அடப் பாவிகளா! (அல்லது) ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ உடும்புத்தைலம், தமிழிலும் சல்லீஸாகக் கிடைக்கிறதா?
June 20, 2021
மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு அன்பர், இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு அப்படியொரு ‘கண்டேன் போதையை’ இன்பலாகிரி. “நம் கல்வியில் இதுவும் சேர்த்துக் கோர்க்கப்பட்டால்…”
எனக்கோ மாரடைப்பு.
ஆனால், எனக்கு – இந்த டேனியல் கோல்மெனின் ஜல்லியடித்தலான ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ + ‘மல்டிபிள் இன்டெலிஜென்ஸ்’ போன்ற ஹோவர்ட் கார்ட்னர் உருவாக்கிய தண்டக்கருமாந்திரங்களின் மீதெல்லாம் துளிக்கூட மதிப்பேயில்லை என்பது அவருக்குத் தெரியும்.
இருந்தாலும் அன்பருக்கு, என்னை வெறியேற்றுவதில் அவ்வளவு ஆசை. என்ன செய்ய.
“நீங்கள் ஒரு வாத்தி. அதனால் இது முக்கியமாகிறது.”
நான்: “சர்வ நிச்சயமாக, நான் இன்றுவரை வாத்திதான், சிலபல துறைகள் சார்ந்து – சிறார்களிடமிருந்து கல்லூரிவிடலைகள் வரை தொடர்பில் இருக்கிறேன். அத்தொழிலையும் ஓரளவுக்கு நன்றாகவே செய்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்பது ஒரு திராபை கான்ஸெப்ட். சொல்லப்போனால் அது ஒரு ஃப்ராட்யுலன்ட் விஷயம். அது ஒரு மசுத்தையும் கணிக்கவோ, அளக்கவோ செய்வதில்லை. சும்மா ஒருமாதிரி கலர்கலரான கருத்துப் பட்டம், மாஞ்சாபோட்ட நூலில் பிணைக்கப்பட்டு நெகிழ்வாலஜி ஸூஸ்திரம் போட்டுப் பறக்கவைக்கப் படுகிறது. பிரசித்தி பெற்ற உதவாக்கரை. எல்லாரும் இதைக் குறித்துப் பேசியும் பேத்தியும் பெருமைப் பட்டுக்கொள்வார்கள். அவ்வளவுதான்.”
“உங்கள் நண்பர் பத்ரி இதைப் போட்டிருக்கிறார். இருந்தாலுமா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் சொல்கிறீர்கள்?”
“கிழக்கு பதிப்பகத்தில் போட்டிருக்கிறார்கள் என்பதற்காகவே ஒரு புத்தகம் சரியான பார்வையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புத்தகம் பதிப்பிக்கப் பட்டிருப்பதற்கான காரணங்களில், அது முக்கியமில்லை. மாறாக, அதற்கான மார்க்கெட்டைக் கண்டுகொண்டு அதனைச் சாதுர்யத்துடன் வியாபாரம் செய்யக் கூடுவது முக்கியம். அதை நேர்மையாகச் செய்வதும் முக்கியம்; அவை இரண்டையும் அப்பதிப்பகம் நன்றாகச் செய்கிறது என்பதை அறிவேன்; எனக்குத் தெரிந்த அளவில் அப்பதிப்பகம் எவரையும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றியதே இல்லை.
சரி, ‘நீர் தன் மட்டத்தை அடையும்.’ ஆகவே எந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் அதற்கென ஒரு கூட்டம் இருக்கும். நம் தமிழகத்தில் தண்டங்களுக்குத் தான் கூட்டம் அதிகம் சேரும். உதாரணம் தமிழ்த் திரைப்படங்கள், அதன் தண்டஹீரோக்கள். எப்படியும், எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
அதேசமயம் அரவிந்தன் நீலகண்டனின் புத்தகங்களையும் அவர்கள்தாம் போட்டிருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவும். + ஒன்றிரண்டு ஜெயமோகப் புத்தகங்களையும். மேற்படி நல்ல புத்தகங்களையும் பதிப்பித்திருக்கலாம், ஆனால், கடந்த காலங்களில் 50-60க்குமேல் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களை வாங்கியிருந்தாலும், இரண்டு ஆண்டுகளாக, தமிழ் புத்தகங்கள் வாங்குவதையே ஒருமாதிரி நிப்பாட்டி விட்டேன். மிடில.
எது எப்படியோ… வியாபாரரீதியாக வெற்றிபெற்ற எந்தவொரு புத்தகமும், அதன் உள்ளடக்க ரீதியிலும் தரமாக இருந்தால் அதுவும் நல்லதுதான். ஆனால் அது ஊக்கபோனஸ். மேலும் தமிழகத்தில் தரத்துக்கு அவ்வளவு கொடுப்பினை இல்லை. ஏனெனில், நமக்கு நம் திராவிட ரெவல்கள் போதுமே! எப்படியும் நமக்குச் சராசரித்தனமும் பழக்கம் ஆகிவிட்டது.”
“பத்ரி இதைக் கேட்டால் வருத்தப் படுவார்.”
