கஷ்மீர்!
August 5, 2019
!
பலபத்தாண்டுகளாக நான் மிகமிக மதிக்கும், ஆராதிக்கும் ஒரு பெரியவரிடம் இன்று மதியம் நடந்த உரையாடலின், ஸ்க்ரீன்ஷாட் கீழே.
இன்று மத்திய அரசு கையாண்டிருக்கும் முக்கிய விஷயம் பற்றித்தான் இந்தக் கதைத்தல்.
நான் சொல்லியுள்ளதுபோல ரத்தம் சிந்தப்படும்தான். ஏனெனில், deep seated cancer can never be cured by the cosmetic skills of dermatology. ஆனால் எல்லாம் நல்லதற்கே. இனிமேலிருந்து அங்கே, நல்லதே நடக்கட்டும்.
…இப்படியெல்லாம் ஸென்டிமென்டலாக எழுதுவது எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும் – பாவி இளைஞன் ராஜீவ்குமார், இன்றுமட்டும் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பான் என்ற கையறுநிலை நினைவைத் தவிர்க்க முடியவில்லை. :-( [இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)]
-0-0-0-0-
என் மகனும் (அவனும் நானும் அண்மையில் மூன்றுநான்கு கஷ்மீர் வரலாறு பற்றிய புத்தகங்களைப் படித்துள்ளோம்) அவனுடன் இன்றுமாலை விளையாட வந்த அவன் நண்பனும் என்னிடம் (ஒரு மரியாதைக்காக என நினைக்கிறேன்!), ‘என்ன இப்படி சந்தோஷமாக இருக்கிறீர்களே’ எனக் கேட்டதுதான் தாமசம் – உடனடியாக அரைமணி நேரப் பேச்சை மூச்சுவிடாமல் பேசி முடித்தேன், பாவம் அவர்கள்.
…ஆனால் நட்டநடுநிலைவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் தொழில்முறை மனிதவுரிமைவாதிகளும் போராளிக்கூவான்களும் ஊடகப்பேடிகளும் லிபரல்-லும்பன்களும் 370 35ஏ எனச் சுயபச்சாத்தாபத்துடன் புலம்புவதைப் பார்த்தால் நல்ல நகைச்சுவை – இந்த ஒரு காரணத்துக்காகவே மத்திய அரசு செய்தது மிகச்சரியானதொரு விஷயம் என்ற முடிவுக்கு உடனே வந்துவிடலாம்; ஒரே நாளில் இப்படிப் பலர் கஷ்மீர், பாரத அரசியல் சாஸனம் குறித்து அதிவல்லுநர்களாகி அளப்பரிய அட்ச்சிவுடல்களையும் அறமார்ந்த விஷயங்களையும் அள்ளிவிடுவது எனக்கு ஆச்சரியமே தரவில்லை. அற்பக் கோமாளிகள்.
-0-0-0-0-
Oh let the sun beat down upon my face, stars to fill my dreamI am a traveler of both time and space, to be where I have beenTo sit with elders of the gentle race, this world has seldom seenThey talk of days for which they sit and wait and all will be revealed…Talk and song from tongues of lilting grace, whose sounds caress my earBut not a word I heard could I relate, the story was quite clearOh, oh.Oh, I been flying… mama, there ain’t no denyin’Ive been flying, ain’t no denyin’, no denyin’All I see turns to brown, as the sun burns the groundAnd my eyes fill with sand, as I scan this wasted landTrying to find, trying to find where I’ve been.
Oh, pilot of the storm who leaves no trace, like thoughts inside a dreamHeed the path that led me to that place, yellow desert streamMy shangri-la beneath the summer moon, I will return againSure as the dust that floats high in June, when movin’ through Kashmir
Oh, father of the four winds, fill my sails, across the sea of yearsWith no provision but an open face, along the straits of fear…
When I’m on, when I’m on my way, yeahWhen I see, when I see the way, you stay-yea…Let me take you there. let me take you there…
…லெட் ஸெப்லின் – கஷ்மீர் பாடல்; என் சிறுவயதிலிருந்து (14? ரேடியோ ஆஸ்ட்ரேலியாவும் ஜெர்மனியின் டாய்ட்ச் வெல் வானொலி ஸ்டேஷனும் கொடுத்த கொடை!) எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
முடிந்தால் கேட்கவும். இன்று நெடு நாட்களுக்குப் பின் இதனைக் கேட்கிறேன். திருப்தியாக இருக்கிறது. நீங்களும், இம்மாதிரி விஷயங்களில் பரிச்சயம் இல்லையென்றாலும் கேட்கலாம்.
