ஜெயமோகனும் ஏனிப்படிப் படுசோகமாக எழுதுகிறார்: படுதீவிர ஆராய்ச்சியின் பயங்கரபகீர் முடிவு!

July 28, 2019

:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்!

…அண்மையில், ஜெயமோகன் அவர்கள் எழுதிய ஒரு பயணக் கட்டுரையில்தான் இதற்கான தன்னிலை விளக்கத் தரவுகள் இருக்கின்றன, என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த சில பதிவுகளில் ஒன்றாக, இந்த, அசைக்கப்படமுடியாத காத்திரமான கறார் தரவுகளின் பாற்பட்ட, ஆகச்சிறந்த சுருக்கமான விசைமிகுந்த முரணியக்கப் பின்நவீனத்துவ ஆராய்ச்சிச் செவ்வியல் திறனாய்வுக் கட்டுரையும், ஒன்றாக இருக்கலாம்; அதுவரை மூச்சை இறுக்க இஸ்துப் புட்ச்சிக்கினு, ங்கொம்மாள, ஸாவுங்கடே!

இதைத் தவிர ஆகயிறந்த பிறிதொரு வழியே உங்களுக்கு இல்லை. மன்னிக்கவேண்டாம்.

(ஜெயமோக அன்பர்கள் சொல்லக்கூடுவதுபோல) விடாது காழ்ப்பு. :-(

இன்னொரு மகிழ்ச்சிகரமான முன்னறிவிப்பு: அதற்குப் பிறகு தலா ஒரு கட்டுரை – எஸ்ரா சாருநிவேதிதா போன்றவர்களின் மீது. அவர்கள்தம் பெருமையை, மீண்டுமொருமுறை பறைசாற்றியபின் இந்த அலக்கிய எழவுகளுக்கு ஒரு பெரிய முழுக்கு போடப்போகிறேன். தமிழலக்கியம் இந்த ஜென்மத்தில் திருந்துவதாகவோ – இவர்கள் மூலம் மேன்மையை நோக்கிப் பயணம் செய்வதாகவோ இருக்கப்போவதில்லை எனத்தான் படுகிறது; ஒருவேளை வீறிட்டு எழுந்துவரும் இளைஞர்களால், இதுவரை அதிகம் எழுதாமல் இருந்தாலும் மிகத்தரமாக எழுதுபவர்களால் இந்த நிலை சரியாகலாம். ஆனால் எனக்கு அலுப்பாகி விட்டது. ஆக, உங்களுக்கும் நிம்மதி. எனக்கும் மிகநிம்மதி. நன்றி!

 

14 Responses to “ஜெயமோகனும் ஏனிப்படிப் படுசோகமாக எழுதுகிறார்: படுதீவிர ஆராய்ச்சியின் பயங்கரபகீர் முடிவு!”

 1. K.Muthuramakrishnan Says:

  வாழ்த்துக்கள் ராம் சார்! ஆராய்ச்சி தொடரட்டும். இதையே ஒரு முனைவர் பட்டத்திற்கான கட்டுரையாக ஏற்று முனைவர் பட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம்.

 2. Sridharan Says:

  //தலா ஒரு கட்டுரை – எஸ்ரா சாருநிவேதிதா போன்றவர்களின் மீது// இதை நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்தேன், குறிப்பாக தமிழகத்தில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கும் அகில உலக எழுத்தாளரும்/பிரஜையும், முக்காலமும் உணர்ந்த முனிவரும், முற்றும் தொறந்தவருமான துறவியை இதுவரை கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சரியமே! இவரது இமாலய இலக்கியப் பங்களிப்புகளுக்கிடையே, தமிழக/இந்திய அரசியலை நிர்ணயிக்கும் அரும்பணியையும் செய்துவருகிறார்,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இதுவரை(2014க்கு முன்) பாலாறும் தேனாறும் பாய்ந்தோடிய இந்நாட்டில் இனி ரத்த ஆறு மட்டுமே ஓடுமெனவும் அந்த கடவுளே தன்னை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடவேண்டியிருக்குமெனவும் லிபராண்டுதனமாக அறுதியிட்டு கூறிவிட்டார் (ஆனாலும் இன்னும் இந்தியாவில்தான் இருப்பதாகக் கேள்வி). தமிழில் ஆற்றிய சேவை போதாமல் ஆங்கிலத்திலும் ஆத்தியிருக்கிறார் வேறு, உதாரணத்துக்கு ஓர் முத்து இங்கே,
  https://artreview.com/opinion/ara_summer_2019_opinion_charu_nivedita/
  சிறப்பு கவனிப்பிற்குரிய அனைத்து தகுதிகளையும் அளவின்றிப் பெற்றிருக்கும் இவரை இதுவரை உதாசீனம் செய்தது சரித்திரப் பிழையாகிவிடுமோ என அஞ்சுகிறேன்.


