ஐயய்யோ! அடிக்கறாங்க, கடிக்கறாய்ங்க…

October 31, 2021

ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென்.

ஏண்டா இத்த ப்ளடி எளுதினேன்டு வர்த்தமாய்டிச்சிபா.

இனிமேகாட்டீ நம்ப ஆனானப்பட்ட பேராசான்மேல வெமர்சனம் இப்டீ வெப்பேனா, ஸொல்லூ?

கீள கீறனுவொ யெளம் நண்பனுங்கதான், ஆனாக்க யின்னா நக்லு ஸெய்றாங்கொ பார்ரூ? பாவீங்கோ!

ஆர்ஸி உவாச:

“ப்ருத்விராஜ் பற்றிய எதிர்மறை பிம்பம் உருவாக்க ஜெமோவிற்கு பிழை நோக்கமும் (நுண்ணிய உள்நோக்கம்/ஆதாயமும்) உண்டு என்று சொல்ல சான்று எங்கே என்று ஒரு வாசகன் கேட்க உரிமை உண்டல்லவா? ஆனால் இவ்வகை எழுத்தை தொடர்ந்து ஜெமோ எழுதும்போது, ஜெமோவின் மற்ற குணக்கேடுகளை(அநீ பார்வையில்) அறிந்ததால் வரும் யூகங்களால் மட்டுமே ஜெமோவின் நோக்கம் பிழையென்கிறேன் என்னும் பட்சத்தில் FACTS மட்டுமே சொல்லி அமர்வதே முறை,தாக்குதல் அல்ல.

டகால்டி உவ்வாச, அடச்ச:

“As RC says above, I too don’t feel there is some sinister bad-faith actuating JM.

Monkey balancing, platforming superficial hearsay (tour guide?) but also having the temerity to pose as someone rigorously interrogating history – is what he seems certainly guilty of.

-0-0-0-0-0-

0. நான் ரெகுலராக ஜெயமோகன் தளத்துக்குச் செல்வதை நிப்பாட்டி, பலகாலம் ஆகிவிட்டது – உங்களை அதிருப்தி செய்திருக்கும் இப்பதிவுக்கு, அநீ அவர்களின் ஃபேஸ்புக் பதிவினை நான் படித்ததுதான் காரணம். ஆகவே அவர் பெயரைக் குறிப்பிட்டேன். நான் அநீ அவர்களின் கருத்துடன் வெறுமனே ஒத்திசையவில்லை, அவருடைய கருத்துகளால் பாதிக்கப் பட்டு, கவைக்குதவாத ஆமாம்ராமசாமியாக எழுதவில்லை – ஆனால் அவர், உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறார். ஆகவே இது முக்கியம் எனப் பட்டது. அவருடைய நியாயமான விமர்சனத்துக்கு என்னாலான வலு சேர்க்கவேண்டும் எனத் தோன்றியது.

எப்படியும், அனைத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. மேஜர் சுந்தரராஜன் மேலும் சொல்லக்கூடுவது போல – everything has history.

ஆனால் என் கருத்துகளுக்கு (அவை வெறும் பட்டம்பறக்கவிடல் அல்ல) நான் முழுப்பொறுப்பேற்கிறேன்.

அதே சமயம் – எனக்கு வயதாகி விட்டது, ஏறத்தாழ உங்கள் ஜெயமோகன் வயதேதான். இதனால் பலப்பல அனுபவங்கள். ஆகவே மனிதர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள விரிசல்கள் சட்டென்று புலப்பட்டு விடுகின்றன. இது பெரும் பிரச்சினை.

“FACTS மட்டுமே சொல்லி அமர்வதே முறை,தாக்குதல் அல்ல.

ஐயன்மீர் – எல்லா ‘உண்மை’களையும் பகிரங்கமாகச் சொல்லிவிடுவது நியாயம் அல்ல. ஏனெனில் செய்த தவறுகளுக்காக நாற்சந்தியில் தூக்கில் போடும்  அல்லது கேமரா முன்னால் கழுத்தை அறுக்கும் ஜிஹாதி வெறியன் அல்ல நான். (இதுபற்றி #2 பகுதியில் மேலும்…) அதே சமயம் எதிர்த்தரப்பு – தம்பக்க வாதங்களை, நியாயங்களை வைக்க முகாந்திரமும் வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என என் செயல்பாடு இருக்கமுடியாது.

