[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்!] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு!

May 3, 2019

திராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:

பெரியாருக்குப் புலி விருது வழங்கப்படவே இல்லையாம்! அது பொய்யான தகவலாம்!

இணையத்திலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!

பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!

​பெரியாரெனும் புலியைக் கண்டாலே பார்ப்பனர்களுக்குக் கிலி என்பதை உணர்த்துவோம்!​

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கிரகாரத்தின் அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்திலும் அய்யா அக்னி திராவகத்தை ஊற்றி அலறச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை இருட்டடிக்க எந்த எல்லைக்கும் சென்று பார்ப்பனர்கள் கீழிறக்க வேலையில் ஈடுபடுவார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆரியத்தின் அப்பட்டமான இந்துத்துவா கொள்ளியைக் கையில் பிடித்து அலைந்துகொண்டிருக்கும் பார்ப்பனர் ஒருவர் தான், இந்தப் பெரியாரிய வரலாற்றை இந்தியாவிலிருந்து அழிக்கும் வேலையைச் செய்துகொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில் இன்னொரு பார்ப்பனன் இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறான்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை, இந்தியாவின் தேசிய அமைப்பு ஒன்றே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?

தரவுகளையா கேட்கிறீர்கள், தரகர்களே! படியுங்கள் இங்கே!

பார்ப்பன ‘த ஹிந்து’ நாளிதழே வெளியிட்டிருக்கும், ஆனால் இன்னமும் அமுக்கப்படாத, இச்செய்தியைப் படிப்பீர்!

இந்தப் பட்டயமும் விருதும் பற்றிய இச்செய்தி என்ன சொல்ல வருகிறது என்றால், பெரியாருக்கு இந்தப் புலி விருதானது கொடுக்கப்படுவதாக முன்னமேயே ரிஸர்வ் செய்யப்பட்டுவிட்டது! பின்னர் 2015ல் கொடுக்கப்பட்டது!

இவை எல்லாம் பொய்யென்று ஒரு பார்ப்பான் சொன்னதாகவும், அதனை இணையம் ஏற்றுக்கொண்டு, பெரியாருக்கு விருது வழங்கப்பட்ட தகவலை நீக்கியதாகவும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டியுள்ளான் ஒரு பார்ப்பான்.

இந்தப் பித்தலாட்டத்தை செய்ததோடு அல்லாமல் ‘திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்‘ என்றும் குறிப்பிடுகிறான் என்றால், இவர்களின் திமிரின் அளவு எத்தனை டிகிரிக்குச் சென்று இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஆட்சி அதிகாரம் தங்கள் கூட்டத்திடம் உள்ளது எனும் குருட்டுத் தைரியத்தில் எதையும் செய்யலாம் என்று கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.அவர்கள் கை வைத்திருக்கிறார்கள் எனப் பகுத்தறிவுடன் நாம் அறிந்துகொண்டபின் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதில் செலுத்துவோம்!

தமிழினத்தின் பாதுகாவலரை – கட்சிக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியார் என்று போற்றப்படும் சகாப்தத் தலைவரைப்பற்றி உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனக் கும்பலை நம் மக்கள் அடையாளம் காணவேண்டாமா?

பார்ப்பனர்களின் முயற்சிக்கு இணையம் ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் இணையத்தின் காதைத் திருகி, மண்டையில் குட்டி, மூக்கில் குத்தி, நாக்கால் நக்கி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
3.5.2019
சென்னை

​வீரமணியாரின் இம்மாதிரி அறிக்கைப் புழுக்கை லீலைகள்: ​​(இந்தக் களஞ்சியத்தைப் பொறுமையாகப் படிக்கவும், நகைச்சுவைக்கு நான் க்யாரண்டீ!)

 

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s