“யோவ். அப்படியெல்லாம் இல்லை. ஒருவருக்கொருவர் கொஞ்சம் அறிமுகம் இருந்தால் + பலவிஷயங்கள் ஒத்துப்போனால், எப்பப் பார்த்தாலும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில் நாங்கள், எனக்குத் தெரிந்து திராவிடர்கள் அல்லர். மேலும், பத்ரியின் ஆளுமையில், இந்த உழக்கு ஒரு சிறு அங்கம்தான், ஒருமாதிரியாகத் தொடரும் பரிசோதனை முயற்சிதான் என நம்புகிறேன். ஆகவே, பத்ரியிடம் தரமில்லை எனச் சொல்லவரவில்லை.
+ஃபேஸ்புக்கில் அவர் எழுதும் சிலபதிவுகளுக்கு வொடன்பருப்பு எடத்சொறி தண்டக்கூவான்கள் வெளியிடும் முட்டாக்கூ கருத்து/பின்னூட்டங்களையே அவர் கண்டுகொள்வதில்லை, உதாசீனம் செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார். ஆகவே – ரெண்டுபேர் படிக்க அதிலொருவர் எழுதும் இம்மாதிரி ஒத்திசைவு பதிவுகளைக் கண்டுகொள்ளவேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.”
அவர் ஈனஸ்வரத்தில் தொடர்ந்தார்: “இருந்தாலும்…”
“உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: வடிகட்டிய ஒரு தெருப்பொறுக்கித் திராவிட உளறாலஜிஸ்ட் உடன்பிறப்பான யுவகிருஷ்ணாவின் புத்தகங்களைக்கூட கிழக்கு வெளியிட்டிருக்கிறது. அதேபோல அந்த தண்டக் கருமாந்திரரான, வரலாற்று அறிவுபெறக் கொடுப்பினை இல்லாத, வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு பரப்பும் ராமச்சந்திரகுஹாவின் காந்தி புத்தகத்தையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இஸ்லாமியவெறியர்களான, ஹிந்துக்களைப் படுமோசமாக வெறுப்பவர்களான ஸூஃபி உதிரிகளைக் குறித்த ஒரு நாகூர் ரூமி(!) புத்தகத்தைப் போட்டிருக்கிறார்கள்; அந்த மகத்தான அரைகுறை மருதன் கங்காதரன் புத்தகங்களையெல்லாம் போட்டுக் காடுகளை அழித்தொழித்திருக்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் தமிழ்ச் சூழலில் – கறாரான, தரமான, நெடுங்காலம் கொண்டாடப்படப்போகும் புத்தகங்களை மட்டும்தான் பதிப்போம் என எந்தவொரு பதிப்பகமும் அரைகூவ முடியாது; இதுதான் நிதர்சனம். மேலும், பதிப்பகம் எனவொன்றை, ஏன் – எந்த நிறுவனத்தையும் நடத்தினால், அதில் வேலை செய்பவர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கொடுக்கவேண்டும்++. ஆகவே. “
“நான் உங்களுக்கு கிண்டில் காப்பி வாங்கி அனுப்புகிறேன்.”
“வேண்டாம். எங்கள் வீட்டில் கிண்டில் புத்தகங்களை டவுன்லோட் செய்து, அவற்றை வைத்துக் கழிப்பறைக் குண்டில்களைச் சுத்தம் செய்துகொள்ளும் அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லை.
“அப்ப பேப்பர்பேக் புத்தகங்களை அனுப்புகிறேன், உங்கள் மதிப்புரைகளை எழுதுங்கள்.”
“வேண்டாம். முடியாது. நாங்கள் டிஷ்யு பேப்பர் உபயோகிப்பதில்லை. ஆனால் ஒரு மிதிப்புரை வேண்டுமானால் கைங்கரியம் செய்யப்படும்.”
-0-0-0-0-0-
சரி. அமேஸான் பக்கத்தில் இப்புத்தகத்தைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன:
“அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.”
எழுத்தாளர் சகல திசைகளிலும் அட்ச்சிவுடுகிறார்.
அல்லது இந்த சாராம்சத்தை எழுதியவர் இப்படிப் பூந்து விளையாடியிருக்கிறார்.
சோகம்.
“உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.
தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி. “
யப்பாடியோவ்! :-(
இதில் பலப்பல பிரச்சினைகள்; ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ எனும் கற்பனைக்கு இதுவரை ஒருவிதமான தரவும் இல்லவேயில்லை; அதன் உருவாக்கியான டேனியல் கோல்மெனுக்கே அதன் கூறுகள் என்னென்ன என்பதில் ஏகத்துக்கும் சந்தேகம்.
ஏனெனில் – சுத்தமாகவே கறார்தன்மையற்றது அக்கருத்தாக்கம், வேறுமாதிரி சொல்லவேண்டுமென்றால் – அது அதிகபட்சம் மொண்ணையானது, குறைந்தபட்சம் போலித்தன்மை மிக்கது. அதாவது, அது ஒருமாதிரி வெட்டி நெகிழ்வாலஜி. அவ்வளவுதான்.
