வாழ்க்கையியல்(!) பற்றி நமக்கு ‘வெண்முரசு’ கொடுக்கும் பதின்மூன்று படிப்பினைகள்
September 10, 2019
நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’ ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’ ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ?
ஆகவே, வெண்முரசு எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதத்திலிருந்தும், இக்காலத்திலும் கூறுகெட்ட எதிர்காலத்திலும் பலப்பல மணிகள் திரட்டப்படும், அவை அனைத்தும் ‘வெண்முரசோசையின் மகத்தான மௌனங்கள்‘ என்கிற ரீதியில் பயபக்தியுடன் அணுகப்பட்டு தடுத்தாட்கொள்ளப்பட்டும் பாடத்திட்டங்களாகும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. பயமுண்டு ஜயமில்லை மனமே.
சரி.
பெரும்பேராசானின் எந்தவொரு ஆக்கத்தையும் போலவே – நம் செல்லமான வெண்முரசிலும் மேனேஜ்மெண்ட்-மேலாண்மை, எழுத்தாளுமை, வாழக்காயியல் முத்துகள், வர்ணனை வைரங்கள், தகத்தகாயத் தங்கங்கள், ரியல்எஸ்டேட் பிளாட்டினங்கள் என வழி நெடுகக் கதறிக்கொண்டே சிதறிக்கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி மட்டும் ஒரு சிறிய, எளிய, பாமரப் பார்வையில் நான் அறிந்த மட்டில், உங்கள் ஆகச்சிறந்த பார்வைக்கு வைக்கிறேன். பயப்படாதீர்கள்.
-0-0-0-0-
#1: ‘Think in Chapters’
— சும்மா ஒரிரு சொற்களில் எளிமையாக ரோசனை செய்யாதே, அத்தியாயம் அத்தியாயமாக பகீர் ரோசனை செய்.
#2: ‘Talk in looooong, extraaaa loooooooooong sentences’
— பேசுவதை முழ நீளத்துக்கு மூச்சு விடாமல் பேசு; வெற்றி உனக்கே! (ஏனெனில், கொடூரமான எதிரிகள் கூட கதறிக்கொண்டே உங்கள் காலடியில் சரணடைந்துவிடுவர்)
#3: ‘Expand, mystify & noodle-ize every simple thing; divide and conquer’
— அவன் எழுந்து நின்றான் என்பதை…
“மண்டைமேல் குலசேகரக் கிரீடத்தையும் இடுப்பில் கோமணத்தையும், முன்மண்டையில் மசுரையும், பின்மண்டையில் பௌர்ணமிச் சந்திரகாந்தத்தையும், இடையில் போர்வாளையும் முதுகில் முதுகெலும்பின்மீது படிந்த அம்பறாத்தூணியையும், வாயில் புன்னகையையும், தோளில் வில்லையும், புஜங்களில் மதனயானையனைத்த மத்தகஜ பலத்தையும், பாதங்களில் பாதரட்சைகளையும் காற்களில் வலிமையையும் மூட்டுகளில் வலியையும் (ஆர்த்ரைட்டிஸ்), கழுத்தில் குரல்வளையையும், நெற்றியிற் குரூரப் புரூரவசையும் பற்களில் ஸ்வேதவெள்ளை நிறத்தையும் மூக்கில் பெருமூச்சையும் அதன் நுனியில் விடைத்தலையும், காதில் குண்டலங்களையும் கண்களில் கருணைமிகுந்த வெறியையும் நாக்கில் நரம்பின்மையையும் உடைத்த சினமே உருவான வேளிர்வீரன் க்ஷத்ரியக்கோன் சின்னாபின்னன், வேங்கையின் கொங்கையிலிருந்து சீம்பால் குடித்த சீவகன், நான்கு கால்களும் இரண்டு கைகளும் உடைய சிம்மாதன நாற்காலியின் மீதமர்ந்து கொண்டிருந்த செம்மயிர்க் கருங்கோன், மார்பை நிமிர்த்தித் வயிற்றினை இறுக்கித் தொடையினை ஒடுக்கிப் பாதங்களை முன்னோக்கி வைத்து