ஜெயமோகனின் கீழ்நோக்கிய பயணம்: கறார் ஆராய்ச்சி முடிவு (FINAL)
August 4, 2019
சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-(
இதில்தான், பலப்பலசமயங்களில் படுமோசமாக மட்டுமே அவர் எழுதும் நிதர்சன உண்மை குறித்து, அவருடைய சொந்த தன்னிலை விளக்கமும் என் (+நண்பரொருவருடைய) பொழிப்புரையும் இருக்கிறது. முடிந்தால் படிக்கவும், விரசமாக இருக்கிறது என வெறுக்கவும். எப்படியும், இதற்குப் பிறகு ஜெயமோகன் அவர்கள் எழுத்துகள் குறித்து எழுத எனக்குத் திராணி இருக்கப்போவதும் இல்லை, அவருக்கு அந்த ஆகிருதியும் இல்லை என்பதுதான் என்னுடைய தற்போதைய எண்ணம்.
ஹ்ம்ம்… ஆனால், நான் என்ன பெரீய்ய மசுராண்டியா என்ன! பார்க்கலாம், காலம் எப்படி விரிகிறது என்று.
-0-0-0-0-
பெரும்பேராசான் புரி கொனாரக் ரதயாத்திரை பார்க்கச் செல்கிறார். நல்ல விஷயம். அதனைப் பற்றி பலப்பல கட்டுரைகளை வரைகிறார். அவருடைய தமிழ்வளமும் மொழியைக் கையாளும் லாகவமும் எனக்கும் பிடித்தமானவைதான்.
ஆனால் அம்மணிகளே/அம்மணர்களே! இந்த எழவெடுத்த அலக்கிய வேதாளம் எனவொன்று இருக்கிறதே! ஈஸ்வரா!!!!
…அது நிரந்தரமாக முருங்கமரத்தின் உச்சாணிக்கிளையின்மேல் உட்கார்ந்து கொண்டு கீழே வாளாவிருக்கும் என்னைப் பார்த்து, ஆகச்சிறந்த அழகுகாட்டி அதுவன்றிப் பிறிதொன்றில்லாமல் விசையுடன் மசைத்தனமாக இளிப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை; ஏனெனில் அக்கட்டுரைகள் பலவற்றிலும், ஒவ்வொரு விஷயத்திலும் கொடும் பிரச்சினைகள் – தகவல்/செய்திரீதியாக மட்டுமல்ல, கருத்து ரீதியாகப் பலப்பல மஹா கந்தறகோளங்கள் பல்டிகள் உண்மையின்மைகள், படிக்கும் நமக்கே கூச்சம் வரவைக்கும் அரைகுறைத்தனங்கள்…
ஆனால் நான், அவற்றில் ஒரு அநியாயத்துக்கு அட்ச்சிவுடப்பட்ட கட்டுரையை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். அதில், அவர் கொனாரக்கின் சூரியன்கோவிலுக்குச் சென்றமை, அங்கிருக்கும் சிற்பம், வரலாறு கதையாடல்கள் என்றெல்லாம் எழுதி, சிங்கம் அசிங்கம் சிலை என்றெல்லாம் பம்பர் சாகுபடி, அதாவது நாம் சாகும்படி செய்து, காமம் குறித்தும், அது புடைப்புச் சிற்பங்களில் வெளிப்பட்டுள்ள தன்மை குறித்தும் படுபீதியளிக்கும் வகையில், வல்லுநர்தனமான கருத்துகளை வலுக்கட்டாயஆணித்தரமாக முன்வைக்கிறார். (ஐயய்யோ! இதில் புடைப்பு என்பதை விரசமாகப் புரிந்துகொண்டு கட்டுடைப்பு செய்து, இந்த ராமசாமியெனும் ஆசாமி, ஆபாசத்தை உபாசனைசெய்பவன் என கரித்துக்கொட்ட வேண்டா! உங்கள் உள்மனக் கிடக்கைகளை என்மீது கவிழ்த்தி வெறுப்புமிழ வேண்டா! நான் ஒரு அப்பாவி.)
கட்டுரை இங்கே: https://www.jeyamohan.in/124054
இக்கட்டுரையில் நிறைவளிக்காத வளவளாக்கள் நிறையவே இருந்தாலும், சுற்றி வளைத்துப் பேசாமல் பாடுபொருளுக்குச் சீக்கிரமாகவே வருகிறேன். இருந்தாலும் – ஒரு சிறிய விஷயத்துக்கான சுருக்கமான பொழிப்புரை!
