‘புலப்பேடி’ ஜெயமோகனின் ஹிஜாப் ஹிட்-ஜாப்

April 1, 2022

இவருடைய தொடர்ந்த,  அதிமேதாவித் தனமான இளிப்பைப் பார்த்து எனக்குச் சலிப்புத்தான் வருகுதய்யா! ஏறத்தாழ நடு-1980களில்  இருந்து அவரை வாசித்துவரும் எனக்கு, அவர் பலவிதங்களில் வளரவேயில்லை எனப் படுகிறது; இதெல்லாம் அவருடைய தகுதி(!)க்குத் தேவையா என்றும்தான்! :-(

(நேற்றிரவு ஒரு அந்தக்கால (+இந்தக்கால) ஜிகிரிதோஸ்த் ஒருவருடன் அளவளாவுகையில், சில மலரும் நினைவுகளையும், வெட்டி அலக்கிய அரசியலையும் வயிற்றெரிச்சல்களையும் – பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம். ஜெயமோகன் அந்தக் காலத்தில் எழுத வைத்துக்கொண்ட பலப்பல புனைபெயர்களில் (ஒருவேளை இந்தக் காலப் புனைபெயர்(!)களையும் சேர்த்துக்கொண்டால், 100க்கும் மேலாகத்தான் இந்த ஜாபிதா இருக்குமோ?) ஒன்றான ‘ராஜன்’ என்ற பெயரில் அவர் எழுதிய கவிதை(!)களையும் – குமுதம்/ஆனந்தவிகடன் வகையறா பத்திரிகைகளுக்கு அவர் பல அவதாரங்களில் கதை அனுப்பிக் கால்கடுக்கக் காத்திருந்தது பற்றியும், சிலபல ‘வாசகர்’ கடிதங்கள் வழியாக ஊடாடியதைப் பற்றியும், தம் ஆக்கங்கள் அச்சிடப் படுவதற்காக அவர் கொடுத்த அழுத்தங்கள் (பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நன்றியுடன்) பற்றியும், செய்த அரசியல் நுணுக்கங்கள் ஊடாக…  

ஆனால் – இவையெல்லாம் அவருடைய இள/முதிர்விடலைப் பருவத்தில் நடந்தவை, மனிதன் என்றால் கண்டபடி தவறுகள் செய்துதான் படிப்பினைகள் பெறுவான் – ஆகவே  இவையெல்லாம் பெரும்பாலும் லூஸ்லவுடத் தக்கவை.

மாறாக, இதேமாதிரி விஷயங்கள் வீரியம் கொண்டு அழிச்சாட்டியங்கள் தொடர்ந்தால்… அது சோகம்தான்.

எது எப்படியோ. முப்பெரும் தண்டங்களில், அதாவது சாபக்கேடுகளில் மீதமிருக்கும் சாருநிவேதிதா எஸ்ராமகிருஷ்ணனாதிகள் உட்பட உருட்டப் பட்டாலும் – சுமார் 15-20 நிமிடங்கள் போலத்தான் இந்தப் பேச்சு;  நல்லவேளை – முக்கியமான, உபயோககரமான (அதாவது, சுத்தமாகவே தற்காலத் தமிழ் அலக்கியமற்ற) விஷயங்களும் பேசப்பட்டன. பரவாயில்லை.)

ஆனால். தொடர்ந்து தமிழில், சகல விஷயங்களைப் பற்றியும் எழுதும், தற்காலத் தமிழ் அலக்கிய விளக்குமாற்றின் பட்டுக் குஞ்சலங்களில் ஒருவரான, ஜெயமோகன் அவர்களுக்கு மட்டும்தான் கலை/க்ராஃப்ட் என்பது கொஞ்சமேனும் இருக்கிறது. பலப் பல விதங்களில் அவருக்கு absolute merit  என இருக்காவிட்டாலும் (ஆகவே சராசரித்தனம் மிகுந்திருந்தாலும்), சர்வ நிச்சயமாக, அவருடைய சக-பிற தமிழ் அலக்கியவாதிகள் காரணமாக, அவருக்கு relative merit என்பது இருக்கிறதுதான். அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும் அபாரமானதுதான்.

இதனால்தான் இவரை நிரந்தரமாகவும் லூஸ்லவுட முடியவில்லையே, ஈஸ்வரா!

