புலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (2/2)
August 16, 2019
கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…)
வேண்டாம் இந்த விபரீதம், மேலே படிக்காதீர்கள், உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன் என்றால் கேட்கிறீர்களா, பாவிகளே? :-(
****கடலூராரிய விளம்பர இடைவேளை ஆரம்பம்****
லகுலீசர் என்றால் – நிலபுலம் அல்லது கட்டிடத்தை வெகு சுளுவாக, ஒருமாதிரி லாங்லீஸ் வாடகைக்கு, லாகவத்துடன் பிடித்துத்தரும் ரியல்எஸ்டேட் புரோக்கர் என்பது ஒரு பாடபோதம் என்பது நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும்?
சண்டை சச்சரவுகளுக்கு துணைக்கோடல் அதிபதியாக இருக்கும், செண்டை வாத்தியத்தை இடுப்பிலேந்திக் காட்சிதரும் சண்டேஸ்வரர் முற்காலத்தில் சாடர்டேஸ்வரர் என்று விளிக்கப்பட்டாரென்றும் எதிர்காலத்தில் (நாமெல்லாரும் ஒருவழியாக மண்டேயைப் போட்டபின்) மண்டேஸ்வரர் என அழைக்கப்படுவார் என்பதையும், ட்யூஸ்டேவிலாவது நாம் அறிவோமா?
ஆகவே, உடனடியாக என்னை அணுகவும்!
தமிழலக்கியம் பயணஇலக்கியம் வாயுத்தொல்லை மேகம்கழிதல் விரைவீக்கம் உள்ளிட்ட உங்களுடைய சகல உடல் உபாதைகளுக்கும், ஆன்மிகத் தத்துவக் கலாச்சார சிற்பக்கலை கோயில்கட்டுமான விசார ஆகமம் பாசுபதம் லகுலீசம் உள்ளிட்ட, உங்களுடைய புல் அரிப்பு உபாதைகள் அனைத்துக்கும் என்னிடம் பரிகாரம் பேயோட்டல் பூஜை புனங்காரம் மலையாள மாந்திரீகம் தாந்திரீகம் கேம்லின்கம் சூயிங்கம் உண்டு.
ஆண்களாக இருந்தால் பில்லிசூனியமும் பெண்களாக இருந்தால் (ரஜினி அருளிச் செய்த) பில்லாசூனியமும் விரட்டப்படும்.
கண்டிப்பாக டோக்கன் பெற்றுக்கொண்டு தனித்தனி வரிசையில் வரவும்.
தத்துப்பித்தேஸ்வர பேயும் ஓடஓட விரட்டப்பட்டு தடுத்தாட்கொல்லப்பட்டபின் உள்வாங்கிக்கொள்ளப்படும்.
இன்று முதல் நாளை கடன். கண்ணைப் பார் சிரி.
இது அதிர்ஷ்டக் கழுதை.
Sound OK Horn
****கடலூராரிய விளம்பர இடைவேளை முடிந்தது!****
…இப்படி அறிவார்ந்த பொழிப்புரை கொடுத்துக் கொடுத்தே நான் சலித்துவிட்டேன் என்பதும் நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? :-(
-0-0-0-0-0-
7. சரி. “Playing to the Gallery” – ஒத்திசைவு கேலரியில் இருப்பவர்கள் ஏழரைகள் மட்டுமே. அவர்களுக்கு நான் உட்பட எவரும் ‘ஷோ’ காட்டவேண்டிய அவசியமேயில்லை. ஏழரைச் சகவாச துர்வாசங்களில் இருக்கும் நடைமுறை உண்மை என்னவென்றால் — எத்தையாவது ரூம்பு போட்டு ரோசிச்சி எழுதுகிறோம். பின் எல்லோரும் சேர்ந்து நாங்கள் எழுதியதையே பலமுறை படித்து கண்ணில் நீர்வரச் சிரிக்கிறோம் அல்லது இன்னொரு கண்ணில் நீர்வர அழுகிறோம் அல்லது இரண்டையும் ஒர்ரே சமயத்தில் செய்கிறோம் அல்லது மூச்சடைக்க ஆச்சரியப் படுகிறோம் அல்லது பெருமூச்சு விடுகிறோம் அல்லது மாரடைப்பில் ரத்தம்கக்கிச் சாகிறோம். அவ்ளோதான்.
நீங்கள் புதியவர், வந்து விழுந்திருக்கிறீர்கள். இருந்தாலும் முதலுக்கே மோசமில்லை. தாராளமாக அகலலாம்.
