ஜைனர்கள், கடலூர்சீனு, ஜெயமோகன், அனீஷ்க்ருஷ்ணன் நாயர், பொய்கள், சால்ஜாப்புகள், வருத்தங்கள் – குறிப்புகள்
June 2, 2019
இந்தக் கந்தறகோளக் கருத்துலகச் சகதியெழவில் நான் கால் வைத்திருக்கக்கூடாது. ஆனால் வைத்துவிட்டேன். என்ன செய்வது சொல்லுங்கள்!
இதற்கு வெகுசொகுசாக இருவரின்பேரில் குறை சொல்லலாம் – முன்னறிமுகமுள்ள சேஷகிரி அவர்களையும், முன்பின் தெரியாத இளைஞர் ‘சோப்புடப்பா‘வையும்; ஆனால், அதுவும் சரியில்லை. நான் சுயநிந்தனையோடுதான் சுட்டிகளுக்குச் சென்றேன். என்னை நான் ஜோட்டால் அடித்துக்கொள்ளவேண்டும். இருந்தாலும் ஆரம்பித்த ஒன்றை முடிக்கவேண்டும் என…
இந்த ஜெயமோகச் சிடுக்கலில், நான்கு விதமான அபத்தங்கள் இருக்கின்றன:
1. கடலூர்சீனு அவர்களின் ஜைனர்கள், சிலைகள், குறித்த ஆச்சரிய அபத்தங்கள், அபுரிதல்கள் – அவருடைய சகலதுறை அறிவுரையாளரான பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு அனுப்பப்படுவது.
2. அதற்கு, மேலான எதிர்வினையாக, அடிப்படைப் புரிதல்களில்லாமல் அமோக அபத்தமாக உளறிக்கொட்டி ஜெயமோகன் எழுதியது.
3. மேற்கண்ட இரண்டுக்கும் எதிர்வினையாக, எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிந்தவரை படிப்பாளியும் பன்மொழி வல்லுநருமான அனீஷ்க்ருஷ்ணன் நாயர் அவர்களின், மென்மையான – விவரங்களுடனும் வியாக்கியானங்களுடன் மெலிய நகைச்சுவையுடன் கூடிய கருத்து; அதில், நாயர் அவர்கள், சீனுவை மட்டும் செல்லமாக மட்டம்தட்டி, ஆனால் சீனுவை முற்றும் ஆமோதித்து அதற்குமேலும் பலகாத தூரம் போய் அமோகமாக எல்லாதிக்கிலும் உளறிக்கொட்டிய ஜெயமோகனின் அபத்தக் களஞ்சியப் பொழிப்புரையைக் கண்டுகொள்ளாமல், வெறும் பாராட்டை மட்டும் தெரிவித்தமை.
என்னுடைய அனுமானம் என்னவென்றால் நாயர் அவர்களும் ஜெயமோகனும் நண்பர்களாக இருப்பதால் (அவர்கள் கடிதப் போக்குவரத்தில் இருந்து எனக்கு இப்படித் தோன்றுகிறது; என் எண்ணம் தவறு என்றால், என்னை நான் திருத்திக்கொள்கிறேன், நன்றி!) ஒருவரையொருவர் சாமானியமாக விட்டுக்கொடுத்துக்கொள்ள மாட்டார்கள், மாறாக, சரியில்லை எனத் தெரிந்தாலும் பரஸ்பர உதவி செய்துகொள்வார்கள், பூசி மெழுகுவார்கள் எனவெல்லாம். சோகம்.
ஆனால், கருத்துலகம் அறிவுஜீவியம் இன்பலாகிரி மண்ணாங்கட்டி தெருப்புழுதி புழங்கும் மேலான இடங்களில் இதெல்லாமும் பரஸ்பர சொறிதல்களும் ஒத்தடங்களும், நெட்வர்க் எழவுகளைக் கவனமாக போஷகம் செய்வதும் சாதாரண நடைமுறைகள்தாம்! இந்த சோகத்தைப் பலமுறை நான் பார்த்தாகிவிட்டது. அறிவியல்-பொறியியல்-தொழில்நுட்பம் போலல்லாமல் இந்த ஜிகினா இலக்கியம்-சமூகப்படிப்புத்துறைகள் போன்ற எழவுகளில் பேணிவளர்க்கப்படும் சராசரித்தனமும் பரஸ்பர அரிப்புகவனிப்புகளும் அளவுக்கதிகம்தான்!
