ஐயோ! நெகிழ்வாலஜியிலிருந்து, நமக்கு ஜீவன்முக்தி கிடைப்பது எப்போது? :-(
August 2, 2019
ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா?
-0-0-0-0-
“…அந்த இடத்தில் ஊமையான அரக்கன் ஒருவன் முன் நின்றிருக்கும் பிரமிப்பு ஏற்பட்டது. அவன் இடிமுழக்கம் போன்ற குரலால் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறான். நம்மால் அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை “
இதனை எழுதியது யார்? டவுட்டா கீதே! “நம்மால் அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை” ஐயய்யோ! இது என் முழுமுதல் செல்ல எஸ்ரா அவர்களின் ட்ரேட்மார்க் டெம்ப்லேட் சொற்றொடர் அல்லவா?
அல்லது இதை எழுதியது இங்க்லீஸ்லியும் தஸ்புஸ்ஸாலஜிஸ்ட் லத்தீஅமெரிக்கரிட்டர்ன்டா? அல்லது அண்மையில் முன்னவர்களுடன் ஐக்கியமாகியிருக்கும் பெரும்பேராசான் ஜெயமோகனா??
மொதல்ல பிர்யமாரீ இர்ந்திச்சி. இன்னொரு தபா பட்ச்சா வேறமாரீ பிர்யுது! இன்னா அலக்கியண்டா! எளவு.
…யோசனைகள் இப்படி இருக்கையிலே… இதனைப் படிக்கும்போதே ஒரு வினோதமான புளகாங்கித நெகிழ்ச்சியில் வேட்டியும் உள்ளே கோமணமும், போர்க்கால ரீதியில் ஒர்ர்ரேயடியாக நெகிழ்ந்து விட்டன. நல்லவேளை, கீழே டமாலென்று விழவில்லை!
ஏனெனில், பெங்களூர் செல்லும் இரட்டையடுக்கு ரயில்வண்டியில் ‘வொங்க பெங்களூர்ல எங்க பாப்பா/புள்ள படிக்குதுல்ல, அதுக்கிட்ட இந்த பைய கொட்த்திருங்க’ வகை அன்பாகக் கொடுக்கப்பட்ட பைகள் (பாணா பெரீய்ய்யவை!) மூன்றை எனக்கு முட்டுக்கொடுத்து அவற்றுக்கு நடுவில் மூச்சுமுட்ட உட்கார்ந்து இந்த எழவைத் தட்டச்சு செய்துகொண்டிருப்பதால் அசிங்கமாகிவிடவில்லை.
அதாவது – என் முன்னாள் பிள்ளைகளின் பெற்றோர்களின் அன்புக்கு நன்றியுடன், நல்லவேளை! ஆனால், இந்தப் பைகளை அங்குமிங்கும் ஓடி அல்லாடி அரசுப்பேருந்திலும் ரயிலிலும் தூக்கிக்கொண்டு வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது! இந்தப் பிரச்சினைக்கு முழுமூல காரணம் – மேற்படிப்பு படிக்க வந்திருக்கும் அந்தப் பாப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் நானும் என் மனைவித்துணைவியும்தான் லோக்கல் கார்டியன்கள்! தேவையா??
ஆனால், நம்மையே பாதுகாப்பு செய்துகொள்ள முடியவில்லை. ரவுண்ட்கட்டிக்கொண்டு அடிக்கிறார்கள், தகுதியற்றவன் என்று காய்ச்சுகிறார்கள், ஜெயமோகனும் அவருடைய வாசகப்பெருமாக்களும் சேர்ந்து வியூகம் அமைத்து தட்டாமாலை சுற்றுகிறார்கள். திரு.ராமசாமி ஏதாவது ஒரு ஸிங்கிள் மயிரை இதுவரை பிடுங்கியிருப்பானா என இலக்கியமொழியில் அளவுக்கதிகமான பொங்குகிறார்கள்! கூக்ளில்லாமல் திரு.ராமசாமியில்லை என்கிறார்கள், பாவிகள்!
…இந்த அழகில், நாங்கள்போய் ஒரு விடலைக்கூட்டத்துக்கு கார்டியன்கள்! என்ன செய்வது சொல்லுங்கள்! All, time’s rangoli, what to do. What to say.
