வங்கி மோசடி! பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது!

June 5, 2018

இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு…

திடீரெக்ஸ் போராளியும் காப்பிக்கடை அதிபருமான எஸ்ரா, சமீபகாலங்களிலும் அமோகமாக உளறிக்கொட்டுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அண்மையில் கீழ்க்கண்டதுபோல்  பேடித்தனமாகப் பேத்தியிருப்பது அவரை உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்திருந்ததாம்… அதனால் தான் அவர், குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளாராம்! உண்மையாகவே இருக்கக்கூடிய இப்படிப்பட்ட செய்திகள் உலா வருகின்றனவாம்!
“இங்கே (அதாவது தமிழ்நாட்டில்) நடக்கக்கூடிய வன்கொடுமைகள், இங்கே நடக்கக்கூடிய துப்பாக்கிச்சூடு, இங்கே நடக்கக்கூடிய இந்த அரச அதிகாரத்தினுடைய வன்முறைகள் எதுவும் வட இந்தியாவிற்கு இல்லை. மையம் நம்மைச் சரியாகப் பிரித்து மையத்தைக் காப்பதற்காகத் துண்டாடிக்கொண்டே இருக்கிறது. எல்லாப் பிரச்னைகளும் சுற்றுப்புறத்தில் நடக்கும்போது சுற்றுப்புறத்தில் நடந்துகொண்டே இருந்தால் மையம் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் உண்மை. மையத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு பக்கமுமே போராட்டங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.”
https://www.youtube.com/watch?v=flf104bU9D0

…ஆனால் எஸ்ரா கைது செய்யப்பட்டதற்கு அவருடைய மேற்கண்ட தேசவெறுப்பிய, அறியாமையால் ஏற்பட்ட அற்பப் பேடித்தனம் காரணம் அல்ல. உண்மையில், அவர் செய்த வங்கிமோசடிக் குற்றம்தான் என்பதை விளக்கவே இது…

ஒருவிஷயம்: வெகுஜனப் புரிதலின்படியல்லாமல், குண்டாக இருப்பவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் பிடித்துப்போட்டு உள்ளே தள்ளமுடியாது. மேலும், நம் சிறைகளில் ஏற்கனவே இடத்தட்டுப்பாடு (=Left plate Sing ©எஸ்ரா, 2018) ஏகத்துக்கும் இருக்கிறது.

-0-0-0-0-0-

புதியதலைமசுர் செய்திகள்

…முன்னதாக, எஸ் ராமகிருஷ்ணன் (தேசாந்திரி, வயது 50 – எஸ்ரா எனப் பரவலாக, பேராயர் எஸ்ரா.துர்குணத்துக்கு அடுத்தபடியாக அறிமுகமாயுள்ளவர்) என்கிற பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வங்கிக்கடன் கொடுக்கப்பட்டது. வாங்கிய கடனைத் திருப்பியளிக்காமல், அவர் திரைக்கடை விரித்ததால், வங்கி அதிகாரிகள் விசாரிக்கப் போகையில் – எஸ்ரா பல வங்கிகளில் இப்படிக் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இது குறித்து லோன்ரேஷன் வங்கி காவல்துறையிடம் புகார் கொடுத்து அதன்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டப்போது பல பகீர் தகவல்கள் அம்பலமாகியுள்ளன!

<இப்பகுதியை வொங்க்ளுக்கு வல்ங்குபவ்ர்க்ல், தொன்னை மில்க்ஸ் – உங்க்ளுக்கு பிட்ச்ச கமள்காசன் ஸோகப் பாடள் என்னன்னிட்டு எங்க்லுக்கு வாட்ஸப் செய்யுங்க, மகிள்ச்சியா ஒரு லிட்டர் பால் வெல்லுங்க…>

-0-0-0-0-0-

மோதி பிரதமராக வந்த சமயத்திலிருந்து இன்றுவரை, வங்கிகள் புதுக்கடன்களையே அளிக்காமல், பழங்கடன்கள் அனைத்தையும்  வாராக்கடன்களாக, வாராவாரம் புதிதுபுதிதாகக் கடனெழவே எனத் தவணைமுறையில் பகுப்பதிலேயே படுபிஸியாக இருந்தாலும்…

…தமிழக இலக்கியக்காரர்கள் மட்டும் எப்படியோ அதே வங்கிகளிலிருந்து புதுக் கடன்களைப் பெற்று, தம் கடன் கடன்வாங்கிக் கிடப்பதே என்று – அவர்கள் வழமையே போல, அனுபவங்களையும் எழுத்துகளையும் கடன் வாங்கி தலகாணி ஸைஸ்  மரக்கூழ்ப் புத்தகங்களை எழுதி (சில சமயங்களில் சொந்தமாகவே!) பதிப்பித்து அமோகமாக வாழ்வது நாமெல்லாரும் அறிந்ததே!

