நகரப்புறம்போக்கு நக்கிலைட்டுகள் – விவேக் அக்னிஹோத்ரி அவர்களின் ‘அர்பன் நக்ஸல்ஸ்’ புத்தகத்தை முன்வைத்து சில குறிப்புகள்
September 25, 2018
இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns.
…ஆனால் கண்டிப்பாக பல்லவி ஜோஷி அவர்களின் ரசிகன் தான் – அவருடைய நடிப்பிலும் சூட்டிகைத்தனத்திலும் சொக்கிப் போயிருக்கிறேன். செயல்படும் மூளையுள்ள மிகக் குறைவான பாரத நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது என் கருத்து.
‘கப் தக் புகாரூன்’ (‘என்னேரம் வரை அழைப்பது?‘) எனும் குறிப்பிடத்தக்க – தூர்தர்ஷன் ஹிந்தி தொலைக்காட்சித் தொடரில் நடித்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் இவர்; ஒருகாலத்தில் மிக நன்றாகவே நடித்த பங்கஜ்கபூர் அவர்களுக்கும் இதில் பிரதான பங்களிப்பு. கதை, எனக்கு உவப்பான ஹிந்தி எழுத்தாளர் ராங்கேய ராகவ் அவர்களுடையது.
…(நம் பாரதி, ~புதுமைப்பித்தன் போல) முப்பதொன்பது வயதே வாழ்ந்த இவர் சாதித்தவை, அழகானவைதான். சுமார் 40 வருடங்கள் முன் இவருடைய ‘நவநாகரீகப் பெண்ணியம்’ குறித்த கிண்டல் கட்டுரைக் களஞ்சியம் ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. அதனை வட்டார அரசு நூலகத்தில் கடன்வாங்கிப் படித்ததாக ஒரு பிரமை.
பிஹாரி நண்பன் (அதே தில்லிப் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியன் ரஜினிரசிகன் தான்!) பரிந்துரைத்து, அதுவும் அனுபம் கேர் + பல்லவி ஜோஷி (பல்லவி ஜோஷி!) நடித்திருக்கிறார்கள் அவசியம் பாரென்றதால் ‘புத்தா’ படத்தைப் பார்த்தேன்.
படத்தை, அச்சமயத்தில் ஆஹா ஒஹோ என்று சொல்லியிருக்கமாட்டேன் – ஆனால் அதன் மையக்கருத்தும், இயக்கமும், நடிகர்களின் உழைப்பும் (வேடங்களில், அனுபவித்து வாழ்ந்த நடிகர்கள்), மிதமான பின்னணி இசையும் பிடித்தமானவையாக இருந்தன.
திரைக்கதை – நக்ஸலைட் அயோக்கியர்கள், சிலபல பல்கலைக்கழகப் பேராசிரியப் பேடிகளின் மேலான – என் (தரவுகளின் மீதான) எதிர்மறைக் கருத்துகளை உறுதி செய்ததும் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஆரம்ப ஷாட்களிலிருந்து ஒரு வேகவேக கதைசொல்லல்… எல்லாம் சரிதான். ஆனால், இந்தப் படம், இன்னமும் செய்நேர்த்தியுடன், நகாசு வேலைகளுடன் இருந்திருக்கலாமோ எனத்தான் பட்டது. (இத்தனைக்கும், எந்தவொரு ‘புகழ் பாடப்படும்’ தமிழ்ச் சனியன் படத்தை விடவும் நன்றாகத்தான் இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும் – ஆனால் ஐயா, நான் க்யூப்ரிக் கட்டக் டேரன்டினொ தார்கொவ்ஸ்கி அகிரா ரசிகன் + அளவுக்கதிகமான மேட்டிமைத்தனம் உடையவன் – என்ன செய்வது சொல்லுங்கள்!)
