ஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்
August 17, 2019
ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய.
ஆகவே – அவருடைய இந்தக் காட்டுரையை, அவர் ஆக்கங்களில் ஒரு மாபெரும் மைல்கல் என்றே சொல்லிவிடலாம்!
…ஏனெனில், ஜெயமோகனின் தன்னம்பிக்கைக்கு அளவேயில்லை. அதிலும் அவர், நாம் நன்கறிந்த வரலாற்றுக்கே கதைவசனம் எழுதும் பாங்கிருக்கிறதே! இந்தக் கட்டுரை நெடுக அப்படித்தான் – ஆனால் ஒரேயொரு எடுத்துக்காட்டு.
“கிபி பத்தாம்நூற்றாண்டில் இந்துப் பெருமதங்களின் கட்டமைப்பில் சிதைவுகள் உருவாயின. கிபி 1004ல் கஜினி முகம்மது தொடங்கி இந்தியா மீதான துருக்கிய சுல்தான்களின் படையெடுப்பு தொடங்கியது.”
பிரச்சினை என்னவென்றால், பொதுயுகம் 711-12 வாக்கிலேயே பாரதத்தின் ஸிந்துப்பகுதி மொஹெம்மத் இப்ன் அல்-காசிம்-ஆல் பிடிக்கப்பட்டு லாஹூர் வரை பெரும் சூறையாடல்கள் நடந்தன. 713ல் ப்ராஹ்மணாபாத் (இப்போதைய ஸிந்த் மாநிலத்தில் இருக்கும் மன்ஸூரா, பாகிஸ்தான்) உடன்படிக்கை ஏற்பட்டது. பின்னர் சுமார் 300 வருடங்களுக்கு அப்பாஸிட்/உமய்யட் காலிஃபேட்களின் கீழிருந்த ஸிந்த் காலிஃபேட்டின் தலைநகராக இருந்தது – அழிச்சாட்டியங்கள் தொடர்ந்தன. இதன் கடைசியில் தான் பொ.யு. 1004 வாக்கில்தான் கஜினி மொஹம்மத் வருகிறார். இடிக்கிறார். கொல்கிறார். கொள்ளையடிக்கிறார். கற்பழிக்கிறார். அடிமைகளைப் பிடித்துக்கொண்டுபோய் விற்கிறார் – இது இஸ்லாமியவெறி ஸீஸன் #2. ஆனால் அதன் ஸீஸன் #1, பொ.யு 700களிலேயே தொடங்கிவிட்டது. நன்றி.
போகிறபோக்கில், வெகு சுலபமாக கிட்டத்தட்ட 300 வருட வரலாற்றை, நம் பெரும்பேராசான் கடக்கும் சாமர்த்தியம் இருக்கிறதே!
-0-0-0-0-0-
சூரபத்மன் சூரைத்தேங்காய் பக்தியியக்கம் வடநாடு தென்னாடு கஜினி மொஹம்மது1004 முன் பின் நம்மாழ்வார் உம்நாயன்மார் காலகட்டம் காலவட்டமென, எல்லா பக்கங்களிலும், கம்புக்குப் பதிலாக அவருடைய புத்தம்புதிய, ஜப்பானில் அவருடைய வாட்போர்குருவும் கருமானுமான ஹட்டோரி ஹன்ஸோவிடமிருந்து பெற்ற, ஸாமுராய் கடானா வாளைச் சுழற்றி அனைத்துக் கோட்பாடுகளையும் தரவுகளையும் கதறக் கதற வெட்டிக் கொன்றிருக்கிறார்! வரலாற்றையே உளறாராக, அவருடைய கறாரான முரணியக்கப் பார்வையில் எழுதியிருக்கிறார். (ஏண்டா பாவீ ஜெயமோகீங்க்ளா! அவரெப் போயி ஜப்பானுக்கு அளெச்சு ஊர்சுத்திக் காட்டீ இப்டீ ஸாவடிக்கிறீங்க! ஏற்கனவெ எஸ்ராவல் அங்கே போயி ஜப்பானையே ஓள்ச்சிக்கட்டிட்டாரேடா!)
அதுமட்டுமல்ல – தான் குருவாக வரித்துக்கொண்டிருக்கும் நித்யசைதன்ய யதியும், பெரும்பேராசானிய ஆன்மிக மரபில் அட்ச்சிவுடுபவர், பீலாவுடுபவர், தெரியாத விஷயங்களைப் பற்றி ஓவராகப் பேசுபவர் எனத் தெளிவாகச் சுட்டியிருக்கிறார். இந்த குருத்ரோகம் சரியா?
…அல்லது யதி ‘இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு’ அப்படி சொன்னார் என்பதும் பெரும்பேராசானுடைய வழமையான+வளமான பாரம்பரியம்போல ‘தொழில்முறையில்’ தயாரிக்கப்பட்டதோ? ஏனெனில், குரு நித்யா அவர்கள், உயிர்த்தெழுந்து வந்து மண்டையில் ஒரு குட்டுக்குட்டி ‘ஏண்டா மசுறு, என்னப் பத்தீ இவ்ளோ பீலா வுட்றே?’ எனக் கோபத்துடன் கேட்கத்தான் போகிறாரா என்ன? வசதிதான்!
அப்படிப் பார்த்தால் என் வீட்டுக்கு 1940ல் வருகை தந்த மொஹம்மத் அலி ஜின்னா, ‘ராம் ஜனாப்! உங்களைப் போன்ற கொர்-ஆன் அறிந்த சான்றோர்கள், பாகிஸ்தான் வந்து ஒரு மதராஸாவைத் திறக்கவேண்டும்’ என்று சொன்னதையெல்லாம் இப்போது அகழ்வாராய்ச்சி செய்து வெளியிடவேண்டும்போல இருக்கிறதே! ஐயகோ!!
அதுவும் இந்த அபத்தக் களஞ்சியக் கட்டுரை, அந்த எழவெடுத்த ‘விகடன் தடம்’ பத்திரிகையில் வந்திருக்கிறது.
விகடப்பேடிகளின் குசுமக் குழுமத்தில் – சம்பளம் வாங்கிக்கொண்டுதான் பிழைகளைத் திருத்த அதுயிது என உட்கார்ந்துகொண்டிருக்கும் தண்டச்சோற்றுப் பேடி எடிட்டர்கள் ‘வேலை’ செய்துகொண்டிருக்க வேண்டும் – ஆனால் என்ன மசுத்தைப் புடுங்கியிருக்கிறார்கள் இவர்கள்? ஒரு எழவையும் சரிபார்க்காமல் எழுதப்பட்டதை உடனடியாகப் புளகாங்கிதத்துடன் பிரசுரித்துவிட்டார்கள் போல!
