எஸ்ராமகிருஷ்ணம் தனித்துவம் முழிபெயர்ப்பம்
July 30, 2021
நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!”
உண்ஂமைதான். ஏனெனில் எஸ்ரா அவர்கள் ‘வெறும்’ மோசமில்லை. அவர் படுமோசம். பிற அலக்கியங்கள் வெறும் மோசம் மட்டுமே. நன்றி.
இப்படிப்பட்ட படுகேவலமான ஆட்கள் தமிழலக்கியத்துடன் ஊடாடுவதற்கும் பரிசில் பெறுவதற்கும் கொண்டாடப் படுவதற்கும் நாம் அசிங்கவுணர்ச்சியில் வேகவேண்டும். வெட்கப் பட்டு நாக்கை பிடுங்கிக் கொள்ளவேண்டும்.
நம் நிதர்சன நிலைமை இப்படியானாலும் நம் தமிழலக்கியவாதிகளை நானும் தான் ஆராதிக்கிறேன்.
ஏனெனில் அவர்கள் இப்படி உதாசீனமாக அலக்கியம் படைப்பதை விடுத்து, கையில் ஏகே47 பிடித்து நம்மைக் கொலை செய்ய முற்பட்டால் அது முதலுக்கே மோசமாகி இன்னமும் படுகோரமாகவும் ரத்தக்களறியுமாகியும் விடுமே!
ஆகவே!
சரி.
உங்கள் எஸ்ரா, ‘தனித்துவம்’ எனும் வார்த்தையை உபயோகிக்காமல் ஒரு தனித்துவமான கட்டுரைகூட எழுதுவதில்லை என்பதைத் தனித்துவமான நீங்கள் அறிவீர்கள். அது ஒருமாதிரி தனித்துவ நிதர்சன உண்மை. இப்போது இன்னொரு குட்டிச்சுவற்றோவியத் தனித்துவக் குவியலைத் தரவாகக் கொடுக்கிறேன்.
தண்டக் கருமாந்திரத் தன்னார்வ சுற்றுச்சூழலியலாளர்களுக்கு கடற்கரையிலிருந்து 3கிமீ தூரத்திலேயே அவ்வளவு கரிசனம்… சுவர்களை மாசுபடுத்தவேண்டும் என அப்படியொரு ஆர்வம்!
“தனித்துவம்!”
மேற்கண்டவைதாம், எஸ்ரா கைவண்ணம் அதில் இருப்பதைப் பறைசாற்றும் தனித்துவமான முழிபெயர்ப்புகள்.
நன்றி.
மேலும் இன்றில்லாவிட்டால் நாளை, உங்கள் தனித்துவ எஸ்ரா, கழக உடன்பிறப்பு அரைகுறையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, பதவி கொடுத்து அழகு பார்க்கப்படமாட்டாரா என்ன?
மேற்கண்ட கடையின் பெயரை எப்படி தனித்துவ எஸ்ராமகிருஷ்ணம் செய்யப்போகிறார்களோ என்பதை நினைத்தால் கதிகலங்குகிறது…
:-(
August 1, 2021 at 07:19
இன்னா ஷோக்கா பேத்திர்க்கான் பாத்தீங்ளா ஸார் நம்பாளு? அங்கதான் நிக்கிது தெராவிடம். வேற எங்கயாவ்து இங்லீஸ பார்ட் பார்ட்டா பிர்ச்சி லோக்கல் பாஷைல இப்டி பொள்ந்து கட்றானுவளா, கடிய்வே கட்யாது.
இத்தெல்லாம் நம்மோ தலீவரு பேமிலி பர்ம்பரயா டமிள வச்சி செஞ்சுனு வர்றதால நட்க்குது, இல்லாங்காட்டி டமிளோட ரேஞ்சு இவ்ளோ ரீச் ஆய்ட்ருக்காது.
நம்பொ நாலேஜ சேலஞ் பன்றாமேரி கேள்வி ஒன்னு கேட்ருக்கீங்கோ, என்க்கே அதுக்கு ஆன்ஸர் தெர்யும், இர்ந்தாலும் கச்சிக்கார பொரபசர் ஒர்த்தர்ட வெரிஃபை பன்னிகினேன், நான் நென்ச்சதேதான் சொன்னாப்ல. ‘ஒளிச்செறிவு உடற்பயிற்சி ஓவிய அறை’ எப்டி மாஸா சொன்னமா?