ட்டேய்! வொங்க முக ஸ்டாலின் செய்யாத படுகொலைங்களா, கொள்ளைகளா, சுரண்டல்களா, ஊழல்களா, புரட்டுகளா… அவர் கூட்டாளிகள் செய்யாத அக்கிரமங்களா?

May 17, 2021

யாரை ஏமாற்றுகிறீர்கள் நீங்கள்?

…நானே பலப்பல முறை இவருடைய லீலைகள், விடலை அயோக்கியத் தனங்கள் பலவற்றை எழுதியிருக்கிறேன்… (ஆனாலும்… … சொல்லப் போனால், என் முட்டாக்கூ இளமையில் – விடலைத்தன 19-21 வயது வரை, இந்த ஆளுக்கும் ஏகத்துக்கும் முட்டுக்கொடுத்து பேசியும் கொஞ்சம் எழுதியும் இருக்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்)

–0-0-0-0–

ஆனாலும், வேறுவழியில்லை…

மறுபடி இவ்விஷயங்களை உரக்கச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இவை எதிர்காலத்தைப் பற்றிய ஹேஷ்யங்கள் அல்ல, மாறாக இறந்தகாலங்களின் விவரணைகள்; நாளை என்பார், யாரதை அறிவார்? மனமே கணமே மறவாதே… ஸ்டாலின் மலர்ப்பதமே…

முதல் கம்யூனிஸ்ட் ஸ்டாலின். முக ஸ்டாலின்.

(முக ஸ்டாலின்: இகோர் கொல்கரேவ் வரைந்த கேலிச்சித்திரம்)

இந்தப் பழம்பொறுக்கியையும் நம் தமிழகத்தின் தற்காலிக, தற்போதைய முதலையமைச்சர் முக ஸ்டாலினையும் (இன்னமும் இவர் ‘நிரந்தர முதல்வர்‘ என யாரும் புகழாரம் சூட்டவில்லை என்பதை கவனிக்கவும்!) போட்டுக் குழப்பிக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. அப்படிப் போட்டுக் குழப்பிக் கொள்வது நியாயமும் அல்ல.

ஏனெனில். நம் முக ஸ்டாலின் = முத்துவேல் கருணாநிதி இசுடாலிர்.

அந்த முக ஸ்டாலின் வேறு, இந்த முக ஸ்டாலின் வேறு! பிர்ஞ்சிதா?

-0-0-0-0-0-

ஆனால் இந்த ரஷ்ய (மன்னிக்கவும், ஜார்ஜிய) முக ஸ்டாலினை நான் எப்படி முதல் கம்யூனிஸ்ட் என விளிக்கலாம் என நீங்கள் கேட்கலாம். மார்க்ஸ் எங்கேல்ஸ் லெனின் ட்ராட்ஸ்கி எல்லாம் முதல் கம்யூனிஸ்ட் தகுதி(!) பெற்று அழைக்கப்பெறமாட்டார்களா என என்னைப் பார்த்துச் சிரிக்கலாம்.

ஆனால்.

மார்க்ஸ், எங்கேல்ஸ் போன்றவர்களெல்லாம், அலுங்காமல் நலுங்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்து வெறும் வாயில் புரட்சிவடை சுட்டவர்கள், அவ்வளவுதான்.

லெனின், ட்ராட்ஸ்கி இன்னபிறர் எல்லாம் அவர்கள் அளவில் முதல் கம்யூனிஸ்ட் ஆக முயன்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ‘எடுத்துக் காட்டு கம்யூனிஸ்ட் குடிமகன்’களாக பவனி வர வெகு குறைவான காலமே கிடைத்தது, பாவம்.

ஆனால், தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் செங்கோல் ஒச்சி, ஸோஷலிஸ கம்யூனிஸ உச்சியை அடைந்து கொடுங்கோல் ஓச்சிய பெருமகனார் இந்த ஜேவி ஸ்டாலின் எனும் முக ஸ்டாலின் தான்!

