அளவேயில்லாத அறியாமையில் உளறிக்கொட்டுவதற்கு அப்பாற்பட்டு, இப்படியா தொடர்ந்து வாய்கூசாமல் பொய் சொல்வார் இந்த ஜெயமோகன்?

November 18, 2021

மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஜெயமோகன் – பிற முதுகுப்பைப் பெருவுளறி தலையிலாங்கானத்து எருதின்ற கடுகிடுகுடுங்கோன் அலக்கியவாதிகளைப் போல அஸால்ட்டாக இடக்கையால் புறம் ஒதுக்கித் தள்ளப் படக்கூடியவர் அல்லர் – என இன்னமும் நான் இன்னமும் நினைக்கிறேன், அவருக்கு இப்படியெல்லாம் அற்பத்தனமாகச் செயல்படவேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. Self delusion or some unraveling of the mind happening?

அங்கலாய்ப்பு: அவருக்கு என்று ஒருகாலத்தில் ஓரளவுக்கு ஒரு ஆகிருதி (அத்தனை அறமற்ற அழிச்சாட்டியங்களுக்கு அப்பாற்பட்டும்) இருந்தது. இதனால் தான் ஜெயமோகனின் தொடர் வீழ்ச்சி என்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுப்பது.

அவர் ஏன் இப்படித் தீவிரமாக தனக்கு ஸ்நானப்ராப்தியற்ற துறைகளில் புகுந்து அறியாமையை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறார், மேலும் ‘மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்’ ஆகவேண்டும் எனத் துடிக்கிறார் என்று பலகாலம் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சென்ற சில வருடங்களில் அது அப்படியல்ல – ஒரு ஆழ்ந்த மனோதத்துப்பித்துவ ரீதி வக்கிரம் இவரிடம் எப்போதுமே இருந்திருக்கிறதோ, இப்போதுதாம் மஹாமஹோ மரமண்டையுடைத்த எனக்குத் தெரியவருகிறதோ எனத் தோன்றுகிறது.

அல்லது புதியபுதிய இளம்பலியாடுகளைத் தன் சன்னிதானத்துக்கு அழைத்து இருத்திக் கொள்ளும் பாவனைகளில் ஒன்றாக இது இருக்கலாமோ என்ன எழவோ.

எது எப்படியோ.

முகாந்திரம்: ஜெயமோகனின் அண்மைய பொய்களில் ஸ்ரீ அரவிந்தரைக் குறித்தது: காந்தி மீதான விமர்சனங்கள் November 15, 2021

ஜெயமோகப் பொய்யின் (இதனை அறியாமை என என்னால் விட்டுவிடமுடியாது) சாராம்சம் என்னவென்றால் 1) அரவிந்தருக்கு அஹிம்ஸையில் நம்பிக்கையில்லை 2) க்ஷத்ர – க்ஷத்ரிய தர்மத்தில் மட்டுமேதான் ஆகவே வன்முறையில்தான் நம்பிக்கை 3) பொதுமக்கள் இறந்தால் அவருக்குப் பரவாயில்லை 4) அவர் ஒரு நவீனமனிதனால் பொருட்படுத்தக் தக்கவரில்லை.

அதற்கு அரவிந்தன் நீலகண்டனின் மறுமொழி, மிகச் சரியாக வந்திருக்கிறது.

அரவிந்தனின் பதில் மேற்கண்ட நான்கு பொய்களின்மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது; அவருக்கு எனம் மனம் கனிந்த நன்றியும், வாழ்த்தும்.

+ Checkout Sri Aravindan Neelakandan’s Aug20, 2020 essay as plugged in to his above facebook post: The Unexplored Connection Between Sri Aurobindo, Sayajirao Gaekwad, And Babasaheb Ambedkar.

(ஜெயமோகனின்-  ஒவ்வொரு போகிறபோக்கில் அட்ச்சிவுடும் பதிவுக்கும் தரவுகளுடன் பதிலளிக்கவேண்டும் எனச் சிலசமயம் உத்வேகம் வருகிறது – ஆனால் பல காரணங்களினால், எனக்கு நேரமின்மையால், அவருடைய வாசகர்கும்பல்களின் கிடுகிடுபள்ளத் தரத்தினால் அதற்கெல்லாம் அவர் இக்காலங்களில் பாத்தியதைப் படவில்லை எனவும் படுகிறது; ஏனெனில் அவருக்கும் அவர் வாசகர்களுக்கும் மேலெழும்பவேண்டிய அவசியமேயில்லாத நிலை இருப்பதால் அவர்கள் தொடர்ந்து ஆனந்தச்சகதியில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர், இதுவும் நல்லதற்கே.