ஐக்யூ என்பதை வரையறுப்பதில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. அது பலப்பல துறைகளுக்கும் இயல்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தாலும் சில துறைகளுக்கு ஒத்துவருவதில்லை. (எடுத்துக்காட்டு விதிவிலக்குகளாக, புடைப்பூக்கம், கற்பனா சக்தி சிறகடித்துப் பறத்தல் போன்ற வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்கள்)
ஆனால் ஐக்யூ எனவழைக்கப் படுவதின் கறார்தன்மை என்பதும், அதனை அளக்க இருக்கும் உபாயங்களும் அளவைகளும் அறிவியல் பூர்வமானவை; நிரூபிக்கப் படக்கூடியவை. அளவையின் உயர்மட்டங்களில் சந்தேகத்துக்கிடமில்லாதபடி இருப்பவை – அதாவது 150+ ஐக்யூ பெற்றவர்கள், ஒரு விதிவிலக்குமில்லாமல் ஜொலிப்பவர்கள்தாம்; ஆனால், கீழ்மட்டங்களில் அப்படியல்ல, முன்னற் சொல்லியபடி சில விதிவிலக்குகள் இருக்கின்றன – அதேசமயம் நடுவாந்திர அளவையில் இருப்பவர்கள் நடுவாந்திரச் சராசரிகள்தாம்.
ஐக்யூ எனும் அளவை – மிக முக்கியமானது. ஒருசில விதிவிலக்குகளுக்குட்பட்டு, அறிவியல் பூர்வமானது; ஜீன்ஸ் என ஆரம்பித்துப் பலப்பல கோவேரியண்ட் கூறுகளை உள்ளடக்கியது, அல்லது அவற்றுடன் ஒத்திசைவது அதன் பராக்கிரமம். அதேசமயம், விதிவிலக்குகள் சரிசெய்யப்படுவதற்கும் அவற்றின் அளவைகள் ஆட்கொள்ளப்படுவதற்கும் ஆராய்ச்சி முனைவுகள் இருக்கின்றன.
குறிப்பாகச் சொல்லப்போனால் – அதில் பெரும்பாலான விஷயங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியவையாக இருந்தாலும் ஒருசில பிரச்சினைகள் இருந்தாலும் – இந்த ஐக்யூ விஷயத்துக்கு இன்றுவரை ஒரு காத்திரமான மாற்று இல்லை.
மாறாக இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ எழவுக்கு அளவைகள் என்பதே இல்லை. ஒரு சுக்கும் இல்லை. ஒரு ஆராய்ச்சியுமில்லை, தரவுமில்லை.
ஆகவேதான் சுயமுன்னேற்ற அளந்துவிடல்ளை அளவில்லாமல் அட்ச்சிவுடமுடிகிறது. ஆனால் வெறுமனே இந்த, ஒரு பிடிக்குள் அடங்காத வஸ்துவை வைத்துக்கொண்டு, ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாதென்றாலும் ஆச்சரியப் படத்தக்க விதத்தில் அந்த உடும்புத்தைலத்தை நிறைய பேர் தடவிக்கொள்கிறார்கள்.
நம்மால் இந்த எழவை வைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வரமுடியுமா?
- வேலைவெட்டியோ இங்கிதமோ அற்ற ஒத்திசைவு ராமசாமிக்கு ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ ஒரு பெரிய சுழி; ஆகவே அவன் கவைக்குதவமாட்டான்! ஒரு மசுத்தையும் சாதிக்கவில்லை, இனிமேலும் சாதிக்கமாட்டான்.
- யுவகிருஷ்ணா எனும் கிருஷ்ணகுமார் எனும் உடன்பருப்புக்கு ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ ஏகத்துக்கும் இருக்கிறது. ஆகவே அவருக்கு நொபெல் பரிசு கொடுக்கவேண்டும்.
- மாற்றுத் திறனாளர் எனும் ஒரே தகுதியைப் பெற்றிருக்கும் அப்துல்ஹமீது ‘மனுஷ்ய புத்திரன்’ ஷேக்மொஹமது அவர்களுக்கு, ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ மட்டும்தான் இருக்கிறது. ஆகவே அவருக்கு ‘மாற்று முதலையமைச்சர்’ பதவி கொடுக்கப்படவேண்டும்.
- … ….
ஹோமியொபதி கோலோச்சும் நாட்டில், திராவிடம் ஆளும்+அள்ளும் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எங்கேடா என் ‘தங்க பஸ்பம்?’
(இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ ஜந்து பற்றி அக்குவேர் ஆணிவேராகப் பிரித்துமேய்ந்து நான் நிறைய எழுதலாம் – ஆனால் இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ அதற்கு ஏற்ற தகுதி பெற்றவொன்றில்லை, மன்னிக்கவும்!)
நன்றி.
-0-0-0-0-
புலம்பல் அடுத்த நாளும் தொடர்கிறது…
இதனுடன் விட்டுவிடலாம் என நினைத்தேன்; ஆனால், கீழ்கண்ட குறிப்பையும் படிக்க நேர்ந்தது! ஆகவே. :-(
லட்சக்கணக்கான வாசகர்கள் இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ வகை சிட்டுக்குருவி லேகியத்தைத் தடவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேலும், என் அன்பர் – சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகங்கள் 50,000 பிரதிகளுக்குமேல் விற்றிருப்பதாகச் சொன்னார்!
