ஜெயமோகன் எனும் தொடரும் ஆச்சரியம்
May 29, 2019
பலப்பல வாரங்களுக்குப் பின், இன்று அவர் தளத்திற்குச் சென்றேன். தவறு செய்துவிட்டேன். :-(
-0-0-0-0-0-
மாளா வருத்தம்.
மேற்குவங்கம் அதுஇது என எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையில் அவருடைய வழக்கத்தைவிட மிக அதிக அளவில் பிழைகள்; காயஸ்தர்கள், பூமிஹர், பிராம்மணர், நிலச் சுவான்தாரர்கள், தலித், இடதுசாரி, வலதுசாரி, காங்கிரஸ், குண்டர்படை, நிலக்கிழார், மம்தா எனக் கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். :-(
பிரச்சினை என்னவென்றால் விக்கிபீடியாவும் ஊர்சுற்றிப் புராணக் கட்டுக்கதைகளும் தினசரிகளும் வெட்டிப்பேச்சுகளும் ஓரளவுதான் உதவும். (எனக்குமே கூட!)
இதுவும் பிற்காலத்தில், தமிழில் எழுதப்பட்ட, அதிகாரபூர்வமான வரலாறானால் ஆச்சரியமில்லை. இதுகூடப் பரவாயில்லை, ஜெயமோகன் எழுதுவது அனைத்தையும் வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் இளைஞர் குழாம் எனவேறு ஒன்று இருக்கிறது; அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
இப்படியெல்லாம் இவர் எழுதுவார் எனத் தெரிந்திருந்தால், சம்பாரண் சத்யாக்ரஹத்தில் பாபுஜியுடன் சேர்ந்தும் அவருக்கும் முன்னரும் – அவுரி/இண்டிகோ பிணை விவசாயத்திற்கெதிராகக் போராடிய பல ஏழைபாழை பூமிஹர்களும், வெள்ளைக்காரர்களுக்கெதிராக முதல்சுதந்திரப் போரிலும், பற்பல போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்ட மக்கட்திரள்களும் அதனை விட்டுவிட்டு தமிழ் இலக்கியம் எழுதவந்திருப்பர். பாவம்.
சரி. இந்த எழவு அக்கப்போரையும் படிக்க வந்திருக்கும் ஏழரைகளில் ஒருவரான உங்களுக்கு ஒரு போட்டி.
அவருடைய மேற்கண்ட கட்டுரையில் (=கட்டுரையிலும்!) சுமார் 25-30 கருத்துப் பிழைகளும் தகவல் பிழைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி ஆராய்ந்து அவருக்கு நேரடியாக மின்னஞ்சல் எழுதி, அவருடைய விஸ்தாரமான பதிலையும் பெறும் பராக்கிரமம் மிக்கவர்களுக்கு பாதிராஜகுமாரியும் தமிழகமும் இலவசம். நன்றி!
ஊக்க போனஸாக, ‘கசப்பு ராமம்’ என ஆரம்பித்து எனக்குக் கடிதம் எழுதும் பாக்கியத்தையும் அளிக்கிறேன்.
பின்குறிப்பு: ஜெயமோகன் அவர்களுக்கு புனைவு எழுதுவதில் வல்லமை இருக்கிறது. தொடர்ந்து நன்றாகவே எழுதிக்கொண்டிருப்பவரும் கூட. ஆனால், இப்படியெல்லாமா புனைபுனை என எல்லாத் துறைகளிலும் புகுந்து புறப்பட்டுப் புனைவது, சொல்லுங்கள்? சலிப்புத்தான் வருகுதய்யா! (ஒருவேளை, இதெல்லாம் ஏதாவது ஏடாகூடமான தமிழ் பிலிம் திரைக்கதையோ?)
என்னது? அதற்குள் ‘மங்கத்தில் என்ன மணக்கிறது’ ‘பங்கத்தில் எது பறக்கிறது’ ‘சுங்கத்தில் என்ன சுழிக்கிறது’ ‘சிங்கத்துக்கு ஏன் சிலிர்க்கிறது’ என மேலதிகமாக நான்கு கட்டுரைகள் எழுதிவிட்டாரா? ஐயய்யோ!