…ஹ்ம்ம். எது எப்படியோ – என் கீழான கருத்து என்னவென்றால் – ஜெயமோகன் அவர்களின், அரைகுறைகளுக்குக் கொம்புசீவி வளர்த்தி, மிகை சராசரித்தனத்தை வளர்க்கும் பண்புதான், தன்னைப் போலவே அடிப்பொடிகளும் இருக்கவேண்டும் அவர்கள்மீது தாம் கோலோச்சவேண்டும் எனும் மாளா செயலூக்கம்தான் – கடலூர்சீனு போன்ற மற்றபடி நல்லபடியாக வந்திருக்கவேண்டியவர்கள், அதற்கு மாறாகக் கருத்துலகரீதியாகக் காயடிக்கப் படுவதன் காரணம். பெருஞ்சோகம்! என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஜெயமோகானாதிகள் போன்ற அலக்கியக்காரர்கள் தங்களைப் போலவே ஆனால் அவர்களளவு ஆகிருதி அதிகமில்லாத பலப்பல க்ளோன்களை உருவாக்கிவருகின்றனர்; க்ளோன்களும் தங்கள் பேராசான்களிடமிருந்து கற்றுக்கொண்டு(!) ஒரிஜினல்ஃபேக்-களைப்போலவே பல்துறை வல்லுந சிறுஃபேக்-களாக(!!) மாறி வருகிறார்கள்; இதில் இருசாரார்களுக்கும் பலப்பல பரஸ்பர ஆதாயங்கள் இருக்கவேண்டும்; நிலைமை இப்படி இருக்கையிலே – கடலூராரை மட்டும், நாயர் அவர்கள் கிண்டல் செய்வது ஓரளவுக்குத்தான் சரி.
ஏனெனில்:
ஜெயமோகன் ->> முதற்கருத்துக் கந்தறகோளம் ->> கடலூர்சீனு (indoctrination – first transmission)
கடலூர்சீனு ->> கந்தறகோளத்தின் முதற்பெருக்கம் ->> ஜெயமோகன் (pre-amplification in echo-chamber)
ஜெயமோகன் ->> இரண்டாம் பெரும்பெருக்கம் ->> இணையவாசகர்கள் + கடலூர்சீனு (power amplification & broadcast)
ஜெயமோகன் ->> மூன்றாம் வெடிப்பு/பெரும்பெருக்கம் ->> இணையவாசகர்கள் + நாயர் (‘normalization of the unthinkable,’ as john pilger would say!)
அதாவது – ஜெயமோகனின் கருத்துகளை எதிரொலித்து ஒரு அடிப்பொடி கடிதம் எழுதுகிறார். எதிரொலிக்கு ஜெயமோக பதிலொலி பன்மடங்கு வீச்சுடனும் வீரியத்துடனும் வெளிப்படுகிறது.
அதற்கு ஒரு கல்விமான், ஏறத்தாழ காத்திரமாகவும் எதிராகவும் பதிலளிக்கிறார். ஆனால் ஜெயமோகன் பதிலைக் கண்டுகொள்ளாமல், அதனை எதிர்கொள்ளாமல் – என்னவோ தான் சொல்லிவந்துகொண்டிருப்பதைத்தான் அக்கல்விமானும் சுட்டுகிறார் என அபத்தமாகப் பெருமைப் பட்டு – மகாமகோ வெள்ளையடிப்பு ஒன்றைச் செய்து பரப்புரையை மேலும் பசப்பி மினுக்கிக் கொள்கிறார்! ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாமும் விஷயங்கள் அணுகப்படலாம் என்பது! வேறென்ன சொல்ல!
…முதல் அபத்த அட்ச்சிவுடல், மூன்று பெருக்கங்களுக்குப் பிறகு ஜெயமோகமாக ஜாம்ஜாமென்று ஜாஜ்வல்யம் ஜொலிக்கிறது. ஆனால் விமர்சனம் எழுதுபவர் (அவர் படிப்பாளிதான், அவர் கருத்துகள்/திருத்தங்கள் 100% சரியே என்றாலும்), மிகக் கவனமாக எதிரொலிக்காரரை மட்டும் கலாய்க்கிறார். எய்தவன் இருக்க அம்பை நோகிறார். ஆச்சரியம், ஆச்சரியம். ‘நட்பின்’ வீரியம்தான் என்னே!
4. கடைசியில் – மேற்கண்ட நாயர் அவர்களின் கருத்துகளின் மீதான ஜெயமோக எதிர்வினை. இது அபத்தத்தின் உச்சம். நாயர் என்ன கோடி காட்டுகிறார், அடிப்படைப் பிரச்சினை எங்கே இருக்கிறது என்பதைக் காரியார்த்தமாகக் கண்டுகொள்ளாமல், பாடுபொருளுடன் ஒரு முடிக்கும் தொடர்பேயில்லாமல் வேறேங்கோ போய் சஞ்சாரம் செய்து, ஒரு சிறுதுளிக்கூட சுயபரிசீலனை செய்துகொள்ளாமல், தன் கருத்துகளைத் திருத்திக்கொள்ளாமல் தட்டாமாலை சுற்றி அப்படியொரு கபடி ஆட்டம்.