சோம. வள்ளியப்பன் அவர்களிடம் நன்றாக அறிமுகம் இருப்பதாகச் சொன்னார் வேறு. +எழுத்தாளர்வாள் சுயமுன்னேற்ற முஷ்டிமைதுனப் பயிற்சித் தொழிலில் ஏகத்துக்கும் இருக்கிறார் எனும் அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கேள்விப்பட்டேன்; இருந்தாலும்… :-(
ஐம்பதாயிரம் பிரதிகள்!
அரண்டுவிட்டேன். அடிவயிற்றுக் கலக்கமாகிவிட்டது. உண்மையாகவே இருக்குமோ?
ஆகவே, இதோ ஒரு ஆஃபர்.
அன்பரே!
சோம வள்ளியப்பன் அவர்களுடன் இதுகுறித்து ஒரு விவாதத்தில் அல்லது சர்ச்சையில் (ஆன்லைன்) ஈடுபடத் தயாராக இருக்கிறேன்.
0. நீங்கள் தாம் வலுவில் வந்து, சும்மா, ஒருவருக்கும் உபத்திரவமில்லாமல் என் சங்கோடு கிடந்த என்னை ஊதிக் கெடுத்தீர்கள். வற்புறுத்தி, இந்த சோம.வள்ளியப்பன் அவர்களின் இட்லிசட்டினிசாம்பார் புத்தகங்களைப் படிக்கச் சொன்னீர்கள்.
ஆகவே இந்தக் கோரிக்கையையும் தாங்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
1. நான் இதுவரை பொதுவில் ஒரு விடியோ/ஆடியோ உரையாடல் செய்ததில்லை; ஆனால் இந்த ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ பிரச்சினையின் ஆழமும் வீச்சமும் எனக்கும் மிகவும் கவலையளிப்பதால், இது கல்வி+தரம் தொடர்பான சிக்கலாக இருப்பதால் – நான் ஒரு பகிரங்கமான உரையாடலுக்குத் தயார்.
2. என் எழுத்துகளைப் படித்தால் நான் பொதுவாகவே ஒரு வெறிநாய் எனவொரு எண்ணம் எனக்கே தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை; ஆனாலும், தாங்கள் என்னை நன்றாகவே அறிந்திருந்தாலும் சொல்கிறேன்: ‘நான் நிஜ வாழ்க்கையில் பணிவானவன், பொறுமைசாலி. பொதுச் சபையில் பிறரைக் கேவலப் படுத்துவதை இதுவரை செய்ததில்லை. ஆகவே, கவலை வேண்டேல்!’
3. தாங்கள் உங்கள் நண்பரான சோம.வள்ளியப்பன் அவர்களுடன் பேசி, இந்த 1-2 மணி நேர உரையாடலுக்குத் தயார் செய்யவும். இந்த உரையாடல் அவருடைய இரு புத்தகங்கள் + ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ பற்றி மட்டுமே இருக்கும்; தனிப்பட்ட முறை தாக்குதல் இருக்காது. மிகுந்த மரியாதையுடன் தான் அளவளாவுவேன். அவர் அப்படி இருக்காவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு இம்மாதிரி விஷயங்களில் பயிற்சி இருக்கிறது.
அவருக்குத் தேவையென்றால், முன்னமே ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ + அவருடைய இரு புத்தகங்கள் குறித்த என் விவாதப்புள்ளிகளை எழுத்துபூர்வமாக அளிக்கிறேன்.
4. எனக்குத் தெரியாத/பிடிபடாத விஷயங்களைத் “தெரியவில்லை, எனக்குப் புரியவில்லை, என்னைத் திருத்தியதற்கு நன்றி, இனி கற்றுக்கொள்கிறேன்,” எனச் சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது. அதைவிட முக்கியமாக – தெரியாத விஷயங்களைப் பற்றி அட்ச்சிவுடாத பயிற்சியும் இருக்கிறது. அவருக்கும் அப்படியே இருக்கக்கூடும் – ஏனெனில் சுயமுன்னேற்றம் பற்றிய முனைவுகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என அறிகிறேன். ஆகவே நிலைமை ரசாபாசமாக வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன்.
5. அவர் ஒப்புக்கொண்டால் என்னிடம் தொடர்பு கொள்ளவும். அப்படி நீங்கள் தொடர்பு கொண்டால், அவருடைய இரு புத்தகங்களையும் வாங்கிப் படித்து என்னைத் தயார் செய்துகொள்கிறேன்.
நன்றி.
பின்குறிப்பு: உங்களிடம் ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ எழவு குறித்து நூட்ல்ஸ்பூர்வமாக விவாதித்த(!) பின் – உடனடியாகப் போர்க்கால ரீதியில் ஒருமாதிரி திராவிடத் தனமான டிஷர்ட் வடிவமைத்திருக்கிறேன்.
உரையாடலுக்குப் பின் என் பரிசாக உங்களுக்கு இதனை அளிக்கலாம் என இருக்கிறேன்.
