ராஹுல்காந்தியின் ப்ரிட்டிஷ் குடியுரிமை – சில குறிப்புகள்

March 20, 2019

உங்களுடைய நாட்டின் குடிமகன்‘ என ஆங்கே மண்டையைக் காட்டி லண்டனில் படிவங்களை நிரப்பிவிட்டு, ‘நான் இந்தியன், என்னைப் பிரதமராக்கு‘ என இங்கு வாலைக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஒரு கேவலப்பிறவிதான் “என்னை ‘ராஹூல்’ எனக் கூப்பிடு” என அறியா இளம்பெண்களுக்கு நெகிழ்வாலஜி சமதலைமுறை சொக்குப்பொடி ஓட்டுவலை போடுகிறது, என்ன செய்ய.

இந்தப் பெருச்சாளிக்குப் பக்க வாத்தியம் வாசிக்க தமிழகத்திலொரு உளறாலஜி ஊழல்சுண்டெலி ஸ்டாலின்வேறு!

தேவைதானா நமக்கு?

அக்கழிசடைகள்தாம் இப்படியென்றால், நம் தமிழக ‘சமூகத்தின் மனச்சாட்சி ஸ்பெஷலிஸ்ட்‘ வகைப் பேராசான்களும் இந்தக் கேவலப்பிறவியின் மீது ‘நம்பிக்கை’ வைத்து அப்படி உருகுகிறார்கள். நல்ல பொருத்தம்தான்.

-0-0-0-0-0-

இந்த விவகாரம், ஆதாரங்களுடன் சுப்ரமணியம் ஸ்வாமி அவர்களால், பலவருடங்களுக்கு முன் முன்னெடுக்கப்பட்டது. அவரும் பாவம், பலமுறை இந்திய அரசுடன் இதற்காக மல்லுக்கட்டினார்; ஆனால், பல்வேறு காரணங்களால் இது கிடப்பில் இருக்கிறது. ஒரு முக்கிய காரணம், நம் அதிகாரவர்க்கத்திலுள்ள சிலபல புல்லுருவிகள் இந்தியாவின் முதன்மைக்குடும்பத்துக்கு(!) கட்டுப்பட்டு நடக்கிறவர்கள். ஆகவே, ஏதாவது டெக்னிகல் காரணம் காட்டி விஷயங்களை ஊறப்போட்டு ஆறவிடுபவர்கள். இது ஒரு சோகமான உண்மை.

…ஆனால் இம்மாதிரி விஷயங்கள் பற்றி ‘அழகாக நாக்கைச் சுழற்றி வெட்கப்படும்’ இளையதலைமுறைகளுக்குத் தெரிவதில்லை, இத்தனைக்கும் இவர்கள்தாம் பெரும்பாலும் தேர்தலின் முடிவுகளை நிர்ணயிக்கப் போகிறவர்கள், விடிவெள்ளி(!)களாகத் திகழப் போகிறவர்கள் – வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற எழவுகளில் ‘நேர்மையாகப்’ பொங்குபவர்கள்.

ஆனால் அம்மணிகளே, அம்மணர்களே! என்னைப் போன்ற கிழங்கட்டைகளுக்கே இதெல்லாம் தெரியவில்லை அல்லது மறந்துவிட்டது எனும்போது – பாவம், ஒழுக்கவியல் அரைகுறை ஸ்டெல்லாஜானிநீரோ கல்லூரிகளில் மூச்சுமுட்டப் படித்துக்(!)கொண்டிருக்கும் இளம்பிள்ளைகளைக் குற்றம் சொல்வதும் நியாயமில்லை.

-0-0-0-0-0-

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

மே 27 2002ல்  பிபிஓ வகை பேக் ஆஃபீஸ் தகவல்தொழில்நுட்ப உபரிவேலை நிறுவனம் ஒன்றை ‘பேக் ஆப்ஸ் ஸர்விஸஸ்’ (Backops Services Pvt. Ltd.) என்ற பெயரில், ராஹூல் காந்தி  தன் சந்தேகாஸ்பதமான வெள்ளைக்கார நண்பர் ஒருவருடன் துவக்கினார். [1]

இதில் பல ஊழல்கள். இவற்றில் ஒன்று — தொழிலையே துவங்காமல், ஆவணங்களை – தொடர்புள்ள சார்பதிவாளர் (ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனிஸ்) அலுவலகத்துக்கு ஒன்றுமே கொடுக்காமல் – அமோகமாக வெளி நாட்டில் இருந்து ‘பணமும்’ வந்தது – இம்மாதிரிப் பலப்பல ஊழல்கள்!