கடைசியில் ஒரு நகைச்சுவை: “உங்கள் குறிப்பும் அதையே உறுதிசெய்கிறது. நன்றி”
ஆஹா!
ஜெயமோகனிடம் இருக்கும் அதீதமான நகைச்சுவை உணர்ச்சி என்பது, போற்றுதற்குரியது. வெட்கக்கேடு!
ஏதோ காரணங்களினால் – கவிஞர் ஆடென், யேட்ஸ் அவர்களுக்கான கவிதை அஞ்சலியில் எழுதிய ஒரு வரி இப்போது நினைவுக்கு வருகிறது.
ஜெயமோகனிடம் இனி சுயபரீசிலனையே (சுயவிமர்சனத்தையே விடுங்கள்!) இல்லை. ஏனெனில் அவர் என்னதான் செய்தாலும், அவரே அவருடைய ஏகோபித்த முழுமுதல் விசிறியானதால், அவர்பாடு நம்பாடு பண்பாடு. இல்லை விட்டுவிட்டு ஓடு. அவ்ளோதான்!
என்னமோடாப்பா!
-0-0-0-0-
கீழே, நாயர் அவர்கள், ஜெயமோகனின் சமண/விமலநாதக் கருத்துகள் குறித்து, குறிப்பிட்டுச் சொல்லாத திருத்தங்களும், வியாக்கியானங்களும் இருக்கின்றன. முடிந்தால் படிக்கவும். நம் அறிவுஜீவிகளின் அறிவுநிலையைக் குறித்தும் நம் இளைஞர்களுக்கு அவர்கள் சரியற்ற வழிகாட்டிகளாக இருப்பதற்கு அப்பாற்பட்டு ஊக்கபோனஸாக வழிகோட்டிகளாக மாறியுள்ளதைக் அறிந்தும் – வருத்தமும் படவும்.
// சமணர்களின் 13 ஆவது தீர்த்தங்காரரான விமலநாதர் பன்றிவடிவிலும் வழிபடப்படுபவர். இவரை பொதுவாக திகம்பரர்கள் வழிபடுவதில்லை, ஸ்வேதாம்பரர் இவர்களைச் செல்வம் கொழிக்கச் செய்பவராக வழிபடுகிறார்கள்.
13வது தீர்த்தங்கரர் என்பது மட்டும் சரி. விக்கீபீடியா பார்த்து டபக்கென்று எழுதிவிட்டார் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு தீர்த்தங்கரருடனும் ஒரு குறியீடு இருக்கும். அதற்கு லௌசன எனப் பெயர் – நம்மூர் ‘லச்சினை’யோடு தொடர்புடைய வார்த்தையது. சடங்குகளுக்கான ஒரு உருவகம். சிலைகளுக்குக் கீழே பதிக்கப்பட்டிருக்கும். அவர் பன்றி (சொல்லப்போனால் காட்டுப்பன்றி!) வடிவில் எல்லாம் வழிபடப்படுவதில்லை; அவருக்கு விஸ்தாரமான சிலைகளும் கோவில்களும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
அதேபோல அவருடைய மரம் (‘கேவல’) நாவல் மரம். ஏமாந்தால் நாவல்மர வடிவில் அவர் வழிபடப்பட்டார் என எழுதிவிடலாம்.
அவருடைய துணைத் தூத/ஸாஸனதேவதைகள் – ஷண்முகா + வைரதி; ஏமாந்தால், முருகன்/ஷண்முகன் எனும் கடவுள், விமலநாதரிடமிருந்து அவர் கதறக்கதற ஹிந்துக்களால் பிடுங்கப்பட்டார் எனவும் அட்ச்சிவுடலாம்.
திகம்பரர்களும் இவரை ஏகோபித்து வழிபடுகிறார்கள். சொல்லப்போனால் திகம்பரர்களும் ஷ்வேதாம்பரர்களும் தனித்தனியாக விமல நாதருக்குக் கோவில் கட்டி வழிபட்டு வந்திருக்கிறார்கள். [பலப்பல வருடங்கள் முன், நான் உத்தரப் ப்ரதேசத்தில் ஒரு திகம்பர விமல நாத கோவிலுக்குச் சென்றிருக்கிறேன், ஒரே கூட்டம் – ஆனால், ஊரின் பெயர் மறந்துவிட்டது :-( ]
விமலநாதரின் லௌசன – வராஹம்; அது தன் கூரியபற்களால் புத்திகூர்மையைச் சித்திரிக்கிறது. அவ்ளோதான். ஷ்வேதாம்பரர்களும் திகம்பரர்களும் இதற்காகத் தான் அவரை வழிபடுகிறார்கள். செல்வம் கொழிக்கச் செய்பவராக வழிபடுவதில்லை. இன்று என் ஜைன நண்பரிடம் மறுஉறுதி செய்துகொண்டேன். (அவர் இன்னொரு விஷயத்தையும் நினைவுறுத்தினார் – மரீசி எனும் புத்தமதக் கடவுளாயினியின் குறியீடும் அதே வராஹம்தான். அவள் காலைச் சூரியக் கதிர்களின் கடவுள். அதே புத்திகூர்மையின் உருவகம். ஆக, புத்தமதத்திலிருந்தும் ஹிந்துக்கள், அவர்கள் சாக்லேட்டைப் பிடுங்கிக்கொண்டு விட்டனரே! ஐயகோ!!)