(மேற்கண்ட விளம்பர மாடல், சாட்சாத் நான் தான்!)
—
—
June 20, 2021 at 18:22
/நான் நிஜ வாழ்க்கையில் பணிவானவன், பொறுமைசாலி. பொதுச் சபையில் பிறரைக் கேவலப் படுத்துவதை இதுவரை செய்ததில்லை/
அதாவது திரிபுரம் எரித்த விரிசடை ரூபம் எல்லாம் இங்கு மட்டும்தான். நிஜ (!) வாழ்வில் ‘செல்லிடத்து சினம் காப்பவர்’ நீங்கள், அப்படித்தானே.
அது தானே ஐயா எமோஷனல் இண்டெலிஜன்ஸ், க்வோஷெண்ட்.
இதுவே புலப்படாத ஒரு லக்ஷம் பேராவது தமிழுலகில் இருப்பார்கள் அல்லவா?
படித்துவிட்டு போகட்டுமே. என்னதான் ஹிந்துத்வா காலம் என்றாலும், இன்னும் இது ஒரு இலவச நாடு தானே?
“இல்லையப்பா, சோம்பிப்படிக்காமல் பேத்தாதே,
இது அதைவிட மேலதிகமாக எதையோ கூறுகிறது. ஆனால் அது உளறல் !” என்பீர்களேயாயின் ஒரு சின்னஞ்சிறு பரபக்கம் அளித்தால் தெளிவோம்.
June 20, 2021 at 18:48
//நிஜ (!) வாழ்வில் ‘செல்லிடத்து சினம் காப்பவர்’ நீங்கள், அப்படித்தானே.
இல்லை. நிறைய சண்டை போடுபவன்; வாக்குவாதங்களில் ஈடுபட்டிருப்பவன், ஈடுபடுபவனும் கூட. ‘எதிரி’களைத் துரத்தியிருப்பவன், அடியும் வாங்கியிருப்பவன் + ஆகவே திரும்பிக் கொடுத்துமிருப்பவன். (நேரில் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்பட்டால், லுங்கியைத் தூக்கி விழுப்புண்களைக் காட்டத் தயங்கேன்!)
ஆனால், பொதுவெளியில் நடக்கும் (வாய்மொழி மட்டும்) உரையாடல்களில் வெறியாட்டம் போடுவதில்லை; சபை அடக்கம் இல்லை – ஆனால் சபை நாகரிகம் கருதி மட்டும்தான். அதைத் தான் சொன்னேன். மேலும் சபைகளில் படுமோசமான வசை வாங்கியிருந்தாலும், ஒருவரையும் ஸ்தலத்திலேயே பதிலுக்குத் திட்டியதுகூட இல்லை. ஆனாலும் நான், ஒரு அமைதிவிரும்பியோ அஹிம்ஸாவாதியோ அல்லன்.
ப்ளாக் என்பது வேறு; இதில் சபைக்கேற்ற நாசூக்கு தேவையில்லை. இங்கே வந்து வீழ்பவர்கள் அவர்கள் சொந்த விருப்பத்தின்பேரில் தான் அப்படிச் செய்கின்றனர். ஆகவே அவர்களைச் செல்லமாக சோம்பேறிமுட்டாக்கூவான்கள் என விளிக்கவும் தயங்கேன்.
//அது தானே ஐயா எமோஷனல் இண்டெலிஜன்ஸ், க்வோஷெண்ட்.
ஐயன்மீர், அதுவேறு. நான் செய்ய முயல்வது – செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான். அதாவது, முடிந்தவரை. அவ்வளவுதான்.
// என்னதான் ஹிந்துத்வா காலம் என்றாலும்,
அடேய். என்ன சொல்லவருகிறீர்? அப் பொற்காலத்துக்காக விழைபவனே நான் தான்! 💪🏿🕉️
// இன்னும் இது ஒரு இலவச நாடு தானே?
:-) எஸ்ராமகிருஷ்ணனுக்கே போட்டியா, யோவ்!
June 20, 2021 at 19:42
இதெல்லாம் தெரியாமலா இங்குழலுகிறோம்?
‘நான் காந்தியவாதி அல்ல’ இடுகையை எல்லாம் என்றோ படித்தாயிற்று ஐயா.
லேசாகக் கிள்ளிவிட்டால், நூறு வார்த்தைக்கு மிகாமல் ‘ஈக்யூ என்றால் என்ன’ (5 மதிப்பெண்கள்) என்று சாறுபிழிந்து தருவீர்கள் என்று பார்த்தால்….ஒன்றும் பெயராது போலிருக்கிறதே.
June 20, 2021 at 20:24
= Emergency Quota.
END
June 20, 2021 at 18:31
I first thought that the “Be an Idli” is not a real book and something you made up like the t-shirt thingy. Silly me. I once attended a training where someone had a session on multiple intelligence. After that I decided that either (a) I am too stupid to understand it
or (b) it is all a bunch of made-up hooey to make people feel good about themselves (very much like our Dravidian stock). It seems MI mutated and then gave brith to this EI. How is it from all the stuff that’s happening in the world, the tamils always find the worst possible nonsense and make it theirs ?
