அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம்

June 24, 2021

தேவையா? :-(

ஸ்ரீராமபிரானுக்கே உதவி செய்த அணில்களின் பாரம்பரியம் இருக்கும் நம் நற்றமிழ் நாட்டில், அணிலாடு முன்றிலாரால் அணில் ஆடு இலை ஈ உரல் ஊசி எனக் குறுந்தொகை எழுதப் பட்ட அப்பேர்க்கொத்த சங்ககாலம் இருந்த நம் தமிழகத்தில், அணில் சேமியா உப்புமா செய்யக்கூட உறுதுணையாக இருக்கும் இவ்வசரரீதிக் காலகட்டங்களில், ‘அணில் ஹக்‘ என ஸூஃபிகள் நெக்குருகிக் கழுத்தேயில்லாமல் அலையும் மதச்சார்பின்மைச் சமயங்களில்,  ஹிந்துத்துவா அணிற்கூட்டங்கள் அணில்திரண்டு கூட்டணி அமைத்து திராவிட மின்சாரத்தைத் தாக்குவது என்பதைச் சாரமற்ற விஷயமாக நான் கருதவில்லை.

ஏனெனில்,  சாரம் மரம் கம்பி என இருந்தால் அணில், அங்கும் இங்கும் எங்கும் தாவத்தான் செய்யும்; இஸ்லாமிய அணிலாக இருந்தால் அது தாவா செய்யும். க்றிஸ்தவமாக இருந்தால் அது பாவம், தேம்பாவணில் பாடிக்கொண்டிருக்கும்.

ஏனெனில் – பொதுவாகவே அவற்றின் கடன், அணில் செய்துகொண்டு கிடப்பதே.

ஆனால்.

கூடிய விரைவில் பெருச்சாளிகள் கனிமொழி2ஜி தலைமையில் அணில்வகுத்து, சென்னை துறைமுகத்தையே பெயர்த்துச் சாப்பிட்டுவிடலாம். சிங்கங்கள் மதுரை சென்று, தமக்கு இழுக்கு ஏற்படுத்தும் நான்காம்தலைமுறை ஐந்தாம்படையாரை, ஜிகர்தண்டா செய்து ஏப்பம் விடலாம். திராவிட எலிகள் எழும்பி நின்று ஒன்றியத்தை எதிர்க்கலாம். சிறுத்தைகள் விடுதலை பெற்றுச் சிறுத்துப்போய் சிறுபூனைகளாகி ஆவின்பால் குளிர்பதனத் தொழிற்சாலைகளை அப்படியே நக்கி அடுத்த கட்டப் பஞ்சாயத்தை நோக்கி நகரலாம். ஒட்டகங்கள் ஒய்யாரமாக கேமல்ஹாசன் தலைமையில் மய்யத்தைச் சுற்றிச்சுற்றி நடந்து தலைசுற்றி மேலும் பசையுள்ளவையாக* மாறலாம்…

ஆனால், எனக்கு வருத்தமாக இருக்கிறது; இப்படிக் குறும்புத்தொகை என நம் நெடிய தமிழ் விமர்சனப் பண்பாடு சுருக்கப்படுவதைக் காணச் சகிக்கவில்லை என்றாலும் படிக்க மிக மிக இனிமையாக இருக்கிறது. :-)

BRILLIANT satire. சிரித்து மாளவில்லை! All power to Sriman Aravindan Neelakandan. :-)

அநீ! நீவிர் பொலிக, பொலிக

(இப்படியே இவர் தொடர்ந்து எஸ்ரா, சாரு++ போன்ற பிற தண்டக்கருமாந்திரங்கள் பக்கமும் தம் பகடிப் பார்வையை வீசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனச் சப்புக்கொட்டிக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு இப்போது விடிவில்லை, வேறு வழியுமில்லை!)