சரி. இதனைப் பார்த்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 2017 ஜனவரி வாக்கில் மறுபடியும் பஸ்தர் (சத்தீஸ்கட் மாநிலத்தில் – நக்கிலைட்டுகளின் அராஜகத்தில் இன்னமும் இருக்கும் பகுதி) சென்றபோது அங்கிருந்த விடுதியொன்றில் ஒரு மும்பய்க்கார திரைப்பட ஆர்ட் டைரக்டர் இளைஞனை சந்தித்தேன். அவன்தான் விவேக், இந்தப் படத்தை வெளிக்கொணர்வதில் பட்ட அமோகக் கஷ்டங்கள் பற்றியும், அவர் மீண்டு வந்ததைப் பற்றியும், அடிப்படையில் நேர்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் அதே சமயம் மென்மையாகவும் பேசுவதால் அவருக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றியும் சொன்னான். முக்கியமாக – இப்படம் வெறும் ஒன்றரை கோடி செலவில்தான் எடுக்கப்பட்டது என்றான். அவன் சொல்லித்தான் தெரியும், பல்லவியின் கணவர்தாம் இந்த விவேக் என்று! :-)
க்ளிக் க்ளிக் க்ளிக் என, பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன, பிடிபட்டன. பின்னர் டிவிடி கடன்வாங்கி இன்னொருமுறை இந்தப் படத்தைப் பார்த்தேன். முன்னோக்கியும் பின்னோக்கியும்.
படம் சோடையே போகவில்லை.
சர்வ நிச்சயமாக – உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலும், மிகக் குறைந்த செலவில் ஒரளவுக்கு நன்றாகவே கலையுணர்ச்சியுடனும், சுய அர்ப்பணிப்புடனும், படு தெகிர்யத்துடனும் எடுக்கப்பட்ட படம்தான் இது.
இதுவரை இதனைப் பார்க்காதவர்கள், இம்மாதிரி நெடுநாள் சதித்திட்டங்களை, தீவிரஇடதுசாரி அற்பர்களை – நக்ஸலைட் எழவாளர்களை, அவர்களுடைய ஊழல்களை, பாரதத்தின் எளிய மக்கள் மீதான அவர்களுடைய கொடூர வன்முறையை மட்டுமல்லாமல் -அவர்களின் உதவிக்கு நக்கிக்கொண்டே செல்லும் நம் நகர்ப்புற அயோக்கியர்களைத் தோலுரிக்கும் இப்படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.
இது சர்வ நிச்சயமாகவே உண்மையைப் பிரதிபலிக்கும் படம். இதனை நான் ஆத்மார்த்தமாக, ஓரளவுக்கு ‘சிவப்புப் பகுதிகளின்’ நிதர்சன, பிரத்தியட்ச நிலைகளை அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.
ஆக, இதனை அவசியம் பார்க்கவும். அசைபோடவும், விவாதிக்கவும்.
மூன்றுநான்கு மாதங்கள் முன் – விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் ‘புத்தா…’ படம் தொடர்பான அவரது அனுபவங்கள்/அசைபோடல்கள் குறித்த ‘அர்பன் நக்ஸல்ஸ்’ (என் செல்லச் சுளுக்கெழுத்தில் ‘நகரப்புறம்போக்கு நக்கிலைட்டுகள்’) புத்தகத்தைப் படித்தேன்.
இதைப் படித்த பிறகு, அறிந்துகொண்ட விஷயங்களின் பின்புலத்தில் இன்னொருமுறை அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இதுவரை பார்க்கவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக இன்று இக்குறிப்புகளை எழுதுகிறேன்.
சரி. அப்புத்தகத்தைப் பற்றிய, என் அனுபவபூர்வமான சாராம்சக் குறிப்புகள் + என்னுடைய மேலதிக, தமிழகத்தைக் குறித்த விவரங்கள்…
சரி. இந்தப் புத்தகம் – மாவோயிஸ உதிரி நக்கிலைட் கும்பல்களின் ஊற்றுக்கண்கள் என்ன, அவை எப்படி வளர்ந்தன, அவற்றின் மூலதனம் யாது, யார் இவர்களை போஷிக்கின்றனர், இவர்களுடைய அமைப்புரீதியான பலங்கள் என்ன, இவர்களுடைய நீண்டகாலத் திட்டம் என்ன, இவர்களால் எந்த உபயோகமாவது உண்டா, எப்படி இந்த முயக்கங்கள் ஒழிக்கப்படவேண்டியவை – ‘பொருளாதார வளர்ச்சியும் அதனால் ஏற்படும் வேலை வாய்ப்புகளும்’ தான் பாரத வளர்ச்சிக்குப் பதில் — எனப் பலதளங்களை, பல விஷயங்களை ஆத்மார்த்தமாகவே அலசுகிறது.
இது, அடிப்படை நேர்மையுடன் எழுதப்பட்டஒரு புத்தகம்; விவேக் தன்னையும் கிழித்துக்கொண்டு, தான் கடந்துவந்த பாதை குறித்து சுயவிமர்சனமும் செய்துகொள்கிறார்; இது மையக்கருத்துக்கு மெருகு சேர்க்கிறது.