  • ஐயா! நன்றி. ஆனால் சாரு நிவேதிதா பற்றியும் எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறேன்!

   சொல்லப்போனால், அவருடைய லத்தீ அமெரிக்கப்பயணத்துக்காக பகிரங்கமாக நிதிதிரட்டக்கூட முயற்சித்த என்னைப்போயா இப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள்?? :-(

   • Sridharan Says:

    நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், இருந்தாலும் மற்றவர்களுக்குக் கிடைத்த கவனம் இவருக்குக் கிடைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது, அதிலும் கவனம்பெறும் பேராவலும் பெருந்தகுதியும் கொண்டவரிவர், கல்விக்கொள்கை குறித்த இவரது பார்வை மூர்ச்சையடைய வைப்பது, பாத்து செய்ங்க சார்!


   • ஐயா, இந்தாள்தாம் முதன்மை தண்டக்கருமாந்திரம். வேறுபேச்சே இல்லை. தமிழர்கள்போலப் பாவம் செய்தவர்கள் பாரதத்தில் உண்டா! :-(

 3. Sachidanandam Says:

  தலா ஒரு கட்டுரை எல்லாம் வாணாம் ஸார்…நாம் நேரத்தை வீணாக்க கூடாது..

 4. Srinivas A Says:

  “””ஆக, உங்களுக்கும் நிம்மதி. எனக்கும் மிகநிம்மதி””” . சுய மோஹனுக்கும் பெரும் நிம்மதி. அவர் விட்ட நிம்மதி பெருமூச்சேனும் புயலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமே சிதைந்து சின்னாபின்னமாய் திக்குக்கு அறுவர் என சிதறிவிட்டதாம்.

 5. Gopalasamy Says:

  annan suriyaa maadhiri adicha onnarai ton weight nachunu vilanum.


  • அன்புள்ள புவனா, சுட்டிக்கு நன்றி. புல்லரிப்புக்கும்தான்.

   இதனை வளர்த்திக்கொண்டே செல்லலாம். ஆனால் ஒருசில விஷயங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

   1. அன்பர் செந்தில் அவர்களுக்கு ஜெயமோகன் எழுதியதும் புரியவில்லை. நான் எழுதியதும். நான் குறிப்பிட்ட சில விஷயங்களை தகுந்த தரவுகளைக் கொண்டு, பின்னூட்டத்திலும் அந்தக் கட்டுரையிலும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அந்தப் பதிவிலேயே ஒரு பின்னூட்டத்தில் இதனை ஒரு எதிர்வினையாகக் கொடுத்திருக்கிறேன். (https://othisaivu.wordpress.com/2019/06/30/post-1002/)

   2. செந்திலார் போன்றவர்களின் காயடிக்கப்பட்ட நிலையையும் – தொடர்பற்றவற்றையும் அறியாமையையும் விக்கிபீடியாவையும் கலந்தடித்துக் கொட்டிவிட்டு, அதற்குமாறாக ஒரு காத்திரமான எதிர்வினையையும் கொடுத்தாற்போன்ற பாவனையைக் கொண்டு மினுக்குவது பற்றியும் நான் மெச்சுவதன்றிப் பிறிதொன்றையும் என்னால் செய்யமுடியாது.

   3. ஜெயமோகன் அவர்களின் கட்டுரைத் தகவல்களின் நம்பகத்தன்மையும், கருத்துகளின் ஆழமும்/வீச்சும் குறைவானவை; ஆனால் – அல்லது இதனால் அவருடைய புனையும் திறனை குறைவாகவும் மதிப்பிட மாட்டேன்.

   4. மற்றபடி, ஜெயமோகன் அவர்கள், தாம் ஒரு உயர்பீடத்தில் அமர்ந்து, என்னை அறியாமையும் ஆணவும் உடையவன் ஆகவே தகுதியற்றவன், எனச் சொல்வதில் எனக்குப் பிரச்சினையில்லை. அவரவருக்கு அவரவர் சுயபிம்பம். வாழ்க.

   ரா. (நீங்கள் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிடமாட்டேனென்கிறீர்கள்?)

 6. ?yaro Says:

  You are talking abt his old post. I am talking abt his new post, link given. What do you say about that?