8. (“பாரத அரசு, உன்னைப்போன்ற கழுதை+பிராம்மண ஏமாற்றுக்காரர்களின் மீது படிப்புக்காகச் செலவழித்த பணம் வீண்“) பாரத அரசு என் படிப்புக்காக என்மேல் செலவழித்திருக்கக் கூடிய பணத்தைவிடப் பலப்பல மடங்கு, ரொக்கமாகவே திருப்பியிருக்கிறேன். 2006க்கு முன் ஏழெட்டு வருடங்கள் போல நானே சுயாதீனத்துடன் என் சம்பளத்தில் (அப்போது அபரிமிதமாக, தேவைக்கு மிகஅதிகமாகவே சம்பளம் வந்துகொண்டிருந்தது) பாதியைச் சண்டை போட்டு பின் சமரசம் வழியாக ஒருமாதிரி கணக்குகளைச் ‘சமைத்து,’ என் பட்டயக் கணக்காளரின் அங்கலாய்ப்பையும் மீறி, வருமான வரியாகக் கட்டியிருக்கிறேன்.
இந்த எழவையும் என்னை வருத்திக்கொண்டு அல்லது எதிர்காலத்தில் மினுக்கிக்கொள்ளமுடியும் என்பதற்காகவும் செய்யவில்லை – மாறாக சந்தோஷத்துடன் தான் செய்தேன். எது எப்படியோ, இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாலும், தாங்கள் பாரத அரசின் சுமை பற்றி, அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இப்படிக் கரிசனத்துடன் கவலைப்பட்டதால் இதனைச் சொல்கிறேன். எனக்கும் அந்தக் கவலை இருந்தது, இப்போதும் இருக்கிறது. என் சுயலாபக் கணக்கீடுகளுக்குள், என்னால் முடிந்தவரை நேரடியாகவோ மறைமுகமாகவே இப்போதும் எந்த மசுரையாவது செய்துகொண்டிருக்கிறேன். பாவம், பாரதம். அதற்கும் சரி எனக்கும் சரி, இந்த கோரத்தை, பரஸ்பர த்ருதராஷ்ட்டிர ஆலிங்கனத்தை விட்டால் நாதியில்லை.
ஆனால் உங்களை ஒன்று கேட்கிறேன் – தாங்கள் தங்களுடைய க்ரீன்கார்ட் எழவுக்கோ அல்லது குடியுரிமைக்கோ – ஏன் அதற்கெல்லாம் போகவேண்டும், ஒருகாலத்தில் உங்கள் சார்பாக அமெரிக்க அரசுக்குச் சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் உங்கள் ஹெச்1பி பெட்டிஷனையே எடுத்துக்கொள்வோம். ‘இவரில்லாவிட்டால் அமெரிக்காவே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துவிடும். எழுத்தாளர் பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை! மன்னார் & கம்பெனிதான் ஆகச்சிறந்த அமெரிக்க மணாளனின் பாக்கியம் அன்றிப் பிறிதொன்றில்லை!‘ என்கிற ரேஞ்சில்/ரீதியில் படுஸீரியஸ் நகைச்சுவையாக எழுதியிருப்பார்கள் அல்லவா? அவ்ளோ முக்கியமான வேலையில் நீங்கள் இருந்தால், எவ்ளோ சம்பளம் வந்திருக்கும்/வரும்? அதிலிருந்து ஏதாவது சொற்ப உபரியை, நீங்கள் பரிதாபப்படும் பாரத அரசுக்குக் கொடுத்திருக்கிறீர்களா? அல்லது உங்களது பைரவசேவையை வேண்டி நின்ற/நிற்கும் பரிதாபத்துக்குரிய அமெரிக்க அரசுக்குத் திருப்பி, வரிவிகிதத்துக்கு மேலதிகமாக ஏதாவது கொடுத்திருக்கிறீர்களா?
…இன்னொரு விஷயமும் இருக்கிறது: தங்களைப்போன்ற ஐடி வகையறா ப்ரொக்ராமர் குமாஸ்தாக்கள் விடும் குசுக்களால்தான் அமெரிக்காவில் உற்பத்தியாகும் க்ரீன்ஹௌஸ் வாயுக்களின் வீரியம் அதிகமாகிறது என்றுவேறு சொல்கிறார்கள் (தரவுகளுக்கு உங்கள் ‘America’s Got Talent’ அரவிந்தன் கான்ட்அறியன் கண்ணையனை அணுகவும்!)
