திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு

May 24, 2015

(அல்லது) திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (2/2)

இதன் முதல்பகுதி. இதனைப் படித்துவிட்டு வந்தால் இந்த இரண்டாம்பாகம் பிடிபடலாம்.

…இந்த திராவிடஊழல் பணம் பலவழிகளில், திராவிட அரசுகளால், அரசில் இல்லாத திராவிடர்களாலுமேகூட  அமோகமாகப் பெறப் படுகிறது. இதனைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலகாரணங்களுக்காக இருக்கும் வகுப்பில் – தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும், ஏன், சில பன்னாட்டு நிறுவனங்களுமேகூட அடக்கம்.

சரி. இந்த ஊழல் பணம், யார் மூலம் எப்படி வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

-0-0-0-0-0-0-0-

…செய்திகளையும், சுயானுபவங்களையும், சில  உயர்மட்ட (நேர்மையான எனவும் புரிந்துகொள்ளலாம்) அதிகாரிகளின் கருத்துகளையும், சில ‘அந்தக் கால’ அரசியல்வாதிகளின் புலம்பலையும், இந்தக் கால அரசியல்பேடிகளின் அலப்பரைகளியும் கருத்தில்கொண்டு, தொகுத்துப் பகுத்து – இவற்றில் பத்து முக்கிய வழிவகைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்; இதனைச் சமகால சங்குகால (அதாவது திராவிடம் தமிழகத்துக்கு ஊதும் சங்கு, என்ற கருத்தில்)  திரட்டு என்று கருதி – இதற்கு கொள்ளைபத்து என்ற பெயர் சரியானது.  அவையாவன:

1. மக்கள் வரிப்பணச் செலவுகள் மூலமாகக் கிடைக்கும் நிதி: அரசுத் திட்டங்களின் மூலம் செய்யப்படும் கட்டுமானப்பணிகளுக்கும், வளர்ச்சி/பயன்பாட்டு/மேம்பாட்டுப் பணிகள் நடப்பதற்கும் – கான்ட்ரேக்டர்கள் (ஒப்பந்ததாரர்கள்) எனும் கண்ணி முக்கியம். ஆனால் – மக்கள் வரிப்பணத்தை அரசு செலவு செய்யும்போது அதில் ஒரு பகுதி இந்த ஒப்பந்ததாரர்கள் மனமுவந்து கொடுக்கும் ‘கமிஷன்’ மூலம் திராவிடக் கட்சிகளுக்குத் திரும்பி வந்துவிடுகிறது. பணிகளும் ஏனோதானோதான்!

இன்னொரு விதத்திலும் இது செயல் படுகிறது; பெருமதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் பலசமயங்களில், திராவிடக் கட்சிக்காரர்களாலேயே எடுக்கப்பட்டு தரமற்ற வகையில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதிலும் கொள்ளை லாபம்.

2. அவர்களுடைய ஆதாயங்களுக்காக மக்கள் கொடுக்கும் ஊழல் பணம்: இதில் பலவகைகள் உண்டு.