Led Zeppelin – Kashmir: https://www.youtube.com/watch?v=PD-MdiUm1_Y
சரி. பலப்பல நாட்களுக்குப் பின், திருப்தியான ஒரு விஷயம் நடந்திருப்பது, இன்னமும் பலப்பல விஷயங்கள் இப்படி நடக்கலாம் எனவொரு நம்பிக்கையை அளிக்கிறது.
நம் பாரதியின் ‘புதிய கோணங்கி’ சொல்வதுபோல, நல்லகாலம் வருகுது! :-)
August 6, 2019 at 00:02
கஷ்மீர மற்றும் ஏனைய sickular லிபராண்டு அரசியல்வியாதிகள் அத்தனை எளிதில் இயல்புநிலை திரும்ப விடப்போவதில்லை(நம்மூர் உண்மைவிளம்பிகளான பசியும், வைகோவும் இன்று உணர்ச்சிபிளம்புகளாய்க் கொதித்தது ஓர் உதாரணம்). இதுபோக பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அண்டைநாட்டு அன்பர்கள், அயல்நாட்டு அனுதாபிகள், ஊடக உன்னதர்கள் என எண்ணற்றோர் நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச்செய்து குளிர்காயக் காத்திருக்கின்றனர். இருப்பினும் மத்திய அரசு மிகுந்த உறுதியுடனும், சமயோசிதமாகவும் இவ்விவகாரத்தைக் கையாண்டிருக்கிறது. இதுகுறித்து தெளிவாக எடுத்துரைப்போர் தமிழக ஊடக விவாதங்களில் பங்கேற்காதது நமது துரதிர்ஷ்டம். இனியேனும் கஷ்மீர் விமோசனத்தை நோக்கிப் பயணிக்கட்டும்!
August 6, 2019 at 03:41
காசுமிரம் தொடர்பாக உங்கள் பார்வைக்கு பேராசிரியர் பட்சிராசன் அனந்தகிருட்டிணன் புனைந்த கட்டுரையை வைக்கிறேன். இதற்கு நீவிர் மறுப்பு சொல்லமுடியுமா?
https://pakrishnan.com/2019/06/28/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
செயமோகன் இன்றுகாலை வரை கட்டுரை வடிக்கவில்லை. வடித்தால் அதனையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
A
August 6, 2019 at 08:46
ஐயய்யோ! உங்களுக்கு நன்றியின்மையுடன் இன்றுதான் பிஏகே கட்டுரையைப் படித்தேன்! தவறு செய்துவிட்டேன். :-(
ஆனால் – லெட்-ஸெப் பாடல் எப்படி இருந்தது (இதோ, அதேபாடலின் இன்னொரு யூட்யூப்விடியோ! – https://www.youtube.com/watch?v=sfR_HWMzgyc) எனச் சொல்லாமல், இப்படி அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறீரே! பிஓகே-PoK என்றால் பிஏகே-PAK எனவா அனர்த்தம் செய்துகொள்வது + கொல்வது??
கட்டுரையைப் படித்தேன். வருத்தம். ஆனால், நன்றாக வெள்ளையடிக்கிறார்தான். ஆக, ஆளைவிடும்.
ஆனால் ஐயா, நான் என்னுடைய கட்டுரையில் நேரு கீரு சாச்சா மூச்சா என ஒன்றையுமே சொல்லவரவில்லையே, ஏன் என்னைப் படுத்துகிறீர்? மேலும் அவர் பேராசிரியர் என்பதை இன்றுதான் அறிந்தேன்! எந்தக் கல்லூரியில் /பல்கலைக்கழகத்தில் பணி செய்தார் அவர்? (எனக்குச் சந்தேகம்தான்!)
எது எப்படியோ!
இந்த ஸாம் மனெக் ஷா நேர்காணலில் மட்டுமல்ல, நேருவின் பராக்கிரமம் வெளிப்படுவது. படேல் அவர்கள் டிபிமிஷ்ரா அவர்களுக்கு எழுதிய 1946ம் வருடக் கடிதத்திலும் நேருவின் ஆர்வக்கோளாறுகளால் கஷ்மீரில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்… அவர் உபயோகித்த பதம், “உணர்ச்சிகர பைத்தியக்காரத்தனம்.”
ஆனால், பேராசிரியருடைய கட்டுரையையும் பிரித்துமேய (அதில் அவ்வளவு பிரச்சினைகள், கருத்துத் தாவல்கள்/பிழைகள்) எனக்குத் திராணியில்லை. அது மிகவும் நீளமாகவும் ஆகிவிடும்.
என் அனுபவத்தில் – பொதுவாகவே, தமிழ் அலக்கியத்துடன் நேரடித் தொடர்பிலிருப்பவர்களின் ‘பவிஷு’ இப்படித்தான் இருக்கிறது என்பதே என் ‘அடிபட்ட’ அதாவது படுமட்ட அனுபவம். புனைவு எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயங்களிலும் புனைவு புகுந்துவிடுகிறது, என்ன செய்ய!
