பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-( Read the rest of this entry »
ஜெயமோகனும் ஏனிப்படிப் படுசோகமாக எழுதுகிறார்: படுதீவிர ஆராய்ச்சியின் பயங்கரபகீர் முடிவு!
July 28, 2019
:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்! Read the rest of this entry »
இனிய பயம், Read the rest of this entry »
கருணாநிதி பிள்ளைத் தமிழ்
April 9, 2018
(அல்லது) திராவிட இளைஞர் அணியின் 64வயதேயான இளம் பிராயத் தலைவர் மேதகு இசுடாலிர் வகையறாக்களின் பரிசுத்த ஆவித் தமிழ், பராக்! பராக்!! Read the rest of this entry »
தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவது எப்படி? (அல்லது ‘இன்குலாப்’ அவர்களுக்கு ஸாஹித்ய அகடெமி விருதாமே!)
December 30, 2017
அடப்பாவிகளா! மூச்சு முட்டுகிறதே. :-( Read the rest of this entry »
யுவகிருஷ்ணா ஞானமரபு: ஜெயமோகனின் அங்கலாய்ப்பு, சீதாப்பழத்தின் வரலாறு – சில குறிப்புகள்.
December 3, 2017
நண்பர் ஒருவர் எழுதுகிறார்: Read the rest of this entry »
ஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too!)
June 22, 2016
திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
July 20, 2015
(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்
…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது; இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.
இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
February 23, 2014
… … தமிழகத்தில் ஒன்றுமே சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.
எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)
நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.
பதில் கிடைத்ததா? சரி.
கிடைக்கவில்லையா, அதுவும் சரியே.
இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .
ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே சொல்கிறேன்:
சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
தமிழ் நெடுங்கணக்கு
February 20, 2013
இரண்டு வருடம் முன்னால் ஒரு வெள்ளைக்காரர் (அவர் பெயர் மறந்து விட்டது) நம் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என வந்தார். யாரையோ கேட்டிருக்கிறார் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா என்று – முன்னால் இம்மாதிரி ‘தமிழ் ஆபத்துதவிப் படை’ வேலைகள் செய்திருந்ததால், அவர்கள் என்னைப் போய் தமிழ் ஐயா என்று காட்டியிருக்கிறார்கள். ஆக, அவருக்கு நான் ஒரு தமிழ் ஐயோ என்று தெரியாத காரணத்தால், பாவம், வசமாக மாட்டிக் கொண்டார்.
பிரச்சினை என்னவென்றால் எனக்கு இத்தாலியன் என்றால் கிலோ என்ன விலை – அடிப்படையில் ஒரு அழகான க்ராஃபிக்ஸ் டிஸைனரான அவருக்கோ ஆங்கிலம் வராது. Read the rest of this entry »

