தற்காலத் தமிழெழுத்தாளர்கள், சிந்தனைச் சிற்பிகள் சாகாவரம் பெற்றவர்களா?

October 29, 2021

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி.

எப்படியும் இந்த இலக்கியம் கலை போன்றவை பொதுவாகவே ஓவர்-ரேட்டட். ப்ளடி மிகைமதிப்பீடு செய்யப்பட்ட எழவுகள்.

….என்னுடைய ஒரே  அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவென்றால் – முந்தைய காலங்களைப் போலல்லாமல், இவர்களுடைய எழுத்துகள் தேடுபவர்களுக்கு, அவை இணையம் போன்ற ஒன்றின் வழியாக அல்லது மின்னியல்-உயிரியல் சாத்தியக் கூறுகளின் வழியாகக் கிடைக்கலாம்.

அதாவது அப்படித் தேடுபவர்களுக்கு, அவற்றில் ஏதோ பலன் இருக்கும் என நம்புபவர்களுக்கு. நம் தற்கால இலக்கிய ஆண்டைகளின் சமூகக் காரணிகளையும்,  தவளைக் கிணற்றுச் சிதிலங்களையும் குறித்த ஆர்வம் கொண்ட எதிர்கால சொகுசுஜீவிகளுக்கு, அல்லது வேலைவெட்டியற்றவர்களுக்கு, அல்லது குறுகுறுப்பு மிக்கவர்களுக்கு…

Kannan Says:
28/10/2021 at 22:57 e

ஐயா, நீர் புலவர்.

சினிமா வஜனம் எழுதிக்கொண்டு மீதி நேரத்தில் அலக்கியம் பண்ணி ஊரை ஏமாற்றாமல் அதற்க்கான உழைப்பை செலுத்தி உள்ளீர்.

நூறு வருடம் கழித்து(ஹி ஹி..எனக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு) இந்தப்பதிவை படிப்பவர்களுக்கு அந்தக்கால அரிஸ்டாட்டில் எப்படி அடிச்சு விட்டுருக்கார்னு புரியும்.

:)

ஹ்ம்ம்… என்னைவிடுங்கள் – என் சாதனை(!) வேதனைகளின் அளவும் நான் என்ன செய்து கிழித்திருக்கிறேன் அல்லது கிழிக்கவில்லை என்பவையும் எனக்குத் தெரியும். தமிழ் அலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு வாசகன் மட்டுமே.

மற்றபடி அடுத்த நூற்றாண்டு வரை ஜெயமோகன் தாக்குப் பிடிப்பாரா என்பதெல்லாம் எனக்குச் சந்தேகமே! அவருடைய சில ஆக்கங்கள் தாக்குப் பிடித்து தமிழிலக்கிய வரலாறு (என 2100களில் தனியாக ஒரு சிந்தனைச் சரடு என இன்னமும் இருந்தால்) விவரணைகளில் இருந்தால் அது சந்தோஷமான விஷயம்தான். உங்களில் சிலர் நினைப்பதுபோலல்லாமல், எனக்கொன்றும் அவரிடத்தில் பொறாமையில்லை, வெறும் வருத்தம்தான். ஆகவே என்னை லூஸ்லவுடவும்.

அலறும் நினைவுகள்

வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் எழுதித் தள்ளினார்கள்…

நம்பவே முடியாத அளவு டன் டன்னாக எழுதிக் குவித்தார்கள். (இப்போதைய முப்பெரும்மூவர் அளவுக்கு இல்லையென்றாலும்… ஒருகால் அக்காலங்களில் காகிதத் தட்டுப்பாடு இருந்ததோ?)

வடுவூராரின் திகம்பர சாமியார் நினைவுகள் திக்குமுக்காட வைக்கின்றன. அவருடைய மிஸ்டர் பூச்சாண்டி எம்ஏ++ ஒரு உச்சம்.

இன்னமும் பல இப்படியே வெண்முரசு போல எழுதினார்…

இவர்களைப் போன்றவர்கள் ஒருகாலத்தில். மிகமிகப் பிரபலமாக இருந்தார்கள்.