ஐயா பெரும்பேராசான் இப்படி எழுதுகிறார்:
“சூரியன் போகத்தின் வடிவம். விந்தின் வீரியம். ஆகவே கஜுராகோவுக்கு நிகராகவே இங்கு காமச்சிலைகள் உள்ளன.”
(கீழுள்ள விஷயங்களை, நினைவிலிருந்து எழுதுகிறேன்; தவறுகள் / அபுரிதல்கள் இருந்தால் தாராளமாகத் திருத்திக்கொள்கிறேன்!)
சரி. பொதுவாகவே, ஜெயமோகன் எழுதமுற்படும் விஷயங்களில், அவரவளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது பின்புலம் உள்ள எனக்கு, இது அதிசயமாகப் படுகிறது. அதாவது – ஜெயமோகன் அவருடைய வழக்கம்போலவே அமோகமாக அட்ச்சிவுட்டிருப்பதாக. என்ன சோகமிது. :-(
சூரியன்? போகம்?? விந்து??? வீரியம்???? என்னய்யா சொல்லவருகிறீர்?
ஸௌரம் குறித்த பண்பாட்டு நீட்சிகளில், ஏன் ஸௌரஸம்ஹிதையில் கூட, என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இதுகுறித்த குறிப்புகள் இல்லை; நான் அறிந்தவரையில், பொதுவாகவே, இம்மாதிரி சூரிய-காம தொடர்பான தாந்த்ரிகக் குறிப்புகள் இல்லை என்றே நினைவு. கௌளஞானநிர்ணயம் சொல்வதன்படி பார்த்தால், ஹ்ருதயம்=சூரியன், தலை=சந்திரன், பாலுறுப்புகள்=தீ என்பது போன்ற குறியீடுகளும் அழகுணர்ச்சி உருவகங்களும்தான் இருக்கின்றன. கொஞ்சநஞ்சம் விட்டு வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய மண்டைமசுரைப் பிராண்டிக்கொண்டு, அதனுடன் கூடக் கலந்தடித்துத் தக்ஷிணசாரம் வாமாசாரம் லதாஸாதனை என்றெல்லாம் பார்த்தாலுமேகூட பஞ்சமகரங்களில் ஒன்றான மைதுனம் என்றளவில் அது விரிகிறது. அவ்ளோதான்!
சூரியன், போகத்தின் வீர்யம்? ஆகவே கஜுராஹோவுக்கு நிகராகவே கொனாரக்கில் காமம் இறக்குமதிசெய்யப்பட்டது??
இன்னாங்கடா (அல்லது) என்னவோடாப்பா! :-(
ஆனால் கூக்ள் எழவில் தேடினால், பெரும்பேராசானுடைய முட்டுக்கொடுக்கும் முட்டுக்கலப்பைச் சீடர் எம்ஸ்ரீனிவாஸ் அவர்கள் சொற்படி – ஜெயமோகன் சார்பு தத்துப்பித்துவங்களை முட்டுக்கொடுக்கவும் ஏதாவது வேண்டுமளவு தீனி கிடைக்கும். கூக்ளில் தீதும் நன்றும் நாம்தேட நம்மை வாரிவிட வரும் தன்மை கொண்டவையன்றோ?
அப்படி இல்லையென்றாலும், பெரும்பேராசானுடைய ஆபத்துதவிகள் படையினரும் சர்வ நிச்சயமாகத் தரவுகளையும் சாட்சியங்களையும் தொழில் முறையில் உருவாக்கி இணையத்தில் உலாவரும் ஒளிக்கதிராக வளையவிட வல்லவர்கள்தாம்! சில வருடங்கள்முன் அவரால் அட்ச்சிவுடப்பட்ட ‘அறம்’ கதையாடல்களுக்கு முட்டுக்கொடுக்க ஜெயமோகனாதிகளானவர்கள் விக்கிபீடிய முட்டுக்கொடுத்தல்களைச் செய்தார்கள் என்கிற (இப்போது நினைத்தாலும்) ஆச்சரியம் தரும்விஷயமும் எனக்கு நினைவுக்கு வருகிறது…
…ஆனாலும், இந்தத் தாந்த்ரீகச் சமாச்சாரங்கள் எனக்கு, என்னளவுக்குத் திருப்தி தரும் அளவுக்குத் துப்புரவாகப் பிடிபடாத விஷயமானவையாதலால், இதனை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.