இந்த அன்பு (நகைச்சுவைக்காக) X அருவருப்பு (அட்ச்சிவுடலுக்காக, அவதூறுகளுக்காக) – இருமை நிலைச் சுழற்சியூழிலிருந்து எருமையாகிய எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?)

:-(

ஆதாரம்: மண்டையில் அடித்துக்கொண்டு இந்த ஜெயமோகப் பதிவினைப் படிக்கவும்: ஹிஜாபும் கல்வியும் March 21, 2022

1

பாரதீய ஜனதா கட்சியை, ஜெயமோகன் திட்டுவதிலும் அதனைக் கரித்துக் கொட்டுவதிலும் பிரச்சினை இல்லை – ஏனெனில் அறப்பிழம்பண்ணலான அவருக்கு அறச்சீற்றத்துடன் (அல்லாஹ்வையும் யேஸ்ஸுவையும் அவர்கள் சார்ந்த வெறிக்கும்பல்களையும் தவிர, பிறவற்றை) ஆனந்தமாகத் திட்டுமுரிமை இருக்கிறது. அப்போதுதான் — அறிவுஜீவியாக, கருத்துருவாக்கியாக திராவிடத்தால் (லும்) காயடிக்கப்பட்ட சூழலில் கருதப்பட முடியும் என்பதும், லிபரல்(!) ஆகிய அவருக்கும் நன்றாகத் தெரிந்ததே!

ஆனால், ஹிஜாப் விஷயத்திலும், துளிக்கூடத் தொடர்பேயில்லாமல் – பிரச்சினை என்னவென்றே புரிந்துகொள்ளாமல், நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளாமல் – அலட்சியத்துடனும் அவருக்கே உரிய மெத்தனத்துடனும் – அக்கட்சியையும் ஹிந்துத்துவாவையும் கரிசன மதச்சார்பின்மையுடன் கரித்துக் கொட்டியிருக்கிறார், பாவம்.

பத்திக்கு ஒரு அட்ச்சிவுடல். பாதிரி எம்லின் குறித்து ஏகத்துக்கும் மானேதேனே. பாதிரி எம்லின் பற்றிய அவரே எழுதியுள்ள குறிப்புகளையும் கடிதப் போக்குவரத்துகளையும் முழுமையாகப் படிக்காமல் (அவருடைய பெரும்பாலான செயற்பாடுகள்,  மதமாற்றத்திலும் கத்தோலிக்க மீனவர்களை ப்ரொட்டெஸ்டன்ட்களாக மடைமாற்றுவதில்தான் கழிந்தது என்றாலும்) காற்றுப்போக்கில் வந்த நாட்டாரியல் கதையாடல்களையும் மிஷநரி பரப்புரைகளையும் பற்றி மட்டும் ‘உள்வாங்கி’ எழுதினால், ‘வெளிவாந்தி’தான் வரும்…

(எப்பவாவது, தப்பித் தவறி, இந்த இவருடைய எழுத்துப் பக்கம் சென்றால், கதிகலங்க அடித்துவிடுகிறாரே, மனிதர்… ஐயகோ!)

அஜந்தா சுப்ரமணியன் எழுதிய ஷோர்லைன்ஸ் (Ajantha Subramanian – Shorelines: Space and Rights in South India, Stanford University Press (2009)) புத்தகத்திலிருந்து இரு சிறுபகுதிகள் மேலேயிருக்கின்றன. (இவர்மேல் எனக்கு அதிகமாக மரியாதை இல்லாவிட்டாலும், சில, தரவுசார்ந்த கட்டுரைகள் ஒத்துவரும்)

2

சரி.

பெரும்பேராசானின் பதிவிலிருந்து, ஒரு எடுத்துக்காட்டாக அவருடைய பதிவில் ஒரேயொரு பத்தியை எடுத்துக் கொள்வோம்.

“அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை உயர்குடிப் பெண்ணை தாழ்ந்தகுடியினன் கண்ணால் பார்த்து ‘பார்த்தேன்’ என அறிவித்தால் அவளை அவனுடனேயே அனுப்பிவிடும் மண்ணாப்பேடி புலைப்பேடி என்னும் கொடிய முறை இருந்தது. அதை ராணி கௌரி பார்வதிபாய் நிறுத்தினார். அந்த உளநிலைகளும் அச்சங்களும் நீடித்தன.”