June 20, 2021 at 18:53
Have some interesting (to me at least!) anecdotes to share about the MI nonsense.
But. If I do that, I think I will definitely burn in hell, rather eternally – for all the discomfiture that I caused to some hapless, useless MI trainer parrots.
But Em, I had realized quite a while ago that we Tamils are rather a mediocre society across many levels and so am not really surprised about the uptake and cheerful adaptation of all silly ideas by our folks. Oh what to do.
In the case of Litt, it is post-modernism.
June 22, 2021 at 19:15
நம்ம ஜன்ங்க கேரக்டரயே பிர்ஞ்சிக்காம பேஸ்னா எப்டி ஸார்? முப்பது ஐட்டக்கார்னுவோ நடுல ஒத்த ஆளா நின்னு ஊத்த டயலாக் உட்டுனே ஊடு கட்ற சினிமாகாரன பிகிலட்ச்சி பல கோடிக்கி அதிபதியாக்ற நம்ம ஜனம் அத்தோட நின்ச்சினாக்க அத லூஸ்ல வுட்றலாம், ஆனாக்க அங்கதான் இர்க்கு ட்டுஷ்ட்டு.
இர்க்கத்லயே எச்சகல பயலுவலா தேடி புட்ச்சி பேன்ஸ் கிளப் வச்சினு, ஆன்லைனு ஆப்லைனு அல்லா எட்த்துலயும் எங்காளுத்தான்டா இம்மாம்பெர்சுனு கலீஜா பேசி அட்ச்சிகினு, போட்டி போட்டு ரோட்ட மற்ச்சி மாஸா கட்டவுட் கட்ன கையோட சூடங்கொள்த்தி கும்ட்டு மாலபோட்டு பாலூத்த சொல்லயே மேலர்ந்து மல்லாக்க வுள்ந்து வாயப்பொள்க்குதே புள்ளிங்கோ அதுங்களோட முட்ஞ்சா கூட ஏதோ மற கள்ண்ட கேஸூங்கோ அடங்காம ஆடி அய்துங்கோனு உட்ரலாம்.
இர்க்கவன் மண்டய கய்வி காயட்ச்சே காசு பாக்கற சினிமாகார்னுவ மெஜார்ட்டி எவனும் வர்மான கண்க்கு கரீட்டா காட்றதில்ல டேக்ஸும் கட்றதில்ல. ஆனாக்க ஸார், இவ்னுங்கதான் சினிமால ஏழப் பங்காளிக்காவ உசுர அடகுவச்சி பொர்ட்ச்சி பன்றானுவ. தன்க்கு ஒரு ப்ராப்ளம்னாக்க எவங்கால்லயும் வுள்ந்து செருப்ப நக்கற சூரனுவதான் நாட்ல நட்க்கற அல்லா அந்யாய்த்தயும் சிங்கிளா நின்னு தட்டி கேக்றானுவோ.
இத்தையெல்லாம் பாக்ற போக்கத்த ரசிகக் கூவானுவ தேட்டர்ல சில்றய செதற வுட்றதோட நிற்த்திட்டாக்க தலைக்கி வந்தது தலப்பாவோட போச்சினு பொற்த்துக்கலாம். ஆனாக்க தெரைல பாக்றத வச்சி நெஜத்துல இந்த அக்யூஸ்டுவள கீரோவாக்றதோட இல்லாம நாட்டுக்கே லீடராக்குது பாருங்க அங்க நிக்கிது நம்ம ஜனம். அந்த அதுப்புலதான் ரெண்டாவ்து பட்த்துலர்ந்தே பால்டிக்ஸ் பன்றானுவோ, தூண்டிவுட்டு கல்லா கட்றானுவ. படிப்புனா இன்னா ஐட்டம்னு கேக்ற முட்டாக்கூவானுவோ எஜூகேசன் பாலிசிய மாத்துன்றானுவோ. இவ்னுவதான் டமிள்நாட்ல மாஸ் லீடனுவோ, நம்ம ஜன்ங்க ரெவல் இன்னானு இத்த வெச்சி கண்டுக்கலாம் ஸார்.
இன்னாபா நீ இஸ்டத்துக்கு அட்ச்சிவுட்றனு கேட்டீங்கன்னா எக்ஸாம்பிளோட சொல்றனே. நம்மு பால்டாயில் ஸ்டாரையே எட்த்துப்பம், சினிமாவ்க்கு வர்றப்பவே அட்ச்சு சொன்னாப்ல பால்டிக்ஸ் பன்றதுக்காவ இங்க வர்லனு, தலீவரு அதவெட பலமா சொன்னாப்ல பேமிலில இனிமே யாரும் பால்டிக்ஸ்கு வரமாட்டாங்கனு. இத களைங்கருமே சொல்லிர்க்காப்ல, ஆனா என்னா நட்ந்துச்சி?