 • அரசு வேலைவாய்ப்புகளுக்காக கொடுக்கப்படவேண்டிய லஞ்சம்
 • அரசு வேலை மாற்றல்களுக்காக/பணிவுயர்வுக்காக/பணம்கொழிக்கும் வாய்ப்புகளுக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம்
 • மக்கள் தங்கள் சான்றிதழ்களுக்காக, பத்திரப் பதிவுகளுக்காக அழுதாகவேண்டிய பணம் (ஆனால், இந்த வீடுமனை விற்பனை/வாங்குதல்களில் நேர்மையாக இருக்க பெரும்பாலான மக்களும் விரும்புவதில்லை, வரிகட்ட, ஸ்டேம்ப் ட்யூட்டி கட்ட விழைவதில்லை என்பதும் சரியே!)
 • மின்சார இணைப்பு, குடி நீர்/கழிவு நீர் இணைப்பு, வீடு கட்ட/இடிக்க அனுமதி போன்றவற்றிற்காக அழப்படும் பணம்
 • விற்பனைவரி/கலால் துறை போன்றவற்றில் ஏய்ப்பதற்குக் கட்டவேண்டிய தண்டம் (கலால் துறை மத்திய அரசாங்கத்தினுடையதுதான் – முழுமைக்காக இதனைச் சேர்த்தேன்)
 • தொழில்/நிறுவனங்கள்/கல்வியமைப்புகள் தொடர்பான சான்றிதழ்கள், அனுமதிகள் பெற தொழிலதிபர்கள் கொடுக்கவேண்டிய தண்டம்
 • அரசுக்காக, அரசின் திட்டங்களுக்காக பொருட்களைத் தயாரித்து வினியோகிக்கும் நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய கையூட்டு (நூலக ஆர்டர் பெற பதிப்பகங்கள் கொடுக்கும் லஞ்சமும் இப்பிரிவில் அடக்கம்​)
 • ஊழல் செய்து (முட்டாள்தனமாக) மாட்டிக்கொண்டால், தப்பிக்கக் கொடுக்கவேண்டிய தண்டம்
 • தொழிற்சாலைகள் – சுற்றுச்சூழலை மாசு செய்து, ஆனால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதற்காகக் கொடுக்கவேண்டிய கள்ளப் பணம்

3. டாஸ்மேக் (Tasmac) எனும் அமுதசுரபி சுரக்கும் நிதி: திமுகவானாலும் சரி, அஇஅதிமுகவானாலும் சரி – கொள்கைப்பிடிப்பு என்பது கொள்ளைப்பிடிப்பு என்பதான காரணத்தால், அதே  ஒருசில நிறுவனங்களிடமிருந்துதான் குடியைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆவணங்கள் சரியாக வைக்கப்படாத, கட்டுப்பாடுகளற்ற – ஆனால் வருடத்துக்கு 40000 கோடி ரூபாய் புழங்கும் இத்தொழிலின்(!) மூலமாக வரும் ஊழல் பணம் பெரிது! (இப்பதிவின் முந்தையதொரு வரைவில், இந்த டாஸ்மேக் எழவையும் சேர்க்க மறந்துவிட்டேன்; இதனையும், இன்னும் சில விவரங்களையும் குறிப்பிட்ட அந்த ‘பெயர் சொல்லமுடியாத’ நண்பருக்கு நன்றி!)

4. தமிழ்த்தாய் வாரி வழங்கும் மண்ணும், மணலும், கல்லும் – மந்திரமாயமாக மாறி அரசியல்வாத மடியில் பணமாக விழும் ஊழல்: தமிழகத்தின் இயற்கை வளத்தைக் கூறுபோட்டு விற்கும் திராவிடர்கள் – ஆற்றுமணலையும், மலைக் கற்களையும் அவரவர்களுக்குப் ‘பிடித்த’ நிறுவனங்களுக்கும், ஆட்களுக்கும் தாரை வார்த்து, பொதுச் சொத்துகளை/நிலங்களை தனியார் கல்வி(!) நிலையங்களுக்கும் அடிமாட்டு விலைக்குக் கொடுத்து அதற்காகப் பெறும் பெரும் ஊழல் பணம் என்பது ஒரு வற்றாச் சுரங்கம். (மேலும் படிக்க: (1)  கனிமொழியெனும் மணல் வாரி அம்மன், (2) ஸ்டாலின் சந்தன பாக்கியம்)