நான் செய்தது தாக்குதலும் அல்ல – அது வெறும் சுயபாதுகாப்பு மட்டுமே. நான் தரவுகளுடன் ஒப்புக்கொண்டிருக்கும் சிலபல சிந்தாந்தங்கள்/உண்மைகள் தொடர்பான, அவை பற்றிய இதயமற்ற திரித்தல்கள் குறித்த எதிர்ப்பே.

அளவுக்கு அதிமாகப் புளுகி, முதலில் தாக்கியது ஜெயமோகன் – இதனை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.

“சான்று எங்கே என்று ஒரு வாசகன் கேட்க உரிமை உண்டல்லவா?

டாப்கன் வாஸ்கன் தரவு கேக்க ஆல்வேஸ் உரிமைகீது. அத்தொட்டுதானபா நாங்கூட அவ்ர கேக்கறேன்? நீங்க வொட்னடியா போர்க்காலரீதீல கோச்சிக்கினா நானு யின்னாதாம்பா ஸெய்றது, ஸொல்லூ?

நீங்க அவ்ருகிட்ட தர்வு கேக்கமாட்டேன்றிங்க, அவ்ரு எத்தச் சொன்னாலும் லூஸ்லவுடு, யிப்ப வொனக்கு யின்னா காண்டுண்றீங்க!

ஆனாக்க நானு ப்ளடி தர்வு கொட்க்கணுமா?

கொமட்ல குத்தட்டா?

-0-0-0-0-0-0-

சரி, ஆதாயங்களைப் பற்றிக் கொஞ்சம் வாக்கியங்கள்:

1. நேரடியாக வெளியே தெரியவரும் ஆதாயம் என்பது – அட்ஜஸ்ட் செய்து நிரவிவிடல் – மங்கி பேலன்ஸிங்  – நானும் நடு நிலைமைக்காரந்தாண்டே பிம்ப வளர்ப்பு – நான் தேசியவாதம், குழுவாதம், அரசியல் போன்றவைகளுக்கு அப்பாற்பட்டவன் எனப் பிரகடனம் செய்தல் – நான் மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ் எனக்காட்டிக் கொள்ளல் – வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ளல் – வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளல் – தாண்டிவந்த பாலங்களை, எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு எரிக்காமலிருத்தல் – சுயமுன்னேற்ற முன்னெடுப்புகள் — இன்னபிற, இன்னபிற. இவற்றில் எனக்குப் பெரிய பிரச்சினையில்லை – அதாவது, அவர் தொடர் புளுகுணி மாங்கொட்டையாக அழிச்சாட்டியம் செய்யாமலிருக்கும் வரை.

மேலும் சுயஆதாயம் இல்லாமல் செயல்படும் மனிதன் (நான் உட்பட) யாருமில்லை, இருந்திருக்கவுமில்லை. ஆனால் அதற்காகப் பிறரை அயோக்கியமாகக் கொலைசெய்து அவர் பிணஎரிப்பில் குளிர்காய்வேன் என்பது கேள்வி கேட்கப் படவேண்டியதே!

System beating, or Gaming the system is his specialty. And I do have some bit of professional jealousy here, must admit.

இப்போது பாருங்கள்… ஐயோ! நுணலும் தன் வாயால் மறுபடியும் கெடும். என்ன செய்வது! நவஸூஃபி கடலூர்சீனுவுத்தீன் புல்புல்லாஹ் குஸ்தி  அவர்களின் ‘ஜலபுலஜங்ஸ்’  இனியஜெயம் சொதப்பல்ஸ் கட்டுரையை இப்போது வெளியிட்டுவிட்டாரே!

இதனையும் எதிர்கொள்ளவேண்டுமோ? மிடீல!

2. மறைமுகமாகப் பல ஆதாயங்கள் இருக்கின்றன – இவற்றில் சில நேரடி ஆதாயங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. அவர் மிகவும் வெட்கங்கெட்ட, வருத்தம் கொடுக்கும் சிலபல விஷயங்களில், அடிப்படை அறமற்ற செயல்களில் (எனக்குத் தெரிந்தே) முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்திருக்கிறார் – அப்படிப்பட்ட செயல்பாடுகளால் ஏற்பட்டவை அவை. வெறும் ஒருசமய ஒற்றைப்படைப் பிறழ்வுகளல்ல அவை. நான் இவற்றைப் பற்றி எழுதியதில்லை.

