இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)
January 19, 2014
மறப்போமா இவர்களை?
தன் (கஷ்மீரி பண்டிட்) விவசாயக் குடும்பத்தை (லஷ்கரீ-தய்யபா) கொலைவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்ச் 23, 2003 அன்று பலி கொடுத்து (நதிமார்க் படுகொலைகள்), பின்பு ‘தான் மட்டும் இறக்கவில்லை’ என்கிற குற்ற உணர்ச்சியால் பைத்தியம் பிடித்தலைந்து ஒரு வருடத்திற்குப் பின் அதே நாள் பாகீரதியில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொண்ட எனது இளம் நண்பன் ராஜீவ் குமார்-ன் நினைவுக்கு, இப்பதிவு சமர்ப்பணம்.
-0-0-0-0-0-0-0-
2001-2002 வாக்கில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்காக, இளம் பொறியியலாளர்களை, மேலாண்மைக்காரர்களை, மனிதவளமேம்பாட்டுக் காரர்களை தேர்வு செய்வதற்காக, அதுவும் தரமான முஸ்லீம் இளைஞர்களை குறைந்த பட்சம் 80%-ஆவது சேர்த்துக் கொள்ளவேண்டுமென்று திட்டம் போட்டு, ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாமியா மிலியா ஹம்தர்த், ஜேஎன்யு என்றெல்லாம் டெல்லியில் சில மாதங்கள் வெறிபோலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
… அப்போது அறிமுகமானவன் இந்த இளைஞன் ராஜீவ்.
படு புத்திசாலி, படிப்பாளி. நன்றாக ஆங்கிலத்தில் கவிதை எழுதக் கூடியவன். ஸூஃபிகளைப் பற்றியும், கஷ்மீரி சைவத்துடன், தமிழகச் சைவசமயத்தைப் பற்றியும் விஸ்தாரமான ஞானம். கஷ்மீர் பிரச்சினை பற்றி, பல கோணங்களிலிருந்தும் உண்மையாகவே நன்றாக அறிந்திருந்தவன். கஷ்மீரில் சாத்வீகமான, சுமுகமான தீர்வு நிச்சயம் ஏற்படும் என்பதை மிகத் தீவிரமாக நம்பியவன். ஐஏஎஸ் பரீட்சைக்கு அப்போது மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான். பின்னர் விட்டு விட்டு தொடர்பு இருந்தது. கடைசியில் நான்கைந்து மாதங்கள் பிடி கொடுக்காமல், தொடர்பு கொள்ளாமல் இருந்து, போய்ச் சேர்ந்தான் பாவி. உடல் கூடக் கிடைக்கவில்லை.
காரணம்: பாகிஸ்தானின் ராணுவாதிபதி ஜியா-வுல் ஹக், இந்தியாவின் கஷ்மீர் மாநில முதலமைச்சர் முஃப்தி முஹம்மத் சையத்; இந்த இரண்டு கொலைகார அயோக்கியர்களும் சேர்ந்து, ஏற்கனவே கந்தறகோளமாக இருந்த நிலைமையை இன்னமும் மோசமாக ஆக்கி, ஜேகேஎல்எஃப் உதிரி ரௌடிகளை ஆயுதபாணிகளாக ஆக்கி, பாகிஸ்தானிய லஷ்கர் வெறியர்களை நேரடியாக ஊக்குவித்து,அல்லது கண்டுகொள்ளாமல் கமுக்கமாக இருந்து – தொடர்ந்த பண்டிட்டுகளின் மீதான தாக்குதல்களுக்கும், அநியாயப் படுகொலைகளுக்கும் சிதறடிக்கப்படல்களுக்கும் காரணமாக இருந்தனர். (இப்படிப்பட்ட படுகொலைகளில் பலவற்றுக்கு நேரடிக் காரணமாக இருந்த, யாசின் மல்லிக் எனும் அற்பனைக் கூப்பிட்டு விழா நடத்துகிறார்கள், ‘நாம் தமிழர்களான’ நம்முடைய அரைவேக்காட்டு அயோக்கிய தமிழ் அரசியல் சீமார்கள், வெட்கம், வெட்கம்)

http://www.rootsinkashmir.org/ – இடது ஓரத்தில் இருப்பவன்தான் யாசின் மல்லிக்…
… ஊழ், என்னைச் சுற்றியிருந்த, நான் அறிந்திருந்த, நான் மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பல அழகான இளைஞர்களைத் தொடர்ந்து பலி வாங்கிக் கொண்டிருக்கிறது, என்ன செய்வது.
இந்த ராஜீவ் கூட, இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு, சிலமுறை என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோது – இது என் உதவிக்காக அல்ல, என்னோடு பேசிக் கொண்டிருக்கத்தான் என்பது எனக்குத் தெரியும் (அவன் அப்போது உள்ளூர உடைந்து கொண்டிருந்தான் என்பதை நான் அறியவில்லை) – இருந்தாலும், நான் வேலை மும்முரங்களில், அழுத்தங்களில், சில கோரப் பணச் சிக்கல்களில் (=சொந்தத் தொழில்) இருந்ததால் அந்த இளைஞனின் இந்தப் போக்கை நான் ஊக்குவிக்கவில்லை. பின்னர், எனக்கு சாதாரணமாக மூச்சுவிடச் சமயம் கிடைத்தபோது நான் அவனைத் தொடர்பு கொள்ள முயன்றேன் – ஆனால், அவன் பிடிபடவில்லை. அவனுடைய கோபமும் வருத்தமும் புரிந்து கொள்ளக்கூடியவைதான்.