 5. மத்திய அரசின் மூலமாக ஏற்படும் ஊழல் சுனாமி பணம்: அவ்வப்போது திராவிடர்களுக்கு மத்திய ஆட்சியில் பங்கு பெற அல்லது ஆதரிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்போது நடக்கும் பேரங்களில் கூச்சமேயில்லாமல் பணம் புழங்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்வதும், தில்லிகாரர்களே முகம் சுளிக்கும் வகையில் வானளாவ, அதிரடியாக ஊழல் செய்வதும் முடியும். சொந்தக் காரர்களுக்கு கழகச் சொந்தங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் பெற்றுக்கொள்வதிலிருந்து, ‘அலுவகத்திலேயே பணத்தைக் கொணர்ந்து இப்பவே தா’ என்று கூச்ச நாச்சமில்லாமல் கேட்பது வரை கேவலங்கள் அரங்கேறும். (அண்மையில், மத்திய அரசதிகாரத்திலிருந்து பணிமூப்பு பெற்ற பழுத்த (கொழுத்த அல்ல) ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் எனக்குச் சொன்ன தமிழக அமைச்சர்களின் (2009-14) விவரங்களைக் கேட்டால், எனக்கே குமட்டிக்கொண்டு வந்தது – அவ்வளவு படுகேவலமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் நம் திமுக திராவிடச் சிகாமணி மந்திரிகள்! இதில் இவர் குறிப்பிட்டுச் சொன்னது தயாநிதி மாறன், டிஆர் பாலு பற்றி; பாவம், ஆஇராசா – அவர் தன்னுடைய ‘கருமமே’ கண்ணாயிரமாக இருந்திருக்கிறார் – அடாவடியாக, மரியாதையில்லாமல் ரௌடித்தனமாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் ஆசுவாசம் தரும் விஷயம்! )

இந்த 1, 2, 3, 4,  5 பிரிவுகள் ஆண்டுகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு பெரிய அட்சயபாத்திரம்; இவைகள் செவ்வனே நடப்பதற்கு அதிகாரவர்க்கத்தின் கூட்டுழைப்பும், அவர்களுக்கு வாய்க்கரிசி போடுதலும் முக்கியம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்னொன்று – மற்றபடி கீழ்கண்ட பிற ஐந்து (6-10) வகையறா கொள்ளைகள்தாம் ஆட்சியில் இருக்காத திராவிடர்கள் செய்யமுடியும் என்றாலும், ஆட்சியிலிருப்பவர்களும் இதில் அமோகமாக ஈடுபடுவது திராவிடத் தாத்பர்யம்.

6. மிரட்டல், ‘பாதுகாப்பு’ ஊழல் பணம்: அபரிமிதமாகப் பணம் படைத்தவர்கள், தேவையான பின்புலமில்லாமல் சிக்கலான தொழில் செய்பவர்கள் – வழக்கமாக மிரட்டப்பட்டு அவர்களிடமிருந்து மாதாமாதம் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை கறக்கப்படுவது ஒரு வழி. இன்னொன்று தொழிலதிபர்களை. நிலச்சுவான்தார்களை பலவாறும் மிரட்டி – அவர்களுக்குத் தங்களிடமிருந்தே பாதுகாப்பை வாங்கித் தருவது. அதாவது எனக்கு அவ்வப்போது பணம் கொடுத்தாயானால், என்னிடமிருந்து உனக்குத் தொல்லை வராது எனும் அடிப்படை திராவிட அறம் சார்ந்த வழி. (அண்மையில் நமக்கு கேரளாவுடன் முள்ளுப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டபோது, தமிழகத்தில் தொழில் நடத்திக்கொண்டிருந்த பல கேரளம் சார்ந்த தொழிலதிபர்கள் – சிலபல திராவிடக் கட்சிகளுக்கு(= தலைவர்களுக்கு)  ‘நன்கொடை’ கொடுத்தது இந்த ‘பாதுகாப்பு’ வகையறாதான்!)