போகிற போக்கில் பெரிதாக ஆவணச்சார்பேயில்லாத, வெறும் ஒரு  கல்வெட்டு ஒன்றை (பொதுயுகம் 1696, திருவிதாங்கோடு சமீபம்) மட்டும் வைத்து புனைபுனை எனப் புனைந்திருக்கிறார். (இத்தனைக்கும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு புலையரும் மண்ணாரும் இல்லை, ஒரு பெண்ணும் அப்படி ‘கொடிய முறை’யில் பாதிக்கப்பட்டதாகத் தரவேயில்லை – பொதுவாகவே சுவையாக இருக்கும் நாட்டாரியல் டகீல்கள் கூட, ஒரு ஒப்பாரிப் பாடல்கூட, எனக்குத் தெரிந்து, இதுகுறித்து ஒன்றுகூட இல்லை, அந்தக் கல்வெட்டுக்கான முகாந்திரம் வேம்பநாடின் ஒரு சிறு பகுதியில் ஒருவேளை இருந்திருக்கலாம், அவ்வளவுதான்!)

0

புலப்பேடி-மண்ணாப்பேடி-பறப்பேடி: குறிப்புகள்

புலப்பேடி என்றால், புலையரைக் குறித்து பயப்படுதல், மண்ணாப்பேடி என்றால், மண்ணாரிடம் பயம் கொள்ளல். பறப்பேடி என்றால் இதேபோல.

இதன் (மிகப் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வியாக்கியமான) கதையாடல் என்னவென்றால்: ‘உயர்குலப் பெண்டிர்’ மார்களை அடக்கி வைக்கும் படிக்கு, அவர்களை பயமுறுத்துவதற்காக – அவர்களிடம் அவர்கள் குல ஆண்கள் சொன்னார்களாம்:

“ஒழுங்கு மருவாதியா வூட்டுக்குள்ளாற, எங்க்ளுக்கு புள்ளகுட்டீ பெத்துபோட்டுக்கினு கெடங்க… இல்லாகாட்டி, ரோட்ல நீங்க அலெஞ்சிதிர்ஞ்சிக்கினு இர்ந்தீங்கோ…. யாராச்சும் கீழ்ஜாதி காரனுங்கொ வொங்கள கண்ணால பாத்தான் வெச்சக்குங்க… அவ்ளோதான் – நீங்க அவ்னுங்ககூடதான் வாள்க்கய ஓட்ணும்… ஆஹாங்…”

ஒரு விதமான, பன்முகத் தரவுமில்லாமல், பாரத சமூகத்தை இழிவாக, ஜாதிவெறி மட்டுமே கொண்டதாக, பெண்களை அநியாயத்துக்கு ஒடுக்கியதாகச் சித்திரிக்க உதவியாக இருக்கும், மற்றபடி தொடர்புள்ள ஆதாரம் ஒன்றுகூட இல்லாமல் இருக்கும் ஒரு கல்வெட்டை மட்டும் வைத்துக்கொண்டு – பின்னர் பாதிரிகளுடன் (=அவர்களுடைய வழமையான, ‘பாரதத்தில் எப்போதுமே வன்கொடுமைகள் அதிகம்’  + ‘ஹிந்து மதங்கள் என்றாலே ஜாதிவெறி, ஒடுக்குமுறை, அவலம்’ எனும் கொடுமையிலக்கியப் படைப்பாற்றல்களின் பரப்புரைப் பராக்கிரமம்) ‘atrocity literature’ ப்ரிட்டிஷ் கெஸட்டீயர்களும்,  மார்க்சீய வரலாற்றாளர்களும் சேர்ந்து கும்மியடித்து அட்ச்சிவுட்டதை வைத்துக்கொண்டு புலைப்பேடி மண்ணாப்பேடி என…. ஈஸ்வரா! (பிரச்சினை என்னவென்றால் – இந்த அரைகுறைக் கதையாடல் ஒருமாதிரி வரலாறு என்றே நிலை பெற்றுவிட்டது)

கொடுமையிலக்கிய வாதிகள் அட்ச்சிவுட்டதுபடி கூட – இந்த புலயப்பேடி, பறப்பேடி வகையறா விஷயம் என்பது – ஒரு சிறு நிலப்பரப்பில், குறிப்பிட்ட ஒரு கேரள மாதத்தில் (கர்கடகம்,  நம்மூர் ஆடி மாதம்?) ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம்தான் என இருக்கையில், இவர் என்னவோ, தானே ‘பார்த்தேன்’ செய்ததுபோல் – அதுவும் அந்தக் ‘கொடுமை,’ படுரெகுலராக பொழுதன்னிக்கும் நடந்த விஷயம் போல இன்னமும் ஊதிப்பெருக்கி, மேலதிகமாக ஒரு பரப்புரை செய்கிறார்!)