ஆனால், அவன் அகாலமாக கங்கையில் இறந்தபின் தான் தோன்றியது – அவன் பேச விழைந்தபோதெல்லாம் நான் பேசியிருந்தால் ஒருக்கால் அவன் அல்பாயுசில் இறந்திருக்க மாட்டானோ என்று… இந்தத் துக்கங்களை, குற்றவுணர்ச்சிகளை நான் இறக்கும்வரை தாங்கிக் கொண்டிருக்கவேண்டும்தான். என் கர்மா என்னுடன், வேறென்ன சொல்ல.
பலவிதங்களிலும் தாங்கொணா இன்னல்களுக்கும், மனிதத்தன்மையற்ற அட்டூழியங்களுக்கும் உட்படுத்தப்பட்ட கஷ்மீரி பண்டிதர்கள் – முறையாக, வரிசைக்கிரமமாக, கிராமம் கிராமமாக கைக்குழந்தைகள் என்றோ, சிறார்கள் என்றோ கூடப் பார்க்கப்படாமல் படுகொலை செய்யப்பட்டு, கோயில்கள் இடிக்கப் பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு, கடைகள் எரியூட்டப் பட்டு — மீந்தவர்கள், இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்முவிலிருந்தே விரட்டப் பட்ட கதை ஆரம்பித்த தினத்தின் 24வது வருட முடிவு இது. தொடர்கிறது இந்தக் கதை.

இவர்களது மனித உரிமை?
பலவிதங்களில் இத்தினம் நாட்ஸி ஜெர்மனியில் க்றிஸ்டல் நாஹ்ட்-ஐ நினைவுபடுத்துவது (எனக்கு)…

மொன்டாஷ் படம்: http://kashmiris-in-exile.blogspot.in/, https://picasaweb.google.com/rashneek/RIKCollage#5257828684872412050 தளங்களிலிருந்து…

படம்: https://picasaweb.google.com/rashneek/RIKCollage#5257828684872412050 தளத்திலிருந்து…

மொன்டாஷ் படம்: http://kashmiris-in-exile.blogspot.in/, https://picasaweb.google.com/rashneek/RIKCollage#5257828684872412050 தளங்களிலிருந்து…
குறிப்பு: எனக்குப் பொதுவாக, மன அழுத்தம் கொடுக்கும் சோகம் கவ்வும் படங்களைப் போட்டு, அனுதாபத்தை அறுவடை செய்வது பிடிக்காது.
இருந்தாலும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கஷ்மீர் பிரச்சினையைக் கவனித்து வந்திருப்பவன், ஆழ்ந்து அறிய முயன்றவன் என்ற முறையிலும், சில கஷ்மீரி முஸ்லீம், ஹிந்துக்களுடன் நெருங்கிப் பழகிய பேறு பெற்றவன் என்கிற பார்வையிலும், இப்புகைப்படங்களின், அவற்றின் பின்புலங்களின் நம்பகத் தன்மையைக் கருதியும் – நம் தமிழர்களுக்கு (முக்கியமாக, ‘நாம் தமிழர்’ அரைகுறைகளுக்கு) இது பற்றியெல்லாம் இன்னொரு பக்க உண்மையைக் கொடுக்கவேண்டும் என்கிற உந்துததலாலும் – கொடுத்திருக்கிறேன்.
… இருந்தாலும், ஒவ்வொரு முறை ஜனவரி 19 வரும்போதும், அதுவும் மாலை வேளைகளில் காகங்கள் தம் கூடுகளுக்குத் திரும்பும் சமயம், எனக்குக் கொஞ்சம் துக்கம்தான். என்ன செய்வது.
இந்த 2014 வருடத்திலும், தவறாமல் இன்னொரு மார்ச் 23 வரப்போவதை நினைத்தாலே…
ஹ்ம்ம்… இப்போது, மாலை மணி ஐந்தேமுக்கால். ஒரு நீள நடை செல்லப் போகிறேன்… Life, I berate thee! :-(
January 20, 2014 at 07:09
காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் மாஸ் கிரேவ்கள் பல கிடைத்திருப்பது உண்மை. எல்லாவிதமான உயிர்ப்பலிகளும் (முஸ்லிம்கள், பண்டிட்கள், இராணுவத்தினர் என்ற மூன்று தரப்பிலும்) நிறுத்தப்பட வேண்டுமானால் காஷ்மீருக்கு சதந்திரம் கொடுப்பதே முதல்படியாக இருக்க முடியும். அப்போது நமக்கும் (=ரெஸ்ட் ஆஃப் இந்தியா) காஷ்மீரிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
—>>> அய்யா சரவணன், இம்மாதிரி ‘மாஸ் க்ரேவ்கள்’ பற்றிய செய்திகளில் பல மிகையோதிமிகைப் படுத்தப்பட்டவை.
எந்த உயிரும் (மனித உயிர் உட்பட) பலி கொடுக்கப் படுவது (உண்ணுவதற்காகவே இருந்தாலும் கூட) கொஞ்சம் சோகம் தான். ஆனால், பச்சிளம் குழந்தைகளைக் கொல்வது யாராக இருந்தாலும் அவர்கள் அழித்தொழிக்கப் படவேண்டியவர்களே.
கஷ்மீரி பண்டிதர்கள் ஆயுதம் தாங்கிகள் இல்லை. அவர்கள் சாதாரணக் குடிமக்கள், அவ்வளவே. இவர்கள் அவசியம் பாதுகாக்கப் படவேண்டும்.
ஆனால் அற்பக் கொலைவெறியர்களை – இஸ்லாமிய(!) தீவிரவாதிகள்(!!) என்றழைப்பதை நான் வெறுக்கிறேன். இவர்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்வது / கொண்டாடுவது இஸ்லாமுக்கு இழைக்கப் படும் இழுக்கு என்று கருதுகிறேன்.
