நாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி

May 25, 2019

ஆம், உண்மைதான். இது நடந்தேறுவதற்கு, நாம் நம் தமிழகக் குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளை அகற்றவேண்டும், காயடிவைக்கவேண்டும்… ஆனால் – அதற்கு முன்னர், அழுகும் மட்டற்ற மட்டையர்களின் படுமட்டப் பிராந்தியமாக, நாம் ஏன் மாறினோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதே சமயம் பிற பின்புலவேலைகளையும் தமிழக-பாரத விரும்பிகள் முடுக்கிவிடவேண்டும் என்பது என் அவா. திரும்பிப் பார்ப்பதற்குள், இன்னமும் ஐந்தே வருடங்களில் 2024 வந்துவிடும் அல்லவா?

சரி. தமிழகம் ஊறிய மட்டைகளால் குழப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. சேருமிடம் அறிந்த சேற்றில் உழன்றுகொண்டிருக்கிறோம். ஆனால் சேற்றில் செந்தாமரைகள் அமோகமாக வளர வேண்டிய சூழல் இருக்கிறதல்லவா? சேறு தடாகங்களின் அடியில்தானே போய் படியும்? தாமரை மேலேதானே எழும்பும்?

ஆகவே(யும்), சில குறிப்புகள்:

1. தேர்தல் முடிவுகள் குறித்து, எனக்குப் பொதுவாகவே மகிழ்ச்சி. படு அயோக்கியனும், பொய்யனும், பாரதத்தின் எதிரியுமான திக்விஜய்ஸிங்கும், நிரந்தர விடலை ராஹுல்காந்தியும் முறையே போபாலிலும் அமேதியிலும் தோற்கடிக்கப்பட்டதில் மிகமகிழ்ச்சி.  அவற்றில் – ஸாத்வி ப்ரக்யாவும் ஸ்ம்ர்தி இரானியும் முறையே வென்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

2. சுமார் இரண்டுவாரங்களுக்கு முன் மது பூர்ணிமா கிஷ்வர் அவர்களுடனும் ஒரு நீஈஈஈள உரையாடல். இந்தத் தேர்தல் ஒரு குருக்ஷேத்திர யுத்தம் என்றுதான் சர்வ நிச்சயமாகத் தெரிந்தது – இம்முறை அதர்ம கொள்ளைக்காரச் சக்திகள் ஜெயித்தால், அது பாரதத்துக்கு மாபெரும் பின்னடைவாக இருக்கும் எனத்தான் பேசிக்கொண்டோம். May the Dharma & Righteousness win எனவும். (ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, நம் குணாதிசியங்கள்-வரலாறுகள் காரணமாகப் பின்னடைவு; நம் தர்மத்தின் வாழ்வதனைச் சூத்துகள் கவ்வி விட்டன; இதைக் கொஞ்சம் நிதானமாகத்தான் சிடுக்கவிழ்க்க முடியும்… இதனைப் பின்னர் பார்க்கலாம்!)

நான்கு நாட்கள் முன்வரை என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள். ஆனால் என் முழுகுட நண்பன் ஒருவனிடம் பேசியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது. ஆகவே தேர்தல்முடிவுகளுக்கு முன்தினம் ஒரு ட்வீட் செய்தேன்.

ஏறத்தாழ – இம்மாதிரிதான் செய்திகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன், பார்க்கலாம்! ;-)🤣

எல்லாம் நல்லதற்கே.

3. இந்தத் தேர்தலில் என் நெடுநாள் லிபரல்/மதச்சார்பின்மை மினுக்காள நண்பர்கள்(!) சிலபலருடன் சுத்தமாகவே ஒத்துவராமல் போய்விட்டது. பரவாயில்லை. நான் பொதுவாகவே அட்ச்சுவுடுபவனல்லன். அவர்களைப் போலல்லாமல் – ருசுக்கள் மீதான பார்வைகளின் மீதே என் கருத்துகளை(!) வளர்த்துக்கொள்ள முயற்சிப்பவன். ஆனாலும், ஜெயலலிதாபோல் அவர்களை ‘என் உடலில் இருந்து உதிர்ந்த மயிர்கள்’ என அவர்களைக் குறிப்பிடமாட்டேன். மாறாக, அவர்களைச் செல்லமாகவும் அளவற்ற மரியாதையுடனும்  ‘முடிகள்’ எனக் குறிப்பிடுகிறேன். போங்கடா.

