அந்தக் காலத்தில் ஆஇரா வேங்கடாசலபதி இல்லை…

September 6, 2014

… ஆகவே மொழி பெயர்ப்புகள் சரியாகவே இருந்தனவோ? அந்தக் காலத்தில் காப்பி இல்லை என்றாலுமே கூட…

ஸி எஸ் ‘அம்பை’ லக்ஷ்மி அவர்களைத் தொகுப்பாசிரியராக(வும்) கொண்டு வெளிவந்த  –  ‘சாவகாச நகரம்: சென்னையின் மீதான எழுத்துகள்’ (The Unhurried City: Writings on Chennai – edited by C. S. Lakshmi) புத்தகத்தில் சில தமாஷ் விஷயங்கள் இருக்கின்றன. யார் சொன்னது நான் மிகவும் மதிக்கும் அம்பை ஒரு மிகஸீரியஸ் எழுத்தாளர், அவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியியேல்லை என்று!

அவற்றில் ஒன்று –  எழுத்தாளர், வரலாற்றாசிரியர், இலக்கியவரலாற்றாளர், மேலதிகமாக ‘போட்டுக் கொடுங்கபா, பக்கத்து கடேல இன்னும் அறிஞத்தனங்கள் சல்லீசாக கெடக்குது, அழுகின பழத்த போடாத‘  இன்னும் பலவாகவும் – மொழிபெயர்ப்பாளராகவும், அறிஞராகவும், அரசியல், ‘பாரத ரத்னா’ விருது விமர்சகராகவும் செயல்படுவதாக அநியாயத்துக்கு அபாண்டமாக வதந்தி பரப்பப்படும் — பரிதாபத்துக்குரிய திரு ‘சலபதி’ அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. Street Smart in Chennai: The City in Popular Imagination.

-0-0-0-0-0-

… அண்மையில் பாபர் நாமா (பாபரின் சுயசரிதை) – ஆங்கில மொழிபெயர்ப்பினைப் படித்துக் கொண்டிருந்தேன். இதன் மொழிபெயர்ப்பாளர் – நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வீலர் தாக்ஸ்டன்; இவர் அண்மையகிழக்கு மொழிகளில் ஒரு நிபுணர். ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர். (The Baburnama: Memoirs of Babur, Prince and Emperor (Modern Library Classics)

2002 வாக்கில் வெளிவந்த இது – பாபர் நாமாவின் மூன்றாம் மொழிபெயர்ப்பாகும். இரண்டாவது மொழிபெயர்ப்பானது 1921ல் வெளிவந்தது – கைவண்ணம்: அம்மணி அன்னெட் பெவரிட்ஜ். (The Babur-Nama in English (Memoirs of Babur) – Primary Source Edition)

நான் பலவருடங்கள்முன்பு – என் சிறுவயதில் இந்த இரண்டாவதைப் படித்திருக்கிறேன் – பரவாயில்லை என்றுதான் நினைவு. ஆனால் அது, இப்போது தாக்ஸ்டன் அவர்களது மூன்றாவது மொழிபெயர்ப்புக்குக் கிட்டே கூட வரமுடியாது எனத்தான் தோன்றுகிறது.

தாக்ஸ்டன் அவர்களுக்கும் அம்மணியின் இரண்டாம் மொழிபெயர்ப்பு சுத்தமாகப் பிடிக்கவில்லை; ஆகவே, தன்னுடைய முன்னுரையில் எழுதுகிறார்:

“அது ஒரு கற்றுக்குட்டியின் மொழிபெயர்ப்பு போல இருக்கிறது – எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம், அகராதியில் பார்த்துப் பார்த்துக் கோர்த்துப் போடப் பட்டிருக்கிறது.”