7. சட்டம்  சாரா ‘ஸெட்டில்மென்ட்’ ஊழல் பணம்: இதைப் பொதுவாக ‘கட்டப் பஞ்சாயத்து‘ என்கிறார்கள்; இதன் பயன்பாடு பெரும்பாலும் கீழ்/நடுமட்ட திராவிட அரசியல்வாத குண்டர்களிடம் இருக்கிறது. ஆனால் பணத்தின் அளவைப் பொறுத்து இதில் மேல்தட்டு திராவிடத் தலைவர்களும் ஈடுபடுவார்கள். இது சிறு தொழில் பிரச்சினை, சொத்துப் பிரச்சினை, வாடகைவீடு, அசையாசொத்து வாங்கல்/விற்றல், காதல் பிரச்சினைகள் போன்றவற்றில் அடியாட்கள் பலத்துடன் நடப்பது. சில சமயங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யப்படாமல், சொத்துகளே அப்படியே அமுக்கிவிடப்படுவதும் உண்டு. இவற்றைத் தவிர வீடுகட்ட, கட்டுமானப் பொருட்களை சாலையோரத்தில் அடுக்கிவைக்க என்றெல்லாம் முயன்றால் லோக்கல் திராவிடத் தலைவர்கள் பஞ்சப்படி கேட்டுவருவார்கள், அவர்களுக்கும் பாவப்பட்ட பொதுமக்கள் அழவேண்டும். (ஆனானப்பட்ட தமிழகத்தில் இன்னமும் ஆட்கடத்திப் பணம்கேட்கும் தொழில் சரியாக வளரவில்லை, ஏனிப்படியானது?)

8. அரசு நிலங்கள், கோவில், புறம்போக்கு, கண்மாய்/ஏரி நிலங்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களை திராவிடார்ஜிதம் செய்வதுமூலம் வரும் நிதி: ஒவ்வொரு ஊராட்சியிலும் அறிவியல்பூர்வமாக நடந்துவரும் நிகழ்வுகள் இவை: இப்படிப் பெறப்பட்ட நிலங்களை  – அவற்றை ப்ளாட் போட்டு விற்பது அல்லது கும்பலாக அவரவர் ஜாதிக் குடும்பங்களை அந்த நிலங்களில் வீடு கட்ட வைத்து அடாவடி செய்வது, அவர்களிடமும் பணம் பிடுங்குவது. அவற்றிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான தொழில்களை நடத்துவது.

(இந்த 6ம் 7ம் 8ம் தான் என் அனுமானத்தில் அரசியல்வாத கொலைகள், அடிஉதைகளுக்கு ஒரு முக்கியமான காரணம்; பலப்பல நம்பகத்தன்மைவாய்ந்த செய்திகளை (dependable data points) வைத்துக்கொண்டுதான் இப்படிச் சொல்கிறேன்)

 

9. கட்டாய ‘நன்கொடை’ ஊழல்: பெரும்பாலும் விழாக்களுக்காக (முப்பெரும் விழா, பாசறைகள் போன்ற மகாமகோ காமெடி ஷோக்களுக்காக) கழகக் கண்மணி வசூல்ராஜாக்களால், வியாபாரிகளிடமிருந்தும், தொழிலதிபர்களிடமிருந்தும் அஹிம்ஸை முறைகளின் மூலமாக அவ்வப்போது பெறப்படும் ஊழல் பணம். ஒரு மாவட்டச் செயலாளர் 2 கோடி ரூபாய்களை கழகத்துக்கு தேர்தல் நிதியாகக் கொடுத்தார் என்றால், அவர் தன் சொந்தப் பணத்தையா கொடுப்பார்? ‘நன்கொடை’களைப் பெற்று, அதில் தனக்குத் தேவையானதை அமுக்கிக்கொண்டு மிச்சத்தைதானே கொடுப்பார்?

10. சிலபல விஷயங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்காக க்ரிமினல் உதிரிகளிடமிருந்து பெறும் ஊழல் பணம்: அடிமட்டங்களில் இது  ‘மாமூல்’ என்றழைக்கப் படுகிறது. (எடுத்துக்காட்டுகளாக – ஒரு காலத்தில் ஜிப்புகள் (zippers) இந்தியாவுக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தன, இன்னொரு காலத்தில் பெட்ரோலும் டீஸலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தன – இவை இரண்டிலிருந்தும் திராவிடர்கள் அடைந்த ஆதாயங்கள் அதிகம்; தற்காலத்து எடுத்துக்காட்டாக திருட்டு டிவிடி, லாட்டரி டிக்கெட் வியாபாரங்களைச் சொல்லலாம்.)