சிலகாலம் முன்வரை, நான், மும்பய் மாநகரத்திலுள்ள ‘டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸோஷியல் ஸைன்ஸ்’ எழவில், பகுதி நேர / கான்ட்ரேக்ட் பணியாளனாக இருந்தேன். இதற்கு அப்பாற்பட்டும் நான் ஜேஎன்யு, தில்லி, ஜாதவ்பூர், அலிகட் முஸ்லீம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாமியா மிலியா ஹம்தர்த் போன்ற சிலபல பல்கலைக்கழகங்களில், பாவப்பட்ட சில நண்பர்களைப் பெற்றிருக்கிறேன், உள்ளே நடக்கும் விஷயங்கள் (=பெரும்பாலும் அசிங்கமான கேவலங்கள்) பற்றி நேரடியாக அறிவேன். ஆக – இப்புத்தகத்தில் சொல்லப்படும் விஷயங்கள் உண்மைகளே என்பதை அறிவேன். அவையாவன:
கருத்துரிமை மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால் அது நக்கிலைட்டுகளுக்கும் அவர்களால் ஆட்டுவிக்கப்படும், அக்கும்பல்களுக்கு ஆதரவு சேர்க்கும் குறுமதியாள ஆசிரியர்களுக்கும் அரைகுறை அறிவுஜீவிகளுக்கும் ஊடகப் பொறுக்கிகளுக்கும் மட்டுமே. (சர்வ நிச்சயமாக – இவ்வுரிமைகள் சாதா இந்தியர்களுக்கோ, நக்ஸலைட்டுகளால் ஒடுக்கப்படுபவர்களுக்கோ இல்லை – தேசபக்தியாளர்களின் நேர்மையாள அரசு ஊழியர்களின் கதியையே விடுங்கள்!)
அர்பன் நக்ஸல் ஆசிரியர்களில் பலர் – ஸோஷியாலஜி, அந்த்ரொபாலஜி, பொலிடிக்கல் ஸைன்ஸ், கல்வியல், கருத்தியல், பண்பாட்டியல், நாட்டாரியல், போஸ்ட்-மாடர்ன் ஸ்டடீஸ், ஸபால்டெர்ன் ஸ்டடீஸ், ஸவுத் ஆசியன் ஸ்டடீஸ், வரலாறு, மண்ணாங்கட்டி தெருப்புழுதி எனப் பெரும்பாலும் அறிவியல் வகையே அற்ற அரைகுறைப் புலங்களில் மேலதிக அரைகுறைத்தனமான ஆராய்ச்சி(!) பஜனை செய்பவர்கள். இவர்களுடைய பார்வையில் ‘இந்தியா உடைக்கப்பட்டால், ஹிந்துமதங்கள் ஒழிக்கப்பட்டால் – அனைத்துலகிலும் சுபிட்சம்’ – இதற்காக இவர்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுத்து ஊக்குவிக்கிறது. வருடாவருடம் சம்பள அதிகரிப்பு. நிறைய விடுமுறைகள். மேலதிக நல்கைகள். சபாஷ். இருந்தாலும் இந்த அயோக்கியர்கள் ‘இந்தியாவில் சகிப்புத் தன்மை ஒழிந்துகொண்டிருக்கிறது‘ எனப் பிலாக்கணம் வைப்பார்கள். பேடிகள்.
மேலும் இந்த அயோக்கியர்கள் – யோசிக்கும் திறனற்ற விசிலடிச்சான் குஞ்சப்ப இளைஞர்களை இடதுசாரித் தீவிரவாதத்துக்குச் சென்றடைய மூளைச்சலவை செய்து ஊக்குவிக்கின்றனர்.
கற்கும் ஆர்வமோ முனைப்போ துளியும் அற்று, அரசுப் பணத்தில் தொப்பையை வளர்த்திக்கொண்டும் கஞ்சா அடித்துக்கொண்டும் வெட்டியாக டீவி கேமராக்கள் முன் புரட்சி செய்யும் அளவில் தான் இந்த அர்பன் நக்ஸல் மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரபலஸ்த ஜேஎன்யு அர்பன் நக்ஸல் இளைஞ அரைகுறையான கண்ணையா குமாரின் ‘ஆராய்ச்சி’ இப்படித்தான் – பணம் கொடுத்து ஒரு குப்பை சஞ்சிகையில் பதிப்பிக்கும் அளவில் இருக்கிறது.