ஆட்சி அதிகாரம் கைல இர்ந்திச்சி, காலாகாலமா கொள்ளையட்ச்ச காசு கணக்கில்லாம இர்ந்திச்சி, தொபுக்கட்டீர்னு குதிச்சாப்ல சினிமால. சொந்த வூடே இல்லாத அப்பனுக்கு வெட்டியா ஊர்பொறுக்கினு இர்ந்த இவ்ரு பலகோடி ஊட்ட எனாமா எள்தி வச்சதோட சினிமா கம்பேனியும் ஸ்டாட் பன்ட்டாப்ல. அப்றம் என்ன ஒன்ற கிலோ மொச்சகொட்டைய ஒரே டைம்ல தின்னவம்மேரி டர்ர் புர்ருன்னு படமா எட்த்து தள்னாப்ல. மத்தவன் எவனாவ்து படம் எட்த்தாகூட இவ்ங்க பேமிலட்டதான் குட்த்தாவனும்.
அந்த டைம்ல டாப்ல இர்ந்த காமெடியன் நடிக பின்னாடி ஒள்ஞ்சினு வந்து ஆக்ட் வுட்டாப்ல, பாத்தவனெல்லாம் யார்டாவன் கோமாளினு காறித் துப்புனான். அப்பயும் டாப் கமெடியன்+நடிகைங்கள உடாம புட்ச்சி வச்சினு கலச்சேவய பன்னினே இர்ந்தாப்ல, இது பத்தாம இவுங்க பேமில டிவி அல்லாத்லயும் நாள்பூரா இதே மூஞ்சியத்தான் காட்னாங்க.
அப்றமா ஒருநாளு குட்த்தாரு பாருங்க ஒரு பேட்டி, அத்தான் ஹைலைட்டே, பொர்க்கும்போதே கச்சிக்கொடியோட பொற்ந்தவன்டா நானு, ரத்தத்லயே ஊர்னத ஒன்னியும் பன்ன மிட்யாதுன்டாப்ல, முந்தாநாளு வரைக்கும் இதே வாய்லதானடா வரமாட்டன்னு சொன்னனு ஒர்த்தனும் கேக்கலியே, நம்மு தலீவரு பேமிலி ரெக்காடு அப்டி.
சினிமால குதிச்சமேரியே பால்டிக்ஸ்லயும் குதிச்டாரு எங்கு பால்டாயில் ஸ்டாரு, திராவிடியா ஸ்டாக் வள்க்கப்படி மோடி மோடினு கூவுனாப்ல, வண்டவண்டையா அள்ளிவுட்டாப்ல. சும்மா இர்ந்தவனையெல்லாம் கடன வாங்குனா தள்ளுபடினு சொல்லி கெளப்பி வுட்டாப்ல, அதநம்பி வாங்குனவந்தான் இப்ப தாராந்து போய்னிர்க்கான்.
ஆச்சிக்கு வந்ததும் நீட் ரத்து, பெட்ரோல் வெல கொறப்பு, கொரோனா ஒழிப்பு மதுவெலக்குனு இன்னும் ஏகப்பட்ட மேட்டருக்கு மொத கையெள்த்து போட்டு பொளக்கப் போறேன்னாப்ல தலீவரு, அத்தோட 100 நாள்லயே மிச்ச கோரிக்க அத்தனையும் நெறவேத்தலன்னா என்னடானு கேளுங்கன்னாப்ல. கூட்டணில இர்க்க பெர்யகைதானடா நீட்டு நடத்தியே ஆவ்னும்னு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய்ர்க்கு, யார்ட்டடா டகீல் வுட்றீங்கோனு ஒர்த்தனும் கேக்கல. இதபத்தி பரம்பர அல்லக்கை டபுள் வாட்ச் டக்ளஸாண்ட கேட்டப்ப தெனாவட்டா ‘ங்கோத்தா தேதி போட்ருக்கமாடா?’னு திருப்பி கேட்டாரு பாருங்க அல்லா பயலுவலுக்கும் அள்ளு கள்ன்ட்ருச்சி, திராவிடியா ஸ்டாக்குன்னா என்னானு பிர்ஞ்சிர்க்கும் அவ்னுங்கள்க்கு.
பத்து வர்ஸமா அட்த்தவங்கள வில்லனா காட்டி காட்டியே இப்ப ஆச்சிக்கி வந்த்ட்டீங்களே இப்பயாவ்து நீங்க சொன்னத செய்ங்கடானு எவ்னாது சொன்னா அவ்னையும் கண்டமாக்கி காயப்போட்ருவோம். இங்க சொல்லிர்க்கது மெரீனா பீச் மணல்ல ஒத்த தூளு மணல்தான். இது காலாகாலமா நட்ந்துட்டு வர்து, நம்ம டமிள்நாட்டு ஜனமும் பாத்துனுதான் இர்க்கு, அப்டி இர்ந்தும் ஓட்டு போட்டுச்சுல்ல அத்தான் மேட்டரு. இப்டியாபட்ட ஜன்ங்க இருக்க ஊர்ல இந்தமேரி புக்கு விக்கிறதெல்லாம் ஜூஜூபி சார்.
June 23, 2021 at 10:04
கொமாரூ!
நான் எள்தினதோடா நீயி எள்திற்கதுக்கு யின்னாடா சம்பொந்தம்… வொங் கொமட்ல குத்தட்டான்னிட்டு ரோசிக்கிட்டே இர்ந்தேனா…
கடோசீல புட்ச்சிட்டபா! கௌவு அண்ட் த கொகொனட் ட்ரீ….