ஒரு முக்கியமான குறிப்பு: மேற்கண்ட அனைத்துத் துறைகளிலும் நேர்மையான அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமேதான், வருடத்துக்கு மும்மாரியாவது பெய்கிறது! :-(

-0-0-0-0-0-0-0-

… ஊழல் நடக்கிறது, சரி. திராவிடஸ்தானின் கொள்முதல் வியாபாரிகளுக்கு அமோகமாக கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது ஊழல்மழை, வாஸ்தவம்.

https://twitter.com/kalaignar89/status/600633846699143168

கலைஞரின் நகைச்சுவையுணர்ச்சியே அலாதிதான்! 90த்திச் சொச்சவயதில் என்ன அடி அடிக்கிறார்! :-)

ஆனால், கொலைகள்? சச்சரவுகள்?? இங்குதான் என் நெடுநாள் நண்பரும் திராவிடத் தத்துவாசிரியருமான கலைஞர் அவர்கள் என் உதவிக்கு வருகிறார்.

தேனை எடுத்தவன், புறங்கையை நக்காமல் இருப்பானா?

— தன்னிகரற்ற தமிழர் தலைவர், டாக்டர் கலைஞர் கருணாநிதி. (1970கள் வாக்கில், தான் அரங்கேற்றிய கோரமான ஊழல்களின் காரணமாக ருசுக்களுடன் குற்றம்சாட்டப்பட்ட ஒரு பரிதாபமான புலம்பல் தருணத்தில், அவர் கொடுத்த உண்மைத் தன்னிலை விளக்கம் இது, என என் நினைவு)

பிரச்சினை என்னவென்றால், பாவப்பட்ட தமிழகத் தேனை ஈவிரக்கமின்றி நக்கிநக்கித் தேய்ந்துபோன புறங்கைகளைக் கொண்ட திராவிடர்களுக்கு, திராவிடவழி அரசியல்வாதிகளுக்கு, அதனை மேலும் நக்க போட்டாபோட்டிகள். நக்குதலில் பங்கீட்டுப் பிரச்சினைகள். ஆகவே சிலபல கொலைகள். வழக்கமான சலசலப்புகள். அவ்வளவுதான்.

நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் – மூன்று நாட்களுக்குமுன் காலை (21 மே, 2015) புதியதலைமுறை டீவியில், மேதகு ஆளூர் ஷாநவாஸ் என்பவர் சொன்னாராம் – தாழ்த்தப்பட்டவர்களை குறிவைத்து ஒழிக்கிறார்கள் என்பது போல. ஆளூராருக்கு நகைச்சுவை உணர்ச்சி கொஞ்சம் அதிகம்தான். (! இதே ஷாநவாஸ்தான், முன்னொரு சமயம் நீயா நானா டட்டடா ஆச்சிமசாலா எழவில் – களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?  எனக் கயமையுடன் கற்றுத் தந்தவர் அல்லவா?)

… … நான் ஒரு பொலீஸ்காரனோ, இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ பம்மாத்து ஆசாமியோ அல்லன். ஆனால் மூளையையும் வரலாற்றறிவையும் உபயோகிப்பவன்; முட்டியடி உளறல் எதிர்வினைகள் கொடுப்பதில் தயக்கம் உள்ளவன். ஆகவேதான், என் அனுபவத்தை வைத்துக்கொண்டுதான் சொல்கிறேன் – இம்மாதிரி நிகழ்வுகளில் ஒரு சுக்குக்கும் ஜாதி வெறியும் இல்லை.

ஹிந்துத்துவா பொந்துத்துவாவும் இல்லை. வெறும் பங்காளிச் சண்டைகள். அதுவும் நேர்மையான ‘அப்பன் சொத்து’ சார்ந்த சாதா பங்காளிப் பிரச்சினைகளல்ல – அயோக்கியத்தனமாகத் திருடிய சொத்துகளின் மீதுதான் பங்கிடல் பிரச்சினைகள்.

