தமிழகப் பள்ளிகளில் (லும்) போதைப் பொருட்கள்: திராவிடத்தின் இன்னுமொரு கொடை

March 2, 2024

1

சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்…

…எல்லாம் இந்த எழவெடுத்த ப்ளாக் (இத்தனைக்கும் நான் இக்காலங்களில் அதிகமாகப் பதிவுகளை இடுவதில்லை) மூலமாக அல்லது ஏதாவது ‘கல்வி’ எனும் சதுக்கப்பூதம் குறித்து உரையாட – அவ்வளவுதான். ஆகவே, எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

அதே சமயம், அதீதமாகப் புளகாங்கிதம் அடையாமல், இந்த வரலாற்றைக் குலுக்கும், புவியைப் புரட்டிப்போடும் நிகழ்வுகளுக்குக் காரணங்களை யோசிக்கிறேன்.

அவை அனேகமாக இப்படித்தான் விரியும் எனப் படுகிறது:

‘இந்த வினோத ஜந்து நேரில் பார்க்க எப்படி இருக்கும்?’
‘இன்னமும் இவன் முன்னமே போலத்தான் முட்டாளாக இருக்கிறானா?’
‘கடும் ரேபீஸ் வந்தும் இவ்ளோ நாள் உசுரோட இருக்கான், இந்த விசித்திர மிருகத்தை அவசியம் பார்க்க வேண்டும்.’
‘நெஜம்மாவே வீட்ல அவ்ளோ புக்ஸ் இருக்குமா, லேப்-கீப்னு வெச்சிருக்கானா இல்லாட்டி அட்ச்சிவுட்றானா?’
‘ஒரு வேலையும் பண்லன்றான், பின்ன எப்டி உயிர் வாள்றான்?’


 இதுவரை, வீட்டு முகவரியைப் பிடித்து ‘பட்டா, பாப்பார நாயே! வூட்டுக்கு ஆட்டோ அனுப்றேன்டா’ என யாரும் கிளம்பவில்லை என்பது எனக்குக் கூடுதல் ஆச்சரியத்தைக் கொடுப்பது.

Fact is that, nobody bleddy cares…. and of course, am very happy about it. :-)

எது எப்படியோ…

என்ன சொல்ல வருகிறேன் என்றால் – இப்படியாகத்தானே ஒரு இளைஞன் (முன்னாள், தமிழக கிராமப்புற மாணவன் ஒருவன்) அண்மையில் என்னுடன் மறுதொடர்பு கொண்டான்.

பின் ஒரு வழியாகச் சந்தித்தோம், அளவளாவினோம்.

சோகக் கதை.

ஏனெனில் இந்த போதைப்பொருள்-சார் குட்டிச்சுவராதல் எனும் திராவிடப் புத்தகத்தின் இன்னொரு அத்தியாயம்  பற்றியும் பேசினோம்.

(முந்தைய திராவிட அத்தியாயங்களில் சில: சினிமா பைத்தியம் பிடித்துக் குட்டிச் சுவராதல், 5-6 வகுப்புகளிலேயே காதல் செய்தல் (விஜய் போன்ற நடிகப் பொறுக்கிகளுக்கு நன்றியுடன்),மொடாக்குடி குடித்துக் கெடல், பாலியல் வக்கிரங்கள் (எ,கா: திராவிடத் தந்தைகள் குடிவெறியில்(லும்) தம் பெண்பிள்ளைகளையே பலாத்காரம் செய்தல்), பிரியாணிக்கும் 200ரூபாய்க்கும் க்வாட்டருக்கும் போராட்டம் செய்தல், சின்ன/லோக்கல் திருட்டுகளிலிருந்து க்ராஜுவேட் ஆகி தேர்ச்சி பெற்ற திராவிட மாவட்டச் செயலாளர்களாகவும் வாரியத் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் ஆதல்… … தொடரத் தொடர வேதனை மிகும்)

2

அண்மையில் திமுக திராவிடர்கள் சிலர் #திராவிடமாடல் போதைமருந்து ஃபேக்டரிகளை நடத்திக் கடத்தலிலும் ஈடுபட்டு கையும் திராவிடமுமாக மாட்டிக்கொண்டார்கள் எனப் படித்து ஒர்ரேயடியாக இறும்பூதடைந்தேன்.

இளம் ஸ்ரீ அண்ணாமலை இதுகுறித்து ஒரு சிறு விடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து, அதனை மேற்கோள் காட்டி ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ட்வீட் (அல்லது எக்ஸ்?) செய்திருக்கிறார்.

மக்களின் மீது உண்மையான கரிசனமும், குழந்தைகள்/மாணவர்கள் மேல் மிகுந்த நம்பிக்கையையும் வைத்துள்ள ஸ்ரீ அண்ணாமலையின் விடியோ கோரிக்கையை அவசியம் பார்க்கவும்.

