிறர் தன்னை முட்டாள் எனச் சொன்னார்கள்’ என அபாண்டமாகக் குறிப்பிடுவதற்கு உரிமையில்லை.)

    2. ஏனிப்படி விஷயங்கள் திரிக்கப்படுகின்றன?

    3. ஒரே சாதாரண விஷயத்தை – கற்பனாவாதத்தில் மூழ்கும் ஒரு மனம் எப்படியெல்லாம் திரித்துக்கொள்கிறது, ‘தொழில்முறையில் பழைய அனுபவங்களை உருவாக்குகிறது’ என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே.

    4. ஏனெனில், ஆசானுக்கு இறந்தகாலத்துக்கு ஒடிப்போய் நடக்காத விஷயங்களை உருவாக்குவதிலும், நடந்த விஷயங்களை மழுப்புவதிலும், ஓரளவுக்கு நடந்திருக்கக்கூடும் விஷயங்களை மானேதேனே சேர்த்து புத்துருவாக்கத்தில் ஈடுபடுவதிலும், தனக்காக ‘லாப்பி’ செய்யும் குழுக்களை ‘உருவாக்குவதிலும்’ – ஆர்வமும், அனுபவமும் தாஸ்தீ!

    ஆகவே.

    இத்துடன் விடுகிறேன். தோட்டவேலை செய்து என் எதிர்மறை உணர்ச்சிகளை மழுங்கடித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    • Kannan Says:

      ஒருமுறை வலம்புரிஜான் மாபொசியைப் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது

      “அய்யா, முன்பு உங்கள் செங்கோல் வளைந்திருக்கிறது என்றேன், அது மேலும் வளைந்து வளையமாகிவிட்டது.” 

      Happy gardening :)

    • K.Muthuramakrishnan Says:

      புனைவு எழுத்தாளர் அல்லவா, அதனால் நான் முட்டாள் என்று சொல்லி தலையில் அடித்துக் கொள்வதைப் புனைந்துவிட்டார்.

      விமர்சனம்,தான் எல்லோரையும் செய்யலாம். தன்னை யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது.சிறிய சீண்டல் கூட அவரிடம் பெரிய விளைவை ஏற்படுத்தி விடுகிறது.

      அது உண்மையில் ‘போர’த‌மாகத்தான் இருக்கிறது என்பதை அவருடைய சீடர்கள் யாரும் சொல்லமாட்டார்கள். உங்களைப் போல ‘ராஜா அம்மணமாகப் போகிறார்’என்று யாராவது சொன்னால்தான் உண்டு.

      நான் அகராதி குறிப்புக் கொடுத்தவுடன், அந்த ‘லின்க்’குழுமத்திலிருந்து விலக்கப்பட்டது என்னை மிகவும் பாதித்தது.மறக்க முடியவில்லை. அன்று அவ்ரைப் பற்றிய பிம்பம் என் நெஞ்சில் உடைந்தது.பின் தொடரும் சீடர்கள் பல்லாயிரம் பேர் இருக்க எங்கோ யாரோ ஒருவன் தலையில் அடித்துக் கொள்வதைப்பற்றி அவர் ஏன் கவலைப்படவேண்டும்?


  3. ஐயா வணக்கம். நமது பாசத்திற்குரிய எஸ்ரா சாரு வரிசையில் ஜெமோ வையும் சேர்த்து விட்டீர்கள். வெண்முரசு ஒரு மஐாபாரதம் தான். சூதர் என்பவர் பாகவதம் சொல்பவர்கள் சரிதானே?


    • ஐயா அன்பரே!

      நான் சேர்க்கவில்லை. அவர்தான் சேர்ந்துகொண்டிருக்கிறார். சேறுமிடமறிந்து சேற்கிறார். வாழ்க.

      தமிழ் அலக்கியம் என்பது கிடுகிடுபள்ளம். மர்யானா ட் ரெஞ்ச் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்கவேண்டும்.