அதேசமயம் — எங்கோ அண்டசராசரங்களின் அதிவுயரங்களில் உலவி, உண்மையாகவே பெரும்படிப்பெல்லாம் படித்தும் ஆன்மிக விவகாரங்களில் ஈடுபாடுமுள்ள ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி’ கமேண்டோ பிஸிஏகே47 நாயர் போன்ற அறிவாளிகள்/சான்றோர்கள், தங்கள் நண்பரான ஜெயமோகனுக்கு அடிப்படைத் தாந்த்ரீக/பாரதஆன்மிகம் தொடர்பான 101ரெவல் போதனைகளை அருளுவதற்கு அப்பாற்பட்டு, கீழிறங்கி என் ரெவலுக்கு வந்து தயைகூர்ந்து, கிழவக்கீழோனாகிய எனக்கும் இவைபற்றியெல்லாம் பொறுமையுடனும் கருணையுடனும் பாலபாடமெடுத்தால் ஒருவேளை எனக்கும் இவ்விஷயங்கள் சரிவரப் பிடிபடும் பாக்கியம், நல்லூழ் கிடைக்கலாமோ என்ன எழவோ! :-(
-0-0-0-0-0-
சரி. நம் பெரும்பேராசான், மானுடக் கலவி வழிமுறைகளை விதம்விதமாகச் சித்திரிக்கும் சிற்பங்களைப் பார்க்கிறார். காமச்சிலை உச்சம் காமக் களியாடல் விளையாட்டு என்றெல்லாம் தொடர்கிறார்… ஆனால்… …
“குருதி முழுக்க தலைக்குச் செல்லும் என்றால் பாலுறுப்புகளில் எஞ்சுவது என்ன”
…எனவொரு அவைய்லபிலிட்டி பயாஸால் உத்வேகம் கொடுக்கப்பட்ட ‘சுளுவான கருத்துருவாக்கத்துக்கு’ உடனடியாக டமாலென்று வந்துசேர்கிறார். :-(
அதாவது தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஒரு பெண், ஒருஆணுடன் ஸர்க்கஸ் வழிக் கலவியில் ஈடுபடமுடியுமா எனவொரு மிக நியாயமான கேள்வியைக் கேட்டுக்கொள்கிறார். எனக்கும்தான் இப்படி நடைமுறைச் சந்தேகங்கள் – என்ன, கண்ட இடத்தில் ஏடாகூடமாகச் சுளுக்கிக்கொண்டால் என்னசெய்வது என ஒரு பதற்றம்தான்! ஆனால் அவற்றை லூஸ்ல வுடவும் பழகியிருக்கிறேன்.
ஆனால் அவருக்கே உரித்தான, எதைப் பற்றியும் கருத்துதிர்க்கவேண்டும் என்ற அளவிலா ஆவலில் – உடனடியாக, ‘அவைய்லபிலிட்டி பயாஸ்’ கூட்டணி வைத்து பயாஸ்கோப் காண்பிக்கச் சொல்கிறது.
ஆக, அவருடைய தர்க்க விவரணை:
0. நம்மால் இப்படியெல்லாம் அக்ரோபேடிக்ஸ் செய்யமுடியுமா? முடிய்வே முடியாத்! (தொப்பை வேறு நடுவில் துருத்திக்கொண்டு இருக்கிறதே, கெரகம்!)
1. தலைகீழாக நின்றால், தலைக்கு ரத்தம் மேலதிகமாகப் பாயும் – ஏனெனில் ஷிரசாஸனம் செய்திருக்கக்கூடிய எவருக்குமே தெரிந்த விஷயம்தான் அது. பின்னர் நேராக நிற்கும்போது உபரி ரத்தம் வடியும்போது தலை சுற்றும். (அதாவது, கொஞ்சம் தற்காலத் தமிழ் அலக்கியம் படிப்பது போலிருக்கும் அல்லது ஒத்திசைவைப் படிப்பது போல, எனப் புரிந்துகொள்ளுங்கள், சரியா?)
2. ஆனால், கலவிக்கு அதன் உணர்ச்சிப் பெருக்கில் – ஆணுறுப்பிலும் சரி, பெண்ணுறுப்பிலும் சரி உபரி ரத்தம் பாயவேண்டியது அவசியம். இல்லாவிடில் ஆணுறுப்பு நீட்சியடையாது. பெண்ணுறுப்பும் தேவையான அளவில் கிளர்ச்சி அடையமுடியாது. சரிதேன்!
