ஜெயமோகனின் மேதமை, ஆர்தர் ஸி க்ளார்க், பெட்ரொக்ளிஃப்ஸ், வெண்கலக் காலகட்டம், இருதலைப் பறவை, சங்க இலக்கியம், நெகிழ்வாலஜி – மாளா வருத்தங்கள்
August 1, 2019
பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-(
-0-0-0-0-0-
என் மதிப்புக்கும் மிகைமரியாதைக்கும் உரிய பெரும்பேராசான் மிகச் சரியாகவே சொல்வதுபோல, பல விதங்களிலும் நான் தகுதியற்றவன்தான். என் போதாமையை நம் பெரும்பேராசான்மீது கவிழ்த்தி , அவருடைய பிழைகளாக மாற்றி ‘ஸாரே! கள்ளம் பரையண்டா!‘ எனச் சுட்டுபவன் தான்! இப்படி அறியாமையாலும் அதன் விளைவான ஆணவத்தாலும் பீடிக்கப்பட்டு நான் இருந்தாலும், உச்சியில் எங்கோ இருந்து ஞானக்கோலோச்சும் நம் பெரும்பேராசான், பெருந்தகுதியுடனும் துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் தொடர்ந்து டகீல் பீலாவிடும்போது, கீழ்மையான கன்னக்கோலோச்சும் ஞான், எந்தா செய்யும்? பரயு? :-(
சரி. ஜெயமோகன் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படிக்கவும். கற்காலத்து மழை-6
இதிலும் நிறைய சந்தோஷகரமான நகைச்சுவைகள் பலப்பல இருக்கின்றன; ஆனால் பளீரென்று கோரைப்பற்களைக் காட்டியிளித்து கோரரூபத்தில் தெரியவரும் பலவற்றில் ஐந்து விஷயங்களுக்குச் சிறு பொழிப்புரை தொடர்கிறது. இந்த எழவைக்குறித்தெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், அவர் தன் கூற்றுப்படியே, தன் தவறுகளைத் திருத்திக்கொள்வார், தொடர்ந்து மேலெழும்புவார் எனத்தொடரும் என் கையறுநிலை நம்பிக்கைதான்.
என் ஆதங்கம் என்னவென்றால், இந்த ஒத்திசைவு தள எழவுகளை, நாளுக்கு ஒரு நான்கைந்துபேர் (அடியேன் உட்பட) பற்களைக் கடித்துக்கொண்டு படித்தால் அதிகம். ஆனால் ஜெயமோகன் தளத்துக்கு தினசரி யாத்திரை செல்பவர் எண்ணிக்கை, அவரைச் சேர்க்காமலேயே, சில ஆயிரங்களில் இருக்கும்.
அவரை உண்மையாகவே ஆசான் எனக்கருதி ஆராதிக்கும் இளைஞர்களும் என்னைப்போன்ற கிழங்கட்டைகளும் அதிகம். ஆகவே அதில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மையும் அதில் வெளிப்படும் தகவல்களும்/கருத்துகளும் பிழைகள் இல்லாமல் இருப்பதுதான் பொறுப்பான அணுகுமுறையாக இருக்கவேண்டும். விட்டேற்றி அட்ச்சிவுடல்களையும் நஞ்சையும் அதிசராசரித்தனத்தையுமா நம் இளைஞர்களுக்குப் புகட்டுவது? நம் சமூகத்தின் வளமான எதிர்காலத்துத்தைக் கட்டமைக்கப்போகும் நம் இளைஞர்களுக்குத் தரமான முன்மாதிரிகளாக இருக்கவேண்டாமா? சமூகத்தின் மனச்சாட்சி என்று தங்களை வரித்துக்கொள்பவர்கள், அறத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள், எழுத்திலும் தொழில் அறத்தை துக்குணியூண்டு அளவுக்காகவது காண்பிக்க வேண்டாமா? அவர்களின் ஆக்கங்கள், எண்ணிக்கையில் மட்டும் அதிகமாகிக்கொண்டிராமல், தரத்திலும் உயர்ந்துகொண்டே இருக்கவேண்டாமா? கிழங்கட்டைகளுக்கும் போற்றுதற்குரிய முன்மாதிரிகளாகத் திகழவேண்டாமா? ஏனெனில் பரம பீலாவுடுதல்களைப் படிக்கவேண்டும் என்றால் கியாரண்டியாக இருக்கவே இருக்கிறார்களே, எஸ்ராவும் சாருநிவேதிதாவும் இன்னபிற அலக்கிய விசிலடிச்சான்குஞ்சுகளும்! ஆனால்…
எது எப்படியோ – ஜெயமோகனுக்கு உபயோகமளிக்கக்கூடிய தரவுகளையும் என் வழக்கம்போலவே கொடுக்கிறேன். ஆனால், இவை குறித்துக் குறிப்பாகக் கிண்டல் செய்யவில்லை. பார்க்கலாம் இது எப்படிப் போகிறதென்று. எப்படி எதிர்கொள்ளப்படுகிறதென்று. ‘எப்பொருள் யார்யார்வாய் விழுந்து புறப்படினும் அவற்றுள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது போல அன்றே சொன்னாரல்லவா அக்கால ‘அறிஞர் அண்ணா’ திருவள்ளுவர்??
சரி. கீழே ஐந்து பகுதிகள் இருக்கின்றன. இவற்றில், இந்தக் கட்டுரையில் ஜெயமோகன் எழுதியுள்ள பல சோகங்களில், ஐந்து படலங்கள்/திரிகள் மட்டுமே ஓரளவு ஆழமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. ஏனெனில் இவற்றிலும் மிக ஆழமாகப் போனாலோ – மற்ற எல்லா பிறழ்வுகளையும் துப்புரவாகப் பட்டிபார்த்து டிங்கரிங் டீபங்க் செய்யவேண்டுமென்றாலோ இது ஒரு அதி நீளக் கட்டுரையாகிவிடும், ஹ்ம்ம், ஏன் ஒரு சிறு புத்தகமாகவே ஆகிவிடும். நாமிருக்கும் நிலை சரியில்லை, என்ன செய்வது சொல்லுங்கள். ஆகவே.