இதையேதான் நானும் சொல்வேன், ‘சலபதி’ அவர்களின் மொமுழிபெயர்ப்புகள் பற்றி…

-0-0-0-0-0-0-0-

தொகுப்பிலுள்ள ‘சலபதி’ அவர்களுடைய கட்டுரையின் முதல் பக்கம் கீழே:

sad_trans_chalapathy

நன்றி: புக்ஸ்.கூக்ல்.காம்

இதில் – முதல் வரியில், இவர் ‘கெட்டும் பட்டினம் சேர்‘ என்பதை மிக அழகாக முழி பெயர்த்திருக்கிறார்; அதாவது, இப்படி எழுதுகிறார் —

“kettum pattinam ser (Ruined, go to the city) is an old Tamil adage.”

நகைச்சுவையைத் தொடர்கிறார்:

“Gratuitous advice to the country folk, ruined in their village and looking for a new livelihood in the city “

முதல் வரியிலேயே, இந்த மெத்தப் படித்த அறிவுஜீவிய கட்டுரை க்றீச்சிட்டுப் பல்லிளித்துவிடுகிறது…

… மொழிபெயர்ப்பு, புரிதல், தர்க்கம், பொதுமைப் படுத்துதல், முத்திரைகுத்துதல்  என – பலப்பலவிதமாக, பல தளங்களில் மேலதிகப் பிரச்சினைகள், அவருடைய கட்டுரையில்…

ஏனெனில் – முதல் கோணல், முற்றும் கோணல் – மன்னிக்கவும். :-(

அதாவது, சலபதிய பெயர்ப்பு பாதிப்பில் என் சுருக்க விமர்சனத்  திறமை, ஆங்கிலத்தில் இப்படி வெளிப்படலாமோ:

முதல் கோணல், முற்றும் கோணல் – மன்னிக்கவும். :-(   =    First skew, Ended zigzag – Mind please stand. :-( 

சரியா? ;-)

-0-0-0-0-0-0-

… மேதகு முழிபெயர்ப்பாளரின் தவற்றை சுட்டிக் காட்ட, அறிந்துகொள்ள முடியாதவர்கள் மட்டும்தான் – இனிமேல் இரவில் நன்றாகத் தூங்க முடியும்.

மற்றவர்களெல்லாம் – எந்தப் புற்றில் எந்த சலபதிய மொழிமாற்றம் இருக்கிறதோ எனப் படபடத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். தமிழனாகப் பிறந்து பாவப்பட்ட தமிழையும் ஓரளவுக்கு அறிந்து, சிறிது ஆங்கிலமும் தெரிந்தவர்கள் துர்பாக்கியவான்கள். பரலோக, இகலோக ராஜ்ஜியங்கள் அவர்களுடையதல்ல, சர்வ நிச்சயமாக…

சரி. ஆங்கில மொழிமாற்றைத்தையே விடுங்கள் – ஆனால், மேதகு முழிபெயர்ப்பாளர் அவர்கள் ஒரு தமிழர். தமிழக அறிவியக்கத்தின் உச்சாணிக் கிளைகளில் படுதீவிரமாக இயங்குபவர். திராவிட இயக்கம், தமிழர் பண்பாடு, இலக்கியம், வரலாறு என்றெல்லாம் கலக்குபவர்.ஆக ஒரு அடிமட்ட வாசகனான என் போன்றவனின் பார்வையில் – குறைந்த பட்சம் அவர் – தமிழில், அதன் சொல்லாடல்களில், கொஞ்சமாவது பின்புலம் பெற்றிருக்கவேண்டும் என்பது ஒன்றும் ஒரு பெரிய அதிகபட்ச, வீங்கிய மிகைஎதிர்பார்ப்பல்ல.

ஆனாலும், இந்தக் கந்தறகோளம் – பொதுவாக, பரவலாக உபயோகத்தில் இருக்கும் தமிழ் சொல்லாடல்களின், புழக்கத்தில் இருக்கும் சொற்றொடர்களின் பின்புலங்களையும், ஏன் அவற்றின் நேரடி அர்த்தங்களையும்கூட அவர் அறியாமல் கண்டமேனிக்கும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
பாவம், நம்  தமிழ்.
டமில்ட் டாய்க்கு றொம்ப பொருமை அடிகம்டான், தாஸ்தீதான் — இன்னாண்ற நயினா?