ஆனால் வங்கியில் கடன் வாங்கி புத்தகம் எழுதுவது என்பது ஒரு புது மோஸ்தர்.

புதியதலைமசுர்  நிருபர் கேள்விக்கு – லோன்ரேஷன் பேங்க் தலைமை அதிகாரி (=Hair dye too spicy female gender, ©S.Ramakrishnan, 2018) + சேர்மன் (=நாற்காலி மனிதர்,  ©எஸ்ரா, 2018) – பதிலளித்தது என்னவென்றால் – திரு ராமகிருஷ்ணன்,  நல்ல வர்த்தக எதிர்பார்ப்புகள் இருந்தும், நெகிழ்வாலஜி திறமையிருந்தும் கொடும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஏனெனில் அவரிடம் ஒற்றெழுத்துகள் ஸ்டாக் இல்லை. பாவம். அதனால் மேலிடப் பரிந்துரையின்படி, திரு. ராமகிருஷ்ணனுக்கு ரூ20 கோடி கடன் கொடுத்தோம். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு ஈடாக ஒற்றெழுத்து ஸ்டாக்குகளை இங்கே காண்பிக்காமல், ஹவாலா முறையில் ஸ்விட்ஸ்ர்லாண்ட் கடத்திச் சென்று அங்கே முதலீடு செய்துவிட்டார்.

புதியதலைமசுர் நிருபர் கேள்வி: இதை எப்டி கன்டுபிடித்தீர்கல்?

பதில்: அவர் கடன்வாங்கி இரண்டுவருடங்களுக்குப் பின்கூட ஒற்றெழுத்துகளைச் சரியாக உபயோகிக்கவில்லை. ஏன், இன்றளவும் அப்படித்தான்… ஆக, சந்தேகத்தின் பேரில் ஒரு அதிரடி ஸ்டாக் வெரிஃபிகேஷன் செய்தபோது அம்பலமானதுதான் இந்த ஊழல்!

புதியதலைமசுர்: அவற் ஏண் இப்டீ செஞ்சிட்டாரு, ஸ்பெசிபிக்கா என்ன குட்றம்??

பதில்: தமிழில் நிறைய பேர் வசவசவென்று எழுதவந்துவிட்டார்கள். எடுத்துக்காட்டாக இதைப் பாருங்கள். அவர்கள் தேவையற்ற இடங்களில் ஒற்றெழுத்துகளை உபயோகித்து வருவதால் அதற்கு மார்க்கெட் டிமாண்ட் அதிகமாகி விட்டது. திரு. ராமகிருஷ்னனின் வாசகர்களுக்கும் அவருடைய அரைகுறைத் தமிழும் பழகிவிட்டது. அதனால், அவர் அவர் ஸ்டாக்குகளை ஃபுயூச்சர் யூக மார்க்கெட்டுக்காக என பதுக்கியிருக்கலாம்…

புதியதலைமசுர்: அடுத்ததாக எண்ண செய்யப் போகிரீற்கல்?

பதில்: எழுத்தாளர்கள் அனைவர் வங்கிக்கணக்குகளையும் முடக்கப் போகிறோம். பின்னர், தலை எண்ணைய் வியாபாரங்களுக்கு பணத்தை எண்ணிக் கொடுக்கலாம் என ஒரு திட்டம். ஆனால் திரு. ராமகிருஷ்ணன் வாசகர்கள் எல்லோரும், அவர் எழுத்துகளைப் படித்துப் படித்து, அவரைப் போலவே ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ளவேண்டி வருகிறது.

அதனால் மார்க்கெட் எப்படியிருக்குமோ, தயக்கமாக இருக்கிறது.