இவை பற்றியெல்லாம், மனம் வெதும்பி நான் எழுதிய பதிவொன்று: A case for shutting down TISS (Tata Institute of Social Sciences) – 27/02/2018
சிலபல ட்விட்டர் பதிவுகள் – https://twitter.com/search?q=othisaivu%20tiss&src=typd; https://twitter.com/othisaivu/status/968696437985832960.
நக்கிலைட்டுகள் நேர்மையாளர்கள் அல்லர் – வன்புணர்ச்சிகளும் (தண்டனையாக), நடு ரோட்டில் நாய்போல சுடப்படலும் தான் அவர்களுடைய காட்டாட்சியில் சாஸ்வதம். அவர்கள் ஜாதிவெறியர்களும்கூட.
நக்கிலைட்டுகளுக்கு – ‘வளராத’ பிரதேசங்கள’ வளர்வதில், புனர் நிர்மாணம் செய்யப்படுவதில் அக்கறையில்லை. சொல்லப்போனால் – அவர்கள் இவற்றுக்கும் எதிரிகள். ஏனெனில் சுபிட்சமும் தன்னிறைவும் வளர்ச்சியும் ஏற்பட்டால், அவர்கள் வீட்டில் புரட்சிக்கனல் எரியாதே, ஐயன்மீர்!
நக்கிலைட் முயக்கங்கள் பெறும் உதவிகள் / ஊழல் பணமென்பது பலவகைகளில் அவர்களை அடைகிறது. கான்ட்ராக்டர்களையும் தொழிலதிபர்களையும் உலுக்கி வாங்குவது, ஆள்கடத்தல் வகை, சிறுதொழிலதிபர்களை மிரட்டி வாங்கும் ‘ப்ரொடெக்ஷன்’ பணம், சந்தைகளில்+காடுகளில்+வயல்களில் உழைத்து உண்ணும் பாட்டாளிகளிடமிருந்து ஹஃப்தா வகை மாமூல். பெரியசாலைகளில் வண்டிகளை நிறுத்தி வாங்கும் ‘சுங்கம்’ வகை கொள்ளை. பாகிஸ்தான் வகை நாடுகளிலிருந்து வரும் பண/ஆயுத உதவி + கள்ள நோட்டுகள், க்றிஸ்தவ மதமாற்ற வாதி மிஷனரிகள், தன்னார்வ நிறுவனங்கள் வழியாக அவர்களை வந்தடையும் நிதி. … …
இந்த நிதியில் ஒரு பங்கு நக்கிலைட்டுகளாகப் பரப்புரை செய்யும் நிறுவனங்களுக்கும் பிற ‘ஆலோசகர்களுக்கும்’ சிலபல அர்பன் நக் ஸல் ஆசிரியப் பெருந்தகைகளையும் அடைகிறது. அவர்களும் பணவுதவி பெற்றுக்கொண்டு அமோகமாக உழைக்கிறார்கள்.
இவர்களுக்காகப் பரிந்து, பரப்புரை செய்யும் தொழிற்சாலைகள் என, பலப்பல இருக்கின்றன – ஈபிடபிள்யு இதழ் உட்பட, பொழுதன்னிக்கும் இதனைச் செய்யும் கருத்தியல் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்.
அவ்வப்போது காங்கிரஸ் கட்சியும் – பிற, பாரதத்துக்கு எதிரான கட்சிகளும் (குறைந்த பட்சம் ‘எதிரியின் எதிரி நண்பன்’ எனும் அளவிலாவது) நக்கிலைட்டுகளுடன் கூடிக்குலாவுகின்றன.