இருந்தாலும்.

இந்தக் கையறு நிலையில் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் மட்டும்தான் தொடர்ந்து, அயர்வேயில்லாமல் வாதங்களை முன்னெடுக்கிறார், அவருடைய பணி, அவருக்கு ஆரோக்கியக் கேடு உண்டாக்காமல் தொடரவேண்டும் என்பது என் கோரிக்கை)

சரி.

ஸ்ரீ அரவிந்தர் குறித்துப் பலகாலமாக யோசித்தும், அவர் வழிகாட்டிய திசைகளில் ஈர்க்கப்பட்டு அவற்றின் சிறுகூறு ஒன்றில் சிலபல ஆண்டுகள் செயல்பட்டும் வந்திருக்கிறேன் (சமூகத்துக்கு உதவிகரமாககவோ அல்லது உதவாக்கரையாகவோ என்பது வேறு விஷயம்) ரீதியில் நான் ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். ஆகவேயும் எனக்கு இம்மாதிரி ஜெயமோகன் கீழ்த்தரமாக அட்ச்சிட்வுடுவதில் ஒவ்வாமையாகி விடுகிறது.

கீழே, மொழி பெயர்க்காமல், அடிக்கோடிட்டு உங்களுடைய குவியத்தைக் குறுக்காமல், என் வியாக்கியானத்தை அளிக்காமல் – ஸ்ரீ அரோபிந்தோவின் வார்த்தைகளை, அவற்றின் பின்புலத்திலேயே, வடிகட்டாமல் கொடுக்கிறேன்.

ஜெயமோகனின் அடிப்படை அறமின்மையைக் குறித்து உங்களுக்கு இன்னமும் சந்தேகம் இருந்தால், நீங்கள் இவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

(Evening Talks With Sri Aurobindo – Recorded By A. B. Purani,  4th ed single volume (revised) 2007, p.312, Publisher: Sri Aurobindo Ashram)

(ibid, p.314-317)

(Bande Mataram, Collected Works of Sri Aurobindo, Volume 6-7, p. 1117, Publisher: Sri Aurobindo Ashram)

(ibid, p. 1118)

(ibid, p. 1121)

ஸ்ரீ அரோபிந்தோ அவர்களின் மேற்கோட்களைக் கொடுத்துக்கொண்டே செல்லலாம்…  ‘கீதைக் கட்டுரைகள்’ தொகையிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம்.

ஆனால், ஜெயமோகன் + அவர்வாசக வகையறாக்களின் அறிவளவுக்கு அதெல்லாம் தேவையில்லை.

இருந்தாலும் – யாருக்காவது அந்த 1928 அழகைப் படிக்க வேண்டுமென்றால்:

-0-0-0-0-

நம் பாபுஜி காந்தியின் அஹிம்ஸை என்பது – ஹிந்துக்களைக் குறித்து மட்டுமே, அதுவும் மேட்டிமைத்தனத்துடன் போதிக்கப் படுவது.

அந்த அஹிம்ஸை குறித்த பிரமையானது, அவரை, வாய்கூசாமல் பொய் சொல்லவும் வைத்தது (ஒரேயொரு எடுத்துக்காட்டு: இஸ்லாமிய மாப்பிள்ளைமார் செய்த ஹிந்துபடுகொலைகள் பற்றியது)  – அல்லது, இவ்வளவு காட்டமாகச் சொல்லவேண்டாம் என்றால், அவரைப் பல விஷயங்களைக் காரியார்த்தமாகப் பார்க்க முடியாதபடிக்கு கண்திரை போட்டது எனலாம்.

பாபுஜி பஜனை செய்வது எளிது.

அந்தப் பஜனை செய்வதால் மட்டுமே தான் அறவானாகக் கருதப்படமுடியும் (தான் ஒரு அயோக்கியனாகத் தொடர்ந்து இருந்தாலும்) என்பது இன்னமும் எளிது.

ஏனெனில் அடிப்பொடிகளின் அறபஜனை கிடைப்போர் பாக்கியவான்கள். அறலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.

நன்றி. ஆமென்.

6 Responses to “அளவேயில்லாத அறியாமையில் உளறிக்கொட்டுவதற்கு அப்பாற்பட்டு, இப்படியா தொடர்ந்து வாய்கூசாமல் பொய் சொல்வார் இந்த ஜெயமோகன்?”

