விடுதலை வீரமணி + பெண்விடுதலை = தாலி அகற்றல் + ப்ரா விளம்பரம் == திராவிட வக்கிரம்

April 15, 2015

அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!

இந்தக் கணிநித் திரையின் படம் எடுக்கப்பட்டது – இன்று காலை சுமார் ஐந்தரை மணியளவில்…

'விடுதலை' தளத்தின் இந்தப் பக்கத்திலிருந்து எடுக்கப் பட்டது...

‘விடுதலை’ தளத்தின் இந்தப் பக்கத்திலிருந்து எடுக்கப் பட்டது…

ஒரே சமயத்தில் பெண்ணடிமைத் தனத்தைச் சாடுவதையும், பெண்களின் பிதுங்கிவழியும் பாற்சுரப்பிகளுடன் கூடிய உள்ளாடை விளம்பரங்களை உட்புகுத்துவதையும் – திராவிடக்காரர்களால்தான் செய்ய முடியும்.

என்ன கோமாளிக் கோமகன்கள், இரட்டை வேடதாரிகள் இவர்கள்!

-0-0-0-0-0-0-0-

சரி.

எனக்குத் தெரியும், இம்மாதிரி விளம்பர விஷயங்களில், வீரமணி அவர்கள் தலையை நுழைத்திருக்கமாட்டாரென்று, வெறும் கட்டளைக் கட்டுக்களால் (‘கணிநி நிரல்களால்’) இந்த விளம்பரம் உட்புகுத்தப் படும் என்று…

ஆனால், இந்த விளம்பரங்களும் விடுதலை தளத்தைப் படிக்கும் மாக்களின், விசிலடிச்சான் குஞ்ச்சப்பர்களின் தரத்தை நிர்ணயிக்கும் என்பதும் உண்மைதானே? அங்கு வருபவர்களின் ப்ரொஃபெலை வைத்துக்கொண்டு இணையப் பக்கங்களில் உட்புகுத்தப் படுபவைதானே?

ஆகவே – ஒருவேளை நான் உபயோகிக்கும் கணிநியில் இருந்து, இதற்கு முந்தைய ஒத்திசைவு பதிவுக்காக,  நேற்று ‘கோவணப் படம்‘ ஒன்றைத் தேடியதால் இப்படியோ என நினைத்து,  சென்னை நண்பர் (நன்றி, சண்முகம்! :-)) ஒருவரை இப்பக்கத்துக்குப் போகச் சொன்னால், அவருக்கும் இதே விளம்பரம்.

ஒரு இளம் பெங்களூர் நண்பருக்கும், ஏறத்தாழ இதே கதை! (நன்றி சின்னச்சாமி! :-) இவர் இந்த கணிநித் திரையின் படத்தை எடுத்தது சுமார் 9 மணியளவு (இன்று, 15 ஏப்ரல் காலை))

குறிப்பு: லான்ழரி என்றால் பெண்களின் உள்ளாடைகள் என விரியும்...

குறிப்பு: லான்ழரி என்றால் பெண்களின் உள்ளாடைகள் என விரியும்…

அரைமணி நேரமுன்பு – என்னைப் பார்க்கவந்திருக்கும் என்னுடைய படுசூட்டிகையான பழைய மாணவன்  (நன்றி, குமரன் அய்யனார்! :-​)) ஒருவனை, அவனுடைய மடிக்கணிநியில்,  விடுதலை தளத்தின் இன்னொரு பக்கத்துக்குப் போய் பார்க்கச் சொன்னேன் – அவனுக்குக் கிடைத்தது இது. (இவன் முதல்முறையாக இத்தளத்திற்குச் செல்கிறான்)
Screenshot from 2015-04-15 09:05:26அவனையே மறுபடியும் இந்த ஒரிஜினல் விடுதலை பக்கத்துக்கு வரச் சொன்னேன் – அதுவும் இப்படியிருக்கிறது…

Screenshot from 2015-04-15 09:05:54எதற்கு இவ்வளவு பரிசோதனைகள் என்றால், எனக்குச் சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது…

அதாவது – ஏறத்தாழ, அது ஒரு ஸ்டேடிக், பொருத்தப்பட்ட (more or less – a static, pinned advertisement content series – served on the basis of the average viewer search/content profile of the website, rather than on a specific browser/webuser usage patterns) விளம்பரச் சரடு.

