அறிவுரைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்

August 11, 2019

டேய்!

இளைஞர்கள ஆதரிடா, அவங்கள ஊக்கப் படுத்துடா. சும்மா நொள்ளை சொல்லாத. அவங்க இப்டிக் கேக்கறதே பெரிய விஷயந்தான? ப்ராபர்லி ப்ராபர்லின்னு ஏண்டா இப்டி கிண்டல் பண்ற. ஏதோ பாவம் ஆர்வக்கோளாறுன்னு லூஸ்ல வுடாம.

சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதுடா. அது இளைஞர்களுக்கு றொம்ப முக்கியம். ஒன்னோட அனுபவங்கள எழுது.

வரவர எல்லாம் ஒன்னோட அனுபவமா இருக்கு. எல்லா கட்டுரேலயும் ஒண்ணுரெண்டாவது அப்படி. நீ இனிமேல் பொதுவான விஷயங்களை எழுதவேண்டும்.

யாரையும் பகிரங்கமா அசிங்கப்படுத்தாத! உனக்கு மன நோய்னு எல்லாரும் சொல்லுவாங்க. எனக்குத் தெரியும் நீ அப்படி இல்லன்னு; ஆனா பிறத்தியாரைப் பத்தி கவலைப் படாம தொடர்ந்து ஒன் மனசுக்குப் பட்டத எழுதுடா.

ஜெயமோகன் எஸ்ரா சாரு பற்றிய தொடர் பதிவுகளை நிறுத்து. வேற ஏதாவது நல்லா, ஜெயமோகன் எஸ்ரா சாரு பத்தி எழுது.

ஜெயமோகன் எஸ்ரா சாரு தகுதியற்றவர்கள், ஏன் அவங்களைப் போய் விமர்சனம் செய்யறே?

ஜெயமோகன் எஸ்ரா சாரு எழுதும் தரத்துக்கு ஒன்னால எழுதமுடியுமா? யோசி. அவங்கள மாரீ ரெண்டு நாவல் எழுதிட்டு அப்புறம் பேசு.

‘உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் கல்லெறியலாம்.’

ஜெயமோகன் மனைவி கிளின்னு எழுதினது தப்பா? உருவத்தப் பாக்காம உள்ளடக்கத்த பாருடா! அது தப்பாவே இருக்கட்டும். நொச்சூரும் அப்டிதான் சொல்லியிருக்கார்.

எஸ்ரா ஸாஹித்ய விருது வாங்கினது தமிழுக்கு அசிங்கம்தான்; ஆனால் நீ அதனை ஏன் விமர்சனம் செய்யணும்?

ஆக்கங்களை விமர்சனம் செய். ஆட்களச் செய்யாதே.

நீ நல்லா தெளிவாதான் எழுதறே. ஆனா புரியவேமாட்டேங்குது.

நீ சொல்ல வர்றதெல்லாம் றொம்ப முக்கியம், கட்டாயமா சொல்லியே ஆகவேண்டிய வெஷயந்தாண்டா, எனக்கும் அப்டித்தாண்டா தோணுது. ஆனா, அதையெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இருக்கான்னு யோசி.

இலக்கிய விமர்சனம் றொம்ப றொம்ப முக்கியம். ஆனா, நீ அதைப் பண்ணாத. எல்லாரையும் என்கரேஜ் பண்ணு.

நீ அன்னிக்கு அந்தக் கூட்டத்துல எலக்கியவாதிங்க பத்தி பேசினபோது என் ஃப்ரெண்டும் அங்க இருந்தான். என் கல்லீக்தான். ஜெயமோகனோட முன்னாள் விசிறி. நீ பேசினது சரிதான். ஆனா பேசியிருக்கக்கூடாது.

கடந்த ஆறு வருடங்களா பாக்கறேன். உன் எழுத்துகள்ல ஆணாதிக்கம் அதிகம், ஒவ்வொரு பதிவுலயும் வசைச் சொற்கள் வேற. இப்படியே தொடர்ந்தால் இனி உன்னைப் படிக்கப் போறதில்லை.

