கஞ்சீவரம் நடராஜன் ‘அறிஞர் அண்ணா’ அண்ணாதுரையும், சாகிற நேரத்தில் சங்கராசங்கராவும் – குறிப்புகள்

April 30, 2024

1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம்.

…படுமோசமான வக்கிரப் பேச்சும், அடுக்குமொழி-பொறுக்கிநடையும் ஜாதிவெறியும் ‘இன’வெறியும் பாரத எதிர்ப்பும் கொண்டவராக நெடுங்காலம் அண்ணா இருந்தாலும், ஓரளவுக்காவது தம்மைத் திருத்திக் கொள்ள, செழுமைப் படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார் எனச் சொல்லலாம். எனக்குத் தெரிந்தவகையில் இவர் பணமாக லஞ்சம்/கையூட்டு பெற்றதில்லை – ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படியிப்படி என இருந்திருக்கிறார், அரசுரீதியாக அவர் செய்த விஷயங்களுக்குக் காமரச உடலாசை ரீதியாக கைமாறு பெற்றிருக்கிறார். ஒரு சாட்சியாக அவருடைய “அவள் படிதாண்டாப் பத்தினியுமில்லை, நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை!”

…இதுவும் ஊழலைச் சார்ந்ததே! தனிமனித ஓழுக்கக் கேடே! இருந்தாலும், அவர் சர்வ நிச்சயமாகக் கருணாநிதி போன்ற #திராவிடமாடல் உதிரிகள் அளவுக்குப் படுமோசமாகத் தரம் தாழவில்லை, வீரியத்தோடு பெருங்கொள்ளையடிக்கவில்லை + பாலியல்ரீதி பலாத்காரங்களைச் செய்யவில்லை என்பவற்றையும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

சரி, இந்த அஅஅ என்பதை நினைவில் கொள்ளவும். அறிஞர் அண்ணா அவர்கள் எனப் பொதுவெளியில் ‘மரியாதை’யுடன் எழுதக் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கிறது. அவ்ளோதான். அதனால்தான்.

2

அஅஅ தமிழகத்தின் முதல் திராவிட முதலையமைச்சராக 1967ல் பதவியேற்கிறார். அவர் சீடர்கள் (மு கருணாநிதி உட்பட) ஆவேசத்துடன் அமோகமாகக் கொள்ளையடிக்கிறார்கள், அப்படி முடியாதபோது புறங்கையை நக்குகிறார்கள்.

அஅஅவுக்கு அவை பற்றித் தெரியவந்தாலும், ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை – ஏனெனில் அவருடைய பக்தகேடிகளின் ‘ஆதரவு’தான் அவரைப் பதவியில் வைத்திருந்தது என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் அறிஞர் அன்றோ?

சரி.  அஅஅவுக்குப் புற்று நோய் வந்திருக்கிறது என்று தெரிந்து அதற்கான மருத்துவரீதி விஷயங்களுக்கு அம்ரீகாவுக்குச் செல்கிறார், தமிழகத்தில் அப்போதே திராவிடமாடல்தான் ஆட்சியில் இருந்தாலும் – அரசு மருத்துவமனைகளுக்கு அவர் செல்லவில்லை.

எது எப்படியோ…

அமெரிக்காவை வென்று அங்கிருந்த ஆரிய நச்சரவங்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வெற்றிவாகை சூடியபின் 1968ல் திரும்ப வருகிறார். 

(நம்மெல்லாரையும் சர்வ நிச்சயமாக அரவணைக்கப் போகும்) யமன் அவரையும் பார்த்துப் புன்னகைப்பதை அஅஅ, தனக்கே உரிய இனமானச் சுயமரியாதைப் பகுத்தறிவுடன் புரிந்து கொள்கிறார். அவர் அறிஞர் அன்றோ?

மனைவியார் ராணியாரும் பாவம், எத்தைத் தின்றால் புற்று புதிரவிழ்க்கும் எனப் போகாத கோவிலில்லை. பூஜை புனஸ்காரம் என அல்லாடுகிறார். பாவம். இவையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியவையே! தன் குடும்பத்தினருக்காகக் கவலைப் படுவது மானுட இயல்புதானே? தன் ‘முற்றும் துறந்த முனிவனற்ற’ கணவன், தெருத்தெருவாகத் தன் இலவச இணைப்புடன் பொருத்திப் பார்க்கத் தோதான குறியீடுகளைக் காண அலைந்தாலும், மணாளனே மங்கையின் பாக்கியம்தானே!

எப்படியிருந்தாலும் – “ஸ்ரீரங்கத்து ரங்கநாதனைப் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாளும் எந்த நாளோ’ என ஆவலுடன் எதிர்பார்த்த சுத்தசன்மார்க்க சுயமரியாதைச் சிங்கம் அஅஅ இதற்கெல்லாம் மறுப்பே தெரிவிக்கவில்லை. 