தமிழகத்தில் வன்முறை அதிகமாகிவிடவில்லை. பொதுமக்களுக்கு பலப்பல திராவிடப் பிரச்சினைகள் இருந்தாலும், இம்மாதிரி கொலைப் பிரச்சினைகள் இல்லை. அவ்வப்போது நடக்கும் ஜிஹாதி வகையறா மதவெறியர்களாலான கொலைகளைத் தவிர (இவைகளும் அநியாயம் என்றாலும்) – பெரும்பாலும், திராவிட மாக்களுக்குள் ஏற்படும் பங்காளிச் சண்டைகளில் ஒருசிலர் மறுசுழற்சி செய்யப்படுகிறார்கள், அவ்வளவுதான். எப்படியோ ஒருவருக்கொருவர் பொருதி, நாடு சுபிட்சமானால் சரிதான்.

… ஆனால்,  இம்மாதிரி மரணத்தைச் சந்திக்கிறவர்கள் அனைவரும், முட்டியடி எதிர்வினையாக – போராளிகளாகவும்(!), தியாகிகளாகவும்(!!), ஏன், அறப்போராட்டக்காரர்களாகவுமேகூடச் சித்திரிக்கப் படுகிறார்கள். எனக்கு இதையெல்லாம் பார்க்கப்பார்க்கப் படுவினோதமாக இருக்கிறது. ஆனால் – இந்த அளவில் தான் தமிழகத்தின் தலைவிதி இருக்கிறது.

-0-0-0-0-0-0-0-

மேற்கண்டவற்றை இல்லை என்று சொல்வதற்கும் ஆட்கள் – திராவிடக் கோமாளிக் கோமகன்கள், விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் – இருக்கிறார்கள், இருப்பார்கள். அவர்கள் என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்னால், தங்களைச் சில கேள்விகள் கேட்டுக்கொள்ளவும்:

1) கடந்த 45 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சியில் – யாராவது ஒரு தலைவரையாவது, ஒரேயொரு ஆளைப் பற்றியாவது – நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் மட்டுமேதான் அவர்களிடம், அவர்கள் குடும்பத்தினரிடம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஒரு ஊழலையும் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? அவர்கள் மத்தியில்  0.00001% அளவேகூட, ஒரேயொரு  கக்கனையோ, காமராஜையோ, ராஜாஜியையோ, பக்தவத்சலத்தையோ காண்பிக்க முடியுமா?

2) என்ன மாயமந்திரம் போட்டு, அல்லது அப்பழுக்கில்லாமல் உழையோவுழை என்றுழைத்து – ஒரு மாஜி கடை நிலைப் போலீஸ் கான்ஸ்டபிளும் (ஜேப்பியார்), ஒரு தனியார் நிறுவன மாஜி பஸ் கண்டக்டரும் (எவ வேலு) திடீரெக்ஸ் பணக்காரர்களாகி பலப்பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள கல்விக்கடைகளை நடத்த முடிந்திருக்கிறது?

3) ‘செலவே’ செய்யாமல் இருந்தால், ஒரு மனிதனால் திராவிடக் கட்சிகளின் சிறுதலைவராகக் கூட ஆகமுடியுமா?

4) இப்படிச் செய்யும் ‘செலவு’களை மீட்க எப்படிச் ‘சம்பாதிப்பது?’ அப்படியே சம்பாதித்தாலும் தம் குழந்தைகளுக்காக, சுற்றத்துக்காக மேலதிகமாகப் பணம் புரட்டவேண்டுமல்லவா?

-0-0-0-0-0-0-0-
ஆக, தமிழக திராவிடவூழல் அரசியல்வாத நடப்புகளுக்குக் காரணமாக – பாவப்பட்ட ஜாதிப்பிரிவுகளைச் சுட்டி உளறிக் கொட்டுவதற்கு முன் சற்றே யோசிக்கவும். உங்கள் மண்டையில் மூளை இருக்கலாம் எனும் அனுமானத்தில் சொல்கிறேன்.