May 29, 2019 at 17:05
அவர் சொல்றது உண்மை தான் என்று உங்கள் தளம் படிக்கும் முன் வரை நினைச்சிட்டு இருந்தேன்
உங்களுக்கு பல வேலைகள் உண்டென தெரியும் ஆனால் நேரம் இருந்தால் அவர் மேற்சொன்ன கட்டுரையில் எழுதிய பொய்களை அம்பலப்படுத்துங்கள்
என்னை போன்ற ஒன்னும் தெரியாவவங்களுககு உதவும்
நன்றி 🙏
May 29, 2019 at 18:33
சோப்புடப்பா, (என்ன புனைபெயரிது!)
எங்கு ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. முழுக்கட்டுரையும் ஒரு குப்பை.
ஒரேயொரு எடுத்துக்காட்டாக:
“இந்திய மாநிலங்களில் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு மேற்கு வங்கத்திற்கு உண்டு. அங்கே பிராமணர்களின் சதவீதம் பிற மாநிலங்களை விட அதிகம். ஆகவே அவர்கள் ஒரு முதன்மை அதிகார சக்தி ” என்று அட்ச்சிவுடுகிறார்!
ஒரு அடிப்படை விஷயம், அதுவும் கேவலம், பரவலாகக் கிடைக்கும் புள்ளிவிவரத்தைக் கூடச் சரிபார்த்து எழுதத் துப்பில்லை இவருக்கு! ஏகத்துக்கும், கைபோகிறமாதிரி எழுதிவிடுகிறார்!
பிரச்சினை என்னவென்றால், பாரதத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் தான் இந்தச் சதவீதம் அதிகம் ~20% – இதுதான் உண்மை. பின்னர் ஹிமாசலப் பிரதேசம் ~14% உத்தரப் பிரதேசம் ~10% என… மேற்குவங்கத்தில் இது ~5% தான்.
ஆனால் கைகூசாமல் ஒரு பொய்யை எழுதியது மட்டுமல்லாமல் சொகுசாக மேலே ஒரு படிபோய் “ஆகவே அவர்கள் ஒரு முதன்மை அதிகார சக்தி” என்கிறார்!
என்ன அற்பத்தனம் இது!
ஆனால் இந்தக் கட்டுரையை முழுவதும் சுளுக்கெடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை வியர்த்தம். அது இடக்கையால் புறம் ஒதுக்கத்தக்கது. முதல்தரக் குப்பை. கருத்துரீதியாகவும் சரி, தகவல் ரீதியாகவும் சரி.
மாறாக – இது வெண்முரசு கொட்டலில் இன்னுமொரு அத்தியாயம் என்றால் விட்டுவிடலாம் – ஏனெனில் அப்போது அது கேவலம், ஒரு புனைவுளறல்தானே!
எப்படிப் பொறுமையாக இதனை எழுதுகிறேன் என்றே தெரியவில்லை!
(பிற விஷயங்களுக்கு நீங்களே ஹோம்வர்க் செய்துகொள்ளவும், நன்றி!)
June 1, 2019 at 20:52
என் கேள்விக்கும் பதில் அளித்ததற்கு நன்றி ஆனால் சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் 20% பிராமணர்கள் இருப்பது ஹிமாச்சல் பிரதேசத்தில் என்று படித்தேன்(அங்கு தான் அகில இந்திய அளவில் அதிக பிராமணர்கள் என்று எழுதியிருந்தார்)
சோப்பு டப்பா என்பது மோசமான புனைப்பெயர் என்று தெரிந்ததால் தான் ட்விட்டரில் உங்க கிட்ட ஏதாவது பேர் சொல்லுங்க என்று கேட்டேன்
நீங்கள் சொல்லவில்லை
நன்றி 🙏
June 1, 2019 at 20:55
ஓ! நீங்கள்தானா அது. பதில்கொடுக்காமைக்கு மன்னிக்கவும்.
ஆனால் ஐயா, இவையெல்லாம் அனுமானங்கள், ஸர்வே முறைக் கணக்கெடுப்புகள் மூலம் பொதுமைப்படுத்தப்பட்டவை – அவ்வளவுதான்.
ஆனால் சர்வ நிச்சயமாக, ஜெயமோகன் கருத்துகள் மகா டகீல்கள். அவ்ளோதான்!
June 1, 2019 at 20:58
நன்றி அடியேன் ட்விட்டரில் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன் அதற்கு உங்க பதில் தேவை கூடவே ஒரு நல்ல புனைப்பெயரும்
May 30, 2019 at 10:18
நக்கீரத்தனமாக இருக்கிறீர். ஜோதிபாசு என்ன வகுப்பு? போஸ் , பாசு இரண்டும் ஒன்றா?
