கருந்தேள் கண்ணாயிர நடிகக் கோமாளிகளும் தமிழக வெட்டிக் கழகங்களும்

February 3, 2024

1

நான் பெரிய எண்ணிக்கையில் தமிழ்ப் படங்களைப் பார்த்ததில்லை; எனது வெற்றிகரமான பலமாமாங்க வாழ்க்கை(!)யில், இந்த எழவு அதிக பட்சம் சுமார் 20 இருக்கலாம்…

(இப்போது எண்ணிப் பார்த்தேன்; ஏனெனில், எண்ணித் துணிக கருமாந்திரம், ப்ளடி… இதில் நான் அண்மையில் ஒருவழியாகப் பார்த்த 1965ன் ‘திருவிளையாடல்’ திரைப்படமும் ஒன்று – இது எனக்குப் பிடித்திருந்தது. பலமுறை ஸவுண்ட் ரேக்கில் கேட்டிருந்த தருமி-சிவன் வசனத்தின் காட்சியமைப்பையும் நடிப்பையும் உண்மையாகவே கண்டு களித்தேன்!)

…ஆனால் ரேடியோவிலும் பஸ்களிலும் நிறைய தமிழ்ப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் அந்தக்கால ‘ஒளியும் ஒலியும்’ தொலைக்காட்சிச் சினிமாஎழவில் சிலபல பாட்டுகளைப் பார்த்திருக்கிறேன். இதனை ஒப்புக்கொள்ளவேண்டும். (+ முக்கியமாக, இந்த அற்பசராசரியான தமிழ்த் திரைப்பட அதலபாதாள ஊழலுலகில், ‘எங்கெங்கு காணினும் அட்டைக் காப்பியடா’ எனும் நோகவைக்கும் உண்மையை அறிந்து கொண்டிருக்கிறேன்)

என் புளகாங்கித விசிலடிச்சான் குஞ்சப்ப மாணவ-மாணவிகளிடமிருந்து பலப்பல விஜய்குஜய் சூர்யாசந்திரா வகை கோமாளிக் கோமகன்களின் போலிவீரதீர அட்டைக்கத்திப் பிரதாபங்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களில் பலர் – பள்ளிக்குக் கட்டவேண்டிய சொற்ப மாதாந்திர ஃபீஸைக் கட்டமுடியாமல் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லி (சில சமயங்களில் என்னிடமிருந்தே) உதவித்தொகை பெற்று – அதே சமயம் கமுக்கமாக விஜய் வகையறா உதிரிகளின் படம்பார்க்க முதல்நாள்-முதல்ஷோ FDFS வெறியாட்டத்தை ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் வாங்கிக் கொண்டாடிக் குஷியடைவதையும் அறிந்திருக்கிறேன்…

(உலகத்தின் மகா சோகங்களில் ஒன்று, என்னிடம் (என்னிடம்!) படித்த மாணவர்கள் சிலர், வளர்ந்த(!)பின், இந்த விஜய்களின் குஞ்சாமணிகளைச் சப்பிக்கொண்டு தொங்குவதை மாரடைப்புடன் பார்க்க நேர்வது)

:-(

சரி.

பிசாத்து பெறாத தமிழ் பிலிம்களைப் பெரிய அளவில் பார்க்காதிருப்பதை ஒரு பெரிய பெருமையாவோ அல்லது சுயதம்பட்டமாகவோ சொல்லவில்லை; வெறும் ஆசுவாசம் – ஏதோ இந்தமாதிரி அயோக்கிய விஷய எழவுகளில் என் வாழ்க்கையை வீணடிக்கவில்லையே எனும் மனத் திருப்தியுடனும் தான் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். (ஆனால் பிற விஷயங்களில்  நேரத்தை ஏகத்துக்கும் வீணடித்திருக்கிறேன் என்பதும் உண்மை :-( – என்ன செய்ய, சொல்லுங்கள்…)

2

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகக் கோமாளிகளில், ஜெய்ஷங்கர்தாம் உச்சத்தில் இருக்கிறார்.

அண்மையில், வருடாந்திர நிகழ்வான என் பழங்குப்பைகளைத் தூசிதட்டிக் காயலான் கடைக்குப் போடும் வைபவத்தில், 1972 பத்திரிகையில் வெளிவந்த ‘தமிழ் ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்ஷங்கர் பட விளம்பரம் ஒன்றைப் பார்த்து புத்தி பேதலிக்க நேர்ந்தது.

ஆனால் ஜெய்ஷங்கர்  எந்தவிதமான கழகக்கலக பம்மாத்துகளிலும் ஈடுபடவில்லை என நினைக்கிறேன்.