ஆனால் – இவற்றையெல்லாம் பகிரங்கமாக வெளியில் சொல்லி-பேசி அவரை அசிங்கப் படுத்தவேண்டாம் என நினைக்கிறேன், கொஞ்சம் குளிர்ந்து யோசித்தால், அதனைச் செய்யவே மாட்டேன்.  அது தேவையுமில்லை.

இவற்றில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பற்றிப் பிறரிடம் (அவர்கள் என் நண்பர்கள் – இதுவரை அவர்கள் வெளியே அவற்றைச் சொன்னதாகத் தெரியாது; மேலும் நானும் தேவைமெனக்கெட்டு அவற்றைப் பரப்புரை செய்யவில்லை – அதாவது அவற்றைச் சொல்லும் சமயத்தில் அதற்கான முகாந்திரம் இருந்தது) தனிப்பட்ட முறையில் கூறிச் சிரித்திருக்கிறேன். இனிமேல் அதையும் செய்யமாட்டேன். அவரவருக்கு அவரவர் வாழ்க்கை, அவரவர் புதைகுழி.

ஏனெனில் பெரும்பேராசானும் நம்மைப்போலவே சாதாரண ஆசாபாசமுள்ள நல்ல+வெறுக்கத்தக்க பண்புகள் உள்ள ஆசாமிதான். ஒரு வினோதக் கலவைதான். அறம் முறம் ஆன்மிகம் ஆஃப்யுகோ என்று முழநீளம் பேசலாம். ஆனால் அவரவர் மனச்சாட்சிக்கு அவரவர் மனதாறச் சொல்லிக்கொள்ளும் சால்ஜாப்புகள் பற்றி அவர்களே கூட அறியமாட்டார்கள்.

மேலும் – ஜெயமோகனின் தொடர்வீட்சியில் இருந்து அவருக்கும் மீட்பு என்பதுண்டு என்பது என் கருத்து.

ஏனெனில் அவர் கஷ்டஜீவனத்தில் இருக்கும் (சில கழிசடைகள் உட்பட) சிலபலருக்குப் பிரதியுதவி பாராமல் (என நினைக்கிறேன்) உதவி செய்திருக்கிறார். அவருக்குத் தமிழ் எழுத்து வல்லமை உண்டு – இக்காலங்களில் அவர் சொற்றொடர்கள் நைந்துபோயிருந்தாலும் அறவுணர்ச்சி ஏகத்துக்கும் ஓங்கி நெகிழ்வாலஜி பக்கம் அவர் ஒதுங்கியிருந்தாலும் – அவருக்கு. நல்ல நகைச்சுவை உணர்ச்சியும் உண்டு. தொடர்ந்து எழுதும் மனவலியுண்டு. பலசமயங்களில் புத்தகங்கள் /  கருதுகோட்கள் குறித்து முழுவதும் படிக்காமலேயே, அவற்றின் அடிப்படைப் பின்புலங்களைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் அவற்றைக் குறித்து மேதாவித்தனமாக எழுதிவிடுகிறார் எனப் பட்டாலும், ஏதோ விதம்விதமாகப் படிக்க முயற்சிக்கிறேன் எனச் சொல்லவருகிறார் என்பதே, நம் தமிழுலகில் பெரியவிஷயம்.

ஆலையில்லா ஊரின் இலுப்பைப்பூ சர்க்கரைக்கு அவரொரு மகத்தான எடுத்துக்காட்டு. இதில் எனக்குச் சந்தேகமேயில்லை. அவரிடம் absolute merit இல்லாவிட்டாலும், நம் தமிழச் சூழலில் அவரிடம் relative merit சர்வ நிச்சயமாக இருக்கிறது.

+அலுக்காமல் ஒரே விஷயத்தையே ஒன்பதுமுறை சொல்லி நிறுவும் பராக்கிரமம் உண்டு, போக்கற்ற + கூறுகெட்ட இளைஞர்களுக்கு வழியைப் பொறுமையாகக் காட்டும் கரிசனமும் உண்டு. (ஒருகாலத்தில் என்னிடம், ஒரு இளைஞனைப் பரிந்துரை செய்து, ஆவன செய்ய அனுப்பியிருக்கிறார் என நினைவு; ப்ரமையாகவும் இருக்கலாம்!)