      எனக்குத் தெரிந்தவரை (ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டு எழுதுகிறேன்): ஸுதர்கள் – பாகவதக் கதைகளை மட்டுமல்ல, பிற புராண / நாட்டார் வழக்கிலிருந்தவற்றையும் வகுத்து, சொல்லி, பாடி வந்தவர்கள்; கதைசொல்லிகள். இன்னொரு விதத்தில் இவர்கள் குல/ஜாதிக்கலப்புகளில் உருவானவர்கள். மஹாபாரதத்தில் இவர்கள் பெரும்பாலும் தேரோட்டி வர்க்கத்தினர்களாக விவரிக்கப்படுபவர்கள். ஸூத் எனும் வேரிலிருந்து பலவகையான அர்த்தங்கள், விரிப்புகள், விளக்கங்கள். ஸம்ஸ்க்ருதம் ஒரு மகோன்னத ஆழி. ஏன், நம் தமிழும் அதுபோலத்தான் அன்றி வேறொன்றுமில்லை.

      ஆனால் ஐயா – அந்த மஜாபாரதம், எப்படி இவற்றை விளக்கிச் சுளுக்கெடுக்கிறது என்பதை நான் அறியேன்.

      வெள்ளைக்காரவுலகில், மிகப் பிற்காலத்தில் troubadourகள் என அழைக்கப்பட்டவர்களுடன் இவர்களைப் பொருத்திப் பார்க்கிறேன்.

      சூதர்கள் என எழுதினால் – சூது செய்பவர்கள் என அனர்த்தம் கொடுக்கிறது என்பதென் கருத்து. ஆனால் இதனை சூத்துடன் பொருத்தி, அவர்கள் ஆண்-ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் விரிக்கலாம் (அதாவது அர்த்தத்தை) எனக் கற்பனை செய்துகொண்டு இறும்பூதடைகிறேன்.

      நன்றி.

  4. Aathma Says:

    Colloquially we say Gadothgajan..what wrong..kozhi kuruttu kozhi ya irundhaalum..kuzhambu rusiya irukkaanu paakanum..Goundamani uvacha..

  5. RC Says:

    அன்பு ஐயா,
    திரு.ஜெயமோகன் அவர்களே அவர் தரப்பை வைத்த பின்னும் என்னுடைய இந்தப் பின்னூட்டம் தேவையற்றதுதான்.நீங்களும் “நான் சொல்லவந்தது – தமிழ்-ஸம்ஸ்க்ருதம் தொடர்பான வெறும் சொல்/ஒலிச்சிக்கல்களை மட்டுமல்ல (அவருடைய இதுகுறித்த குறிப்புகள், சர்வ நிச்சயமாக ஒப்புக்கொள்ளத் தக்கவைதான்)” என்றும் சொல்லிவிட்டீர்கள்.
    இருப்பினும் திரு.ஜெயமோகன் சொல்லாராய்ச்சி தொடர்பாக எழுதிய சில பதிவுகள் நினைவுக்கு வந்தன.

    https://www.jeyamohan.in/96280#.W68g92gzbIU

    https://www.jeyamohan.in/95319#.W68tMGgzbIV

    https://www.jeyamohan.in/95343#.W68tXGgzbIV

    அவரே ‘தூய்மைவாதி’ என்று சொல்லிய திரு.கரச அவர்களின் வலைப்பக்கம்

    https://dosa365.wordpress.com/2012/08/14/6/

    சுருக்கமாக,
    1)புனைவை ஒரு வாசகன் எள்ளலாகவோ நக்கலாகவோ சொல்லக்கூடாது.ஆனால் ஒரு அறிஞனுக்கு அந்தச் சுதந்திரம் உண்டு.
    2)சம்பத்தப்பட்ட எழுத்தாளன் ஒரு வாசகனை அறிஞன் என்று தெரிந்தால் அவரின் கருத்து பொருட்படுத்தப்படும் என்றும் இல்லையெனில் அந்த கருத்துக்காக/நக்கலுக்காக எழுத்தாளனால் குறை (சற்று அதீதமாகவே) சொல்லப்படுவார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
    (எழுத்தாளுமை என்பதால் நான் பொறுத்துக்கொள்வேன் என்பது தனி.ஆனால் எல்லோரும் அவ்வாறு இருக்கவேண்டியதில்லை)

    படைப்பைப் பற்றிய உங்களின் ஒரு பதிவு (எளிய எதிர்வினை),
    புனைவு × வாசகன் என்ற என் புரிதலில் இருந்து
    எழுத்தாளன் × தூய்மைவாதி × அடிப்படைவாதி × புனைவு.. கடைசியிலே வாசகன் என்று விரிந்து எனக்கு புரியும்படி ஆயிடிச்சு.
    நன்றி :-)


    • யோவ் ஆர்ஸி, இப்ப இண்ணான்ற நீயி? நான் அறிஞ்ஜன் இல்லேண்ற – அவ்ளொதான? அத்து தெர்ஞ்ச வெஷயம்தானபா, அந்த ஆள் கரச யாரு?