3. ஆகவே, தலைகீழாக அக்ரோபேடிக்ஸ் செய்துகொண்டிருக்கும் பெண்ணுக்கு, அவருடைய பெண்ணுறுப்பில் ரத்தம் பாயாது! (?) ஏனெனில் இதயம் பெண்ணுறுப்புக்குக் கீழேயல்லவோ இருக்கும்? (எப்படியெல்லாம் மாற்றிச் சிந்திக்கிறார், நம் பெரும்பேராசான்! பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது! நம்ம தமிளிளக்கியக்காரேண்டா!)
ஆகவே,டமாலென்று… “குருதி முழுக்க தலைக்குச் செல்லும் என்றால் பாலுறுப்புகளில் எஞ்சுவது என்ன” போடுகிறாரே ஒரு போடு! அடேங்கப்பா!!
இதனைப் படித்துவிட்டு, துணுக்குற்ற நான், சிலபல ‘முன்னனுபவமுள்ள’ நண்பர்களுக்கு (அடேய்ங்க்ளா! நான், அவர்கள் இம்மாதிரிச் சிற்பங்களை அவர்கள் முன்னமேயே பார்த்தனுபவித்திருக்கக் கூடியவர்கள் எனத்தான் சொல்கிறேன்!) அனுப்பி அவர்கள் சிந்தனைகளைக் கேட்டேன். (றொம்ப முக்கியண்டே!)
அதில் ஒருவர்…
இந்த ஆள், மிகவும் திமிர் பிடித்த ஆசாமி, ஆகவே என் அத்யந்த நண்பர்களில் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
நண்பரின் சிந்தனையைப் பின்தொடர்ந்து யோசிக்கிறேன். ஆக, என்னுடைய துணிபுகளை மூன்று விதிகளாகத் தொகுத்துக்கொள்கிறேன். (எல்லாம் உங்கள் தலைவிதிதான், பாவம்!)
ஜெயமோக இறைதூதனான அடியேன் அருளிச்செய்யும் …
…உடற்கூறுவியல் ஆண்குறியீட்டுமுதல்வாதக் கருத்தியல் எழுத்தியல்
விதி #1: பெரும்பேராசான், நல்ல தரமாகக் கட்டுரைகளை எழுதும்போது தலைகீழாக ஷிரசாஸனம் செய்துகொண்டிருக்கவேண்டும் – ஏனெனில் அப்போதுதானே மூளைக்கு ரத்தம் பாயும்? பிரச்சினை என்னவென்றால், இது கொஞ்சம் கஷ்டமான விஷயமாதலால், ஆகவே அவரால் தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டே இருக்கமுடியாதாகையால், அவருடைய பலப்பலப்பல ஆக்கங்களில், ஒருசில மட்டும் சில இடங்களில் மிகுந்த தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. (ஏனெனில், இப்படி அவர் எழுதிக் கொண்டிருக்கும் தருணங்களில், ரத்தம் மண்டை மூளைக்குப் பாய்கிறது)
விதி #2: அதேசமயம், அவருடைய பலப்பலப்பல கட்டுரைகளை, அவர் பாவம், சாதாரணமாக (ordinary injury like?) உட்கார்ந்து எழுதுவதால், அவை வெறும் மானேதேனே என உள்ளீடு இல்லாமல் அட்ச்சுவுட்டாக்ஸ்களாக இருக்கின்றன. (ஏனெனில் – ரத்தம், மூளைக்குப் போகாமல், ஆண்குறியீட்டுக்கும் காலுக்கும் பாய்கிறது)
விதி #3: அவர் வளைந்து குனிந்து நின்று கொண்டு கையால்/காலால் (மன்னிக்கவும், பாதங்களின் விரல்களால்) எழுதப் பழகிக் கொண்டால், பெரும்பேராசான், இன்னமும் உச்சங்களை அடைந்து மாபெரும் பெரும்பேராசானாக மிளிர்வார் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனெனில் ரத்தம் மண்டைமூளைக்கும் எழுதும் உறுப்புக்கும் ஒருமித்து 50:50 விகிதத்தில் பாய்வதால் குறைந்த பட்சம் 50% கட்டுரைகள் கியாரண்டியாக போற்றத்தக்கவையாக இல்லாவிட்டாலும் பொறுத்துக்கொள்ளத் தக்கவையாக அமையும்.
மற்றபடி அவர் விருப்பம். ஆளை விடுங்கள்.