  1. Muthukumar Says:

    ‘ஜலபுலஜங்ஸ்’ கடலூர் சீனுலாவுத்தீன் புல்புல்லாஹ் குஸ்தி (சீடர்/ஆஃப் நவதுவாரர் ஜெயமோகனுல்லாஹ் கிஸ்தி) பைரவர் குரைக்க போகிறார் பராக் பராக்
    வெவ் வவ்… வாவ்


    • ஐயன்மீர்! நான் அப்படி நினைக்கவில்லை. (நடந்தால் நல்லதே)

      ஏனெனில், கண்டுகொண்டால்தானே பிரச்சினை?

      எத்தையோ உளறிக்கொட்டிவிட்டு, சூத்தாமட்டை மண்ணைத் தட்டிக்கொண்டு, வேறெதேனும் அவதூறு செய்யக் கிளம்பிக்கொண்டிருப்பார்கள் நம் போஸ்ட்-மாடன் மூடர்கள்….

  2. TKA Says:

    Sir,,
    // 4) அவர் ஒரு நவீனமனிதனால் பொருட்படுத்தக் தக்கவரில்லை.//

    அரசியலில் (அல்லது அரசியல் கோட்பாடுகளில்) மட்டும் அவர் நவீன மனிதரால் பொருட்படுத்தத் தக்கவரல்ல என்பதே ஜெயமோகனின் இந்நப் பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டது. அது சரியா தவறா என்பது வேறு விஷயம்!


    • ஐயா, இந்தப் பார்வைக்கு நன்றி.  மறுபடியும் என் எதிர்வினையையும் அவருடைய கட்டுரையையும் படித்தேன். (பிறகு உங்களுடன் பேசுகிறேன்)

      ஆனால், கீழ்கண்டபடியும், கண்டபடியும் எழுதியிருக்கிறார், அவர்.

      “மேலே சொன்ன அரவிந்தர், மார்க்ஸியம் என்னும் இரு தரப்புக்கும் பொதுவானதாக உள்ளது வன்முறையே தீர்வு என்னும் நம்பிக்கை. கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டங்களுக்காக பலகோடிபேரை கொன்றழித்தனர். ஒன்றும் அறியாத எளிய மக்கள் ஈசல்கள்போல மடிந்தனர்.  அதைப்பற்றிய எந்த குற்றவுணர்ச்சியும் அவர்களிடமில்லை. அந்தப் போராட்டமே தவறென்று நிரூபிக்கப்பட்டால் ‘அது ஒரு கொள்கைப்பிழை, அவ்வளவுதான்’ என கடந்துசென்றுவிடுவார்கள். ஷத்ரியவீரம் பேசுபவர்கள் சென்றகாலம் முழுக்க   அரசர்களின் பூசல்களில் செத்தழிந்த சாமானியர்களைக் கருத்தில் கொள்வதே இல்லை. இரு தரப்புக்கும் நம்பிக்கை, அடையாளம், கொள்கை, அதிகாரம், வரலாறு ஆகியவை முக்கியம். அவர்கள் சாமானியர்களை பொருட்படுத்துவதே இல்லை”

      “அரவிந்தரின் பார்வை இந்தியாவின் கடந்த கால நிலப்பிரபுத்துவ வரலாறு சார்ந்து உருவாக்கப்பட்ட பழமைவாத அணுகுமுறை, இந்துத்துவர்களுக்கு மட்டுமே உவப்பானது.”

      இதில் நிலப்பிரபுத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார். இது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது – ஆனால் பேராசான் பார்வை, பொதுவாகவே மார்க்ஸிய எழவியல் சார்ந்தது எனக் கருத்தில் கொள்கிறேன்.

      அரவிந்தரின் தத்துவ அணுகுமுறையானது மானுடப் பரிணாம வளர்ச்சியையும் அவனது சகல பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொண்டது;  அவரது ஆன்மிகம் ஏறத்தாழ அறிவியல்பூர்வமானது. ஆகவே, அவரது சட்டகத்தில் க்ஷத்ர தர்மத்தை மட்டும் எடுத்துக்கொண்டு விமர்சிக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால்தான் – நான் சாராம்சம் என எழுதும்போது அப்படிக் குறிப்பிட்டேன்.