இவர்கள் ஒழிக்கப் படுவது சரியே. இவர்களது உடலிலுள்ள அணுக்கள் எல்லாம், மறுசுழற்சி செய்யப் படவேண்டியவையே.
கஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கப் படுவது என்றெல்லாம் பின்னர் பேசலாம். ‘இஸ்லாமிய’ நாடுகளாகத் தங்களை வரித்துக் கொள்ளும் நாடுகளுக்கும், அடிப்படை இஸ்லாமுக்கும் ஒரு விதமான தொடர்புமில்லை, இருக்கமுடியாது என்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொண்டபின்னர் தான், அதனைப் பேச முடியும்…
__ரா.
January 20, 2014 at 13:02
>>>>> ‘இஸ்லாமிய’ நாடுகளாகத் தங்களை வரித்துக் கொள்ளும் நாடுகளுக்கும், அடிப்படை இஸ்லாமுக்கும் ஒரு விதமான தொடர்புமில்லை, இருக்கமுடியாது <<<<
அப்படி ஏதாவது தொடர்பு இருப்பதாக நானும் சொல்லவில்லையே? இஸ்லாமிய நாடுகள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்; ஜம்மு- காஷ்மீருக்கு நாம் சுதந்திரம் கொடுப்போம்.
—–>>>> அய்யா சரவணன், நீங்கள் அப்படிச் சொல்லவில்லைதான். ஆனால், அப்படி தப்பித்தவறி ‘சு-தந்திரம்’ என்று ஒன்று அங்கு வந்தால், அது மதஅடிப்பொடி அரைகுறைகளின் அட்டூழியமாகத்ததான் இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பினேன், அவ்வளவுதான்.
தேவை மெனெக்கெட்டு, ஒரு பூமியை அரைகுறை அற்பர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது சரியா என்ன?
இதன்பின்புலத்தில், இருக்கும் முஸ்லீம்களில் பெரும்பாலோர் சமாதான, சாதாரண, அ-மத வாழ்க்கையை விரும்புவர்கள்தான் என்பதையும் நாம் பார்க்கவேண்டும் அல்லவா?
திமுக திக அரைகுறை முட்டாட்களால் தமிழகம் பிரிக்கப் பட்டிருந்தால், ‘விடு தலை’ பெற்றிருந்தால் என்ன ஆயிருக்கும் என நினைத்துப் பாருங்கள்! நம் நாட்டையே துப்புரவாக ஒழித்து விட்டிருப்பார்கள் இதற்குள். இந்த நம்மூர் அரைகுறைகளை விட வீரியமும், விஷமும் மிக்கவர்கள் லஷ்கர்களும், முல்லா சாம்ராஜ்யவாதிகளுமல்லவா? பின்னவர்கள் தம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை அல்லவா?
__ரா.
January 20, 2014 at 11:32
ஒரு நல்ல எழுத்தாளருக்கு லட்சணம் என்ன சார்?
குஜராத் கலவரம் பற்றி மட்டுமே பேச வேண்டும்….. சீக்கியர் படுகொலை பற்றி மூச்சுவிடக்கூடாது….
வங்க தேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதை ஆதரிக்க வேண்டும்….. அவர்களால் பாதிக்கப்படும் அசாமிய போரோக்களுக்கு காட்டுமிராண்டி பட்டம் சூட்ட வேண்டும்…..
காஷ்மீர் விடுதலை பற்றிப்பேச வேண்டும்….. இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இன ஒழிப்பு செய்யப்பட்டு ,இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையும் காஷ்மீரி பண்டிட்டுகளை கண்டு கொள்ளவே கூடாது…. எவானவது அவர்களை ஆதரித்தாலும் அவனுக்கு ஹிந்து வெறியன் என்ற பட்டம் சூட்ட வேண்டும்…..
இந்த அடிப்படை விதி கூட தெரியாத நீங்களெல்லாம் என்ன அறிவு ஜீவியோ , என்ன எழுத்தாளரோ?
யு. ஆர் அனந்த மூர்த்தி போன்றவர்களை ஆதர்சமாக வைத்துக்கொள்ளுங்கள்…. குறைந்த பட்சம் தமிழக அறிவுஜீவிகளான ஞாநி , மனுஷ்ய புத்திரன் போன்றோரைப்பார்த்தாவது பிழைக்கும் வழியை கற்றுக்கொள்ளுங்கள்….
அல்லது பூவண்ணன் பாணியில் , குஜராத்தில் 40 சதவீதம் பேர் பல் விளக்குவதில்லை [ தமிழகத்தில் 38 சதவீதம் ] , 25 சதவீதம் பேர் ” கால் ” கழுவுவதில்லை [ கர்னாடகத்தில் 23 சதவீதம் ] போன்ற ”அரிய ” புள்ளிவிவரங்களை அள்ளி விட கற்றுக்கொள்ளுங்கள்….
