“குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல”

August 12, 2019

…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று.

ஆனால், இது ஆறாம் திணையாகவும் இருக்கலாம்: கோவேறுகழுதையும் அதனைச் சார்ந்த இடமும்.

அல்லது தற்காலத் தமிழ் அலக்கியமும் அதனைச் சார்ந்த இடமும்.

நிற்க, பெரும்பேராசான் புத்தகத்துக்கு தொல்காப்பியரே வழங்கிய அணிந்துரையில் இந்த அணியும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இராம சேவையில் அணில் ஈடுபட்டதைப் போல, இரா சேவையில் இந்த அணி என்பதறிக.

கண்டிப்பாக – இதனைக் கழுத்தில் கொல்லவும். இதற்குப்பெயர் கடலூர்-விக்கீபீடிய அணி. அல்லது தேம்பித்தேம்பி அழும் தேம்பூவணி.

ஒத்திசைவு பதிவுபோல கழுத்தை அறுப்பது, குதிரையையும் அதன் கழுத்தையும் இணைப்பது, சந்ததி, திருவந்தாதி, ஆதிமூலம், பௌத்திரம் போன்ற – அதிநவீன, புல்லரிப்பு கொடுக்கும் இன்னமும் பல மஜாபாரத விசித்திர வீரியங்களுக்கு உடனடியாக அணுகவும்.

மறந்த கனவுகளின் குகை- கடிதம்

ஸ்டாக் தீரும்வரைதான் இந்த ஆஃபர்.

உடனே அள்ளிக்குங்க! முழுவதும் பாய்ச்சல்களும் தாவல்களும் நிறைந்த முழுமையன்றிப் பிறிதொன்றில்லாத ஆகச்சிறந்த ஸர்க்கஸ் இதுதான்!

ஸர்காஸ்டிக்காகவே சொல்லவில்லை.

…என்ன சொல்வது, எதைத் தொடுப்பது எதை விடுப்பது என்றே பிர்யலயே நைய்னா! :-( அதிதீவிர அடிப்படைவாத ஜெனடிக்ஸும் மானுடச் சமூகவியலும் வரலாறும் ஆகமமும் வல்லுநத்தன வன்முறைகளும் ஏன் இப்படி, ‘இனியஜெய விஜயீ பவ’ எனக் கொள்கைக் கூட்டணி அமைத்து சக்ரவியூக ரவுண்ட் கட்டிக்கொண்டு நம்மை அடிக்கின்றன, சொல்லுங்கள்?

இந்த ப்ரையன் ஸைக்ஸ் எனும் போலி தகரடப்பா விஞ்ஞானி பலவகைகளில் ஊழல்கள் (ஜெனடிக் மாதிரிகளை மாற்றுவது, தமிழ் அலக்கியம்போல தொழில்முறையில் ‘தயாரிப்பது’ உட்பட) செய்து வசமாக மாட்டிக்கொண்டிருக்கும் ஆசாமி.

இவருடைய ஒவ்வொரு புத்தகத்தின் கருதுகோட்களும் கந்தறகோளங்கள்! ஜெயமோகனுக்கும் கடலூராருக்கும் பிடித்தமாதிரி இவரும் ஒரே மஜாபாரதப் பாய்ச்சல்களில் ட்ரியோ ட்ரியோவென மேய்ச்சல் செய்துகொண்டிருப்பவர்; உண்மையான, ஜெனடிக்ஸின் எரிக் ஃபான் டானிகென்! வரைமுறையில்லாமல் உளறிக்கொட்டியிருப்பவர், நம்மூர் பீலாவுலகின் நண்ப கஞ்சினீயர்-சுந்தரராஜன் பாரிசாலன் பியூஷ்மனுஷ் போல! இவரைப் போய் ஒரு துறைவல்லுநர் போலச் சித்திரிக்கிறாரே இந்த இளைஞ்ஜர் கடலூரார்!

அந்தாளோட பீலாவ வெச்சிக்கினு முழுஸ்ஸா ஒரு ‘இனிய ஜெயம்’ எடிஷனையே தேத்திட்டாரே!

-0-0-0-0-0-

பின்குறிப்பு: இந்த ‘இனியஜெயம், பகவன் நாமமே பரமபலம், அதைப் பாடப் பாட வரும் பரமசுகம்’ வகையறா கட்டுரைகளில், இளைஞ்ஜர் சீனு அவர்கள் ஏறத்தாழ அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகளை நோக்கிப் பயணம் செய்ய முற்படுவதாகத் தெரிகிறது. போற்றுதற்குரிய குறிக்கோள்தான்.

ஆனால், அதற்கு நிறைய, வகைவகையாக பலமாமாங்கங்களாகப் படித்திருந்தால்தானே, உலகத்தை அவதானித்திருந்தால்தானே, எதிலாவது களப்பணி செய்திருந்தால்தானே – அதற்குப் பின் சிந்தனைகளைத் தரவுகளுடன் தொகுத்துக்கொண்டால்தானே முடியும்?

சும்மா சத்தம் எழுப்பிக் கூவிக்கொண்டிருக்கும் சப்த/ஏழு கன்னிகைகள் + விவிலியத்தின் ஏழு பாவங்கள் என்று ஆடித்தள்ளுபடியில் மெகா முடிச்சுப் போட்டு ஆகவே, அது = ஒவ்வொரு கன்னிகையும் ஒவ்வொரு பாவத்துக்கு அதிபத்னி என்பதுதான் மானுடத்தின் எழுபெரும் தாவல்கள் – என்பது போல எழுச்சிகொண்டு எழுதுவதற்கு குண்டு தெகிர்யம் வேண்டும். (ஆனால் என் நினைவிருக்கும் வரையில் கடலூரார், மெலிந்ததேகமும் அன்புச்சிரிப்பும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் மட்டும் கொண்டிருந்தார்! ஏனிப்படியானார்??)