இந்த அபானவாயுதனைச் சமம் செய்வதற்கும் தாங்கள் கரிசனத்துடன் அமெரிக்க அரசுக்கு, உங்கள் சம்பளத்தில் கணிசமானவொரு பகுதியை அளிக்கலாம். நானும் என் பங்குக்கு, பகடியை அளிக்கிறேன். நன்றி.
9. ஸீரியஸ்ஸாக: நீங்கள் சொல்கிறீர்கள், ‘என்னைப் போன்ற ஆரியர்கள்’ என்று. தயவுசெய்து படியுங்கள், மனதை விசாலப் படுத்திக்கொள்ளுங்கள், சிந்தியுங்கள். அது வேண்டாமென்றால் பஞ்சாபியுங்கள் அல்லது பலோசிஸ்தானிங்கள், சரியா?
இந்த ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது 100% பீலா; தரமான ஆராய்ச்சியாளர்களால் இதுவொரு ஈடுஇணையற்ற டப்பாகோட்பாடு (அன்றிப் பிறிதொன்றில்லை!) என, வெகு காத்திரமாகவே நிறுவப்பட்டிருக்கிறது. ‘இனம்’ எனும் பகுப்பே கேள்வியாக இருக்கும்போது, நம் தமிழகத்துக்கு திராவிடம்தான் கேடு. கோர்வையாகச் சிந்தித்து எழுதக்கூடிய நீங்கள், இதையெல்லாம் நம்புகிறீர்கள் என்பதே எனக்கு ஆச்சரியம்தான்!
மேலும், நீங்கள் பாரதத்தை விட்டு அமெரிக்கா சென்றதற்கு என்னைப் போன்றவர்கள் காரணம் என்று சொல்கிறீர்கள்வேறு (“உன்னைப் போன்ற ஆரியர்களால்தான் என்னைப் போன்றவர்கள் அமெரிக்காவுக்குப் புலம்பெயர நேர்ந்தது“) – இது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றாலும் – தாங்கள் கொஞ்சம் மனவருத்தத்துடனும் வேண்டாவெறுப்பாகவும்தான் அங்கு சென்றிருக்கிறீர்கள்போல.
அங்கு இப்படி வற்புறுத்தலின் காரணமாகச் சென்று இருந்தால், அமெரிக்காவுக்கு அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்துக்கு எப்படித் தரமான ‘எழுத்தாளர் பைரவன்’ சேவைதர முடியும்? ஹ்ம்ம்? உடனே, போர்க்காலரீதியில் திரும்பி வரவும் – ஏனெனில் என்னைப் போன்ற கெழங்கட்டைகள் பணிமூப்பு பெற்றுவிட்டார்கள், இனிமேல் உங்களைத் தொந்திரவு செய்யமாட்டார்கள்; அல்லது உடனடியாக, உங்களுக்கு 100% திருப்தி தரக்கூடிய பாகிஸ்தான், மெஹிகொ போன்ற நாடுகளுக்கும், உங்களுக்கு ஒத்துவராத (கடந்த சுமார் இருபது வருடங்களாக ஒத்தேவராத!) அமெரிக்காவிலிருந்து குடிபெயரலாம்.
…ஆனால் பொதுவாக, லத்தீன் அமெரிக்க தேசங்களுக்கு நினைத்தபோதெல்லாம் தமிழ்வாசகர்கள் போக முடியாது என்பதைக் கவனிக்கவும் – ஏனெனில் அவற்றுக்கு ஏகபோகக் குத்தகைதாரரான சாருநிவேதிதாவிடம் அனுமதிவிசா வாங்கவேண்டும். இது ஒருமாதிரி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் கலந்த Vexing Sexile பிரச்சினை, என்ன செய்வது சொல்லுங்கள்? :-(
-0-0-0-0-
மற்றபடி, உங்கள் சிகாகோ பக்க டெஸ்ப்ளெய்ன்ஸில் அனைவரும் நலம்தானே? மாதம் முப்பனி பெய்கிறதா, இப்போது கொஞ்சம் வெயிலோ? உங்கள் வட்டாரத்தில், உங்கள் வீடு (அல்லது அலுவலகம்?) இருக்கும் வட்டாரங்களிலெல்லாம் கூட ஒருகாலத்தில் (1996?) நடை பழகியிருக்கிறேன். பசுமையான நினைவுகள். ;-)
Hmm. You know what, I did some digging around last night, because I was curious and hence was fiddling with available data. I think I know who you are and where you live/work, along with a few more details. This is not a threat and am not going to do anything with it. Anyway, you seem to be a harmless joker. So, no worries – relax. I will never make your name/whereabouts public. So you can go back to whichever hole from which you emerged. You & your types merely amuse me. You can continue to please write good english, no worries – and conveniently blame ‘others‘ for all your miseries/decisions in life – and guilt-trip them.
