S21 – சில குறிப்புகள்
May 11, 2021
சில வாரங்கள் முன்னர், ஒரு இளம் இடதுசாரி இளைஞர் (தப்பிக்க முயன்றுகொண்டிருப்பவர்) மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, இந்த ஒத்திசைவிலிருந்து நிறைய(!) கற்றுக்கொண்டு(!!) விட்டதாகவும் அதற்குக் கைமாறாக ஏதாவது செய்தேயாக வேண்டிய விருப்பத்தையும் தெரிவித்தார்.
எனக்கு ஆச்சரியம் + அதற்கு மேலாகப் படு அதிர்ச்சி. அரசல்புரசலாக ஓரிருவரிடம் இப்படிக் கேள்விப்பட்டிருந்தாலும், ஏதோ அவர்களுக்கு மனப்பிறழ்வு என விட்டுவிட்டேன்.
இருந்தாலும், எனக்குத் திகில் வந்துவிட்டது. தேவையற்ற சமூகப் பொறுப்புணர்ச்சியெல்லாம், அதன் பொறுக்கியுறவுமுறையான அரசியல்சரித்தனமெல்லாம், இம்மாதிரி விஷயங்களால் எனக்கு வந்துவிட்டால், என்ன செய்வது சொல்லுங்கள்?
ஆகவே:
ஒன்றும் வேண்டாம், இதெல்லாம் தேவையில்லை, எனக்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கிறது, தேவைக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து நேர்மையாகச் சம்பாதித்துக்கொள்ளும் திறமையுமிருக்கிறது, லூஸ்லவுடுங்கள் என்றேன்; அவர் தொடர்ந்து கழுத்தை அறுத்ததால்… உங்களுக்கு கை நமநமவென்று இருந்தால், ஏதாவது பள்ளிக்கு அல்லது மருத்துவமனைக்கு அல்லது, அந்த ஜொலிக்கும் நிறுவனமான ஸேவாபாரதிக்கு நேரடியாகவே கொடுத்துவிடுங்கள்… அல்லது ஸ்வராஜ்யா, மானுஷி போன்ற நிறுவனங்களுக்கு நிதி அளியுங்கள்…
விருப்பமிருந்தால் – நான் ஸப்ஸ்டேக் போன்ற தளங்களில் ஏதாவது ந்யூஸ்லெட்டர் / புத்தகப்பரிந்துரை(!) என ஆரம்பித்தால் அதற்குப் பணம்கொடுத்து ஸப்ஸ்க்ரைப் செய்யுங்கள். ஆகவே, உங்களிடம் இருந்து நான் எதையும் இப்போது எதிர்பார்க்கவில்லை; தேவையுமில்லை. நன்றி.
இல்லை ஸார், நான் உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் உங்களுக்கு விருப்பப் பட்ட அமைப்புக்குக் கொடுத்துவிடுங்கள்.
ஆக, கடைசியாகச் சொன்னேன்; வேண்டாம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பெரியாருக்கு திராவிடத்தனப் பகுத்தறிவுடன் உடைப்பது, பின்னர் அதன் மூலமாக எதிரொளியில் மினுக்கிக் கொள்வது எனக்கு ஒத்துவராது. நன்றி. உங்கள் நிதியே வேண்டாம். ஆளை விடுங்கள்.மிக்க நன்றி.
—-
முட்டாள் இளைஞன்.
ஆகவே. அடுத்த நாள் ஒரு ஸாம்ஸங் கேலக்ஸி ஃபோன் (“ற்றொம்ப அட்வான்ஸ்ட், ற்றொம்ப யூஸ்ஃபுல்லாக இர்க்கும் ஸார்! சிறு திரைப்படங்கள் கூட எடுக்கலாம்!!” ) எஸ்21 அல்ட்ரா புல்ட்ரா எழவு ஒன்றை எனக்காகவென்று வாங்கியிருப்பதாகவும் அதனை நேரில் வந்து கொடுப்பதாகவும் சொன்னான்! இதுதான் அந்த மாடல் என நினைக்கிறேன். :-(
எனக்கு விக்கித்து விட்டது. வெறுப்பும்.
டேய். எனக்கு இம்மாதிரி விஷயங்களை உபயோகிக்க விருப்பமுமில்லை… ஆவலும் இல்லை. நீ செய்வது பைத்தியக்காரத்தனம். நான் வாங்கிக்கொள்ளமாட்டேன்.
“ப்ளீஸ்.”