  • அம்மணீ! என்னை இத்துடன் விட்டுவிடுங்கள்! இதற்குப் பின்னும் இதன்பேரில் சக்தியைச் செலவழிப்பது வியர்த்தம்.

   ஆம். ஜெயமோகனின் அண்மையக் கட்டுரையைப் படித்தேன். (ஜப்பான், பிழைகள்- கடிதம் – இதுதானே நீங்கள் கொடுத்த சுட்டி?)

   ‘சுரேஷ் பகிர்ந்துள்ளார்’ என எழுதியிருக்கிறார் இந்த செந்திலார் – இந்தச் ‘சுரேஷ்,’ நான் பல வருடங்களுக்கு முன் ஒருதடவை சந்தித்திருக்கும் சுரேஷ் வெங்கடாத்ரி அவர்கள் என அனுமானிக்கிறேன். ஏனெனில் தற்போதைய ஏழரைகள் சமூகத்தில் ஒரு சுரேஷும் இல்லை!

   என்ன பிரச்சினை என்றால், எனக்கு, இந்த சுரேஷ் என்ன எழுதியிருக்கிறார் எனத் தெரியாது.

   மேலும் – செந்திலாருக்கு ஜெயமோகனார் பதிலிலும் நகைச்சுவை அதிகமாக உள்ளது. அவற்றில் இரண்டு.

   //நான் இலக்கியம் அல்லாத துறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சி எதுவும்செய்பவன் அல்ல. ஆகவே பிழைகள் இருக்கலாம். எப்போதும் அவற்றை தகுதியானவர்களிடம் கேட்டு திருத்திக்கொள்வேன். இங்கு அவ்வாறு திருத்திக்கொண்டுதான் எவரும் செயல்பட முடியும்.அறிவுச்செயல்பாடு என்பதே அதுதான்.//

   எவ்வளவு முறை அவர் செய்துள்ள ஆயிரக்கணக்கான தவறுகளை (சென்ற ஒரேயொரு வருடத்தில் மட்டும் செய்தவை இவை!) திருத்திக்கொண்டிருக்கிறார், தம்மை ஏகோபித்து முன்னேற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை நானறியேன். அப்படி ஏதாவது தப்பித்தவறி நடந்திருந்தால், அதற்காக சான்றுகளை நீங்களோ ஜெயமோகனோ செந்திலாரோ கொடுக்கலாமே!

   இன்னொன்று: தன்னைப் பற்றி அவர் கொண்டிருக்கும் கருத்துக்கும் மாறாக, அவர் அலக்கியத்துறையிலும் ஆழமில்லாமல் அட்ச்சிவுட்டிருப்பவர் என்பதும் ஒரு சோக உண்மை. நன்றி.

   // ஆனால் தகுதியானவர்களிடம் திருத்திக்கொள்வது மிகமுக்கியம். தகுதியானவர்களிடம் அதற்கான அமைதியும் உகந்த மொழிநடையும் இருக்கும்.மற்றவர்கள் தங்கள் போதாமையையே நம்மீது பிழை எனச் சுட்டுவார்கள்.அறியாமையாலும் அதன்விளைவான ஆணவத்தாலும் அவர்கள் அடையும் எல்லா குழப்பங்களையும் நம் மீது ஏற்றிவிட்டுவிடுவார்கள்.//

   அவர் சொகுசாக, பொறுப்புணர்ச்சியற்று – கண்டமேனிக்கும், ஆகவே மிகுந்த நிறைதகுதியுடன் அட்ச்சிவுடுவார் – தகவல் பிழைகளேயே விடுங்கள், கருத்துரீதியில் களேபரமாகச் செயல்படுவார். ஆனால் தரவுகளுடன் அசிங்கமான அடிப்படைத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், பாவப்பட்ட நான் போதாமைமிக்க தகுதியற்றவனாகிவிடுவேன். சரிதான்.

   ஆக, விட்டுவிடுங்கள். என்னை மாளாக் கோபத்தில் ஆழ்த்தாதீர்கள். இப்படியே தொடர்ந்தால் முப்பது வருடங்களுக்கு முன் அவர் தொடர்பாக நடந்த வாசகர்கடித விவரங்களையும் இன்னபிற கூசும் வரலாறுகளையும் குறிப்பிட நேரும். நன்றி.

   நம்மிடம் தற்போது இருப்பது ஒரு இலுப்பை மரம்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஆகவே, மறுபடியும் கோரிக்கை விடுக்கிறேன்; இதனை இத்துடன் விட்டுவிடுங்கள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s