… அப்படி யோசித்தாலே தெரியும், இப்பிரச்சினைகளுக்கும் காரணம், நம் செல்ல திராவிடக் கட்சிகளே!

ஆனால் யோசிக்கமாட்டார்கள். ஏனெனில் ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்களின் அரசியல் தராதரம் அப்படிப்பட்டது. சரி, எப்படியும் இதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இது ஆச்சரியமளிக்கும் விஷயம் இல்லைதான். (All the major dravidian parties and their smaller clonal outfits – all are the great beneficiaries of the existing scamming schemes – without a single exception! They are all in one single alliance, in this respect; other differences are merely superficial, yes.)

எல்லா இகழும் திராவிடர்களுக்கே!

ஆமென். :-(

 -0-0-0-0-0-

பின்குறிப்பு: ஆக – கடந்த 50 ஆண்டுகளில், பல திசைகளிலும், முனைகளிலும் எங்கேயோ உச்சாணிக்கிளைகளுக்குப் போயிருக்கவேண்டிய தமிழகம், திராவிடத்தால் தொடர்ந்து படுவீரமாகப் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது, தொழில்முறை திராவிடர்களால் தமிழ்த்தாய் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்  என்பது – என்னுடைய தாங்கொணா தனிப்பட்ட சோகங்களில் ஒன்று. :-(

திராவிடத் தீரா விடமற்ற தமிழகம் மலரும் நாள், எப்போது? :-((

9 Responses to “திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு”

 1. sam Says:

  //கடந்த 50 ஆண்டுகளில், பல திசைகளிலும், முனைகளிலும் எங்கேயோ உச்சாணிக்கிளைகளுக்குப் போயிருக்கவேண்டிய தமிழகம், திராவிடத்தால் தொடர்ந்து படுவீரமாகப் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது, தொழில்முறை திராவிடர்களால் தமிழ்த்தாய் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது – என்னுடைய தாங்கொணா தனிப்பட்ட சோகங்களில் ஒன்று.//

  damn…I shed tears.

  These two articles are the best; and exposing the ugly truth behind the politics.

  I dont have thought process like you, could you please write how Tamils can get out of this. please, this is not only my request, I am sure many Tamils secretly want a great change.

  Thanks RS.


  • hmmm… it used to be my idea that, ‘education’ will set our fellow tamils and our dear tamilnadu free. but am not sure now. please note that I am also generally groping in the dark – but then, there are some dim lights at the end of the dravidian dark tunnel and may be I should eventually write about them too.

 2. Saravanan Says:

  /// ஒரு காலத்தில் ஜிப்புகள் (zippers) இந்தியாவுக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தன ////

  அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறது. இதைப்பற்றி இன்னும் கொஞ்சம்ல விவரமாகக் குறிப்பிட முடியுமா?


  • பலவாண்டுகளாக தங்கம் போன்ற இந்தியர்களுக்கு இன்றியமையாத வஸ்துவைக் கடத்திக் கொண்டிருந்த தமிழகக் களவாணிகள் – 1970களில் ஆரம்பித்து – பெரிய அளவில் இந்த ஜிப்பர்களைக் கடத்திவர ஆரம்பித்தார்கள். ஏனெனில் மகாமகோ ஜப்பான், அமெரிக்க சந்தைகளுக்காக மலேஷிய, இந்தோனேஷிய நிறுவனங்கள் (ஜப்பானிய, அமெரிக்க டிஸைன்களைக் கொண்டு) இந்த ஜிப்புகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொண்டிருந்தன. அவற்றிடம் உபரி தயாரிப்பும் இருந்தது, ஆகவே – குறைத்தவிலைக்கு விற்கவும் முடிந்தது. தரமெல்லாம் இரண்டாம் பட்சம்.