அதைப் பார்த்ததால்தான் இந்தப் பதிவு.

3

கடந்த சிலபல வருடங்களாக, – லௌகீக, குடும்பஸ்த காரணங்களினால், பள்ளிகளுடனோ மாணவர்களுடனோ – ஏன், ஆப்த நண்பர்களிடமோகூடப் பழகும், நேர்முகமாகப் பேசும் வாய்ப்பு கிடைப்பதில்லை; அவர்கள் தப்பித்தார்கள்.

இருந்தாலும் பள்ளி மாணவர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன. முழுவதுமாக அறுந்து விடவில்லை. ஆகவே பலப்பல விஷயங்களைக் கேள்விப் படுகிறேன், பலவற்றை நேரிடையாகவே, வயிற்றில் அமிலம் சுரக்க, தலை சுற்ற, மார்வலி வரப் பார்த்திருக்கிறேன். (சிலவற்றைப் பற்றி விஸ்தாரமாக எழுதியுமிருக்கிறேன் – முக்கியமாக தமிழ்க்குடி பற்றி)

அவ்வனுபவங்களையும் கேள்விப்பட்டவைகளையும் அண்மையில் மேற்கண்ட இளைஞனிடம் உரையாடியதையும் வைத்து, சில குறிப்புகளை எழுதுகிறேன். இவை பொதுவாக, நம் திராவிடத்தால் வீழ்ந்த தமிழகத்தைப் பற்றி இருந்தாலும் – பிற பாரதப் பகுதிகளிலும் (வீரியம் குறைந்த அளவில்) விரிக்கத் தக்கவைதாம்,

0. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பல இளைஞர்கள் குடி, கஞ்சா, பீடி வகையறாக்களை குறுகுறுப்பு காரணமாகவோ, அல்லது ‘பியர் ப்ரெஷர்’ என்ற கூட இருப்பவர்களின் மனோதத்துவரீதி நிர்ப்பந்த காரணமாகவோ ‘ட்ரை’ செய்தவர்களாக-செய்பவர்களாக இருந்தாலும், அவர்களை அட்டிக்ட் எனக் கருத முடியாது.

மாறாக, இவர்களில் மனோபலம் அற்ற சிலர் மட்டுமே போதையின் பாதையில் தொடர்ந்து தள்ளாடிக் கொண்டு செல்பவர்கள். இந்தக் குறிப்புகளில் இவர்களைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்கிறேன்.

மேலும் % எண்ணிக்கைகள் என் சொந்த அனுபவத்திலிருந்து திரட்டப் பட்டவை. ஆக, இவை மேலேகீழே இருக்கலாம்.

சுமார் 40-50% மாணவர்கள் அப்படியும் இப்படியும் ரெகுலராக, திராவிடத்துக்கு நன்றியுடன், குடிக்கும் பழக்கத்தில் இருந்தாலும், அதைப் பற்றிப் பேசவில்லை – ஏனெனில் இப்பதிவின் குவியம் மரீஹ்வானா/கஞ்சா + முகர்தல்  வகை (சிறிய % காகெய்ன்) மட்டுமே; மேலும் இதில்  மெத், எக்ஸ்டஸி போன்ற தமிழ்ப் பொறுக்கி/திரையுலக விவகாரங்களைப் பற்றியில்லை.

1. கல்லூரிகளில் நெடுங்காலமாகவே இந்த போதைப் பழக்கம் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக போதைப் பொருட்கள் (எனக்குத் தெரிந்தே) சென்னை, கோவை, திருச்சி நகரங்களில் + கொடைக்கானல் மலைகளில் இருந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிச் சிறார்களிடமும் இது தொற்றிக் கொண்டிருக்கிறது.

2. கல்லூரிகளில் நூற்றிலொருவர் கணக்கில் கடந்த 2010 வரை இருந்த எண்ணிக்கை, என் அனுமானத்தில் 10-15% போல ஆகியிருக்கிறது. பள்ளிகளிலும் இது, சர்வ நிச்சயமாக 5% நிலையில் இருக்கிறது. நகர் சார் பள்ளிகளில் இது கூடுதல்.

ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சொல்கிறது போல, நம் கிராமப்புறப் பள்ளிகளிலும் இது பெரும் பிரச்சினையாகிக்கொண்டு வருகிறது. இதை நான் திடமாகவே, ஆனால் மிக வருத்தத்துடன் ஆமோதிக்க முடியும்.

3. பஞ்சாப் மாநிலத்து போதைப்பொருள் பிரச்சினை, மிகவும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட, மிகைப்படுத்தப் பட்ட விஷயம். ‘உட்தா பஞ்சாப்‘ எனும் படம் இந்தப் பெரும் மாயையை உருவாக்கியிருக்கிறது.