ஜெயமோகனை விமர்சனம் செய்யி, அது ஓகே; ஆனா, பாவம் அந்த கடலூர் சீனுவ, அவர் ஆஃப்டரால், வெறும் ஆர்வக்கோளாறு வாசகர்தானடா –  ஏண்டா போட்டு உருட்டறே? தேவையா?

ஜெயமோகன் வாசகர்கள் ஏதோ எழுதறாங்கன்னா அவங்கள விமர்சனம் செய். ஜெயமோகன ஏண்டா செய்யறே? உனக்கும் அவருக்கும் ஏதாவது பர்ஸனல் தகறாரா?

முப்பது வருஷத்துக்கு மின்னாடி, நீ அந்தக் கூட்டத்திலே அந்தப் பெண்ணை எதிர்த்துப் பேசியிருக்கே! அவள் ஆக்சூலி என் ஃப்ரெண்டு. கவிதை எழுத முயற்சி செஞ்சா தவறா? கொஞ்சம் கூட கருணையோ இங்கிதமோ இல்லடா ஒனக்கு. ஆனா, உன்னோட கறார்தன்மைய மெச்சறேன்.

நீ சினிமா விமர்சனம் செய்யறதில்லை – அது உருப்படிதான்; அதனால, சினிமாக்காரங்களை தாளிக்கறதையும் வுட்டுரு. எதுக்கு உன் டைம வேஸ்ட் பண்ற?

காந்திஜி பத்தி எழுதறத ஏன் நிப்பாட்டிட்ட? இலக்கியத்த மூட்டைகட்டிட்டு காந்தி பத்தி மட்டும் இந்த வருடம் முழுசும் எழுது.

ஸய்ன்ஸ் கணிதம்னு எழுதுடா, சும்மா சும்மா என்ன இலக்கியம் கிலக்கியம்னு எதை எடுத்தாலும் விமர்சனம் செஞ்சிக்கினு…

ஆங்கிலத்துல எழுதறத மொதல்ல நிப்பாட்டு. படிக்கறவங்க கன்ஃப்யூஸ் ஆய்டுவாங்க. தமிழ் ப்ளாக்குல தமிழ்தான் வரணும், இங்க்லீஷுக்கு இன்னொரு ப்ளாக் தொற.

ஒன்னோட ஒவ்வொரு கட்டுரையையும் இன்னிக்கிவரை படிக்கிறேன்ற தகுதில சொல்றேன். நீ மோதி சப்போர்ட்டரானத்துக்கு அப்புறம் நீ எழுதறதே சகிக்கல! படிக்கவே முடியல, அவ்ளோ ஜால்ரா. ரெண்டு வருஷமா ஒத்திசைவ படிக்கறதேயில்ல.

ஏண்டா உனக்கு இந்த வேலையெல்லாம். ஹிந்துத்துவா ஆசாமியாய்ட்டே! தேவையா? இனி எப்படி  ஒன்னோட நடுநிலைமைய நம்பறது?

ஜெயமோகன் மோதி பத்தி விமர்சனம் செஞ்சத்துக்கு அப்புறம்தான் நீ ஜெயமோகன மட்டையடி அடிக்கறே. வாழுடா, வாழவிடுடா! அரசியல் வேறு, இலக்கியம் வேறு – இல்லையா?

அரசியல்வேறு இலக்கியம்வேறுன்னு இல்ல – இலக்கியத்தில் அரசியலும் அரசியலில் இலக்கியமும் இருக்குல்ல? ஒருவகைல பாத்தா இலக்கியமே அரசியல்தான்! நீ ஏண்டா இந்த அரசியல்ல இருக்க? வெறுமன இலக்கியத்தைப் பத்தி மட்டும் எழுதுடா.

ஜெயமோகன் என்ன, நீ விமர்சனம் செய்யற எவனுக்குமே ஒன்னால விமர்சனம் செய்யப்பட்றத்துக்குத் தகுதியே இல்லை. ஆகவே விமர்சனம் செய்யாத.