திருப்பித் திருப்பிச் சொன்னாலும், ருசுக்களையும்/தஸ்தாவேஜுகளையும் அளித்தாலும், அசைக்கப்பட முடியாத ஆதார ஆவணங்களை அளித்தாலும் – பதிலுக்கு ஒரு மசுத்துக்கும் அவற்றை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் – கடைசியில் முருங்கமரத்தில் ஏறிக்கொள்ளும் வேதாளர்கள் இவர்கள்.

அங்கு உச்சியில் ஊசலாடிக்கொண்டு, மறுபடியும் என்னை, முன்னர் கேட்ட அதே கேள்வியையோ அல்லது ‘2002: குஜராத்தில் என்ன நடந்தது?‘ என்றோ மறுபடியும் ஆரம்பிப்பார்கள். எனக்கு ஒரே அலுப்பு.

இல்லாவிட்டால் ஸாத்வி ப்ரக்யா பற்றி – அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்று. இவர்களில் ஓருவர் கூட அடிப்படை ஆவணங்களைப் படிக்கவில்லை, பின்புலங்களையும் அறியவில்லை, அவர்மீது காங்கிரஸ்காரர்களால் கவிழ்த்தப்பட்ட வெறுப்பிய ஜோடனைகளையும் அளவேயற்ற பொய்மைகளையும் புரிந்துகொள்ளவேயில்லை. அல்லது அறிய விருப்பமில்லை. இவர்கள் – வெறுமனே என்டிடிவி+தஹிந்து பரப்புரைக்கு மயங்கியவர்கள், அடிப்படை அறிவிலிகள். சோம்பேறிகள். காமாலைக் கண்ணர்களிடமிருந்து கடன் வாங்கிய கருத்துகளைக் கொண்டு காலட்சேபம் செய்பவர்கள்.

ஜோடிக்கப்பட்ட பொய்மைகளை வைத்துத் தம்மை சீவிச்சிங்காரித்து அலங்கரித்துக்கொள்பவர்கள். சுயஆதாயங்களுக்கும், ‘மற்றவர்கள் தம்மை ஒப்புக்கொள்வதற்கும்’ அலையும் அலப்பரைப் பேடிகள். இவர்களில் ஓரிருவர் ஒருகாலத்தில் ஐஐடி போன்ற கல்லூரிகளில் (= நம் பொதுஜன பாரதவாசிகளின் வரிப்பணப் பிச்சையில்!) படித்தவர்கள் என்பதே எனக்கு வெட்கமாக இருக்கிறது.

4. இன்னொரு சிறுகுழுவாக, என்னுடன் சதா வம்பு வளர்த்திக்கொண்டு என்னை அலுப்படைய வைத்த அரைகுறை அன்பர்கள் – மதச்சார்பின்மைத் திலகங்கள் –  தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து வெறுத்துப்போய் நீயும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் என விட்டுவிட்டார்கள் – இனிமேல் வெறும் தொழில்நுட்பத்தைக் குறித்து மட்டுமே பேசப்போகிறார்களாம், பாவம் – அதுவும் பிட்காய்ன் மசுர்காய்ன் என்று – அதுவும் ஒரு மசுரும் கணிநிகளைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல்!  எனக்குப் பயமாகவே இருக்கிறது!  (இப்படி, நேற்றிரவு 11மணிவரை குறைந்த பட்சம் இருவர் – மிச்சம் நால்வரும் அப்படியே விலகுவார்கள் எனப் பேராசையுடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன்! ஓழீங்கடா அரெகொறேங்க்ளா!)

…ஊக்கபோனஸாக – இவர்களும் என் செல்ல ராஹுல்காந்திபோல, தங்கள் அம்மாக்களிடம் இம்மாதிரி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, அந்த பாவப்பட்ட, பெற்றவயிற்றில் பிரண்டையைக் கட்டிக்கொள்ளவேண்டிய அன்னைகளும், உடனடியாக அதனை நிராகரிப்பர் எனவும்…