2004ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்களுக்கு இந்த நிறுவனத்தின் வருடாந்திர அமர்வுகள் ப்ரியங்கா காந்தி/வாத்ராவின் தில்லி வீட்டில் – சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருக்கின்றன.

2009 தேர்தல் விண்ணப்பத்தில் இந்த பேக்ஆப் நிறுவனத்தைப் பற்றி ராஹுல் குறிப்பிட ‘மறந்து’ விட்டார். பின்னர் இதுகுறித்து சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் குடைய ஆரம்பிக்கவே – அவர் பயந்துபோய் மே 2010ல் அந்த நிறுவனத்தின் ‘டைரக்டர்’ பொறுப்பினை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அந்த நிறுவனத்தில் 82% போல அவர் ‘பங்கு’ இருக்கிறது.

இந்திய நிலைமை இப்படி இருக்கையிலே லண்டனில் சில சில்மிஷங்கள்.

ஆகஸ்ட் 2003 வாக்கில், லண்டனில் அதே சந்தேகாஸ்பதமான வெள்ளைக்காரருடன் சேர்ந்து பேக்ஆப்ஸ் லிமிடெட் எனவொரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். இதுவும் ஒரு லெட்டர்ஹெட் பெயரளவுக்கு நிறுவனம்தான். நிழலான நடவடிக்கைகள்.

இதையும் ஏறக்கட்டி 2009ல் மூடினார்.

இந்த நிறுவன விவகாரத்தில்தான் ஆறு வருடங்களுக்கு, அந்த நிறுவனம் சார்பாகவும், அவராகவும் ப்ரிட்டிஷ் அரசாங்க அமைப்புகளுக்கு அதிகாரபூர்வமான ஆவணங்களில் தன்னை ஒரு ‘ப்ரிட்டிஷ் குடிமகன்’ எனத் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்.

கீழே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சிவப்பு அடிக்கோடு என்னுடையது.

இதுகுறித்து விலாவாரியாக சுப்ரமணியம் ஸ்வாமி தொடர்ந்து எழுதியிருக்கிறார். அவர் 2015ல் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் [2] பின்னிணைப்பாகப் பல ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ குறித்த பல ஆவணங்கள் இருக்கின்றன. காத்திரமான, அசைக்கமுடியாத தரவுகள் அவை. அதிலிருந்துதான் நான் மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்தேன்.

மேலும் இணைய இணைப்பு உள்ள எவருமே ப்ரிட்டிஷ் நிறுவனங்களைக் குறித்து சிலபல ஆவணங்களைத் தரும் தளங்களுக்குச் சென்று பேக்ஆப்ஸ் லிமிடெட் குறித்த சில விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். [3]

நான் எடுத்த ஸ்க்ரீன்ஷாட் இதோ. சிவப்பு அடிக்கோடிடல் எனது.

இதே தளத்திலிருந்து ஐந்து ‘ஸாம்பிள்’ (2005லிருந்து 2009 வரைக்கான) ஆவணங்கள் வரை இலவசமாகத் தரவிறக்கிப் பார்த்துக்கொள்ளலாம். [4]

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இவற்றில் சிலவற்றை  (பின்னர்!) பேனாவால் திருத்த முயன்றிருக்கிறார்கள். [5]

ஒருமுறை இப்படிப் பிறழ்வு/தவறாகிவிட்டது என்றால் சரி. ஆனால் பலப்பல வருடங்களுக்கா இப்படிச் செய்வார்கள்? பின்னர் மாட்டிக்கொண்டதும் திருத்துவார்கள், இழுத்துமூடுவார்கள்??

நல்ல ஊழல்-பேடித் தலைவர்கள், நல்ல கட்சிகள்! வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-

இந்த விவகாரத்தைக் கணக்கு தீர்ப்பதற்கு ஏதுவாக யோசித்தோமானால், குறைந்தபட்சம் நான்கு காரணங்கள் இருக்கலாம்.

1. ராஹுல்காந்தி ஒரு ப்ரிட்டிஷ் குடிமகன். இந்தியக் குடிமகன் என்று இந்தியாவில் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

2. ராஹுல்காந்தி ஒரு இந்தியக் குடிமகன். ப்ரிட்டிஷ் குடிமகன் என்று இங்கிலாந்தில் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

3. இங்கிலாந்திலோ இந்தியாவிலோ ஆவணங்களில் கைநாட்டு வைக்கும்போதோ கையெழுத்திடும்போதோ ஒருவிதமான ‘மப்பில்’ இருந்திருக்கிறார் – அதனால் தான் எங்கு என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்றே தெரியவில்லை.