இவர்களுக்கு வெடிகுண்டு / ஆயுத தளவாடங்கள் / பகுதிகள் தயாரித்து அனுப்ப நாட்டில் பல இடங்களில் சிறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. (சுமார் பத்து வருடங்களுக்கு முன் சென்னை அம்பத்தூரில் இப்படிச் சில நடப்பது என்பது அம்பலமானது – இதைப் படிக்கும் சிலருக்கு இந்த எழவுகள் நினைவில் இருக்கலாம்)
ஒருகாலத்தில் நக்கிலைட்கள் (சாரு மஜூம்தர், கனு ஸன்யால், வினோத் மிஷ்ரா, ஏன், ஓரளவுக்கு கொண்டபல்லி சீதாராமைய்யா, கிஷென்ஜி, ஆஸாத், கணபதி உட்பட) ஓரளவுக்குப் படித்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் நம்பிய சிந்தாந்தங்களுக்காக (அவை மகத்தான அரைகுறைத்தனம் மலிந்து இருந்தாலும், அட்டூழிய வன்முறைகளின் பாற்பட்டாலும் – அவர்களுடைய ஹீரோக்கள் – ஸ்டாலின், மா-ஸேதுங், போல்பாட் போன்ற சர்வாதிகாரக் கொலைகாரர்களாக இருந்தாலும்) உயிர்விடத் தயாராக இருந்தார்கள். ஆனால் பெரும்பாலான இப்போதைய நக்கிலைட்டுகள் – வெறுமனே கிடைத்ததை நக்குவதில் விசேஷ பராக்கிரமமும் வல்லமையும் படைத்தவர்கள். படிப்பு என்பதைச் சுக்குக்கும் அறியாதவர்கள். அவர்கள் காப்பதாகச் சொல்லும் அனைவரையும் கள்ளப்பணம் வாங்கிக்கொண்டு கொல்லத் தயங்காதவர்கள். அவர்களுடைய ஒரே வழி வன்முறை மட்டுமே. அதேதான் அவர்கள் குறிக்கோளும்; ‘power flows from the barrel of the gun.’
தமிழகத்தில் பலப்பல அமைப்புகள் இப்படி இருந்தன. இப்போதும் இருக்கின்றன. சிறியவை பெரியவையாக. பிரிந்தும் சேர்ந்தும். உடைந்தும் ஒட்டிக்கொண்டும். காட்டிக்கொடுத்துக்கொண்டும் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக்கொண்டும் பரஸ்பர புரட்சிகரக் கொலைகளில் ஈடுபட்டுக்கொண்டும். ஆர்வைஎல், மக்கள் யுத்தம், மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி / மக்கள் அதிகாரம், மாவோயிஸ்ட் கோஆர்டினேஷன் ஸென்டர், தமிழ் நாடு லிபரேஷன் ஆர்மி, தமிழ் விடுதலைப் படை, லிபரேஷன் அணி, ஜனம். மகஇக.. … இவர்கள் சார்பாகக் கூலிப்படைகள், வழக்குரைஞர்கள் உட்பட இருக்கிறார்கள். சிலபல பிற ‘புரட்சிகரப் பண்பாட்டு’ இயக்கங்களும் இருக்கின்றன. மனஓசை புதியஜனநாயகம், புதியகலாச்சாரம் போன்றவையெல்லாம் இந்த நக்கிலைட் லும்பன்களின் ஒருகால/இக்கால பத்திரிகைகள்)
தமிழகத்தில் நக்கிலைட்டுகளின் பணியை (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எதற்கெடுத்தாலும் ஊழல் வகையறா), பெரும்பாலும் திராவிடக் கட்சிகளே லோகலாகத் தன்னிறைவுடனும் செயலூக்கத்துடனும் செய்துவிடுவதால் – இங்கு அந்த விஷக்கிருமிகள் அவ்வளவாக வளரவில்லை. இருந்தாலும்… நக்கிலைட்டுகள் – ஆயுதம் தாங்கிய திராவிடர்கள். அதாவது – கொலை, கொள்ளை, சுரண்டல் போன்றவற்றை தயவுதாட்சணியம் இல்லாமல் செய்யும் தன்மை கொண்டவர்கள்…
சொகுசு நக்கிலைட்டுகள் என ஒரு பெரிய கும்பலே தமிழகத்தில் இருக்கிறது – இவர்களில் பெரும்பாலோர் அரசுப்பணியில் காலட்சேபம் செய்துகொண்டிருக்கிறார்கள், கொண்டிருந்தனர். சிலர் அரசுடமை வங்கிகளிலும் வேலை செய்து புரட்சிகர மைதுனம் செய்துகொண்டிருக்கின்றனர். இவர்கள்தாம் தமிழக நக்கிலைட்டுகளின் முன்னோடித் தலைவப் பேடிகள். (இவர்களில் பலரை நான் அறிவேன் – சிலர் இன்னமும் நேரடி புரட்சிகர நடவடிக்கைகளில் (நம் இளம் ப்ளாக்கர்கள் போலவே) அலுவலக நேரத்தில் இணையப் புரட்சிக் கருமத்தின் கண்ணாயினர். சிலர் மாஜி நக்கிலைட் ஆகி ரிட்டையர் ஆகி விட்டார்கள்; சிலர் இன்னமும் பகுதி நேர வீரர்களாக, லட்சணமாக – புரட்சிக்காக நெற்றி நரம்பு தெறிக்க உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டே பூபாளம் பாடிக்கொண்டிருக்கிறார்கள், பாவம்!)