May 30, 2019 at 15:13
ஐயா, நக்கீரனும் இல்லை நக்கலீரனும் இல்லை. வரவர மிக வெறுப்பாக இருக்கிறது, நம் தமிழ் அலக்கியத்தின் நிலையை நினைந்துவிட்டால்…
// ஜோதிபாசு
அவர் ஏதாவது பரீட்சை, நீட், ஜேஇஇ என எழுதியிருந்தால்தானே பாசு ஃபெயிலு அப்டீன்னிட்டு. அவர் ஏதோ இடதுசாரியில் உட்கார்ந்து பையனுடன் சேர்ந்து ஊழல்செய்து அமர்க்களமாகப் போய்ச் சேர்ந்தார். அவ்ளோதான்.
//போஸ் , பாசு இரண்டும் ஒன்றா?
ஆம். ஒன்றுதான். Bos indicus எனவொரு இந்திய மாட்டுவகை இருக்கிறது. இதுதான் போஸ். சுபாஷ்சந்திரரற்ற போஸ். இவை நன்றாகவே புகைப்படங்களுக்கு போஸ் வேறு கொடுக்கும் என என்னிடம் கடலூர் சீனு, தாம் மதுராவிஜயத்தில் படித்ததாகச் சொன்னார்.
பாசு – என்பதும் பசு வகைதான். ஆனால் அவற்றுக்கு மேலதிகமாக ஒரு கால் இருக்கும் என மோனியர் வில்லியம்ஸ் அகராதியில் இருப்பதாக, பெரும்பேராசான் சொன்னார்.
திருப்திதானே?
நன்றி!
August 23, 2019 at 20:45
ஆசானின் தலைமாணாக்கன் அல்லேன் என்றாலும் அவரது தளத்தை அவ்வப்போது வாசித்து இரசித்து வந்தவன் என்பதால் என் மனைவி உங்களது வலைப்பதிவை சுட்டிக்காட்டிய போது உங்கள் தரந்தாழ்த்தி திட்டும் தொனியையும் வெறுப்பையும் பார்த்துக் காட்டம் தான் முதலில் அடைந்தேன். ஒரு மூன்று நான்கு பதிவுகளை வாசித்ததும் அதில் உள்ள நியாயம் பிடிபட்டது. உங்கள் எழுத்து – மானாவாரியாக வசைச்சொற்கள் வந்து விழுந்தாலும்!!! – நன்றாக இருக்கிறது :) (ஆமாம், நீங்கள் குறிப்பிடும் ஏழரை என்பது உங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையா அல்லது கட்டுரையில் திட்டப்படுபவர்கள் உங்களைத் தப்பித்தவறி வாசித்தால் அவர்களுக்கு ஏற்படும் அனுபவமா? :D)
இது நிற்க, போஸ் என்பதும் பாசு என்பதும் ஒரே வங்காளச் சொல் அல்லவா – boshu வஸு என்கிற வடமொழி மூலத்திலிருந்து?
August 23, 2019 at 21:43
ஐயா, தங்கள் கருத்துகளுக்கு நன்றி; உங்கள் முகவரியைத் (face line) தெரிவித்தால், குரியரில் கார்டிஃபாக மேலதிக வசைச்சொற்களை அனுப்புகிறேன். ;-)
போஸ் பாஸூ எல்லாவற்றுக்கும் நீங்கள் சொல்வது போலத்தான்.
மற்றபடி, ஏழரைகள் என்றால் சகசனியன்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களே!
May 31, 2019 at 04:41
எங்கிருந்து ஜாதி விவரங்களைக் பெற்றீர்கள்
May 31, 2019 at 05:25
ஐயா, நியாயமான கேள்வி.
ஆனால், நான் முன்னமேயே கோரிக்கை வைத்தபடி, ஜெயமோகனிடம் அவருடைய மேலான தகவல்களுக்கு (கண்டமேனிக்கும் உதிர்த்த கருத்துகளையும் உதிர்த்ததையே விடுங்கள்!) சான்றுகளைக் கேட்பீர்களா? (மின்னஞ்சலில் என்னையும் காப்பி செய்யவும்)
அவர் தானே ஆரம்பித்தார்? பிற்பாடு பூமிஹார்கள் பிராமணர்கள் என்று எழுதுவதற்கும் சான்று கேட்கவும். இப்படியே… …
அதற்கு அவர் அனுப்பக்கூடிய பதில்: “நான் துறை ஆராய்ச்சியாளன் அல்லன்; என்னுடையது எளிய, பொதுப்புத்தி சார்ந்த, பாமர, சமூகத்தின் மனச்சாட்சியான எழுத்தாளனின் பார்வை; ஆகவே, அகலவும்.”