பொதுவாகவே, இனிமேல், ஜெயமோகன் எழுத்துகளைக் கொண்டாட, எனக்குத் தயைசெய்து ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கப்படுமா என்பதுதான் என் ஏக்கம். உண்மையாகவே சொல்கிறேன்.
-0-0-0-0-0-
ஆர்தர் ஸி க்ளார்க் படலம்
பெரும்பேராசான் இப்படி எழுதுகிறார். இதில் சிவப்புஅடிக்கோடிட்ட பகுதிகளுக்கு மட்டும் சில எதிர்வினைகள்.
எனக்கு மிகவும் பிடித்தமான சுமார் 1000-1200 ‘அறிவியல்’ சிறுகதைகளில் இதுவும் (1951 கதை) ஒன்று. அதனால்தான் இது முதல்சோகம். :-(
1. Sentinel, ஸென்டினெல் என்றால் சின்னம் என்பதல்ல. காவலாளி, காப்போன், முன்னறிவிப்போன் எனவேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம்.
2. அது ‘மிக எளிமையானது‘ என்றால், ஒத்திசைவு பதிவுகள் மிகவும் எளிமையானவை – அவ்வெழவுகளை படிக்காமலேயே கூடப் புரிந்துகொண்டுவிடலாம். (ஆனால், புரிதல் என்பது பலதளங்களினூடே நிகழலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்) + அவ்வளவு வர்ணனைகள், அறிவியல் விவரங்கள் அதில் இருக்கின்றன. அறிவியலைப் புரிந்துகொண்டால் அதன் அடுக்குகள் பிடிபடலாம்.
3. அவர்கள் நிலவுக்கு, சும்மனாச்சிக்கும் சுற்றுலாவுக்குச் சென்றவர்கள் அல்லர். பல்லாண்டு காலமாக அங்கேயே தங்கி ஆய்வுகளிலும் மினரல்/கனிமப் பொருட்களை அகழ்வுசெய்வதிலும் ஈடுபட்டுள்ளவர்கள். துறைவல்லுநர்கள். சர்வ நிச்சயமாகத் தற்காலத் தமிழலக்கியத்தில் நேரத்தை விரயம் செய்பவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். கதைசொல்லி, சந்திரனின் வானஸாஸ்திர நிபுணர்; ஸெலினாலஜிஸ்ட்.
4. “மிகச்சரியான முக்கோண முப்பட்டை வடிவமானது” – :-( – மிகச்சரியாக, அது அப்படியில்லை. க்ளார்க் தெளிவாக அதனை பிரமிட் எனக் குறிப்பிடுகிறார். ப்ரிஸ்ம் என்றல்ல.
ப்ரிஸ்ம் என்பதுதான் மிகச்சரியான முக்கோண முப்பட்டக வடிவமானது. பிரமிட் என்பது, பட்டைக்கூம்பு. பின்னதில் அடியைத் தவிர (அது முக்கோணமாகவோ, சதுரமாகவோ, அதற்குமேற்பட்ட ஓரங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம்) – முக்கோணப் பக்கங்கள் கொண்டது, மேலே ஒரு உச்சியில் அனைத்தும் ஒன்று சேரும் ஒரு பன்முகி, அல்லது பாலிஹெட்ரன்.
5. அது ஒரு வெறும் சின்னமல்ல. அது ஒரு அணுக்கருவுலை + கதிரியக்க அரண் கொண்டது + பலப்பல மில்லியன் வருடங்களாக செய்திகளை அது அனுப்பிக்கொண்டிருந்திருக்கிறது! மிகத் தெளிவாக அதனைப் பற்றிய குறிப்புகள், கதையில் இருக்கின்றன.
6. “படிகம்போன்ற எதனாலோ ஆனது” அப்படியா? ஆனால் படிகம் என ஒரு விஷயம் கூடத் தெரிவிக்கப்படவில்லை, சிறுகதையில் அது என்ன வஸ்துவால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என ஒரு ஹேஷ்யம்கூட இல்லை. மன்னிக்கவும்.
7. “உடைக்கவும் முடியவில்லை. ” :-( அப்படியா என்ன? மிகத் தெளிவாகக் கதை சொல்கிறது. அதைக் கண்டுபிடித்த இருபது ஆண்டுகளுக்குப் பின் அணுசக்தியின் மகத்தான ஆற்றலை உபயோகப்படுத்தி, அதனை உடைக்கிறார்கள்.
கதை, மானுடத் தொழில் நுட்பங்களுக்கு எட்டாத தொலைவில் அந்தக் கருவி இருப்பதாகச் சொல்கிறது… (இந்தக் க்ரிஸ்டல் அதன் லாட்டிஸ் தன்மையைக் குறிக்கிறது. படிமம் படிகாரம் படிகம் என்பதைப் பற்றியதல்ல!)
8. “அது என்ன என சொல்லாமல் ஊகிக்கவிட்டு அக்கதை முடியும் ” சர்வ நிச்சயமாக இது தவறு. கதையில் வேண்டுமளவு தகவல்கள் அதுகுறித்து இருக்கின்றன.
அது ஒரு கலங்கரைவிளக்கம் போன்ற ஒரு செய்தி தெரிவிப்பி/அனுப்பி. ‘யாரும் என்னை இதுவரை தொடவில்லை’ எனத் தொடர்ந்து அது ஸிக்னல்/சமிக்ஞைகளை அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. அது நின்றவுடன் (அதாவது, மூளைமிக்க ‘உயிர்’களால் அது அணுகப்பட்டு உடைக்கப்படும் வரை) யார் அந்த ஸென்டினலை வைத்தார்களோ அவர்களுக்கு, ‘ஆஹா, இன்னுமொரு கலாச்சாரம் முன்னேறிவிட்டது’ என்பது தெரிய வந்துவிடும். அவ்ளோதான்.
…பிரச்சினை உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஒரு சிறிய பத்தியில் இப்படிப் பல அறியாமை/புரியாமைப் பிரச்சினைகள், வருத்தம்தான். ஆனால் அதனால்தான் அவர் இந்தக் கதையை ‘எளிமையானது’ என்கிறாரோ?