      …எல்லாஞ்ஜரி – ஆனாக்க, வாசகனே இல்லாம பூட்டான்னாக்க, எலக்கியவாதி இன்னாத்தாம்பா ஸெய்வான்? எலக்கியமே இல்லாம பூடுமே! வாஸகன்னு ஒர்த்தன் கீறதொட்டுதான் எலக்கியமே! அவன் டபாய்ச்சான்னு வெச்சிக்க, எலக்கியமாவது மஸ்ராவது.

      அதாவது, இதன்பெயர் எலக்கியமாயாவாதம்.

      பார்ப்பவன் இல்லையேல் பார்க்கப்படுவது ஒன்றுமில்லை. பார்க்கப்படுவதன் உயிரே, அதன் இருப்பே – பார்ப்பவனால்தான் வருகிறது, ஏற்படுகிறது.

      படிப்பவன் இல்லையேல் படிக்கப்படுவது என ஒன்றில்லை. எலக்கியம் என்பதே படிப்பவனின் படித்தலால்தான் ஏற்படுகிறது. இதுவன்றி அது வெறும் மரக்கூழில் மசியடிக்கப்பட்டதாகவோ அல்லது கணிநி சேகரங்களில் (தொகுப்புகளிலும் தான்!) பிட்பிட்டாக பிட்டுக்கு மண்ணாங்கட்டி சுமந்துகொண்டோ கிடக்கும், சனியன்.

      இதன் தொடர்பாக ‘கழுத்தறுப்பு நிலை’ என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொணர்கிறேன். இது ‘கயிற்றரவு நிலை’ எனும் ரஜ்ஜுஸர்ப்பவாதத்திற்கு முறைப்பையன்.

      தமிழ் அலக்கியத்தையும் தமிழ் அழுத்தாளர்களையும் ரொம்பவும் நோண்டினால், கழுத்தறுப்பு நிச்சயம். (அது யாருக்கு என்பதை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்)

      அஹம் வாசகனாஸ்மி. ஆகவே ஆசிரியன். அவ்ளோதான். யதா ஷிஷ்யா ததா குரு. அந்தக் குரு எங்கே என்றால் வேர்க்குரு – என ஆங்கிலப் பாடபேதம்.

      நான் தூய்மைவாதி அல்லன். என்வூட்டுக்கு வந்து பாரு, பட்டா, நாறுது. ஒத்திசைவுன்னிட்டு வெச்சிக்கினு அல்லாரையும் ஓத்திசைவு பண்ணிக்கிட்டு இர்ந்தா, யார்டா வூட்ட ஸுத்தம் ஸெய்வாங்க… படா பேஜாராக் கீதேடா…

      எல்ப் பண்ரியா? இன்னா ஸொல்ற?? வேல எக்கச்சக்கமா கீது.

      வணக்கொம்.

  6. Sivakumar Hari Says:

    ஒனக்கு இது கூட ஸ்பஷ்டமா சொல்ல வரலியே உன் வாய்ல தர்பய போட்டு பொசுக்க என்கிற பார்ப்பன திமிர் தான் கஜன்-கசன் ஒலி மாறுபாடு கட்டுரை குறித்த உங்கள் பதிவு முழுவதும் தெரிகிறது.


    • ஐயா, கருத்துக்கு நன்றி.

      ஆனால் ஒலி/வரிவடிவ சிக்கல்களாக மட்டும் என் கருத்துகளைச் சுருக்கவேண்டாம். அதில் பிறவும் இருக்கின்றன.

      உங்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சி தரலாம்: உங்களைப் போன்றே சிலபலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவற்றில் உங்களுடையதுதான் அதிகபட்ச பணிவாகவும் அமைதியுடனும் இருக்கிறது. ஆகவே பதிப்பித்து எதிர்வினையும் புரிந்திருக்கிறேன். மற்றவற்றைக் கடாசிவிட்டேன்.

      அன்புடன்,

      ரா.