பலப்பல லட்சம் ரஷ்யமக்களையும் கொன்று, இரண்டாம் ‘உலகப் போர்’ எழவையும் ஆரம்பித்து வைத்துப் பலப்பல வகைக் கொடூரங்களுக்கும் கொடுமைகளுக்கும் முடிந்தவரை பிற மக்கள் திரளினரும் ஆட்கொல்லப்பட வைத்து… புரட்சியை முடிந்தவரை உலகுக்கெல்லாம் ஏற்றுமதி செய்து…

+ நம் செல்ல ஜவாஹர்லால் நேரு உட்பட பலரை அண்ணாந்து பார்க்கவைத்து, பின்னர் அவர்களையும் தாராந்துபோக வைத்த பராக்கிரமம் மிகுந்தவராக முக ஸ்டாலின் தான் இருந்தார்!

அது மட்டுமல்ல, மிக முக்கியமாக, நம் திராவிடச் செல்லமான முக ஸ்டாலினுக்கும் பெயர்க்காரணம் அதே முதலாம் முக ஸ்டாலின் தான்!

ஆகவே.

முக ஸ்டாலின் தான் முக ஸ்டாலின்.

பிர்ஞ்சிதா?

இப்பவாச்சும்??

பின்குறிப்பு: தற்கால, அதாவது இரண்டாம் முக ஸ்டாலினும், முதலாம் முக ஸ்டாலின் பாதையில் தான் புரட்சிகரமாக நடப்பார், நடந்துகொள்வார் என நினைக்கிறேன்.

ஏனெனில் பெற்றோர் விருப்பப் படித்தான் (பொதுவாக) குழந்தைகளின் பெயர்கள் வைக்கப் படுகின்றன.

இதற்குக் காரணம், பெற்றோர்களுக்குச் சில பெயர்களால் உணர்த்தப்படும் குணாதிசியங்கள், போற்றத் தக்கவை எனப் படுகின்றன – தம் குழந்தைகள் அப்பெயர்களுக்கேற்ப விளங்கவேண்டும் என விரும்புகிறார்கள். பல குழந்தைகள் வளர்ந்து ‘பெரியவர்கள்’ ஆகும்போது – தங்களுக்கு இடப்பெற்ற இடுகுறித் தற்குறிப்பெயரைக் காரணப் பெயராக உருமாற்றியே தீரவேண்டும் என அலைவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

அதேபோல, நம்மூர் முக ஸ்டாலினும் முதற்பெரும் முக ஸ்டாலின் போலவே திகழ்ந்து மிளிரலாம்.

நேற்று என் கனவில் வந்த அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தினரின் ஆவிகளும் மேம்பாலங்களும் சந்தனக் கிடங்கும் பலப்பல அக்கால இளம்பெண்களும் இன்னும் பலப் பல பலப்பல விஷயங்களும் எனக்கு ஒருங்கிணைந்து சொல்லும் சேதி அதுதான்.

(தமிழகத்திலும் எனக்குத் தெரிந்து ஒரு பிரபல ட்ராட்ஸ்கி (மருது) இருக்கிறார் – இன்னமும் உயிரோடு இருக்கிறார் என நினைக்கிறேன்;  ஆக, இவரும் கூடிய விரைவில்  முக ஸ்டாலினால் அக்கால ட்ராட்ஸ்கி வெச்சி செய்யப்பட்டது போலவே பார்ஸேல் செய்யப்பட்டு விடுவாரோ எனப் பயமாக இருக்கிறது… எல்லாம் முக ஸ்டாலின் செயல்!)

எது எப்படியோ.

வாழ்க செம்புரட்சி தமிழ்ப்புரட்சி.

வெல்க திராவிடன் ஸ்டாக்! வளர்க அதன் மார்க்கெட்-கேப்!!


6 Responses to “ட்டேய்! வொங்க முக ஸ்டாலின் செய்யாத படுகொலைங்களா, கொள்ளைகளா, சுரண்டல்களா, ஊழல்களா, புரட்டுகளா… அவர் கூட்டாளிகள் செய்யாத அக்கிரமங்களா?”

 1. dagalti Says:

  /இரண்டாம் ‘உலகப் போர்’ எழவையும் ஆரம்பித்து வைத்துப்/

  Are you referring to the peace-part and வா, போலந்தை பப்பாதியா பிரிச்சுக்குவோம் deal?

  இருந்தாலும், ‘ஆரம்பித்து வைத்து’ என்று சொல்வது மிகையல்லவா.
  என்றைக்குமே ஸ்டாலின் ஹிட்லரை நம்பவில்லை.