நன்றி.
June 1, 2019 at 12:24
மேற்கு வங்க பாஜக வெற்றி அதிசயம் தான் எனக்கு. கீழ்கண்ட தகவலை நீங்கள் ஏற்பீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் கையில் உள்ளது இதுவே, மேலதிக புரிதலுக்கு/ தகவலுக்கு ஒரு ஷ்யாம்பூர் பெங்காலியை கேட்டுள்ளேன்.கருத்துகளை சமைப்பது அவரவர் பாடு :-) விட்ருங்க சார்
https://www.thehindu.com/elections/lok-sabha-2019/when-the-left-moved-right/article27266690.ece
June 1, 2019 at 13:09
ஐயா நன்றி! காத்திரமான தகவல்கள் பேரில் கருத்துகளைச் சமைத்துச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதே!
அதற்குமுன் தினமும் மூன்றுவேளை சாப்பாட்டுக்குப் பதிலாக வெண்முரசு பாராயணம் செய்தால் அது இன்னமும் நல்லது என்பதும் என் புரிதல். வயிற்றுக்கும் வேலையில்லை, மூளைக்கும்தான்!
நன்றி.
June 1, 2019 at 15:04
ஐயா, ஜெமோவாவது சுதந்திரத்திற்கு பிறகான சமூக ஆய்வோடு (!) விட்டுவிட்டார், சிப்பாய் கலகம் வரை கொண்டு செல்கின்றனர் முகநூலில்.வேடிக்கை பார்ப்பதற்கே பயமாய் உள்ளது, மேலதிகமாக நீங்கள் பாராயணம் வேறு செய்யச் சொல்கிறீர்கள் :-(
June 1, 2019 at 16:21
இனிய பயம்,
வாழ்க்கையே ஆகச் சிறந்தது அன்றிப் பிறிதொன்றில்லை.
அன்றில் பறவை பறக்கும் புலரியில் ரத்தக் களறி வெளிப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
என்னைப் போன்ற எளிய சாமானியனை, பொதுப்புத்தி சார்ந்து சமூகத்தின் மனச்சாட்சியாகத் தொடர்ந்து முயங்கும் என்னைத் தாங்கள் தடுத்தாட்கொள்ளவேண்டும்.
ரா (வெண்முரசின் கொட்டம் தாங்காமல் அல்லாடும் என்னை அந்த அல்லாதான் காப்பாற்றவெண்டும்!)
June 1, 2019 at 21:05
வராஹ அவதாரம் சமணர்களிடம் இருந்து எடுத்தது என்று ஆசான் சொல்லிருக்காராமே?
June 1, 2019 at 21:08
தாங்கள் சுட்டி கொடுத்தால், எனக்குச் சமயம் வாய்த்தால் பார்க்கலாம். சரியா?
June 1, 2019 at 21:09
ஐயா நான் ஒரு இளைஞன் கல்லூரி முதலாமாண்டு இப்போது தான் சேரப் போகிறேன்
உங்கள் பதிவுகள் அனைத்தும் தரம் சில நேரம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீர்கள்
நன்றி என் அறிவை விஸ்தரிக்க தூண்டியதற்கு
ஆங்கிலம் மற்றும் தமிழில் சில நல்ல நூல்களை நான் வாசிக்க வேண்டியவை எவை?
June 1, 2019 at 21:16
வாழ்த்துகள். சில நண்பர்கள் சேர்ந்து புத்தகக் குறிப்புகளை எழுதலாம் என இருக்கிறோம். பார்க்கலாம்.
June 1, 2019 at 21:27
இந்தாருங்கள் ஆசானின் வராஹ அவதாரத்தை பற்றிய சுட்டி
https://m.jeyamohan.in/122176#.XPKsuIHhXqA
June 2, 2019 at 06:37
படித்தேன். நன்றி. (ஹ்ம்ம், இல்லை; இதனை வாபஸ் பெறுகிறேன்!)