அடுத்த பத்திக்குப் போகலாமா? :-(
:-( எனக்குத் தெரிந்து ஆர்தர் க்ளார்க் அவர்கள் இப்படிச் சொன்னதேயில்லை. அப்படிச் சொல்லக்கூடியவரும் அல்லர். 1968ல் பேட் ரீஷியா மார்க் அவர்களுக்கு இதே ஸென்டினல் வகையறாக்கள் குறித்து, ஆர்தர் கொடுத்த முப்பது நிமிட நேர்காணலில் (இது மிகவும் அழகானதும் பல தகவல்கள் கொண்டதுமான ஒன்றும்கூட) இதைப் பற்றி ஒருதகவல் கூட இல்லை.
ஜெயமோகன் வேறு எவருடனோ (எரிக் ஃபான் டானிகென், க்ரஹாம் ஹேன்காக் போன்ற அற்ப அரைகுறைகளுடன்?) ஆர்தர் பெயரைக் குழப்பிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் சரியென நினைக்கிறேன்.
ஆனாலும் இதற்கான தரவுகளை ஜெயமோகன் கொடுக்கவேண்டியது, ஆர்தர் அவர்களுக்கு அவர் செலுத்தக்கூடும் குறைந்தபட்ச மரியாதை எனவே நினைக்கிறேன். எப்படியும், பாவம், இந்த ஆர்தர் க்ளார்க்.
-0-0-0-0-0-
பெட்ரொக்ளிஃப்ஸ், வெண்கலக் காலகட்ட படலம்
…நானும் ஆறேழு வருடங்களுக்கு முன் ஜெயமோகன் அண்மையில் சென்று வந்திருக்கும் குடோபிக்குச் (ஏன், கோவாவின் குஷாவதி நதிதீரத்தில் இருக்கும் உஸ்கலிமாலுக்கும்) சென்றிருக்கிறேன் என்பதையும் குறிப்பிடுகிறேன்.
ஏனெனில், நம் வரலாறுகள் தொடர்பான ஊர்சுற்றல்களில் என் பிள்ளைகளைக் கூட்டிச் செல்வதற்காக இம்மாதிரிப் பலப்பல இடங்களை ‘ரெக்கி’ (reconnaisance) செய்திருக்கிறேன். (இம்மாதிரித் தொடர் விஜயங்களில் ஒன்றான, க்ருஷ்ணகிரி பக்க மல்லச்சந்திரம் குறித்த ஆங்கிலக் குறிப்புகள்: mallasandram megalith site – visit plan, notes; 2002-3ல் இருந்து பலமுறை இங்கு சிறார்களைக் கூட்டிச் சென்றிருக்கிறேன்)
எனக்கு இதனைப் படித்த மாத்திரத்தில் தோன்றுவது என்னவென்றால் – டபக்கென்று கூக்லில் தேடி, முதற்பக்கத்தில் வந்துள்ள ஒன்றிரண்டு சுட்டிகளை மேலோட்டமாக மேய்ந்து, மானேதேனே கலந்து ஜியோமிதி கலாகௌமுதி என்று எழுதிவிட்டார் எனத்தான்! மிகுந்த வருத்தம் தருவது இந்த விட்டேற்றித்தனமும் அவசரமும்… சரி. :-(
// Rock Art Society of India வின் பொதுவான கணிப்பின்படி இவற்றில் மிகப்பழைய செதுக்கு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ராசி எனும் ஒரு தன்னார்வக் குழு இப்படி கொஞ்சம் தாமஸத்தனத்துடன் பெரிய செயல்பாடில்லாமல் இருந்தாலும் – எங்கிருந்து இந்த பொதுவான கணிப்பைப் பிடித்தார் எனத் தெரியவில்லை. இது ஒரு சரியற்ற மேற்கோள். ஆனால் ராசியானது என இப்படியெழுதிவிட்டாரோ?
// பிற்காலத்தில் உலோகங்களால் செதுக்கப்பட்ட இரட்டைத் தலைக்கழுகு படம் உள்ளது. அது ஏழாயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டதாக இருக்கலாம்.
இந்தக் கணிப்பை எப்படிப் பிடித்தார்? வெறுமனே, ஆழமற்ற தன்னார்வலர் ஒருவரின் அல்லது ட்ரெக் செய்பவர்களின் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி எழுதுவது சரியா?
கர்நாடகத்திலேயே இம்மாதிரி வெறும் மென்மையான செங்கப்பிக்கல் / சரளைத்திரட்டுக்கற்களில் மட்டுமல்ல – பஸால்ட்/க்ரானைட் போன்ற உறுதியான கற்களிலும் பெட்ரொக்ளிஃப்கள்/பாறைச்செதுக்குகள் உள்ளன. இவை செதுக்கப்பட்டது பிற கற்களால்தான். உலோகங்களால் அல்ல.
மேலும் தாமிரம்/வெண்கலம் கொண்ட நாகரிகம் ‘ப்ரான்ஸ் ஏஜ்’ பாரதத்தில் பொதுயுகத்துக்கு முன்னே சுமார் கிமு 3000 வாக்கில்தான் ஆரம்பிக்கிறது. இப்போதிலிருந்து ஏழாயிரம் ஆண்டுகள் என்றால் இது ‘கிமு’ 5000க்கே போய்விடுகிறது. சொல்லப்போனால், ஜெயமோகன் குறிப்பிட்டு தகவல்களை எடுத்திருக்கும் இந்தச் சதீஷ் லலித் எனும் நபர், இந்த வருடத்தை ட்ரியோ ட் ரியோ என மாட்டை ஓட்டுவதைப் போல, மிக அநியாயமாக ‘கிமு’ 10000-7000 வருடங்களுக்கு ஓட்டிச் சென்று விடுகிறார். எதற்கும் துளிக்கூட ஆதாரமேயில்லை. இத்தனைக்கும் இதுகுறித்துச் சரியாகப் புரிந்துகொள்ள பல துறைவல்லுநர்களுடன் பேசியிருக்கிறேன். இதில் விற்பன்னரான ழான் க்லோத்தெஸ் ( Jean Clottes) என்பவர் ஆய்வுகளைப் படித்திருக்கிறேன்.