பஞ்சாபில் பிரச்சினை இல்லாமலில்லை – ஆனால் அது எந்த நிலையிலும் தமிழகத்தை விடவோ மஹாராஷ்ட்ரத்தை விடவோ மோசமாக இல்லை. தமிழகத்தின் திராவிடக் கேடுகள் குறுக்கப் பட்டவை, அல்லது திராவிட ஊடகப் பேடிகளால் கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் விடப்படுபவை. அதேபோல ஆதித்ய டாக்ரே (ஷிவஸேனா கட்சியின் உதைநிதி இசுடாலிர்) எம்மானுடைய ஆக்கிரமிப்பில் இருக்கும் மும்பய் போதைப்பொருள் சாம்ராஜ்யமும் லூஸ்லவுடப்படுகிறது என்பதும் உண்மை.

4. நான் தமிழகத்தில் ‘கற்பித்த’ பள்ளிகளில் (அனைத்தும் விழுப்புரம் மாவட்டம், எண்ணிக்கையில் மூன்று, 2010-19 வாக்கில்) சுமார் 300-350 குழந்தைகளுடன் முழுநேர நேரடியாக ஈடுபட்டிருந்திருப்பேன் + சில நூறுகளில் பகுதி நேரம், கணித வகுப்பு என.; இந்த எண்ணிக்கையில் மூவருக்கு இந்த போதைப்பொருள் பிரச்சினை. (டீஅட்டிக்ஷன் சிகிட்சை மனோதத்துப்பித்துவம் என அலைந்து, அப்போதைக்கு அவற்றைத் தீர்த்துவிட்டேன் என நினைக்கிறேன்)

5. இப்போது அதே பள்ளிகளில் இந்தச் சோகமானது 10% எண்ணிக்கையைத் தொட்டிருப்பதாக அறிகிறேன். (இது இரு பள்ளிகளில்; ஒன்றில் இன்னமும் நிலைமை மோசமாகவில்லை)

6. பள்ளிகளுக்கு மிக அருகே பலப்பல இடங்களில் திராவிடக் குடிகாரக் கூடுகைக்கான டாஸ்மாக் பார்கள் (திருட்டுக் கடைகள் + அதிகாரபூர்வமானவையும் இப்படித்தான்!) இருப்பது போலவே, பலப்பல பெட்டிக்கடைகளில் இருந்து போதைப் பொருட்கள் திராவிடத்தனமாக விற்கப்படுகின்றன.

7. பல இடங்களில் இந்த போதைப் பொருட்களை விற்பவர்கள் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி + திமுக சார்ந்த பொறுக்கிகள் தாம். இவர்களுக்குக் காவல் துறை பாதுகாப்பு இருக்கிறது. பிற ஆசாமிகள் இவற்றில் ‘வளர’ வழியேயில்லை.

8. போதை மருந்து கொள்முதல், பதுக்கல், கடத்தல், விநியோகம், ‘கவனித்துக் கொள்ளல்’ (அரசதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், வட்டார குண்டர்கள்) போன்றவற்றைப் பெரும்பாலும் கவனித்துக் கொள்வது முஸ்லீம்கள்தாம் என்றாலும், சதவீதப்படி முஸ்லீம்கள் பெரும்பாலும் போதையடிமைகளாக இல்லை. பிறரை மட்டும் போதைக்கு அடிமையாக்குகிறார்கள் போல. இது ஆச்சரியம் தருவது மட்டுமல்ல – அம்மக்களிலிருந்து பிறமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமும் கூட; அதாவது – தம் மக்களைப் போதையடிமைகளாக்காமல் விட்டுவிடும் தன்மையைத்தான் சொல்கிறேன்.

9. கூடுதல் ஆச்சரியம்: சில பள்ளி ஆசிரியர்களும் இந்த போதைவலையில் அடக்கம்! (இவர்களில் சிலர் – பள்ளிகளுக்கு வாலண்டியராக வருகிறேன் எனப் பம்மாத்து செய்துகொண்டு நகரங்களிலிருந்து வரும் திரியாவரப் பணக்கார இளைஞர்களிடமிருந்து இந்த எழவைக் கற்றுக் கொள்கிறார்கள் – ஸோஷியல் ட்ரக்ஸ்! ஹஹ்ஹா!!)

