मिच्छामि दुक्कडम्, தமிழ்பூதம் செம்பூதங்கள்…
November 17, 2021
மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam.
-0-0-0-0-
சிலப்பதிகாரம் எப்போது தொகுத்தெழுதி உருவாக்கப்பட்டது எனும் எழவுக்கே போகவேண்டாம். அதில் உள்ளுறை விஷயங்களை, அப்டப்படியே முழுவதுமாக நடந்த உண்மை வரலாறுகள் என நம்பும் பெருங்கும்பல், அதுவும் படிப்பறிவு பெற்றதாக தம்மைக் குறித்து நம்பும் நபர்கள் கொண்ட போக்கற்ற திரளொன்று இருக்கிறது எனக் கடந்த பத்து நாட்களில் உணர்ந்தேன்.
வாயடைத்துப் போனேன்.
ஏனெனில் சிலப்பதிகாரம் எனும் பெரும்புனைவு குறித்து என் நண்பர்கள் சிலருடன் (விட்டில் பூச்சிகள், நான் சிதைத்தீ என வைத்துக்கொள்ளுங்கள்) உரையாடி என் சந்தேகங்களையும் துணிபுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றால்…
…ஊரெல்லாம் சதுக்கப் பூதங்கள். (அவற்றில் சில நற்பூதங்க்ள், அதாவது தமிழ்பூதம் செம்பூதங்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும் – நேற்று இப்படியாப்பட்ட ஒரு சங்ககால நங்கநல்லூர் செம்பூதத்துடன் காஞ்சி-கடிகை பற்றி ஒரு மயிர்பிளப்பு விவாதமும் நடந்தது… எங்கள் இருவருக்கும் சிரித்து மாளவில்லை!)
சரி. இது ஒரு புறமிருக்க…
இன்னொரு திராவிடச் செம்பூதம் ஒன்றுடன் சிலப்பதிகாரம் விவகாரம் பற்றி முந்தா நாள் பேசிக்கொண்டிருந்தபோது, அதற்கு ஏகப்பட்ட வருத்தம், சிலப்பதிகாரத்தை நான் வரலாறாகவோ அல்லத் சங்ககால நிர்ணயத்துக்கான ஒரு பெரும்தரவாகவோ நினைக்கவில்லை என்பது… ஒருவழியாக, வெட்டிப் பேச்சு நம் செல்ல திராவிடர் பக்கம் நகர்ந்தது…
-0-0-0-0-0-
? திராவிடத்தால் உருப்படியாக ஒன்றுமே நடக்கவில்லை எனச் சொல்கிறாயே. இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டாயா?
! மாட்டேன். எனக்கு மாற்றிக்கொள்ளக் கூடாது என்ற வெறியில்லை. மாறாக – அப்படியில்லை, அந்தக் கும்பலால் மட்டுமே, அவர்களுடைய செயல்பாடுகளால் மட்டுமே நல்ல விஷயங்கள் (மட்டுமே) நடந்திருக்கின்றன என ஒரு, ஒரேயொரு தரவையாவது காட்டேன் – மாற்றிக் கொள்கிறேன்.
(ஏனெனில் – திராவிடம் என்பது ஒரு பொறுக்கித்தனமான விஷயம். பொறுக்கிகளுடைய, பொறுக்கிகளுக்காக நடத்தப்படும் கயமை நிரம்பிய அரசியல்பேடித்தனம் என்பது என் துணிபு.
அவன் யோசித்துயோசித்துச் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும், அது திராவிடர்களால் ஏற்பட்டதல்ல என, பிற தரவுபூர்வமான காரணங்களைக் கொண்டு காத்திரமாக நிறுவினேன்; ஒன்றிரண்டு விஷயங்கள் ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ எனப் பெரும் ஊழல்களுக்கிடையில் நிகழ்ந்திருக்கின்றன என (கருணாநிதி சமயத்தில் சென்னை பொதுமருத்துவமனைக்கு புதிய மருத்துவவசதிகளும் தடவாளங்களும் கிடைத்தமை – எல்லாம் ஊழல் வழியாகத்தான் + இவை குறித்து பிலாக்கண அன்பருக்குத் தெரியாமல் இருந்தாலும்) ஒப்புக் கொண்டேன்.
அவன், அஇஅதிமுக கட்சியை திராவிடக் கட்சியாக நினைக்காததால் அது லூஸ்லவுடப்பட்டது – இல்லையேல் மழை நீர் சேமிப்பு, மதியவுணவுத்திட்டம் விரிவாக்கம் என ஒன்றிரண்டு விஷயங்கள் பேசப் பட்டிருக்கலாம்)
? அப்படியென்றால் உன்பார்வையில். திராவிடர்கள் பதவியில் இருக்கும்வரை நம் தமிழகத்துக்கு விமோசனமேயில்லை என்கிறாயா? இடதுசாரிகள்??