இல்லையேல் நீங்கள் தேறுவது ரொம்பக்கடினம்……
January 20, 2014 at 12:18
அய்யய்யோ சான்றோன்! :-(
நான் ஒரு அறிவிஜீவியோ, தமிழ் எழுத்தாளனோ அல்லன்! படித்துப் படித்துச் சொல்லியும், இப்படிப்பட்ட அபாண்டம் தகுமா? அறிவு கொஞ்சமாக இருக்கலாமென சந்தேகாஸ்பதமான முறையில் நடமாடும் ஒருவன் அறிவுஜீவியாகிவிடமுடியுமா? தமிழில் கண்டமேனிக்கும் எழுதுவதால் மட்டுமே ஒருவன் தமிழ் எழுத்தாளனாகி விடமுடியுமா? (தயவு செய்து படிக்கவும்: நான் யாரில்லை என்று: https://othisaivu.wordpress.com/page-1/page-9/)
(எனக்கு) ஒரு திருத்தம்/விளக்கம்: ஞாநி அவர்களின் போக்கும் பார்வையும் எனக்குப் பல சமயங்களில் ஒத்து வருவதில்லைதான்; அதற்காக அவரை கடைந்தெடுத்த அயோக்கியர்களுடன் ஒரே மூச்சில் பேசமாட்டேன். ஞாநி அவர்களுக்கு காமாலைக்கண்ண பார்வையுண்டு – ஆனால் அவர் நிச்சயம் மனுஷ்யபுத்திரன் போன்றவர் அல்லர், ‘பிழைக்கும் வழியைத் தேடுபவர்’ அல்லர் – என்பதைத் தரவுகளுடன் உணர்ந்திருக்கிறேன். (ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன்)
ஹ்ம்ம்ம்… மற்ற படி, உங்கள் கிண்டல், யு ஆர் அனந்தமூர்த்தி என்பதெல்லாம் தகாது. ரென் அண்ட் மார்ட்டின் (பார்க்க: https://othisaivu.wordpress.com/2013/11/27/post-292/#comment-1420) படி ‘யு ஆர் ராமசாமி’ என்றுதான் இருந்திருக்கவேண்டுமல்லவா?
அன்புடன்:
பேரரிஞ்சர் தம்பீ
January 20, 2014 at 14:46
இலங்கை தமிழர்கள்,டெல்லியில்,சீக்கியர்கள்,குஜராத்தில் இஸ்லாமியர்கள்,காஷ்மீரில் பண்டிட்கள்,நாகலாந்தில் குகிகள்,நாகாக்கள்,மீய்தீ இனத்தவர்கள் யாருடைய அழிவு படுகொலைகள்,துரத்தபடுதல்கள் மிகவும் சோகமானது என்று மதிப்பெண் போட்டு பார்க்கும் வழக்கம் நான் விரும்பாத ஒன்று
ஆனால் ஒரு செயலில் தொடர்புடைய,தொடர்புடையதாக நம்பப்படுகிற யாசின் மாலிக்(எந்த நீதிமன்றமும் பண்டிட்களை கொன்ற குற்றவாளி என்று தண்டனை தரவில்லை) மேல் வரும் கோவம்,அவரை பேச அழைத்தவர்கள் மேல் வரும் வெறி அதே செயலை செய்ததாக நம்பப்படுகிற இன்னொருவர் மேல் வராமல் அவரை வராது வந்த மாமணி,மனிதருள் மாணிக்கம் என்று எண்ண செய்வது எது.
http://www.rediff.com/news/report/kashmiri-pandits-399-killed-since-1989/20110620.htm
The organisation, Kashmiri Pandit Sangarsh Samiti, told medisapersons that ‘as per our data based on a survey conducted by our organisation in 2008 and 2009 to find out the exact number of Pandits killed, it was 399.’
“Our survey revealed that 302 Pandits were killed in 1990 alone”, Sanjay Tickoo, president of the samiti, said.
He said the survey was ‘continuing and the figure may reach 650 on completion’.
The government figure shows that only 219 Pandits were killed while thousands of families had migrated out of the Valley since early 1990 when militancy erupted in Kashmir.
இருவத்திரண்டு ஆண்டுகளில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி காஷ்மீரி பண்டிட்களின் எண்ணிக்கை (அரசு சொல்லும் எண்ணிக்கை அல்ல,காஷ்மீரி பண்டிட்களுக்காக போராடும் காஷ்மீரி பண்டிட் குழு தரும் எண்ணிக்கை )ஒரே நாளில் 2002 குஜராத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களை விட குறைவு தான்.
காஷ்மீரி பண்டிட்கள் இல்லாத அமைச்சரவை,சட்டசபை சென்ற தேர்தல் வரை கிடையாது. நாட்டின் பிரதமர் பதவி,ராணுவ உயர் தலைமை பதவி,உயர்நீதிமன்ற நீதிபதிகள்,கோவா மத்ய பிரதேசம் என்று மற்ற மாநிலங்களில் முதல் அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள்,தனியார் துறை முதலாளிகள் என்று அவர்கள் வகிக்காத பதவி கிடையாது.இன்றும் பெரிய பதவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்களை என்னால் பட்டியல் இட முடியும்.
கடந்த இருவது வருடங்களாக குஜராத்தில் மக்கள் தொகையில் பத்து சதவீதம் இஸ்லாமியர்களாக இருந்தாலும் போட்டியிட கூட ஒரு இடம் தராத கட்சியை,அதன் தலைவரை புகழ்வது யாசீன் மாலிக் பேச அழைக்கபடுவதை விட எந்த விதத்தில் சரியான செயல்.
மத்திய உள்துறை மந்திரியாக இருந்த முப்டியை குறைகூறும் போது ரகசியமாக ஆளுநர் ஆட்சியில் இருந்த மாநிலத்தில் பா ஜ க வின் வற்புறுத்தலால்(வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த மற்றொரு கட்சியான கம்முநிச்ட்களின் எதிர்ப்பையும் மீறி) காஷ்மீர் ஆளுனாராக இருந்த ஜக்மொஹனை நைச்சியமாக விட்டு விடுவது சரியா.மக்களை காப்பாற்ற வேண்டிய ,ராணுவம்,காவல்துறை அனைத்தையும் இயக்கும் நிலையில் இருந்தவரை பற்றி முணுமுணுக்க கூட மறுப்பது ஞாயமா
January 20, 2014 at 15:30
அய்யா பூவண்ணன் – நானும் உங்களுக்குச் சுட்டிகளைத் தர முடியும். ஆனால் சுட்டிகள் காட்டும் காட்சிகளின் நம்பகத் தன்மை என்பது ஸன் டீவி, கலைஞர் டீவி, ஜெயா டீவி போன்றவைகளின் அற்பமான நம்பகத் தன்மை போன்றது தான். ரீடிஃப் தளம் என்பதிலும் அரசியல் உள்ளது. அதற்கும் ஸெக்யூலரிஸ வியாதி பிடித்திருக்கிறது.