ஆகவே, என்னை விட்டுவிடுங்கள். அவருக்கும் அவர் கருத்துரிமை இருக்கிறது. அவர் சொல்வதுதான் ‘உண்மையான’ வரலாறு என்று அவரே நம்பாதவரை என்ன பிரச்சினை, சொல்லுங்கள். அவர் என்ன தரவுகளையா கொடுத்தார் அவருடைய கட்டுரையில்? (நான் ஒருமுறைக்கு இருமுறை அதனைப் படித்தேன்)
பாரிசாலன் டானிகென் சாரு எஸ்ரா ஜெயமோகன் பிஎன்ஓக் ராமச்சந்திரகுஹா என ஆயிரம்பேர் இருக்கையிலே இவரும் இருந்துவிட்டுப் போகிறார். எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. எப்படியும் அவர் தரம் முன்னவர்களை விட மிகஅதிகம்தான்.
ஆனால், தயைசெய்து ஜெயமோகன் ‘வடித்த’ சமைத்த தாளித்துக்கொட்டிய கூட்டாஞ்சோற்றுக் கட்டுரைகளை என் பார்வைக்குக் கொணரவேண்டா; எனக்கு நகைச்சுவை வேண்டும்போது நானே அங்கு சென்று சாப்பிட்டுப் பசியாறுகிறேன்.
நன்றி.
அதிகாலையில் எந்தப் பொந்திலிருந்து உங்களைப் போன்ற அறிவார்ந்தவர்கள் ஒத்திசைவைப் படிக்க வருகிறீர்கள்? அதுவும் ஒத்திசைவு தள இணைய முகவரியைவேறு கொடுத்துக்கொண்டு! ஆச்சரியமாக இருக்கிறது!! பாளையங்கோட்டையில் மாதம்மும்மாரி மழை பெய்கிறதா? உங்களுக்கும் வேறுவேலையில்லையா, அறிவனாரே?
August 6, 2019 at 09:56
Lets pray and hope for better times in Kashmir. I hope this government will tackle the extraordinary situation effectively. The next big challenge would be the smooth conduct of assembly elections.
And you are yet to suggest books related to Kashmir :)
August 6, 2019 at 11:19
Sir, sorry – I thought I had reco’d Praveen Swami’s and Rahul Pandita’s – but note to do this asap.
Will start doing this booklisting reco stuff in as meaningful a was as possible. That’s a threat.
:-)
August 6, 2019 at 10:51
Madhu Purnima Kishwar at her crisp best –
MadhuPurnima Kishwar
@madhukishwar
Beginning of a new chapter in Indian history. For centuries we lived as #Dhimmis in our own land. First under Islamic tyrants & then under #NehruvianSickularism. No more #Dhimmitude.
August 6, 2019 at 10:59
Hi, The entire media is going ‘ga,ga’ over the decisions to scrap the Art 370 etc. You too! Now the state is divided into two with J&K having a Lt-Governor with an elected assembly. We will now have another version of Dehi or Puduchery with constant bickerings between Lt-Governor & the elected CM.
Now my question is how these cosmetic changes are going to solve the basic issue viz alienation of Kashmiri people and bring them into the main stream. Even now the Governor got unlimited powers to deal with any situation as deemed fit.
August 6, 2019 at 11:14
Sir, it is not a cosmetic change. There are solid plans and procedures; they will be good for india, intentions are good; the ideas are well thought out, as well us the ways by which repercussions could be handled etc.
For various reasons, I am unable to share many details with you. I am really sorry about that.
Of course, as I have said elsewhere, there will be in all likelihood, bloodshed. There is a price to pay. But Governments follow their own dharma, and it cannot be conflated with an ordinary person’s. And the current Govt has spunk and a can-do/GTD attitude.
And it is ‘no country for old men’ as Coen brothers put it. So I understand where you are coming from, as one myself.
And, I do not think the puducherry skirmishes are likely to happen in J&K unless the current union gov goofs up royally.
See, the propped up alienation is already there, though Bharat has paid thru blood for it already. It is not going to get worse, IMO please…
I really wish we had a forum in tamil /& english to engage in informed discussions without ad hominem attacks, but for the time being this comments mode seems to be the only recourse.
Thanks for sharing your anguish, but believe me, am not trying to go gaga over it, but am definitely happy – having closely followed devs there for the past circa 30 years or so.
But, siree – YMMV. Thanks again!
August 6, 2019 at 11:03
A message from J and K.
-0-0-0-
Dear ram
how do you do.
I am writing this from Gingle, in Uri. There is jubilation as well as despair here. I came here in july 2016, just after shooting of burhan wani. for 6 months upto dec 2016, there was complete day curfew and we moved only during nights to shrinagar.