      மேலே அவர் செய்வது, முழுவதுமான நிராகரிப்பு, அதுவும் அவர் ஸ்ரீஅரவிந்தரை மார்க்ஸியர்களுடன் பொருத்திப் பார்க்கிறார்வேறு. (அவருடைய நிராகரிப்பால் யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை – ஆனால் அது கறாரான காரணிகளைக் கொண்டதல்ல என நான்நினைக்கிறேன்)
      பிரச்சினையென்னவென்றால் – கணிசமான, சோம்பேறி இளைஞர் கூட்டம், அவரைச் சுற்றி உருவாகிக்கொண்டு வருகிறது…

      ஹ்ம்ம்

  3. RC Says:

    பதிவுக்கு நன்றி.
    ஸ்ரீ அரவிந்தரின் பார்வையாக ஜெ சொல்வது
    1) அரவிந்தரின் பார்வை இந்தியாவின் கடந்த கால நிலப்பிரபுத்துவ வரலாறு சார்ந்து உருவாக்கப்பட்ட பழமைவாத அணுகுமுறை, 1 a) இந்துத்துவர்களுக்கு மட்டுமே உவப்பானது.
    2) இந்தியா ஷத்ரிய வீரத்தால் சுதந்திரம் பெற்றிருக்கவேண்டும்
    3) அவருக்கு ஜனநாயகத்தில், பொதுமக்களின் திரள்விசையில் நம்பிக்கை இல்லை. அகிம்சை வழிமுறைகள் கோழைத்தனம் என்கிறார்.

    அஹிம்சை குறித்து ஸ்ரீ அரவிந்தர் ‘சாமான்ய’ மற்றும் ‘ஆன்மீக’ தளத்தில் பல நேரங்களில் விளக்கியுள்ளார். (நீங்கள் உதாரணங்கள் கொடுத்தது போல) எனவே ஜெவின் பதில் சத்தில்லாதது.

    அரவிந்தரின் அரசியலைப்பற்றி ஜெவின் மதிப்பீடு
    1) அரசியலில் அவர் காலாவதியான சென்ற யுகத்தைச் சேர்ந்தவர்.
    2) நவீன மனிதனால் முழுமையாகவே நிராகரிக்கப்படவேண்டியவர்.

    1910களிலேயே இறைஆணையினால் சுதந்திர போராட்டம் விட்டு பாண்டிச்சேரி வந்தவரை, பல (சுமார் 40) ஆண்டுகள் ஆன்ம சாதனையில் இருந்தவரை பற்றி எழுத சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
    போகிறபோக்கில் எழுதிவிட்டார்.என்ன செய்ய ..
    என் குறைந்த பட்ச புரிதலில் அவரின் மதிப்பீடுகள் பலவிதங்களில் குறைவுபட்டது, எனவே முழுக்க ஒதுக்கப்படவேண்டியவை.

    வாசகரின் கேள்வி நேரிடியானது+ எளிமையானதுதான். கேட்ட இடம் தவறு.
    சுயமாகவே தெரிந்து கொண்டிருக்கவும் கூடும் சிறிது முயற்சி எடுத்திருந்தால் :-(

    ஜெ, ‘வரலாறு’ தன் துறையில்லையென்று கேள்வியை விட்டிருக்கலாம்,செய்யவில்லை.
    பதிலாக அவர் இயல்பாக இருமைகள் கட்டமைத்து அவற்றின் ஊசலாடுவது போல் வலை பின்னி எழுதித் தள்ளி தேவையற்று தன் மதிப்பிழக்கிறார்.[ஜனநாயகம் x நிலப்பிரபுத்துவம், அஹிம்சை x வன்முறை, சத்ரியர்x சாமானியர்..] dichotomous thinking தானே இது?
    என் குறைந்த அனுபவத்தில் அதை விடுவது எளிதல்ல என்றும் உணர்கிறேன் :-(

    காந்தி ,ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துகள், ஒருவர் மேல் அடுத்தவர் கொண்ட அபிப்பிராயங்கள் +பேதங்கள் இரண்டும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    இவ்விஷயத்தில் +பொதுவாக ஜெ தரவுகள் கொண்டு தன் மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டார்/உருவாக்குபவர் என்றெண்ணவில்லை.
    பொதுப்புத்தி சார்ந்த கூர்ந்த அவதானிப்பும் + தன் வாசிப்பில்,உரையாடல்களில் அடைந்த மனப்பதிவுகளின்/நினைவுகளின் வழியே எழுதுகிறார்.பல விஷயங்களில் அவை பிழையாக இருப்பதையே காண்கிறேன்.
    ஒதுக்கிச்செல்லும் வாசகர்களும் உண்டு ஐயா :-)

    திரு.அரவிந்தன் நீலகண்டன் Stafford Cripps mission உதாரணத்தை வைத்து ஜெ வுக்கு மறுப்பெழுதினார். எனக்கு அதில் உள்ள சிறு குறைபாடு என்னவெனில் இவரும் புரட்சி x ஜனநாயகம் என்று அதே சட்டகம் அமைத்ததுதான். doctrine of passive resistance பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்.