ஆனால் கடந்த 3 வருடங்களில் இந்த குடோபி தொடர்பான ஆய்வுகள் குறித்து என்னைச் செம்மைப் படுத்திக்கொள்ளவில்லை (நான் அறிந்தவரை, டெக்கன் கல்லூரி ஆய்வாளர்கள் உட்பட பெரிதாக ஒன்றும் ஆராயவில்லை, ஒன்றும் நடக்கவில்லை, வெறும் பத்திச் செய்திகள் மட்டுமே வந்திருக்கின்றன) – ஆகவே/ஆனால் ஜெயமோகனோ அவர் குறிப்பிடும் அவருடைய நண்ப ஆர்வலர் ராஜமாணிக்கமோ இதுகுறித்த தற்காலக் கருத்தாங்களைக் கோடிகாட்டினால் மகிழ்வேன்.
:-( …இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்னாலேயே இன்று இன்னொரு முட்டுக்கொடுக்கும் காட்டுரை ஜெயமோகன் தளத்தில் பதிக்கப்பட்டுவிட்டதே! மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா :-((
இந்த பிபுதேவ் அவர்களும் ஐஐடி அதுஇது எனப் பெத்தபடிப்பு படித்திருந்தாலும் க்ரஹாம் ஹேன்காக், எரிக் ஃபான் டானிகென் போன்ற ‘தரம்’ வாய்ந்த ஆர்வலர். அவர் அட்ச்சிவுட்டிருக்கும் கட்டுரையைப்போய் கொஞ்சம்கூடச் சரிபார்க்காமல் யாரையோ விட்டு முழிபெயர்த்துப் பதித்தும் விட்டார், ஜெயமோகன்.
இருக்கும் செவிப் பூச்சுற்றல்கள் போதாவா? :-(
-0-0-0-0-
இதற்குப் பின், ஜெயமோகனின் கட்டுரையில், ராஜமாணிக்கம் இத்தைச் சொன்னார் அத்தைச் சொன்னார் என நிறைய வந்திருக்கின்றன. அவற்றில் பல திடுக்கிடும் செய்திகள். ஆனால் அவற்றில் ஒன்றைத் தவிர அனைத்து திடுக்கிடல்களையும் சாய்ஸில் விட்டுவிடுகிறேன். (இல்லையேல் இது மிக நீளமாகிவிடும் – ஏற்கனவே ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டியாகி விட்டது!)
இருதலைப் பறவை/பருந்து/கழுகு படலம்
// சிந்து சமவெளி முத்திரைகளில் இரண்டு புலிகளை பிடித்திருக்கும் கொம்பு கீரிடம் சுமந்திருக்கும் காப்பான் முத்திரை உள்ளது என்றார் ராஜமாணிக்கம்
ஓரளவுக்கு உண்மை. ஆனால் காப்பான்களை விட காப்பாள்கள் அதிகம். அவை புலிகளைப் பிடித்திருப்பதாக இல்லை, வெகு உறுதியாகவே அவை புலிகளின் கழுத்தை நெரிப்பதாக உள்ளன. அவை கொம்பு க்ரீடம் எல்லாம் தரிக்கவோ சுமக்கவோ இல்லை. கொம்பும் இல்லை. மம்பும் இல்லை. அவ்ளொதான்.
சில இலச்சினை/முத்திரைகளில் தலைக்குமேலே ஒரு சக்கரம் (மண்டையில் படாமல்) + 5/6 தலைமுடிக் கற்றைகள்/சுழல்கள்.
மேலிருப்பவர்கள் காப்பாள்கள், பெண்டிர்; ஒரு விஷயம் என்னவென்றால், நம் சங்க இலக்கியங்களில் வீரப்பெண்டிர் முறத்தால் அடித்துப் புலிகளை விரட்டுவதற்கு மிகமிக முன்னரே, ஸிந்து-ஸரஸ்வதி நாகரிகப் பெண்கள், வெறும் கைகளாலேயே ஒரே சமயத்தில் இரண்டு புலிகளின் கழுத்துகளை நெரித்திருக்கின்றனர் என்பது இதனால் வெள்ளிடை மலை! ;-) (பார்க்க: புலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு 26/01/2016)
இதுகுறித்து மார்க் கெனொயரும் ஆஸ்கோ பர்போலாவும் எழுதியிருக்கின்றனர். (பின்னவரின் கருத்தாக்கங்கள் கொஞ்சம் டகீல்தனங்களும் கலந்திருப்பது நம் கெட்டூழ்)
// பருப்ப்பொருட்களையும் அசைவுகளையும் ஜியோமிதிவடிவங்களாகக் குறுக்கிப் புரிந்துகொள்ள முடிந்தது மானுடசிந்தனையின் மிகப்பெரிய பாய்ச்சல் என தோன்றுகிறது. சட்டென்று சூழ்ந்திருக்கும் பொருள்வய உலகின்மேல் ஒரு வசமான பிடி கிடைத்துவிட்டது
எதை எடுத்தாலும் ஜியோமிதி தீமிதி மானுட சிந்தனையின் பாய்ச்சல்/ தாவல் என்று எழுதுவது மிகவும் கொடூரத் துன்பமளிக்கும் செயல். :-( அதுவும் ப்ரிஸ்ம் எழவுக்கும் பிரமிட் எழவுக்கும் வித்யாசம் தெரியாமல் அட்ச்சிவுட்டபின் இப்படியெல்லாம் எழுதினால், பொறுமையாக இருக்க பெரும்முயற்சி செய்து இதனை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குக் கோபம்கோபமாக வருகிறது.
// இரட்டைக் கழுகுச்சின்னத்தைப் பார்த்தது எனக்கு ஒருவகையான மெய்ப்புகொள்ளலை அளித்தது. ஏனென்றால் அதை ஓர் இந்திய அடையாளம் என்றே நான் எண்ணியிருக்கவில்லை. வெவ்வேறு ஐரோப்பியப் பண்பாட்டு நூல்களில் அதைப்பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே நம் பண்பாட்டின் அடிக்கட்டுமானமாக அதைக் காணும்போது நம்மைப்பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம் என்ற பதைப்பே உருவாகிறது. என் புரிதலில் அது தொன்மையான கிரேக்கப் போர்ச்சின்னம்.
பதைப்பே வேண்டாம். பொதுவாகவே, ஜெயமோகனும் நானும் உட்பட, நாம் அறிந்துள்ள அளவு மிகமிகக் குறைவானது. நமது தமிழறிவும் பாவம். ஸம்ஸ்க்ருத அறிவோ இன்னமும் அந்தோ பாவம், பிறமொழிகளையே விடுங்கள்! இருந்தாலும் நமக்கெல்லாம் அவ்ளோ மினுக்கல். என்ன செய்ய. இருப்பின் அவஸ்தைதான்.