அதாவது, எனக்கும் மீட்சி வசப்படும்.

எனக்கு அவருடன் பூர்வஜென்மாந்திரப் பகை, வாய்க்காத் தகராறு என ஒன்றும் கிடையாது. ஆட்ரி ட்ருஷ்கி, ரொமிளா தாபர், ரிச்சர்ட் ஈடன், அமர்த்யாஷென், இர்ஃபன் ஹபீப், ஸூரஜ்பான் இத்தியாதிகள் போன்ற அரைகுறைகளை ஏன் (அயோக்கியத்தனம்), எதற்கு (பொய்மைகள்) எதிர்க்கிறேனோ அதேபோன்றதுதான் இது.

நான் இஸ்லாமிய ஜிஹாதி அல்லன். அவரை குஃபர் எனச் சொல்லி அவரைக் கீழ்மைப் படுத்தவில்லை.

…பொதுவாகவே நான், பிறர் சொல்வதில் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்ன, ஒதுக்கித் தள்ளக்கூடியவை என்ன எனப் பார்க்க எனக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் – இதற்குத் திட்டமாட்டேன் எனப் பொருளல்ல, மன்னிக்கவும்.

இன்றுவரை ரொமிளா தாபர்++களைப் படிக்கிறேன். ஆனால் அவரவர்க்குரிய இடஓதுக்கீட்டையும் மீறி மிகவும் அதிகமாகக் குப்பைகளை மட்டுமே ஒருவர் எழுதும்போது எனக்குக் கஷ்டமாகிவிடுகிறது. அதே சமயம் நான் ஒரு பெரிய்ய விமர்சன மயிராண்டி அல்லன் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். நான் என்ன பெரிய்ய… நானும் வெறும் சாதாசாதா சாதாரணன் மட்டுமே. (ஆனாலும் கண்டகுப்பைகளைக் படித்து நம் இளைஞர்கள் நாசமாகப் போவதில் எனக்கு வருத்தமே!)

எனக்கு அவர்பேரில் மனக்கிலேசங்களும் ஒவ்வாமைகளும் – தரவுகள்பூர்வமாகவேகூட இருக்கலாம் – ஆனால் அவர் வாசகர்கள் அவரை ஒட்டுமொத்தமாகக் கொண்டாடுகிறார்கள்.

ரீங்காரமிடும் ஈயான எனக்குச் சம்மட்டிக் கடையில் என்ன வேலை? சாகபட்சிணிக்குக் கசாப்புக் கடையில் என்ன வேலை, சொல்லுங்கள்?

உண்மைதான் ஆர்ஸி + டகால்டி.

பின்குறிப்பு: நம்மூரில் இருக்கும் ப்ரபலஸ்தர்களின் ஆராதனை (சினிமாக் கோமாளிகள் ஆகட்டும், அலக்கியபேதிகள் ஆகட்டும்…) அவர்களுடைய விசிறி அமைப்புகள், குடுமிப்பிடிச் சண்டைகள், எழுத்தாளர்களின் எக்காளங்கள், அலப்பரைகளின் அசட்டுத் தனங்கள் போன்ற ஈனத்தனங்கள், கேவலங்கள் வேறெங்காவது இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

இந்த நிலைமைக்கு, புரையோடிச் சீழ் ஒழுகும் நம் திராவிடம்தான் காரணம் என ஏதோவொரு காட்டுரையில் எப்போதோ நிறுவியதாக நினைவு.

10 Responses to “ஐயய்யோ! அடிக்கறாங்க, கடிக்கறாய்ங்க…”

  1. Anonymouse Says:

    Meow😽 ;)


    • ஒரு அனாமதேயச் சுண்டெலிராஜனாக இருந்துகொண்டு பூனைபோலக் கத்துகிறீரே! :-)

      யார் அந்த சுண்டெலிகள், பூனைகள் என நீங்கள் ஒரு ஜாபிதா கொடுத்தால் உடனடியாக அவர்களுடன் ஒரு கூட்டணி வைக்கலாமா என யோசிக்கலாம்.

  2. Kannan Says:

    For me, no footnotes and cross references he is cheating, period.