நானும் ஏன் அந்த ரீடிஃப் தளச் சுட்டியைக் கொடுத்தேன் (அந்த நந்திமார்க் படுகொலைகள் பற்றியது) என்றால், அந்த எண்ணிக்கை மிகக் குறைந்த பட்ச எண்ணிக்கையாக இருந்ததினால்தான். என் ராஜீவ் சொற்படி 23 பேர் மட்டுமே சுடப் பட்டார்கள் என்பது சரியேயல்ல. அவன் சொற்படி அது 80க்கு மேல். வனாந்தரங்களில் இழுத்துப் போயும் சுட்டிருக்கிறார்கள். ஷோபியன் வட்டார தாசில்தாரிடம் இருந்த பழைய எண்ணிக்கையை காவல்துறையினர் பெற்று, பின்னர் ஒரே இடத்தில் சுடப்பட்டு இறந்தவர்களின் பிணங்களில் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு 23 என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கிறார்கள். முஃப்தி ராஜ்ஜியத்தில் எப்படி அதிகப்படி எண்ணிக்கைகளைக் காட்டமுடியும்? இப்படி ஒவ்வொரு முறையும் குறைவாக வெளியிடப் படும் எண்ணிக்கைகள் காட்டும் காட்சிகள் என்பது வேறு.
நீங்கள் சுட்டிகளை மட்டும் சுட்டுகிறீர்கள். நான் நேரில் பெற்ற, சம்பவத்துக்கு மிகவும் தொடர்பான ஆளின் பார்வையைக் கொடுக்கிறேன். ஆனால், குறைந்தபட்ச எண்ணிக்கைகளைக் கொடுக்கும் தளங்களைச் சுட்டுகிறேன் – as a matter of abundant precaution. உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
மற்றபடி, குஜராத்தில் எவ்வளவு கலவர ரௌடிகள் (மோதியின்) போலீஸால் சுட்டுக் கொல்லப் பட்டனர் – அதில் எப்படி ஹிந்துக்கள் அதிகம் முஸ்லீம்களை விட – என்று பார்த்தாலே, உங்களுக்கு உண்மை புரியும்.
கடந்த சில வருடங்களில், எவ்வளவு குஜராத்தி முஸ்லீம்கள், பாஜக சார்பில் போட்டியிட்டு அரசியல் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் எனவும் தயவு செய்து சுட்டி தேடல் செய்து பார்க்கவும்… பின்னர் சாவகாசமாக, “கடந்த இருவது வருடங்களாக குஜராத்தில் மக்கள் தொகையில் பத்து சதவீதம் இஸ்லாமியர்களாக இருந்தாலும் போட்டியிட கூட ஒரு இடம் தராத கட்சியை,அதன் தலைவரை புகழ்வது” என்ற உங்கள் வாக்கியத்தை நிபந்தனையற்று வாபஸ் பெற்றுக் கொள்ளலாம், சரியா?
அலுப்புடன்:
__ரா.
அந்த ‘சான்றோன்’ வரட்டும் அடுத்த முறை, சும்மா இருந்த நண்பர் பூவண்ணனைக் கிளப்பி விட்டுவிட்டார். இது ஞாயமா? ;-)
January 21, 2014 at 09:49
சார் நீங்க என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள்.மூன்றாம் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி எனும் ரெஜிமெண்டில் மூன்று ஆண்டுகள் நேரடி பணி,பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்தவன் நான்.இன்றும் கௌல்,மட்டூ,பத்தா,என்று பல காஷ்மீர பண்டிட்கள் என் நெருங்கிய நண்பர்கள்.ரெஜிமெண்டில் பாதிக்கும் அதிகமாக இஸ்லாமியர்கள்.லடாக் பழங்குடியினர்,ஜம்மு சீக்கியர்,ஹிந்துக்கள் மீதி.
அடுத்த மாதம் ஸ்ரீநகர் செல்கிறேன்.உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் என்னுடன் வரலாம்.காஷ்மீரின் முக்கால்வாசி கிராமங்களில் இருந்து வந்தவர்களோடு நேரடியாக பழகியவன் நான்.காஷ்மீரி முஸ்லிம்களுக்குள் இருக்கும் சாதி பிளவுகள்,சாதி சண்டைகள்,ஜம்மு ஹிந்துக்களின் காஷ்மீர பண்டிட் மீதான வெறுப்பு(ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 35 சதவீதத்திற்கு அருகில் இந்துக்கள்),அவர்களுக்குள் இருக்கும் பிரிவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தவன் நான்.
குஜராத்தில் இருந்து ராணுவத்தில் இருப்பவர்களை விட சில மடங்கு காஷ்மீரில் இருந்து ராணுவத்தில் இருப்பவர்கள் என்பதும் ஒரு கொசுறு செய்தி.
குஜராத்தில் பா ஜ க சார்பாக லோக்சபா ,ராஜ்யசபா,சட்டசபை தேர்தல்களில் நிறுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் பட்டியலை கொடுங்களேன் சார்.கூகுளே தோல்வி அடைந்து விட்டது.