ஆனால் பெரும்பேராசானும் இதற்கு (சொற்பமேயானாலும்) சன்மானம் வாங்குவார் என நினைக்கிறேன். அதன் நேர்மை குறித்து நான் பேசவிரும்பவில்லை. எனக்கு இந்த எழவிலெல்லாம் பொறாமையில்லை, அறச்சீற்றம் கூட இல்லை, வெறும் வருத்தம்தான். வீழ்ச்சி. (நேற்றிரவு அங்கலாய்ப்புப் பேச்சொன்றில், ஒரு சக ஆனால் அதிகிழட்டு நண்ப 80+வயதினர், கநாசு-திஜா-பிரமிள் நண்பர், இதனை ‘வீழ்ச்சி’ என்று சொல்லாதே, முன்னால் மேலே எங்கோ இருந்தால்தானே இது வீழ்ச்சி? இது ஒரு ‘தொடர்ச்சி’ மட்டுமே என்கிறார்… ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை)
சரி. அவரவருக்கு அவரவர் படுகுழி. எனக்கு ஒத்திசைவு. அவருக்கு, வரவர, மொத்தவுலகும். அலுப்புடன் பேசினால் மறுபடியும் ஏதாவது அடிப்பொடி வந்து, ‘நீ பாப்பான்தானே’ எனக் கேட்கும். மிக்க மகிழ்ச்சி.
நல்ல ஆசான், நல்ல சிஷ்யபேடிகள், வேறென்ன சொல்ல! मैं क्या कर सकता हूँ? जयमोहन साहब मुझे नहीं छोड़ रहे हैं! मैं थक गया हूँ… :-( விடாது கரப்பு எனச் சோகக்கதை தொடர்கிறதே!
முழுமூல முதற்கதை, வரலாறு
அதாவது, ஜெயமோகன், அவருடைய குரு சொன்னதாக அருள்வாக்கு அளித்திருப்பது:
“இமையமலையில் இருந்து கற்கள் உருண்டு கங்கையின் வழியாக நெடுந்தொலைவு வரும். அவை உருண்டு உருண்டு மென்மையும் ஒளியும் கொண்டு பெரிய முத்துக்கள் போல ஆகிவிட்டிருக்கும். அவற்றையே சாளக்கிராமம் என்கிறார்கள். இந்து மரபின்படி அவை பூசைப்பொருட்கள். சிற்பிகள் ஆகமமுறைப்படிச் செதுக்கிய கருவறைச் சிலைகளுக்கு நிகரானவை. அவற்றைச் செதுக்கியவர் மகத்தான சிற்பி. என்றுமிருக்கும் கங்கையால் உருவாக்கப்பட்டவை அவை. காலத்தின் வடிவான நதிப்பெருக்கால். அந்தக் கல் வந்தடைந்த தொலைவுதான் அதைச் சிற்பமாக ஆக்குகிறது”
இதிலும் ஆகமமா? விடாது போலிருக்கிறதே இந்த ஆகம கமகம. சாளக்கிராமங்கள் = ஆகமமுறைப்படிச் செதுக்கிய கருவறைச் சிலைகள்! அப்படியா சொன்னார், குரு நித்யா? அவர் எங்கிருந்து இதனைத் தெரிந்துகொண்டிருப்பார்? சாளக்கிராம ஆராதனை, அதன் மேன்மை பற்றியெல்லாம் வேண்டிய அளவு புராணங்களிலும் மஹாபாரதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது உண்மைதான் என்றாலும், ஆகமங்கள்? (இதற்கு பிஸிஏகே47 பீகாக் ‘மயில்’ நாயர் போன்ற துறைவல்லுநர்களான துரைமார்கள்தாம் பதில்சொல்லவேண்டும்!)
முதலாம் மாற்றுவரலாறு – இதுவமது
சாளக்கி என்ற ஒரு ராக்கதி, கர்நாடக அவலக்கியின் சகோதரி, வில்லிபுத்ரியானவள் மஹாபாரதத்தினுள்ளே உறைந்திருக்கும் கடோத்கசனின் ஒன்றுவிட்ட மாமன்மகளானவள்; அவள் கொஞ்சம் புத்திசாலியானவளாதலால், #வெண்முரசு இரண்டாம் புத்தகத்திலிருந்தபோதே, அதன் #ட்ரெண்டைப் பார்த்துக் கதிகலங்கிப்போய், எதிர்காலத்தில் தனக்குப் #பிரச்சினை வரும் என உணர்ந்து அதிர்ந்து, சடையைக்காணோம் மரவுரியைக் காணோம் என உன்மத்தத்துடன் மத்துறு தயிர் போல நெகிழ்ந்து ஓடிப்போனவள்.
ஆனால் வெண்படுகுழியிலிருந்து அவள் சென்றடைந்த இடம் வியாசனின் வியாசம், பாவம். ஒர்ரே ஆயாசம்; பின்னர் வியாசபாரதத்திலிருந்து வில்லி பாரதமாகப் பாதம் ஊன்றி எழும்பி வானோக்கி எழுந்து ஆகச்சிறந்த பரத நாட்டியமாடிக்கொண்டே போகையில், டமாலென்று தடுக்கிவிழுந்து கடைசியில் ஒருவழியாக வால்மீகி ராமாயணத்தைச் சரணடைந்தாள். அங்கும் அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை நம் பேரும்பேராசான்! அவர் எவரைத்தான் நிம்மதியாக இருக்கவிட்டார், சொல்லுங்கள் – கிழவயதில் பாவப்பட்ட பீஷ்மரையும் க்ருபாச்சாரியரையும் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரவைத்த பராக்கிரமம் மிக்கவராயிற்றே அவர்!
ஆகவே வெண்முரசின் நீட்டலில், பெரும்பேராசான், மஜாபாரதத்துக்குப் பின், கம்பராமாயணத்தையும் ஆகவே வால்மீகியின் ராமகதையையும் வெச்சிசெஞ்சி, ராம்போயணம் எனக் குறைந்த பட்சம் 100, 000, 000 பாகங்களில் எழுதவிருப்பதாக அறிந்த அவள், படுசோகமுற்று முன்னெச்சரிக்கையுடன் ராமாயணத்தினின்றும் மறுபடியும் விட்டேகி, வேறுவழியேயில்லாமல், தனக்குத்தானே ஒரு செல்ல ராமாயணத்தை ஃபேஸ்புக்கில் எழுதி அதனுள் அடைக்கலம் புகுந்தாள் என்பது ஜப்பான் நாட்டார் வழக்கில் இருக்கும் ஒரு தொன்மம். அண்மையில் ஜப்பான் சென்றபோது பேராசிரியர் நிக்குமாநிக்காதா அவர்களிடம் ஜெயமோகன் அப்படித்தான் சொன்னார்.