என் சின்னதாத்தா, ஆரணி குப்புசாமி முதலியார் என்றால் உருகிவிடுவார். அவர் போய்ச்சேரும் முன் எங்கள் வீட்டில் வசித்த 2-3 மாதங்களில் அவர் பரிந்துரை கொடுத்து நான் சிறுவயதில் மண்டையில் அடித்துக்கொண்டு படித்த  திகில்மிகுந்த துப்பறியும் கொடும் கிரைம் நாவல்களான தபால் கொள்ளைக்காரர்கள், இரத்தினபுரிரகசியம், மதன கல்யாணி, கடற்கொள்ளைக்காரன், மின்சார மாயவன், ஆயிஷா, இந்திரஜித்தன் போன்றவை அடக்கம். ஒர்ரே திருடும் கொள்ளையும் துப்பறிதலும் இலக்கணசுத்தக் கொச்சை வசனங்களும்…

ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு அவர்களும் பெரும்புகழ் வாய்ந்தவராக இருந்தார். பலப்பல டுப்பறியும் புதினங்களை எழுதினார்.

ரங்கராஜு அவர்கள், மிகச் சுவையான ‘சவுக்கடி சந்திரகாந்தா’ என்கிற படுபீதியளிக்கும் அடாவடி பெண்ஜேம்ஸ்பாண்ட் பெண்ணியக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஐய்யோ! நினைத்தாலே வலிக்கும்.

ஆகுமு அவர்களின்  புகழ்பெற்ற ஆனந்தஸிங் (இவர் ஷெர்லக் ஹோம்ஸ் வகை) படுபுத்திசாலி துப்பறியும் விற்பன்னர் பற்றி, இக்காலங்களில் நமக்கு ஒரு எழவும் தெரியாது – தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது யார் இவர்களைப் பொருட்படுத்துகிறார்கள்? அவர்களின்-அவற்றின் அவசியம்தானென்ன?

பழையன கழிதலும் புதியன கழிதலும்தான் நியதி, குறிப்பாக, பின்னவை – அவை நடக்கும் காலங்களிலேயே கழிசடைகளாக இருந்தால் முதலுக்கே மோசம்.

அண்மைய காலங்களில் எழுதித் தள்ளிய தமிழ்வாணன்?

எவர் நினைவு வைத்திருக்கிறார்கள்? இக்கால இளவட்டங்களையே விடுங்கள்? யாராவது என்வயதினருக்கு இப்போதும் எஸ்எஸ்66, பேயாழ்வார், சங்கர்லால் துப்பறிகிறார், இன்ஸ்பெக்டர் வஹாப் இத்தியாதி போன்றவைகளில் படுஆர்வம் இருக்கிறதா? இப்பெயர்களைக் கேட்டவுடன் ஆண்குறி எழும்புகிறதா?  (சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் என் தலைமுறை சாகும்வரை ஓரளவு சமூகநினைவில் இருக்கலாம், அவ்வளவுதான்)

ஏறத்தாழ சமகாலத்தில், ஓரளவு பொதுவான விஷயங்களைப் பற்றியும் சமூக எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்பவும் எழுதி தங்கள் எழுத்துகளை சந்தைப் படுத்தியவர்களான முப்பெரும்மூவரான இவர்களுக்கு ( ஆகுமு , ஜெரர, வதுஐ) இக்கால வழித்தோன்றல்களாக – தற்போதைய அலக்கியசந்தையின் முப்பெரும் மூவர்கள் ஜெயமோகன், எஸ்ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா இத்தியாதிகளை அறிவோம்.

சரித்திர சக்கரம் சுழன்றது, சுழல்கிறது – சுழலும்.

ஆகவே, இவர்கள் அட்ச்சிவுடும் அழகில், காலத்தை மீறி நிற்கும் படைப்பூக்கச் செறிவுகளில் – எதிர்கால வாசகர்களுக்கும் இவர்கள் ‘பெயர் கேட்டால் குறி அசைந்தாடும்’ வாய்ப்பில்லை. மன்னிக்கவும்.