ஏனெனில் “கடவுளை, அந்த ஒன்றேகுலம்ஒருவனேதேவனை நான் நம்புகிறேனா என்பது முக்கியமல்ல, அந்தக் கடவுள் என்னை நம்புகிறானா என்பதுதான் முக்கியம்” என்கிற மாதிரி #திராவிடமாடல் பஹூத் அறிவுடன் லூஸ்லவுட்டு விட்டார். அவர் அறிஞர் அன்றோ?

‘எப்படியோ, நான் நம்பாத கடவுள் என்னைக் காப்பாற்றினாலும் சரியே!’ என்கிற நிலையில்தான் அவர் இருந்தார், பாவம். இதனையும் நாம் ஆதூரத்துடனும் கருணையுடனும் புரிந்துகொள்ள முடியும்…

அவருக்குத் தெரிந்த ஒரு பகுத்தறிவுக்கிளி சுயமரியாதை ஜோசியக்காரர் என வைத்துக் கொள்ளுங்கள், அவர், ” அஅஅ! நீங்கள் வீட்டை மாற்றினால் உங்களுக்கு உடல் நிலை சரியாகிவிடும்” என்பது போலச் சொல்கிறார்.

பகுத்தறிவு இரவவன் – உடனே அதனைச் சிரமேற்கொண்டு புதுவீட்டைப் பார்த்து அதற்குக் குடி பெயர்கிறார். அவர் அறிஞர் அன்றோ?

பகுத்தறிவுக் கிளி சோசீ… சொல்கிறது, “ஓ மூட நம்பிக்கைக்கு எதிரானவனே! நீ புதுவீட்டுக்குக் குடிபெயற வேண்டுமென்றால்.. ராகுகாலத்தில் செய்யாதே!”

அன்பின் தெய்வம் அண்ணா அன்புடன் அக்கிளியைப் பார்த்து, “சரி, அப்படியே ஆகட்டும்…”

சுயமரியாதைக்கிளி, “கீ! கிக்கீ!!” எனக் கூவுகிறது!

இன்னாட்டு இங்கர்ஸால், சிரித்துக்கொண்டே, “ஆம்! சாவி முக்கியம்!” என்றார்… தத்தம் திருட்டுச்சாவிகளைக் கிடைத்த தொண்டிகளிலெல்லாம் சொருகும் வல்லமையும் செயலூக்கமும் படைத்த திராவிடலை இளஞ்சிட்டுகள் ஆர்பரித்தன… கிக்கீகிக்கீ

… நம் கஞ்சிவரத்தின் பல்கலைக்கழகார், தம் மனைவியுடன் புதுவீட்டுக்கு, ராகுகாலத்தை லூஸ்லவுட்டுவிட்டுப் பின்னர் பெயர்கிறார்… அவர் அறிஞர் அன்றோ?

அங்கேயும் முருகன் படம் திவ்யமாக இருக்கிறது. பழநியாண்டவன். ஆபத்பாந்தவன். அநாதரக்ஷகன். அவனருள் வேண்டுமே!

தமிழ்க்கடவுள் என ஸ்டிக்கரை நாமே ஒட்டிக் கொண்டாலும், நம் ஸ்ரீமுருகன் – அந்த ஸ்கந்தன், கார்த்திகேயன், ஸுப்ரஹ்மண்யன் – தம்மை வெறுப்பதாக வெளியில் காட்டிக் கொள்பவர்களுக்கும், தமிழ் தெரியாதவர்களுக்கும் கூட – ஏன், திராவிடத் திராபைகளுக்கேகூட – அருள் பாலிப்பான் அன்றோ?

ஆகவே, கிளிசோசீ சொன்னபடி  அஅஅ வணங்குகிறார். அவர் வணங்காமுடியாக இருந்தாலும், அன்றும் முருகனை வேண்டினார். (அவருடைய அன்பு மனைவி ராணி அவர்களுக்காக, இச்சடங்குகளைச் செய்தார் என்பது,  அஅஅவின் புரட்சிகர நேர்மையைக் கேள்விகேட்பதும் கேலி செய்வதுமாகும், இல்லையா சொல்லுங்கள்?)

அதுமட்டுமல்ல, அந்தப் பாலூட்டி வளர்த்த பெரியார்கிளி பகர்கிறது… “ஐயா, காஞ்சித்தலைவா! பகுத்தறிவுச் செம்மலே!! நீவிர் அப்புதுவீட்டில் பால் காய்ச்சிக் குடிக்கவேண்டும்…”

அதையும் செய்தார் அஅஅ; எத்தைக் குடித்தால் புற்றுவிலகும் என இருந்த பாவப்பட்ட அந்த ஜீவனுக்கு, இதைச் செய்வதெல்லாம் பகுத்தறிவற்றதாகத் தெரியவில்லை.