பாரதி எழுதியிருக்கக்கூடுவதுபோல,
“நடிப்பு என்ஆர்ஐக்களின் சொல்லும் செயலும் பொய்மைகொண்ட கலிக்குமே புதிது.”
But man, grow up fast. Learn to laugh (including at yourself). Don’t take yourself or (current) Tamil literature too seriously – after all, we can only read Jeyamohan Charu YesRaw types, yeah – though Jeyamohan by far outstrips, outpaces and is superior to the other two detritus. Which is not really much, honestly. But, I must also admit that Jeyamohan has a good potential and his craft is good. Anyway…
As of now, even if we try, can we ever get one Curzio Malaparte or or a Thomas Disch or a Helen DeWitt in our dear TN? What do you think? So, just relax. Okay?
…இந்த எழவெடுத்த ஒத்திசைவைத் தொடர்ந்து படிப்பவர்கள் (அடியேன் உட்பட), பொதுவாகவே சுயசிந்தனை உடையவர்கள், தங்கள் அறிவை வளர்த்திக்கொள்வதில் ஆசையுள்ளவர்கள், தேசாபிமானிகள், காத்திரமான தரவுடன் பேசுபவர்கள், தம்தவறுகளைத் திருத்திக்கொள்பவர்கள், சுயபகடி செய்துகொள்பவர்கள் எனத்தான் நினைக்கிறேன். இருந்தாலும் உங்களைப்போல ஓரிரு அபூர்வ ஜந்துக்கள், அவ்வப்போது இங்குபோய் வந்து டமாலென்று விழுகிறீர்களே! ஐயகோ!! எல்லாம் என் பழவினைப் பயன். (FruitActionUse)
மேலும் பிறரின் அறியாமையை/வெள்ளந்தித்தனத்தை என் மூலதனமாகக் கொண்டு, ‘ங்கோத்தா, எவண்டா நான் எள்தறத சரிபாக்கப்போறான்’ என தெகிர்யமாக உளறிக்கொட்டிக்கொண்டு – ஆகவே ‘நானுமொரு அறிவார்ந்த அறிவியக்க அவியல் அறிவுஜீவி அல்ட்டல் அலப்பரையாக்கம்‘ என நீட்டிமுழக்க ஒரு கருவியாக, நான் ஒத்திசைவை உபயோகிப்பதில்லை.
ஆக – தாங்கள், தாராளமாக விவாதங்களிலிருந்து அகலலாம். ஒரு பிரச்சினையுமில்லை. எப்படியும், தற்போதைக்குத் தாங்கள், ஏழரைகளின் அடிப்படைத் தகுதிகளை உடையவராகத் தென்படவில்லை.(SouthImageStrip)
இருந்தாலும், நீங்கள் இங்குவந்து படித்துவிட்டு மௌனமாக அகன்றால் பிரச்சினையொன்றுமில்லை. இல்லை, உங்கள் தளத்தை ஆரம்பித்து அங்கே உங்கள் மேலான கருத்துகளை எழுதலாம்.
அல்லது உங்கள் அபிமான தமிழ் அலக்கியக்காரர்களுக்கு ‘வாசகர் கடிதம்’ எழுதினால் அவர்கள் அதைப் பதிப்பிக்கலாம்.
எது எப்படியோ – உங்களுடைய அடிப்படைத் தகுதிகளை மேம்படுத்திக்கொண்டு மறுபடியும் பின்னூட்டம், மின்னஞ்சல் என வந்தால், தங்களுடன் உரையாடி மேன்மேலும் என் தலைமசுர் (மிச்சமிருப்பதும்) நரையாடவே விருப்பம்.
நன்றி.
__ரா. :-(
—
August 16, 2019 at 09:45
ரொம்ப வெவ்வெவ்வெ காட்டுவதாக கம்பிளைண்ட்
வந்திருக்கிறதே, கவலையாக உள்ளது .
:)
August 16, 2019 at 10:20
நேற்று இன்னொரு நண்பர் இதே ‘வெவ்வெவ்வே’ விஷய விவகாரத்தைக் குறிப்பிட்டு, ‘தான் ஒன்றும் செய்யவேயில்லையே’ என வருத்தப்பட்டார்.