January 21, 2014 at 12:57
அய்யா பூவண்ணன்:
நீங்கள் நமது இந்திய ராணுவத்தில் பல விதங்களில், பல இடங்களில் பணி புரிந்து வந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு உங்கள் மீது மிகவும் அபிமானம் தரும் விஷயமே. உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, மேலதிகச் செய்திகளைப் பெற முடிந்ததில் சந்தோஷமே… சரியா?
நீங்கள் கேட்கிறீர்கள்: “குஜராத்தில் பா ஜ க சார்பாக லோக்சபா ,ராஜ்யசபா,சட்டசபை தேர்தல்களில் நிறுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் பட்டியலை கொடுங்களேன் சார்.கூகுளே தோல்வி அடைந்து விட்டது.”
சரி. ஆனால் நான் சொன்னது: “கடந்த சில வருடங்களில், எவ்வளவு குஜராத்தி முஸ்லீம்கள், பாஜக சார்பில் போட்டியிட்டு அரசியல் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் எனவும் தயவு செய்து சுட்டி தேடல் செய்து பார்க்கவும்…”
நான் லோக்,ராஜ்ய, சட்ட சபையென்று சொல்லவில்லை. நான் உள்ளாட்சி அரசமைப்புகளைச் சொன்னேன். அரசியல் அதிகாரம் என்பதை மேற்கண்ட மூன்று சபைகளுக்குள்ளே சுருக்கி விடமுடியாதல்லவா?
மேலும், உங்கள் பாணியில், சில , சுட்டிகளைக் கொடுக்கிறேன், படித்துத் துன்புற்று மேலும் சுட்டிகளை என் பக்கம் வீசவும்.
Gujarat’s BJP Muslims sell success stories (http://timesofindia.indiatimes.com/home/specials/assembly-elections-2013/rajasthan-assembly-elections/Gujarats-BJP-Muslims-sell-success-stories/articleshow/24717043.cms)
Why Muslims will gain more from Modi than Congress (http://www.firstpost.com/india/why-muslims-will-gain-more-from-modi-than-congress-1111333.html?utm_source=ref_article)
Why this Muslim-majority town in Gujarat voted for Narendra Modi’s BJP (http://www.ndtv.com/article/india/why-this-muslim-majority-town-in-gujarat-voted-for-narendra-modi-s-bjp-330383)
“But it is his partnership with the BJP that has delivered the richest returns. Yesterday, Mr Baghaad and 26 other Muslims won their seats in the corporation contesting for the BJP. Narendra Modi’s party will, for the first time, govern the local corporation in Salaya, a town where Muslims form 90 percent of the population.”
இப்போதைக்கு இவ்வளவு போதும்.
இணையத்தில் 90% கருத்துகள் மோதி அயோக்கியன் என்றுதான் சொன்கின்றன, ஆக நீ சொல்வது ஞாயமா எனக் கேட்காதீர்கள் தயவு செய்து…. சரியா…
January 21, 2014 at 12:21
புத்தி ஆசானே …புத்தி…….
திரு. ஞாநி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்….. ஃபேஸ்புக் , டி.வி. போன்றவற்றை தாங்கள் புறக்கணிப்பதால் , மேற்படியாரின் துவேஷம் நிரம்பிய உளறல்களை தவற விட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்……
அன்னார் சமீபத்தில் உதிர்த்த முத்து……
” காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க கட்சி….. பி.ஜே.பி யில் ஜனநாயகம் என்பதே கிடையாது ”
அதுவும் சமீபகாலமாக அவரது பிதற்றல்கள் அபத்தத்தின் உச்சத்தை எட்டியுள்ளன…வரும் பாராளுமன்றத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதையோ , திரு. மோதி அவர்கள் பிரதமர் ஆவதையோ தவிர்க்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் அவர் பைத்தியம் முற்றி பாயைப்பிராண்டும் நிலைக்கு வந்துவிட்டார்….
பாஜக மீதான துவேஷத்தில் கண்டபடிக்கு உளறிக்கொட்டுகிறார்…… மோதி அவர்களை கொலை செய்யவேண்டும் என்று பொது மேடையில் முழக்கமிட்ட சன் டி.வி வீரபாண்டியனுக்கு ஆதரவாக கடிதம் கொடுக்கிறார்….
பிழைக்கத்தெரியாதவன் எல்லாம் நேர்மையாளன் என்று நான் நினைக்கவில்லை…..ஒருவன் வாழ்க்கை முழுவதும் சில்லறைத்திருடனாகவே காலம் தள்ளுகிறான் …. இன்னொருவன் திருட்டு , கொள்ளை . தாதா , வட்டச்செயலாளர் , எம்.எல் ஏ , மந்திரி என்று முன்னேறிவிடுகிறான்….இதெல்லாம் அவனவன் திறமை மற்றும் தலையெழுத்து…….
பூவண்ணன் , 15 நாள் நாரயணசாமி , திக் விஜய சிங் போன்றோரெல்லாம் great entertainers….. என்ன ..அவர்கள் கருத்துக்களில் logic மற்றும் reasoning போன்றவற்றை எதிர்பார்க்ககூடாது ….அவ்வளவுதான்…….
January 21, 2014 at 13:13
ஞாநி அவர்கள் காமாலைக் கண்ணர் என்றுதான் நினக்கிறேன். அவர் எதைப் பார்த்தாலும் அதில் ஒரு சதியையும், ஜாதிவெறியையும், மதவெறியையும், அதிகாரவெறியையும், துஷ்பிரயோகங்களையும் தான் – அவற்றை மட்டும் தான் பார்ப்பார். பொதுமைப் படுத்துவார். உயர் தொழில் நுட்பம் என்றால் பிடிக்காது, அதன்மேல் ஒரு இனம் புரியாத வெறுப்பு, மனிதவுரிமை என்ற உரியடி உற்சவத்தில் உற்சாகமாகப் பங்கு பெறுபவர் – என்பதெல்லாம் என் நோக்கில் சரியே.