அது கெடக்கட்டும், கழுதை.
நமக்கெல்லாம் முன்னறிமுகமாயுள்ள அந்த சாளக்கி என்பாளுடைய ராமாயணம்தான் பிற்காலத்தில் சாளக்கி ராமம் என்றழைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு சாளக்கிராமம் என்றானது என்பதை நித்யசைதன்ய யதிக்கு ஜெயமோகன் சொன்னார். இதற்கு அகழ்வாராய்ச்சி செய்து, ‘தரவுகளை போர்க்காலரீதியில் தொழில்முறையில் உருவாக்கி நிறுவவும்’ என விக்கீபிடிய ஆபத்துதவிகள் அணியை முடுக்கிவிட்டிருக்கிறார்.
சரி. என் வரலாற்றுக்கு வருவோம். காலத்தின் ஓட்டத்தில், ப்ரொட்டீனின் ஊட்டத்தில், சாளக்கியின் ராமகாதையின் படிமமான தொன்மமாக, குழைந்திருக்கும் அருவ உருவங்களாக, உருவகங்களாக, ஆற்றோரக் கூழாங்கற்கள் கருதப்படலாயின; ஒளியும் மென்மையும் மிக்க அவை இன்றுவரை சாளக்கிராமம் என அழைக்கப்படுவதில் நம் ஞானமரபு பெருமைப்படவேண்டும்.
இரண்டாம் மாற்றுவரலாறு – அதுவுமிது
அது கன்னட ஹொய்சாளர்களின் ஆட்சியின்போது காசியில் இருந்து அவர்களால் கொணரப்பட்ட பிராம்மணர்கள் கிராமம் கிராமமாக, கர்நாடகத்தில் ஆங்கிருந்த திராவிடர்களின் நிலங்களை அபகரித்தது குறித்து நான் முன்பே எழுதியிருப்பதை, நான் எப்போது எழுதினேன் என நோண்டவேண்டாம். எழுதினேன் என்றால் எழுதினேன். அவ்ளோதான். அதுவும் நான் எழுதவில்லை. எனக்கு இந்த வரலாற்றைச் சொன்னது நினைவெல்லாம் நித்ய சைதன்யமஹாப்ரபு யதீந்திரர்.
அவருக்கு அந்த நிகழ்வைச் சொன்னது அவருடைய குரு – நாராயணகுரு. நாராயணக்குருவுக்கு ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளன் இதனைக் குறிப்பிட்டிருக்கலாம். இந்தப் பல்லாளன், தன் பெயரைக் காரணப்பெயராகப் பெற்றவன். வாயெல்லாம் பல்லாக இவனுக்கு இருந்தது. அவற்றை, அதாவது அப்பற்களைப் பல்லாண்டு ஆண்டவன் அவன், அதாவது கமலகாசன், என்கிற உண்மையால் அவன் அப்படி வீரபல்லாளன் என அழைக்கப்பட்டான் என என்னுடைய சொந்த, அதாவது வேறுயாரிடமும் இல்லாத மோனியர்-வில்லியம்ஸ் அகராதியில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அந்த அசுரகுல பிராம்மணர்களுடையதாக மாறிய அந்தக் கைப்பற்றப்பட்ட கிராமங்கள், ஹொய்சாளகிராமங்கள் எனக் கிரமமாக அழைக்கப்பட்டு, காலத்தின் ஓட்டத்தில் அவை காவிரியில் விழுந்து திசைதேர் வெள்ளத்தில் புரண்டு திரண்டு தேய்ந்து மாய்ந்து அழகுக் கற்களாகவிட்டனவென்றாலும், தேய்மானத்தில் ஹொய் போய்விட்டது, பாவம்.
பின் மிகுந்திருப்பது சாளக்கிராமம் அன்றிப் பிறிந்தொன்றில்லை. இதைத்தான் நாம் பூஜிக்கிறோம்.
மூன்றாம் மாற்றுவரலாறு – அதேஅதே
சென்னை வடபழநிக்கு வடக்கேயுள்ள பிரதேசம், இன்று சாலிக்கிராமம் என்றழைக்கப்படுவது தெரியுமா?
அங்கு களப்பிரர் காலத்தில் கல் குவாரிகள் இருந்தன. அவற்றிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட தொன்மைவாய்ந்த கற்சிதிலச் சின்னங்கள், ‘சாளக்கிராமம்’ என அழைக்கப்பட்டு இந்தியாவெங்கும் சென்றன. இதனை 1212ல் கண்டுபிடித்தது ஆங்கிலேயல் தொல்லியலாளரான ‘ராபர்ட் பிரையன் ஃபுட்’ என்பதை நான் கண்டுபிடித்தேன்.
இன்னிகழ்வுகளை நாம், பெரும்பேராசான ஞானமரபுப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும்; அதாவது, இந்திய ஆன்மிக மரபில் தத்துவதரிசனங்கள் உருவானதுபோலவேதான். ஒன்றை ஒன்று உள்வாங்கிக்கொண்டு முரணியக்கத்தில் முரண்டுபிடித்து சளியொழுக அழுது, சிந்தி, துப்பி கலந்துகட்டி என… ஒர்ரே அதகளம், ரத்தக்களறி, போங்கள்!
பெருங்கற்கள் சிறுகற்களை உள்வாங்கியபோது, சந்தடிசாக்கில் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களுக்குள் புகுந்துகொண்டார்கள் என்பதுதான் உண்மையென்றாலும் பெருந்தெய்வங்கள் சிறுதெய்வங்களைக் கபளீகரம் செய்து அப்டியே முள்சா முழுங்கி ஏப்பம்விட்டன என்பதுதான் பெரும்பேராசானிய உண்மை.
நிலைமை இப்படி இருப்பதால் பண்டைய பாரம்பரியத்தின்படி, கொஞ்சம் குழம்பிப்போன சிறு சாளக்கிராமங்கள் பெருநகரங்களில் புகுந்துகொண்டன.
அப்படித்தான் சாளக்கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, பின்நவீனத்துவ சென்னைக்குள் புகுந்துகொண்டு, உலகமயமாக்கலால் உந்தப்பட்டு ஏற்பட்ட, ஏகாதிபத்திய இடநெரிசல் காரணமாகப் பாவம் நசுங்கி பிதுங்கி நெளிந்து குழைந்து, கடைசியில் பின்நவீனத்துவ சாலிக்கிராமம் ஆகிவிட்டது, அந்தோ பரிதாபம்.
நன்றி.