// சமண நம்பிக்கையின்படி பெண்களுக்கு வீடுபேறு இல்லை.
ஆ! அன்பர் இதனை – திகம்பர ஷ்வேதாம்பர நோக்கு விரிதல்களுடன், மறுபிறப்பு, லௌகீகப் பிரச்சினைகள் வழியாக விவரிக்க முடியுமா? (என்னைப் பொறுத்தவரை, குறைந்த பட்சப் புரிதல்களுக்காக மிகமிக எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் – ஷ்வேதாம்பரர்கள் கொஞ்சம் ப்ரொட்டெஸ்டென்ட்கள் போல, திகம்பரர்கள் கத்தோலிக்கர்கள் போல! அதே போலத்தான், முறையே மஹாயானமும் ஹீனயானமும்)
//… சமண மதம் பற்றி நமக்குத்தெரிந்ததே கொஞ்சம்தான்
இது உண்மை; ஆனால் தன்னை மரியாதையாக ‘நாம்’ — ‘ROYAL we!’ எனக் குறிப்பிட்டுக்கொள்கிறார் என இதனை லூஸ்ல வுடுகிறேன்.
நிலைமை இப்படி இருக்கையிலே, தன்னிலை விளக்கம் விரிக்கையிலே இப்படியெல்லாமா அட்ச்சிவுடுவார், ஒருவர்?
// விமலநாதர் பாஞ்சாலத்தை ஆண்ட இக்ஷுவாகு ஷத்ரிய குலத்தில். கிராதவர்மனுக்கும் சியாமளாதேவிக்கும் மகனாகப்பிறந்தார்.
தவறு. வெண்முரசு எழுதுவது போலல்ல, இம்மாதிரி விஷயங்கள்! அடிப்படைகள் சரியாக இருக்கவேண்டும்.
தந்தை பெயர் க்ருதவர்மன். கிராதவர்மன் அல்ல. அர்த்தமே அனர்த்தமாகி விடுகிறது, இப்படியெல்லாம் புனைபுனை எனப் புனைந்தால்.
தாய் பெயர் ஷ்யாமா அல்லது ஸ்யாமா அல்லது ஸுரம்யா. சியாமளாதேவி அல்ல. (பிரச்சினை என்னவென்றால், ஜெயமோகனும் என்னைப்போல சாண்டில்யன் வழியாகத்தான் வரலாற்றை அணுகுபவர், பாவம்!)
// அவர்களின் குலக்குறி பன்றி. பின்னர் ராஜபுத்திரர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்ற பல அரசகுடியினரின் குலக்குறி பன்றிதான்.
தவறான தொடர்புகள், கனெக் ஷன்ஸ்.
குலக்குறி சரிதான். ஆனால் அதற்கும் விமலநாதரின் லௌசனவுக்கும் தொடர்பில்லை.
எங்கிருந்துதான் கிரஹித்து, ராஷ்ட்ரகூடர்கள் ராஜபுத்திரர்கள் பன்றிகள் என்றெல்லாம் அட்ச்சிவுடுகிறார் இவர்? பாடுபொருளுக்கும் இப்படி ராஜபுத்திரர்கள் அதுஇது எனத் தொடர்வதற்கும் ஏதாவது எழவு சம்பந்தமிருக்கிறதா?
ஏன் விஜய நகர வராஹன், குழு, குறி என்றெல்லாம் அட்ச்சிவுடவில்லை? :-(
எங்கிருந்து இம்மாதிரி வெறும் வெட்டி அரைகுறைத் தகவல்களை வலைவீசிப் பிடிக்கிறார், நம் பேராசான்? :-(
// சில சமணநூல்களில் கூறப்பட்டுள்ளவற்றின்படி விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது.
இதற்கு ஜெயமோகனிடம் ஏதாவது காத்திரமான ருசு/ஆவணம்/மேற்கோள் என ஒரு எழவாவது இருக்கிறதா? யாராவது புகழ்பெற்ற அல்லது நேர்மையான துறை அறிஞர்களின் (கடலூர் சீனு தவிர்த்து!) கருத்து இருக்கிறதா??
அந்தப் புத்தகங்கள் யாவை?
// அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள்.
எவர்கள்? எது ஒப்புக்கொள்ளப்பட்ட மஹாபாரதக் காலம்? இன்னமும் இது குறித்து விவாதங்கள், சண்டப் பிரசண்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் சரி.