சில வருடங்கள் முன், ஒரு இளைஞர் (என் விருப்புவெறுப்புகளை நன்கறிந்தவர், இன்றுவரை தொடர்பில் இருக்கிறார் – பாவம்), கீழ்கண்ட சண்டைக் காட்சியை நான் அவசியம் பார்த்தேயாக வேண்டும் என அனுப்பினார்.

:-(

ஜேம்ஸ்பாண்ட் ஏமாற்றவில்லை.

‘பெண் ஜேம்ஸ்பாண்ட்’ என ஒரு நடிகையம்மாள் இருந்தார் என்று வேறு சொன்னார். எனக்குச் சலித்து விட்டது. (விஜய்குமாரி?? இது தவறாக இருக்கலாம்)

…ஆனால் ஜெய்ஷங்கர் கேளிக்கைப் படங்களில் மட்டும் தான் நடித்தார். அரசியலுக்கு வந்து கேளிக்கையில் ஈடுபடவில்லை. (நான் பார்த்தவரை, இந்த தமிழ் ஜேம்ஸ்பாண்டுக்கு நடிப்பும் வரவில்லை என்பது தமிழகத்துக்குக் கிடைத்த ஊக்க போனஸ்)

ஆகவே.

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகக் கோமாளிகளில், ஜெய்ஷங்கர்தாம் உச்சத்தில் இருக்கிறார்.

3

அந்த இளைஞர் அவ்வப்போது தொல்லைபேசுவார். புத்திசாலிதான் – ஆனால் எனக்குச் சமகால அரசியல் நடப்புகளைக் குறித்து பாலபாடம் எடுப்பதில் அவருக்கு ஒரு குரூர ஆர்வம். என்ன செய்ய…

அவர் சொல்லித்தான் ரஜினி கமல் அஜித் சூர்யா விஜய் (இன்னும் சிலபல பெயர்களைச் சொன்னார், எனக்கு நினைவில்லை, ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா!)  போன்ற தண்டங்களின் கோமாளி நடிப்பைப் பற்றியெல்லாம் கொஞ்சமேனும் தெரியும்; அவர் சொன்ன வகையில், இந்த தற்காலத் தமிழ்த்தண்டங்களின் சண்டைக் காட்சிகள், ஜேம்ஸ்பாண்டின் காட்சிகளை விட மிகக் கேவலமாகத்தான் இருக்கின்றன போலும்…

தமிழகம் இந்தக் கோமாளிகளின் பிடியில் அவ்வப்போது (ஆனால் தொடர்ந்து) மாட்டிக்கொள்வது என்பது சோகம் தருவது.

சரி.

ட்விட்டர்/எக்ஸ் தளத்தில் நான் ஒருமாதிரி தற்காலிகமாக (என நினைக்கிறேன்) முடக்கப் பட்டிருக்கிறேன் – ஆகவே அக்கப்போர்களை ஓரளவாவது உடனுக்குடன் அறியும் பாக்கியத்தை நான் பெறவில்லை.

அதனால் என்ன, மேற்சொன்ன இளைஞரின் உதவி எனக்கு எப்போதுமே கிடைக்கும் + அவருடைய அருட்பெருங்கருணையும் கடாட்சமும் எனக்கு பாலிக்கும் என்பதிலிருந்து எனக்கு விடுதலையேயில்லை. என்ன குரூரமான விஷயமிது. :-(

இத்தனைக்கும் எனக்கு இவ்விஷயங்களில் பெரும் ஈடுபாடு என்றில்லை என்று சொன்னாலும், ஏன், சமயத்தில் படுமோசமாகத் திட்டினாலும் அவருக்குச் சொரணையேயில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆனால் அவர் தடிமன்தோல் திராவிட எருமைமாடு, என்ன செய்ய. அப்படியே அவரை விளித்தாலும் “சார், உங்களுக்கும் நாதியில்லை எனக்கும் நாதியில்லை அதனால லூஸ்லவுடுங்க” எனச் சிரித்துக்கொண்டே அகன்று விடுவார். (ஆனால் அவர் தொழில் நுட்ப எழவுகளிலும் ஈடுபாடு கொண்டவர், புத்திசாலி, தற்காலத் தற்குறித் தமிழ் இலக்கியம் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காத ‘ஜெயமோகன் என்றால் கிலோ எவ்வளவு வெண்முரசு’ பாக்கியம் பெற்றவர், ப்ளடி – ஆகவே இப்போதைக்கு எனக்கு விடுதலை இல்லை என்பது நிதர்சனம்)

ஆக.