நான்காம் மாற்றுவரலாறு – இதுவும் ஏது
இது கொஞ்சம் பேய்க்கதை.
தற்காலத்தில் உள்ள ஒருமாதிரி மாற்றுமூளையுள்ள இளைஞப் பேய் ஒன்றின் முன்னோடிகளைப் பற்றியது. இந்த தற்காலப் பேய், நேரில் போய்ப் பார்த்ததுபோல லெமூரியா பல்கேரியா பொக்கைவாய்யா பயிர்வட்டம் மயிர்வட்டம் இல்லுமினேட்டி கம்மினேட்டி என அட்ச்சிவுட்டுக்கொண்டிருப்பது போலவே, அதனுடைய முன்னோர்களும் செய்துவந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக, சங்ககாலத்தில் பாடல்பெற்ற, மிகவாகப் போற்றப்பட்ட சான்றோர், வீரர் ஒருவர் – அவர் பெயர் — பா. ரி. சாளன். பாட்டனார்மண்டே ரிப்பேர் சாளன்.
இவர் கொடைக்கானல் பக்க காவுஞ்சி கிராமம் பக்கத்திலுள்ள குக்கிராமம் (பேருக்கு ஏற்றபடியே, இந்த கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்த பலர், பெரியபெரிய நகரங்களிலுள்ள ஃபைவ்ஸ்டார் ஹோட்டல்களில் சமையலாளர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு கொசுறு விஷயம்) ஒன்றில் வசித்துக்கொண்டிருந்தபோது (சுமார் கிமு/பொதுயுகத்துக்கு முன்னே 5000 வருடங்கள் போல!) வானத்தில் இருந்து ஏலியன்கள் வந்து குதித்திருக்கின்றனர். சாளனார் அவர்களிடம் பொருதி, அவர்கள் தேரைப் பொடிப்பொடியாக்கியது மட்டுமல்லாமல், ஏலியன்களின் முன்பக்க வாலை ஒட்ட நறுக்கி அவர்களை வெறும் எலியன்களாக மாற்றிச் சிறைபிடித்து விட்டார். பின்னர் அவர்கள் தம் பின்பக்க வால்களை மட்டும் வளர்த்திப் பரிணாம வளர்ச்சி கண்டனர் என்பது நாட்டார்கதை. தொன்மம். படிமம். ஆழ்மனக் கனவிலித் துணுக்கு. கூட்டு நனவிலி நிலை.
சரி, சரி… பொடிப்பொடியான தேர்கள் என்னவாயின என்று கேட்கிறீர்கள் அல்லவா? அவற்றின் பளிச்சிடும் மினுக்கிடும் பொடிப்பகுதிகள்தாமய்யா பிற்காலச் சாளக்கிராமங்கள். முதலில் எலிகள்தாம் அவற்றை, தங்கள் புராதனச் சின்னாபின்னங்களை வழிபட்டுவந்தன. ஒரேயடியாக இப்படி வழிபட்டுபட்டு, தேய்ந்து அவையெல்ல்லாம் ஓளியும் மிருதுத்தன்மையும் கொண்டவையாகிவிட்டன. பின் மனிதர்களும், முக்கியமாக பா.ரி.சாளன் வம்சாவளியினரும் அக்கற்களை வழிபட ஆரம்பித்தார்கள். ஆக, சாளக்கிராமம் = சாளன் வசித்த கிராமத்தில் கிடைத்த ஏலியன்கற்கள்.
‘ஏலீ ஏலீ, லெமா ஸபக்தானி!’ என யேஸ்ஸு சிலுவையில் அறையப்பட்டபோது கூக்குரலிட்டுச் சொன்னாரல்லவா? அதே எலிகள்தாம் அவை. புரிந்ததா?
எந்த இருட்டில் நடமாடும் எலிகளின் நிழல்கள் நாம், இப்போது சொல்லுங்கள்? ஏலி என்றால் இறைவன். ஏலி. எலி. ஏலியன். கொடைக்கானல். பா. ரி. சாளனின் சாளக்கிராமம்… புரிகிறதா? யேஸ்ஸுவே சாளக்கிராமத்தை வழிபட்டிருக்கிறார்.
‘எழுத்துஎலிவித்தவன் இறைவனாவான்’ எனச் சும்மாவா சொன்னார்கள் நம் பண்டமிழ்ப்புலவர்கள், சொல்லுங்கள்?
எரிக் ஃபான் டேனிகன் எழுதிய ‘சாரியட்ஸ் ஆஃப் த காட்ஸ்’ – கடவுளர்களின் தேர்கள் – எனும் இதிஹாஸத்தில் இந்த விவரங்கள் காணக் கிடைக்கின்றன.
ஐந்தாம், நிஜவரலாறு – இதேதானது
‘சாளக்கிராமம்’ என்பதன் அறிவியல்/தொன்மவியல் வரலாறு அழகானது. ஆச்சரியம் தருவது. இதுகுறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. பல சான்றோர்கள், அகழ்வாராய்ச்சி, மொழியியல், உயிரியல், தொன்மவியல், தொல்பொருளியல், பூகோளம் எனப் பலப்பல தொடர்புள்ள துறைவல்லுநர்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றனர்.
முதலில் சில விவரங்கள்.
சாளக்கிராமம் (அல்லது சாலிக்கிராமம்) – என்பவை, பொதுவாக ஃபாஸ்ஸில்கள் (Fossil); இதனை, ஒருமாதிரி — மில்லியனோமில்லியன் வருடங்களுக்கு முன் இறந்துபுதைந்த உயிரினங்கள் / அவற்றின் ஓடு / தாவரங்கள் / மரங்கள் / இன்னபிறவிலிருந்து காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம்கொஞ்சமாக பாகங்கள்/ஸெல்கள் பெயர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிறகனிமங்கள் உள்ளீடு செய்யப்பட்டவையாகக் கொள்ளலாம். (நம் புதுச்சேரி பக்கத்திலிள்ள திருவக்கரை கிராமத்திற்கருகில் இப்படிக் கல்லாக ‘மாறிய’ பண்டைய ‘பெட்ரிஃபைட்’ மரங்களின் பூங்கா ஒன்றிருக்கிறது – கடந்த இருபது+ ஆண்டுகளில் பலமுறை சிறார்களையும் பிறரையும் குழுக்களாக அங்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்; பொக்கிஷம்! நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும் இப்படிப் பலப்பல அழகான ஃபாஸ்ஸில்களைப் பார்க்கலாம் – பண்டைய தாவரங்களின் உருவம் அப்படியே கரிக்கற்களினூடே தெரியும்! இதுவும் அழகுதான்!)