  மெய்ன் கம்ஃபில் செம்புரட்சியாளர்களை ‘கொச்சை மானுடர்’ என்கிற ரேஞ்சுக்கு ஹிட்லர் ஏசி இருந்ததையும், அவனுக்கு குணதிசை நாடுபிடிக்கும் ஆசை உண்டென்பதையும் அறிந்து செய்த தற்காலிக காபந்து மட்டுமே, அல்லவா.

  பல்லாயிரம் உயிர்களை காவு குடுப்பதெல்லாம் ஸ்டாலினுக்கு எம்மாத்திரம் என்றாலும், ‘உலகப்போரைத் துவங்கி வைத்த’ என்று சொல்வது அப்படிப்பட்ட நாடுபிடி ஆசையால் உந்தப்பட்டு ஸ்டாலின் செய்ததாக தொனிக்கிறது. அது சரியல்லவே.

  /நேரு உட்பட பலரை அண்ணாந்து பார்க்கவைத்து/

  நேருவின் சுயசரிதையில் 40களில், அப்போது நடந்துகொண்டிருந்த உலகப்போர் பற்றிய தனது அவதானக்களில், ஜபான்-ருஷ்யா உடன்படிக்கை, ஃபின்லந்த் மீது ருஷ்யா நிகழ்த்திய தாக்குதல் போன்றவற்றை பச்சை சந்தபர்ப்பவாதம் என்று திட்டினார்.

  ருஷ்யாவை/கம்யூனிசத்தை என்றும் ஒரு தயக்கத்துடன் தான் ஆதரித்தார் அல்லவா? அண்னார்ந்து பார்த்து பூரித்து சிலாகித்து தங்குதடையின்றி, காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கவெல்லாம் இல்லையே.

  ‘கம்யூனிசம் காலாவதியானது, ஜனநாயக விரோதமானது’ என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தவரை சர்வாதிகார ஆராதகர் என்கிற சித்திரம், படிப்பவர்க்குத் தோன்றுமாறு நீங்களும் எழுதுவது முறையோ.

  கம்யூனிச கருத்துகளைப் பரப்புவதற்கு ஜனநாயக இந்தியாவில் இடம் இருக்கவேண்டும். கருத்துப்பரப்புதலுக்காகக் கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்ட/சிறையிடப்படக்கூடாது, அவ்வாறான தோற்றம் கூட வந்துவிடக் கூடாது. அவர்கள் தோற்றுவிக்கும் வன்முறையைத் தான் முடக்கவேண்டும் என்பதில் வெகு ஜாக்கிரதையாக இருந்தவரல்லவா நேரு.

  கம்யூனிஸ்ட் கட்சியை மொத்தமாக தடை செய்தால் ‘போக்கிரிகள் தியாகிகளாக தங்களை மக்கள்முன் முன்வைத்து பம்மாத்து காட்ட வழிவகை செய்ததாகி விடும்’ என்கிற ரீதியில் அவர் சிலபல முறை எழுதி/பேசி இருக்கிறார்.


 2. Sir, three things – though I understand where you are coming from:

  1. There is so much formidable scholarship (old, new & emergent) on WW2. There are very clear evidences to point our solid accusing finger at JVS to have jumpstarted the war. (of course, Hitler played his part, he was also pushing for it – those two scum are two sides of the same gory coin) – to start with, one can peripherally figure out the skirmishes Soviets had with Finland and its consequences. If I could point to one fine scholar, who wields his arguments with the skills of a surgeon’s scalpel about the primary culpability of JV, that would be Sean Mcmeekin. (am not even talking about Mitrokin archives and the like)

  2. I did not say that Mister Chacha supported communists hole-heartedly; he was a mere and effete fabian socialist, who emerged like a rahul gandhi two generations ago, pushed by his dad, I know.

  I was trying to point out the ‘socialism’ dream in JN – the way he admired (and copy pasted) development models and structures of StalinSoc (~IngSoc), while jettisoning traditions and local endemic, scalable models – and even working against them.

  Finally, those models of Mahalanobis’ Excel spreadsheet types copy-pasted from the ‘JV inspired’ Soviets have not worked at all. (was referring to that)

  I did not say that JN was supporting dictators and fascists. He was too much of fabian for that, also he was not very smart or well read (excepting a few old/western classics) or scholarly or even knowledgeable about many things.