ஆனால், இதெல்லாம் அவருடைய எதிர்மறை குணாதிசியங்கள் என்று ஒதுக்கவேண்டும் என நினைக்கிறேன். அவருடைய இம்மாதிரி செயல்பாடுகளை — நம்மில் அனைவரிடமும் இருக்கும் பலவிதமான கோமாளித்தனங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டியவைதான் — என நினைக்கிறேன்.
அவர், துரோகம் செய்வதை, பணம் கையாடல் செய்வதை, அற்பத்தனங்களில் ஈடுபடுவதை, பொறாமைப் பொச்சரிப்பால் வேகுவதை, நெஞ்சாரப் பொய் சொல்வதையெல்லாம், கண்டமேனிக்கும் புளுகுவதையெல்லாம் எனக்குத் தெரிந்தவரை செய்யவில்லை.
நான் தொலைக்காட்சி, ஃபேஸ்புக் இழவுகளில் இல்லை – ஆக ஞாநி என்ன சொன்னார் என்றெல்லாம் எனக்குத் தெரியாதுதான் – இருந்தாலும், அவர் அந்த வீரபாண்டிய உளறல்களை ஆமோதித்தாலும், கூடங்குளத்தை எதிர்த்து கபடி ஆடினாலும் – அவையெல்லாம் அவருடைய பார்வைக் குறைவால், ஜுரவேக உளறல்களினால் ஏற்பட்டவை – என்றுதான் கருதுகிறேன்.
ஆகவேதான் சொல்கிறேன்: அவர் காமாலைக் கண்ணர்தான். ஆனால், அயோக்கியர் அல்லர். அதனால்தான் அவரை, மனுஷ்யபுத்திரன்களோடு ஒரே மூச்சில் சேர்த்திவைத்துப் பேசக்கூடாது என்றேன்.
ஆனால், சான்றோன், உங்களுடைய வருத்தத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பார்வையில் அவர் ஒரு அயோக்கியராகவே இருக்கலாம். என் பரிந்துரை: ஞாநி அவர்கள் பங்கு பெரும் (=பங்கி அடிக்கும்) காட்சிகளை ஏன் நீங்கள் பார்க்காமலிருக்கக் கூடாது? ஹ்ம்ம்??
January 22, 2014 at 00:32
மனிதவுரிமை என்ற உரியடி உற்சவத்தில் உற்சாகமாகப் பங்கு பெறுபவர்.//
:D :D :D :D LMAO…
January 22, 2014 at 13:56
அன்பின் பூவண்ணன் சார்,
\\ காஷ்மீரி முஸ்லிம்களுக்குள் இருக்கும் சாதி பிளவுகள்,சாதி சண்டைகள்,ஜம்மு ஹிந்துக்களின் காஷ்மீர பண்டிட் மீதான வெறுப்பு(ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 35 சதவீதத்திற்கு அருகில் இந்துக்கள் \\
குஜராத்தில் எத்தனை முஸல்மான் சட்டசபையில் உள்ளார் என்று கேட்டிருக்கிறீர்கள். பாண்டிச்சேரியில் ஒரு முஸல்மான் முக்யமந்த்ரியாக இருந்திருக்கிறார். மஹாராஷ்ட்ராவில் ஒரு முஸல்மான் முக்யமந்த்ரியாக இருந்திருக்கிறார். இன்னும் பல மாகாணங்களைப் பட்டியலிடலாம். ஜ.க மாகாணத்தில் ராஜா ஹரிசிங்க் அவர்களுக்குப் பிறகு ஒரு ஹிந்துவாவது முக்யமந்த்ரியாக முடிந்தது. ஜம்மு ப்ராந்த்யத்தைச் சார்ந்த முஃப்டி முஹம்மத் சையீத் விடுத்து இந்தப்பதவி 1947க்குப் பிறகு ஒரு கஷ்மீரி முஸல்மான் அல்லாது வேறுயாரிடமாவது சென்றிருக்கிறது?
லே பகுதிகளில் மிகப்பல ஹிந்துக்கடைகளைப் பார்க்கலாம். கர்கில் டௌன்ஷிப்பில் கூட ஒவ்வொரு பத்துக்கடைக்கு ஒரு கடை ஹிந்துவின் கடையாக இருக்கும். ஸ்ரீ நகர், பாராமுல்லா, சோபோர் — சர்தார்களுடைய கடைகளை விட்டு ஹிந்துக்கடைகளை பார்க்க முடியும்? க்ருஷ்ணா டாபா, நத்து டாபா என்று டாபா லிஸ்ட் போட வேண்டாம். பாராமுல்லாவின் லக்கி டாபா கூட எங்களுடைய பாபுலர் Eating place.
ம்…..அயாஸ் ரஸூல் நஸ்கி அவருடைய தந்தையாரான காலம் சென்ற மீர் குலாம் ரஸூல் நஸ்கி போன்று அருமையான மனித நேயமுள்ள கஷ்மீரிகளும் உண்டு தான். யாசீன் மலிக், கிலானி போன்று வெறுப்பரசியல் பிரிவினைவாத அரசியல் பேசும் பதர்களும் உண்டு தான்.
\\ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 35 சதவீதத்திற்கு அருகில் இந்துக்கள் \\
விபரம் தவறு என நினைக்கிறேன்.
ஜ.க விட்டு வெளியே வந்தாகி விட்டது. திரும்பப் போக நேறிடலாம். முழு மாகாணத்திலும் பரஸ்பரம் ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்துதல் என்பதற்குப் பதிலாக வெறுப்பு என்று பட்டியல் போட வேண்டுமானால் நீளும்.