“இன்று பேராசான் ‘ஓய்வு பெற்றபின் செலவழிக்க நேரமும் எங்கோ எவர் மேலோ கசப்பும் நான்நான் என்ற அசட்டுத் தருக்கும் மட்டுமே உள்ளது.” என்று எனக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.”
பிரச்சினை என்னவென்றால், பெரும்பேராசான் கம்பு (மன்னிக்கவும், இப்போதெல்லாம் அந்த அறியாக் கம்பு, ஸாமுராய் கடானா வாளாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது!) சுத்தினால் எல்லோரும் தன்னை நோக்கித்தான் இப்படிச் சுற்றி சிலம்பம் ஆடுகிறார் எனப் பெருமைப் படுகிறார்கள். நானும் அப்டிதேன்!
பிரச்சினை என்னவென்றால் – பெரும்பேராசான், ஃபேஸ்புக் எழவைக் குறிப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அங்கேயில்லை. நண்பரும் அங்கேயில்லை. வருத்தமாக இருக்கிறது. நானும் சரி, என் நண்பரும் சரி – பெரும்பேராசானால் (இந்தத் தடவை) புகழ் பாடப்படவில்லை. :-(
யோசித்தால், அது சுரேஷ் வெங்கடாத்ரி அவர்களாக இருக்கலாம். ஆனால் அவர் (என்னைப் போலல்லாமல்) சமன நிலை மிக்கவராக இருக்கிறார். :-( மேலும் அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா என்ன?
…இந்த வாழ்வா-சாவா பிரச்சினை, மிகவும் குழப்பம் தருகிறதே, என்ன செய்ய!
But, agreed Sri Kannan – but please do not worry, don’t give up hope.
YES. We should get to the bottom of this shit. Let’s get hacking. Let us use all resources at our command and investigate. This is really an earth-shaking problem. :-(
May be we should borrow some DangerHelpers from PonniyinSelvan. Yes.
August 17, 2019 at 06:52
அன்பு ராம் சார்,
ஆசான்,பேராசான்,சிற்றாசான் மும்மூர்த்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்,சிஷ்ய கோடிகள்(சாருவின் பக்த கோடிகள் தங்கள் பக்கம் வருவதில்லை) பற்றியெல்லாம் நீங்கள் எழுதியதை தொகுத்தால் வெண்முரசிற்கு போட்டியாகி விடும் போலிருக்கிறது.உங்கள் உழைப்பு இப்படி எல்லாம் வீணாகத்தான் வேண்டுமா.. இவர்களை விட்டு விட்டால் நகைச்சுவை பஞ்சத்தில் சிக்கித் தவிப்பீர்கள் போலிருக்கிறது. என்ன செய்ய …இதை தவிர ஆகச் சிறந்த பிறிதொன்றில்லையா..அய்யகோ..
August 17, 2019 at 07:56
ஐயா மொஹெம்மத், இன்னும் இங்கே வருகிறீர்களா! உங்களோடு சேர்ந்து மொத்தம் ரெண்டேமுக்காலேஅரைக்காலேமூணுவீசமானோம்! :-)
நீங்கள் சொல்வது சரி. ஆனால், பெரும்பேராசானும் அவரது சகாக்களும் எனக்குப் பணிமூப்பு கொடுக்கமாட்டேனென்கிறார்களே, என்ன செய்வது சொல்லுங்கள். :-(
என் துக்கங்களையெல்லாம் மூழ்கடிக்க, பிறிதொரு வழியேயில்லாமல் ஜெயமோகனிய சாளக்கிராம பஜனை செய்வதாக உத்தேசம். வருகிறீர்களா?
அன்புடன்,
ரா.
August 17, 2019 at 08:26
ஆ! ஒன்று சொல்ல மறந்தேன். சாருவே(!?) ஒத்திசைவில் பிரசன்னமாகி, ஒருதடவை அருள்வாக்கு வழங்கியுள்ளார் என்பதையும் தரவாக வைக்கிறேன். நன்றி. ;-)
https://othisaivu.wordpress.com/2014/05/24/post-379/#comment-2671
மேற்படி அருள்வாக்குக்குப் பிறகு, இந்தப் பின்னூட்டத்தை அளித்தது, சாருதான் எனச் சரியும் பார்த்தேன் என நினைவு.
ஆக, மொஹெம்மத் அவர்களே! தாங்கள் அலக்கியக் கடவுளர்களால் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்ட இடத்துக்குத் தான் வந்திருக்கிறீர்கள்! உங்களுக்கு இனி நல்லதே நடக்கட்டும்! (ஆகவே, இனி ஒத்திசைவைப் படிக்காதீர்கள்!)
—