பதிலுக்கு, ஐந்து பத்தி மின்னஞ்சல் அனுப்பினேன்.
எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளவே மாட்டேன் என அலையும் வெறிபிடித்த இளம் அன்பருக்கு,
1. உங்கள் எஸ்21 எழவு எனக்கு வேண்டாம். இம்மாதிரி இலவசங்கள் எனக்கு ஒத்துவரமாட்டா.
2. நீங்கள் வந்து பார்க்கவும் வேண்டாம். உங்கள் இடதுசாரி சீனாக்கார கோவிட் வைரஸ் பிரச்சினையையே மறந்துவிட்டீர்களா? முடிந்தால் பாரதத்தின் தயவில் நாம் உயிருடன் இருந்தால், 2022 அல்லது 2023ல் பார்க்கலாம்.
3. நீங்கள் ஒரு மசுத்தையும் கொடுக்காமல் இருந்தாலுமேகூட, இப்போதைக்குத் தொடர்ந்து (எனக்கு நேரவாய்ப்பு இருக்கும் போதெல்லாம்) எழுதத்தான் போகிறேன்; அவற்றைப் படிப்பதும் படிக்காமல் இருப்பதும் உங்கள் இஷ்டம்.
4. எனக்கு ஏதாவது கப்பம் கட்டியே ஆகவேண்டும் என்றால்… எஸ்21 எஸ்21 எனக் குதிக்கிறீர்களே, அதே எஸ்21 குறித்த ஒரு கம்யூனிஸ அயோக்கிய விஷயம், இடதுசாரியான உங்களுக்குத் தெரியவேண்டும். இடதுசாரிகளின் நீண்டகால பங்களிப்பு என்பது இம்மாதிரியான குரூரக் கொலைகள் தாம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே: உங்கள் போல்பாட், அறச்சீற்றத்துடன் கம்போடியாவில் செய்த ஸோஷலிஸ அட்டூழியம் பற்றிப் படித்து, உடனடியாக ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுதி அனுப்பவேண்டும்.
5. கைமாறு வெளக்குமாறு கைமாற்று எல்லாம் பெரிய விஷயங்கள் – தேவையுமில்லை – ஆனால் நீங்கள் ஒன்று செய்யலாம்; நான்கைந்து இளைஞர்களைப் பிடித்து இடதுசாரி, மேலும் திராவிடத் தத்துவங்களின்(!) அற்பத்தனத்தைப் பற்றிப் படிப்பிக்கலாம். இதனைச் செய்தாலே பெரிய விஷயம். உங்கள் ஜன்மம் போர்க்கால ரீதியில் சாபல்யமாகிவிடும்.
வாழ்த்துகள்; நன்றி.
__ரா.
-0-0-0-0-0-
அவர் இதுவரை (ஒருவாரம் ஆகிவிட்டது) எனக்கு ஒன்றும் அனுப்பவில்லை; புண்பட்டிருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. எப்படியும் நம் தங்கத் தமிழகத்தில் புண்பட்டே தீருவேன் எனப் பலர் அலைகின்றனர்; இப்போது +1. அவ்ளொதான்.
ஆனால் எஸ்21 குறித்த குறுங்குறிப்புகள் (அதைப் பற்றிய மனதைப் பிழியும் சோகத்தை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றின் வழியாக) கீழே:
கம்யூனிஸத்தின் எஸ்21
1970 களில் போல் பாட் எனும் கொடுங்கோல அராஜக (ஆகவே ஒரு சாதாரண ஸோஷலிஸ்ட்-கம்யூனிஸ்ட்) தலைவர் சீனர்களின் உபயத்துடனும் உருவாகி வந்தார்.
அவர் தலைமை வகித்துப் பவனிவந்த ‘சிவப்பு கெமர்’ கெமர் ரூஷ்/ழ் Khmer Rouge – எனும் கம்யூனிஸ அராஜக அமைப்பால்…
…லட்சக் கணக்கான கம்போடியர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலுமிடப் பட்டது, கடந்த இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவுகளில் ஒன்று.
இந்தப் புத்தகத்தில் – கம்பூசியா/கம்போடியாவின் உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான டேவிட் சாண்ட்லர், கெமர் ரூழ் நிகழ்வை அதன் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான – அதன் தலை நகரான ஃப்னோம் ஃபென்னுக்கு வெளியே இருந்த ரகசிய சிறைச்சாலை ‘எஸ் -21’ என்ற பெயரால் சங்கேதக்குறியீடு இடப் பட்ட சித்திரவதைக்கொலை முகாம் மூலம் ஆராய்கிறார்.
…ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூட வளாகமாக இருந்த அது – கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஒரு ‘விசாரணை’ மையமாக உருமாறியது.
அங்கு 14,000 க்கும் மேற்பட்ட ‘புரட்சியின் எதிரிகள்’ விசாரிக்கப்பட்டு, அதாவது சித்திரவதை செய்யப்பட்டு, புரட்சிகர குற்றங்களை ஒப்புக் கொள்ளும்படிக்குச் செய்யப்பட்டனர்.
முடிவில், அதிக பட்சம் ஒரு டஸனுக்கும் குறைவான கைதிகள், எஸ் -21 கைதிகள் உயிருடன் இருந்தனர்.
அவ்வளவுதான்.
ஜனநாயக கம்பூசியா (டிகே – இதுதான் போல்பாட்டின் புரட்சிகர கம்யூனிஸ கட்சி) காலத்தில், எஸ் -21 என ஒரு படுரகசிய அமைப்பு இருப்பது, அதன் உள்ளே ‘இடதுசாரி பணி’ புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கும் ஒரு சில உயர் பதவியில் இருந்த கெமர் ரூஷ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.
1979 இல் வியட்நாமிய துருப்புக்கள் இந்த எஸ்21 சிறைச்சாலையை கண்டுபிடித்தபோது, குதறிக் கொலை செய்யப்பட்டவர்களின் அழுகும் உடல்கள் இன்னமும் இருந்தன; அவர்களை, வரலாற்றுப் பொருள்முதவாத ரீதியில் சித்திரவதை செய்த கருவிகளும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அங்கேயிருந்து – பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள், கேடர் குறிப்பேடுகள் மற்றும் டிகே வெளியீடுகள் உள்ளடக்கிய விரிவான ஆவணக் காப்பகமும் கண்டுபிடிக்கப்பட்டது.
எழுத்தாளர் சாண்ட்லர், தன்னுடைய மேற்கண்ட புத்தகத்தில் – எஸ்21 காப்பகத்திலிருந்த ஆதாரங்களையும், ஃப்னோம் ஃபென்னில் வேறு இடங்களில் கிடைத்த தரவுகளையும், எஸ் 21 கொலைக்கூடத்தில் இருந்து தப்பியவர்களையும், சிறையில் பணி செய்த முன்னாள் தொழிலாளர்களையும் நேர்காணல் செய்து பெறப்பட்ட ருசுக்களையும் பயன்படுத்தி ஒருமாதிரி நெஞ்சைப் பிழியும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்..
இந்த எஸ்21 வளாகம் இன்று ட்வால் ஸ்லெங்க் என்ற பெயரில் ஒரு அருங்காட்சிசாலையாகப் பணி செய்கிறது…
-0-0-0-0-0-
அங்கெல்லாம் போய் இடதுசாரிகளின் களச்செயல்பாடுகளைக் கண்டுகளிக்க முடியாதவர்கள், வருத்தப் படவே வேண்டாம்.
ஏனெனில்.
இடதுசாரி/மாவோயிஸ்ட்களும் இஸ்லாமியர்களும் இவாஞ்செலிக்கல்களும் இன்னமும் ஒருங்கிணையும்போது, அவர்கள் வழி சுபிட்சத்தை ஸ்தாபனம் செய்யும்போது, இந்தியாவிலும் பலப்பல எஸ்21 விசாரணைக்கூடங்கள் நடத்தப்படும்.
கவலை வேண்டேல்.
ஏற்கனவே அவர்கள் மேற்குவங்காளத்திலும் கேரளத்திலும் தண்டகாரண்யத்திலும் இதற்காக நன்றாகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்வேறு!
“ஆகாஷம்வரே ஞங்ஙளு செங்கொடி உயரட்டே!!”
May 11, 2021 at 19:24
ஒரு யோசனை:
‘ஏழரையோர் வாழ்வாதர அறக்கட்டளை’ ஸ்தாபித்து, அதன் பேரில் ஒரு e-bay கணக்கைத் தொடங்கி, ஒத்திசைவுக்கு இவ்வாறு பண்டமாக வரும் கொடைகளை உடனடிச் செலவாணி ஆக்கலாம்.
நாளைக்கு யாராவது கணக்கு கேட்டு
மூணேமுக்கால் மூணேமுக்காலாக பிளந்துவிட வாய்ப்புள்ளதால், ‘பொருளாளர் முடிவே இறுதியானது’ என்று founding charterல் பதிந்துவிடலாம்.