-0-0-0-0-0-
சரி. மேற்கண்ட மிகமுக்கியமான உடற்கூறு ஆண்குறியியல் இலக்கியத் திறனாய்வு ஆராய்ச்சிக்கு யாராவது ஏதாவது, உரிய இடங்களில் பரிந்துரை கழுதைதுரைசாணி என ஆவன செய்து, எனக்கு முனைவர் பட்டம் வாங்கிக்கொடுத்தால், புண்ணியமாப் போகும்! ஐயாஆஆஆஆஆ! பீஹெச்டி பிச்சே போடுங்க்யா!
பின்குறிப்பு: அடியேனுடைய ஆழ்ந்த விருப்பம் என்னவென்றால், பெரும்பேராசான் மாதத்துக்கு ஒருமுறையாவது ஷிரசாஸனம் செய்துகொண்டே ஒரேயோரு கட்டுரையை எழுதினால், உடனே அதனைப் படிக்காமலேயேகூட அதனைப் புகழத் தயார். ஏனெனில், அப்ரசண்டியான நான் அப்படி எழுதினால்கூடத் தரமாக இருக்கும் எனத்தான் நினைக்கிறேன். நன்றி.
அதே சமயம், அவர் என்ன காட்டுரை எழுதினாலும், வாசகர்களாகிய நாம் சாதாரணமாக இருப்பதுபோல நேராக உட்கார்ந்து படித்தால், நமக்கு ஒன்றும் பிடிபடாது. ஏனெனில், நம் மூளைக்கு ரத்தம்பாயாமல் பிரச்சினை கொடுப்பதற்கு அப்பாற்பட்டு, நம் பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் போய் குறிலானது நெடிலாக நீண்டு திரைக்கும் நம் கண்ணுக்கும் நடுவே வந்து மறைக்கும்வேறு, எழவு! ஆகவே ஒன்றுமே புரியாவிட்டாலும் தண்டுவடரீதி முட்டியடி எதிர்வினையில், அவர் என்னதான் வுடான்ஸ் வுட்டிருந்தாலும் உடனடிப் புளகாங்கிதத்தில் ஜெனரலாக ‘லைக்’ செய்து அனுபூதிநிலையடைந்து சொக்கிப்போய் ‘இனிய பயம்’ வகையறா வாசகர் கடிதம் எழுதிவிடுவோம்.
மாறாக நாமும் தலைகீழாக நின்றுகொண்டு, அதாவது ‘அவர் எழுத்துகளைப் படித்துத்தான் ஆவேன் எனத் தலைகீழாக நின்று‘ ஜெயமோகனைப் படித்தால்…
…ஹே! ஜெயமோகமேகூட இனிக்குதடா நந்தலாலா… ஒவ்வொருமுறையும் அப்டீ இர்க்குதடா நந்தலாலா… …
(சரி. ஷோ முடிந்தது. எல்லாரும் ஜோராகக் கைதட்டிவிட்டு வீட்டிக்குச் செல்லலாம்; ஆனால் கண்டிப்பாகப் பல்துலக்கிவிட்டுப் படுக்கவும். இது மிக முக்கியம், கேட்டோ?)
August 4, 2019 at 19:50
நீரே பார்த்து தெரிந்து கொள்ளவும்.
https://melmagazine.com/en-us/story/how-to-perform-the-worlds-most-nerve-racking-sex-position-the-standing-69
August 4, 2019 at 19:56
ஆ! எனக்கு ஜெயமோகனே போதும்!
இரண்டுக்கு மேல் வேண்டவேவேண்டாம் என்றிருக்கும் இக்காலகட்டத்தில் 69 என்கிறீரே? நியாயமா?
August 4, 2019 at 22:15
இரண்டா?!
August 5, 2019 at 04:36
மிரண்டா போய்விட்டீர்கள், மிஸ்டர் மிராண்டா?
August 6, 2019 at 23:12
—பெரும்பேராசானுடைய முட்டுக்கொடுக்கும் முட்டுக்கலப்பைச் சீடர் எம்ஸ்ரீனிவாஸ் அவர்கள் சொற்படி—
ha haa, you are assuming this M. Srinivas is a real person!! it is his alter-ego, he would occasionally pop-up such ghosts from those old days of Thinnai :)
August 7, 2019 at 05:39
எனக்கு வோண்டாம்பா இந்த பாலிட்ரிக்ஸும் திண்ணைப்பேச்சும்! 😭😨எத்தனையோ பார்த்தாகிவிட்டது, எத்தன் உட்பட. 😂ஆகவே.