ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும்

December 5, 2018

துக்கம் அனுஷ்டிக்கப்படும் விதமாக, ஒத்திசைவு பள்ளிக்கு நாளை விடுமுறை. யாரும் புதிய அக்கப்போர் படிக்கிறேன் பேர்வழி என வந்து ஏமாற வேண்டாம். நாளை, ஒன்றும் தரவேற்றப்பட மாட்டாது.

மௌன அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பின்னூட்டப் பகுதி திறந்து வைக்கப்படும். மலர் அஞ்சலி செலுத்த விரும்புவோர், செலுத்தலாம்.

-0-0-0-0-0-

இன்றைய தினம் கொடும்துக்க தினம். வடவப் பாவிகள் தமிழன் நெஞ்சில் கடுஞ்சூடேற்றிய விஷ ஈட்டியைச் சொருகிய கறுப்பு நாள்!

ஆரிய நச்சரவங்கள் தமிழின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

பாஜக மோதி ஆட்சியில் தமிழ் பிழைக்கத்தான் கூடுமா? மோதி தமிழகத்துக்கும் நல்லது செய்வார் என நம்பி ஏமாந்தேன். பார்ப்பன-பனியா சங்கப் பரிவாரக் காவி புத்தியைக் காட்டிவிட்டார் அவர்.

தன்னுடைய குஜராத் மாநிலத்துக்கு மட்டும் சரியான ஒரு தேர்வைச் செய்து ஆகிருதி மிக்க அம்மணி ஷரீஃபா விஜலிவாலாவுக்கு சாஹித்ய விருதைக் கொடுத்திருக்கிறார்!

பாருங்கள் கீழ்கண்ட இரண்டு காணொளிகளை!

பிற மொழிகளுக்கான விருதுகளும், எனக்கு அறிமுகமானவரை அப்படியே! :-(

ஆனால் தமிழகத்தை மட்டும் இப்படி ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி, சந்தி சிரிக்கவைத்துவிட்டார்! இதைக் கேட்பாரே இல்லையா? :-(

தமிழனையும் தமிழகத்தையும் படுகேவலப்படுத்தும் ஹிந்துத்துவா சதித் திட்டத்துக்குத் துணைபோன எட்டப்பி ஜி.திலகவதி, எட்டப்ப தோப்பில் மொஹம்மது மீரான், எட்டப்ப ஈ சுந்தரமூர்த்தி முகங்களில் கரியைப் பூசுவோம்!

http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2018.pdf

ஓ பாவிகளே! உருப்படுவீர்களா? :-( ஒவ்வொரு வருடமும் இப்படியே சந்தி சிரிக்கவைக்கிறீர்களே!

ஆ! நெஞ்சு பொறுக்கியில்லையே! இந்தக் கூறுகெட்ட மந்திகளை நினைத்துவிட்டால்…

படுபீதியாக இருக்கிறதே! இந்த விருது கிடைத்த புத்தகம், பிற பெரும்பாலான இந்திய மொழிகளிலெல்லாம் பெயர்க்கப்பட்டு வெளிவந்து, பிற இந்தியர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பாகச் சிரிப்பார்களே! கெக்கலி கொட்டித் தட்டாமாலை சுற்றிப் பேயாட்டம் ஆடுவார்களே!

நம் தமிழுக்கு this want, more also want! :-(

ஆகவே, திராவிட மறவர்களே! இனமானக் காவலர்களே! இலக்கியக் கொழுந்துகளே!

…அலைகடல் போல ஆர்பரித்து எழுந்து மெரீனா கடற்கரையில் அணி திரள்வோம்… ஆரியம் திராவிடத்துக்குக் காட்டும் அநியாய ஒரவஞ்சனையை எதிர்த்துக் களம் காணுவோம்.

பின்குறிப்பு: இந்த வருட விருதுக்கு ஒரு தமிழ் எழவுமே சரியாக வாய்க்கவில்லையானால் – வருடாவருடம் ஈக்ள் டைரி பதிப்பிக்கும் நிறுவனத்துக்காவது கொடுத்திருக்கலாமே! அது ஒத்துவராத பட்சத்தில் ராணிமுத்து தினசரி நாட்காட்டிக்காவது?

தொடர்புள்ள 2012-16 வருடங்களில் எனக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தே விருதாவாளரை விட மேலான பதிப்புகளைக் கொணர்ந்திருக்கிறார்களே இவர்கள்!

இனிமேலிருந்தாவது இப்படிச் செய்வார்களா? :-(

-0-0-0-0-0-

However, if the award giving organization is renamed as ‘Sahitya Acadummy,’ that would also be acceptable – at least, exclusively for my dear hapless & mediocrity worshipping Tamilnadu. Thanks! :-(

17 Responses to “ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும்”

  1. Sivaaa Says:

    நீங்கள் பயந்தது நடந்து விட்டது போல….