சாளக்கிராமங்கள் பெரிய அளவில் இன்றுவரை கிடைக்குமிடம், நேபால் நாட்டின் கண்டகி மாவட்ட முக்திநாத் அருகில் இருக்கும் கிராமமான சாலக்கிராமம். (ஆனால், பலப்பல பிற இடங்களிலும் உலகளாவிய வகையில், சிறிய அளவில் கிடைக்கின்றன; ஆனால் குரு நித்யா ‘சொன்னது’ என்பதற்கு மாறாக கங்கைக்கும் சாளக்கிராமத்துக்கும் ஸ்னானப்ராப்தி கிடையாது! இருந்தாலும் ‘பாயும் நீரெல்லாம் கங்கை’ என்கிற கவித்துவப் பார்வையில் பார்த்தால்…)
சாலக்கிராமம் என்று இந்தக் கிராமத்துக்குப் பெயர் வந்ததற்குக் காரணம் – அது சால மரங்களால் (Vatica/Shorea robusta) சூழப்பட்டிருந்தது.
சாளக்கிராமங்களில் பலவகை. இவற்றில் அம்மோனைட்டுகள் (ammonite) என்பது ஒன்று – ஆனால் தற்போது இவை அம்மோனைட்டுகள் என்று குறிப்பிடப்படுவதில்லை, வேறு பெயர்(கள்) – ஆனால் நினைவிலில்லை; ஆகவே அம்மோனைட்டுகள் என்றே குறிப்பிடுகிறேன்.
இவை பண்டைய கடல்வாழ் உயிரிகள். ஹிமாலயப் பகுதிகள் கடலடியில் இருந்தபோது, அதாவது பாரத நிலப்பரப்பு ஆஃப்ரிகா/ஆஸ்த்ரேலியாவை விட்டு ஆசிய நிலப்பரப்பில் முட்டிமோதி இடித்து, இடித்தபகுதிகள் மேலெழும்பி மடிப்புமலைகளாக, நம் ஹிமாலய மலைகளாக 50 மில்லியன் வருடங்கட்குமுன், உருப்பெருவதற்கு முன், இவை இருந்தன.
பின் நிலஅழுத்தத்தில் ஃபாஸ்ஸில்களாகி – பின்னர் நில அரிப்பின் வழியாக வெளிப்பட்டிருக்கின்றன. இவை கொஞ்சம்போல ‘கேரள புரோட்டா’ போன்ற வடிவம் உடையவை. சுற்றிச் சுற்றி ஒருமாதிரி சக்கரம் போலத் தோற்றமளிப்பவை. இந்த அம்மோனைட் ஃபாஸ்ஸில்கள், இப்படிச் சக்கரம் போலத் தோற்றமளிப்பதால் இவை விஷ்ணு/திருமால் உருவமாகக் கருதப்படுகின்றன. (இந்த அம்மோனைட்டுகள், கொஞ்சம் பெரிய அளவிலானவையும், சென்னையின் நம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன; சென்னையின், விகசிக்கவைக்கும் பரமரகசியங்களில் ஒன்று இந்த அருங்காட்சியகம்!)
ஆனால் அம்மோனைட்டுகளுக்கு அப்பாற்பட்டுப் பலப்பல, பிற பண்டைய உயிரிகளின் ஃபாஸ்ஸில்களும், சாளக்கிராமங்களாகக் கருதப்படுகின்றன. க்ருஷ்ணன், யுதிஷ்டிரருக்கு போதிப்பதாக மஹாபாரதத்தில் (வனபர்வம்?) வரும் ‘ஸாளக்கிராம ஸ்தோத்ர மந்திரத்தில்’ பிறவகையான சாளக்கிராமங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன – அதாவது சங்கு, பசுவின் கால், ஆமை++ என விரிகிறது அந்த ஜாபிதா. ப்ர்ஹ்ம புராணத்திலும் இன்னும் பலப்பலவற்றிலும் (கருடமஹா, ஸ்கந்த, ஷிவமஹா, பத்ம ++), இவை பற்றிக்குறிப்புகள் இருக்கின்றன என்பது என் நினைவு. கைவசம் பழைய குறிப்பேடுகள் இல்லை.
அதே இடத்தில் கிடைக்கும் சிறுகூழாங்கற்கள், தேவிஸ்வரூபத்தின் பாற்சுரப்பி/மார்பங்கங்களாகக் கருதப்பட்டு அருளுணவளிக்கும் ப்ருத்வி / புவித்தாய்வடிவில் ‘தேவி சாளிக்கிராமம்’ என அழைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன; உடைந்த அம்மோனைட் ‘சக்கர’ ஃபாஸ்ஸில்கள், விநாயகரின் உடைந்த துதிக்கையாகவும் கருதப் படுகின்றன. என்னே நம் கற்பனை வளம்!
நான், அதே இடத்திலிருந்து கொணர்ந்த, பவழப்பாறை ஃபாஸ்ஸில்களையும் சாளக்கிராமமாக வைத்துப் பூஜிப்பதை ஒரு கர்நாடக மாத்வர் வீட்டில் பார்த்திருக்கிறேன். இதை ‘த்வாரக ஷிலா’ – குஜராத் துவாரகையின் சின்னமாக வரிக்கிறார்கள் அவர்கள். பாரதத்தில் பிற வைணவ சம்ப்ரதாயத் திரள்களிலும் இந்தப் பழக்கம் இருக்கிறதென்றார் அந்த மாத்வர். எனக்கு அதுபற்றி(யும்) அறிவில்லை. க்ருஷ்ணன் கதைகளைக் கேட்டு அந்த ஃபாஸ்ஸிலைப் பார்த்தால், காதில் வேய்ங்குழலோசை! பாரதியின் கண்ணன்பாட்டு. ‘பார்த்த இடத்திலெல்லாம்…’ ஆஹா!
பௌத்தர்களில் பலரும் (கௌதம புத்தரும் கடைசிவரை தன்னையொரு தார்மிக் (தற்கால ‘ஹிந்து’) ஆகத்தானே கருதினார்? There never was a clean break, anyway!) அம்மோனைட் சாளக்கிராமங்களை தர்மசக்கரத்தின் குறியீடாகவும் தியானக்குவியப் பொருளாகவும் வரிக்கிறார்கள். ஷிவாலிக் வட்டார மடாலயங்களிலும், மலைக்கடவுளர்களுக்கான ‘சோர்டென்’ வகை மலைசார் வழிபாட்டிடங்களிலும் பூஜைப் பொருட்களாக, ஏகத்துக்கும் இவை மூச்சுமுட்டுமளவு இருக்கின்றன. அண்மையில், அருணாசலப் பிரதேசத்திலிருந்து பெங்களூர் வந்து விபஸ்ஸனா தியானம் ஜென் டர்புர் என்று எஸ்ரா போலக் காலட்சேபம் செய்துகொண்டிருக்கும் ஒரு இளைஞனிடம் (நல்ல பையன் தான்! ஆனால் ஒர்ரேயடியாக ஓவராகப் பேச்சோதிபேச்சு. என்னை எனக்கு நினைவுபடுத்திய மணியம்!) பேசிக்கொண்டிருந்தபோது, பௌத்தத்தில் உருவவழிபாடே இல்லை என்றான். அவன் மேஜையில் அவனே பொட்டிட்டிருந்த ஒரு புத்தர் சிலை. புத்தக அடுக்குக்கு நடுவில் பூபோட்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு அம்மோனைட் சாளக்கிராமம். வாழ்க பௌத்தம்.