இடுப்புக்கு மேல் முன்பக்கம் சாய்ந்து, வளமையான ப்ருஷ்டபாகத்தையும் பாதத்தையும் முறையே சிம்மாதனத்தின் மீதும் பிருத்வியெனப்படும் பூமியின் மீதும் வைத்தழுத்திச் சங்க நாத ஓலியுடன் வலது கையால் விசும்பை அறைந்து கூரிய நகங்களால் விண்ணைக்கீறி, அதேசமயத்தில் இடதுகையால் லூஸாகி அவிழ்ந்துகொண்டிருக்கும் கோமணவஸ்திர எழவை ஸ்திரப்படுத்தியபடி, விண்ணோக்கித் தன்னந்தனியனாக தகத்தகாயத் தானைத்தலைவனாக ஏகியபடி யாண்டும் இடும்பை இலாமல் இரண்டுகால்களில் எழுந்து நெடிலாக ஆலவிருட்சமானது விழுதுபரப்பி அதன் நன்னிழலில் தான் மையத்தின் நின்றதுபோல் எழும்பினான்“
…என, மூச்சுமுட்ட ரத்தினச் சுருக்கமாக எழுதலாம். நெகிழ்வாலஜியாலும் கர்ணகடூர ரீதியில் நீட்டிமுழக்கப்பட்ட வர்ணனைகளாலும், முடியாத ஆகச்சிறந்தது என்பது பிறிதொன்று எதுவுமே இல்லை. (இப்படியே ரெண்டுமூன்று பேர் எழுந்து உட்கார்ந்தால் போதும், ஒரு அத்தியாயம் ரெடி)
#4: ‘Look for co-branding opportunities’
— வெண்முரசுபோன்ற காப்பிய இன்பலாகிரிகளைப் படிப்பவர்களின் கோமணங்களும் கோதைமணங்களும் நைந்து அங்கங்கே பரிதாபமாகக் கழன்று வீழ்ந்துவிடுமாகையால் திருப்பூர்க்காரக் கோமணத் தொழிற்சாலை ஏதாவதுடன் கோ-ப்ரேண்ட் செய்து ‘வெண்டெக்ஸ்’ என ஏதாவது, சுலபத்தில் நெகிழாத எலாஸ்டிக் வைத்த புதிய ஜட்டி, பேன்டி விற்பனையை ஆரம்பிக்கலாம்.
இம்மாதிரி ‘வெண்முரசு ப்ரூஃப்’ செய்யப்பட்ட கோமணங்களை, அதிரடித் தள்ளுபடி விற்பனைக்காக ஏங்கியவண்ணம் இருக்கும் பல்லாயிர தமிழலக்கிய வாசகக் கூமுட்டைகள் அலைமோதி வாங்க மொய்த்துவிடுவர்.
#5: ‘Use filmi techniques in life’
— கதையாடல்களிலும் வாழ்க்கையிலும் இஷ்டத்துக்குத் தப்பும் தவறுமாக முன்னுக்குப் பின் முரணாக அட்ச்சிவுடலாம், ஈடுபடலாம்; ஏனெனில், ஃப்லேஷ்பேக் ஃப்லேஷ்ஃபார்வர்ட் செய்து அங்கும் இங்கும், மிளகாய்பஜ்ஜி சாப்பிட்ட மந்திபோல ஆக்ரோஷத்துடன் குதித்துக்கொண்டிருந்தால், யார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படப் போகிறார்கள்? ஆகவே, எப்போதும் பின்னோக்கிப் பார்த்துத் தொடர்ந்து முன்வரலாறுகளைச் செப்பனிட்டுக் கொள்வதே சாலச் சிறந்தது.
#6: ‘Learn to mix and match stuff from all possibilities’
— மஜாபாரதத்தில் விஷ்ணுபுராணம் உள் நுழையலாம்; அதேபோல, கொத்துபுரோட்டா செய்யும் கொற்றவையைப் பின் தொடரும் நிழலில் குரலாக அசரீரிச் சாளக்கிராமங்களும் ரவுண்டுகட்டிக்கொண்டு அடிக்கலாம். உபபாண்டவர்களை உப்புமா பாண்டவர்களாக ரசவாத மாற்றம் செய்துக் கிண்டிப் பரிமாறி அவர்களை ராவணனும் அவன் மனைவியான மண்டோதரியும் தத்தெடுத்து வளர்க்கலாம். அவர்களை அப்படியே சுமார் 700 மேற்படி அத்தியாயங்களுக்கு ட்ரியோ ட்ரியோ என ஓட்டிக்கொண்டு போய், ஒருவழியாக யுவர்களாகவும் யுவதிகளாகவும் வளர்த்தியபின், கர்ணனின் பரம்பரையில், சிவாஜிகணேச என்டிஆர் சமேத ஒவர்ஆக்டிங் பள்ளியில் தாராளமாகச் சேர்த்தும் விடலாம்.