இன்று காலை, என் படுசெல்லங்களில் ஒன்றான விஜய்குஜய் எனும்  விடலை அரசியல் காட்சி ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறது எனத் தேவைமெனெக்கட்டுத் தெரிவித்தார். என் இறும்பேதிக்கு, மன்னிக்கவும், இறும்பூதுக்கு அளவேயில்லை.

இந்த திராவிட துர்ச்சம்பவம் குறித்த விடலையின் அறிக்கையையும் அனுப்பினார்.

தலையில் அடித்துக்கொண்டு படித்தேன்.

தமிழகத்தின் முன்னேற்றத்தை விரும்புவதாக கூறும் இந்த (தமிழ் பிலிம் வழியாக ஜேப்படியடித்து தமிழக இளைஞர்கள் பலரை கொட்டை நசுக்கி வரும்) திராவிடப் பாரம்பரிய விடலைக்கு நாலுவரி தமிழில் அடிப்படை இலக்கண சுத்தமாக வரவில்லை. வரிக்கு ஒரு தவறு, ப்ளடி ஹெல். இந்த அழகில் தமிழகத்தை முன்னேற்ற வருகிறதாம்…. மொதல்ல தமிழ் அடிப்படைகள புர்ஞ்சிக்கினு வாங்கடா எருமெமாடுங்க்ளா…

ஒரு சிறு உதாரணமாக – கச்சியின் பெயரிலேயே செந்தவறு தமிழ்த் தவறு ஒன்று.

அந்தக் கச்சி, ‘தமிழக வெற்றி கட்சி’ அல்ல – மாறாக ‘தமிழக வெற்றிக் கட்சி’ என்று இருந்திருக்க வேண்டும். முதல் கோணல், முற்றும் கோணல்.

இளைஞரின் சால்ஜாப்பு: ~~”விஜய்விடலை நியூமராலஜி நம்பராலஜி லெட்டராலஜி படி, ஒற்றெழுத்தெழவை தவிர்த்திருக்கலாம்!”

சரிதான்.

எனக்கு என்ன பட்டுத் தொலைக்கிறது என்றால் அது தமிழக விஜய் கட்சி, விஜய் என்பதை தமிழ்ப்படுத்தியெடுத்து ப்ளடி வெற்றி என ஆக்கியிருக்கிறார்கள். க் அகற்றப்பட்டது.

‘டமிலக விஜய் கச்சி’ எனப் பெயர் வைக்க அவர்கள் கூச்சப் பட்டிருக்கிறார்கள், அவ்ளொதான். விஜய் என்றால் வடமொழித் தீட்டு வந்துவிடுமே!

‘பிறப்பொக்கும் எல்லா மசுர்க்கும்’ என அந்தக் கட்சிகோஷம் திராவிடப் படுத்தப் பட்டிருக்கவேண்டும். சான்ஸைத் தவர விட்டுவிட்டார்கள், பேடிகள்.

குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் தமிழகத்தை இன்னமும் கூறுபோட்டு வியாவாரம் செய்ய இன்னொரு திராவிடக் கழகக் கட்சி. தமிழக வெட்டிக் கழகம்.

ஆக.

கழிசடைத் தமிழ்ப்பட கச்சி முதலாளியின் திராவிடமாயை இப்படி ஒரு குப்பைத்தனமாக ஆரம்பிக்கிறது. டமிளகம் எதனை வெற்றி கொள்ளப் போகிறது? இன்னொரு இமயவரம்பன் விஜயவம்பன் புறநானூற்று வீரத்துடன் வீரிட்டெழப்போகிறாரோ?

தமிழகத்தின் கூறுகெட்ட விசிலடிச்சான் ஆண்பெண் குஞ்சாமணிகளுக்கு இன்னொரு ஜிகினா பஞ்சுமிட்டாய் கிடைத்து விட்டதோ? வழக்கம் போலவே அயோக்கிய அட்டைக்கத்தி வீரர்களின் பின் அணி திரள்வார்களோ?

நம் இளைஞர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் ஏன் வெறும் முட்டாக்கூ ரசிகக் குஞ்சாமணிகளாக இருக்கிறார்கள்?

ஏன் நம் தற்கால நடிகர்கள் தொடர்ந்து எங்கு பார்த்தாலும் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள்? ஒருவேளை திரைப்படங்களில் நடிக்கும் திறமையற்ற பேடிகளாக இருந்தாலும் நிறைய காசு பார்ப்பதால், நிஜ வாழ்க்கையில் நடிக்க முயற்சித்தால் இன்னமும் பிரமிப்பு தருமளவுக்கு பெருமளவு கொள்ளையடித்து  ஈட்டலாம் என்றா?

ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் போல இவர்களும் வெறும் அட்டைக்கத்தி சுற்றிக்கொண்டிருந்தால், அவற்றின் மூலம் சிறிய அளவு ஆனால் தொடர் ஜேப்படிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் என்னவாம்?

என்ன எழவோ

தமிலகம் வெளங்கிடுண்டே….

சுபம்.

10 Responses to “கருந்தேள் கண்ணாயிர நடிகக் கோமாளிகளும் தமிழக வெட்டிக் கழகங்களும்”

  1. dagalti Says:

    இனிய பார்ப்பன மேட்டிமைவாதியே,

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – என்ற பெயரில்

    முன்னேற்றக் என்று க் மிகுந்தது
    ஆனால் அண்ணாத் என்று த் மிகவில்லை

    ஏன்?

    அண்ணாத்துரை என்ற பெயரின் பொருள் என்ன?
    யாராலும் அருகில் செல்லமுடியாத பரிதியையே அண்ணா துரை என்பர்.

    ஆதனால் ‘யாராலும் அருகில் செல்ல முடியாத திராவிடம் என்ற பொருளில் அண்ணாத்’ திரவிடம் என்றன்றோ இருந்திருக்கவேண்டும்? ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகுமே.

    ஆனால் வழக்கில் அவ்வாறு இலையன்றோ?

    அஃது ஏனென வினவின், ஆங்கு ‘அண்ணா’ என்பது
    விளங்கொளியாம் பேரறிஞரின் தனிப்பெயரின் சிறப்பின் பொருட்டு, எம்மனார் புலவர்.

    இதனை கருத்தில் இறுத்தி, த.வ.க’வை ஆராயத் தலைப்படுக:

    தமிழரான தாய் தந்தையர் தம் மகவுக்குச் சமசுகிரதத்தில் பெயர் இடும் இழிநிலையை தமிழன் அடைந்துவிட்டான். அப்பெற்றோரையும் மதித்து நல்லோரும் அப்பெயரை மாற்றாது இருந்துவிடும் பண்புளோன் நற்றமிழன். ஆயின், அரசியற் பயணத்திற் பண்பாட்டை அழுத்தமாக நிலைநிறுத்தவேண்டிய கடப்பாட்டை உணர்ந்தவராக இன்னார் உள்ளார்.

    விஜய் என்ற அயற்பெயரை ‘வெற்றி’ என்று தூதமிழில் மாற்றினார்

    கட்சி என்பது கக்ஷி என்ற சமசுகிரத் தொல்லின் தற்பவம். அதை முற்றே தவிர்த்தார் நம் அழகிய தமிழ் மகன்.

    ஆக, இது வெற்றிக் கழகம் அல்ல; வெற்றி கழகம் தான்.

    ம.கோ.ரா தனிக்கட்சி தொடங்கி பெயரிட்டபோதும், தினத்தந்தி அதை நெடுநாள் எம்.ஜி.ஆர் கட்சி என்றே அழைத்துவந்தது நும்போன்ற நீள் அகவையினோர்க்கு நினைவிருக்கலாம்.

    இப்பெயரிட்டதன் வழியே, அதுபோன்ற ஏகடியங்களை முறியடித்துவிடுகிறது ‘வெற்றி கழகம்’.

    தமிழ்நாடு என்ற இன்றைய மாநிலம், சில ஆண்டுகளின் மூன்று நான்கு மாநிலங்களாகப் பிரியலாம்.

    அதனால் தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாடு என்ற சொல்லை விலக்கி, ‘தமிழகம்’ என்றச் சொல்லைத் தேர்வு செய்துள்ளார் இவ்விளையசெம்மல்.

    தமிழுணர்வுள்ள அனைவரும் “வளன் வெற்றி வாழ்க!” என்று சொல்வோம். தாங்கள் அவ்வாறு மகிழாததில் வியப்பில்லை.


    • உம் பின்னூட்டத்தைப்  (=எனிமா?) பற்றி எனக்கு மிகக் கடுமையான ஆட்சேபங்கள் இருக்கின்றன.

      1. பொதுவாகவே எம் காலட்சேபப் பதிவுகளின் நீளத்தை விட – உங்கள் அகண்ட பின்னூட்டங்களின் ஆழ நீளங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இவை எவற்றைக் காண்பிக்கிறன என்றால், உங்களுக்கு உரத்து உறுத்தும்படிக்கு மட்டமாக மட்டுறுத்த எனக்குத் திராணியுமில்லை, வேர்ட்ப்ரெஸ் கோலாகலங்கள் எனக்குப் பிடிபடவுமில்லை.