-0-0-0-0-

ஆகவே அரவிந்தன் அணில்கண்டன் அவர்கள் எழுதும் கட்டுரைகள் போலவே என் பெரும்பேராசான், ஒரு பகடிக் கட்டுரையை எழுதி அநீ அவர்களுக்குத் தகுந்த பதிலடியாக வழங்குவார் என ஒருமாதிரிப் படபடப்புடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன்.

* ஐயோ, கேட்டுக்கொண்டு வராதீர்கள்; ஒட்ட + கம் + கள் = ஒட்டகங்கள். :-(

25 Responses to “அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம்”

  1. Vel Says:

    நான் கொஞ்சம் மந்த புத்தி உள்ளவன். நான் சொல்வது சரியா என்று கூறுங்கள். அரவிந்தன் நீலகண்டன் கேலி செய்வது சுயமோகனைதானே?

    ஒரு வேண்டுகோள்: உங்களுக்கு நேரம் இருந்தால் “டபுள் வாட்ச் Douglas” பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டும்.


    • யோவ்! உமக்கு மந்த புத்தியுமில்லை மந்தை புத்தியுமில்லை. நீங்கள் மீனவரா? Don’t fish for compliments. :-)

      கிட்டே வாருங்கள், சொல்கிறேன்.

      அது யாரையும் தனிப்பட்டமுறையில் குறிப்பிடவில்லை. நீங்கள் இப்படிக் கேட்டவுடன் எனக்கும் சந்தேகம் வருகிறது. ஏனெனில், ஜெயமோகன் அவர்கள் அப்படியெல்லாம் எழுதக் கூடியவராக எனக்குத் தெரியவில்லை. மேலும் நுண்ணுணர்வு, நுனி, மெய்யுணர்ச்சி, சிகிழ்ச்சை போன்ற வார்த்தைகளே அநீ பதிவில் இல்லை.

      ஒருவேளை உவே சாமிநாதைய்யர் பற்றித்தான் இந்த அநீ பகடி செய்திருக்கிறாரோ?
      :-(

      DWD: something may happen soon, be really worried. :-(

      • Vel Says:

        ஒருவேளை கடலூர் சீ(னு)னராக இருக்குமோ?

        DWD பற்றி நீங்கள் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். நான் மட்டும் அல்ல என்னை போன்ற சக பல ஏழரைகளும்.


      • யோவ்! சும்மா கெடக்கறவரோட சங்கை புட்ச்சி இஸ்க்காதீங்க, அவ்ரு எங்க்ளோட இனியசீனம்!

        *க்கும்.*

      • Raj Chandra Says:

        ஆஹா…நீங்களும் இனிய சீனுவின் மறைமுக இனிய ரசிகரா?!!! விரைவில் உங்கள் இனிய தளத்தில், இனிய சீனுவை விளித்து இனிய மடல் ஒன்றை வாசிக்க இனிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்…
        இனிய ராஜ் இனிய சந்திரா 

  2. Sesha a.seshagiri Says:

    அணில் மகாத்மியத்தை சொன்ன அ.நீ அவர்கள் அதற்கு முன்னோடியான மூட்டை மூட்டையாக சீனியை தின்று தீர்த்த எறும்புகளை கண்டு கொள்ளாதது வருத்தற்குரிய விசயம் !

  3. Vijay Says:

    இது முழுக்க முழுக்க தீராவிட காழ்ப்பு..பார்ப்பன சதி . எதிர்பார்த்தது தான் …சுருக்கமாக பெயரிலேயே அ.நீல் எண்டு வைத்துக்கொண்டிருப்பவரிடம் வேறென்ன நீதி எதிர் பார்க்க முடியும்

  4. Rakesh Says:

    நான்தான் ஔரங்கசீப்… Charu’s new series in Binge app. Don’t miss it!

    http://charuonline.com/blog/?p=10396


    • சாரூன்னாக்க சீப்புதான், இந்ததபா அவுரங்கா சீப்பு. அவ்ளோதான்.