  2. K.Muthuramakrishnan Says:

    “விருதாவாளர்கள்.” தமிழுக்கு உங்களுடைய கொடையாக இந்தச் சொல்லை ஏற்கிறேன்.


  3. நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். ஜெயமோகனின் நகைச்சுவை உணர்ச்சி அபாரமானது.

    எவ்வளவு அழகாக, கன்னத்தில் நாக்கை பாதுகாப்பாக ஒளித்துக்கொண்டு ஸாஹித்ய விருதுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார், பாருங்கள்!

    https://www.jeyamohan.in/115892

    என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. த்ருஷ்டி கழிக்கவேண்டும்.


  4. அபிலாஷ் சந்திரன் எனும் இளைஞரை சிலபல முறை படித்திருக்கிறேன்.

    இவருடைய விசித்திர சித்திரவதைக்கும், மலையாள மாந்த்ரிகப் பதார்த்தக் கதையாள விருதாவாளர்தான் காரணம் என இன்று அறிந்து இறும்பூதடைந்தேன்.

    அபிலாஷ் சந்திரனின் கண்ணீர் அஞ்சலி.

    -0-0-0-0-

    Abilash Chandran
    6 hrs

    இவ்வருடம் சாகித்ய அகாடமி விருது பெறும் எஸ்.ராவுக்கு வாழ்த்துகள். நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.
    நவீன இலக்கியத்தின் சமகால நாயகர்களில் ஜெயமோகன், சாரு, இமையம், தேவதச்சன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், தமிழவன், ராஜ் கௌதமன் என பலருக்கும் அடுத்தடுத்த வருடங்களில் விருது வழங்கப்படும் எனும் நம்பிக்கையை இது விதைத்திருக்கிறது.

    ஒரு தனிப்பட்ட எழுத்தாளனுக்கான மணிமுடி என நான் இதைப் பார்க்கவில்லை. விருது, சன்மானம் ஆகியவற்றை விட சமகால தீவிர இலக்கியத்துக்கான அங்கீகாரம் என்றே பார்க்கிறேன். ஏனென்றால் இதனால் எஸ்.ரா கூடுதல் புகழ் ஒன்றையும் இனி அடையப் போவதில்லை.

    தனிப்பட்ட முறையில், பதின் வயதில் இருந்தே எஸ்.ராவின் மாந்திரிக எதார்த்தக் கதைகளால் வசீகரிக்கப்பட்டு தீவிர இலக்கியம் பக்கம் வந்தவன் என்ற முறையில் ஒரு வாசகனாய் நான் உவப்படைகிறேன். ஏனென்றால், “தாவரங்களின் உரையாடலை” படித்திராவிட்டால் நான் புனைவெழுத விரும்பி எழுத்தாளனாகி இருக்க மாட்டேன்.
    வரும் மாதங்களில் எஸ்.ராவின் முக்கியமான நாவல்களைப் பற்றி எழுதுவேன்.
    கொண்டாடுவோம்!

    -0-0-0-0

    ஐயோ! எஸ்ராவின் ‘முக்கிய’ நாவல்கள் பற்றி இவரும் எழுதப் போகிறாராமே! அடுத்த விருதாவாளர் திமிறி எழுந்துகொண்டிருக்கிறாரா?

    தாவரங்களின் உரையாடல் = give me boons’ notes dance என பல செயலூக்கமுள்ள இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

    (ஃபேஸ்புக்கில் வந்த இதை எனக்குத் தீவிரமான கூடுதல் புகழுக்காக (=intercourse fame for) அனுப்பிய நண்பருக்கும் என் அஞ்சலி)


  5. காலை பிலாக்கணங்கள் தொடர்கின்றன.

    இன்னொரு நண்பர், ‘போகன் ஷங்கர்’ என்பவர் எஸ்ராவின் ஸாஹித்ய விருது குறித்து இட்ட ஒரு செய்தியையும் (முக்கியமாக, அதற்கான பின்னூட்டங்களையும்) பரிமாறியிருக்கிறார். (changed the horse)

    Bogan Sankar
    11 hrs

    இந்த சாகித்ய அகாடமி விருதுக்கு ஒரு லட்சம் என்பது எத்தனை வருஷமாக இருக்கிறது?இன்னும் எத்தனை வருஷம் இருக்கும்?