   சென்னைக்கும் மாமல்லபுரத்துக்கும் நடுவேதான் இந்தக் கள்ளத்தோணிகள் இறங்கி, இந்தியா முழுவதும் குப்பைத் தர ஜிப்புகளைக் கொண்டுசேர்க்கப்பட்டன.
   அதே சமயம் இந்த கள்ளவாணிகர்களால், சுமார் 150-200 இந்திய சிறுதொழிற்சாலைகளும் (SSI – small scale industries) அழிந்ததும் சுமார் 50,000 பேருக்கு வேலைபோனதும் உண்மை. (இவைகள் இந்திய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய யந்திரங்களை வைத்து – எளிமையாக ஆனால் தரமான ஜிப்புகளைத் தயாரித்துவந்தன என்பதைக் குறிப்பிடவேண்டும்)

   இந்தக் கள்ளவாணிகர்களில் உச்சாணிக்கிளையில் இருந்த சிலரில் இருவர் தான் சந்தோஷமாக பன்னீர் தெளித்துக்கொண்டு விஜிபிக்களாக உருமாறினார்கள். சோகம்.

 3. ஆனந்தம் Says:

  இப்படியா எல்லாவற்றையும் புட்டுப்புட்டு வைப்பது?திராவிட பாவம் பொல்லாதது. சும்மா விடாது. குஜராத் கலவரம், படுகொலை, என்கவுண்டர், ஷோராபுதீன், கவுசர் பீ மேலும் அங்கு நடைபெறும் பெண் சிசுக்கொலை, ஆண்-பெண் விகிதாசார அசமம் பற்றியெல்லாம் ஏன் எழுதவில்லை என்று Major Poovannan சுட்டிகளுடன் நாளைக்கே பிரசன்னமாகக் கடவது!
  ததாஸ்து!!!

 4. vijayaraghavan Says:

  அரசியல் வியாதிகளின் ஊழலுக்கு அவர்களின் மனைவிமார்களே முழு முதற் காரணம். அரசியல்வாதி பிடிபடும் போது அவனது ஊழலில் திளைத்த அவனது மனைவி, குடும்பத்தாரும் சிறை தண்டனை பெறும்படி சட்டத் திருத்தம் அவசியம். (குற்றத்தை மறைத்த மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வகையில் )
  நம்மால் முடிந்தது ஒன்று. நம் இல்ல விழாக்களுக்கு அரசியல் வியாதியஸ்தர்களை அழைக்காமலும், அந்த பதர்களின் எந்த எழவுக்கும் போகாமலும் இருக்கலாம்.
  அரசியல் வியாபாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களை (அது நமது பணி சார்ந்ததாகயிருப்பினும் ) புறக்கணிக்கலாம்.
  புறக்கணிப்பு ஒன்றே அவர்களுக்கு நாம் வழங்கும் பெரிய தண்டனை .

  • ரங்கன் Says:

   அய்யய்யோ அது என் மனைவியே இல்லை என்று சொல்லலாம் – அல்லது அவங்களுக்கு Alzhimer என்று சொல்லலாம். இதெல்லாம் நடக்கிற விஷயமா !

 5. ஆனந்தம் Says:

  பொதுவாகப் பப்பரப்பா பற்றிய உங்கள் கொள்கை தெரியும். ஆனாலும் IIT சமபந்தப்பட்ட விஷயம் என்பதனால் உங்கள் கருத்தை அறிய ஆவல். மேற்படி பப்பரப்பா உங்கள் கவனத்தை இது வரை பெற்றிருக்காவிடில் இதோ: http://www.newindianexpress.com/states/tamil_nadu/Its-Manufactured-Controversy-at-IIT-Madras/2015/06/01/article2842957.ece


  • சுக்குப் பெறாத விஷயத்தை ஊதிஊதிப் பெருக்கி அரசியல் படுத்திவிட்டார்கள். அவ்வளவுதான்.

   வதந்திகளைப் பரப்புவதில் இருக்கும் இன்பம்ஸே அலாதிதான். இதைப் பற்றி வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. :(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s