யார், ஏன் இழுத்துக்கொண்டார்கள்? என்ன அவசியம்? மாறாக – ஜைனம் பௌத்த நம்பிக்கைகள் தங்களின் பெரும்பாலான விவரங்களுக்கும் தத்துப்பித்துவங்களுக்கும் வேதகால ஆக்கங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் தானே கடமைப் பட்டிருக்கின்றன?
அப்படி ‘இழுத்துக்கொள்ளப் பட்டதற்கு’ ஏதாவது ஒரு காத்திரமான சாட்சியமாவது இருக்கிறதா?
// அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.
அடேங்கப்பா! போட்டாரே ஒரு போடு! இதற்கு ஒரு சான்று, ஒரேயொரு சான்று இந்த ஜெயமோகனால் தரமுடியுமா?
அசிங்கம். இதனைப் பற்றியாவது குறிப்பாக, கூர்மையான ஓர்மையுடன், ஏதாவது ஒரு வார்த்தையை, ஒரு சிறு விளக்கத்தை நாயர் அவர்கள் ஜெயமோகனிடம் கேட்டாரா? சோகம்!
வராகம், கூர்மை, கூர்மதி, நல்லறிவு இவையெல்லாம் ரிக்வேதத்திலிருந்து (ஒருவேளை அதற்கும் முன்கூட!) அநாதி காலம்தொட்டு இருந்து வருபவை.
பலப்பல சான்றுகள் இதற்கு இருக்கின்றன.
ஆனால், எவன் சரிபார்க்கப் போகிறான் என்றுஅஷ்டதிக்கிலும் வார்த்தைச் சிலம்பைச் சுழற்றி கண்டமேனிக்கும் அட்ச்சுவுடுதல் மிகவும் லேசு.
முக்கியமாக, மௌடீக விடலை வாசகர்கள் இருக்கும்போது, அதிசராசரித்தனத்தையும் அட்டைவீரர்களையும் மண்டையில் தாங்கி ஆனந்தக்கூத்தாடும் அடிப்பொடிகள் இருக்கும்போது எம் பேராசான் ஜெயமோகனுக்கு என்ன கவலை, சொல்லுங்கள்?
ஆக, ஏற்றம் மட்டுமே!
நன்றி. :-(
// நீங்கள் கண்டது விமலநாதரின் விழாவாக இருக்கலாம்
அப்படியா? எனக்கென்னவோ, அது நரேந்த்ர மோதி அரசின் பதவியேற்பு விழா எனத் தோன்றுகிறது.
…சக ஏழரைகளே! உங்களுக்கு? ;-)
ஆதாரங்கள்: ஜைன மதத்திலும் பல கட்டுக்கதைகள், புராணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக நம் விமலநாதர் பல லட்சம் வருடங்கள் வாழ்ந்தாரென ஒரு கதை. ஆனால் – இம்மாதிரிக் கதையாடல்களைத் தவிர்த்து – ஜெயமோக அழிச்சாட்டியங்களைக் குறித்த தகவல்களை மட்டும் பார்க்கலாம். பொதுவாக எனக்கு இக்காட்டுரையில் உதவியவை: பட்டாச்சார்ஜீ அவர்கள் எழுதிய – ஜைன ஐகனொக்ரஃபி (1939) + ஹேமசந்த்ரா எழுதிய த்ரிஷக்தி ஷாலக புருஷ சரித்ர (பனிரெண்டாம் நூற்றாண்டு, பொதுசகாப்தம்) + ஞானஸாகரா எழுதிய விமலநாத சரித்ர (13-14ஆம் நூற்றாண்டு, பொதுசகாப்தம்)
பின்குறிப்பு:
நாளைமுதல் ஜெயமோகன் பக்கமே போகமாட்டேன், சத்தியமடி தங்கம்! :-(
June 3, 2019 at 04:02
இப்படி சொல்லியிருக்கார், ராகுல்காந்தி, மோடி பற்றி, உங்க ஆசான்
“அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும், மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள முடியும். அரசாங்கமே மாபெரும் விளம்பரநிறுவனமாக ஆகிவிடுகிறது இங்கே. சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று எண்ணிப்பாருங்கள். ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும் அந்தத் தொகை கிடைக்காது. ”
“அரசியலில் இந்திரா காந்தி பெரும்பாலும் மு.கருணாநிதியின் வழிகளையே பின்தொடர்ந்தார். அவற்றிலொன்று இந்த விளம்பரம். பின்னர் வந்த எம்.ஜி.ஆர் பதினாறடி பாய்ந்தார். ஜெயலலிதா முப்பத்திரண்டு அடி. மோடி முப்பத்திரண்டாயிரம் அடி. ”
“ராகுலிடம் இருக்கும் அடக்கம் போன்றவை தனிப்பட்ட முறையில் நற்பண்புகளே.