  But he was certainly in AWE of dev and progress under socialism and things done under JV. (JN had his positives and even I have written about them – ref: https://othisaivu.wordpress.com/2016/01/28/post-593/ – where some details of his autobio are also given)

  // நேருவின் சுயசரிதையில் 40களில், அப்போது நடந்துகொண்டிருந்த உலகப்போர் பற்றிய தனது அவதானக்களில், ஜபான்-ருஷ்யா உடன்படிக்கை, ஃபின்லந்த் மீது ருஷ்யா நிகழ்த்திய தாக்குதல் போன்றவற்றை பச்சை சந்தபர்ப்பவாதம் என்று திட்டினார்.

  Sir, true. But only in passing. He did not elaborate much on them at all – but was full of ‘anti imperial’ rhetoric in the last addendum chapter of ‘five years later’ – if my memory proves correct.

  For a 600+ page book, this ‘திட்டினார்’ happened only in a very short para. That too written as an afterthought/upgrade.

  Anyway, this will suffice for now.

  • dagalti Says:

   Thank You.

   /Mcmeekin/

   Hadn’t heard of the name.Listen to a couple of hour long youtube interviews where he spoke about his book i.e. I did the lazy-bum’s variant of actually reading the book!
   Many new things for me. I had a fair idea that Stalin was only glad the war was happening between the Western imperial/capitalist forces and was schemingly diplomatic till very late in the game, but I did not know the extent to which he had managed to get his way, first with Hitler and then with FDR and Churchill; especially how the conquest (territorial in Eastern Europe and ideological in East Asia) had its roots in Stalin getting his terms from his (new) allies.
   Thank You. 

   In one interview Prof. McKeenan was asked about ‘why the historiography of WW2’ was the way it is. I particularly liked his answer: 
   1) that revelations of the extent of the holocaust in the 60s made a strong case for a ‘good x evil’ narrative (which rendered a complex story school textbook-friendly!) 
   2) even well-meaning Western academics not wanting to appear to perpetuate a cold-war polarity when talking about WW2
   3) Recent documents that have come to light including the private correspondences, minutes of meetings etc.

   1/3

  • dagalti Says:

   / ‘socialism’ dream in JN – the way he admired (and copy-pasted) development models and structures of StalinSoc /

   Got it.
   Here too, I have an opinion on the lines of  ‘hindsight is 20-20’ but the planning/mixed-economy/prioritization of nation-building industries was an approach many countries coming out of colonialism post WW2 were taking.
   Will read your other post.

   /Mahalanobis /
   ஒரு கேலிக்கூத்து sidenote on this:
   As you may know, Milton Friedman was விவஸ்தைகெட்டத்தனமா invited to the ISI, to discuss ‘Planning’ :-)

   Galbraith later commented: that was akin to inviting The Holy Father to perform an abortion.

   2/3

  • dagalti Says:

   /if my memory proves correct./
   Yes you are correct.
   The first edition came out before the war started. The later chapters added in one of the subsequent editions.

   You call this criticism insufficiently harsh.

   But I wanted to counter any notion that Nehru was falling over himself in wide-eyed admiration for Stalin {as your initial wording sounding – although in your typical jesting style which I don’t wish to douse with these humourless responses [முடிஞ்சா பண்ணிப் பார்றா!] }.

   And what was known of Stalin’s purges back then is also hazy. Remember, this was around the time when Gandhiji even wrote the ‘அன்பு நண்பர் ஹிட்லர் அவர்களே’ letters.[For the moment please forget my previous comment quoting Zizek’s critique of Chomsky’s empiricism :-) ]

   Nehru was a politician notably wary of either bloc from very early on. 

   மற்றபடி, மோதிலால் கைதூக்கிவிட்டது வெகுவாஸ்தவம் என்றாலும், அதற்காக ராகுலாருடன் எல்லாம் ஒப்பிடுவதைப் பற்றி எனது கடுமையான கண்டனத்தை ஒரு முனகலாகவேனும் இவ்வவைக்குறிப்பில் பதிந்துவிட்டு அமர்கிறேன்.

   3/3


   • Sir, thanks for your comment series – and for paraphrasing some points of Prof McMeekin about that illustrious scum, JV Stalin.

    // Nehru was a politician notably wary of either bloc from very early on.

    Again, erm, I need to annotate this with counter examples. But am currently getting worked up about West Bengal.

    So, may be sometime later. May be.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s