-0-0-0-0-
சரி.
உங்களுடைய சொந்த சாளக்கிராமக் கதையை, ஒரு பின்னூட்டமாக இடவும்.
ஜெயமோகன் பதிவையும் இந்தப் பதிவையும் உங்களுடைய சுயபுராணங்களையும் தொகுத்து பத்ரி சேஷாத்ரிக்குக் கொடுத்தால் அவர் உடனடியாக அதனைக் குப்பையில் விட்டெறியக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நன்றி.
August 17, 2019 at 16:38
ஐந்தாவதான நிஜ வரலாற்றை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தேன். உண்மையாகவே நல்ல தகவல்.நான் அறிந்திறாத பலவற்றையும் அறிந்து கொண்டேன். பத்ரிநாத் கேதார் நாத் பயணம் போன போது ருத்ராட்சமும், சாளக்கிராமமும் வாங்கி வரச்சொன்ன நண்பர்கள் அதிகம். அவ்ற்றைப் பற்றிய அறிவு இல்லாததால் ஏமாந்து விடுவோமோ என்று பயத்தில் வாங்காமலே வந்து சேர்ந்தேன்.என் அம்மாவழித்தாத்தா பூஜையில் சாளக்கிராமம் வைத்திருந்தார் என்று நினைவு.
பஞ்சாயதன பூஜை என்று ஒரு வழிமுறை. இதனை சங்கர மடங்கள் எடுத்துவைக்கின்றன. அந்த பூஜைகள் ஐந்து கற்களுக்கே செய்யப் படுபவை. அவை சாளக்கிராமக்கற்களா என்பதனை அறியேன்.
தஞ்சாவூரை அடுத்த கிராமமான வல்லத்திலிருந்து ஒருவகைக் கல் அந்த ஐந்து கற்களில் ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தெரியாத செய்திகளை உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன்.
மற்ற நான்கு கதைகளையும் படித்துச் சிரித்தேன்.அதைப்பற்றி ஏதாவது எழுத்ப் போய் பேராசானின் அமெரிக்கப் பின் தொடரும் நிழல்கள்,”ஏ! ஆரியப்பதரே! உன்னால்தான் நான் வெளிநாட்டுக்கு ஓடிப்போனேன்”என்று வந்து கத்தினால் , அதுவும் தஸ்புஸ் ஆங்கிலத்தில், என்ன செய்வது.?ஆசானும் “ஓய்வுபெற்றபின் என்ன செய்வ்து என்று தெரியாமல் நான் நான் என்று தருக்குபவன்” என்று நற் சான்றிதழ் கொடுத்தால் என்ன செய்வது? கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. பாரி சாலன் வேறு இல்லுமினாட்டிகளிடம் என்னைப் பிடித்து ஒப்படைத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.
August 17, 2019 at 17:22
யோவ்!
‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ன்னிட்டு சர்ணாகதி அட்ஞ்ச்டு, ஸர்யா? இன்னா நாஞ்சொல்றது??
August 17, 2019 at 16:44
“இடித்தபகுதிகள் மேலெழும்பி மடிப்புமலைகளாக, நம் ஹிமாலய மலைகளாக 50 மில்லியன் வருடங்கட்குமுன், உருப்பெருவதற்கு முன், இவை இருந்தன.”
then, he is not too far off, right ?
August 17, 2019 at 17:19
சாரே! பிர்யல! :-(
August 17, 2019 at 17:53
He said those things rolled down the Himalayas into Ganges, and I think you said the same thing ?
Confused :(
August 17, 2019 at 17:57
Nonno – there is no Rolling Stones or Mick Jagger in there! Please!
Ganga is also running away from Aasaan. Please see the map given. These salagramams are NEVER found along Ganga.
Thanks!
August 17, 2019 at 17:55
ஐயா கண்ணன், தாங்கள் கிண்டல்தான் செய்கிறீர்கள் எனப் புரிகிறது, பேராசான் சற்றொப்ப ஆயிரம் கிமீ வித்தியாச அளவில் தான் தவறு செய்திருக்கிறார். அப்பாவியாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கையை இப்படியா நேபாளத்திலிருந்து ஈவ்டீஸிங் செய்து கைபிடித்திழுப்பது?
மேலும் சுமார் 50மில்லியன் வருடங்களுக்கு முன் அந்த அம்மொனைட் உயிரிகள் வாழ்ந்திருக்கலாம் – ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு காலகட்டம். ஹிமாலயத்தில்தான் கங்கையும் ஸிந்துவும் ப்ரம்மபுத்ராவும் உதிக்கின்றன. பின்னர் அங்குமிங்கும் ஓடுகின்றன ஆகவே அஸ்ஸாமில் ஓடும் பிரம்மபுத்ரா கரையில்தான் பாகிஸ்தானின் லாஹூர் இருக்கிறது என்று பெரும்பேராசான் அட்ச்சிவுட்டாலும் வுடுவார். எல்லாம் ஹிமாலய நீர்தானே!
ற்றொம்பத் துள்ளவேண்டாம், கேட்டோ?
August 17, 2019 at 18:53
Ok, got it :) I just want to know where Aasan erred in this article.
But 1000 kms is within his tolerances I guess.
August 17, 2019 at 19:04
:-) Happy to be of service… But, in a small para, he erred at SO many levels 1) distance 2) origin 3) process of formation 4) geological process of transformation/metamorphoses of rocks 5) size/shape of salagramams 6) petrification 7) use in rituals 8) how they get unearthed etc etc not to miss out his attributing his peela-vuttufication to someone else!
But yes! With his confirmation/availability bias – 1000kms is not really much given his capacity. I agree. :-)
But I really admire his incredible confidence, don’t you too, siree?? ;-)
August 17, 2019 at 19:39
Given his style, this is not a surprise. Usually he hears something and thinks about where to fit it into his philosophy and rolls into an instant ‘தத்துவம்’ and discard the data with a stock disclaimer saying ‘I am not researcher’.