குறி சொல்வதாக இல்லாவிட்டாலும், குறிப்பாகச் சொல்வதானால், ஒரு தற்குறியின் குறிப்புகளாக மேற்கண்டவை இல்லை என்பதை அறிவீர்!

ஆமென்.

-0-0-0-0-

இலக்கியம் அலக்கியம் எல்லாம் விசித்திர ஜந்துக்கள் – நம் தமிழ் நாட்டில், இவை பொதுவாகவே பூதகணங்கள்.. இவற்றைக் குறித்து நாமே மாளா தற்பெருமையுடன் சொல்லிக்கொண்டு மாய்ந்துபோகலாம். பிரதாபப் பீலா விடலாம், நெகிழ்ந்து உருகிச் சொட்டலாம், பேசலாம். பழைய காலி பெருங்காயடப்பியாக மினுக்கிக் கொள்ளலாம். இலக்கியத் திறனாய்வு மண்ணாங்கட்டி தெருப்புழுதி எனச் சொக்கலாம். அழுக்குத் துணிமூட்டை சுமக்கும் கவிதைகளை ஒட்டிச் சென்று இலக்கிய மூளைச்சலவை செய்யலாம்.

ஆனால் எதிர்கால அலக்கிய வாசக (அப்படி ஒரு தண்ட லூஸுக்கும்பல் இன்னமும் இருந்தால்) எதிர்பார்ப்புகளும் சமூகமுறைமைகளும் மாறலாம். புதுவகை துய்ப்புகள் வரலாம். பல்கிப் பெருகும் ஞானங்களில், தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளில், எழுத்திலக்கியம் எனும் ஒரு பிரிவே இல்லாமல், அது வெறும் அருங்காட்சிகக் குறுகுறுப்பு விஷயமாக மாறலாம்.

மொழி வரிவடிவம்,உச்சரிப்பு, பேச்சு என்பவைகளுக்கு அப்பாற்பட்டு – புதுவிதமான நேரடி ஸிம்பல் ப்ராஸெஸ்ஸிங் விஷயங்கள் மேலெழும்பி வரலாம்.

மேலும்/மாறாக ஒரு சிறு மின்னியல்துகளில் ஒரு திரைப்பட அனுபவத்தை, அல்லது பிறவகை அனுபவங்களையோகூட உட்செலுத்தி அதனை நம் மூளையுடன் பொருத்தி ஒரு சில மைக்ரொவினாடிகளில் பொன்னியின்செல்வன் படித்த அனுபவங்களை நம் மூளையில் ஏற்றும் சாத்தியக் கூறுகள் வரலாம். அல்லது வெண்முரசு அனுபவத்தையும். (பயப்படாதீர்கள்! எதையும் நம்மால் சாய்ஸில் விடவும் முடியும்.)

அதேபோல ஒரு மாத்திரை வடிவில் நாம் பிற அனுபவங்களை காத்திரமாக நம் மூளையில் ஸிமுலேஷன் செய்துகொள்ள முடியலாம். (‘எவ்ளோ பெரிய மாத்ரே!’)

ஆனால் அப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் வந்தால் அச்சமயம் நம்மிடம் தமிழ் எனவொரு உபயோககரமான ஒத்துவரும் மானுடதொடர்புக் கருவி இருக்கவேண்டும்.

அப்படி அது தொடர்ந்து செழுமை செய்யப்படாமல் இப்போது இருக்கும் நிலைமையில் இருந்தால், அதற்குப் பதிலாக அனுபவங்களைச் செறிவாக மூளைக்கு அளிக்கும் எந்தவொரு கருவியும் முன்செலுத்தப்படும். உதவாக்கரைத் தமிழ் இறக்கும்.

ஏனெனில் ‘மொழி’ என்பது ஒரு கருவிதான். அதற்குப் பின்னால் சிந்தனை எனவொன்று இருக்கிறது. அந்தச் சிந்தனையை நேரடியாக மானுடனுக்குமானுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமானால் வேறென்னவேண்டும், சொல்லுங்கள்?