உங்க கருத்து?அவருக்கு மாற்று தரவு இருக்கிறதா? கொடுப்பீர்கள் என நம்புகிறேன்
June 3, 2019 at 10:06
ஐயா (அல்லது ஐயீ!), நீங்கள் அந்த சோப்புடப்பாவுக்கு அத்தை மகளா? ;-)
0. நீங்கள் நகைச்சுவைக்காகச் சொல்கிறீர்கள், நானும் நகைச்சுவைக்காக அப்படிச் சொல்கிறேன். ஆனால் எனக்கு ஆசானாக இருக்கும் தகுதி அவருக்கு இதுவரை இல்லை. நன்றி. (என் பாக்கியம் என்னவென்றால், பலப்பல மேலோர் / சான்றோர்களுடன் பழகும் நல்லூழ் எனக்கு எப்படியோ லபித்திருக்கிறது)
1. பதிவுக்குத் தொடர்பில்லாமல் பின்னூட்டம் அளிப்பதைத் தவிர்க்கவும். இந்த அளவு கூட உங்களுக்கு அடிப்படை மரியாதை இல்லை. பெரிதாகப் பின்னூட்டமிட வந்துவிட்டீர்கள். அதுவும் எங்கிருந்து அந்தப் பத்திகளை எடுத்தீர்கள் என்றும் குறிப்பிடாமல்! எதற்கும் தொழில்சுத்தம் வேண்டும். (எப்படியும் கண்டகழுதைகள் எழுப்பும் கோவேறுகழுதைகள் குறித்த கேள்விகளுக்கு நான் விலாவாரியாக பதில்சொல்லவேண்டிய அவசியம் இல்லை)
2. நீங்கள் ஜெயமோகனுக்கே நேரடியாக எழுதியிருக்கவேண்டும். மேலும் அவரை இனிமேலும் நான், பெரிய அளவில் பொருட்படுத்துவதாகவோ, அவர் கருத்துகளுக்குத் தரவுகள் கேட்பதாகவோ இல்லை. அவர் தரமற்றுத் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்ததை, நாக்கில் நரம்பில்லாமலும் கூச்சமேயில்லாமலும் கருத்துரிமைத் திலகமாகப் பேசுவார்; கண்டமேனிக்கும் அட்ச்சிவுட்டுத் திரிப்பார். ஆனால், நான் மட்டும் கறார் தரவுகளுடன் அவரை மறுதலிக்கவேண்டும், எப்படி இருக்கு கதை! ஏன் நீங்களே உங்கள் ஹோம்வர்க் எழவைச் செய்துகொள்ளக் கூடாது? ஹ்ம்ம்??
3. அவர் மகாமகோ இலக்கியக்காரர். சமூகத்தின் மனச்சாட்சியாகத் தன்னை வரித்துக்கொண்டவர். ஆக, நாக்கு எப்படிவேண்டுமானாலும் புரண்டும் பிறழ்ந்தும் பேசும். நான் வெறும் வாசகன் மட்டுமே. ஆகவே, நான் செய்யும் தொழில்களில் பெருமை கொண்டவன். முடிந்தவரை தொழில் தர்மம் சார்ந்து இயங்குபவன். என்னைச் சிறுமைப் படுத்திக்கொள்ளமாட்டேன்.
4. நீங்கள் கொடுக்காவிட்டாலும் தொடர்புள்ள சுட்டிக்குச் சென்று படித்தேன். https://www.jeyamohan.in/122282 – அதில் நீங்கள் (நாம் அனைவரும்) படிக்கவேண்டிய பகுதி அவருடைய கூச்சமற்ற அறம்சார் தலைமைதாங்கி வழிநடத்தும் தற்பெருமைத் தன்னிலை அரசியல் விளக்கம்:
“…அரசியலில் முன்னிற்கும் தன்மை, தயக்கமின்மை, ஒருவகையில் கூச்சமின்மை ஆகையவை தேவையாகின்றன. வெல்லும் முனைப்பே தலைவர்களை உருவாக்குகிறது. தன்னை வழிநடத்துவோனாக எண்ணிக்கொள்பவன் வழிநடத்த ஆரம்பிக்கிறான். உலக அளவிலேயே மாபெரும் தலைவர்கள் அனைவருமே தன்மைய நோக்கு கொண்டவர்கள். தன்னை முன்வைக்கவும் தற்பெருமை பேசவும் தயங்காதவர்கள். தருக்குதல் என்பது தலைமையின் இயல்பு. அது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குகிறது.அவர் சொற்களுக்கு மதிப்பை அளிக்கிறது. ”
A Freudian slip, am afraid! ;-)
ஷாம்பு, போய் ஒழுங்கான புனைபெயருடன் வரவும். திரும்பி வராமல் இருந்தாலும் சரியே. எனக்கு இப்போது இருக்கும் சக ஏழரைகள் போதும். நன்றி.