      2. // நும்போன்ற நீள் அகவையினோர்க்கு நினைவிருக்கலாம்

      கிழபோல்ட் பண்டிதத் தமிழில் கண்டனத்துக்குரிய ஆணாதிக்க-பார்ப்பனீய தமிழ்ப்பெருமைப் புண்ணாக்குக் கருத்துகளை எழுதும் உமக்கு, ஏன் பெரியவர்களிடம் – எம்மையே மறுமையில் விடும் – சான்றோர்களிடம் மரியாதையேயில்லை?

      எழுதப்படுவது எல்லாம் புனைவே எனும் மகாமகோ உண்மையின் சாரத்தைப் புரிந்துகொள்ளாமல், என்னைப் பற்றி நான் எழுதுவதை உண்மை என நம்பி, எனக்கு ஒரு வயதை நிர்ணயிப்பது உச்சகட்ட நகைச்சுவை. நான் இன்னமும் பிறக்கவேயில்லை.

      ஜெயமோகனை விட என் சுயமோகப் புனைவுகளின் வீச்சம் அதிகம் என்பதை அறிவீர்.

      3. //அஃது ஏனென வினவின்,

      எவன் ப்ளடி கேட்டான் நும்மிடம்?

      கேள்விபதில் என அனைத்தையும் எழுதிக் குவிக்க நீர் என்ன பெரிய கலைங்கரா?

      4. //சமசுகிர….. அதை முற்றே தவிர்த்தார் நம் அழகிய தமிழ் மகன்

      ஐயன்மீர். அந்த ப்ளடி கட்சியின் இல்பொருட்  அதியுயர் நவிற்சிப் பெயர்: “தமிழக வெற்றி கச்சி” – என அறிவீர்தானே.
      அதில் இருக்கும் அகம் என்பது ப்ளடி தமிழா?

      சமசுகிருதம் இங்கேயும் புகுத்தப்பட்ட ஆரிய சதியை எண்ணி பிலாக்கணமிடுவதை விட்டுவிட்டு இப்படி வெட்டிப் பெருமிதம் உமக்கு ஒரு கேடா?

      …இன்னமும் உங்களைக் கழுவியூற்ற என, சிலபல தாத்பர்யங்கள் இருக்கின்றன, ஆனால் துணைவி என்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரம் கழுவவேண்டும். சமையலறைத்தொட்டி நிரம்பி வழிந்து சுடுகாடு செல்வதற்குள்…

      அகல்கிறேன்.

      நன்றி.

      ஆனால் – தொடர்ந்து பிறரை வாரிவிடும் வாரில் ஈடுபடும் வாரிசவாயுவாரே! இன்று போய் நாளையும் வாரும்.

  2. Ramesh Narayanan Says:

    என் பங்குக்குக் கடுப்பேத்த வேண்டாவா,…

    //சில வருடங்கள் முன், ஒரு இளைஞர் (என் விருப்புவெறுப்புகளை நன்கறிந்தவர், இன்றுவரை தொடர்பில் இருக்கிறார் – பாவம்),… // ஓர்… 😁👍

  3. Balaji S Says:

    Karundhel Rajesh bro at BLRu your friend??

  4. Balaji S Says:

    Please join Mr James Vasanthan to have that corrected.
    6.53 to 7.16 minutes of given video
    Mr T Velmurugan of Tamizhiga Vazhvurmuai Katchi also contesting over VTK name in English.


    • Thanks for the intro to the gent; didn’t know that this James Vasanthan guy existed even.

      But I agree with his sane take.

      ANYTHING & EVERYTHING associated with Tamil fillums (with a couple of saving graces/exceptions, AFAIK) is mediocre (at best) – so what do we expect?

  5. Blablabla Says:

    இந்த திராவிட அல்லது தமிழ் ஊழல்வாதிகள் இருப்பதால் தான் சென்னை வீதிகளில் ஆபாசமான தமிழ் மொழியையாவது கேட்க முடிகிறது. இல்லாவிட்டால் மும்பை, புனே, சண்டிகர் போல் எங்கெங்கும் ஹிந்தியடா. ஹிந்தி ஒரு கொலைகார மொழி. ஆங்கிலம் எவ்வளவோ பேஷ். இந்த கொலைகார ஹிந்தியானது இந்த நூற்றாண்டு முடியும் முன் பெரும்பாலான மற்ற இந்திய மொழிகளை ஸ்வாஹா செய்திருக்கும்.


    • கரூர்காரரே!

      உங்களுடைய பிரச்சினைதான் என்ன? ஒரு தொடர்புமில்லாமல் எத்தையோ சொல்ல வந்துவிட்டீர்களே!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...