தமிழகக் கல்லூரிகளிலிருந்து பெரும்பாலும் நக்கிலைட்டுகள் உருவாவதில்லை (சில சட்டக் கல்லூரிகளைத் தவிர); பெரும்பாலும் படிப்பறிவு கிடைக்கப் பெறாத கிராம இளைஞர்களும், தொழிற்சாலைப் பணியாளர்களும்தான் நக்கிலைட் பிரச்சாரத்தின் மாயவலையில் வீழ்கிறார்கள், பாவம். இவர்கள்தாம் உண்மையாகவே வீழ்பவர்கள்.
சரி, நாம் என்ன செய்யலாம்?
எப்படியும் இருவிதங்களில் நக்ஸல்பாரி நக்கலைட்டுகள் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டியவர்கள் 1) ஒருவழிப் பயணச்சீட்டு கொடுத்து, கூண்டோடு வைகுண்டம் அல்லது மாவோட்சம் கொடுத்தல் 2) துரித கதி வளர்ச்சியை முடுக்கிவிடுதல் – முதலில் முதலாவது. ஏனெனில் நக்கலைட்டுகள் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வளர்ச்சி ஏற்படுவது நடக்காது.
அர்பன் நக்ஸல் ஆசிரிய எழவாளர்களப் பொறுத்தவரை 1) அவர்கள் இனம் காணப்பட்டு வேலையை விட்டுக் கழற்றி அனுப்பப்படவேண்டும் 2) மேற்கண்ட சிலபல பல்கலைக் கழகங்களில் உள்ள ‘ஸோஷியல்(!) ஸைன்ஸஸ்(!!)’ வகையறா துறைகள் இழுத்து மூடப்படவேண்டும், மேலும் அவற்றைப் புனர் நிர்மாணம் செய்து நிஜ ஆராய்ச்சிகள் நடக்க ஏதுவாக அவற்றைக் கட்டமைக்கவேண்டும் 3) ஆராய்ச்சி செய்யாமல் பஜனை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இனம் கண்டுகொண்டு அவர்களைச் சரியான முறையில் ‘ஊக்குவிக்க’ வேண்டும்.
அர்பன் நக்ஸல் மாணவர்களுக்கு (ஏன், அனைத்து மாணவர்களுக்கும்) கட்டாய இரு வருட ராணுவப் பணி + இரு வருட கிராம வளர்ச்சிப்பணி அமல் படுத்தப்படவேண்டும். இதுமட்டுமே உழைப்பின் மேன்மையையும், சேவை மனப்பான்மையையும், அடிப்படை நேர்மையையும், நம் நாட்டு மக்களிடம் கரிசனத்தையும் அவர்களிடம் வளர்க்கும்; மேலும் அவர்களுக்கு ‘பாரதம்’ என்பதைப் பற்றி சுற்றுலா கலந்த பாலபாடத்திட்டம் அமல் படுத்தப்படவேண்டும்.
காலனிய வரலாற்றுப் புத்தகங்களும், முக்கியமாக – நூருல் ஹஸன்இஸ்லாம் காலத்திலிருந்து பதிப்பிக்கப்பட்ட குப்பை வரலாற்றுப் புத்தகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு – நம் தேச வரலாறுகளை ஆசாபாசமில்லாமல் நேர்மையாகப் பதிவு செய்யும் புத்தகங்கள் பதிப்பிக்கப்படவேண்டும் – இது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்…
ஹ்ம்ம். பார்க்கலாம், நம் எதிர்காலம் எப்படி விரிகிறதென்று…
-0-0-0-0-0-0-
விவேக்கின் புத்தகம் + திரைப்படம் பற்றிய என்னுடைய ஒரே விமர்சனம் என்னவென்றால் – இந்தப் புத்தகமோ அல்லது படமோ – க்றிஸ்தவ மிஷனரி மதமாற்றப் பேடிகளின் (இவர்கள் சட்டப்படி ஒழுகும், மானமுடைய சாதா க்றிஸ்தவர்கள் அல்லர், கவனிக்கவும்!) நக்ஸல் முயக்க ஆதரவு பற்றி ஒரு பேச்சும் பேசவில்லை. (மேலும் தீவிரஇஸ்லாம்வாத லும்பன்களுடனான நக்கல்பாரிப் பிணைப்பைப் பற்றிய பேச்சுமில்லை)
ஏனெனில் – பஸ்தர் பகுதிகளுக்குச் சென்று ஓரளவாவது அங்கே சுற்றியுள்ள எவருக்கும் இரண்டு விஷயங்கள் பொளேரென்று மண்டையில் அடிப்பதுபோல் தெரியவரும்: 1) படுபீதியளிக்கும் அளவு தெருவுக்குத் தெரு இருக்கும் ‘தன்னார்வ அமைப்புகள்’ – மொத்தமாகவும் சில்லரையாகவும் நடத்தப்படும் மனிதவுரிமைக் கடைகள் 2) க்றிஸ்தவ மிஷனரிகளும் நக்கிலைட்டுகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்து கொள்ளும் பாங்கு (பரப்புரை ரீதியாகவும், தில்லியில் / வெளிநாடுகளில் பிரச்சினைகள் ஊதிப் பெருக்கப்படுவதற்காகவும், பணப் போக்குவரத்துக்காகவும், பரஸ்பரப் பாதுகாப்புக்காகவும், பாரதத்தை உடைப்பதற்காகவும்… …).