சிறுகதைகளையும் கவிதைகளையும் அவ்வப்போதாவது எழுதலாம் இல்லையா? அவ்ளோ குறிப்புகள் இருக்கே ஒன்கிட்ட. இப்பகூட என் பொண்ணு நீ சொன்ன பேய்க்கதைகளைப் பத்தி சிலாகிச்சா. ஆனா எழுதியே ஆகணும்னு இல்ல – ஏற்கனவே நெறய பேர் எழுதறாங்க இல்லியா?

ஸ ஷ ஹ ஜ ன்னு தமிழ்ல எழுதினா ஒருமாதிரி பழைய பஞ்சாங்கம்போல இருக்குது. அதேபோல பாரதம் அப்டீன்னு எழுதறதும். அழகா இந்தியா-ன்னு எழுதேன்? இந்தியான்னா எடுப்பா இருக்கு. பாரதம்னா ஹிந்துத்துவாதான்.

கனடால வந்து ஸெட்டில் ஆயிடேண்டா கெழவா. பக்கத்துபக்கத்துல வீடுபாத்து ஆனந்தமாக இருக்கலாம். அங்கேர்ந்தும் தமிழ்ச்சேவை செய்யலாம். நல்ல வேலை, துட்டும் கிடைக்கும். ஒன் ஸ்கூலுக்கும் நெறய்ய நன்கொடை கலெக்ட் பண்ணலாம். எங்க எந்தவூர்ல, மசுருபிடுங்கிங் பண்ணினா என்ன, சொல்லு?

நகைச்சுவைன்ற பேர்ல நீ செய்யறது அராஜகம். படிக்கறவங்களுக்கும் துன்பம். நீ கேலி செய்யற ஆட்களோட மன நிலைய நெனச்சிப் பாரு.

நீ பாஜக அனுதாபின்னு தெரிஞ்ச நாள்லேயிருந்து உன் ப்ளாக் படிக்கறதயே வுட்டுட்டேன். இருந்தாலும் நீ அந்தப் பையனைக் கிண்டல் செய்திருக்கக்கூடாது.

திராவிடர்களை எதிர்த்து, நீ ஒரு கட்டுரையை எழுதி  றொம்ப நாளாச்சுல்ல? ஆனா எழுதாத. அதுக்கு அவசியமில்ல. வேண்டுமளவு எழுதியாச்சு இல்லியா?

ஆஃபீஸ் மீட்டிங்ல குச்சிப்படக் கார்ட்டூன் போடுவியே! அமக்களமா இருக்குமே! அதெல்லாம் மறந்துட்டியா? தமிழ் கார்ட்டூன் காட்டூன் வரைஞ்சி சமூக விமர்சனம் பண்ணுடா. தமிழ்ல அப்டி கார்ட்டூனே இல்லயே! புது ட்ரெண்டா இருக்குண்டா! ஒத்திசைவு போரடிக்குது.

வினவு, நிசப்தம் மணி, யுவகிருஷ்ணா, மதிமாறன் பத்தியெல்லாம் ஏண்டா எழுதமாட்டெங்கற?  றொம்ப நாளாய்டிச்சி இல்ல? அவங்கமேலயும் ஒன்னொட கடைக்கண் பார்வையைப் பாச்சு. ஆனா இவங்க இளைஞர்கள் இல்லியா, அதனால வுட்டுடு.

எழுதறத நிறுத்திட்டு பாட்காஸ்ட் ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் அப்டீன்னு அறிமுகம் செய்யலாமே? அதுல கல்வியின் நிலை, ஆசிரியர்கள் பயிற்சி அப்டீன்னு எவ்வளவோ பண்ணலாமே? ஏன் இந்த ப்ளாக்கைக் கட்டிட்டு அழுவறே. தமிழ்நாடு உருப்படாத கேஸ்.

இலக்கியமே வேண்டாண்டா. வெறும் வரலாறு ஸைன்ஸ் மேத்ஸ் அப்டீன்னு மாத்திடு. ஃபேஸ்புக்லயும் கணக்கு திற.