‘அம்மா, என்க்கு வயசாய்டிச்சி, இவ்ளோ லக்கேஜ்ங்க்ள அத்தினி கொள்ந்தைங்க்ளுக்கும் தூக்கிக்கினு போவ்ற்து கொஞ்சம் கஷ்டம்மா’ என்றெல்லாம் கசாப்புக்கடை வரிசையில் களப்பலி காணக் காத்திருக்கும் ஆட்டின் பரிதாபமான குரலில் சொன்னாலும் அவர்கள் கேட்டுக்கொள்ளாத நிலைமை, அழிச்சாட்டியம்! அதற்குமேல் உரிமையுடன் அறிவுரை வேறு! “வொங்க்ளுக்கா அம்பது வய்ஸ்க்கு மேலாய்டிச்சி? நரெச்ச தாடிய வெச்சிக்கினு பாக்க சும்மா தல அஜித் மாரீ கீறிங்க! இதெல்லாம் வெய்ட்டே இல்ல!! வொங்க பளேய ஸ்டூடென்டுக்கு இத்தகூட பண்ணமுட்யாதா? கஸ்டம்னா, ஊபர் டாக்ஸி வெச்சிக்கிடுங்க.”
சரிதான், அம்மணிகளே! :-(
மனைவியுடன் இதுகுறித்து நேற்று புலம்பிக் கொண்டிருந்தபோது (‘கேல்குலஸ் சொல்லிக்கொட்த்தத்துக்கு இப்டியா பழி வாங்குவாங்க, பாவீங்க!’) அவர் சொன்னது: “பேசாமல் நீயும் ஒரு பெரிய பையில் புகுந்துகொண்டுவிடு. நான்கு பெரும்பைகளையும் திருமுருகன்லாரி ஸர்வீஸில் புக் செய். விளைவு என்ன எப்படியானாலும், எனக்கு ப்ராப்ளம் ஸால்வ்ட். ஒழி.’
நன்றி. :-((
உலகமயமாக்கலினாலும், ஹிந்துத்துவாவினாலும், தேனி ந்யூட்ரினொ திட்டத்தாலும், ஜெயமோகனாதிகளின் தொடர் அர்ச்சனையாலும், முக்கியமாக – புதிய கல்விக்கொள்கை2019 (வரைவு) எழவினாலும் – கருணையும் கெளங்கும் குடும்பங்களும் உறவுமுறைகளும் பரஸ்பர அன்பும் அநியாயத்துக்கு நசிந்து வருகின்றன என்பது ஒரு காலத்தின்கோல உண்மைதான். நான் ஒரு நேருவிய ஸோஷலிஸ்டாகவே தொடர்ந்து இருந்திருக்கவேண்டுமோ என்ன எழவோ!
…
சரி. அந்த விடுகதையாடல் குறித்து யோசித்தீர்களா? இல்லையா? அதுவும் சரிதேன்! :-(
சரியான பதில்: யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இதை எழுதியது ஜெயமோகன் அவர்கள். இன்னமும் சில ஆண்டுகளில், தமிழலக்கிய மெகா மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து ரவுண்ட் கட்டிக்கினு நம்மை மிகக் கொடூரமாகத் தொடர்ந்து, பேய்கள் போலத் தாக்கப் போவதற்கு இது கட்டியம் கூறுகிறது என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும் நடுக்கமாக இருக்கிறது அல்லவா?
…ஸ்ஸாவுங்கடே. வ்வோத்தா, நம்ப்ளுக்கெல்லாம் தமிளிளக்கியந்தாண்டா றொம்ப முக்கியம்! ஆவப்பெரீய்ய வொலகப் பிரச்னே!
மாற்றுவாயாளிகள் தயைசெய்து கவனிக்கவும்: ஜெயமோகன் எழுதியுள்ள வரிகளில் உள்ள மேற்கண்ட குறிப்பு, உங்களை ஆழமாகப் புண்படுத்தவில்லையா எனத் தீர யோசிக்கவும். நன்றி.
அரக்கர்களுக்கும் ஒரு கேள்வி: உங்களுடைய இந்தக் காரணப்பெயர் வந்தது – நீங்கள் arrack சாராயம் குடிப்பதாலா அல்லது ஏதாவது மஜாபாரத அரக்கு மாளிகை வில்லாக்களில், வில்லங்கமான வில்லத்தன வில்பவருடன் வசிப்பதாலா? மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் இது குறித்து ஏதாவது ஏடாகூடமாக இருக்கிறதோ?
உடனடியாகப் பதில் போடவும். பின்னூட்டமும் இடலாம். இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் எனக்குத் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும் போலவிருக்கிறது!
நன்றி.
August 2, 2019 at 23:40
சார், ஒங்க problem: lack of “ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்ளல்” AND an extraordinary ability for “மண்டய குழப்பிக்கொள்ளல்” 😀
August 3, 2019 at 05:04
சுந்தரராமசாமி: “பள்ளம்தான் ரொம்பிச்சு” Polk Gulch??
August 5, 2019 at 23:27
Good one, by SR! சூப்பர் அப்பு ! விக்கிவிக்கிப்பீடியா பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன் polk gulch – ஸ்பாட் ஆன்