…ஆனால் அதில்லாமல் வெறுமனே விக்கீபீடியாவையும் ஜெயமோகன் அவர்களின் தளத்தையும் மட்டுமே ஆழ்ந்து படித்து எங்கெங்கு காணினும் – வெறும் பாய்ச்சல்களையும் தாவல்களையும் உள்ளிழுத்துக்கொள்வதையும், பெருந்தெய்வங்கள் நேனோதெய்வங்களை கபால்னு இஸ்துக்கினு திர்ப்பிக்கொட்க்கமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்து முகத்தை வலித்துக்காட்டிக்கொண்டே ஓடுவதையும், ஒத்துழைக்கமாட்டேன் என முரண்டுபிடிக்கும் முரணியக்கத்தையும் பார்த்து, ஏரோப்ளேன் பாண்டியாட்டங்களையும் ஆகம கமகம வாசனை அருகில் வருதே கூட்டாஞ்சோற்றையும் கலந்தடித்துப் பரிமாறினால் கொஞ்சம் கஷ்டமாகிவிடுகிறதே ஐயன்மீர்?

:-(

11 Responses to ““குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல””

 1. EZHARAI Says:

  😭🤣😨👿

 2. Ramesh Narayanan Says:

  என்ன செய்யுறது, கஷ்டந்தேன்.எதிர்க்க, எதிர்க்க பீறிட்டெழும் போலெருக்கே!? Like Faraday’s law of induction?


  • Oh what to do. Reminded of ECG Sudharshan et al work on Tachyons – may be these folks are made up of such ‘fictional’ particles!

   The more you oppose, the more they try! Amazingo! There is at least one PhD hiding in there, whaddaya think? ;-)

 3. K.Muthuramakrishnan Says:

  கற்பனையே இல்லாத ஜடங்களுக்கு, நாங்கள் எல்லாம் கற்பனாவாத அறிவுஜீவிகள் என்பதை எடுத்துக்காட்டினாலும் புரியவில்லையே. புனைவு அபுனைவு இவற்றிற்கு வேற்றுமை அறியாத மட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க எங்களுக்கு நேரம் இல்லை.அடுத்தபடியாக யானைக்கும் பூனைக்கும் பிறந்த பானை பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.அதில் க்ரேயான் என்ன சொல்கிறார் என்றால்…..


  • நீங்கள் யாரைக் கிண்டல் செய்கிறீர்கள்? :-(

   மன்னிக்கவும். அது பானையல்ல. யாபூ. (பார்க்க: யாபூலப்பெரும்காரிகை ப. 420 அல்லது வெண்முரசு புத்தகம்1008 பாகம்10008 அத்தியாயம்100008)

   இப்படிக்கு:

   வே அ மட்டி.

 4. Kannan Says:

  யானைக்கும் பூனைக்கும் பிறந்த பானை & யாபூ

  Thanks for such a good laugh :)

 5. anonymous Says:

  Rubbish. Jealousy for way more intellectually superior Jeyamohan and Cuddalore Seenu is all that is visible in this post. There is very little substance apart from brahminical hatred for nonbrahmins. Have you ever praised a nonbrahmin, ever? Write something original, for a change instead of playing cheaply to the gallery. You are becoming too big for your own good. Having a good diction does not mean that you talk sense.

  Learn how to write from Aravindan Kannaiyan, who you obviously hate. He cites sources and is way more meticulous and well read than you. Sad that Indian Government wasted money on educating donkeys and cunning brahmin cheats like you.

  You Aryan people are the reason why people like me had to migrate to US of A.


  • ஐயா அனாமதேயம்,

   பொதுவாகவே நான் இம்மாதிரி காமாலைக்கண் பார்வையுடன் அவ்வப்போது (நல்லவேளை, எப்போதுமல்ல) வரும் பின்னூட்டங்களைக் கடாசிவிடுவது வழக்கம்.

   ஆனால், உங்களுடையதை அப்படிச் செய்யவில்லை; காரணங்களென்னவென்றால்: உங்கள் பின்னூட்டம், தவறுகள் எனப் பெரிதாகவில்லாமலும் + கோர்வையாகவும் எழுதப் பட்டிருக்கிறது. இதற்கு நீங்கள் கணிசமான நேரம் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதாவது, நீங்கள் எழுதியிருப்பது முட்டியடி எதிர்வினையல்ல. ஓரளவுக்கு யோசித்துத் திருத்தித் திருத்தித்தான் இதனை எழுதியிருப்பீர்கள். ஆனால், அதற்காக உங்கள் கருத்துகளை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அவை அநாகரிகமாகவும் அசட்டுத்தனமாகவும்தான் இருக்கின்றன.

   ஆனாலும், உங்கள் உழைப்பை மதிக்கிறேன். அவ்வளவுதான். ஆகவே, நானும் என் பங்குக்கு ஒரளவுக்கு ஹோம்வர்க் செய்து ஓரிரு நாட்களில், சமயம் கிடைக்கும்போது பதில் கொடுக்கிறேன்.

   நன்றி.

   • பொன்.முத்துக்குமார் Says:

    ஆனாலும் பாவம் இவ்ளோ நல்லவரப்போயி அமெரிக்காவுக்கு வெரட்டி உட்டுட்டீங்களே ஆரியரே. தேம்பித்தேம்பி அழணும் போல இருக்கு.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s