#7: ‘Know that your etymology is THE etymology’
— குந்திதேவி என்றபெயரே, அவள் மஜாபாரதத்தில் எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ (அதாவது ஏதாவது ஒரு பத்தியில், இந்தமாதிரி அடைப்புக் குறிகளுக்கிடையேகூட!) அங்கெல்லாம் ‘ஸ்ஸ்ஸ்… அப்பாடா‘ என்று குந்திக்கொண்டதால்தான், அதாவது, ஒரு காரணப்பெயராக வந்தது என ஒரேபோடு போடலாம். யாராவது இதற்கெதிராக விதண்டாவாதம் செய்தால், அவர்களுக்கு என்ன தெரியும், நான் ஸம்ஸ்க்ருத விற்பன்னர்களிடம் கேட்டுவிட்டுத்தான் அந்த உண்மையை எழுதினேன் எனச் சொல்லலாம்.
அல்லது தான், மோனியர் வில்லியம்ஸ் அகராதியாளருக்கு ஸம்ஸ்க்ருத அறிவுரை அளித்ததாகவும் ஆனால் அவர்தாம் தன்னுடைய அறிவுரையைக் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் – ஆனால் தன்னுடைய சொந்த குரு ‘அநித்ய அடச்சேதன்ய மதி’ அப்படியல்லாமல் பணிவாகக் கேட்டுக்கொள்வார் என்றெல்லாமும்… …
#8: ‘Dead men tell no tales’
— எந்தவொரு மண்டையைப் போட்ட ஆசாமியும் தன்னுடன் இப்படிப் பேசியதாகவும், அப்படிச் சிலாகித்ததாகவும், அறிவுரை கேட்டதாகவும் புளுகலாம். ஏன் துரியோதனனே தன்னிடம் கேட்டுத்தான் உபபாண்டவர்களைப் போஷகம் செய்ததாக ஒர்ர்ரேயடியாக அட்ச்சிவுடலாம். யாராலும் எதையும் சரிபார்க்கமுடியாதல்லவா? ஹைய்யா! யாராவது ரொம்பத் துள்ளி ‘அது அப்படியில்லையே ஆசானே’ என்றால் அப்படித்தான் ஹங்கேரிய மொழியிலுள்ள மஜாபாரதத்தில் இருக்கிறது என என் நண்பர் எஸ்ராமகிருஷ்ணன் (c/o அகாடம்மி) அண்மையில் ஜப்பான் சென்றபோது ஸ்பானிய மொழிப் புத்தகம் ஒன்றில் படித்ததாகச் சொன்னதாகச் சொல்லலாம்.
இன்னொரு எடுத்துக்காட்டு: “சுந்தர ராமசாமியே ஒருமுறை என் காலடியில் அமர்ந்து என்னிடம் அறிவுரை கேட்டபோது அவர் எனக்குச் சொன்னார், ‘ஒத்திசைவு குருவே, உங்களை விட்டால், பெரும்பேராசானை விமர்சனம் செய்ய யாராலும் முடியாது! அவர் அத்துமீறுகிறார். அடங்க மறுக்கிறார். திருமா திருமா தொடர்ந்து அடிக்கிறார். கிள்ளுகிறார். அட்ச்சிவுடுகிறார். தொல்லை தாளமுடியவில்லை!’ இன்னொரு முக்கியமான விஷயம், பெரும்பாலோருக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால் – நான் கருப்பொருளைக் கொடுத்தபின்தான் அவரால் ‘ஜேஜே: சில குறிப்புகள்’ எழுதமுடிந்தது.”
#9: ‘Ignore the critics, period’
— குறை சொல்லும் குரூர வெறியாளர்களைக் கண்டுகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் ரொம்பத் துள்ளினால், தொடர்பில்லாமல் எத்தையோ சொல்லி மேலேகினால் வெற்றி நிச்சயம்.
இன்னொரு வழிமுறையென்னவென்றால் பிறரை விட்டுத் தனக்குத்தானே வாசகர்கடிதம் எழுதிக்கொள்வது; அதை முகாந்திரமாக வைத்து, மரியாதையுடன் வசைபாடுவது… மேலும் ‘பெருந்தன்மை’யுடன் விட்டுவிடுவது… அல்லது ‘நான் துறை வல்லுநன் அல்லன், பொதுப்புத்தி சார்ந்து எழுதுபவன், புனைபவன்’ என்று தனக்குத்தானே முட்டுக்கொடுத்துக்கொள்வது…
#10: ‘Handle adversaries indirectly’
— கருத்துலக எதிரிகளை நேரடியாகத் தாக்காமல், அடிப்பொடிகளை அவர்கள் மீது நைச்சியமாக ஏவிவிடுவது சாலச் சிறந்தது.