  7. Sivakumar Hari Says:

    முதலில் நகைச்சுவையாக ஒரு பின்னூட்டம் போடலாம் என்று தான் பார்த்தேன் ஆனால் சமீபத்தில் பிராமணர்களுடைய வெறித்தனம் சகிக்க முடியாததாக போய்க் கொண்டு இருக்கிறது.குறிப்பாக சபரி மலை தீர்ப்பு சார்ந்த விவாதங்களில் என் நண்பர் ஒருவர் தீர்ப்பளித்த நீதிபதிக்கு நல்ல சாவே வராது என்று சாபம் விட்டார். அதிர்ச்சி அடைந்தேன்.இங்கே பெரியாரிய விஷம் அவர்களை விளிம்பிற்கு தள்ளியது என்பதை புரிந்து கொள்கிறேன் ஆனால் இந்துத்துவ அரசியல் எழுந்து வந்த பிறகு அவர்களில் நிதானமானவர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது.


    • ஐயா, புரிந்துகொள்கிறேன்.

      ஆனால் எல்லாவற்றையுமே நகைச்சுவையாகப் பார்த்துக்கொண்டால் ரத்த அழுத்தம் ஆரோக்கியமாக இருக்கும்.

      ஜெயமோகன், அடியேன், தாங்கள் உட்பட அனைவரையும், அனைத்தையும்.

      மேலும், அலக்கியமும் ஃபேஸ்புக்வகை சச்சரவுகளும் நம் வாழ்க்கையில் வெகு சிறு, அற்பப் பகுதிகளே. முக்கியமாக – தமிழ் அலக்கியத்துக்கும் அலக்கியக் காரர்களுக்கும் நாம் அளவுக்குமீறி மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை.

      ஏனெனில் – இன்னொரு விஷயம்: நான் முன்னமே ஒருதடவை எழுதியதைப் போல – நான் நம்முடைய செயல்பாடுகளினால் வரையறுக்கப்படுகிறோம், வெறும் வெட்டிப் பேச்சினால் அல்ல. (“We are defined by our actions, not by our words.” (https://othisaivu.wordpress.com/2018/09/06/post-883/)

      இதுவும் நம் மூவருக்கும், ஏன், அனைவருக்குமே பொருந்தும்.

      ஆகவே.

      __ரா.

  8. Sivakumar Hari Says:

    மதிப்பு குறித்த அளவை தீர்மானிப்பது யார்? அது நபருக்கு நபர் வேறுபடும் அது இருக்கட்டும் எந்த வெறுப்பரசியலிலும் சிக்காமல் பயணிக்கும்/பயணிக்க விரும்பும் ஒருவர் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. நன்றி


    • ஐயா, ஆச்சரியம்தான்! அப்படி ஒருவர் இருக்கிறாரா? யார் அந்த ஒருவர்? தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

      அப்படி அந்த ஒருவர் இருந்தாலுமே, அவருக்கு உங்களைப் பிடிக்கவேண்டுமே!

      ஒர்ரே குழப்பமாக இருக்கிறது…

  9. Giri Says:

    ஜெமோ வெண்முரசு எழுத ஆரம்பித்தும் நானும் curiosity உடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர் மூலக்கதையிலிருந்து பிறழ்ந்து பல இடங்களில் எழுத ஆரம்பித்தவுடன் என் கவலை ஆரம்பித்தது. அவருக்கென்றே உள்ள ரசிகர் கூட்டம் வரும் நாட்களில் இது தான் original மஹாபாரதம் என்று நினைப்பது மட்டுமல்லாது பல இடங்களில் அதை வைத்தே வாதம் புரிவார்களே என்று ஆதங்கப்பட்டேன்.காலம் பதில் சொல்லும்.

    அவர் எழுதும் தத்துவங்கள் என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை. ஆனால் அவர் ரசிகர்கள்”புரிந்து கொண்டு” அவரை இன்னும் மேலே ஏற்றிவிடுவார்களே!


    • ஐயா கிரி, நானும் அப்படியேதான்.

      நம் எதிர்பார்ப்புகள்தாம் நம் எதிரிகள் என நினைக்கிறேன்.

      எனக்கும் 50+ வயதாகிறது. காலம் காலமாக தமிழ் அலக்கியத்தின் வளர்ச்சியையும்(!), தொழில்முறை/இன்னபிற எழுத்தாளர்களின் அறத்தையும் லட்சணத்தையும் ‘உழைப்பை’யும் பார்த்து வந்துள்ளேன். இருந்தாலும் அப்படியொரு எதிர்பார்ப்பும் ஆர்வமும்.