பொருளியல் நிபுணத்துவம் உள்ளவர்களை நம்புவதற்கில்லை. அதனால் வேறு ஏதாவது நற்றிறமைகள் வைத்து (உ.ம்.: தளைதட்டாமல் வெண்பா எழுதும் வல்லமை) பொருளாளரை நியமிக்கலாம்.
May 12, 2021 at 09:27
ஐயா, தகத்தகாய ஏழரைகளின் தன்னிகரற்ற, நிரந்தரப் பொருளாளரே! அருளாளா!!
அது செலாவணி, செலவாணி அல்ல.
லாகவம் என்பதை லாவகம் என்றும் எழுதுவீரோ?
பின்குறிப்பு: ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என எந்தக் கபோதி சொன்னான் அல்லது சொன்னாள்?
May 12, 2021 at 10:08
/செலவாணி —> செலாவணி/
அம்பலத்தரசனே கால்மாற்றி ஆடிய ஊரன் யான்.
May 12, 2021 at 10:18
🙏🏿💪🏿🐸
May 12, 2021 at 10:10
தமில் நாட்ல ‘குற்ற பார்க்’தேன் நெறய இருக்கு
May 12, 2021 at 10:20
யோவ்! ராபின்ஸன் பூங்காவில் பெரிய அளவில் ஆரம்பித்த எழவு சவம் வேறெங்கே போவும்?
May 11, 2021 at 19:52
I had been to Tuol Sleng in 2014, and I saw this sign
https://ibb.co/R3KwMkS
A sign asking you not to laugh.
As they say ‘every sign has a story’.
I can only imagine how many tourists would have exhibited inappropriate levity here to necessitate such a sign!
Growing up in, TN the image one has of a communist politician is one of personal simplicity, approachability, genuinely throwing oneself into causes – which particularly stands in sharp contrast with the crude bigotry, empty posturing, and unhesitatingly self-serving image of the Dravideologist politicians. In my city, the CPM MP candidate even in the late 1990s still rode a bicycle. And most infamously, the CPM corporator was hacked to death by DMK goons – who were released early for ‘good conduct’ during the 2006-2011 reign.
The regard for communists was automatic.
Much later I vociferously argued with a roommate, who happened to be from Kerala on these topics. He gave me an indulgent hearing and said: “you simply have not seen them in power”
I could say absolutely nothing to that. Adulting தருணம்!
I would still salute their commitment to causes (keezhveNmaNi, vachAthi). But in the TN context it is absolutely painful to see that the one தரப்பு who ought to have held their own ideological and talk in terms of ‘dialectics’ when talking about the ‘evolution of social systems’ have also be subsumed by the Dravideological mode of thinking of history as a ‘series of conspiracies’.
The cretins who populate the Communistsphere in TN are now virtually indistinguishable from Dravideologues.
May 12, 2021 at 09:37
Hey, thanks for the comment; will say that, this is the first time that, I ‘know’ a person who had/has actually been to S-21.
Having said that, I had known a few good Communists and even revered them. Was even a member a party once. They all ended around my 23rd year of existence.
Now, I think that, even those folks merely fell to propaganda. They were not well read or even experienced. Poor things.
Once one realizes via Science and Experience that we are not created equal to start with, everything else falls into position.
Now, barring a few youthful (illiterate, ignorant) idiots who are members of various communist paradises – rest are scum. They know what they are doing. Monsters. At best, beggars.
bfn.
May 15, 2021 at 00:38
Noam Chomsky இந்த Khmer Rougeகளை புகழ்த்து பேசி இருப்பதாக சொல்கிறார்களே.. அது உண்மையா?
பல வருடங்களுக்கு முன்பு ‘Killing Fields’ படம் பார்த்த நியாபகம் வருகிறது. இவ்வளவு கொடுமைகளை உலகம் முழுக்க செய்துவிட்டு, (அதற்கு ஒரு சின்ன மன்னிப்பு கூட கேட்காமல்) பிஜேபியை பாசிஸ்ட் கட்சி என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். உண்மையான பாசிஸ்டுகள் ஆட்சி செய்தால் இவர்கள் எப்படி இப்படி சுதந்திரமாக கருத்து சொல்லிக்கொண்டு திரியமுடியும் என்று தெரியவில்லை.