#11: ‘Develop protective circles’
— குழுமத்தை உருவாக்கிப் பராமரிப்பது மிக முக்கியம். ஒரு வட்டம் சதுரம் அதனுள் புக சிலபல கண்டிஷன்கள் என்றாலே, ரேஷன்கடையில் ஓசிக்குசு கொடுத்தால்கூட அலைமோதும் தமிழன், எப்படியாவது கஷ்டப்பட்டு முட்டிமோதி உள் நுழைய முனைவான். அப்படியே ஸ்டாக் மார்க்கெட்டில் விலை ஏறும்.
#12: ‘Cymbal processing is important for music as well as life’
— தம் அளவுக்கேற்ற ஜால்ராக்களை உருவாக்குவது நெடுங்காலரீதியில் நன்மை பயக்கக்கூடியது. சுரதாபோல ஜெமோதா எனப் பலர் புற்றீசல் போலக் கிளம்பக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
#13: ‘Getting others addicted to mediocre things is, good for your grand life’
— வாசகர்களையோ, நம்முடன் தொடர்பில் இருக்கும் பிறரையோ, வெகு கவனமாக, அட்ச்சிவுட்டும் நெகிழ்வாலஜித்தனமாகவும் சகலதுறைகளிலும் கம்பும் கேழ்வரகும் சுற்றி அதிசராசரித்தனத்திலேயே ஈடுபடுத்தினால் – அவர்கள் ஒருசமயத்தில் அதனையே அதிவுன்னதமாக வரிக்கத் தொடங்கிவிடுவார்கள்; பின்னர் நமக்கு வேலை சுளுவாகி விடும். அரைத்த மாவையே அரைத்து ஊசிப்போன விஷயங்களைப் பரிமாறினாலும், அவர்கள் புளகாங்கிதமடைந்துவிடுவர். நம் புல்லரிப்புக்குக் கேட்பானேன்?
-0–0-
சரி. இன்னமுமா இந்தப் போதனை வேதனைகளைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், பாவிகளே? அவ்ளோ ஜாப்லெஸ்ஸா, வேலை வெட்டியற்றவர்களா நீங்கள்?
இப்போதைக்கு இவ்ளோ படிப்பினைகள் போதும்; மேலும் வேண்டுமென்றால், பெரும்பேராசானையே நேரடியாக அணுக்கமாக அணுகவும்.
நன்றி.
September 10, 2019 at 23:49
*கரடி tales வுட்டு ஹீரோ ஆவது*
தோச மாவு வாங்கப் போம்போது அடி தடி நடந்ததா அங்கலாய்த்துக், கரடிவுட்டு, கட்டு சுத்துன வெரல் போட்டவ திர்ம்ப, திர்ம்ப காட்டி நெகிழ்ச்சி தெரட்டி, ஆதங்க ஆதரவு தேடி instant heroவாவது, அப்பால அல்லாரும் பயந்துகினு ஓட்றுவாங்கல
September 11, 2019 at 11:57
யோவ் ரமேஸூ! வொங்கிட்டகூட படிப்பென நெறய்ய கீதா? அள்ளிவிடவும்.
September 11, 2019 at 07:37
அன்பு ஐயா, சுரதா,ஜெமோதா ன்னு படிக்கும் போது ரைமிங்கா கெட்ட வார்த்தை காதில் விழுந்தது எனக்கு மட்டும்தானா? அடிக்க வராதீங்க 😂
சுரதா பற்றிய நினைவுக்குறிப்பொன்றை மாமல்லன் அவர்கள் எழுதியது ( அதுவும் ஜெமோ பதிவு தான்)
//கல்லூரிப் பருவத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்வு.
மாவட்ட மத்திய நூலகத்தில் கூட்டம் முடிந்து, தலைமை தாங்கிய கவிஞர் சுரதா அவர்களுடன் நடந்து வந்தன பேச்சுப் போட்டி கோஷ்டிகள், சஃபையர் பஸ்டாப்பில் அவரது பஸ்ஸுக்காய் காத்திருப்பில் அங்கிருந்த மாணவன் ஒருவனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்
சுரதா: தம்பி என்ன படிக்கிறீங்க?
மாணவன்: எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் சார்
சுரதா: அப்படிங்களா ரொம்ப மகிழ்ச்சி
மாணவன்: (பூரிப்புடன்) தமிழை உயர்த்தணும்னுதான் சார் தமிழ் இலக்கியம் படிக்கிறேன்
சுரதா: அட ஆமா நேத்து நான்கூடப் பார்த்தேன் ரெண்டு இஞ்ச்சு ஒசரமாகி இருந்துது தமிழ். இப்பதான் காரணம் தெரியுது. ரொம்ப நன்றிங்க தம்பி.//😀
http://www.maamallan.com/?p=1068
September 11, 2019 at 11:54
…த்தா, இப்ப இன்னாண்ற? ப்ளேனேறிவந்து ஊட்லபூந்து ஒதிக்கட்டா?