ஆனால் – இதையும் சேர்த்திருந்தால் விவேக் அவர்களின் படத்திற்கு எதிர்ப்பென்பது அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை போப்புடைய வாதிகான் உட்பட ஏகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் – ஒருவேளை, டப்பாவை விட்டுவிட்டு இப்படம் வெளியே வந்திருக்கவேமுடியாதோ என்ன எழவோ! ஏனெனில் இம்மாதிரி விஷயங்கள் வெளிவராமல் அமுக்கப்படுவதற்காகவே இருப்பவை அல்லவா?
எது எப்படியோ – இந்தப் படமும் புத்தகமும் பாரதம் எதிர்கொள்ளவெண்டியிருக்கும் மிகமுக்கியமான பிரச்சினைகளில் ஒன்றைப் பற்றி அழுத்தம்திருத்தமாகப் பேசுகின்றன. இவற்றால் ஏற்பட்டுள்ள தேசஅளவிலான உரையாடல்கள் முக்கியமானவை. சிலபல நச்சுக்கிருமிகள் தாங்கள் இனம் காணப்பட்டதைக் குறித்து படபடப்பில் இருக்கின்றன். கேளிக்கைக்காகவென சிலபல சாதா ஊடகக்கோமாளி ஜந்துக்கள் தங்களை அர்பன் நக்ஸல்களாக வரித்துக்கொண்டிருக்கின்றன.
எல்லாம் நல்லதற்கே. விவேக் அவர்களின் படமும், அவர் புத்தகமும் நம்மால் சர்வ நிச்சயமாக ஆதரிக்கப் படவேண்டியவையே.
ஆக, முடிந்தால், ‘ஆவன’ செய்யவும். நன்றி.
நக்கிலைட்டுகள் தொடர்புள்ள பிற பதிவுகள்:
September 25, 2018 at 21:48
இந்த நகர்புற நக்சல்கள் பற்றி கீழ்கண்ட எனது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு ஜெமோ.அவர்களுக்கு கீழ்கண்ட கடிதம் ஒன்றை எழுதி இதுவரை பதில் வராத நிலையில் தங்களின் பதிவு பல தெளிவை எனக்கு அளித்தது. மேலும் அக்கடிதத்தில் நான் கொடுத்திருந்த சுட்டியில் உள்ள பல விவரங்கள் தங்களின் இந்த பதிவில் எழுதியிருப்பதை உறுதி செய்யும் விதமாகவும் இருக்கிறது.
இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நகர்ப்புற நக்சலிசம் பற்றிய தங்கள் கருத்தை அறியவிழைகின்றேன்.இன்று பிஜேபிஅரசால் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆறுபேரின் கடந்த கால நடவடிக்கைகளை அறிந்தும்
அதன்பேரில் முன்பு தங்கள் ஆட்சியில் நடவடிக்கைகள் எடுத்தும் அதை எல்லாம் வசதியாக மறந்து விட்டு மோதியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதையே தன் ஒரேகுறிக்கோளாக கொண்டு
இந்தநாடு எப்படிப்போனாலும் பரவாயில்லை என நினைத்து பிரிவினைவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் அருந்ததி ராய்,பிரஷாந்த்பூஷன், தீஸ்தாசால்வட் போன்றவர்களுடன் இணைந்து குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் வன்ம அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?.இவர்கள் அனைவரின் நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதா?நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்,இறையாண்மைக்கும் உகந்ததா? இதில் மத்திய அரசின் செயல்பாடுகள் சரிதானா?.அன்றாட அரசியல் நிகழ்வுகளில் உடன் நீங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி எங்களின் சந்தேகங்களை போக்குவீர்கள்எனநம்புகிறேன்.