This is the place where you have colonies of hindus in a pocket called bandi. there you have famous gurudwara of chati pathshaw at parampila. Right from 1947 since there is heavy military bandobust, still you have hindu population. not kashmiri pandits. local uri hindus.
people were expecting that 35A may be removed. they were neither thinking of removal of 370 and worse division of J&K and reducing the state to union territory. As of now there is mayooz. since communication is totally shut down, people are not able to plan an mass movement. It was just a few days back there was heavy bomardment from bofors batteries as retaliatory fire by late evening. for a couple of hours we had to go to bunkers.
bakr-e-eid is fast approaching by 12th-13th. In shrinagar, it seems there is deal in the early morning hours at few pockets like near dal jheel. here in gingle, even yesterday our grocery shop along with a few shops were open. and we purchased essentials. but yes, there is hostility. hope things would improve in the near future.
I am mailing this from our emergency leased line facility.
jaihind
—-
அன்பின் ராம்.
பதிந்து கொள்ளுங்கள்.
காஷ்மீரத்தை விட்டு விலகாது இங்கு பொறுமையாக உள்ளூர் முஸ்லீம் சஹோதரர்களொடு இணக்கமாக வாழும் மற்றைய இந்தியர்களும் இன்னமும் இங்கு இருக்கிறோம்.
August 6, 2019 at 11:49
decent and informed article
https://www.esamskriti.com/essay-chapters.aspx?sectionname=History&subsectionname=Indian-History&topicname=All-you-wanted-to-know-about-Jammu-and-Kashmir-Accession-to-India&chapter=1
http://indiafacts.org/scrapping-article-370-why-nobody-bought-the-media-narrative-on-kashmir/
If you ponder(!) emotional writers (!!) always supports emotional chacha.. In t’nadu there are literally 0.001% of thinkers
August 6, 2019 at 12:38
இந்திய அரசு இதுவரை சரியான முடிவுகளை எடுத்துள்ளது. அப்துல்லாவயும் மகபூபாவையும் கைது செய்வது சரியே ; ஏனெனில் அல்கைதா , அல்லது பாகிஸ்தான கைக்கூலிகள் குழப்பத்தை பயன்படுத்தி இவர்கள் இருவரையும் கொன்றுவிடுவார்கள்
மீடியாக்களில் பிபிஸியை நம்பாதீர்கள். பிபிஸி தவறான செய்திகளை கொடுத்து குழப்பத்தை ஊதப் பார்க்கிரது.
August 8, 2019 at 02:08
திரு ராம் லட்சோலட்ஷம் மக்களை கிட்லரிடம் பலிகொடுத்த இஸ்ரயேலியர்கள்,இன்னமும் திருந்தவில்லை.
August 8, 2019 at 06:07
யாரப்பா நீர், இங்கு புதிதாக வந்து விழுந்துள்ளீர்? (தாங்கள் ந்யூஹேம் காரர், முன்னறிமுகம் உண்டோ?)
பிபிஸி அம்னெஸ்டி வகையறாக்கள் மட்டும்தான் படிப்பீர் போலும். காலம்காலமாக க்றிஸ்தவர்களினாலும், இஸ்லாமியர்களினாலும், பின் (பாரதம் தவிர) ஏறத்தாழ அனைத்து மக்களாலும் கொன்றொழிக்கப்பட்ட, இழிவு செய்யப்பட்ட மக்களைப் பற்றியா இப்படி?
பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் அப்போது என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள தயைசெய்து முயற்சிக்கவும். எடுத்துக்காட்டாக யாஸர் அராஃபட் பற்றி கொடுக்கப்பட்ட பில்ட்-அப்களுக்கும் சமகால நிலவரங்களுக்கும் உள்ள தொடர்பின்மைகளிலிருந்து ஆரம்பிக்கவும். அதற்குமுன்னமே பால்ஃபர் அறிக்கையிலிருந்தும் ஆரம்பிக்கலாம். அதற்கும் முன்னேகூடப் போகலாம்! பின்னர் ஹமாஸ் வரை வரவும். அதற்குப் பிறகு பார்க்கலாம்.
அரவிந்தன் கண்ணையன் (http://contrarianworld.blogspot.com/) அவர்கள், யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான வெறிகுறித்து சில பதிவுகளை வெளியிட்டிருந்தார் என நினைவு. அவற்றையும் படிக்கவும்.
பொதுவாகவே, கீழ்மக்களை ஒதுக்கிவிட்டு, பின்னர் ‘எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்…’ எனும் கருதுகோள் படி நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது முக்கியமானது. அரவிந்தன் கண்ணையனாக, நானாக இருந்தாலும் சரி ஜெயமோகனாக இருந்தாலும் சரி.
அன்புடன்,
திரு ராம்.