சின்பஸ்ங்க்ளா அடக்கமா இல்லாகாட்டி கட்டாரியால கள்ச்சிகட்ருவேன், பட்டா…
ஜெயமோகன் இன்றேல், இன்றைய தேதிக்கு நகைச்சுவையே இல்லை என்பது உண்மைதான். சுரதா சுட்டிக்கு நன்றி. அதைப் படித்ததும் உருண்டுருண்டு சிரித்து, அடிப்படையில் குள்ளமான நானே ரெண்டு அங்குலம் உயர்ந்துவிட்டேனென்றால் பார்த்துக்கொல்லுங்கல்.
September 11, 2019 at 14:06
Third one is far out! You are Jeyamohan’s Jeyamohan indeed! 🤣
September 11, 2019 at 15:30
ஐயா, நன்றி. ஆனால் உங்கள் பார்வை சரியில்லை; ஏனெனில், இன்னமும் வீரியம் கொண்டு, ஆகவே கொடூர நெகிழ்வாலஜித்தன வர்ணனைகளை, விரல்விரலாகவும் கூட விரித்து எழுதக்கூடிய பராக்கிரமம் மிக்கவர் நம் பேராசான்!
“… இடக்கைப் பெருவிரலில் நழுவும் கோமணத்தின் நுனியைச் சுற்றிச் சுண்டுவிரலால் பிடித்து, ஆட்காட்டிவிரல் நகத்தால் விண்ணைக் கீறி, கோமேதக மோதிரம் அணிந்த மேதிற விரலைப் பிருத்வியை நோக்கித் திருப்பி, நடுவிரலால் நடுநிலைமையைப் பறைசாற்றி… அதேசமயம் வலது கைப் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சின்முத்திரையில் சேர்த்துப் பிற விரல்களை தம் ஹ்ருதயத்தின் பக்கம் நீட்டி மடித்து….” என இப்படியே தொடர்ந்து, துளிக்கூடக் கருணையே இல்லாமல் நீட்டி முழக்கக்கூடியவரல்லவா அவர்?
…நானெல்லாம் அவர் காலடி தூசுக்குக் கூடச் சமமில்லை. :-(
September 11, 2019 at 15:33
//‘Expand, mystify & noodle-ize every simple thing; divide and conquer’//
மேற்கண்ட படிப்பினைதான் முதல் இடம் பெறுகிறது. நீள நீளமான வாக்கியங்களில் ஜாங்கிரி சுற்றியதுபோல்,அல்லது நூடுல்ஸ் போல எழுதினால்தான் படிக்கிறவனும் எதோ இதில் சரக்கு இருக்கு, நமக்குப்புரியவில்லை, நமக்குப்புரியாததெல்லாம் உயர்வானவையே என்ற அபிப்ராயத்திற்கு வந்து, கஷ்டப்பட்டு படித்து தானும் அறிவுஜீவியே என்ற சுயகெளரவத்தை அடையலாம்.
September 11, 2019 at 15:49
யோவ்! இப்படிப் பொட்டுனு போட்டு உடைச்சீரென்றால்… … :-(
அதெல்லாம் இருக்கட்டும் – நீங்கள் ஒரு அறிவுஜீவியா இல்லையா? இதற்குச் சரியான பதில் சொல்லாவிட்டால் என் தலை சுக்குநூறாகச் சிதறிவிடும். :-((
September 11, 2019 at 16:17
அவன் எழுந்து நின்றான் என்பதை அவன் எழுந்தான் என்று
சுருக்கமாக எழுதலாமே.
இல்ல, சும்மா ஒரு ஐடியாதான். :)
September 11, 2019 at 17:54
அடேய்! நீர் யார் பக்கம்? ;-)
‘அவன் எழுந்தான்’ என்றால் தன் பின்பாகத்தை சிங்காசனத்திலிருந்து நீக்கினாலே அது முடிந்துவிடும். ஆனால் நின்றால்தானே ஐயா விண்ணை அறைய முடியும்?
முன்னேபின்னே வெண்முரசை நெட்டுருப் போட்டிருந்தால்தானே சூட்சுமங்கள் நுண்ணுணர்வுகளாக வெளிப்படும்??
போய் முதலில் – கடந்த 100 பதிவுகளைப் படித்துவிட்டு (அதாவது அவருடையதை) வாரும். பின்னர் என்னை வாரலாம்.
January 19, 2020 at 05:36
[…] […]