இரட்டைப் பறவை/கழுகு/பருந்து சின்னம் என்பது சர்வ நிச்சயமாக பாரத அடையாளமும்தான் (அது பாபிலொன்/அக்கடிய மூலங்கள் கொண்டிருக்கலாம்). அர்த்தஷாஸ்திரத்திலும் ஒரு பஞ்சதந்திரக் கதையிலும் கூட (இரண்டும் எழுதப்பட்ட சமயம் ‘கிமு’~300 வாக்கில்) இருக்கின்றன இதன் குறிப்புகள். ஏன், நம் தமிழகத்தின் பண்டைய இலக்கிய த்தின் அற்புத எழவுகளில் கூட இருக்கிறது.
// பின்னர் நினைத்தபோது மைசூர் செல்லும்போதெல்லாம் அதைப் பார்த்திருப்பது நினைவுக்கு வந்தது. மைசூர் அந்த இலச்சினையை ஐரோப்பியரிடமிருந்து பெற்றுக்கொண்டது என்றுதான் அறிமுக நூல்களில் இருக்கிறது. இப்படி ஒரு வேர் அதற்கு இருப்பது வியப்புக்குரியதுதான்
எந்த அறிமுக நூலில் இப்படி இருக்கிறது என்பதை ஜெயமோகன் தெளிவுபடுத்துவாரா? :-( ஏனிப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறார் இவர். சலிப்பாக இருக்கிறது.
* முத்துக்குமாரசாமி/ஸில்வியா இதே இருதலைப் பட்சியை வைத்து (அல்லது ஒரு முக்கிய பாத்திரமாக) ஒரு மாடர்ன் சிறுகதை ஒன்றை கோவை ‘ஞானி’ பழனிச்சாமி கொணர்ந்த நிகழ் இதழிலோ அல்லது ஊட்டி ப்ரம்மராஜன் கொணர்ந்த மீட்சி இதழிலோ ஒரு மண்டைக்குடைச்சல் கதையைக்கூட எழுதினார் என நினைவு. (1980களில்??)
* கண்டபேருண்டப் பறவை, அதன் பாரத வடிவங்கள், குலக்குறிகள் இன்னபிற குறித்த, ஸ்ரீகண்டஷாஸ்த்ரி அவர்கள் எழுதிய ஒரு தரமான ஆராய்ச்சிக் கட்டுரை; அவசியம் படிக்கவும்.
* நம் பேரும் புகழும் பெற்ற மாதமிழ்ப் பாரம்பரியத்தில் குறிப்பிடப் பட்டிருப்பவை, இருதலைப் பறவைகள் மட்டுமல்ல – இருதலைக் கொள்ளி எறும்புகளும்தான் எனும் அரிய செய்தியினை நம்மில் எவ்ளோ பேர் அறிவோம், சொல்லுங்கள்?
–0-0-0-0–
சங்க இலக்கியத்தில் இருதலைப் பறவைகளின் குறிப்புப் படலம்
ஜெயமோகன் அவர்களின் மேலான கவனத்துக்கு, நம் சங்ககால அலக்கியங்களிலும் இந்த கண்டபேரண்டவகைப் பறவைகள் காட்சி தருகின்றன என்பதைக் கொணர விரும்புகிறேன். :-(
தகடூர் யாத்திரை எனும் முழுதும் கிடைக்கப்பெறாத சங்க நூலில், அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்டுகொண்டிருந்த தகடூரை (தர்மபுரி என இன்று அழைக்கப்படுவது?) பெருஞ்சேரல் இரும்பொறை தாக்கி அழித்த படலமும் இருக்கிறது. அதில் புறத்திரட்டு #785ல் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதை, இருதலைகளுள்ள பறவை ‘இருதலைப் புள்’ ஒன்றுடனொன்று பொருதுவதைப் பொருத்துகிறது.
(தகடூர் யாத்திரை முழுவதும் படிக்க: http://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/012.thagaduryathirai.pdf)
கலித்தொகை, பாடல்#89, தலைவி ஊடல் தீர்தல், நல்லந்துவனார் (?)
…என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? …
‘உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று’ – மேலும் படிக்க – http://www.tamilvu.org/library/l1260/html/l1260ind.htm
கலித்தொகையிலும் தகடூர் யாத்திரையிலும் ‘இருதலைப் பறவை’ பொருதுவது குறித்துப் பேசுபவை. நேரடியாக பஞ்சதந்திரக் கதையின் தாக்கம் கொண்டவை.
மாறாக, கீழிருக்கும் அக நானூறிலும் பரிபாடலிலும் ஈருடல் ஓருயிர் வகைக் காதல்வசப்படுவது தலைவன்-தலைவி இன்னபிற என விரிகிறது.
அகநானூறு, பாடல்#12 குறிஞ்சித் திணை, கபிலர்
“…யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு
நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
வெவனில குறுமக ளியங்குதி யென்னும்
யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பி
னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே…
‘இருதலைப் புள்’ – ரெண்டுதலைப் பறவை.
“நானும் அவளும், பிரிவு இல்லாமல் அமைந்த உவர்ப்பில்லாத நட்பினால் இருதலைப் பறவையைப் போல ஓருயிராய் இருக்கின்றோம்.” (இதனைப் பற்றி மேலே படிக்க – http://www.tamilvu.org/ta/library-l1270-html-l1270ind-126267)
பரிபாடல் – இதிலும் நிச்சயமாக இருதலைப் புள் பற்றிய குறிப்பொன்று (ஒன்றாவது) இருக்கிறது. நிச்சயமாக எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நான் சரியாகத் தேடவில்லை, என் பரிபாடல் குறிப்புகளும் அகப்படவில்லை. என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. யாரேனும் உதவினால், மகிழ்வேன். நன்றி.
-0-0-0-0-0-
நெகிழ்வாலஜி படலம்
இதே/அதே பதிவிலுள்ள ஜெயமோகனின் நெகிழ்வாலஜி பற்றி (முடிந்தால்) அடுத்த பதிவில் எழுதுகிறேன். அலுப்பாக இருக்கிறது.