      இந்த அவலச் சராசரித்தனத்தையும் மீறி, ஒன்றிரண்டு பேர் வெடித்துக் கிளம்பலாம் என்கிற சாத்தியக்கூறு இருக்கிறது என்கிறது என் தர்க்கரீதியற்ற எதிர்பார்ப்பு. பார்க்கலாம்.

      எனக்கும் இந்த வாசக மாஃபியா ஒத்துவரவில்லை, ஆனால் அக்கும்பலைப் புரிந்துகொள்கிறேன். அதனையும் பதிவு செய்தேன். ஆனால் இதற்குப் பொறுப்பாக பாம்புப் பிடாரனைத் தான் குறிப்பிடவேண்டும்.

      சிலபல இளைஞர்களுடன் (மூடுபனி விலகாத) பேசிய வகையில், நீங்கள் சொல்வதுபோல – ஜெயமோகன் எனும் முப்பட்டகம் வழியே உலகத்தையே (இந்தச் சனியன் பிடித்த இலக்கியத்தையே விடுங்கள்!) பார்க்கும் ஒரு சிறு விடலை, வாசக அடிப்படைவாதக் கும்பல் திரண்டு வருகிறது – இது கொஞ்சம் அவ நம்பிக்கையை அளிக்கிறது. தமிழகத்தில் படிப்பறிவு அதிகமாகிக்கொண்டிருக்கிறது அல்லவா?

      ஆனால் இந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதத்தைக் கவனிக்கவும் (அவ்வப்போதாவது) சுவாரசியமாக இருக்கிறது.

      எது எப்படியோ. கூடியவிரைவில், தமிழ் அலக்கியம் பற்றியே பேசாமல் இன்னொரு 20 வருடம் மௌனமாக இருக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

      • K.Muthuramakrishnan Says:

        I am reminded of Oliver Goldsmith’s poem ‘The village School Master’ Jeyamohan’s ‘chelas’ are like the villagers who are wonder struck .

        “Beside yon straggling fence that skirts the way
        With blossom’d furze unprofitably gay,
        There, in his noisy mansion, skill’d to rule,
        The village master taught his little school;
        A man severe he was, and stern to view,
        I knew him well, and every truant knew;
        Well had the boding tremblers learn’d to trace
        The days disasters in his morning face;
        Full well they laugh’d with counterfeited glee,
        At all his jokes, for many a joke had he:
        Full well the busy whisper, circling round,
        Convey’d the dismal tidings when he frown’d:
        Yet he was kind; or if severe in aught,
        The love he bore to learning was in fault.
        The village all declar’d how much he knew;
        ‘Twas certain he could write, and cipher too:
        Lands he could measure, terms and tides presage,
        And e’en the story ran that he could gauge.
        In arguing too, the parson own’d his skill,
        For e’en though vanquish’d he could argue still;
        While words of learned length and thund’ring sound
        Amazed the gazing rustics rang’d around;
        And still they gaz’d and still the wonder grew,
        That one small head could carry all he knew.
        But past is all his fame. The very spot
        Where many a time he triumph’d is forgot. ”

        Oliver Goldsmith

  10. Swami Says:

    For someone who passes definitive judgents on all and sundry, JeMo indeed has a very thin skin when it comes to his own work

    The so called discussion forum on Venmurasu is full of posts from his acolytes thatsay, “Thailavaaaa! Neenga engayo poyteenga” . Left unchecked, the chelas will turn Jeyamohan into Janakaraj!


    • :-)

      Sir, while I agree with your sentiments (bingo!) – the fact is that Janakaraj knows very well that he plays to the gallery and his audience also knows that.

      But in the case of my one and only Assaan, the metacognition is lacking in both parties. This is a most unfortunate situation, especially for bloody losers like us.

      Oh the tangled web that we all weave, especially these litterateur types. Oh what to do.

      Yathah Asaan, Thathah Fanboy, what else!

      The horror, the horror…

      __r.

  11. SB Says:

    Sir,
    quote from Mr.Jmo’s response to his reader:
    வெண்முரசு தடுத்துநிறுத்தப்படவேண்டும் என ராமசாமி சொல்கிறார். பலமுயற்சிகள் அதற்கு நிகழ்ந்தன. அதைமீறி இப்படைப்பு கிட்டத்தட்ட முடியவிருக்கிறது. இனி இது ‘authentic’ அல்ல என்ற விவாதம் கொஞ்சநாள் நிகழும். இலக்கியப்படைப்புகள் வேறு ஒரு தளத்தில் வாசிக்கப்படுகின்றன என இவர்கள் அறிவதேயில்லை

    Unquote
    I have not read anything like that in your article.
    Are we missing something there have been several attempts to thwart the stupendous efforts of Mr.Jmo’s?
    Way to give up the issue is about confusing the matter worse confounded ,right ?
    Benefit of doubt has to be rendered to reach an amicable understanding between two giants . Hoping for same.