இவர்களில் ஒருவர் படித்திருப்பது பிஏ (ஆங்கிலம்), ஸெகண்ட் க்ளாஸ் – இதைக் கேவலமாகச் சொல்லவில்லை, ஆங்கிலத்திலும் ஏகத்துக்கும் அற்புதமாக எழுதி, அவர் புலிட்ஸர் கிலிட்ஸர் நொபெல் என மானாவாரி விருதாவிருதுகள் வாங்க என் ஆசிகள்; ஆனால் பாருங்கள் – இவர்களைப் போன்ற ஆசாமிகள், படு சராசரிகள் — ஈவிஎம் ‘ஹேக்கிங்’ ஊழல், ரஃபால் விலை மிக அதிகம்-ஆகவே ஊழல் எனப் பெத்தபேச்சு! கணிநிகள் பற்றிக் கோமணமளவுகூடத் தெரியாமல் பெனாத்தல்! ஒரு காகிதவிமானத்தைக் கூடப் பறக்கவிடமுடியாதவருக்கு போர்விமானத் தொழில் நுட்பங்கள் பற்றிய மேலான கர்த்துகள்! சிரிப்புத்தான் வருகுதய்யா!

…இவர்கள், இனிமேல் எக்காரணம்கொண்டும் என்னுடனும் (பிற?) வலதுசாரிகளுடனும் அரசியல் குறித்துத் தொடர்பே கொள்ளப் போவதில்லை, முக்கியமாக என்னைப் போன்ற மதவெறியர்களுடன்(!) சங்காத்தமே வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே ‘சமூகவலைத்தளங்களிலிருந்து’ சர்வ நிச்சயமாக நிரந்தரமாக விலகுவதாகவும் சூளுரைக்கிறார்கள். இத்தனைக்கும் எனக்கு மின்னஞ்சலில் மட்டுமேதான் இவர்களுடன் ‘தொடர்பு.’ மற்றபடி இவர்கள் ஆணாபெண்ணா, இல்லை நபும்ஸகர்களா என்றே தெரியாது!

இவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால் என்ன, இறந்தால் என்ன!  எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை… ஆனால் இவர்களும் ஒருவருக்கொருவர், ‘ போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்‘ — ஃபேஸ்புக்கிலே ட்விட்டரிலே  தொடர்ந்து இரு… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் எனவொரு  ங்ஙொம்மாள ஸெட்டப் ஸப்போர்ட் எழவு வேறு! தண்டக்கருமாந்திரங்கள். புறமுதுகுப் பெருவழுதிப் பாண்டியன்கள்.

சரி.

ஆனால், எனக்குத் தெரியும் – குடிகாரன் பேச்சு, பொழுதுவிடிஞ்சா போச்சு. சமூகவளைத்தல எலிகளாக உலவி, கண்டமேனிக்கும் பாரதவெறுப்பியத்தையும் தங்கள் ப்ரேண்ட் மதச்சார்பின்மை விஷத்தையும் பரப்பி இன்புற்ற இந்த ஆங்கிலம்பேசி தேங்காய் அரைகுறைகளுக்கு – அந்த வெல்லக்கட்டியை விட்டுவிட எப்படி மனது வரும், சொல்லுங்கள்? சக கூமுட்டைகளின் லைக்குகளையும், புளகாங்கிதப் பின்னூட்டங்களையும் படித்துச் சுயமைதுனம் செய்துகொள்பவர்களுக்கு ரொம்ப நாள், அவற்றிலிருந்து விலகியிருக்க முடியாது. ஆகவே – அவர்களை ஆதூரத்துடன் மட்டுமே பார்க்கிறேன், பாவம்!

ஆகவே, கூடியவிரைவில் இவர்கள் திரும்பி ‘பழைய குருடி கதவத் தெறடி’ என வந்து தங்கள் ஜனநாயகக் கருத்துரிமைக் கடமையை ஆற்றுஆற்று என ஆற்றுவார்கள் என  நான் நம்புகிறேன். (அப்போது அவர்களைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கமாட்டேன் எனவும் சத்தியம் செய்கிறேன்! ஏனெனில், கோமாளிக் கோமகன்களை நான் பரிதாபமாக மட்டுமே பார்க்கிறேன்; எப்படியும், என் ஒருசில நண்பர்கள் எனக்குச் சுட்டிகளை – அவர்கள் எழுதியவைகுறித்தோ அல்லது பிறருடையவையோ – அனுப்பாதவரை – அவர்கள் ஃபேஸ்புக்கில் எடுத்த/எடுக்கும் ஓக்காளவாந்திகளை நான் எப்போதும் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை, நன்றி!)

5. நம் தமிழக அரசியல்/தேர்தல் முடிவுகள் பற்றி: என் ஆப்தநண்பர்களுக்கு ஆதங்கம் தாங்கமுடியவில்லை.

…உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எனக்கும்தான்! சிலபலர் இப்படி இன்னமும் இருந்து தொலைக்கிறார்கள், ஆனால் அவர்களெல்லாம் சக-மூளைகழன்றவர்கள்தாம், மற்றபடி உபத்திரவமற்றவர்கள்தாம் (=Assistant Liquidator Notters, © 2019, எஸ்ராமகிருஷ்ணன்).

ஆக, கவலை வேண்டேல்!

…இப்படித் திரும்பத் திரும்ப கொள்ளைக்காரர்களையே நாம் தேர்ந்தெடுக்கிறோமே, கிடைத்த ஒரு நல்லவாய்ப்பையும் தவறவிட்டுவிட்டோமே, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து இடதுசாரியம் அகற்றப்பட்டிருக்கும்போது, அதற்குப் போய் நாம் தேவை மெனெக்கெட்டுப் புகலிடம் கொடுக்கிறோமே என்றெல்லாம்…

கொஞ்சம்கூடத் தொலைநோக்குப் பார்வையோ பாரதத்தின்/தமிழகத்தின் மீதான கரிசனமோ, தெளிவான  அரசியல் நோக்கோ – ஏன் ஒரு சுயஆதாயம் சார்ந்த அடிப்படைத் தற்காப்பு உணர்ச்சியோகூட இல்லாமல் இப்படிப் பிரேதங்களாக உலவுகிறோமே என்று..

மாறாக, வெறுமனே வதந்திப் பொய்மைகளையும் பரப்புரைகளையும் நம்பி – கருணாநிதிய ஒப்பாரிபோல வாழைமட்டைகளாக, சோற்றாலடித்த பிண்டங்களாக இருக்கிறோமே – துட்டு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடும் பொறுக்கிகளாக இருக்கிறோமே என்று…

எல்லாம் சரிதான். ஆனால் நம் இனிய தமிழ்மக்களைக் குற்றம்கூறினால் மட்டுமே விஷயங்கள் சரியாகிவிடமாட்டா. கீழ்கண்டவிஷயங்களைக் கவனியுங்கள், நம் பின்புலங்களை அலசுங்கள்:

6. பாரதத்தின் வடகிழக்குப் பிராந்தியங்கள் –  தொடர் காங்கிரஸ் ஆட்சிகளால் கைகழுவி விடப்பட்ட பிரதேசங்கள், க்றிஸ்தவ மிஷனரிகளின் ஆகாத்தியங்களால் ரத்தக்களறி வன்முறைகளில் ஈடுபடவைக்கப்பட்ட பகுதிகள் இப்போது கொஞ்சம்கொஞ்சமாக சரியாக்கப்பட்டு வருகின்றன. இது உண்மைதானே? ஆகவே அங்கு முடிந்தது, இங்கும் லபிக்கும். அவகாசம் தேவை. பொறுமை, பொறுமை

இந்தத் தேர்தல் முடிவுகளுக்காக – பாஜக-வின் தமிழகத் தலைமையைக் கரித்துக்கொட்டினாலோ, பிற சார்பு அமைப்புகள் சரியாக வேலை செய்யவில்லை, அவர்கள் இன்னமும் உழைத்திருக்கவேண்டும் என்றெல்லாம் மேலான கருத்துகளை அட்ச்சிவுட்டாலோ – இம்மாதிரியெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே படுசொகுசாக விமர்சனம் செய்தாலோ, அவற்றால் ஒருசுக்குக்கும் உபயோகமில்லை.

7. சரி. நம் தமிழகத்துக்கென்றே சிலபல குணாதிசியங்களும் வரலாறுகளும் பேர்பெற்ற பாரம்பரியங்களும் இருக்கின்றன – இவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்;

அவற்றுக்கேற்றபடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நாமெல்லாரும்தான். ஏனெனில், திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் போன்றவர்களல்ல நாம்.

நாம் சுதந்திர பாரதத்தின் பிரஜைகள்.

॥ वन्दे मातरम् ॥

…எட்வர்ட் கிப்பன் அவர்கள் குறிப்பிடுவது போல – உரிமைகளுக்குக் கொடி பிடிப்பதற்குமுன் தத்தம் கடமைகளைச் செய்பவர்கள். உண்மையான சுயமரியாதையும் கம்பீரமும் உடையவர்கள்.


 (அடுத்த பகுதியில்/லும் தொடரும். பாவம் நீங்கள்!)

8 Responses to “நாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி”

 1. somu Says:

  நன்றி.