This way he can pull a ‘தத்துவம்’ out of anything. Young readers are overawed by his wisdom and turn into fans.
August 17, 2019 at 19:40
You nailed it, buster! :-)
August 28, 2019 at 16:51
அன்பு ஐயா, அறிதலிலுள்ள சிக்கல்களை விளக்க முற்படும் ஓர் கட்டுரை.
https://www.scientificamerican.com/article/the-neuroscience-of-reality/
உங்கள் இப்பதிவோடு இணைத்து குழப்பி படிப்பது என் தனிப்பட்ட சிக்கல். 😃
August 28, 2019 at 18:29
ஐயா ரேடியோகன்ட்ரோல், அந்த அனில் ஸேத் அவர்களின் கட்டுரையைப் படித்தேன். நன்றி. அவர் தொகுத்த 50 ந்யூரோஸைன்ஸ் கருத்துகள் புத்தககத்தையும் படித்திருக்கிறேன். அழகான, க்ளிப்தமான புத்தகம்.
ஏண்டா, எல்லார் மூளையும் அவரவர் பார்வையும், ப்ரத்யட்சமும் வேறவேறடா, இதுகூட வொனக்குத் தெர்யலையே என்கிறீர்கள். வாஸ்தவம் தான்.
:-)
August 17, 2019 at 18:02
Please spend a few minutes to get to know the history of ammonites…
August 17, 2019 at 21:23
நீங்கள் இந்து லிபரலா? சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றவரா? உங்கள் சாளக்கிராம விளக்கம் அவ்வாறு இருக்கிறது.
August 17, 2019 at 22:16
1. ‘ஹிந்து.’
2. ‘லிபரல்’ அல்லன். ஆனால் இல்லிபரல் அல்லன் எனவும் நினைக்கிறேன்.
3. சிலவற்றில் உண்டு. சிலவற்றில் இல்லை. பல தெரியா. எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிக் கருத்துசொல்ல, நான் அறச்சீற்றத்துடன் அட்ச்சிவுடும் எழுத்தாளன் அல்லன்.
4. சாளக்கிராமத்தை நான் விளக்கவில்லை. நான் அறிந்தவரையில் அதன் வரலாற்றைச் சொன்னேன். மேலும் நான் அருகிலிருந்து தொட்டு என்றெல்லாம் பார்த்திருக்கிறேனே தவிர, அவை உள்ளிட்ட எந்த சடங்கையும் செய்ததில்லை. அவ்வளவுதான்.
ஐயா, திருப்தியா? இதற்குமேல் தெரிந்துகொண்டு என்னவாகப் போகிறது, சொல்லுங்கள்? நான் எழுதியதில் ஏதாவது தவறிருந்தால் தாராளமாகச் சுட்டுங்கள், குட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
நன்றி.
August 18, 2019 at 04:11
ஐயா ராமசாமி அவர்களே,
//கேட்பவன் கேனையனாயிருந்தால் எலி ஏரோபிளான் ஒட்டும்.//.நீங்கள் 5 தாவது பந்தியில் குறிப்பிட்டுள்ள தகவல்களை முன்பு படித்துள்ளேன்.நான் முன்பு குறிப்பிட்டது போல் நாய் வாலை நிமிர்த்த முடியா மனம் தளரா விக்கிரமன் நீவீர்.
August 18, 2019 at 10:11
விக்கிரமன் விக்கிவிக்கிச் சாக விருப்பமற்றவன் என்பதால்… கடையின் இந்த அத்தியாயம்… …
August 18, 2019 at 09:44
//அல்லது யதி ‘இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு’ அப்படி சொன்னார் என்பதும் பெரும்பேராசானுடைய வழமையான+வளமான பாரம்பரியம்போல ‘தொழில்முறையில்’ தயாரிக்கப்பட்டதோ? ஏனெனில், குரு நித்யா அவர்கள், உயிர்த்தெழுந்து வந்து மண்டையில் ஒரு குட்டுக்குட்டி ‘ஏண்டா மசுறு, என்னப் பத்தீ இவ்ளோ பீலா வுட்றே?’ எனக் கோபத்துடன் கேட்கத்தான் போகிறாரா என்ன? வசதிதான்!//
கொஞ்சம் கரு… சொல்ற மாதிரி வாடை வரல? அவருந்தான் அண்ணா அன்றே(எனக்கு 2வயதிருக்கும்போதே)…, பெரியா… சொன்னார், என அட்சிவுடுவார், அத்தெல்லாம் ஒத்துக்கல?
August 18, 2019 at 10:10
ஆ! இப்படியா வெட்கமில்லாமல் கண்டதையும் எடுத்துக்காட்டுவது?
கொஞ்சமாவது பண்பு வேண்டாம்?
ஸண்டேல என் மண்டேயை பொளக்கிறீரே! :-(
August 20, 2019 at 04:18
https://www.jeyamohan.in/124966#.XuVSxVXtS_Qw
Your views? Others appreciate.
August 20, 2019 at 11:07
ஐயா. இத லூஸ்ல வுடுங்க.
ஏனெனில், வாசகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில்/திக்கிலிருந்து வருகிறார்கள். நான், வெறும் திக்குத்தெரியாத காட்டிலிருந்து, திக்திக்கென்றடிக்கும் இதயத்துடனும் திகைப்புடனும் அவரை அணுகி உடனடியாகத் தெறித்தோடுகிறேன் எனவும் கருதலாம். என் அறியாமை/போதாமைதான்.
என்னை, ஆகவேயும் விட்டுவிடுங்கள்.
எனக்கு இதற்குமதிகமாக ஆகச்சிறந்த சகதியில் திளைக்கும் சக்தியில்லை.
நன்றி.
August 20, 2019 at 18:48
உங்களைக் கடுப்பேற்றுவதே என் சித்தம்/பாக்கியம்.
இந்தக் கட்டுரைக்கு வந்த ஜால்ரா கடிதங்களில் ஆசானின் காலக் கோளாறை கல்வெட்டிலேயே பொறித்து (அல்லது வேகவைத்து) வைத்தாகிவிட்டது.
“பக்தி இலக்கியம் என்றால் ஆழ்வார் நாயன்மார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அது மூன்று காலகட்டங்கள் அல்லது மூன்று வடிவங்களால் ஆனது என்பது மிகப்புதிய செய்தி.”
“மூன்று காலகட்டங்கள் அல்லது மூன்று வடிவங்களால் ஆனது” ?!!!
https://www.jeyamohan.in/124966#.XVv-x5NKiL4
இந்திய வரலாறே இனிமேல் மாற்றி ‘விஷ்ணுபுரம் முன்/பின்’ என்று எழுதவேண்டியதுதான்.