போங்கடா. (அல்லது போங்கடி!)
June 3, 2019 at 12:27
இப்படி பீஷ்ம சபதம் வேண்டுமா? ஜெயமோகன் அலக்கியம் பற்றி நீங்கள் சொல்லாமல் எங்களுக்கு யார் சொல்லுவார்?
June 3, 2019 at 12:46
மோனியர்-வில்லியம்ஸ்??
June 3, 2019 at 14:23
என் நேர்மையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி :)
June 3, 2019 at 14:43
ஐயா, எனக்கு உங்களுடன் அறிமுகமில்லை. நான் மதிக்கும் ஒரு நண்பர் மூலமாகத் தான் உங்களைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். உங்கள் கடிதங்கள்/எதிர்வினைகள் ஒருசில ஜெயமோகன் தளத்தில் வந்துள்ளவரையில் உங்கள் கருத்துகளை ஆர்வத்துடன் கவனித்து வந்திருக்கிறேன். வேறெங்கேனும் எழுதினால்/எழுதியிருந்தால் அவசியம் படிப்பேன்கூட.
ஆனால் சமணம்/சீனு/ஜெயமோகன் குறித்த உங்களுடைய க்ளிப்தமான பதில் (ஜெயமோகன் பதித்தது) காத்திரமாக இருந்தாலும் – தாங்கள் ஜெயமோகனின் அப்பட்டமான தவறுகளை/வெள்ளையடித்தல்களைத் தவறு என்று நேரடியாகச் சொல்லாமல்… … சீனுவை மட்டும் கிண்டல் செய்திருக்கிறீர்கள். மற்றபடி மென்று முழுங்கியிருக்கிறீர்கள். இது கொஞ்சம்கூட நியாயமில்லை என்பது என் கருத்து.
அவரும் உங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழியென்று த்ரிலோக சஞ்சாரம் செய்து எங்கெங்கோ போய் யார்யாரையோ திட்டி – மங்களமும் பாடிவிட்டார். இதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள்.
உங்கள்கருத்துத்தான் அவர் கருத்தும் என்றும் சொல்லிவிட்டார்! சுபம். நீங்களும் இதற்குச் சிரித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் மற்றபடி நேர்மையாளராக இருக்கலாம் என அறிந்துகொள்ளவே ஆசை. மேலும், தாங்கள் நிறைய அனுபவித்து, படித்து க்ரஹித்து கருத்துகளைச் சமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஆகவே – தமிழ் அலக்கியக் கருமாந்திரங்களையும் கருமாந்திரர்களையும் அரைவேக்காடுகளையும் விட்டுவிட்டுத் தலைமுழுகி வரலாறு/மதம்/மார்க்கம்/பாரததத்வம் என கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுத ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
சரி. உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியும் இருக்கிறது, சர்வ நிச்சயமாக.
நன்றி.
—
June 3, 2019 at 15:01
//சில சமணநூல்களில் கூறப்பட்டுள்ளவற்றின்படி
“விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது. அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள். அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.”
//
மகாபாரத காலகட்டம் , வராக அவதார மாற்றம் என மேலே சொல்லியிருக்கும் கருத்துக்கள் எல்லாம் சமண நூல்களில் கூறப்பட்டுதாக ஜெயமோகன் குறிப்பிடுவது ,அவரது கருத்துக்கள் அல்ல ,
ஒரு மேற்கோள் குறியை படிக்கும்போது போட்டுக்கொள்ள தெரியாமல் அற்பப் பார்ப்பன பதர்களால் பிரிக்கப்படும் அபானவாயுவின் ஒலி கிழிக்கிறது ,
அடிமடையர்கள்ய்யா நீங்கள் .
June 3, 2019 at 15:14
உண்மை. நான் ஒரு நல்ல அடுமடையன்தான். ஒற்றை ஆளாக ஒரு பெரும்கூட்டத்துக்கு என்னால் சமைத்துப் பரிமாறமுடியும். (சாகபட்சிணிகளுக்கு)
நீங்கள் கடலூர்சீனுவின் வரலாற்று உதவியாளர் என அறிகிறேன். ஜமாயுங்கள். நன்றாகச் சப்பைக்கட்டுகிறீர்கள். போட்ட பொரைக்குப் பொறையுடைமையுடன் நன்றாகவே ஞமலிமுதல்வாதம் செய்கிறீர்கள்! ஸபாஷ்!!
ஜெயமோகன், பொதுவாகவே ‘அந்தக் கடவுளை இந்தக் கடவுள் இழுத்தது’ ‘அந்த தேவதையை இந்த தேவதை இஸ்த்து, #மீடூ என்றது’ வகை சிந்தனை(!)யாளர். சிறுதெய்வம் பெரும்தெய்வம் நடுவாந்திரம் மைக்ரொதெய்வம் நேனோ தெய்வம் மெகா தெய்வம் என்றெல்லாம் டகீல் அட்ச்சிவுடுபவர். அதுவும் ஆதாரமேயில்லாமல்.