நீ தமிழ்ல எழுதினது போறுண்டா. படிச்சிப்படிச்சி சுளுக்கிடிச்சி. சுத்திசுத்தி செலம்பமாடி வெறும் அரசியல் இலக்கியம்னு இருக்காம, ஆங்கிலத்துல ஸீரியஸ்ஸான விஷயங்கள எழுதுடா. அது இன்னமும் சிரிப்பா இருக்கும்.

அந்தக் காலத்துல, 1526 வருடஇறுதிலேன்னு நெனக்கறேன்! நான் கணையாழில ‘அல்-பெருனி’ன்ற புனைபெயர்ல ஒரு மொகலாயப் பின்னணிக் குறுநாவல் ‘பாபரின் பார்பர்’ எழுதி அதுக்கு திஜானகிராமன் பரிசு கெடச்சுது இல்ல? அதத் தேடிக் கொட்றா! என் பொண்டாட்டிகிட்ட காமிக்கணும். நான் தமிழ்ல எழுதியிருக்கேன்னு சொன்னா நம்பவே மாட்டேன்றா.

“உனக்குத் திமிர்னு பிறத்தியார் நெனெச்சுடுவாங்கடா! ஆனா எனக்குத் தெரியும் நீ அப்டீ இல்லைன்னு! இருந்தாலும் திமிரைக் கம்மி பண்ணிக்கோடா!”

ஆஹா!

-0-0-0-0-0-

இந்த வாரம் எனக்கு வருடாந்திர பர்ஃபார்மன்ஸ் அப்ரைஸல் போலாகிவிட்டது. எனக்குத் தாளவில்லை.

பிரச்சினைகள் என்னவென்றால், ஒருவன் கிழங்கட்டையாகிவிட்டால், அவன் அவ்ளோ வயது வாழ்ந்த காரணத்தினாலேயே 1) அவனுக்கு நிறையமனிதர்களையும், ஆ) நிறைய மனிதர்களுக்கு அவனையும் தெரிந்திருக்கும். முதலாவது பிறருக்குப் பிரச்சினை. இரண்டாவது, அவனுக்குப் பெரும்/கொடும் பிரச்சினை.

கடந்த நான்கு நாட்களில் ஐந்துபேர்கள் – இதில் இருவருடன் கோமணம் கட்டாத நாட்களில் இருந்து சுற்றியிருக்கிறேன், இன்னொருவர் 20% இடஒதுக்கீட்டில் மகளிர் கோட்டா – ஒர்ரே அறிவுரை மயம். இதைச் செய்யாதே அதைச் செய்யாதே. அதைச் செய். இதைச் செய். நல்லமனதுக்காரர்கள், என் நலவிரும்பிகள்தாம். ஆனாலும் படுத்துகிறார்கள், பாவிகள்.

சற்றுமுன்தான் ஒருவருடைய அறிவுரை முடிந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை, யார் அறிவுரைக்கப் போகிறார்களோ என்பதை நினைத்தால், உள்ளபடியே கொஞ்சம் படுபீதியாகவே இருக்கிறது.

ஆனால், வேறு வழியில்லாமையால், அந்தக்கால சென்னை ஆட்டோபோல அறிவுரை மீட்டர் வைத்து, அதற்குச் ‘சூடு வைத்து,’ ஒரு நிமிட அறிவுரை கேட்பதற்கு ரூ 100/- மட்டும்  -என வசூலிக்கலாம் என நினைக்கிறேன். ஜிஎஸ்டி பில் கொடுக்கிறேன்.

அறிவுரையாளர்கள் வரிசையில் வரவும். இந்த ரவுண்டில் ஒருவர் ஒருமுறைதான் அறிவுரை கொடுக்கலாம். அதிகபட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே அறிவுரை தரமுடியும். அதற்குமேற்பட்டால், நான் பதில்அறிவுரை கொடுப்பதை வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும்.

நன்றி. :-(

 

11 Responses to “அறிவுரைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்”


  1. இன்றே கடைசி!!!