இது தொடர்பான சுட்டியொன்றையும் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
http://kathirnews.com/2018/08/30/who-are-urbannaxals/
அன்புடன்,
அ.சேஷகிரி.
September 26, 2018 at 08:47
ஐயா சேஷகிரி,
பாவம், ஜெயமோகனுக்கே அலுக்கும் வகையில் சகல சப்ஜாட் சப்ஜெக்ட்களிலும் அவரைக் கேள்வி கேட்டால், அவர் என்னதான் செய்வார் சொல்லுங்கள்?
வாசகர் கடிதங்கள் எல்லாவற்றுக்கும் அவர் பதில் அளிக்கவேண்டுமென்றால் – அதுவன்றிப் பிறிதொன்றும் அவரால் செய்யமுடியாதல்லவா?
ஆக, இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக்கொள்கிறேன். ஒரு எளிய பாமரக் (verse woody) கருத்தியல் பார்வையை உங்கள் விருப்பம்போல் திரிக்கவேண்டாம்.
எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.
இதுகுறித்து இனிமேல் யாருடனும் உரையாடப் போவதில்லை. எனக்குள் மட்டுமே இரண்டுவிதமாகப் பிரிந்துகொண்டு தன்னைத்தானே தன்னில் கரைந்து மேய்ந்துகொள்வேன். யாராவது இதுகுறித்து என்னுடைய மேலான கருத்தைக் கேட்டால், அவர்களுடைய கருப்பையை நீக்குவது மட்டுமன்றிப் பிறிதொன்றையும் செய்வேன்.
அதன் விவரங்கள், கறுப்புடமாரம் பகுதி 23456ல். (‘செம்மரக்கூழ் முகிலன்பு’)
அன்புடன்,
ஆசான்.
September 26, 2018 at 12:30
சரி சார் அவரை விடுங்கள்!.நீங்கள் இது பற்றி மேலும் கருத்து கூறுங்களேன் உங்களின் ‘ஏழரைகளுக்காக’ :-)
September 26, 2018 at 14:00
ஐயா, தற்சமயம் இந்த எண் உபயோகத்தில் இல்லை. சந்தாதாரர் தான் அறிந்ததைத் தவிர பிறிதொன்றை அறிவதில்லை.
என் உள்மனக் கிடக்கை உடுக்கை இழந்தவன் கைபோல் மற்றாங்கே நற்றாள் தொழாஅர் இனி புதிது இப்பூவலகில் அனைத்தும் இனியவை நாற்பது இடுக்கண் களைவது எனின், மேவி இரண்டும் கலந்து நன்னீர்ப்பூசிக் குளிப்பேன் யான், அது செய்யுமுனே முடியேன் என்பேன்.
அது அன்றிப் பிறிதொன்றில்லை.
நன்றி. ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்!
ரா.
September 26, 2018 at 18:34
“பாவம், ஜெயமோகனுக்கே அலுக்கும் வகையில் சகல சப்ஜாட் சப்ஜெக்ட்களிலும் அவரைக் கேள்வி கேட்டால், அவர் என்னதான் செய்வார் சொல்லுங்கள்?”
Idhu madhiri badhil ezhudhuvar
http://www.jeyamohan.in/113170
I read this thrice but could never understand!
If Ram or any of the 6.5s could help?!
September 26, 2018 at 19:29
யோவ்! ஸ்வாமீ!!
திமிரா? பாத்துக்கினே கீறேன், கண்டத என் மேல கவ்த்றியே!
வொணர்வு நெலைண்றது அறிவுபூர்வமா வொணர்ச்சி பட்றது. வொணர்வு நெலயே அறிவு நெலய வொணந்திட்ச்சின்னாக்க, அத்த அட்த்த தபா பக்கிட்டு தண்ணீல அம்க்கோணும். அது அப்ப ஈரமாய்டும்.
அப்பால, அத வொணர்ந்து வொணத்திக்கணும்.
இத்தாண்டா சலவைக்கார வேல. இத்த பிர்யாம இன்னாபா எலக்கியம் மண்ணாங்கட்டீ தெர்ப்புள்தீன்னுட்டு ஆண்மீகப் பாதைல போற?
நம்க்கெல்லாம் பொண்மீகந்தாப்பா ஒத்து வரும், சரியா?
வர்ட்டா, நைனா?