! கொசுத்தொல்லையை எந்த விதத்திலும் விமோசனத்துக்கான பாதையாகக் கருதமுடியாது. அவர்களால் முடிந்தது, அதிகபட்சம் முடக்குவாதம் கொடுக்கும் இடதுசாரி டெங்கி மட்டுமே. கேவலம் – ஹிந்துவிரோதிகளும், பிரிவினைவாதக் கூவான்களும், துட்டு வாங்கிக்கொண்டு திராவிடத்தின் காலை நக்கும் பேடிகளும்தான் அவர்கள். ஆகவே அவர்களை லூஸ்லவுடவும்.
? பின் என்னதான் வழி? நாம் உருப்படவே முடியாதா?
! முடியும். இளம் அண்ணாமலை போன்ற செயலூக்கம் மிகுந்த தலைவர்களால், அவர்களால் வழி நடத்தப்படும், தேசபக்தியும் உழைப்பும் நேர்மையும் கொண்ட இளைஞர் பட்டாளங்களால் – எதிர்காலங்களில் முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
? அப்போது இவ்ளோ நாள் திராவிடம் இருந்ததனாலே ஏற்பட்ட பிரச்சினைகளெல்லாம் போய்விடுமா? திடீரென்று அகன்றுவிடுமா?
! ஆகலாம்.
? எப்படி?
! அதற்காகத்தான் ஒரு பிரார்த்தனை, பாரதத்தின் சார்பாக இறையைக் குறித்து, ஊழை நோக்கி ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தொடர்ந்து வைப்பேன்.
? ?
! மிச்சாமி துக்கடம். அவ்ளொதான்.
–0-0-0-0-0–
மிச்சாமி துக்கடம்.ப்ராக்ருதச் சொற்றொடர்.
~செய்யப்பட்ட(செய்த) தீமைகள் அனைத்தும் வீண் (அல்லது பலனில்லாமல்) போகட்டும்.
~பண்ணப் பட்ட அயோக்கியத்தனத் திரியாவரங்களுக்கு அவை எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படாமல், கிட்டாமல் போகட்டும்.
ஜைனர்களால் அடிக்கடி உபயோகப் படுத்தப்படும் ஒரு சொற்றொடர் இது. அவர்கள் இந்த அணுகுமுறையை ஏறத்தாழ மிக நன்றாகவே உள்வாங்கிக் கொண்டிருப்பவர்கள் என்பதென் எண்ணம்.
இந்தச் சொற்றொடரை தம்மீதான ஒரு சுயவிமர்சனமாகவும், பொதுவாகப் பிற சிடுக்கல்கள் குறித்தும் பயன்படுத்தி – உணர்வுபூர்வமாகச் சொல்லலாம். மன்னிப்புக் கேட்கலாம், மேலெழும்பலாம்.
என்னைப் பொறுத்தவரை இந்த ‘மிச்சாமி துக்கடம்’ என்பதை, ‘அயோக்கியத் திராவிடர்கள் – தமிழையும், பாரதத்தின் அங்கமான தமிழகத்தையும் ஒழிக்க முனைந்தெடுக்கும் எந்த ஒரு குயுக்தியும் தீமையும் – பலனில்லாமல் மொண்ணையாகி உதிரக் கடவது’ எனும் கோரிக்கையாக, விழைவாக எடுத்துக் கொள்கிறேன்.
மிச்சாமி துக்கடம்.
அதே சமயம் – வெறும் பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. நாமும் அதற்காக உழைக்கவேண்டும் என்பதும் சரியே. நான், என் சக்திக்கேற்ப எந்த வித்த்தில் உழைத்தால் உபயோககரமாக இருக்குமோ, அதைத் தொடர்ந்து செய்வதாகத்தான் எண்ணம்.
ஊர்கூடித் தேரிழுத்தால்தான் அயோக்கிய திராவிட ஊர்ப்பிடாரிகள் அகலும் வாய்ப்புகள் அதிகமாகும்.
~
November 18, 2021 at 22:02
But Sir, TN remains amongst the top(though I would like to believe, despite the Dravidian rule) in SGDP, literacy and other standard of living parameters. There was a you tube Video, just before the state election which stated that TN is approaching US standards indeed.. How do we counter this propaganda?
November 19, 2021 at 10:44
Sir, valid questions; will reply later please!
November 19, 2021 at 13:36
Yes Sir, whenever you find time. Thanks!
This needs to be decoded, since this is the fulcrum of their argument as to, why Dravidian rule is better, by extension why the Dravidian race is superior, further why South is so much better etc etc…
I would like to believe getting Chennai when the division of States happened would be a major factor that sustained our industrialisation, though credit to us, we didn’t screw up like Bengalis who had Kolkata.
Anyway when you find the time and inclination please share your thoughts. Thanks🙏