    இன்று காலை 7 மணியிலிருந்து, கடை திறக்கப்பட்டு — இன்றைய, மேன்மைவாய்ந்த மேதகு அறிவுரையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. மொத்தம் 5 டோக்கன் மட்டுமே கொடுக்கப்படும். (ஆனால், இதுவரை யாரும் வரவில்லை, நல்லவேளை!)

  2. dagalti Says:

    அறிவுரை: ப்போக்கர் ஃபேஸ்ட் எக்ஸ்பெரிமெண்ட்

    உங்கள் ப்ரத்யேக நடையை தவிர்த்து, சீரியஸாக ஒரு கட்டுரை எழுதுங்கள்.
    ஆனால், அதில் நீங்கள் கொள்கை அளவில் எதிர்க்கும் சகல கீழ்மைகளும் – Punching above weight, அறிவுபயோகபாவனை எல்லாம் வைத்து எழுதுங்கள்.

    ஏழரையில் எவரேனும் அந்த இடுகையை சிலாகித்தால் அவர்கள் காலி. வெவ்வேறு காழ்ப்பேமாற்றப்போயாமையால் இத்தலம் வந்தார்களேயொழிய, ஒத்திசைவின் பேசுபொருளை நன்குணர்ந்தோரல்லர் என்று நீங்கள் ஸ்க்ரீன் செய்து கொள்ளலாம்.

  3. Dagalti Says:

    *காழ்ப்பேமாற்றப்போதாமையால்

  4. Sreedhar. Says:

    Sir,
    Looking at the feedback, your readership has crossed the magic number 7.5 by a mile :)


    • Sir, no. Fortunately not.

      How can you be so sure that I am NOT manufacturing all these comments and ‘kadithangal?’

      Isn’t it a great, fine honed, time tested practice of our fellow Auteur Ineffectuals, especially of the Tamil kind?
      ;-)

  5. Sachidanandam Says:

    இது அறி வொரெ மாரி தெர்லியே…


    • உண்மைதான். :-(

      ஆனால் ஆழ்ந்து கவனிக்கவும்: தொல்லை கொடுக்கும் நச்சினாக்கினியர் (trouble cause tongue from now onwarder) மாமக்களின் சில செய்/செய்யாதேக்களை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

      றொம்பத் துள்ளினால், கடலூர் சீனுவின் ஜெனட்டிக் இனியஜெயம் பற்றி எழுதிவிடுவேன், ஜாக்கிரதை. (ரேஸ்குதிரையோட்டுபவனின் தேரை)

      இன்னாது? பொர்ஸவாக்கத்ல கீற டாக்டர் ரெக்ஸ் ஹாஸ்பிடல்ஸ் பக்கத்லவா கீறீங்கோ?

  6. somu Says:

    ஒரு மனுஷன் தனக்காக, தான் மனசுல தோணுறத எழுத, வடிகாலா தன்னோட தளத்தை பயன்படுத்திக்க இந்த நாட்டுல உரிமையில்லையா? இந்த நாட்டில் சகிப்புத்தன்மை இன்மை அதிகமாகிவிட்டது. :-)

    (அப்படியே நான் செய்த அறிவுரையை மறந்துவிடவும். அதை நினைத்தால் இப்போது வெக்கமாக இருக்கிறது)

  7. T.S. Ravi Says:

    உன் கவிதையை நீ எழுது

    http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_13.html


    • _சவால்_

      நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
      துடைகள் பிணைத்துக் கட்ட
      கயிறுண்டு உன் கையில்.

      வாளுண்டு என் கையில்
      வானமற்ற வெளியில் நின்று
      மின்னலை விழுங்கிச் சூலுறும்
      மனவலியுண்டு.

      ஓய்ந்தேன் என மகிழாதே
      உறக்கமல்ல தியானம்
      பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.

      எனது வீணையின் மீட்டலில்
      கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
      உனக்கு நரையேற்றும் காலங்கள்.

      எனது கொடி பறக்கிறது
      அடிவானத்துக்கு அப்பால்.

      (இதுவும் அவருடையதுதான்!)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s