இதன் மூலமாக நாம் அறியக்கூடிய உண்மை என்னவென்றால் –  விடுதலை தளத்தை வழக்கமாகப் படிப்பவர்கள், அதாவது திராவிட இயக்கத்தினர் – இம்மாதிரி, பெண்களின் உள்ளாடை விடுதலை போன்ற விஷயங்களில்தான் குஷியாக ஈடுபடுகிறார்கள் என்பது. Philistines and Voyeurs

இது, இந்த ஆராய்ச்சி முடிவு, எனக்கு மிகவும் திருப்தியைக் கொடுக்கிறது. QED.

வாழ்க, திராவிடத் தமிழர்களின் தொடரும் கிளுகிளுப்புக் களப் பணி.

–0-0-0-0-0-0-0–

இன்னொரு தமாஷ்:
அதே விடுதலை தளப்பக்கத்தில் இப்படியும் இருக்கிறது!

“இணையர் வராத நிலையிலும்தனது இணையர் வர இயலாத சூழ்நிலையில் அவராகவே முன்வந்து கழற்றிக் கொடுத்த தாலி இதோ என்று ஒப்படைத்தார் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன்.”

:-))

சரி. இனிமேல், குரியர் மூலமாகவும் உங்கள் தாலியை அறுத்தோ அறுக்காமலேயோ அனுப்பலாம்.

ஆனால், உங்கள் கழுத்துகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளவும். இது முக்கியம்… ஏனெனில், நாங்கள் இன்னமும் இஸ்லாமிய-அரசு பொறுக்கிகளாகப் பரிணாம வலர்ச்சி பெறவில்லை. ஆனால் – கவனிக்கவும், தங்கவில்லைகள் கோர்க்கப் பட்டு  உங்கள் தாலிகள்,  எங்களுக்கு அனுப்பப்பட்டால், எங்களுடைய திராவிடப் பாரம்பரியத்தின்படி, அவை திருப்பி அனுப்பப்படமாட்டா!

அனுப்பவேண்டிய முகவரி, தொடர்புக்கு:  Periyar Thidal, 84/1(50), E.V.K.Sampath Salai, Vepery, Chennai – 600 007. Tel : (91) 044 – 26618161 Fax : (91) 044 – 26618866.

-0-0-0-0-0-0-0-

எல்லாம் சரி, அம்பேட்கரை அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம், எனக்குப் புரிகிறது.  ஆனால் வீரமணி அவர்களின் செல்லமான மாட்டுக்கறி என்னவாயிற்று?

-0-0-0-0-0-0-

வீரமணி அவர்களின் சன்னிதானத்துக்கு, அடியேனின் விண்ணப்பங்கள்:

இந்த 2015 வருடம் நீங்கள், ஜூலைமாதவாக்கில் வரப்போகும்  ரம்ஸான் நோன்பன்று பன்றிக்கறி உண்ணுவதையும், பர்தா அகற்றுவதையும் – ஒரு பெரும்விழாவாகக் கொண்டாட முடியுமா?பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கு – பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் மனம்பான்மையையும், எதையும் உண்ணும் உரிமையையும் நிலை நாட்ட, இதைவிட உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கும், சொல்லுங்கள்?

இப்போதைக்கு, பாவப்பட்ட க்றிஸ்தவர்களை, உங்கள் தறிகெட்ட பிரச்சாரக் கந்தறகோளங்களிலிருந்து விட்டுவிடலாம் – ஆனால் 2016ல், அவர்களுக்கும் பெண்ணுரிமையையும், உண்ணுமுரிமையையும் புகட்டலாம், சரியா?

… இப்படியே போனால் அய்யா, நாங்கள், உங்கள் தளத்தில் போர்னோக்ராஃப் படங்களுக்கும், வக்கிர விடலைத் தளங்களுக்கும், கோரப்பாலியல்  விளையாட்டுகளுக்குமான விளம்பரங்களை மிகுந்த ஆவலுடன், இனமான எழுச்சியுடன் எதிர்பார்க்கிறோம்!

தொடர்ந்து பெண்ணுரிமை, இனமானம், திராவிடம், பார்ப்பனீயம் என்றும் சந்தடிசாக்கில் ஜமாயுங்கள், நாங்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறோம்!

நன்றி. வணக்கம்.

12 Responses to “விடுதலை வீரமணி + பெண்விடுதலை = தாலி அகற்றல் + ப்ரா விளம்பரம் == திராவிட வக்கிரம்”

 1. Kumaran A Says:

  :-) at ur service sir.

 2. பார்த்தி Says:

  ப்ரா விளம்பரமோ பென்களின் அங்கங்களோ வக்கிரம் என்னும் கசடு அவ்வளவு சீக்கிரம் விலகப்போவதில்லை… தன்னோய் என்னென்பதரியாத மேதைகள்…. ஹிஹி…


  • தம்பி பார்த்தி(!) – கொஞ்சம் பார்த்து. மேலும், தமிழை எழுதக் கற்கவும்.