    Regards
    SB

  12. Swami Says:

    Is it ‘Assaan’or ‘Asaan’ or ‘Ass-on’? I just realized that this is the root word of சூதர்கள்!

    Theerndadhu mo(u)zhi prachanai!

  13. Satish Says:

    Sir

    Searching google search for Kadoth”gajan” after excluding the site: jeyamohan.in returns 4000+ results. Search phrase to enter. கடோத்கஜன் -site:jeyamohan.in

    Searching for Kadoth”gasan” yields around 1700+ results
    கடோத்கசன் -site:mahabharatham.arasan.info

    In both cases the spellings predate before when Jeyamohan started writing Venmurasu.

    Importantly it would be great to know how Rajaji and Cho spelt these characters in their source. I have not read the sources written by these two giants. In one of the speeches about Venmurasu, P. A. Krishnan, spells it as “gajan”. Again it is a speech transcribed and published in jeyamohan.in. So, it is possible the spelling can be attributed to the transcriber.

    My point is the spelling “gajan” seems to be much prevalent. So, why this kolaveri on Jeyamohan.

    It would be great if you could post on the basis of Rajaji and Cho’s editions.

    Thanks

    Satish

  14. Satish Says:

    https://archive.org/stream/TheMahabharataRajaji_201802/The_Mahabharata%20-%20Rajaji_djvu.txt

    Rajaji has used Ghatotkacha. He has avoided the “Sa” sound. This is what Jeyamohan has mentioned in his explanation

  15. Satish Says:

    Another angle. Here is the clip to movie “Mayabazaar”. In the days, this movie was produced, one could say the tamil used in the films was sanscritized tamil or brahminical tamil. Move to 1:08:24 in the clip. The pronunciation used is “Gajan”. Rather than using tamil “Cha” and deliberating whether to pronounce it as “Sa” or “Cha”, is it not better to use “Ja” as the pronunciation is closer to later

  16. kgsat Says:

    தமிழ் வார்த்தைகளில் “க” விற்கு பிறகு “ச” வரும் பொழுது, “cha” ஒலியுடன் வரும் வாரத்தைகள் எவையெனும் உண்டா? கச்சை இருக்கிறது, ஆனால் இங்கே “ச” மெய் எழுத்தாக வருகிறது

    கசடதமற வல்லினம் என்று படிக்கும் பொழுது “sa” என்ற ஒலியுடன் படிக்கிறோம். பிறகு எப்படி katothkasan என்று எழுத முடியும்


  17. அன்புள்ள சதீஷ்,

    சோ, ராஜாஜி போன்றவர்கள் மேலும், மாயாபஜார் போன்ற கறார் ஆவணத் திரைப்படங்களின் மேலும் — அவர்களுக்கு / அவற்றுக்கு உரிய மரியாதையை வைத்திருக்கிறேன்.

    என் தோல்வியை மனதாற ஒப்புக்கொண்டு புறமுதுகிட்டு ஓடுகிறேன். இனிமேல் கசமுசா அல்லது கஜமுஜா வேண்டேல்.

    மற்றபடி விம்பிள்டன் லங்கம்சாலையில் வாகனப் போக்குவரத்து இடையூறில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது எனவும் நம்புகிறேன்.

    நன்றி.

    __ரா.

  18. ஹரீஷ் Says:

    இப்படி சமஸ்கிருத அர்த்தம் எல்லாம் சொல்லி காட்டலாமா. அவரிடம் மோனியர் வில்லியம்ஸ் அகராதி உள்ளது. இருந்தாலும் அகராதி இல்லாத மனிதர் அவர். கட்டுரைகளை எனது இடது கைகளில் எழுதி தள்ளிவிட முடியும் என்று அவர் பணிவுடன் சொல்லி கேள்வி. அவரது இலக்கியம் ஆழ்மன வெளிப்பாடெனில் அவரது கட்டுரைகள் ஆழ்மனத்தின் மேல்மன கட்டற்ற கபடி விளையாட்டு.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s