மொழி என்பது ஒரு முட்டுக்கலப்பை. அவ்வளவுதான்.

-0-0-0-0-

சரி, வேகமய்யா வேகம். எப்போது இப்பூவலகத்தை விட்டு பிற உலகங்களில் சஞ்சரிக்கப் போகிறோம்?

சூரியன் நம்மைக் கபளீகரம் செய்ய சில பில்லியன் ஆண்டுகளே இருக்கின்றன, கவனிக்கவும்.

(அல்லது)

எலக்கியம், அதுவும் தமிளிளிப்பு எலக்கியம்… ற்றொம்ப முக்கியண்டே! ப்ளடி.

-0-0-0-0-


“என்னதூ? தேநீர் போடாமல், என்ன  ஆவேசமாகத் தட்டச்சி வெட்டிமுறித்துக் கொண்டிருக்கிறேனா??”

” ~ * ^ % # @ ! &”

“மன்னிக்கவும், தேனே! உன் பித்தம் என் சித்தம்.”

-0-0-0-0-

7 Responses to “தற்காலத் தமிழெழுத்தாளர்கள், சிந்தனைச் சிற்பிகள் சாகாவரம் பெற்றவர்களா?”

  1. Muthukumar Says:

    Can Our “ஆசான்கள்” and “மடையர்கள்” realize the quantum of Advances in Science and Technology? Whether they can see the tip of iceberg that Science and technology is on fast forward. Can “Tamil students” catch up with advances in Science and Technology with their “ இழவுக்கியம்”? What are they writing to evolve Fast Enough to cope with rapid changes in science and technology? Just they are doing reverse: “Zero degree” to “worst degree”. Are they bridging the “Gap” between current state of Tamil students to the present-day technology by their writing? On contrary they give fantasy to escape from reality so that Tamils will not be Tamils but always “Dravidians”.


    • //“Zero degree” to “worst degree”.

      🤣

      My heart broke when a certain tamil fillum railed against cellphone towers spreading scare about ‘radiation’ – and when I learnt that the stupid storyline/dialogue for the nonsense was written by our Jeyamohan, my broken heart sank further.

      Actually, most of our lit folks, save arunn.in are hellbent on dravidianism and its fosterchild antisciencenness, oh what to do.

  2. Muthukumar Says:

    Sir

    How to make a “Zen” cup of tea?
    It appears your tea will as tastier as your “othisaivu”.


    • Zen or not, how dare you say that the blog is less tasty compared to my Chai?

      For the record: I am a good cook, can cook in scale, only veg stuff though.

      Dunno whether you are serious, but you are welcome for a good cuppa and a simple veg meal – subject to chinese covid and other applicable factors. There shall be NO discussion on the current status of tamil literature, whatever the fuck it is.


  3. /ஆகுமு , ஜெரர, வதுஐ/

    வ்யாக்யானமருள்மின்


    • ஆரணி குப்புசாமி முதலியார்
      ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு
      வடுவூர் துரைசாமி ஐயங்கார்

      /* ஏறத்தாழ சமகாலத்தில், ஓரளவு பொதுவான விஷயங்களைப் பற்றியும் சமூக எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்பவும் எழுதி தங்கள் எழுத்துகளை சந்தைப் படுத்தியவர்களான முப்பெரும்மூவரான இவர்களுக்கு */

  4. Vijay Says:

    //ஆனால் அப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் வந்தால் அச்சமயம் நம்மிடம் தமிழ் எனவொரு உபயோககரமான ஒத்துவரும் மானுடதொடர்புக் கருவி இருக்கவேண்டும்.

    அப்படி அது தொடர்ந்து செழுமை செய்யப்படாமல் இப்போது இருக்கும் நிலைமையில் இருந்தால், அதற்குப் பதிலாக அனுபவங்களைச் செறிவாக மூளைக்கு அளிக்கும் எந்தவொரு கருவியும் முன்செலுத்தப்படும். உதவாக்கரைத் தமிழ் இறக்கும்.//

    காத்திரமான எதிர்வு கூறல்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s