August 20, 2019 at 20:26
யோவ்! நீ வேற படாபேஜாரு.
இப்டி அட்டிஷனல்லா ஐட்யா கொட்த்தீன்னாக்க அவ்னுங்கோ அத்தவேற புட்ச்சிக்கினு ஸாவடிச்சிடுவாங்கடோய்!
நீங்கள் ஏற்றியது வெறும் கடுப்பல்ல, அது ரத்தக்கடுப்பு. நீங்கள் ஒழிக.
August 20, 2019 at 21:51
//ஆனால் இலக்கியவிவாதங்களை சிறுமைப்படுத்துவது, ஓரிரு வரிகளில் நக்கல் கிண்டலுடன் கடந்துசெல்வது, அவற்றை பல்வேறுவகையான வம்புகளாக ஆக்குவது ஆகியவை இலக்கியத்திற்கே எதிரான செயல்கள்.//
நெத்தியடி பதில். புரிந்தால் சரி
August 20, 2019 at 22:02
சர்ரீங்க. இத்தயும் லுஸ்ல வுட்றேன். நண்ரி.
August 20, 2019 at 22:13
சார்,இந்த ஜெயமோகன் அவர்களை கொஞ்ச நாளைக்கு லூசுல விடுங்க.இதைக்காட்டியும் முக்கிய பிரச்னை காஷ்மீர் பிரச்னை.பெரியவர் பி.ஏ.கி.அவர்கள் இப்படி அறைகூவி (அரை கூவி? )
“படியுங்கள்! பகிருங்கள்! இந்துத்துவப் பொய்களை முறியடியுங்கள்!”
என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் -https://pakrishnan.com/2019/08/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/?fbclid=IwAR2uS1xt8GkBc6S_6LQUYsHOh0vuauqodDQ4Tr45U5wOE5u7tt_1VfkiOi8 –
இது பற்றி விளக்கம் அவரிடம் கேட்க இயலாது ஆகவே தயை கூர்ந்து இது பற்றி தங்கள் கருத்தை தெரிவித்தல் நலம்.
August 21, 2019 at 06:24
சிலசமயம் முன், ‘ஹிந்தி’ குறித்த தம் மேலான ‘கருத்து’களைக் கொடுத்திருந்தார். அவற்றுக்குச் சிறிதும் சளைக்காதவை இவை.
அம்பேட்கர் பற்றிச் சொன்னதைத் தவிர பிற விஷயங்கள் அவருடைய ‘கருத்துகள்’ என லூஸ்ல வுடவும். நன்றி.
August 21, 2019 at 07:00
https://vaasipu.wordpress.com/2019/08/20/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
படிச்சீங்களா?
August 21, 2019 at 08:35
அன்பரே, நேற்று அதனைப் படித்தேன், இன்னொரு அன்பரின் உபயத்தில். என் கோரிக்கைக்குச் செவிசாய்த்தமைக்கு மயில் நாயர் அவர்களுக்கு நன்றி. நானும் அந்த சாளக்ராம கோஷத்தை ஒருகாலத்தில் படித்திருக்கிறேன் – இணையத்தில்தான் என நினைவு.
மெனெக்கெட்டு, குறிப்புகளெடுத்துக்கொண்டு சாளக்கிராமம் பற்றிய பல சடங்குகள்ரீதியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார். அவர் படிப்பாளி, தன் கருத்தில் ஸ்திரமுள்ளவர்.நான் அவரை மதிக்கிறேன். அவருடைய பல கருத்துகளுடன் ஒத்தும்போகிறேன். (பாவம், அவர்)
அவருடைய ஸ்திரமான கருத்துலக ரீதிச் செயல்பாடுகளில் ஒன்று: ஜெயமோகன் அவர்களின் சர்ச்சைக்கிடமான/டகீல் கருத்துகளை விமர்சனம் செய்கிறேன், பொழிப்புரை கொடுக்கிறேன் பேர்வழி என ஒருமாதிரி நல்லெண்ணத்தில் ஆரம்பித்துப் பிறகு ஏகோபித்து லூஸ்லவிடுவது. அவருக்கு இந்த விஷயத்தில் ‘conflict of interest’ இருக்கிறது என்பதை விட கொஞ்சம் ‘soft spot/corner’ விவகாரம்தான் பின்புலத்தில் இருக்கிறது என்பது என் கருத்து. யாருக்குத்தான் இந்த மென்மைப் பகுதிகள் இல்லை, சொல்லுங்கள். என்னிடமும் அவை சர்வ நிச்சயமாக இருக்கின்றன – எவ்வளவுமுறை எஸ்ரா புகழ் பாடியிருக்கிறேன் நான்.
ஆனால், கீழ்கண்டதுபோலவும் மயில் நாயர் அவர்கள் எழுதியிருக்கலாமில்லையா?
ஆனால், அவர் அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்பதற்கு என் பூரிப்பு மிக்க விகசிப்புகள், வேறென்ன சொல்ல.
ஒருவிஷயம்: அவரைப் போன்றவர்கள், என் போன்றவர்களில் சலசலப்புகளுக்கு அஞ்சாமல், அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதவேண்டும், என்பதுதான் என் கோரிக்கை.
இதற்குமேல், இது லூஸ்ல வுடப்படுகிறது.
—
August 21, 2019 at 11:34
இன்னும் எதையெல்லாம் லூசுல(அல்லது லூசாக) விடப்போகிறீர்களோ தெரியவில்லையே நாராயணா!
August 21, 2019 at 11:48
நாராஆஅயண நாராஆஆஆயண…
சேஷகிரி கலகம் நன்மையில் முடிந்ததாகச் சரித்திரமேயில்லை!
August 22, 2019 at 07:07
Iharkavadhu edhirvinai kodungall
//இதைப்பற்றி ரவீந்திரநாத் தாகூர் விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார்- இதை அவர் பிரம்மசமாஜ மனநிலை என்கிறார்.
https://www.jeyamohan.in/125218
August 22, 2019 at 09:15
சும்மாவே இருக்கமாட்டேனென்கிறீரே, இதையும் லூஸ்ல வுடுங்க.
எனக்கு வேறுவேலையே இல்லையா? :-( மேற்கத்திய மசுர் மேலைக் க்றிஸ்தவ வெல்டான்ஸ்ஷாவுங்க் அது இது எனப்போய் முக்குளிக்க நேரமில்லை எனக்கு. மதிய உணவு சமைக்கவேண்டும் போன்ற ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.
டாட்டா, பைபை.
January 19, 2020 at 05:36
[…] […]