இத்தனைக்கும், இதே ஜெயமோகனார், அவ்வப்போது  – பிறர் இப்படியெல்லாம் அட்ச்சிவுட்டு எழுதுகிறார்களே – என்றெல்லாம் பிலாக்கணம் வைப்பவர்தாம்.

என்ன இரட்டை வேடமய்யா இது? அசிங்கமாக இல்லை? ப்ளடி

0

என்ன மசுத்துக்கு, ஜெயமோகனின் தொடர்பொய்மைகளைத் அவ்வப்போதாவது படிக்கிறேன்? யூபிஎஸ்ஸி தேர்வை ஒருகாலத்தில் எழுதியதால்தானே, இந்த எழவையெல்லாம் எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டி வந்துவிட்டது?  அப்படியே இருந்தாலும், எந்த மசுத்துக்கு என்னை இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்?

ப்ளடி அதை ராணி கௌரி பார்வதிபாயா நிறுத்தினார்?

அவர் பிறந்ததே 1802ல்! (அவர் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்தார் என்பது உண்மை – ஆனால் இந்த விஷயத்தைச் செய்யவில்லை; ஜெயமோகன் அவரைத் தயைசெய்து மன்னிக்கவும்!  மேலும் அக்காலங்களில் டைம்-ட்ராவல் இருந்திருக்கவில்லை, பாவம்!)

ஆனால் அகாலமாக இறந்துவிட்ட கோட்டயம் வீரகேரள ரவிவர்மா இதைச் செய்ததாக இருக்கும்(!)  பொதுயுகம் 1696 (கொல்லம் 871) ஆண்டுக் கல்வெட்டுதானே இருக்கும் ஒரே ‘தரவு?’

உள நிலைகளும் அச்சங்களும் நீடித்தன“வா! ஐயகோ!!

[ Travancore – Emily Gilchrist Hatch (1933) ]

‘ஐம்பதாண்டு முன்பு வரை” என்கிறார் ஜெயமோகன். !

இந்த ‘கல்வெட்டு’ வெட்டப் பட்டது 1696-7 வாக்கில். அதுவும் இந்தக் ‘கொடுமைகள்’ கூடிய சீக்கிரம் மறைந்துவிட்டிருக்க வேண்டும் என்றும் செய்தி.

இந்த மதமாற்றாளர்  எம்லின் பிறந்ததே 1838ல். இந்தியாவுக்கு வந்தது 1867ல். மதமாற்றச் சேவை புரிந்தது 1868-92 வரை.

‘இடைவெளி’ என்பது, சுமார் 170 வருடங்களுக்கும் மேல்! இருந்தாலும் பேராசான் வாக்கின்படி அது, ‘ஐம்பதாண்டு முன்பு வரை!”

வெளங்கிடுண்டே!

பிரச்சினை என்னவென்றால், பெரும்பேராசான் பதிவில், வெறும் முப்பது வார்த்தைகளே கொண்ட ஒரு சிறு பத்தியில் இவ்வளவு பராக்கிரமம்!

வெறும் தகவல்பூர்வமாக இவர் சொல்லவரும் விஷயங்களே இந்த அழகில் இருக்கின்றன என்றால், இவருடைய ஆன்மிக/அரசியல்/அலக்கியக் கருத்துகள் எந்த அழகில் இளிக்கக்கூடும் என்பதை உங்கள் மானேதேனே கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

:-(

இப்படியெல்லாம் நாக்கூசாமல் புளுகிவிட்டு, பெரும்பேராசான் தொடர்ந்து மேலும் எழுதுகிறார்:

“ஆகவே பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தில் நிகழ்த்திய ஹிஜாப் அரசியல் கீழ்மையானது, நம் தலைமுறைகள் எண்ணி நாணவேண்டியது என்றுதான் சொல்வேன்.”

!

ஓரு மசுத்துக்கும் தொடர்பேயில்லாமல் இப்படிக் கரித்துக்கொட்டுவது நம் பெரும்பேராசானால்தான் முடியும்.

ஆனால், அம்மணிகளே அம்மணர்களே! அவர் செய்வது ‘கீழ்மை’யல்ல…

அவருடைய சொந்த ‘தலைமுறைகள் எண்ணி நாணவேண்டியது அல்ல!”