-0-0-0-0-0-
கோரிக்கை: ஜெயமோகன் அவர்களின் ஒரு, ஒரேயொரு பதிவில் உள்ள பல குளறுபடிகள், அறியாமைகளில், அட்ச்சிவுடல்களில் சிலவற்றைப் பற்றி மட்டும்தான் இந்தப் பதிவில் சில எடுத்துக்காட்டுகளையும் எதிர்த் தரவுகளையும் கொடுத்திருக்கிறேன். அவர் எழுத்துகள் மேலெழும்பவேண்டும் என்ற அக்கறையால்தான் இதனை, நேரம் செலவழித்து, குறிப்புகளை எடுத்துக்கொண்டு செய்திருக்கிறேன். ஏனெனில் அவர் எழுதுவதைப் படிப்பவர்களில் பலர், அறியா ஆனால், ஆர்வமிக்க இளைஞர்கள் என்பதை அறிவேன்.
ஆக, அவருக்கும் எனக்கும் உள்ள பொதுவான அறிமுகங்கள்/நண்பர்கள், இந்தக் கட்டுரையை அவர் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியுமா?
அவர் சொல்லியிருப்பதுபோல அவருடைய பிறழ்வுகளைத் திருத்திக்கொண்டாலோ, என் தவறுகளையும் (‘தவளை நடை’ ஏற்கனவே என் கவனத்திற்கு வந்துவிட்டது!) குறிப்பிட்டாலோ விமர்சனம் செய்தாலோ, நானும் மேலெழும்ப வசதியாக இருக்கும்,
நன்றி.
August 1, 2019 at 18:21
Sir, i thought so. Konjam jaasthi nu. But a writer need not be the source of authentic info on such topics. I think the reader should take these articles with a pinch of salt and rather take the general theme of stone age symbols and the pleasantly disturbing feel they give to todays man.
August 1, 2019 at 18:35
I agree with you in general, Chenthoor, but…
1. One should not pass off ignorance as wisdom, underestimating the levels of readership.
2. Ethics – this question is paramount.
3. In anycase, at this rate, per post of the auteur, we actually would need a huge Terex truck load of salt. Oh what to do.
August 1, 2019 at 21:04
பெரும்பேராசான் is simbly following the dictum ‘love what you can do and do what you can love’
August 2, 2019 at 06:15
ஸர்யா பிர்யல, ஏதொ குண்டக்கமண்டக்க கிண்டல் பண்ரீங்கன்னிட்டு தெர்ய்து. நண்றி.
August 3, 2019 at 14:38
Point 3 was hilarious. And googled terex. The truck is a beauty.
August 1, 2019 at 18:51
I am also a fantastic fan of Peraasaan. He is the only intellectual available in India. He also knows about this. Nobody in the earth is having knowledge/ intelligence/ wisdom to find fault with him. He may be magnanimously ignoring you.. We will not leave you. The first punishment I am giving to you is, how many times he mentioned about the injured leg of Sakuni in his Vennai Mrasu.
August 1, 2019 at 19:05
Sir, I do not read Jeyamohan or Vennmurasu regularly at all. Blame me for my senility. Having said that, I must admit that I had great hopes on Vennmurasu before it started off, which is now completely & irreparably lost in dilatory hijinx. and content-free verbiage.
Oh what to do!
August 1, 2019 at 21:25
Aasaan wouldn’t approve of such an extensive research on two headed bird, for that matter anything else.
You are barking at the wrong tree :(
August 2, 2019 at 06:10
அரவிந்தன்நீலகண்டனும் விஜய்யும் என்னடாவென்றால் நாய்வாலை நிமிர்த்தமுடியாது என்கிறார்கள்.
நீங்கள் என்னடாவென்றால் என்னை நாய் என்கிறீர்கள்.
ஒர்ரே ஞமலிக்கூட்டமாகப் போய்விட்டதே, நம் அலக்கியகும்பல் என்பதை நினைத்தால்… 😭
August 2, 2019 at 08:20
தகவல்களை தேடி இங்கு யாரும் வருவதில்லை என்கிறார்.
அப்புறம் அறிவியக்கம் என்று ஏகப்பட்ட இடங்களில் எழுதுகிறார்.
What a bundle of contradictions.
அவர் சிஷ்யர் நீங்கள் துக்ளக் தவிர வேறு படித்தமாதி தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
May be you should increase the font size of the side bar listing ‘Currently Reading’.
August 2, 2019 at 08:32
Sir, thanks!
The ‘Right to be Heard’ is one thingie and the ‘Right to be taken Seriously’ is another. So let us listen with patience! ;-) We dont have to take ’em seriously.
Again, I have not updated the lib data at all. Good that you reminded me. And, I read thuglaq once in a 4-5 months, not much devotable energy for current politics, being the reason…
August 1, 2019 at 22:49
என்னவோ போடா நாராயணா. எல்லாம் மாயை
August 2, 2019 at 06:14
சரிதான். பிடித்துக்கொள்ளுங்கள் இன்னொரு முத்து: மெசபடாமிய பாபிலோன் கூக்ளிடமிருந்து கடன் வாங்கிய பாவி.
கண்ணா! அல்லாமே மாயெதாண்டா! இத்தப் பிர்ஞ்சிக்கினா வாள்க்கே சுவமாய்டுண்டா!!
August 2, 2019 at 00:38
Dear Sir, really what happened to you ? He did not write any research article on ‘The Sentinel’.. and he did not tell Sentinel means ‘Chinnam’.. i could have been the Tamil title for the translation..
as Jeyamohan rightly said, we did not go to his page for data gathering… not sure if you have some conflict with jeyamohan.. but it does not fit ur stature in writing such silly articles..
August 2, 2019 at 06:07
உங்கள் அறிவுரையை எடுத்துக்கொள்கிறேன். ஏதோ கிறுக்கன் என்னவோ எழுதுகிறான் என என்னை லூஸ்லவுடவும். நன்றி.
August 2, 2019 at 03:26
திருராமசாமி,அவர்களுக்கு நீரும் மனம் தளராத விக்கிரமன்தான்,ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியாது கண்டீரோ.
August 2, 2019 at 06:05
ஆனால் ஐயா, நான் விக்கிரமனாக இருக்கலாம்.