சிலவிஷயங்களை, பாமர-எளிய வாசகர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
1. ஜெயமோகன் ஒரு புனைவு எழுத்தாளர். புனைவுகளில் திளைப்பவர். நல்ல விஷயம்.
2. நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல, ஆசானியத் தமிழ் எழுத்தாளர்களில், ஒப்பு நோக்க, அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி மிக அதிகம். இதுவும் நல்ல விஷயம்தானே!
3. ஆர்வக் கோளாறும் அவருக்கு அதிக வீரியத்துடன் இருக்கிறது. சந்தோஷம்.
4. அவர் பல்துறை வல்லுநர். அதாவது Expert Dentologist Indologist etc. ஆஹா!
…அதாவது 1 எனும் எண்ணிக்கைக் குறியீட்டுக்குப் பின் 2 எனும் எண்ணிக்கைக் குறியீடு வருகிறது. ஆகவே முதலில் 1 கண்டு பிடிக்கப்பட்டது. அதிலிருந்துதான் 2 தோன்றியது. அதாவது 2 ஒன்றை இழுத்துக்கொண்டது. அதாவது ஒன்றுக்கே போகாமல் ரெண்டுக்குப் போகமுடியுமா என்பதுதான் இதில் தத்துவார்த்தமான கேள்வி.
அல்லது அ எனும் உயிர் எழுத்து முதலில் தோன்றியது. ஆ என்பது இரண்டாவதாக. அதுவும் அந்த அ-வைப் பார்த்து அந்த ஆ ஆஆஆஆ என ஆச்சரியப் பட்டுக்கொண்டே இருப்பதனால்தான் நமக்குத் தெரியவந்தது. இந்த ஆ என்பதுதான் பசுவாக விரிந்து நந்தியாக நகர்ந்து சிவனின் முன்னால் போய் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டது.
அய்யன்மீர், யார்யாரை எதற்கெதற்கு ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை – நாம் பட்ட/படும் அனுபவங்களிலிருந்துதான் அறிந்துகொள்ளவேண்டும்.
காலைச் சிரிப்புக்கு நன்றி.
ரா.
June 2, 2019 at 10:16
நான், நீர், ஆசான் மற்றும் எல்லோரும் ஒருமித்து ஒத்துக் கொள்வது இதை மட்டும் தான்
“ஒன்றுக்கே போகாமல் ரெண்டுக்குப் போகமுடியுமா என்பதுதான் இதி
June 2, 2019 at 10:54
மீண்டும் “வராஹ அவதாரம்”
https://m.jeyamohan.in/122344#.XPNoHoHhXqA
இது பற்றி அனீஸ் நாயர் என்பவர் க.சீனுக்கு மறுப்பெழுதி அதற்கு ஆசான் பதிலும் எழுதியிருக்கிறார். ஆனால் ஆசான் இதில் முடிவாக என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை தங்களுக்கு புரிந்தால் சொல்லவும்
June 2, 2019 at 12:51
நன்றி. :-)
இந்த அனீஷ் க்ருஷ்ணன் நாயர் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படிப்பாளிகளை நான் மதிப்பவன்.
இருந்தாலும்.
மிதவாதமாகவும் பவ்யமாகவும் எழுதப்பட்ட அந்த எதிர்வினையில் கடலூர்சீனுவை மட்டும் குறை சொல்லியிருக்கிறார். இது சரியில்லை.
ஜெயமோகனை வருடிவிட்டு ‘இதெல்லாம் நீங்கள் சொல்வது போலத்தான்’ என்கிறார். அனீஷ் அவர்களும் ஜெயமோகனும் நண்பர்களோ? ஆகவே, ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டோர்களோ என்னவோ!
பதிலுக்கு ஜெயமோகன் நேரடியாகவோ மறைமுகமாகவோகூட தன் அபத்தத் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் வேறெங்கோ போய் கில்லி கபடி க்ரிக்கெட் என ஆடி ஆயிரம் வார்த்தைகள் எழுதுகிறார்.
இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
June 2, 2019 at 19:01
[…] குறை சொல்லலாம் – முன்னறிமுகமுள்ள சேஷகிரி அவர்களையும், முன்பின் தெரியாத […]
June 4, 2019 at 15:47
[…] ஜெயமோகன் எனும் தொடரும் ஆச்சரியம் 29/05/2019 […]