அவருடைய தேர்ந்த வாசகர்கள், இந்த ஆசானிய அருள்வாக்குகளால் கூனிக் குறுக வேண்டியதில்லைகூட!

ப்ளடி.

நன்றி.

3

ஒரு அளவேயில்லாமல் இப்டியாடே அட்ச்சிவுடுவீங்க?

கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் பீலாவுடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா, ஆண்டவரே!

இதேபோல கேரள-சேர்த்தலை பக்க நங்கேலிக் கிராம ஈழவப் பெண் ஒருத்தி, ‘முலை வரி’க்கு எதிர்ப்பு தெரிவிக்க தன் முலையை அறுத்து எறிந்ததாகப் பரப்பப்பட்ட க்றிஸ்தவ-மார்க்ஸிய, முழுவதுமே பொய்யான அயோக்கியக் கதையாடலையும்…

…சந்தடிசாக்கில் பெண்ணிய மார்க்சிய பாணியில் சிறு நங்கேலி பெருநங்கேலி ஆனாள் என்பது ‘இந்தியத் தத்துப்பித்துவவியலின் பின்நவீனத்துவம்’ என ஊக்கபோனஸ் உல்ட்டா கதையடித்தாலும் ஆச்சரியமில்லை.

இவருக்கு இப்படியெல்லாம் தொடர்ந்து, ஒரு வரைமுறையே இல்லாமல் அட்ச்சிவுடவேண்டிய அவசியம்தானென்ன?

பாவமாகவும் இருக்கிறது, என்ன உளவியல் பிரச்சினையோ!

இப்படித் தொடர்ந்து திரித்துத் திரித்துத் திரியாவரம் செய்வதால், அவருடைய பிற, நல்ல கூறுகள் உள்ளமிழவே வாய்ப்புகள் அதிகம் என்பதில் எனக்கு வருத்தம்தான்.

சரி. எப்படி இருந்தாலும் கவலை வேண்டேல். ராணி கௌரிபார்வதிபாய் அவர்களோ ராஜா வீரகேரள ரவிவர்மாவோ ஓடிவந்து அவதூறு வழக்கையா போடப் போகிறார்கள்?

அல்லது பாதிரி* எம்லின் தான் வந்து ‘நான் எம்லினா இருக்கலாம், ஆனாக்க, நீதாண்டே எம்டன்’ என உச்சி முகர்ந்து ஆரத்தழுவி நாத்தழுதழுக்கச் சொல்லப் போகிறாரா?

இல்லை, புளகாங்கிதமடைந்து:

” அடோ! நான் வெறும் பாதிரி மட்டுந்தாண்டே! ஆனா நீயி முழு திரி டே!”

எனச் சொல்வாரோ?

பின்குறிப்பு: தன் சராசரி வாசகரின் அடிப்படைத் தரம் + புத்திசாலித்தனம் + படிப்பறிவு + சோம்பேறித்தனம் குறித்த ஜெயமோகனுடைய படுகேவலமான அவதானிப்பும் அவர்களின் மீதான உதாசீனமும், எனக்கு எப்போதுமே ஆச்சரியம் தரும் விஷயங்கள்தாம். இருந்தாலும், அங்கு கிடைக்கும் ஓஸி லட்டு(!) காரணமாக கூட்டம் அல்லாடுகிறது, பாவம். தமிழார்வம் உடையவர்கள் அபாக்கியவான்கள், வேறென்ன சொல்ல. அவர்களுக்குத் தொடர்ந்து உன்னதங்களை ரசிக்க, சுவைக்க – அதற்கு இன்றியமையாத தேவைகளான கொடுப்பினையோ உழைப்போ இல்லை.

…இதைப் படிக்கும் சக ஏழரைகளுக்கு ஒரு வேண்டுகோள்: ஜெயமோகன் எதனை எழுதினாலும், அதில் புனைவையும் அவருடைய அபரிமிதமான நகைச்சுவையையும் மட்டுமே கண்டால், உங்கள் வயிற்றில் அமிலம் சுரப்பதைக் குறைக்கலாம். (ஆனால், நானே இந்த அறிவுரையைக் கேட்டுக் கொள்ளவில்லை எனும்போது…)

மற்றபடி உங்கள் கஷ்டம்.

ப்ளடி.