மற்றபடி மேற்கோள் துணைக்கோள் மூட்டல் ஸாடிலைட் கால்கோள் எல்லாம் நல்ல நகைச்சுவை, போங்கள்!
June 3, 2019 at 15:44
எனக்கு தெரிந்தவரை நீங்கள் (மட்டும்) தான் ஜெயமோகனுக்கு இவ்வளவு காத்திரமாக எதிர்வினையாற்றுபவர். இப்போது நீங்களும் நிறுத்திக் கொண்டால் அவர் அசட்டுத்தனத்திற்கு அளவே இல்லாமல் போகும். அதனை பிகாக் நாயர் போன்றவர்கள் நட்பின் காரணமாக சகிக்கவே செய்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்னும் பலரும்.
June 3, 2019 at 16:58
’ பிகாக் நாயர்’ என நீங்கள் எழுதுவது, அழகானதொரு மயில் தோகை விரித்தாடுவதைப் போன்ற சித்திரத்தை அளிக்கிறது.
ஆனால் இந்தச் செல்ல கானமயில் வான்கோழிக்கு முட்டுக் கொடுக்கிறதே, என்ன செய்ய!
June 3, 2019 at 16:02
https://www.jeyamohan.in/122375 jemo bathil vilakkam padinga
June 3, 2019 at 16:53
ஷாம்பூ! சனி அநி, விடா போல.
உம்மை இத்துடன் தலைமுழுகுகிறேன். இதுவே, இந்தத் தளத்தில் உங்களுடைய கடைசி பின்னூட்டம்.
1. ஜெயமோகன் மேக்கி டூ மினிட் நூட்ல்ஸ் வியாபாரம் செய்திருக்கிறார். ஒரே குழப்பம், தன்னிலை விளக்கம், கருத்து விலக்கம் எல்லாம் அமோகம். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் சப்பைக்கட்டல்கள். வேறென்ன சொல்ல.
2. உங்களுக்கு வேறுவேலையில்லை போலும். எனக்கு இருக்கிறது. நன்றி.
June 3, 2019 at 23:45
ஜெமோ X அனீஷ் இடையே முன்னர் (இரண்டரை ஆண்டு பழையது) நடந்த உரையாடலை பின்னவர் குறிப்பிட்டதால் சுட்டிகளை இணைத்துள்ளேன்.
மேலும் அனீஷின் ‘வாசிப்பு’ என்ற அவரின் தளத்திற்கும் செல்ல நேர்ந்தது.ஹிந்து மரபின் மீது தீவிர பிடிப்பு உள்ளவர் என்பதும் தற்போது ‘ஹிந்துத்வ செயல்பாடுகள்’ என்று பொது தளத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களில் விலக்கம் கொண்டிருப்பவர் என்றும் என் மேலோட்ட வாசிப்பில் புரிகிறது.எதிர்மறையாய் இல்லையெனினும்,அவர் பேசும் விஷயங்களில் உள்ளே செல்ல கடினம் தான் எனக்கு.
ஜெமோவின் ‘சண்டிகேஸ்வர்’ பதிவு –
https://www.jeyamohan.in/20754#.XPVcCIgzbIV
பின்னர் அனீஷ் கிருஷ்ணன் நாயரின் கடிதம் –
https://www.jeyamohan.in/90662#.XPVckYgzbIW
June 4, 2019 at 07:56
ஐயய்யோ! ஜெயமோகன் இதில் எங்கெங்கோவெல்லாம் ப்ரபஞ்ச சஞ்சாரம் செய்திருக்கிறாரே! காப்பாற்றுங்கள்!!இந்தச் சுட்டியை அளித்த உங்களை என்ன செய்யலாம்? ;-)
ஆனால், இதற்கான எதிர்வினையிலும் அன்பர் நாயர்வாள் (Nair Sword) பண்புடனும், அமைதியுடனும் ‘இன்னொரு பார்வையை’ வைக்கிறார். அழகு.
நாயர்வாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இதற்கு நன்றி.
June 4, 2019 at 15:47
[…] […]
June 5, 2019 at 19:16
மறுபடியும் இது பத்தி யாராவது பேஸ்புக் ல எழுதி என் கண்ணில் பட்டால் மறுபடியும் ஜெயமோகனை படிக்க வைப்பேன்
இப்படிக்கு உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய
சோப்பு டப்பா
April 13, 2020 at 16:01
[…] […]
May 4, 2020 at 09:14
[…] வாசிப்புண்டு, நண்பர் ஜெயமோகனுக்கு முட்டுக்கொடுத்தலுண்டு, ஜடாயுக்களுடன் ஜண்டையுண்டு எனப் […]