-0-0-0-0-0-0-

அறிவியக்கம் சார்ந்து இயங்கும் பலரின் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கும் ‘ஸ்காலர்லி’ புத்தகத்தின் ஒரு எடிட்டர்  – தொகுப்பாசிரியர் என்பவர்,  இந்த கோரங்களையெல்லாம் சரிபார்க்க மாட்டாரோ?

ஆனால், பாவம் அம்பை அவர்கள், அவருக்கு என்ன அழுத்தங்களோ, எம்மாதிரி இக்கட்டுகளோ – இப்படிப்பட்ட சராசரித்தனங்களுடன் சமரசம் (கண்டுகொள்ளாமை) செய்து கொள்ளவேண்டி வருவது.

… இருந்தாலும் – அம்பை அவர்களின் பல சிறுகதைகளை எனக்குப் பிடிக்கும்.

தொடர்புள்ள பதிவுகள்:

7 Responses to “அந்தக் காலத்தில் ஆஇரா வேங்கடாசலபதி இல்லை…”

 1. Sridhar Says:

  பொன் சின்னத்தம்பி முருகேசன் என்பவர் Tao of Physics ஐ முழி பெயர்த்துள்ளார். பத்து பக்கம் படிப்பதற்குள் நா வறண்டு, முழி பிதுங்கிவிட்டது. அடுத்த முறை சந்திக்கும்போது கொடுக்கிறேன்.படித்து இன்புறவும்.


  • Oh NO!

   Sridhar, I thought, you were my well-wisher!

   So, it is really a tragic sunday morn for me to realize that – actually you want to push me down a borewell. ;-)

   All – just because, you are jealous of the fact that, I bore well too…

   Anyway, அய்யா! என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விடாதீர்!

   அடிக்கடிக் கடிப் பதிவுகளை இடுவதற்கு அப்பால் – நான் எப்போதாவாது உங்களுக்குக் கெடுதி ஏதாவது நினைத்திருக்கிறேனா?

   ஏனிந்தக் கோபம் அய்யா? :(


 2. i think u r missing the wood for the trees.. Chalapathy is a historian and doesn’t lay claims to English literary prowess..

  In Chalapathy, i think, one should relish the historical perspectives… .. ur take reminds me of the keerar episode in thiruvilaiyaadal…’kutram kandupidithe peyar vaangum pulavargal…’,…

  and btw i am eager to know if u can give ur version or wat u think is a better version of the translation of wat Chalapathy has attempted…


  • Sir Subbaiyaa, I really appreciate your sense of humour.

   Thanks. I really hope you do understand the context and meaning of that darn adage. So, my version would depend on what your version could be. Do you have one?

   I have no aversion to dear Chalapathy – but to think that he has historical perspectives? :-(

   May be you meant to write – hysterical perspectives?

   His whole essay depends on and starts off with that one stellarly WRONG premise and you are giving me a nice lecture on wood and trees!

   Thanks!

   __r.

 3. சரவணன் Says:

  அவருக்கு ஒழுங்காக மொழிபெயர்க்கத் தெரியாது என்று முன்பே ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகத்தை முன்வைத்து எழுதிவிட்டீர்கள். திரும்பத் திரும்ப அதையே எழுதி என்ன ஆகப்போகிறது? குற்றம், குறைகளைக் கண்டுபிடிப்பதில் இவ்வளவு நேரம் செலவிடுவதற்குப் பதிலாகத் தரமான எழுத்து, தரமான மொழிபெயர்ப்பு என்பதற்கு நீங்களே ஆக்கபூர்வமான உதாரணமாகத் திகழலாமே (such as Bahrupi Gandhi) ?

 4. ஆனந்தம் Says:

  (சில) பழமொழிகள் மொழிமாற்றம் செய்யும்போது தமது பொருளை சற்றேனும் இழக்க நேரிடும் என்று தோன்றுகிறது.
  உண்மையில் அந்தப் பழமொழியை வேறு எப்படி முழிபெயர்க்கலாம் என்று நீங்கள் சொல்லக்கூடாதா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s