* ‘ஜேம்ஸ் எம்லின், பாதிரியாக இருந்திருக்கமுடியாது – அவர் ப்ரொடெஸ்டென்ட், கத்தோலிக்கர் அல்ல’ எனச் சொல்லிக்கொண்டு வராமல், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்; பொதுவாக க்றிஸ்தவ மதமாற்றி பரப்புரைஞர்கள் என அதனைப் புரிந்து கொள்ளுங்கள்; சரியா?

இன்னொரு பின்குறிப்பு: ‘கொள்ளு’ நதீம் என்பவர் இந்த ஹிஜாப் பதிவு குறித்து ஒரு ‘இனிய ஜெயம்‘ செய்திருக்கிறார்; ஹிஜாபும் கல்வியும்- கடிதம் March 26, 2022

…படித்துவிட்டுக் கொள்ளென்று சிரித்துவிட்டேன்.

அதிலும், ஏகப்பட்ட சொதப்பல். இல்லாததைச் சுட்டல், ஒரேயொரு வரியை வைத்து பொதுமைப் படுத்தல், தவறான வரலாற்றுக் குறிப்புகள் என ஏகத்துக்கும் களேபரம்…

பெரும் பேராசானுக்கு ஏற்ற சீடர், தப்பாமல் பிற(ழ்)ந்திருக்கிறார், என்ன செய்ய.

4

..சும்மா பிலாக்கணம் வைத்தேன் – ரெகுலராகவே ஜெயமோகன் தளத்துக்குச் சென்று படித்து – ஜாலியாக சிரித்து விட்டு அகலலாம், ஒரு பிரச்சியையுமில்லை.

…இன்றைய தேதிக்கு, அரசியல் கனல் பறக்கும் இக்கால கட்டங்களில், உக்ரைன்-ரஷ்யா போர் போரடித்துவிட்ட சமயங்களில், இப்பூவுலகில் – ஜெயமோகன் தளத்தை விட்டால், நகைச்சுவைக்கு வேறு நாதியில்லை…

ப்ளட்டி ஹெல்.


6 Responses to “‘புலப்பேடி’ ஜெயமோகனின் ஹிஜாப் ஹிட்-ஜாப்”

  1. B Says:

    மடைமாற்றம் – அருமையான சொல்லாடல். Thank you.

  2. Sesha a.seshagiri Says:

    உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் இது மாதிரி அடிச்சிவிடுபவர்களின் உண்மைத்தன்மை தெளிவாக என்னைப் போன்றவர்களுக்கு தெரிய வருகிறது.இந்த ஹிஜாப் விவகாரத்தை பொறுத்தவரை என்னைப் போல் நுனிப்புல் மேய்பவர்களும் கூடத் திகைக்கும் வண்ணம் ஆசான் எழுதியிருப்பது வருந்த வைக்கிறது.ஏற்கனவே கல்வி நிலையங்களில், நிர்வாகம் நிர்ணயிக்கும் சீருடை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கர்னாடகா உயர் நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியதற்கே முன்பே கேரள, மும்பை நீதிமன்றங்கள் இதே போல் தீர்ப்பு வழங்கி அவை சத்தமில்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இது நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தேர்தலின் பொருட்டும் ,வரும் கர்னாடகா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் கர்னாடகாவில் தூண்டி விடப்பட்டு நடந்து வருகிறது என்பது அப்பட்டமாக தெரிந்தும் மேலும் இது கல்வி நிலையங்களுக்கு மட்டும் தான் மற்றவர்கள் அணிய எந்த தடையுமில்லை என்பதை அறிந்தும் ஆசான் தேவையே இல்லாமல் இந்த விசயத்தில் பிஜேபியை மட்டும் குறை கூறுவது மிகுந்த பாரபட்சமான நிலை தான். இது அவர் தூக்கி பிடிக்கும் ‘அறத்தின்”பாற்பட்டதும் அல்ல !


    • பிரச்சினை என்னவென்றால், ஒருவேளை, இப்படியெல்லாம் நாடகம் போட்டால்தான் கோடம்பாக்கப்பேடிகளிடையே மதச்சார்பின்மைத் திராவிட முத்திரை கிடைக்கும் எனத் தெரிந்தே செய்கிறாரோ? இல்லாவிடில் பருப்புவேகாதோ?