அப்படியே தெரிந்திருந்தாலும், இக்காரியங்களைச் செய்வதனால் புற்று நோய் விலகும் என்றால் அதிலென்ன பிரச்சினை, சொல்லுங்கள். நமக்கு அப்படிப் பிரச்சினை வந்தால் இக்காரியங்களைச் செய்யமாட்டோமா என்ன?

பாவம். போகிற காலம் வந்தால் நாமெல்லாரும் போய்ச் சேர்ந்தேயாக வேண்டும்…

ஆகவே.

அஅஅ 1969ல் போய்ச் சேர்ந்தார்.

திருமுருக கிருபாநந்த வாரியார் ஸ்வாமிகள் அவர் அப்போதே சொன்னதைப் போல “விதி வல்லமையுடையது… ஊழை வெல்ல முடியாது…”

ஆனால் அப்படிச் சொன்னதற்காக திராவிட திமுக குண்டப் பொறுக்கிகள் அவரையும் தாக்கினர்; அவருடைய பூஜைப்பொருட்களைச் சேதப் படுத்தினர்… (நெய்வேலி பகுதியில் இது நடந்தது என நினைவு…)

(ஆனாலும். திமுக கும்பலிலேயே ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளக் கூடிய தலைவராக அஅஅ மட்டுமேதான் இருந்தார் என்பதை மறுபடியும் சொல்லவேண்டும்..)

3

சரி. இதெல்லாம்  ஏன் பரவலாக வெளியே தெரியவில்லை?

அது அப்படியில்லை. அந்தக் காலத்திலேயே இந்த பகுத்தறிவு தகிடுதத்தங்களைக் கிண்டல் செய்து பத்திரிகைகளில் செய்திகள் வந்தனதாம்.

ஆனால், காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகளின் ‘ஜென்டில்மேன்’ வகை மென்மையான எதிர்ப்பு -பெருங்கிண்டலாகவோ, ‘வைரலாகவோ’ ஆகவில்லை. ஏனெனில், அப்போதைய பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் கூச்சப் படும் ஜாதியினர். ஆபாசப்பேச்சில் முக்குளிக்கும் திராவிடன்கள் அல்லர்.

அதே சமயம், இக்கால காங்கிரஸ்காரன்கள் போலப் பேடிகளாக இருந்திருக்கவில்லை அவர்கள். நாய்க்குப் பொரை போல,  பிச்சை போடுவதை விட்டெறிதால் வாலாட்டிக் கொண்டே சாப்பிடும் பெருந்தகைகள் அப்போது இல்லை.

ஆகவே பொதுவெளியில் திராவிடத்தனமாகப் பேச, பரப்புரை செய்ய, தனிமனிதத் தாக்குதல் செய்ய – மிகுந்த சங்கோஜப் பட்டனர் அவர்கள்; திராவிட உண்மைகளைக் கூட நாசூக்காகவே கோடிகாட்டினர் – அவ்வளவுதான்.

என் தகப்பனாரே (அவர் காமராஜ் காங்கிரஸ்காரர்) இந்த திராவிட இரட்டைவேடங்கள் பற்றி நிறையக் கூறியிருக்கிறார். அண்ணாதுரை கருணாநிதிகளின் லீலைகள் பற்றியும் அவருடைய கூட்டுறவுசங்க நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, சிறுவனாக இருந்த நான் பெரிதாக அவற்றைப் புரிந்து கொள்ள முடியாவிடினும், கேட்டிருக்கிறேன்… (ஹ்ம்ம்… அப்போது இக்காலத்திய ஸோஷியல்மீடியா எழவுகளின் ரெண்டு% இருந்திருந்தால்…. என்கிற வ்யர்த்தமாக நபுன்ஸக எண்ணத்தைத் தவிர்க்க ஏலவில்லை)

சரி.

1968ல் நவஸக்தி (காங்கிரஸ் சார்பு பத்திரிகை) “ஓ பகுத்தறிவுவாதிகளே! நீங்கள் சிங்கங்களா?” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

அக்கட்டுரையில் அண்ணாவின் பஹூத்தறிவைப் புட்டுப்புட்டு வைத்திருந்தார்கள்.

“சாகிற சமயத்தில் சங்கரா சங்கரா” பற்றித் தான்.

திராவிடர் கூட்டமே நடிப்புக் கோமாளிகளைக் கொண்ட காமாந்தகக் கொள்ளைக் கூட்டமே!

ஆமென்.

(அண்ணாதுரையின் திராவிட அடிவருடிகளின் ‘பிணத்தைப் புதைத்த  கல்லறையில் தயிர்வடை’  என்பது பஹூத்தறிவின் பரிணாம வளர்ச்சியே!)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...