‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள்
May 3, 2019
ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா??
எனக்கு, வசைச் சொற்கள் ஒரு பிரச்சினையுமில்லை, திட்டப்பட்டுத் திட்டப்பட்டுத் திகட்டிவிட்டது (கடைசியாக இந்தத் திட்டுத்திட்டவாதிகளுடன் ஐக்கியமானவர்கள் என் பேராசான் ஜெயமோகன் அவர்களின் சிலபல சீடகேடிகள்). பதிலுக்கு, முடிந்தவரை பண்பு(!)டனும் திட்டுவதிலும் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. ஆனால் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் இதனைச் செய்வதில்லை. இந்த ஒத்திசைவெழவில் மட்டும்தான் இந்தக் கோரம்.
…ஆனால் முடிந்தவரை கேள்விகளுக்குப் பதில் கொடுக்கவே முயல்வேன் (=முயல்களை எடுத்துச்செல்லப் பயன்படும் வண்டி, குறிப்பாக எஸ்ராமகிருஷ்ணனால்); …இருந்தாலும் ஒரு நீஈஈஈஈஈள வரிசை இதற்கு இருக்கிறது, என்ன செய்ய! (பல மாதங்கள் முன் என்னிடம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் பற்றிய காத்திரமான புத்தகங்களை+ஆசாமிகளைப் பற்றிக் கேட்ட அன்பருக்கு என் மன்னிப்புக் கோரல் – கூடிய விரைவில் அனுப்புகிறேன்)
கேடயம்:
அ. அந்தக் கேடயம் உண்மையாக இருக்கலாம். ஏனெனில், ஏதோ மண்டபத்தின் யாரோ தச்சுவேலை செய்து கொடுத்தது தானே அந்தத் திருட்டுத் திராவிடர்கழகத் திருவிளையாடல்?
ஆ. ஆனால், யுனெஸ்கோ, ஜெனமத்தில் இந்த மாதிரி கேடயம் எல்லாம் இவ்விஷயங்களுக்குக் கொடுத்ததாகச் சரித்திரமே இல்லை. அவர்கள் கொடுத்திருப்பதெல்லாம் மெடல்கள் மட்டுஂமே!
இ. யுனெஸ்கோ மன்றம் என்று ஒன்று அதிகாரபூர்வமாக, யுனெஸ்கோவை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கவே முடியாது. இருந்திருக்கவும் முடியாது. இது வெறும் லோக்கல், கலக்கல் சாராய, அற்பத் தீராவிடச் சமாச்சாரம்.
நான் ஒரு ‘இங்கிலாந்து மன்றம்’ அல்லது ‘லெமூரிய மன்றம்’ எனவொன்றை ஆரம்பித்து எனக்கு நானே, என் செலவில், ‘தறுதலை வீரமணி அவார்ட்‘ என ஒரு கேடயத்தைக் கொடுத்துக்கொண்டால் – அதனை அந்த கேடுகெட்ட இங்கிலாந்தோ ஏழவெடுத்த லெமூரியாவோ அல்லது மானமிகு(!) வீரமணியோ கொடுத்தாகவா அர்த்தம்? வீரமணியே :-) என்னைப் புகழ்ந்ததாகவா ;-) அர்த்தம்?
ஈ. ஆகவே நீவிர் கொடுத்திருப்பது, இந்த நகைக்கத்தக்க சர்ச்சை தொடர்பான கேனயம். கேடயம் அல்ல. மிக்க நன்றி!
உ. யுனெஸ்கோ மன்றங்கள் (இந்தமாதிரி எழவு ஒன்றுதான் கேனயத்தைக் கொடுத்திருக்கிறது) என்பவற்றின் செயல்பாடுகள் தீவிரமாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதற்கான சுட்டி இதோ: Clubs, Centres and Associations for UNESCO
மேலும் – இந்தக் குப்பைகளின் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை எனவேறு – மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர் இந்த யுனெஸ்கோ அமைப்பினர்.
“Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.”
இந்த மன்றம் கின்றம் எல்லாம் குப்பைகள். இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியவைகள். துடைத்து எறியப் படவேண்டியவைகள். எரித்து மறுசுழற்சி செய்யப்படவேண்டியவைகள்!
அல்லது மண்ட்ரம் – mandram – என அக்குப்பையாளர்களே எழுதியிருப்பதைப் போல – அது மண்டுகளுடைய மண்டுகளுக்காக மண்டுகளால் நடத்தப்பட்ட, மண்டபத்துத் தச்சன் செய்தளித்த கேனயம்; அவ்ளோதான்!
இதையெல்லாம் கேனத்தனமாக, ஒரு ஆதாரம் எனக் காட்டும் படுமட்டமான நிலையில் இருக்கும் திராவிடக் குஞ்சாமணிகள், தேவையான அறிவுரைகளை இங்கு பெற்றுக்கொண்டதால் தாராளமான அகலலாம். நன்றி.
மன்னிப்புக் கோரல் குறித்து:
போடா, அறிவில்லாதவனே. புளுகில் புழுக்கும் திராவிடப் பதரே! உன்னைப் போன்ற அறிவிலிகளையும் பொய்யர்களையும் பொருட்டாக மதித்து, இப்படித் தரவுகளுடன் எழுதுகிறேனே – அதற்காக என்னிடம் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
நல்ல திராவிடக் குஞ்சாமணி. இதற்கு ஒரு மேலதிகத் தலீவராக நல்ல பெருந்திராவிடப் கடும்புளுகுப் பெருங்குஞ்சாமணி.
போங்கடா…
—