      அதுசெரி, அவுரங்கா சீப்புக்கும் அரவிந்தனுக்கும் யின்னா வாத்யாரே தொடர்பூ?😳

      • Rakesh Says:

        அடைப்புக்குறிக்குள் நீங்கள் எழுதியதற்கும் அரவிந்னுக்கும் என்ன சம்மந்தம் 🙄


      • ஸப்பாஷ். ஸர்யான பதில்கேள்வி. மெச்சப் பட்டீர்.

        ஆனால், நீங்கள் அந்த சீப் ஆசாமியின் கதையைப் படித்தவிட்டு (என்னால் நிச்சயமாக முடியாது), விமர்சனம் செய்தால், அதனை இங்கே பதிப்பதற்குத் தயார். மற்றபடி, தங்களுடைய தற்கொலை முயற்சிக்குக் குறுக்கே நிற்க மாட்டேன்.

  5. தீராவிடன் Says:

    அறிவியல், பொறியியல், தமிழர் வாழ்வியல் அனைத்தையும் இணைத்துத் திராவிடத் தர்க்கப்படி புனைந்த இலக்கியத்தர பதிவின்மூலம் ‘அணில் அமைச்சரைக்’ கிண்டல் செய்வோருக்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள்.

    வார்டுகளின் ஒன்றியமான தமிழகத்தில் திடீரென அணில்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதன் பிண்ணனியைப் புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

    இராமாயணக் காலம்தொட்டே இந்த அணில்கள் இந்துத்துவக் கைக்கூலிகளாக இருந்து வந்துள்ளன. இராமர் இஞ்சினீயரிங் கல்லூரியில் படித்ததற்கான சான்றிதழ்களை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரிடம் சமர்ப்பிக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படியெனில் இராமர் பாலம் சாத்தியமானது எப்படி? அங்கேதான் இருக்கிறது இந்துத்துவச் சதி.

    அணில்களைக் கொண்டு தங்கள் சேனையின் பொறியியல் படைப்பிரிவைத் தொடங்கி, ரகசியமாக இஞ்சினீயரிங் படிக்க வைத்துள்ளனர். அவ்வாறு படித்த அணில்களைக் கொண்டு இராமர் பாலத்தை வடிவமைத்து நிர்மாணித்துள்ளனர். அதற்கான அங்கீகாரமாகவே அணில் இனத்தின் உடலில் ராமம் போடப்பட்டுள்ளது, இன்றளவும் அதைக் காணமுடியும்.

    இந்த உண்மைகளை மறைத்து இராமர் பாலம் கட்ட அணில்கள் சிறிதளவே உதவியதாக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளனர் இந்துத்துவச் சதிகாரர்கள். இத்தனை காலமாக ஆழ்நிலை உறக்கத்திலிருந்த ‘ஸ்லீப்பர் செல்’ அணில்கள் இப்போது ‘ஆக்டிவேட்’ செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகவே வார்டு ஒன்றியமெங்கும் ஒருங்கிணைந்த நாசவேலைகள் நடந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இந்தச் சதிவலையின் பிண்ணனியை உணர்ந்து திராவிடர்கள் அனைவரும் அணில்வலைகளுடன் களத்தில் இறங்கி வேட்டையாடினால் மட்டுமே நமது ஆட்சியின் மீது சுமத்தப்படும் களங்கத்தைத் துடைத்தெறிய முடியும். ஆகவே, மூக்குகளைச் சாணை பிடித்துக்கொண்டு களமாடுவீர் மு க ஊப்பிகளே!


    • யோவ்!

      அணிலின் சாயவகைகளையும் அவை திராவிடத்தால் வெளுத்தெடுக்கப் படுவதையும் விட்டுவிட்டீர்களே!

      http://cameo.mfa.org/wiki/Aniline_dye

      • தீராவிடன் Says:

        ஐயா, நன்றி! இந்தச் சாயவைகயானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதலே எம் திராவிட முன்னோர்கள் பற்பல வண்ணங்களில் அள்ளிவிடும் கலையில் விற்பன்னர்களாயிருந்தனர்.