ஆனால், பெரும்பேராசான் தான் விக்கிபீடியரமன் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? ‘கூக்ள் மேதை’யான நான் உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். 😉
August 2, 2019 at 05:23
அன்புள்ள திரு.ராமசாமி,
இந்நேரத்துக்கு நீங்கள் ஜெ வலைத்தளத்தில் அவர் மொழியிலேயே அவர் உங்களை வசை பாட நினைத்ததை அவரது வாசகர் ஒருவர் எழுதி அதை அவர் அமோதித்திருக்கும் அருட்செயலை கண்டிருப்பீர்கள். நாச்சியார் மடம் தொடங்கி வங்கி ஊழியர் வீடியோ வரை, இன்றைக்கு ஒத்திசைவுக்கும், எவரை ஜெயமோகன் எப்படி வசைபாட நினைக்கிறாரோ, அவரை அதே போல் வசை பாட இலக்கியாவேச தேவதை அப்படியே எவர் மேலாவது இறங்கி அப்படியே வசைபாட வைக்கும் அதிசயம் தமிழ்நாட்டில் நிலவும் காலத்தில் நாம் வாழ்வது ஏதோ ஜென்மத்தில் நம் முன்னோர்கள் செய்த புண்ணியமன்றி வேறென்ன! ஒண்ணாங்கிளாயில் எங்களுக்கு ஒரு பாடம் இருந்தது. ஏதோ தூக்கணாங்குருவி குரங்கிடம் ஏதோ புத்திமதி சொன்னதாம். குரங்கு தூக்கணாங்குருவி கூட்டையே பிய்த்து எறிந்துவிட்டதாம். அதே பாடம் உங்களுக்கு ஒண்ணாங்கிளாயில் இல்லை போல. அல்லது அதை சாய்ஸில் விட்டுவிட்டீர்கள் போல.
ஜெயமோகன் அடிப்படையில் நேர்மை சிறிதும் இல்லாதவர். தனிப்பட்ட உரையாடலில் ஒன்றை பேசுவார். அதற்கு 180 டிகிரியில் பொதுவில் எழுதுவார். இதற்கு இன்று பல இந்துத்துவர்களே சாட்சி சொல்வார்கள். எனக்கு அவர் இந்துத்துவர் அல்ல என்பது தெரியும். தொடக்கத்திலிருந்தே அவருக்கு நான் எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி. எனவே அவர் ஏதோ என் கருத்தியலுக்கு ஆதரவானவர் என்பதற்காக அவரைபடிக்கவோ அவருடன் பழகவோ இல்லை. தமிழ் சூழலில் ஒரு நேர்மையான நல்ல எழுத்தாளர் என கருதியதால். ஆனால் அவருக்கும் அடிப்படை நேர்மைக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் என்பதும் அவர் திறமையான எழுத்து வியாபாரி. புகழ், பணம், ஆகியவற்றுடன் தன்னை ஒரு முழுமையான அதிகார பீடம் ஆக்குவது என்பதற்காக மட்டுமே முனையும் ஒரு மிக வக்கிரமான மனிதர் என்பதை உணர்ந்த போது விஷமென அவரை விலக்கி அவரிடமிருந்து விலகினேன்.
என் வாழ்க்கையில் முக தரிசனம் கூட வேண்டாமென நான் நினைப்பவர்களில் சகல தமிழ் எழுத்தாளர்களும் அடக்கமெனில் அதில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் – ஜெயமோகன். எனவே அவரை திருத்துவது, அல்லது அவரது ‘ரசிகர்களை’ திருத்துவது என்பதெல்லாம் நித்தியானந்தா கல்ட் ஆட்களையும் நித்தியையும் திருத்துவது போல. உங்களுக்கு அட்டகாசமாக அதீத நேரம் இருந்தாலோ அல்லது நாய்வாலை நிமிர்த்துவது உங்கள் ‘ஹாபி’ யாக இருந்தாலோ செய்ய வேண்டியவை.
August 2, 2019 at 05:58
//இந்நேரத்துக்கு நீங்கள் ஜெ வலைத்தளத்தில் அவர் மொழியிலேயே அவர் உங்களை வசை பாட நினைத்ததை அவரது வாசகர் ஒருவர் எழுதி அதை அவர் அமோதித்திருக்கும் அருட்செயலை கண்டிருப்பீர்கள்.
ஐயா, நீங்கள் சொன்னது உண்மை! 🤣🤣
https://www.jeyamohan.in/124696
எம்ஸ்ரீனிவாஸ அர்ச்சனையை ‘உள்வாங்கி’க்கொண்டேன்; ஆனால் அருள்பாலிப்பதாக இல்லை.
நீங்கள் சொல்வது எனக்குப் புரியாமலில்லை. இருந்தாலும் நிமிர்த்த நப்பாசை, என்ன செய்வது சொல்லுங்கள்.
இன்னொரு விஷயம்: அர்ச்சனை, இதற்கு முந்தைய கட்டுரைக்கு. இந்த ஆர்தர்க்ளார்க்-ரெட்டைமண்டைப்பறவைக் கட்டுரைக்கு என்ன பதில் அர்ச்சனை வரப்போகிறதோ என்பதை நினைத்தாலே கொஞ்சம் நடுக்கமாக இருக்கிறது. 😭
உதவமுடியுமா? அல்லது இதற்கும் மண்டையில் அடித்துக்கொண்டு ‘கூக்ள் மேதை’யாகவே தேடவேண்டுமா?
ஜெயமோகன் கூக்ள் செய்து காட்டுரை எழுதுவதை பிறர்மேல் கவிழ்த்தி (மனோதத்துப்பித்துவ ரீதியில் ‘ட்ரான்ஸ்ஃபர்’ செய்து) ஜொலிக்கிறார். எனக்குப் பொறாமைதான். ஆக, எனக்கு சாபம் கிடைத்தது. விமோசனம் உண்டா?? 😂
https://www.jeyamohan.in/124696
August 2, 2019 at 06:00
(நண்பரொருவரிடமிருந்து வந்த செய்தி)
உ வே சாமிநாதையரின் ”பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும்” நூல்
எட்டாம் பாடல் – வரிகள் 72-73
யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு
நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்
இதில் இருதலைப்புள் பற்றிய நேரடிக் குறிப்பு இல்லை.