   பெண்ணின் அங்கங்களை வெறும் துய்ப்பு நோக்கத்துடன் வெறிப்பதைத்தான் குறிப்பிடுகிறேன். பெண்ணுடம்பே வக்கிரம் என்று சொல்லும் அரைகுறை ஒழுக்கவாதியல்லன் நான்.

   மற்றபடி உங்கள் இளிப்பை வேறெங்காவது காட்டவும் – விடுதலை தளத்திலேயே கூட!

  • பொன்.முத்துக்குமார் Says:

   அடடா அடடா என்னே மேதைத்தனம். பெண்ணின் அங்கங்களை ஒரு நோய் தீர்க்கவேண்டி ஒரு மருத்துவன் பார்ப்பதற்கும் காமப்படம் எடுப்பவன் பார்ப்பதற்கும் வித்தியாசம் தெரியாத (உமது வார்த்தைகளில் “தன்னோய் என்னென்பதரியாத”) தற்குறிகள் :))


   • நீங்களும் உங்கள் முயற்சியில் தளராத விக்ரமர்தான்! பொலிக!!

    (சில சமயங்களில் எனக்குமே அலுப்பு வந்துவிடுகிறது)

 3. Sridhar Says:

  அய்யா,

  அந்த விளம்பரம் அனுப்பும் மென்பொருள் பிராமணீயம் என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கக்கூடும். பிராமணீயம் பற்றி விடுதலையில் எழுதாமல், ந்ருசிம்ஹப்ரியாவிலா எழுதுவார்கள்?

 4. aekaanthan Says:

  திராவிடத் தங்கமணிகளை, தேனறிவுத் தெள்ளுமணிகளை ஏன் இப்படிப் போட்டுத் துவைத்துத் தொங்கவிடுகிறீர்கள்! பொழுதுபோகவில்லையா உமக்கு?சமுதாய சேவை, தேச சேவை செய்தோர் பட்டியலில் உமது பேரும் வரவேண்டும் என்கிற, மனதின் தீராத் தாகந்தான் காரணமோ ஒருவேளை?

 5. பொன்.முத்துக்குமார் Says:

  // இந்த 2015 வருடம் நீங்கள், ஜூலைமாதவாக்கில் வரப்போகும் ரம்ஸான் நோன்பன்று பன்றிக்கறி உண்ணுவதையும், பர்தா அகற்றுவதையும் – ஒரு பெரும்விழாவாகக் கொண்டாட முடியுமா?பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கு – பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் மனம்பான்மையையும், எதையும் உண்ணும் உரிமையையும் நிலை நாட்ட, இதைவிட உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கும், சொல்லுங்கள்? //

  ஆஹா ஆஹாஹாஹாஹா … அப்படிக்கூட நடந்திடுமா ? ஹ்ம்ம்ம்ம் … அப்படி நடந்தால் தமிழகத்துக்கு பெரும் விடிவுகாலம்தான். ஆனால் பாருங்கள் ’ஆசை தோசை அப்பளம் வடை’ என்று மட்டும் கூறத்தான் இப்போது முடிகிறது.

 6. Harish Says:

  நானும் பல முறை முயற்சி செய்து பார்த்தேன். ஒரு முறை கூட அவை எனக்கு காட்சியளிக்கவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  நான் இருக்கும் இடத்திற்கு ஏற்ப எனது தேடல் தேவை தேவையில்லாதவை தான் வந்தது.

  அந்த விளம்பரங்கள் இளம் பெண்களுக்கான விளம்பரம். அவ்வளவு பெண்கள் அந்த தளத்தை படிக்கிறார்களா என்பது வேடிக்கை.

  பலான படம் பார்ப்பவர்கள் அதை எப்படி தேடுவார்கள் என்று அவர்களிள் ஒருவனான எனக்கு தெரியும். அதற்கும் இந்த விளம்பரங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன்.

  விடுதலைக்காக அல்ல google ad sense மற்றும் இதை போன்ற smart adகளை தொடர்து கவணித்து வருவதால் இதை சொல்ல உந்தப்பட்டேன்.

  வலது மேல் ஓரத்தில் தெரியும் அம்பு குறியை கிளிக் செய்தால் இப்படி சொன்னது.

  This ad has been matched to your interests. It was selected for you based on your browsing activity. This Advertiser used Google’s DoubleClick ad serving and targeting platform to determine that you might be interested in an ad like this.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s