தமிழ் நெடுங்கணக்கு
February 20, 2013
இரண்டு வருடம் முன்னால் ஒரு வெள்ளைக்காரர் (அவர் பெயர் மறந்து விட்டது) நம் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என வந்தார். யாரையோ கேட்டிருக்கிறார் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா என்று – முன்னால் இம்மாதிரி ‘தமிழ் ஆபத்துதவிப் படை’ வேலைகள் செய்திருந்ததால், அவர்கள் என்னைப் போய் தமிழ் ஐயா என்று காட்டியிருக்கிறார்கள். ஆக, அவருக்கு நான் ஒரு தமிழ் ஐயோ என்று தெரியாத காரணத்தால், பாவம், வசமாக மாட்டிக் கொண்டார்.
பிரச்சினை என்னவென்றால் எனக்கு இத்தாலியன் என்றால் கிலோ என்ன விலை – அடிப்படையில் ஒரு அழகான க்ராஃபிக்ஸ் டிஸைனரான அவருக்கோ ஆங்கிலம் வராது.
அவருடன் சுமார் மூன்று மணி நேரம் செலவு செய்து மல்லுக்கட்டி அபினயத்துடன், மிகைப்படுத்தப் பட்ட கொனஷ்டை உச்சரிப்புகளுடன் தமிழ் நெடுங்கணக்கைப் பற்றிச் சொன்னேன். எப்படி முடிந்த வரை சரியாக உச்சரிப்பது என்பதற்கான கையேட்டையும், ரெட்ரோஃலெக்ஸிவ், ஃப்ரிக்கெடிவ் என மிகவும் நீர்க்கடித்து, எளிமைப் படுத்தி ஆங்கிலத்தில் கிறுக்கித் தந்தேன். தமிழ் என்பது உலகத்தில் ஒரேஒரு மோனோஸில்லபரி இருக்கும் ஒரேஒரு பாஷை அதுவும் பல்லாயிரம் வருடங்களாகப் புழக்கத்தில் இருக்கும், அற்புதமான பாரம்பரியம் இருக்கும் பழம்பெரும் பாஷை எனவும் பெருமையடித்துக் கொண்டு – தமிழ் பேசும் சூழலில் இருந்தால்தான் உச்சரிப்பு சரியாக வரும் எனவும் போதித்தேன். வேலை முடிந்தது. மறந்து விட்டேன்.
ஒரு வாரம் முன்பு. திடீரென்று இந்த அழகாக வடிவமைக்கப்பட்ட, ‘தமிழ் நெடுங்கணக்கு’ பிடிஎஃப் கோப்பு எனக்கு பல மின்னஞ்சல்கள் தாண்டி வந்து சேர்ந்தது: TAMIZHlphabetVer2
இணையத்தில் எனக்கு முடிந்தவரை தேடியதில் இம்மாதிரி அனைத்து (உயிர்மெய் எழுத்துகளுக்கும் கூட) தனித்தனியான எளிமையான உச்சரிப்புகளுடன் (pronunciation key) கூடிய தமிழ் நெடுங்கணக்கு எனக்கு அகப்படவேயில்லை – அதிசயமாக இருக்கிறது. (அல்லது நான் தான் சரியாகத் தேடவில்லையோ?)
A3 காகிதத்தில் (இதில் தான் பிரிதிறன் – ரெஸெல்யூஷன் – அழகாக வருகிறது) அதனை மூன்று வண்ணப் பிரதிகள் எடுத்து, ப்ளாஸ்டிக் லாமினேஷன் செய்து அதை உபயோகிக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்தேன். (ஒரு பிரதிக்கு சுமார் 70 ரூபாய் ஆயிற்று); அவர்களை, இதனை வைத்துக் கொண்டு, சினிமா, ‘ஆழ்ந்த இரங்கல்,’ ‘நன்றி! நன்றி!! நன்றி!!!’ சுவரொட்டிகளையும், ஜெயலலிதா, ரங்கசாமி, திருமாவளவன், கருணாநிதி இத்யாதிகளின் (தமிழுக்கு இவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது!) ஆபாச ஆனால் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களையும் எழுத்துக் கூட்டிப் படிப்பதிலிருந்து ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் விருப்பமும், நேரமும் இருந்தால், இதனை விருப்பப் பட்டவர்களுக்கு ஒரு அன்பளிப்பாகக் கொடுக்கலாமே?
(அந்த பெயர் தெரியாத வெள்ளைக்காரருக்கு நன்றி)
February 20, 2013 at 19:19
ellam sari .. you have blocked the right click so nobody can use this either in jpg or in pdf..
-surya
February 21, 2013 at 07:06
Hello Surya,
0. I have checked everything. Things are fine.
1. JPEG file is just a sample. The resolution is not high in this – only 450×292pxls. The hi-res PDF file is the one that needs to be used. There have been nearly 100 downloads of this file so far. The link is: https://othisaivu.files.wordpress.com/2013/02/tamizhlphabetver2.pdf
3. I have not blocked anything – may be you should check your browser settings first. (Do you use a text only HTTP client like Lynx? I use it, and there are some issues with that.)
Hope this helps.
__r.
February 21, 2013 at 08:51
மிக்க நன்றி சேமித்து வைத்துக்கொண்டேன். இதேபோல மற்றமொழிகளுக்கும் குறிப்பாக ஆங்கிலத்திற்கு இந்திக்கும் இருக்குமல்லவா? அவைகளையும் கண்டுபிடித்து வெள்யிடுவீர்களா? அதாவது எப்போதாவது அவைகளே உங்கள் கண்ணில் பட்டால். . .
February 22, 2013 at 11:47
Badri, really really useful. Thanks a lot for sharing…
February 23, 2013 at 11:01
Yes, it is working now i got the files both forms. thought this will be useful for my daughters.
But guess as usual I jumped the gun.
-Surya
ps: any idea of continuing the dmk pages to next level??
February 26, 2013 at 11:23
அச்சகப்பணி அநுபவம் மெச்சகத்தகுந்தது. அனைவருக்கும் பயன்படுவது பாராட்டுக்குரியது.