  //படு அயோக்கியனும், பொய்யனும், பாரதத்தின் எதிரியுமான திக்விஜய்ஸிங்கும், நிரந்தர விடலை ராஹுல்காந்தியும் முறையே போபாலிலும் அமேதியிலும் தோற்கடிக்கப்பட்டதில் மிகமகிழ்ச்சி. அவற்றில் – ஸாத்வி ப்ரக்யாவும் ஸ்ம்ர்தி இரானியும் முறையே வென்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.//

  – எனக்கும்.

  அத்துடன் தேஜஸ்வி சூர்யா போன்றவர்கள் வென்றதிலும் மகிழ்ச்சி.

  நாட்டைப் பற்றி இனி கவலைப்பட வேண்டியதில்லை என்ற நிம்மதியும் கூட.

  அன்புடன்
  சோமு

 2. Sridharan Says:

  Dear sir,
  நீங்கள் குறிப்பிட்டது போலவே பெரும்பாலான ‘உண்மை விளம்பி’ தேசிய/பன்னாட்டு ஊடகங்கள் தங்கள் வழமையான விஷத்தை விதைக்கும் வேலையைச் செவ்வனே செய்துள்ளன. தேர்தல் முடிவுகள் பொதுவாக மகிழ்ச்சி அளித்தாலும், தமிழக/கேரள முடிவுகள் அயர்ச்சியளிக்கின்றன. குடும்பச்சொத்தாகக் கருதிவந்த அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியை யாரெனக்கேட்ட விடலைக்கூட்டத்தின் மமதைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டுள்ள அதேவேளையில், நாடறிந்த பொறுக்கியும் மதத்துவேஷத்தைப் பரப்பி மக்களை மூடர்களாக்கிப் பிழைத்துவரும் முதன்மைப் பேடியுமான அஜம் கான் போன்றோர் வெல்வது தொடர்சோகமே. ஊடகங்களில் நிரம்பித் ததும்பும் நாலாந்தர ரசனை/ நக்கல்/புரட்டுப் புரட்சி, கரைபுரளும் தீராவிடச் சாராயம் ஆகியவற்றில் ஊறித்திளைக்கும் தமிழகத்தின் மீட்சிக்குத் தொலைதூரம் பயணித்தாக வேண்டும்.

 3. somu Says:

  பெரும்பாலான தமிழர்கள் தனக்கு வந்து சேரும் மீம்ஸ்களை மட்டும் நம்பி, உண்மையை தேடி தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமல் தன்னை இயற்கையையும், தமிழகத்தையும் காப்பவனாக எண்ணிக்கொண்டும், தவறான செய்திகள் மட்டும் சேர்ந்து சீழ்பிடித்துப் போயிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

  தவறான செய்திகள் மிக எளிதாக சென்று சேருகிறது. பரவுகிறது. அதைபற்றிய உண்மை போய் சேருவதில்லை. நீண்ட விளக்கங்கள் தமிழக மக்களால் படிக்கப்படுவதில்லை.

  என்னை சுற்றியுள்ளவர்களை என்னால் மற்ற முடியாததே எனக்கு வருத்தம் தான்.

  வேறு வழிமுறைகளை கண்டறிய வேண்டியது அவசியம். SMHoaxSlayer போன்ற தளங்கள் தமிழில் துவக்கப்படவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

  நன்றி.

  • Sridharan Says:

   உண்மை, தமிழக இளையோர்களில் பெரும்பங்கினர் ‘சமூக ஊடக’ கோமாளித்தனங்கள் மூலம் மட்டுமே சூரியனுக்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் நிபுணத்துவமும், மேதமையையும் பெற்றுவிட்டதாக எண்ணித் தாறுமாறாக தட்டச்சு புரட்சி செய்வதோடு, ஹிந்திக்காரன் என மொழியை மட்டுமே வைத்து ஒருவரைச் சிறுமைப்படுத்துகிறார்கள், தீரா விடப் பாரம்பரியம்! இப்படி யாரோ ஒரு எதிரி வெளியே இருந்து வருவதாகக் காட்டிக்கொண்டே கோமணத்தைக்கூட மிச்சம் வைக்காமல் உருவிச் செல்லும் கும்பலுக்கு மேலதிக நகைச்சுவை உணர்வுடன் வாக்களித்திருக்கிறார்கள். இன்று மாலை நடந்த ஓர் உரையாடலின்போது, அரசியலல் பேசுவதில் நாட்டமில்லாத, 70+ வயதுடைய எனது கிராமத்து உறவினர் சொன்னது, ‘மோடி தமிழகத்தை விற்றுத் தின்றுவிடப் போகிறாராம் ஏனெனில் தமிழர்கள் அவரைத் தோற்கடித்துவிட்டார்களாம்’, இதை அவர் மிகுந்த கவலையுடன் சொல்கிறார், நகைமுரண்! ‘அப்படி தமிழகம் விற்கப்படுமெனில் இங்கிருந்து வாக்களித்து அனுப்பியவர்களின் வேலை என்ன?’ எனக் கேட்டு எந்தக்கட்சியிலும் உறுப்பினரல்லாத நான் அவரிடம் அரசியல் பேச வேண்டியிருந்தது. தமிழகத்தின் எதிரியாக ஒருவரைக் கட்டமைத்து மக்களை முட்டாளாக்கி வாக்குகளைப் பெற்று வென்ற மறுநாளே தமிழகம் விற்கப்பட்டுவிடுமென்று பரப்புபவர்கள்(Tamil Avengers) பூமியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழர்களுக்கு எந்தக் கேள்வியுமில்லை. ஓர் எளிய கிராமத்து முதியவர் வரை இதுபோன்ற எதிர்மறை எண்ணம் சென்றடைந்திருக்கிறது.இத்துடன் இலவசத்திற்கு ஆலாய்பறக்கும் பிரத்யேக குணமும் வாக்காகியிருக்கிறது, கடன் தள்ளுபடி, மாதம் 6000 போன்ற நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோர் பலர்!இதுபோக காலங்காலமாய் பரப்பப்படும் வெறுப்பிய/பிரிவினைவாத தீரா விடம் ஏகோபித்துப் பாய்ந்தது. இதுபோன்ற மாயைகுறித்த உண்மையை எடுத்துக்கூறி மக்களிடம் பரவலான விவாதத்தை உருவாக்கும் வலிமையான தேசியத்தலைமை இல்லாதது தமிழகத்தின் துரதிர்ஷ்டம்!

 4. அ.சேஷகிரி Says:

  உண்மையிலேயே பிஜேபியின்/ மோதிஜியின் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழகத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.உங்களின் 6வது பாய்ன்ட்ல் குறிப்பிட்ருப்பது நம்பிக்கை அளித்தாலும் அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை
  இறுதியாக இத்தேதேர்தலில் மோதிஜி பெற்ற வெற்றிகளை பொறுக்காமல் சில அறிவுஜீவிகள் வெதும்பி விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள் அவர்களில் பி.ஏ.கே.யும் ஒருவரா?


  • 1. நரேந்த்ர மோதி! :-)

   2. பிஏகிருஷ்ணன். உங்களைப் போலவே இன்னொருவர் இன்னமும் மோசமாக – ஏதோ நான் அந்தப் பெரியப்பாவை (இவர் என்னைவிட வயதில் இளையவராக இருந்தால் மன்னிக்கவும்) மனதில் வைத்துத்தான் இதனை எழுதியிருக்கிறேன் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், எனக்கு, பெரியப்பாவின் நிலை சுத்தமாகத் தெரியாது – இந்தப் பதிவுக்கும் அவருக்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லை; என்னால் குறிப்பிடப்பட்ட கும்பல்கள் பெரும்பாலும் தமிழே தெரியாத கன்னட/கொல்டி/மராட்டிய/பிஹார் சார்ந்தவை – என்னுடன் கூடப் படித்தவர்கள்/வேலை செய்தவர்கள்; நேற்று நண்பர் ஒருவரிடம், இந்த பிஏகிருஷ்ணன் அபாண்டத்தைக் குறித்துக் கேட்டு அவர் விலகிவிட்டாரா என்ன எனக் குறும்பாகக் கேட்டேன். அவ்ளோதோன்.

   2.1 அவர் அப்படியே விலகி இருந்தாலும், குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; ‘லைக்’ போதையும் எதிரொலிஅறை வசிப்பும் எளிதில் தீரா. ஆகவே மறுபடியும் வேதாளங்கள் முருங்கை மரங்களில் ஏறும். கவலை வேண்டேல். கேளிக்கைகள் தொடரும். இன்றில்லாவிட்டால் நாளை.

 5. Sivaaa Says:

  மோடியின் வெற்றி அதை எதிர்பாராமல் ராகுல் தான் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு சூத்தில் மிளகாய் வைத்து தேய்த்ததை போல் இருக்கிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s