ஐயய்யோ! கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்!!
May 13, 2019
ஐயன்மீர்! என்னை விட்டுவிடுங்கள். எனக்கு முடியவில்லை. :-(
இந்தக் கட்டுரையை ஒருமுறை படிக்கும்போதே நாக்கு தள்ளிவிட்டது. மண்டை காய்ந்து விட்டது. அனற்பெருமூச்சால் மூக்கு வெந்துவிட்டது. இதயம் கசந்துவிட்டது. கண் மங்கலாகிவிட்டது. ஒன்றுக்கு வந்து விட்டது. வயிற்றில் கடமுடா. மனத்தில் கசமுசா.
ஆனாலும் அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி கொஞ்சம் தாஸ்தீயாகவே கீது போல!
ஆனால், இதனைக் குறித்தும் ஒரு நீஈஈஈஈஈளமான குறிப்பை என்னால் எழுத ஏலாது. என்னைப் பொறுத்தருளுங்கள். ஏனெனில் நான் மூலஆய்வைப் படித்திருந்தாலும் – அதற்கு, ஒன்றுக்கு இருமுறை, ஒன்றுக்குக் கூடப் போகாமல் ஒன்றி, கடலூரார் கட்டுரையைப் படித்து, ஒருங்கிணைந்து ஒறுத்து ஒழுக்கத்துடன் ஒய்ங்காக எழுதவேண்டும். எனக்கு அதற்கு நேரமோ பொறுமையோ சுத்தமாக இல்லை.
வேண்டுமானால் இன்னொருமுறை அவர் எழுதிய முந்தைய கட்டுரை ஒன்றைப் படித்து, விதிர்விதிர்த்துப்போய், வேகவேகமாக நான் எழுதிய காட்டுரையை, மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும்.
முதலில் இதற்கு அவரிடம் மறுமொழியோ தன்னிலை விளக்கமோ, ஏதாவது ஒரு எழவை அவரிடம் வாங்கவும். பின்னர் பார்க்கலாம்… அவர் ஏதோ மனம்போன போக்கில் அட்ச்சிவுடுவார், ஆனால் நான் தரவுகள் சார்ந்து அதனை எதிர்கொள்ளவேண்டும். போங்கடா, மயிராண்டிகளா.
நன்றி. எனக்கும் பிறவேலைகள் இருக்கின்றன. இளைஞர் கடலூர்சீனு அவர்கள் மேன்மேலும் ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்யவும், அவற்றுக்கான லாஞ்ச் பேடாக, ஜெயமோகன் தளம் தொடரவும் என் மனமார்ந்த வாழ்த்துகள். (= Live Piece, ©2019 S. Ramakrishnan)
ஹௌ ஈஸ் த ஜோஷ்?
வெர்ரி வெர்ரி லோ, ஸார்! :-(
நான் என்ன பாலக்கோட்டானா? வெறும் கிழக்கோட்டான் தாமே! என்னைத் தேமேயென்று விடாமல், எனிப்படி வறுத்தெடுக்கிறீர்கள்? ஏற்கனவே, ஸர்ஜரி என்றாலே பயப்படும் என்னைப்போய் ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் குண்டுகட்டாக ஈடுபடுத்துகிறீர்கள்? அக்கப்போருக்கு நானா கிடைத்தேன்? ஏன், கமலகாசனாரை விட்டு உலகின் முதல் டெர்ரரிஸ்ட், தமிழ் இலக்கியவாதட் டெர்ரரிஸ்ட் எனச் சொல்லவையுங்களேன்? “அந்தக் காலத்தில் வாடகைவீடு தேடி அலைந்தவர்களுக்கு ஈஸியாக லீஸ் கிடைத்ததற்கே லகுலீசர்தான் காரணம் என்பது நம்மில் எவ்ளோ பேர்க்கு தெர்யும்?”
பின்குறிப்பு: இன்றுமாலையில்தான் நண்பர் ஒருவரிடம், ஜெயமோகன் தளத்தில் வந்த ஒரு கட்டுரை குறித்த உரையாடல்(!) ஒன்றில், ‘யாராவது நண்ப அயோக்கியர்கள் சுட்டி கொடுத்தாலொழிய அங்கு தன்னிச்சையாகப் போவதில்லை’ எனத் தன்னிலை விளக்கம் ஒன்றைத் தற்பெருமையாகக் கொடுத்ததால் கிடைத்த ‘கைமேல் பலன்’ என இதனை நினைத்து இதோடு விட்டுவிடுகிறேன்.
June 1, 2019 at 21:14
[…] எழுதிக்கொண்டிருப்பது – என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இளம் […]