    I remember in one occasion Jeffrey Archer(or vice versa!) provided a short explanation about obtaining a passport in the name of dead person and how his method is different from the one Frederic Forsyth used in one of his books.

    Since then these loopholes may have been plugged I guess, but that is not the point. These fiction writers go to such an extent to make a minor detail more credible.

    Our serious writer onions once got in the groove and amazed some
    disciples, they are all set for life.

  3. RC Says:

    அன்பு ஐயா,
    ஜெமோ க்கு கடிதம் எழுதலாம் என்றுதான் இருந்தேன், ஆனால் அதற்குள் ‘இனிய ஜெயம்’ கட்டுரை வந்து அஜ்மெர் தொடர்பான கடிதங்களுக்கு end-card வைத்த மாதிரி பட்டதால் எழுதவில்லை. அந்தக் கட்டுரை கொடுமையானது, மறுப்பதற்கேதுமில்லை.
    அதுபோக உங்களைப்போன்றோரின் எதிர்வினைகள் தெரியாமல் இருப்பார் என்றும் நினைக்கவில்லை.
    எதற்கு+யாருக்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்பது அவரவர் முடிவு. அது கள்ளமௌனமா இல்லை உதாசீனமா என்பது படிப்பவர் தன் தகுதிற்கேற்ப விளங்கிக்கொள்ளவேண்டியது தானே.
    விவாத சூழல் இப்படித்தான் இருக்கிறது சார்.


    • ஐயோ! இப்படி என் பலூனிலிருந்து காற்றை இறக்கிவிட்டுவிட்டீர்களே என்பதை நினைத்திட்டால்… :-)

      உங்களை நான் புரிந்துகொள்கிறேன், ஆதூரமாக நாலுவார்த்தை சொல்லவேண்டும் போல இருக்கிறது. ஆனால் ற்றொம்ப நெகிழ்ச்சியாகிவிடும். என்ன செய்ய.

      எனக்கும் சிலசமயம் தோன்றியிருக்கிறது – காட்டமாகவும் சுடுசொற்களை உபயோகித்தும் நான் எழுதாமல் இருந்தால், சிறிய அளவிலாவது ஒரு ஆரோக்கியமான விவாதச்சூழல் உருவாகிவருமா என்றெல்லாம். உள்ளீடு உருவகத்தால் தடம்மாறிப் போகிறதே என்று.

      ஆனால் மயிலேமயிலே ற்றொம்பப் பொய்சொல்லாதே என்று மயிற்பீலியால் அதனை வருடிவிட்டுக்கொண்டே சொன்னால் அது அப்படியிருக்குமா? கர்ணகடூரமாகத் தான் அகவும். அதுவும் தொடர்ந்து. ஊக்கபோனஸாகப் பிறாண்டும், கொத்தும்.

      இதற்கு. ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கிறேன்.
      ஜெயமோகன் ஒருசமயம் ஒரு அப்பட்டமான பொய்யைச் சபையில் பகிரங்கமாகச் சொன்னபோது (அந்தப் பொய் அவரால் முன்னமேயும், அவருடைய பிறபல பொய்/திரித்தல்களின் அங்கமாகச் சொல்லப்பட்டிருந்தது) அதனை மிருதுவாகவே எதிர்கொண்டேன், ஏனெனில் அது அவர் சபையும், பொதுவாகவே அது என் சுபாவமும் கூட. நான் வாக்குவாதம் செய்யவில்லை, கொட்டையை நசுக்க முயற்சிக்கவில்லை, அவரும் மௌனம் சாதித்தார்.  அப்போதைக்கு அந்தவிஷயம் முடிந்தது – இதே விஷயம் குறித்து ஓரிருமுறை இதே தளத்தில் எழுதியிருக்கிறேன் – அந்த விஷயம் நடந்ததற்குச் சாட்சியாகப் பிற சிலர் சம்பவத்தை நினைவுகூர்ந்தனர்வேறு. (எல்லாம் இங்கு தேடினால் கிடைக்கும்)

      அவர் திருத்திக் கொண்டிருப்பார் என நினைத்தேன். மனிதர்கள், நாம் உட்பட, அவ்வப்போது தவறு செய்பவர்கள்தாம் – ஆனால் சுட்டிக்காட்டப்பட்டால் பதைபதைத்து வேர்க்கவிறுவிறுக்க நம்மைச் சரி செய்துகொள்வோம் இல்லையா?