“இப்டியாபட்ட ஜன்ங்க இருக்க ஊர்ல இந்தமேரி புக்கு விக்கிறதெல்லாம் ஜூஜூபி… ”
🤣 🙌🏿
June 23, 2021 at 13:22
தப்பா நென்ச்சுக்காதீங் ஸார், டமிள் ஜன்ங்கள பாத்து ‘இன்டெலிஜென்ஸ்’னு ஏதோ கெட்ட வார்த்தைல சொன்னதும் கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன், டமிள்னுக்கு ஒன்னுனா ஒடனே கோதால குதிச்சாவ்னுமே, அதான் இப்டி.
நம்ம ஜனத்தாண்ட டகீல அட்ச்சிவுட்டாத்தான் ஆட்சில உக்கார வெக்கிது, கேப்மாரி பயலுவலா தேடிப்புட்ச்சி லீடர் ஆக்கினிர்க்குனு ப்ருஃபோட சொன்னாக்க இனிமே ஒர்த்தரும் இப்டி நாக்குமேல பல்லபோட்டு பேஸமாட்டாங்கல்ல அத்தான் சாம்பிள் காம்ச்சேன், இம்மாம்பெர்ஸா இஸ்துனு போய்ட்ச்சி.
June 23, 2021 at 10:12
நேற்று, ‘அன்பர்’ இந்த சோம.வள்ளியப்பனாயண தண்ட விவகாரத்திலிருந்து ஜகா வாங்கிவிட்டார் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னத வச்சிட்டு ரொம்ப கோவப் பட்டுட்டீட்ங்க!”
டேய் சககெளம், அரெ மணி நேரம் என்னோட கள்த்த அற்த்து ‘சும்மா ஒரு பேச்சு’க்காடா? வொங்க்ளமேரீ ஆள்ங்க கீறானுங்கண்ற தெனாவட்லதாண்டா இப்டியாப்பட்ட பொஸ்தகம் போட்றானுவ…
ஸாவுகெராக்கி.
June 23, 2021 at 11:29
ஒரு தமிழ் புத்தகம் பற்றி தமிழில் விவாதிக்க வக்கில்லை என்பது பிரச்சனையில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த புத்தகத்தின் தலைப்பை ரோமன் லிபியில் Idliyaga irungal என்றாவது குறிப்பிடலாம். அதென்ன Be an idli? The Godfather படம் பற்றி தமிழில் எழுதும் ஒருவர் பட தலைப்பை தகப்பன்சாமி என்று குறிப்பிட்டால் ஒத்துகொள்வீர்களா? தமிழர்களின் இந்த E.I (இங்கிலிஷ் இன்டெலிஜென்ஸ் )பற்றி எழுதுங்கள் அய்யா
June 23, 2021 at 13:27
ஐயா, யார் நீவிர்? பிரபல இட்லிக்கடை ஓனரா? புதிதாக வந்துத் திட்டுகிறீர்? :-)
நீங்கள் சொல்லவருவது புரிகிறது என்றாலுமே – மற்றபடி இட்லியாக இருங்கள் என்பது ஏதாவது தேவ வேத மஹா சொற்றொடரா? அதில் பலப்பல மறைபொருட்கள் புதைந்து கிடக்கின்றனவா? மொழிமாற்றத்தில் அழியும் படிமங்கள் அதில் தொக்கி இருக்கின்றனவா?
நேரடியாக அதன் பொருளில் அதுபாட்டுக்கு இருக்கிறது – பூடகமாக ஒன்றையும் சொல்லவரவில்லை. அப்படி இருக்கும்போது, அதுவும் அப்புத்தகம் ஒரு அபத்தக் களஞ்சியம் எனும்போது — ஆங்கிலம் தமிழ் என எப்படி எழுதினாலும் இட்லி சட்னியாகவா சட்டுப்புட்டென்று மாறும்?
காட்ஃபாதர் விஷயம் சரி – நன்றி – ஆனால் அதனுடன் எப்படி இந்த ‘இட்லி இருத்தலியல்’ அல்லது ‘இட்லியின் இருப்பியல் அவஸ்தை’ ++ பற்றிப் பொருத்திப் பார்க்கிறீர்கள்?
மற்றபடி, எனக்கும் தமிழ் மீது ஒரு இனம்புரியாத, தர்க்கரீதியற்ற + தேவையற்ற பரிவும் காதலும் உண்டு என்றாலும் – இந்த தளத்தில் எந்த மொழியும் சரியே – ஏனெனில் கருத்துப் பரிமாற்றங்கள் – அதாவது Horse Change Toddy தான் இங்கு முக்கியம் என நினைக்கிறேன். இதற்கு மேற்பட்டு… மெட்றாஸ் பாஷைதான் இங்கு பிரதானம் எனும்போது… பாவம் நீங்கள்.
எது எப்படியோ… கோபித்துக் கொள்ளாதீர்கள், இட்லியாகவே இருங்கள், பூரியுங்கள்… ஏனெனில் இங்கு வேண்டிய அளவு கெளங்(கு)கள் ஸப்ளை செய்யப்படும்.
நன்றி!