    -0-0-0-0-0-

    இதன் பின்னூட்டக்காரர்களில் ஒருவர் கூட – மேற்கண்டது, போகன் அவர்களின் எஸ்ரா நடை கிண்டலும்தான் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. சும்மா, அதன் பண விவகாரம் பற்றி மட்டுமே படுஸீரியஸ்ஸாக கருத்துதிர்த்திருக்கிறார்கள்.

    எவ்வளவு பேர் இப்படி கிண்டல் புரியாமல் இருக்கிறார்கள்? எவ்வளவு வருடங்களுக்கு இப்படியே தொடர்வார்கள்? எவ்வளவு பேர் எத்தனை காலம் இப்படி ஃபேஸ்புக் புதிர்களை வெட்டியொட்டி எனக்கு முட்டிமைதுனம் செய்துவிடுவார்கள்?

    (நல்லவேளை, நான் ஃபேஸ்புக் போகாமலேயே அதன் மாணிக்கங்களை அறியும் பாக்கியம் பெற்றவன்; இருந்திருந்தால் வயிறு வெடித்துச் சிரித்திருப்பேன்!)


  6. ஒத்திசைவில் அடியேனையும் நையாண்டி செய்து எழுதிட வேண்டுகிறேன். சா.அ.வி. பெற இந்தக் குறுக்கு வழி இருப்பதை இத்தனை நாட்கள் உணராமல் இருந்தது பற்றி வருத்துகிறேன்.


    • ஐயய்யோ! நீங்கள் காரணகாரியங்களைச் சரியாகவே புரிந்துகொண்டுவிட்டீர்களே!

      உங்களுக்கு ஏனிந்த விபரீத ஆசை, சொல்லுங்கள்? :-(


  7. பாவிகளே!

    இங்கு அஞ்சலி செலுத்தாமல் குறுஞ்செய்தியிலும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறீர்களே!

    உருப்படுவீர்களா?

    :-(

    • சேஷகிரி Says:

      ஐய்யய்யோ வந்து விட்டேன்!. தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

  8. SB Says:

    Sir
    Mr.Devanathan hit the nail on its head ..Now more people would like you to write about them as your ‘touch’ will get them some awards.

    Quote-
    விமலாதித்த மாமல்லன்‏ @maamallan · 10h10 hours ago

    இனி சுகி சிவம் பட்டுக்கோட்டைப் பிரபாகர் பர்வீன் சுல்தானான்னு ஏழெட்டுப் பேரை சுத்திட்டுதான் இலக்கியத்துப் பக்கம் எட்டிப்பாக்கும் சாகித்திய அகாதெமி. இதுல ஏதும் டவுட் இருந்தா, பொறந்ததுலேந்தே சாகித்திய அகாதெமில இருக்கிற இசைக் கவிஞர் ரவி சுப்பிரமணியனை வேணா கேட்டுப் பாத்துக்குங்க

    எம்ஜிஆர் சிவாஜில ஆரம்பிச்சி
    ரஜினி கமல்
    விஜய் அஜித்வரை இருக்கலாம்
    எஸ். ரா ஜெமோ மட்டும் இருக்கக்கூடாதா. இல்லை இவங்களுக்கு மட்டும் பேன்ஸ் இருக்கக்கூடாதா🤪

    Unquote-
    While Mr.Jeymo praised Mr.Es Ra sky-high, his below article highlights the issues lingering on in regard to ‘bagging’ the award.

    https://www.jeyamohan.in/105066#.XAkJYtszbIU

    Atlast, Mr.Es Ra got it …What would have gone to ‘ Idakkai’ gone to ‘Sanjaram’ …….If Es Ra got the name correct ( Vadakkai ?) , he would have got it last time itself ? A question to ponder.

    I have not read’ Sanjaram’ released in 2014 ..Our Mr.R may have read it and assessed it thread-bare.

    Parallelly Mr.Manushya talking high about Seven Samurai with a secret idea to sell more books of Sanjaram (being a first publisher) which was thrown open by Mr.Mamallan …Only ‘Illakiyavadhis’ know of inner-working ….linking what’s appearing to be unrelated ones.

    Thank you.

    Regards
    SB


    • ஐயய்யோ!

      ஜெயமோகன் – பட்டவர்த்தனமாக இப்படிச் சொல்லியிருக்கிறார்; அதுவும் டிஸெம்பர் 2017லேயே!

      “இந்த ஒவ்வொரு பிழையான விருதும், அதற்குப்பின் உள்ள ஈனத்தனமான சதியும் உண்மையான ஒரு படைப்பாளியை சிறுமைசெய்கிறது.இம்முறை எஸ்.ராமகிருஷ்ணன்.”


  9. […] ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களு… 05/12/2018 […]


  10. […] தமிழர்களுக்கு என் வாழ்த்துரை:  ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களு… […]


  11. […] கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s