தலைமகள் இவ்வாறு சொன்னது
“இருதலைப்புள்ளினோருயிரேனாதலாற் பிரிவும் வரவும்வினாவும் செப்பும் நம்மிடை உளவாகாவென்றவாறு”
என்று பரிமேலழகர் உரை
August 2, 2019 at 06:51
இருபக்கமும் நெருப்பு உள்ள விறகில் மாட்டிக் கொண்ட எறும்பு ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ – இதன் பொருளை அறியாமல் பேசும் நீவிர், செயமோகனின் ஆக்கங்களைக் குற்றம் சொல்கிறீர்.
கண்டப்பேரண்டப் பறவையான இருதலைப்புள்ளுக்கும், முத்தொள்ளாயிரத்து இருதலைக் கொள்ளியின் உள்எறும்புக்கும் தொடர்புண்டோ?
August 2, 2019 at 07:45
ஐயா சங்கத்தமிழரே, நீங்கள் கடைச்சங்கமா (shop gathering mango) இடைச்சங்கமா (waist gathering mango) எனத் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும், பிழையில்லாத தமிழில் எழுதியதற்கு வாழ்த்து + நன்றி. உங்களைப் போன்ற தமிழறிஞப் பெருமக்கள், நம் நெடுநீள் வரலாற்றின் ஓட்டத்தில், சங்ககாலத்திலிருந்து இக்காலத்துக்கு ஓடிவந்து தடுக்கிவிழுந்து இந்த அக்கப்போர் எழவையெல்லாம் படித்துத் தங்கள் மேலான கருத்தையும் தெரிவிப்பது என் நல்லூழ்.
ஒரு விண்ணப்பம்: தாங்கள் தங்களுடைய நகைச்சுவையுணர்ச்சியை வளர்த்திக்கொள்ளவும். இடஞ்சுட்டிப் பொருள் விளக்கிக்கொள்ளவும். நன்றி!
“செயமோகன்” :-)) செயமோகனார் என இருந்திருக்கவேண்டுமோ?
ஆனால், இதுவும் அழகாகவே இருக்கிறது. உங்களுக்கும் செயம் உண்டாகட்டும்.
இவண்:
சங்கிப்புலவர் இராமசாமியார்
August 5, 2019 at 10:36
sir,i am terribly tired of these two headed birds,and,almost dead when heard aravind neelakandan ,saying that asaan is making an animal of two buttocks with nithyananda,my spiritual master.
August 5, 2019 at 11:32
?
dunno what is this all about, but ‘loosela vudren’
August 2, 2019 at 07:48
Bark has two meanings.As a noun it is the outer cover of a tree. and the sound of a dog. Barking up a wrong tree may also mean, one removing the outer skin of a tree for medicinal purpose. To bark up a wrong tree may also mean removing the outer skin of a tree which does not have the medicinal property. This is purely my explanation. All dictionaries speak only about dog barking.
August 2, 2019 at 07:51
Yov! I know that. Thanks. (On whose side are you? Bark Obama?) grr
August 2, 2019 at 11:01
இந்தச் சிக்கல் எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கும் ஒன்று. ஆகவே எனது பிழைகளை உரியமுறையில் திருத்துபவர்களிடம் எப்போதும் மதிப்புடன் இருக்கிறேன். ஆனால் கருத்துக்களை புரிந்துகொள்ளமுடியாத ஒரே காரணத்தால் தகவல்களை மிகையாக தேடிக்கொண்டிருப்பவர்களையும், அதை மட்டும் கொண்டு போலிமேட்டிமைகளை நடிப்பவர்களையும் அடிப்படைகளையே அறிந்திராதவர்களையும் பொருட்படுத்துவதில்லை. என் நேரத்தை வீணடிப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்லியே வாழ்க்கை வீணாகும். நீங்கள் சொல்வதுபோல தொன்மம் வேறு வீரகாதை வேறு என ஆனா ஆவன்னாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
August 2, 2019 at 12:12
??
August 2, 2019 at 12:56
ஓ! இது ஜெயமோகனின் வாசகர்கடிதக் காட்டுரையிலிருந்தா?
சரிதான். நான் அவருடைய கருத்துக் கோளாறுகளைப் பற்றியும்தானே சொல்லியிருக்கிறேன், புலவரே!
ஆக, அரவிந்தன்நீலகண்டன் அவர்கள் சொல்வதுதான் சரி. நன்றி.
August 2, 2019 at 15:41
சமீப வீரகாதையான, வீரசேவகன் முச்சதம் அடித்த மூலத்தானம் தான் வாளுகிர் ஆளரி தோன்றிய இடம் என்பது தொன்மம். ஆதலால் அங்கே தான் சரபேசுரனும் தோன்றியிருக்கவேண்டும்.
சரபேசுரன் —> சீயமுகப்புள்.
இல்வாய் —> வாயில் ஆவதுபோல், சீயப்புள் —> புட்சீயம் ஆகும்.
புட்சீயம் —> பூஜ்யம், அதாவது சூனியவாதம் —> அதாவது பௌத்தம்.
இருதலைப்பறவை சரபேசுரனை உண்ணும்.
ஆதலால், இந்த இருதலைப்பறவை எனும் படிமமே பௌத்த விரோதத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவு.
/மகிழ்வேன்/
பரிபாடலில் ஒரு வரி:
“ஈராக்கை படர்ந்த ஓர்புள்”
இதை ‘இரு யாக்கைகள் படந்த ஒரு பறவை’ (இருதலைப்பறவை) என்று வேண்டுமென்றே எளிமையாகப் படிப்பது இலக்கியச்சதி.
மெசொபெடேமியாவில் சேவற்கொடி பட்டொளி வீசி பறந்ததையே இது காட்டுகிறது என்று நுணுகிப் படிக்க வேண்டும்
பி.கு: உங்கள் வழக்கம்போல (இன்றுதான் கேள்விப்பட்டேன்) கூகிளில் ௸ பரிபாடல் வரியைத் தேடவேண்டாம். அது பரம்பரை பரம்பரையாக எங்களிடம் இருந்த ஓலைச்சுவடியில் இருந்தது. 2004 கடற்கோளில் அச்சுவடி அழிந்துபட்டது.
August 2, 2019 at 15:45
🤣🤣🤣