      (ஆனால் – அவர் வாசகர்களானவர்கள் முழுமடையர்கள, எடுப்பார் கைப்பிள்ளைகள் என அவருக்குச் சர்வ நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது)

      • Ramesh Narayanan Says:

        ஆங், போட்டேளே ஒரு போடு,
        ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, பெரும்பேராஸானின் ஒப்புதல் வாக்குமூலம் அவர் தளத்திலேயே, பல சமயங்களில் படித்த ஞாபகம் வருதே. அவருடைய கோடம்பாக்க ventures paid him rich Dividends, that is his profession and he earned by his sheer talent and untainted devotion and efforts, அது அவருடைய உழைப்பய்யா, உழைப்பு, None of us is bothered about it. சேமித்ததை பத்திரமாக வைத்திருக்க, அவரது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நினைவு ஆகிய முக்கிய காரணங்களினால் பச்சோந்தியாக வாழ அவருக்கு உள்ள உரிமையினால் அவர் எடுக்கும் முடிபுகளை, அவருடைய அறச்சீற்றமாக வெளியிட்டால், பாவம் கொ..யடிக்கப்பட்ட தீராவிடச் சீடர்கள் என்ன செய்வார்கள்! உங்களது குறிப்புகளைப் படித்தாவது தெளியட்டும்

  3. Ramakrishnan SN Says:

    https://www.jeyamohan.in/164157/

    இந்தியாவின் எல்லா அரசுநிறுவனத்திலும் உடைக்கட்டுப்பாடுகளும் வழிகாட்டுநெறிகளும் உண்டு. ஒருவர் மிகவும் தனித்துத் தெரியக்கூடாது, பொறுப்பற்றவராகத் தெரியக்கூடாது, அன்னியராகத் தெரியக்கூடாது என்பதே அந்த உடைக்கட்டுப்பாடுகளின் பொதுநெறி.

    அதேபோல கல்விநிலையத்தில் ஒருவர் தன்னை தனித்து காட்டிக்கொள்ளக் கூடாது. கல்விநிலையம் அதற்கான இடமல்ல. அனைவரும் ஒன்றாக தெரியவேண்டிய இடம். அதற்காகவே சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அங்கே ஒருவர் தன்னை கல்விநிலையத்தின் நெறிகள், நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும். அவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்தவேண்டும்.

    ஏன்? ஒரு கல்விநிலையத்தில் சில ஆயிரம் பேர் பயிலக்கூடும். சராசரியாக ஐம்பது பேருக்கு ஓர் ஆசிரியரே இங்கே சாத்தியம். ஐம்பது தனிநபர்களை ஆசிரியர் என்னும் தனிநபர் அணுகி ஆராய்ந்து, புரிந்துகொண்டு, மதிப்பிட்டு, ஒவ்வொருவருக்குமான நடைமுறையை வகுத்துக்கொண்டு பழக முடியாது. மாணவர்கள் என்பவர்கள் ஒன்றாக, ஒரு பொது அடையாளத்துடன் இருந்தால் மட்டுமே ஆசிரியர் கல்விகற்பிக்க முடியும். கல்விநிலையங்களின் இயங்குமுறையே அதுதான். ஆகவேதான் மாணவர்களை ஒரே திரளாக ஆக்கும் உடல்பயிற்சிகள், சீருடைகள் உலகமெங்கும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையிலுள்ளன. இது எளிமையாக யோசித்தாலே புரியும் விஷயம்.


    • ஐயா, ஜெயமோக நகைச்சுவைக்கு நன்றி. அழகியஇரட்டைநாக்கர் அவர்!

      பள்ளி வளாகங்களில் ஹிஜாப் வேண்டாம் எனக் கர்நாடகத்தில் ஒருசில பள்ளிகள் எடுத்த நிலைக்கு  எதிரான இடதுசாரி / லிபரல் /  முஸ்லீம் கும்பல்களின் அழிச்சாட்டியத்தை அப்படியே கண்டுகொள்ளாமல், அதற்கு பாஜக-வைக் கரித்துக்கொட்டிவிட்டு அடுத்த சில நாட்களில் இப்படியே ப்ளேட்டைத் திருப்பிப் போடுவது என்பது, நம் பெரும்பேராசானால்தான் முடியும்.

      எது எப்படியோ, அவருடைய முட்டாக்கூ வாசகர்களுக்கு நன்றியுடன் அவருடைய பிழைப்பு நன்றாக  நடந்தால் அவருக்கு அறம் சார்ந்த பிரச்சினையொன்றுமில்லை என்பதில் ‘எனக்கெதுக்கு வம்பு?’


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s