दिल दिया है जां भी देंगे, ऐ वतन तेरे लिए…

August 15, 2019

நம் அனைவருக்கும் நம் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

-0-0-0-0-

பாரத/தமிழகத் திரைப்படங்களின் சாபக்கேடுகளான –  கருத்து, கதை, வசனம் திருடல், உல்ட்டாசெய்யல்,  திரைப்படமொழியை அறியாமை, ப்ரக்ஞையின்மை, ‘ஆர்ட் பட’ அழிச்சாட்டியங்கள், பிலுக்கல்கள், டால்லிட்ரால்லி பேன் இன்கம்டேக்ஸ் எனக் கலந்து கட்டி மேதாவிலாஸத்தைக் காட்டும் சினிமட்டொக்ரஃபி,  தொழில்நுட்பங்களை அவமதித்தே தீருவோம் எனும் குவியம், தண்டக்கருமாந்திர நடிகர்கள், அழகுணர்ச்சியின்மை, மிகை அரிதாரம், ஓவர் நடிப்பு, இசை சுடுதல், காட்டுக்கூச்சல் பின்னணியிசை, மெலட்ராமா போன்ற…

…எல்லா கல்யாணகுணங்களையும் லூஸ்ல வுட்டுவுட்டு. கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேளுங்கள், ரசியுங்கள்.

பாடகர்கள் கவிதா க்ருஷ்ணமூர்த்தி, மொஹெம்மத் அஸிஸ் அருமையான குரலில், லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் ஆக்கம்/இசையில் : ऐ वतन तेरे लिए –  ஐ வதன் தேரே லியே; கர்மா எனும் 1986 ஹிந்திபடத்தில் இடம்பெற்றது.

எவ்வளவு இனிமையுடன், அதன் நேரிடை சுளுக்கற்ற பொருளினால் எழுச்சியும் கொடுக்கும் பாடல் இது!

திரைப்படப் பாடல் ‘ஒரிஜினல்’ வடிவம்: https://www.youtube.com/watch?v=vYBAi3IOttU

உத்தரப்பிரதேசச் சிறுமி ப்ரதீக்ஷா பாடும் வடிவம்: https://www.youtube.com/watch?v=yeD3ztuW4ho

ஒதிஷாவில் உருவாக்கப்பட்டுப் பிரபலமான வடிவம்: https://www.youtube.com/watch?v=yeD3ztuW4ho

…எப்படி ஒருவனால் ஹிந்தி மொழியை வெறுக்கமுடியும், சொல்லுங்கள்? அதில் உள்ள பெருமைவாய்ந்த பொக்கிஷங்களையே விடுங்கள், அதில் வந்துள்ள  அருமையான திரைப்பட இசையை, பாடல்களை, மெட்டுகளை நாம் எப்படி வெறுக்கமுடியும்?

ஏதாவது ஒரு மேலதிக விஷயத்தை அறிந்துகொண்டோமானால், அதுவும் (இன்னொரு) மொழியெனும் உன்னதமான கருவியை உபயோகிக்கக் கற்றுக்கொண்டோமானால் – அதன் வழியாக எவ்வளவு திறப்புகள் கிடைக்கும்? (ஹ்ம்ம், இதற்கு ஒரு விதிவிலக்கு: அதாவது, நம் தமிழ் மூலமாக நம் கூறுகெட்ட தறுதலைத் தற்காலத்  தமிழலக்கியத்தைத் தொடமுடியும் எனும் சாபக்கேட்டைத் தவிர)

இருந்தாலும் நமக்கு அவ்வளவு உதாசீனம். (திராபைத் திராவிடக் கள்ளத்தனத்துக்கு நன்றியுடன்!)

ஏன் நாம், நம்முடைய கருத்துலகச் சோம்பேறித்தனத்தை, முனைப்பின்மையை – ரசவாத மாற்றம் செய்து, ‘பிறர் நம்மீது இதனைத் திணிப்பதாக’ நினைத்துக்கொள்கிறோம் – அதிலும் இரட்டைவேடம் போடுகிறோம்? நம் சுயமானத்தைக் கப்பலேற்றி தஸ்புஸ்ஸென்று தப்பும்தவறுமாக ஆங்கிலம் பேத்துவோம், மினுக்குவோம்; ஆனால் அதைவிட மிகமிக எளிதில் கற்றுக்கொள்ளமுடியும் மொழியும், பாரத அளவில் மிகுந்த காரியார்த்த உபயோகமுமிருக்கும் ஹிந்தி என்றால், நமக்கு வாயோர நுரை தள்ளல், இனம்புரியாத ‘இனமான’ வெறுப்பு.

உருப்படுவோமா நாம்?

சரி. இன்றும் இந்த அங்கலாய்ப்பு வேண்டாம்.

-0-0-0-0-

அமெரிக்காயினிது ஸ்விட்ஸர்லாந்தினிது என்பர் தம் பாரதத்தின் கலாச்சார அழைப்பைக் கேட்காதார்.

“உலகத்தில் ஆறு சுகங்கள் இருக்கின்றன: ஆரோக்கியம், கவலையின்றி வாழ்தல், தாய்நாட்டை விட்டு வெளியேறாதிருத்தல், எப்போதும் நல்லோர்களிடமிருத்தல், மனதிற்கேற்ற தொழில் செய்தல், பயமின்றி வாழ்தல்.”
— மஹாபாரதம்

ஜெய்ஹிந்த்.

-0-0-0-0-0-

மேலதிகக் குறிப்புகள்:

இந்தப் பாடலின் ஆங்கில வடிவம், முழிபெயர்ப்புடன்.

ஹிந்தி வடிவம்.

 

11 Responses to “दिल दिया है जां भी देंगे, ऐ वतन तेरे लिए…”

  1. A.Seshagiri Says:

    சுதந்திரதின வாழ்த்துக்கள் !
    அருமையான பாடல்களை இந்த நன்நாளில் மீண்டும் கேட்க வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி !!

  2. Giri Says:

    முக்யமாக பாடலாசிரியர் பெயரை சொல்லவில்லையே!(Anand Bakshi?)

  3. Vijay Says:

    Hi Ram,Can you please point to the correct Odisha link? Thanks,

  4. க்ருஷ்ணகுமார் Says:

    ए वतन देरे लिये……………..

    சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

    ஹம் ஹோங்கே காம்யாப்.

  5. க்ருஷ்ணகுமார் Says:

    முரண்பாடு ஒத்திசைவுன்னு முதுகு வேற சொறிஞ்சுக்குறார். ஒத்திசைவுல ஆரம்பிச்சு ஒத்திசைவுல முடிவு வேற.

    யான் பெற்ற ரத்தக்கொதிப்பை பெறுக இவ்வையகம் என்று விதரணம் செய்யும் உங்களுக்கெல்லாம்

    காக்கா கத்தாமலேயே உரலாயுத சஹிதமாய் ப்ரகடனமாகி நண்பர் பூவண்ணன் தாக்கக் கடவது என்று சாபமிடுவதைத் தவிர என்ன சொல்றது

    ஆரிய பார்ப்பன சதியை ஆறாத தாஹத்துடன் ஃபேஸ்புக்கடலில் மூழ்கி மூழ்கி முத்தெடுத்து / கொப்பளித்துக்கொண்டிருக்கிறார். ஏஸ்ஸப்பா வருவதற்கு மின்னாடியே அவுரு வந்துருவார். ஜாக்ரதை :-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s