அருந்ததிராய், எதிர்கால தமிழக முதலையமைச்சர் கமலகாசனாரோடு கைகோர்க்கிறார்!

March 19, 2019

உடையப்போகிற செய்தி!

வரப்போகும் செய்திகளை உருவாக்குவது ஒத்திசைவு!!

-0-0-0-0-0-

ஹ்ம்ம்…எதெல்லாம் நடக்கக்கூடாது என விழைகிறோமோ, அவை நடந்தேவிடும்போல! எல்லாம் கலிகாலம். என்ன செய்வது, சொல்லுங்கள்.

அம்மணி அருந்ததிராய் பற்றி நான் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. ஏனெனில் அவர் மாய்ந்து மாய்ந்து உலகெலாம் திரிந்து ஆங்கிலத்தில் புளுகுணி மூட்டைகளாக அட்ச்சிவுட்டு நாவல் கட்டுரை என்றெல்லாம் உணர்ச்சி பொங்க பொங்கலிட்டு அடிப்படையே இல்லாமல் எழுதி அண்டத்திலேயே பிரபலமாகி அவார்டெல்லாம் வாங்கியது மட்டுமில்லாமல் தன்கணவருடன்சேர்ந்து மத்தியப்பிரதேசக் காட்டு நிலத்தை வளைத்துப் ப்ளாட் போட்டு விற்றவரும்கூட என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். (ஆதாரங்கள்:சுட்டி1, சுட்டி2)

முன்னமேயே – நடிகர் பரேஷ் ராவல் – அருந்ததிராய் குறித்த ஒரு சர்ச்சையில், கமலகாசனார் மய்யமாக ஒரு கருத்தை வெளியிட்டதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆதாரம்: சுட்டி3.

Speaking with tongue lodged firmly in cheek, Kamal Haasan said, “I hope both Arundhati Roy and the Kashmir extremists have a humorous bent of mind like my friend Pareshji.”

Kamal Hassan — against whom a case was recently lodged, for an alleged comment on the Mahabharat — is careful not to say anything that could make him sound politically incorrect.

ஆதாரம்: சுட்டி4

-0-0-0-0-

ஆனால் நீங்கள் இதுவரை அறியாத ஒன்றுதான் நான் தரப்போவது…

அருந்ததியார் அவர்கள், அம்மி மிதிக்காமலேயே, அவருக்கே உரித்தான மய்யமான நீதியுடன், வொலக நாயகன் கமலகாசனாரோடு இணைந்து தமிழகமக்களுக்குச் சேவை செய்யப்போகிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகீர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைபவனே நான்தான்!

மேற்கண்ட சுனாமிச்செய்திக்கு, தமிழக ஊடகங்களில் ‘எழுதப்படாத விதி’ வகையான அசைக்க முடியாத ஆதாரம், கீழே – அகடவிகடனுக்கு நன்றியுடன்.

இதில் மய்யமாக மய்யத்தையும் நீதியையும் பற்றி அருந்ததிராய் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை கவனிக்கவும். ஊக்க டார்ச்சராக, ‘வெளிச்சம்’ என்பதன் மூலம் டார்ச்லைட் சின்னத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் என்பதையும் கவனிக்கவும்.

கமலகாசனாரும் அவர் பங்குக்கு, அருந்ததிராயை வரவேற்று இப்படி, மிகத் தெளிவாக ட்வீட் செய்திருக்கிறார் என்பதையும் நோக்கவும்…

“இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது அருந்ததிராயின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாளப் போகும் மய்யா மச்சீந்த்ரா மச்சம்பார்க்க வந்தீரா நாயகனுக்கு நன்றி. நன்றி சொல்வதற்கு ஸென்ட்ரி தேவையா கன்ட்ரிதான் தேவை. பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசக் காட்டுவாசிகளின், காட்டிலாகா ஊழியர்களின்,  காட்டுவிலங்குகளின் அயராத பணி போற்றத்தக்கது.”

ஆதாரம்: சுட்டி5

மய்யம் மகளிர் அணியின் தலைவியாக இவர் உடனடி நியமனப் பதவி பெறப்போகிறாராம் என்று ஜூவி கழுகார் ஜிவ்வெனப் பறந்துகொண்டே சொல்கிறார்.

​இஞ்சி முரப்பா இருக்கிறதா? அல்லது வெறும் ஆசிரியப்பாதானா??​

 

 

3 Responses to “அருந்ததிராய், எதிர்கால தமிழக முதலையமைச்சர் கமலகாசனாரோடு கைகோர்க்கிறார்!”

 1. SB Says:

  Sir,
  What is the logic behind your discarding Kamal Hassan as the force to reckon with in TN? He’s obviously against Kahazgams .
  Could you please clarify.
  Anybody against BJP is no good candidate ?
  What’s wrong with Mr.Kamal Hassan and MNM ?

  He got the guts to go alone and as an alternative, he is there for TN people to pick for .

  Regards
  SB


  • Sir, hope he does not mind me discarding him. Poor chap. ;-)

   Kamal cannot manage anything for a sustained period. He is a reasonable actor and wants to act all the time. But, the fact is, politics requires much more than haridharam and a proven ability to mindlessly plagiarize.

   And it is harsh for me to say this, but would say it anyway – he at best is a don quixote, who as an added bonus, does not have a functioning vertebral column.

   No. I would not say that anybody against BJP is no good. What about Nallakannu?

   My best wishes to centttttrrre. Thanks.

 2. S bmniac Says:

  It is pathetic that Tamilnadu considers film-folk as intellectuals or leadership material.We are perhaps different but not better than other Indians


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s