4. ராஹுல்காந்திக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை – ஆகவே எவரோ பூர்த்தி செய்த ஆவணங்களைச் சரிபார்க்கத் தெரியாமல் கைநாட்டு போட்டுவிட்டார், பாவம்.

மேற்கண்ட நான்கிலிருந்து நமக்குத் தெரிவது யாவையென்றால்:

அ. ராஹுல்காந்தி ஒரு கடைந்தெடுத்த பொய்யர். (இதற்காக இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவர்பேரில், சர்வ நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படலாம்)

(அல்லது)

ஆ. ராஹுல்காந்தி அடிப்படை அறிவற்ற ஆசாமியும் மப்பாளரும். (ஆகவே – இவரை டிடி ரங்கநாதன் க்ளினிக் போன்ற போதைவசப்பட்டிருக்கும் அன்பர்களைக் காப்பாற்ற முயலும் அமைப்பில் உடனடியாகச் சேர்க்கலாம்)

உங்களுக்குப் பிடித்ததை ‘டிக்’ செய்யவும். (எனக்கு இரண்டுமே சரிதான் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது, that is, PlanCircleLike!)

இந்தக் கேடுகெட்ட அரைகுறைத் தற்குறியா, நரேந்த்ரபாய் மோதிக்கு எதிராக முட்டுக்கொடுக்கப் படுகிறது?

ஒரு தராதரம் வேண்டாமா, சொல்லுங்கள்?

இப்படிப் பலவாரியாகப் பிளந்த நாக்குடன் புளுகும் ஆசாமியா ஒரு இந்தியக் குடிமகனாக, ஏமாந்தால், பாரதப் பிரதமராகவே ஆக வாய்ப்பிருக்கரது என நினைக்கிறார்கள்??

படுகேவலம்! ஆச்சரியமாகவே இருக்கிறது!

கோரிக்கை: முடிந்த அளவு இம்மாதிரி விஷயங்களைப் பரப்பி ‘வாக்காளர்களுக்கு கல்வி புகட்ட அல்லது செய்திகளைக் கொடுக்க’ ஆவன செய்யமுடியுமா? நான் எழுதியிருப்பதெல்லாம் புதிய விஷயங்களில்லை – சுப்ரமணியம் சுவாமி அவர்களால் அம்பலம் செய்யப்பட்டு, இணையத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் தாராளமாகக் கிடைக்கும் தரவுகள்படி இருப்பவைதாம் இவை!

பின்குறிப்பு: எது எப்படியோ – ஒத்திசைவுக்கு காப்பிரைட் டீலெஃப்ட் காப்புரிமை போன்றவை ஒன்றுமில்லை. கீப்புரிமையும் இல்லை – ஏனெனில் அது திராவிடர்களின் அடிப்படை உரிமை. ஆகவே, தாராளமாக வெட்டி ஒட்டி ஷேர் பங்குவியாபாரம் என வேண்டியதை அமோகமாகச் செய்துகொள்ளலாம். ஆனால்,பேராசான் சிற்றாசான்களைப் போலத் திரிக்காமல் இருக்கவேண்டும், அவ்ளோதான்!

நன்றி.

குறிப்புகள்/சுட்டிகள்:

[1] http://deshgujarat.com/2012/10/27/dr-subramanian-swamys-written-statement-on-rahul-gandhi-in-ahmedabad/

[2] https://vhsindia.org/explosive-revelations-about-rahul-gandhi-and-a-british-company/

[3] https://companycheck.co.uk/company/04874597/BACKOPS-LIMITED/companies-house-data

[4] https://companycheck.co.uk/company/04874597/BACKOPS-LIMITED/documents

[5] https://www.pgurus.com/why-did-raga-start-a-company-in-uk/

6 Responses to “ராஹுல்காந்தியின் ப்ரிட்டிஷ் குடியுரிமை – சில குறிப்புகள்”

 1. jasdiazj Says:

  if I write in a form I am a US citizen, do I become a US citizen? The process is quite lengthy and leaves behind a lot of paper trail.

  Why can’t Modi government unearth the paper trail of Rahul’s application and nail him?


  • No. Just because one submits a form nothing of that citizenship sort can happen, I agree.

   But WHY did he do that? So may be he is a actually a citizen of UK or was plainly lying.

   It is possible for the Modi govt. But then everyone will say ‘witch hunt’ – and ‘intolerance’ and what not.

   Anyway, some bureaucrats are blocking even the starting of the investigation. I know it for sure; they are ‘hand-in-glove.’

