கருணாநிதி பிள்ளைத் தமிழ்
April 9, 2018
(அல்லது) திராவிட இளைஞர் அணியின் 64வயதேயான இளம் பிராயத் தலைவர் மேதகு இசுடாலிர் வகையறாக்களின் பரிசுத்த ஆவித் தமிழ், பராக்! பராக்!!
அய்யா இசுடாலிர், நீங்கள் தமிழின் அடிப்படைகளையே துளிக்கூட அறியாதவர், நான்கு வார்த்தைகளைக் கோர்வையாக எழுதவோ, ஏன் பேத்தவோ கூடத் தெரியவில்லை உமக்கு – இந்த அழகில் எப்படித்தான் தமிழைக் காப்பாற்றப் போகிறீர்களோ! (நல்லவேளை – ராஹுல், இசுடாலிர் போன்ற தொழில்முறை அரைகுறைகளுக்கு அப்பாற்பட்டு, நமக்கு, பிற வழிகளும் இருக்கின்றன! 27/03/2018)
ஏனிந்த வேஷமைய்யா!
இந்த சாக்கடைத்தன நாடகத்தின் அங்கமாக, ஆங்கிலத்தில் வேறு அமோக உளறல்; தேவையா?
பாவிகளே! கொஞ்சமேனும் தமிழுக்கு மரியாதை கொடுத்து அதன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்!
அயோக்கியர்களே! உங்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்கே வாழ் நாளில் பாதி செலவழிந்துகொண்டிருக்கிற தூ!
இனமான அரைகுறைகளே! நன்றி போன்ற சொற்கள் உணர்வுகளை அல்லது அகவயச் செயல்பாடுகளைக் குறிப்பவை.
அற்ப அடலேறுகளே! எம் தமிழின் இலக்கண வழக்கில் இம்மாதிரி உணர்ச்சிகர வெளிப்படுத்தல்களுக்குப் பன்மையே கிடையாது.
தீவிர அறிவிலிகளே! நன்றிகள் எணச் சொள்லாதீர்கல்!
…இந்த அழகில், நீங்களெல்லாம் தமிழர் தலைவர்களாம்! அடுத்த முதலையமைச்சர் நீங்கள்தானாம்! (நல்லவேளை, நீங்களும் உங்கள் உடன்இறப்புகளும் மட்டும்தான் இப்படிச் சொல்லிக் கொள்கிறீர்கள்!)
சிரிப்பும் அழுகையும் ஒருசேரத் தட்டாமாலையடித்துச் சுற்றிச் சுற்றி வருகின்றன.
நன்றி கள். (உங்களுடைய தமிழர்குடி மாநாட்டில் விற்பனையும் ஊற்றிக் கொடுத்தலும் அமோகமாக நடந்ததாமே?)
-0-0-0-0-
நான் தமிழையோ இலக்கணத்தையோ அலக்கணத்தையோ உய்விக்கவந்தவனல்லன்; எல்லாம் தெரிந்த ஏகாம்பரத் திராவிடனுமல்லன். ஆனால் என்னைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக்கொள்ள விழைபவன். தவறுகளைத் திருத்திக்கொள்பவன்…
ஆனால், உங்களைப் போன்ற உதிரிகள்? தவறுக்கு மேல் அயோக்கியத் தவறு செய்து, அறியா சமூகத்தை உசுப்பிவிட்டு, ‘போராளி’த் தீயை விசிறி விட்டு – அதில் படுகேவலமாகக் குளிர்காயும் அற்பர்கள்தாமே??
தமிழின(!)த்தையும் தமிழையும் காக்க அவதாரம் எடுத்திருக்கும் பகுத்தறிவுப் பகலவன்களாக உங்களையே உருவகப் படுத்திக்கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல்களின் தலைமைத் தீவட்டிகள்தாமே?
இருந்தாலும், சும்மனாச்சிக்குமாவது — கொஞ்சமாவது, மேலோட்டமாகவாவது உங்கள் அரைகுறைத் தமிழையாவது திருத்திக்கொள்ளவேண்டாமா?
மாட்டீர்கள். ஏனெனில் தூய சுயநலமும் பேடித்தனமும் அயோக்கியமும் 1:1:1 விகிதத்தில் கலந்த திராவிடச் சாக்கடையில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளுக்கு, காயடிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மண்டையில் குத்தாட்டம் போடும் உங்களைப் போன்றவர்களுக்கு – இதெல்லாம் அவசியமேயில்லை என்பது எனக்குத் தெரியும்.
நன்றி.
—