இந்த கம்முனாடிஸ் மாதிரியான hypocritesசை எங்கும் பார்க்க முடியாது. ஸ்டாலினையும், மாவோவையும் புகழ்த்து தள்ளும் PAK கூட சீனாவிற்கு செல்ல மாட்டேன்கிறார், அமெரிக்காவிற்குதான் அடிக்கடி பறந்து செல்கிறார்.
May 15, 2021 at 09:11
மூக்கை நுழைக்கிறேன்:
க்மெர் ரூஜ் (செங்க்ம்மெர்?) ஆரம்பகால எழுச்சியை காலனிய-எதிர்ப்பு நோக்கில் ஆதரித்து ச்சாம்ஸ்கி எழுதினார். பின்னர் அவர்கள் கொடூரங்கள் வெளிவர ‘நான் ஆதரித்தபோது அவர்கள் இத்தனைக் கொடுமைகள் செய்திருக்கவில்லை, செய்ததாக ஊர்ஜிதமான தகல்வகள் இல்லை’ என்று தனது அன்றைய நிலைபாட்டுக்கு விளக்கம் கொடுத்தார்.
சமீபத்தில் ச்சாம்ஸ்கிக்கும், ஸ்லொவீனிய மார்க்ஸிய எழுத்தாளரான ஸ்லாவாய் ஷிஷெக்குக்கும் ஒரு உயர்ரக குழாயடி சண்டை நடந்தது.
ஷிஷெகின் ஆதர்சமான லக்கான் போன்றவர்களை, ‘அனுபவவாத உள்ளீடற்று பிதற்றுபவர்கள், ‘ என்று ச்சாம்ஸ்கி சாடினார். அவர்கள் அனைவரும், ‘நிரூபிக்கமுடியாத தேற்றங்களை அடுக்கிச்செல்லும் பம்மாத்துக்காரர்கள்’ என்றும், ‘அவர்களின் உச்சகட்டம் ஷிஷெக்’ என்றார் ச்சாம்ஸ்கி.
இது வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் வைத்த குற்றச்சாட்டு தான், தெய்வத்திரு ராஜர் ஸ்க்ரூட்டன் ஷிஷெக்கை ப்ரத்யேகமாக கிழித்து ஒரு புஸ்தகமே எழுதினார். என்றாலும் இடதுசாரி முகாமில் ‘நிரூபணவாதம் X கோட்பாடு’ என்ற விவாதம் (மீண்டும்) கூர்மை பெற்றதால், ஓரளவு கவனம் பெற்றது.
ச்சாம்ஸ்கி’க்கு பதிலளித்த ஷிஷெக், ‘அனுபவவாதம், தகவல்கள், புள்ளியியல் என்றெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரே இந்த ச்சாம்ஸ்கி, அவரைப்போல் அத்தனை முறை அநுபவ ரீதியில் பிழை செய்தவர்கள் யாருமே உலகத்தில் இல்லை’ என்றார். அதற்கு உதாரணமாக ‘க்மெர் ரூஜ்’க்கு பற்றி ஆதரவாக எழுதிவிட்டு, பின் ச்சாம்ஸ்கி சொன்ன சால்ஜாப்பை எடுத்துரைத்தார்.
“அரம்ப நிலைகளில் க்மெர் ரூஜ்’இன் பொதுப்பேச்சுக்களைக் கேட்டாலே தெரிந்திருக்கவேண்டாமா, அங்கு ஏதோ பயங்கரமான பைத்தியக்காரத்தனம் நடக்கிறது/நடக்குவள்ளது என்பது. அவர்களுடைய கொடுஞ்சிறைகள், மரணவயல்கள் பற்றிய புள்ளிவிவரகளுக்கு முன்னால், ஆரம்ப நிலைகளில் அவர்கள் தங்கள் குழுக்களை நடத்தியதிய (ஸ்டாலினிய) போக்கு தெரியவில்லையா.. அப்புறம் என்னய்யா நீர் அறிவுஜீவி’
என்று காட்டமான சாடல்.
May 15, 2021 at 09:58
வேல், டகால்டி – கருத்துகளுக்கு நன்றி.