10. இந்தப் போதையடிமைகளைக் கண்டுகொள்வது எப்படி? வகுப்பில் கவனம் செலுத்தாமை, கண்களில் மினுமினுப்பு, திமுக-விசிக சகவாசமுள்ள சகோதரர்கள், பெற்றோர்கள் (ஏனெனில் அவர்களிடம் பெருங்கொள்ளைப் பணமிருக்கிறது), அநியாயத்துக்கு – துளிக்கூட அவசியமேயில்லாமல் பொய் சொல்லல், கவலையேயில்லாமல் திருடுவது இன்னபிற – இதில் திருடுவதுதான் முக்கியம்; போதைப்பிள்ளைகளுக்கு அன்றைய ஃபிக்ஸ் கிடைக்கவேண்டும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

11. எம்மாதிரி போதைப் பொருட்கள் கிடைக்கின்றன: சிலபல கடைகளில் (தெருவில் கேட்டாலே சொல்கிறார்கள், அவை எங்கே இருக்கின்றன என்று!)  பொட்லம், பவுடர், சாக்லேட் என்ற வகையில் பலப்பல. மேலும் ‘ஸ்பைக்ட்’ மதுபானங்கள் என்கிற வகையிலும்; ஃபாண்டா கொகாகோலாவில் கலந்தும் குடிக்கிறார்கள் எனக் கேள்வி.

12. திராவிடக் கொள்ளைப் பணம் ரசவாதம் செய்யப்பட்டு ‘வெள்ளை’யாக மாற்ற போதைப் பொருள் வியாபாரமும் ஒரு பெருவழி. இதில் திமுகவினர் ப்ளடி கில்லாடிகள்.

13. 1980-90களில் எல்டிடிஇ பிரபாகர பொறுக்கிகளும் (புலிகளாமே!) ஏகோபித்து இந்த போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டனர். ஆனால் ஒருமாதிரி ‘அக்ரிமெண்ட்’ வழியாக தமிழகத்திலோ பிற பாரதப் பகுதிகளிலோ அவற்றை விநியோகிக்கவில்லை. ஆனால் அவர்களது எச்சங்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றன, அவை ‘இலங்கை அகதிகள்’ என்கிற பெயரில் பம்மாத்து செய்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றன.

14. திராவிட மாடலின் சாதனைகளில் ஒன்று: தெருவோரத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடும் நபர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து பெட்டிக் கடைகளிலும், சில சமயங்களில் காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே கூட ஏகோபித்த வியாவாரம் செய்யும் பொருளாதார மேன்மையும், சுபிட்சமும்…

சரி.

மேற்கண்டவைக்கும் அவலங்களுக்கும் அப்பாற்பட்டு எனக்குத் திருப்தி தரும் விஷயமும் ஒன்று இருக்கிறது.

பலப்பல வீடுகளில், வீட்டுக்குள் ‘கொண்டாட்டம்’ என்பது தாய்-தகப்பன்-பிள்ளைகள் (சிறுமிகள் உட்பட) உட்கார்ந்து ஒரு குடும்பமாகக் குடித்துவிட்டு பிரியாணி சாப்பிடுவது எனவொரு பழக்கம் இருக்கிறது. 

ஆனால், இன்றுவரை ‘அவர்கள் குடும்பமாக கஞ்சா புகைத்து ஆனந்தமடைந்தனர்’ எனும் திராவிடத்தை நான் இது வரை கேட்டதில்லை என்பது ஆசுவாசம் தருவது.

4

மீள முடியுமா?

முடியும்.

அதற்கான வழிமுறைகள்:

தயவுதாட்சண்யம் இல்லாத என்கவுண்டர்கள்.

திரைப்பட போதைக் கோமாளிகளை முட்டி தட்டல்.

போதைப் பணமானது திரைப்பட உருவாக்க வழியாக சலவை செய்யப் படுவதைக் களைதல்.

ரேவ் பார்ட்டி காரர்களையும் அவற்றின் மூலாதாரங்களையும் ஒழித்தல்.

போதைப் பணத்தால் அர்ச்சனை செய்யப்படும் மதராஸாக்களை மூடல்.

திமுகவை ஒழித்தல், ஊக்க போனஸாக இந்த விசிக லும்பன்களையும்.

பள்ளிகளுக்கு 5 கிமீ ஆரத்தில் டாஸ்மாக் + ‘பொட்டல’க் கடைகள் இருக்காமல் செய்வது.

காவல் துறையில், ரெவின்யூ டிபார்ட்மெண்டில் தீவிரமாகக் களையெடுத்தல்

போதையடிமைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறோம் என வரிப்பணத்தைக் கொட்டாமல், புதிய அடிமைகள் உருவாகாமலிருக்கத் திட்டமிடல்.

பார்க்கலாம்.

இளம் அண்ணாமலைக்கு மக்கள் அருள் செய்தால், அவர் அருள் பாலிப்பில் இந்த போதைப் பிரச்சினையும் கட்டுக்குள் வரும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

One Response to “தமிழகப் பள்ளிகளில் (லும்) போதைப் பொருட்கள்: திராவிடத்தின் இன்னுமொரு கொடை”

  1. Sampath T P Says:

    Extremely well written; it worries me much as i have four grand kids. Who no social resistence/objection to these druggists, why TN media playing it down including newspapers?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...