    //On hearing this declaration on the radio, Sri Aurobindo had the insight that the offer sent by Churchill through Sir Stafford Cripps had come on the wave of a divine inspiration and that it gave India the substance of independence. At once he sent a telegram to Sir Stafford: “I have heard your broadcast. As one who has been a nationalist leader and worker for India’s independence, though now my activity is no longer in the political but in the spiritual field, I wish to express my appreciation of all you have done to bring about this offer. I welcome it as an opportunity given to India to determine for herself and organise in all liberty of choice her freedom and unity and take an effective place among the world’s free nations. I hop” that it will be accepted and the right use made of it putting aside all discords and divisions. I hope too that a friendly relation between Britain and India replacing past struggles will be a step towards a greater world-union in which as a free nation her spiritual force will contribute to build for mankind a better and happier life. In this light I offer my public adhesion in case it can be of any help in your work.” (31 March 1942)//
    http://savitri.in/blogs/light-of-supreme/sri-aurobindo-and-the-cripps-proposals-of-1942

    ACTIVE POLITICS இல் தான் இல்லை என்று சொன்னவரைப்பற்றி இப்படி எழுதலாமா? என்று கேட்டால், என் வாசிப்பில் குறை என்பதில் முடியம் ஏனெனில் பாராட்டியும் மூன்று வரிகள் ஜெ எழுதியுள்ளாரல்லவா :-(

    இணையத்தில் 1934 இல் காந்தி ஸ்ரீ அரவிந்தரை பாண்டிச்சேரியில் சந்திக்க கோரி எழுதிய தொடர் கடிதங்கள் +ஆசிரம பதில்கள் கிடைக்கின்றன. கூடவே சுபாஷ் போஸ் பற்றியும்.

    பொது வாசக புரிதலுக்கு உதவலாம் எனவே இணைப்புகள் கீழே:

    //His search for Truth is on fixed lines of his own and the Mother can say nothing to help him there—nor has he said that he wants any help—and the Asram would hardly please him since it is run on quite unascetic lines contrary to his ideal // (on 24th Jan 1934,sri Aurobindo’s reply to Govindbhai Patel on gandhi’s meeting request )

    https://auromere.wordpress.com/2012/09/14/mahatma-gandhis-aborted-1934-attempt-to-meet-sri-aurobindo/

    Also, in a letter dated 5th April, 1947 written by Sri Aurobindo to a disciple, Dilip Kumar Roy:
    //You will remember that both the Mother and I were very angry against Subhas for having brought the Japanese into India and reproached him with it as a treason and crime against the Motherland. For if they had got in, it would have been almost impossible to get them out… . . Subsequently she met one of the chief lieutenants of Subhas, a man from Hyderabad who had been his secretary and companion in the submarine by which he came from Germany to Japan, and he recounted his daily talks in the submarine and strongly defended his action. From what he said it was evident although we still regarded Subhas’s action as a reckless and dangerous folly, that the aspect of a crime against the country disappeared from it..//

    https://auromere.wordpress.com/2012/05/12/subhas-chandra-bose-on-sri-aurobindo/

    நன்றி.


    • Thanks for that long, considered response; much appreciate that.

      The thing is, our great forefathers – have been complex personalities. And they have also been evolving over a period of time, modifying and fine-honing their opinions/ideas – while we assume a static character of them.

      (we are also complex at our own level – and sometimes, I have realized to my utter horror and bewilderment that I have held two OPPOSING viewpoints at the SAME time, ayyo!

      One example would be my simultaenous respect & disgust for Jeyamohan to this day)

      But many of us contemporary know-it-alls devolve, and reduce everything into neat categories – and bask in the reflected glory of such classification.

      These categories are important, but they are neither necessary nor sufficient is my current understanding.

      And, when one assumes, willingly or bestowed, deserved or hallucinated – a certain Acharya/Asaan character – one has to bloody strive constantly to befit/deserve that level.

      Thanks again, young man. Much appreciated again.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s