சாம்ஸ்கி: இவர் பலவிதங்களில் (அவர் சார்ந்த ~மொழியியல் துறை உட்பட) ஒரு வீங்கல்மதிப்பீடு செய்யப்பட்ட ஆசாமி. இவர் போல்பாட்களை ஆதரித்தார். பின்னால் பல்ட்டி. ஜிஹாதிகளையும்தான் தொடர்ந்து ஆதரித்தார் – பல்டியில்லை. சென்னைக்கு வந்து பகிரங்கமாக காந்திஜியைப் பற்றி உளறிக்கொட்டியதை நானே நேரில் கண்டுகளித்திருக்கிறேன் என நினைவு…
இத்தனைக்கும் என் இளம்/விடலைப் பருவத்தில் (இல்லையில்லை 25 வயதில்தான்!) இவருடைய தண்டக் கருமாந்திரமான ‘மேனுஃபேக்சரிங் கண்ட்டெண்ட்’ படித்துக் கிறங்கியிருக்கிறேன்… முப்பது வயதுக்குள் என்னைப் பட்டிபார்த்து டிங்கரிங் செய்துகொண்டுவிட்டேன் என்றாலும், இந்த வெட்கம்தரும் கிறங்கல் உண்மையை நான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
நான் க்மர்ருஷ் மாவோய்ஸ்ம் எனப் பலபுத்தகங்களைப் படித்திருக்கிறேனே தவிர ‘கில்லிங் ஃபீல்ட்ஸ்’ பிலிம் பார்க்கவில்லை. ஆனால் அதற்கு மூலமான ஸிட்னிஷான்பர்க் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். என்ன சொல்வது.
பாஜக, ஃபாஸ்ஷிஸ்ம்: இப்படிக் கோர்ப்பவர்களுக்கு இரண்டைப் பற்றியும் ஒருவிதமாக அடிப்படைப் புரிதலும் இல்லை என்பது என் அனுபவம். இவர்களை முடிந்தால் உதைக்கவும். அந்த அளவு பொறுமை இல்லையெனில் லுஸ்லவுடவும்.
அலகிலாக்கறுப்பனார்: பாவம், வேறென்ன சொல்ல. அவருக்கும் பொழுது போகவேண்டுமே, பாவம். ஆனால் – அரவிந்தன்கண்ணையன் சமேதராக நம் மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி.
ஸைஸீக்: இவருடைய அடிப்படைகளே ரொம்ப வீக். மேலதிகமாக வீக்கம் வேறு; இவரைப் பிடித்துக்கொண்டு தலைமேல் வைத்துக் கொண்டாடும் பல அரைவேக்காட்டுக் கபோதிகளை நேரில் கண்டு களித்திருக்கிறேன். ஸைஸீக் என்றாலே உருகிவிடுவார்கள். இரண்டுமூன்று முறை கிழித்திருக்கிறேன். திராபைகள்.
ரோஜர் ஸ்க்ரூடன்: ஆ! இவர் பலவிதங்களில் என்னுடைய தொடர்ந்த ஆதர்சங்களில் ஒருவர். (ஆனாலும், சிலவற்றை லுஸ்ல வுடவேண்டும்)
ஸைஸீக்-சாம்ஸ்கி உரையாடல்: இதனைப் பார்க்கும் பாக்கியம் பெறவில்லை. டகால்டி விவரிப்பது போல, இது, ‘ஸப்பாஷ், ஸர்யான போட்டீ’ எனத்தான், + ‘சாதுர்யம் பேசாதடீ, என் சலங்கைக்கு பதில் சொல்லடீ…’ எனவாகத்தான் இது இருந்திருக்கவேண்டும். (பிரச்சினை என்னவென்றால், படுஸீரியஸ் விஷயங்கள் பார்க்கவே நேரம் இல்லாதபோது, இந்தக் கோமாளிகளின் உரையாடல் பற்றிக் கேள்விப் படவேகூட பீதியாக இருக்கிறது!)
May 15, 2021 at 15:32
/இரண்டுமூன்று முறை கிழித்திருக்கிறேன்/
ஆத்தாடி! :-)
அநேகமாக குழப்பித்தள்ளி படுத்துவார் என்றாலும், பற்பல மின்னல்கீற்றுகள் கண்டுளேன்.
/ஸைஸீக்-சாம்ஸ்கி உரையாடல்: இதனைப் பார்க்கும் பாக்கியம் பெறவில்லை/
Hand-to-hand combat இல்லை. தனித்தனி பேட்டிகளில் நடந்தது.
https://www.openculture.com/2013/07/slavoj-zizek-responds-to-noam-chomsky.html
May 15, 2021 at 15:50
//மின்னல்கீற்றுகள்
This is shocking. Hope you were not thunder-struck.
Would it be that, you over-read or over-interpreted his blather and pigeonholed them into some startling revelations that you made up yourself?
As for their interviews, will read when I have some time for quality humor. Thank you.
:-)