   And then, there are way too many other things for the Govt to bother about than, chasing after a despicable scumbag – yeah?

   __r.

 2. SB Says:

  Sir
  An (in)direct benefit for BJP as having RAGA will help BJP to continue to succeed . Once it happened and 2019 seems to be on the same trajectory.
  Who will be the easy fighter than Raga ?
  In due course , Congress will have BJP(Namo) and thereafter BJP will have Raga (age is in his factor).
  Polarization is the way to beat all genuine competition.
  SP & BSP’s merger is the ultimate when it comes to scouring out a new competition.
  In general, politics has become the game of polarization of powers (not to be more than two ).
  Have you seen the below ?

  http://charuonline.com/blog/?p=7533

  Common man’s genuine feel is to have BJP for another 5 years despite incumbency (seems to be a sure shot) and if it is the same single majority, well and good. This on the basis of ” when Congress got several years , why not BJP for another 5 and nothing more ‘

  Palpable results (good results) for the citizens is the way forward and hope BJP will not disappoint in 2019-2024.

  An Emergence of new set of leaders in BJP is essential so that people take the feel of ‘all inclusiveness’ categorically.

  Charu’s/Seeman’s urgency in wanting to have swift results is foolhardy and is a pipe-dream . Let The Man do his job for another 5 years as to see where he’s taking India to. We have our hopes still lying dormant and believe Mr.Namo would make it this time.

  BJP’s backdoor policies as far as TN is concerned, can be tagged as ‘ Chanyanka tantram’ . Are you (as pro-BJP)taking that in the right vein and was that fair ?

  ‘Something going somewhere wrong’ for BJP despite the best intentions of top leader needs to be set right – sooner BJP does that, better !

  Regards
  SB

 3. NotAModiSupporterOrHater Says:


  Just for your notice


  • பார்த்தேன். ஆயிரம் ஓட்டைகள். இனிமேலிருந்து இம்மாதிரி விஷயங்கள் என் நண்பர்களிடமிருந்து வந்தாலொழியப் (அவர்கள் இம்மாதிரி அரைவேக்காட்டு விஷயங்களை அனுப்பமாட்டார்கள்!) பார்க்கப்போவதில்லை. குறைந்த பட்சம், நீங்கள் உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் – அப்படியில்லாததால் உங்கள் நம்பகத் தன்மையை அது சந்தேகத்துக்கிடமாக்குகிறது.

   1. முன்னமே சொல்லியபடி – இந்தப் பேச்சிலும் விவரங்களிலும் ஏகப்பட்ட ஓட்டைகள்.

   2. புத்தகத்தை எழுதிய ஸல்மான் அனீஸ் ஸௌஸ் திடீரென்று சிலபலவருடங்கள்முன் அரசியலுக்கு வந்தவர் – செய்த விஷயங்கள் ஒரு சுக்குமில்லை. அப்பன் உதவியில் சராசரிப் படிப்பும் அப்பன்சார்ந்திருந்த கட்சியின் ‘பெரியவர்களால்’ வேலையும் பெற்றவர். (உலகவங்கி) – குப்பை. ஒட்டுண்ணி. ஒரு சிறுசாதனையும் இல்லை. காங்கிரஸின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளராக இருப்பதற்கு அப்பாற்பட்டு.

   3. இவருடைய தந்தை ஸைஃபுத்தீன் ஸோஸ் – அந்தக் காலத்தில் ரஷ்யர்களின் அடிவருடியாக இருந்து (நம்மூர் ஸிபிஐ இலக்கிய/அரசியல்வாதிகள் போல) விருதுகள் பெற்றவர். மேலும் கொலைகார இஸ்லாமிய தீவிரவாதிகளின் சார்பாக (அவர் மத்திய அரசில் இருக்கும்போதே!) அவர்கள் சார்பாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர். வாஜ்பேயி நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரைக் கவிழ்த்திவிட்டு உடனடியாகக் கட்சிமாறி காங்கிரஸில் சேர்ந்தவர். பெரிய பாரம்பரியம்.

   4. பையன், சின்ன பாரம்பரியம். வாழ்க.

   உருப்படியாக வேறுவேலை இருந்தால் செய்யுங்கள்.

 4. nparamasivam1951 Says:

  Rahul Gandhi is the vote catcher for BJP. May be, for that reason, Modi might have decided to take up this case in his second term. Another reason may be, Modi concentrated in result oriented development activities leaving these petty things for his second term.
  So, in all probability, Dr.Swamy will be asked to take up this from June 2019 along with his NH case.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s