      ஏனெனில் நம்மிடம் அறவுணர்ச்சி என்பது எங்கோ பொதிந்திருக்கிறது.

      …மாறாக – குறைந்தபட்சம் இன்னொரு முறையாவது (அடுத்த இரண்டு வருடங்களில்) இன்னொரு பொது அறிமுகம் ஒருவருக்கு அதே பொய்யைச் சொல்லியிருக்கிறார். (பிரச்சினை என்னவென்றால், கடந்த  சுமார் முப்பது வருடங்களாக, ஏறத்தாழ அதே 200-300 பேர்தான் அல்லது அதே எண்ணிக்கையில்தான் அலக்கிய லூஸுக் கூவான்கள். இந்த அழகில் தாஸ்தெயெவ்ஸ்கி லத்தீயிலக்கியம் முரகாமி மயிர்பிடுங்கி என முழ நீளப் பேச்சு நம்மிடம்! ஆகவே சிலவிஷயங்கள் பரவத்தான் செய்யும் – இத்தனைக்கும் நான் இலக்கியவாதிகள், தமிழறிவுஜீவிகள்(!) என்றாலே காததூரம் தலைதெறிக்க ஓடுபவன்)

      இதுவும் அவருடைய உதாசீனமா அல்லது கள்ளமௌனமா என நான் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

      எதுஎப்படியோ.

      என்னால் மென்மையாகவும் உணர்ச்சிவசப் படாமலும் விஷயங்களை அணுகமுடியும், விவாதப் புள்ளிகளை முன்னிறுத்தி நான் அகல முடியும்.ஆனால் தமிழவட்டங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் காரிய அயோக்கியர்கள்.

      அவர்களுக்குச் சம்மட்டிதான் சரி.

      நன்றி.


  4. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திகிறேம்: புனைவாசிரியருக்கு அடித்துவிட உரிமை இருப்பதாய் சொல்லவில்லை. அதற்கு ‘தம் எடைக்கு மேல் குத்தும்’ பிரயாசை காரணமாக இருக்கலாம் என்றேன் இப்படி எண்ணக் காரணம், நானும் (எஞ்சத்துக்கே!) அப்படி வளைய வரும் ஆசை பீடித்திருப்பவன், intellectual arbitrageல் திளைப்பவன், அதிலிருந்து மேலெழ முயல்வதாக படம் காண்பிப்பவன் – என்பதால்.

    மற்றபடி அவருக்கு ஏதோ குயுக்தியான அஜெண்டா இருக்கிறது என்று அநீயார் தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனால் எனக்கு (இதுவரை) அப்படித் தோன்றவில்லை.

    எனக்குத் தெரிஞ்ச (சிலவேசில) விஷயங்களைப் பற்றி அவர் பேசும்போது பால்நீர் பிரிப்பு வேலைகளை செய்யவேண்டி இருப்பதை உணர்கிறேன். அதனால் (இதுபோல) பில விஷயங்களைப் பற்றி அவர் பேசும்போது ‘அப்படியே சாப்பிட்டுவிட’க் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு உண்டு.

    இதிலும் கலந்துகட்டி அடிக்கும் பொதுpattern தெரிகிறதே ஒழிய, வேண்டுமென்றே ஒருதலைபக்‌ஷ பொய்கள் கூறி, ஏதோ ஒன்றை அவர் நிறுவ முயல்வதாகத் தோன்றவில்லை. அவ்வளவு மட்டுமே தான் நான் சொன்னேன்.

    நீங்கள் தொடர்ந்து எதிர்சேவை சாதிக்கவேண்டும் என்று விண்ணப்பித்து அமர்கிறேன்.


    • // எனக்குத் தெரிஞ்ச (சிலவேசில) விஷயங்களைப் பற்றி அவர் பேசும்போது பால்நீர் பிரிப்பு வேலைகளை செய்யவேண்டி இருப்பதை உணர்கிறேன். அதனால் (இதுபோல) பில விஷயங்களைப் பற்றி அவர் பேசும்போது ‘அப்படியே சாப்பிட்டுவிட’க் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு உண்டு.

      :-) about a few months ago I started drafting a post on this exact same issue – may be I will dust it and pub it.

      this is a heavily bothersome issue of course, siree…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s