ஜம்மு டோக்ரி ஹிந்துக்கள் கஷ்மீரி பண்டிட்டுகளை வெறுப்பதை சொல்லியுள்ளீர்கள். ஏன் தமிழகத்தில் என்ன வித்யாசம். தமிழகத்தில் எவ்வளவு பேரன்புடன் தெலுகு பேசுபவர்களை நாம் கொல்ட்டி என அழக்கிறோம். எம்.ஜி.ஆரை கருணாநிதி எப்படியெல்லாம் அழைத்துள்ளார். கர்நாடகா, கேரளம், ஆந்த்ரம் என அண்டை மாகாணத்தவர் அத்தனை பேருடன் நமக்கு எத்தனை ஒட்டுறவு. (அரசியல் ரீதியாக) . சினிமா இவர்களை இன்னமும் எப்படியோ கட்டிப்போட்டு வைத்துள்ளது.
மனதில் கைவைத்து சொல்லுங்கள். பார்ஸிகளை விட கஷ்மீரி பண்டிட்டுகள் நிலை மோசமாகத் தெரியவில்லை? தில்லி ஜம்மு பகுதிகளில் என்னுடைய பல கஷ்மீரி பண்டிட்டுகள் விவாஹங்களுக்கு சென்றிருக்கிறேன். பாதிக்கு மேல் மாற்று மாகாணத்தைச் சார்ந்தவர்களுடன் விவாஹம். ஜம்முவில் சற்றே பரவாயில்லை. தில்லியில் எந்த கஷ்மீரி குடும்பங்களிலும் இளைய தலைமுறை கஷ்மீரி பேசுவதில்லை. (நீ பேசும் தமிழ் என்ன யோக்யமா என கேழ்க்கலாம். தமிழ் என்று ஏதாவது பேசி/எழுதித் தொலைக்கிறேனே.) இவர்களுடைய பாஷை, உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் காலி. இவர்களுடைய அடையாளங்கள் இன்னமும் எத்தனை தலைமுறைக்குத் தாங்கும்……….. தெரியவில்லை.
பிரிவினை வாத வேர்கள் ஜம்மு ப்ராந்த்யத்திற்கும் பரவுகிறது என்பது கவலையளிக்கும் விஷயம். ஜபர்தஸ்தியாக மாறிவரும் டெமாக்ரஃபி. இருபது வருஷமுன்னர் ஜம்மு இப்போதைய ஜம்மு – எத்தனை வித்யாசம்?
இன்னம் சொச்சம் இந்தப்பகுதியுடன் ஒட்டுறவு இருக்கிறது. சர்வீஸும் சொச்சம் இருக்கிறது. வெளியே முற்றிலுமாய் வந்தால் பகிரவேண்டிய விஷயங்கள் கொள்ளை கொள்ளை.
\\ இலங்கை தமிழர்கள்,டெல்லியில்,சீக்கியர்கள்,குஜராத்தில் இஸ்லாமியர்கள்,காஷ்மீரில் பண்டிட்கள்,நாகலாந்தில் குகிகள்,நாகாக்கள்,மீய்தீ இனத்தவர்கள் யாருடைய அழிவு படுகொலைகள்,துரத்தபடுதல்கள் மிகவும் சோகமானது என்று மதிப்பெண் போட்டு பார்க்கும் வழக்கம் நான் விரும்பாத ஒன்று \\
அருமை. இந்த லிஸ்டில் குஜராத்தில் ஹிந்துக்கள் என்பதனையும் நான் சேர்ப்பேன். ஆக்ஷேபம்?
January 22, 2014 at 14:00
m…….Lucky dabha is musalmaan dabha
January 19, 2019 at 16:21
[…] மேலும் படிக்க. […]
January 21, 2019 at 19:06
19/1/1990ல் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றியும், ஆளுனர் ஜக்மோகன் பற்றியும் அப்போது இருந்த ஜ&கா அரசு பற்றியும் அறிய விரும்புகிறேன் சார். நம்பகமான சுட்டி கொடுத்தால் நலம்.
January 22, 2019 at 11:25
ஐயா – ‘நம் நிலவில் இரத்தக்கட்டிகள் இருக்கின்றன’ (!) எனும் ராஹுல் பண்டித அவர்களின் புத்தகத்தைப் பரிந்துரைப்பேன்.
https://swarajyamag.com/reviews/book-review-our-moon-has-blood-clots
ப்ரவீண் ஸ்வாமி அவர்களின் இந்தப் புத்தகமும்… https://books.google.co.in/books?id=z2l9AgAAQBAJ&pg=PA157&redir_esc=y#v=onepage&q&f=false
விக்கிபீடியப் பக்கமும் ஒரளவுக்குச் சரியாக இருக்கிறது – நம் தமிழிலக்கியவாதிகள் இன்னமும் அதனைத் தொடவில்லை போலும்!
https://en.wikipedia.org/wiki/Exodus_of_Kashmiri_Hindus
January 23, 2019 at 14:38
போகிற போக்கில் பூவண்ணனை கிளப்பி விட்டு விட்டீர்கள். அவர் பாட்டுக்கு பி.ஏ.கி யுடன் ஒன்றி இருக்கட்டும்
August 5, 2019 at 21:17
[…] …இப்படியெல்லாம் ஸென்டிமென்டலாக எழுதுவது எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும் – பாவி இளைஞன் ராஜீவ்குமார், இன்றுமட்டும் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பான் என்ற கையறுநிலை நினைவைத் தவிர்க்க முடியவில்லை. :-( [இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்க…] […]