        ஆனால் ஐயா, சாயம் வெளுப்பதற்குக் காரணம் நாங்கள் அல்ல, இந்துத்துவர்களால்தான் எங்கள் சாயம் வெளுக்கிறது.

        ஸ்ரீராமர் சேனையில் இணையும் முன்பு அணில்கள் கருப்பு சிவப்பு வண்ணத்திலேயே வலம் வந்தன. அதன்பின்னரே அவை அடர் காவி நிறத்திற்கு நிரந்தரமாக மாற்றப்பட்டன. வரலாற்றைத் திரிக்காதீர்கள்!

  6. ராஜன் Says:

    மேலே ஒரு ஏழரையின் கமண்டை பார்த்ததும் கேட்க தோன்றியது.
    சாரு ஓவரா ஒளரங்கசீப் புகழ் பாடுவதை பார்த்தால் அந்தாளு யோக்கியன் இல்லைன்னு தெரியுது. (சூஃபிக்கள் போல).ஒளரங்கசீப் பற்றிய ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

      • dagalti Says:

        ஔரங்காபாதில் ஔரங்கஸெபின் கல்லறையைக் காண்டது ஒரு விநோதமான அநுபவம். தனது குருவின் தர்காவை ஒட்டி non-descriptஆக கிடதார் ஹிந்துஸ்தானின் ஆலம்கிர்.

        அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா துயிலிடங்களுடன் ஒப்புநோக்க ‘என்ன இது?’ என்று தோன்றும்.

        அந்தத் தெருவே இன்றும் கூட மிகச் சின்னதாகத் தான் இருக்கிறது.

        அதே ஔரங்காபாதில் தன் மனைவிக்கு ஔரங்கஸெப் கட்டுவித்தப் ‘பிபி கா மக்பரா’ (தக்கணத் தாஜ்) உண்டு.

        Not romanticising simplicity/Puritanism for its own sake. But his grave is very striking.

        ஏனோ தடுமாறி, அங்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த ஒரு ப்பீர்தோற்ற தாத்தாவுக்கு நற்சம்பாவனை அளிக்க தூண்டியது.

        ஔரங்கஸெப்பை மிகை எளிமைபடுத்தாது (ஒரு புகழ்பெற்ற eponymous தமிழ்நாடகம் கூட கண்டதுண்டு!) அணுகமுடிந்தால் நன்றாக இருக்கும்.

        மிச்சதெல்லாம் பரவாயில்லை, ஒருவாறு தேடிக்கொள்ளலாம். ஆனால் ‘ஆலம்கிர் ஒரு அற்புதக்கவிஞர்’ என்ற குற்றச்சாட்ட்டைப் பற்றி உடனடி கருத்து தேவை.

        எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. How does that balance against his ‘இசை = ஹராம்’


      • ஆ! 😩

        மறுபடியும் ஸூஃபிகூஃபி! 😠கோபம்கோபமாக வருகிறது.

        எந்தப் பதர் அப்படிப்பட்ட கவித்துவ வதந்திகளைப் பரப்புகிறது?

        (எதிர்காலத்தில் இந்த வதந்திகள் ஃபைஸல் செய்யப்படும், எச்சரிக்கை!)

        😭

      • Dagalti Says:

        Here you go:
        https://mobile.twitter.com/niksez/status/856879285759610880

        Wonder if it has been translated into English, let alone Tamil.

        Curious on what basis CN is asserting Aurangazeb’s poetics. வழக்கம்போல சும்மா தானே, இல்லை நிஜமாவே அப்படி எல்லாம் எதாவது prevailing கருத்து இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்னு..

      • ராஜன் Says:

        சாருவே அவர் ஒரு கவிஞர் என்று வதந்தியை ஆரம்பித்துள்ளார். இந்த கொடுமை இனி வாரம் இருமுறையாக வர உள்ளதாம்.

  7. Em Says:

    Thanks for highlighting these gems. It was spot-on. Really hilarious. Always thought of him as the scholarly type, which he is, but it is good to see his humorous side as well.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s