புதியதலைமசுர்:  நண்றீ. இத்தண நேறம் எங்கல் கொஸ்டின்களுக்கு பொரும்மையா ஆன்ஸர் பன்னி நீங்க, மிக்க நன்றிகல்…

-0-0-0-0-0-0- பிற செய்திகள் / விஐபி கருத்துகள் -0-0-0-0-0-

#எஸ்ரா கொடுத்த தன்னிலை வாக்குமூலம்:
“நான் ‘எனது இந்தியா’ எனும் நூலை வியாபாரமாகும் என்றுதான் எழுதினேன். எனக்கு இந்தியாவிலோ மையத்திலோ அல்லது ஓரத்திலோ நம்பிக்கை இல்லை. இந்துத்துவாவிலிருந்து தமிழகம் பிரியவேண்டும். அது துண்டாட பட்டு மேலும்  சாதிவாரியாக பிரிக்க படவேண்டும்.

அப்போதுதான் நான் சாதிகொரு நீதி என்று படங்கள் பலவற்றுகு திரை கதை எழுதமுடியும். மற்றபடி என் மீது போட பட்ட வழகு ஜோடிக பட்டது. மையம் ஒழிக. ஓரம் ஒழிக. மையதுகும் ஓரதுகும் நடுவே உள்ள ஆரம்? அது தன்னை தானே பார்த்து கொண்டிருகும்.

என் புதககள் விற்கு என்றால் சிறை செல்ல தயார்! சிறை அதகு தயாரா?”
இன்னொரு பிரபல எழுத்தாளரும் தமிழ்த்திரைப்படக் கதை+வசனகர்த்தாவுமான ஜெயமோகன் சொன்னார்:
“எனக்கு, இது ஒன்றும் புதிய விஷயமில்லை; சென்றவாரம் ஸ்விஸ் பேங்கின் அதிபர் – இவர் என்னுடைய நெடுநாள் வாசகர், கடிதமெல்லாம் ஸ்விஸ் மொழியிலேயே எனக்கு எழுதியிருக்கிறார், என் எழுத்துகளைப் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழைக் கற்றுக்கொண்டேனென்று – இதைப் பற்றி, அவர் வழக்கம்போலவே என்னிடம் பொதுவாக ஞானமார்க்க அறிவுரை கேட்டுக்கொள்ளும்போது சொன்னார். ‘தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாம், ஏன் எஸ்ராமகிருஷ்ணனும்கூட, என் வங்கியில் இப்படி இருப்புகளை வைத்துள்ளார்கள். நீங்களும் வைத்துக்கொள்ளலாமே’ என்று.

ஆனால், சொல்லப்போனால் சிறுவயதில் வயக்காடுகளில் தமிழ் எழுத்தாளர்களின் பாரம்பரிய உணவான ஒற்றெழுத்தைப் பயிரிட்டு அறுவடை செய்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு ஒற்றெழுத்து சேமிப்பில் நம்பிக்கையில்லை. அன்றன்று கிடைத்த ஆர்கனிக் எழுத்துகளை அன்றே ஃப்ரெஷ்ஷாக உபயோகித்துவிடுவேன்.

ஒரு எழுத்தாளனாக எனக்கு, இந்த ஒற்றெழுத்துப் பதுக்கல் அறமாகப் படவில்லை. ஆனால் எஸ்ரா இருப்பு வைத்திருப்பது இருத்தலியல் காரணமாக மட்டுமே, அது இருப்பலியல் வகையில் அடங்காது என்று 1800லேயே நாராயணகுரு சொல்லிவிட்டார் என என்.கெ. குஞ்ஞாலி நாயர் சார்த்தரிடம் சொன்னார் என்பதை அறிவேன்.

பாரசீகத்தின் மத இலக்கியமே ஜெண்ட் அவஸ்தா எனும் படைப்பைச் சுற்றித்தானல்லவா? அதாவது, மானுட இருப்பின் மாளா அவஸ்தைதானே இலக்கியம்? இதை நான் இரண்டு பின்களால் குத்திக்காட்டுவதற்காகக்  கொல்லவில்லை. இருப்பை மூன்று கோணங்களில் பார்த்து இரு வகையாகப் பிரித்தால், ஒரு பையில் இலக்கியம், இன்னொரு பையில் வாழ்க்கை, கேட்டீயளா?

மையம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், மய்யத்தில் இருக்கிறது. ஏனெனில் கமல்ஹாஸனுக்கு பலான இடத்தில் மய்யம், நன்றி. அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கிறேன். அதை இரண்டு கோணங்களில் பார்க்கவில்லை!”

இன்னொரு ‘கூடவே ஓடும்’ எழுத்தாளரும். லத்தீன் அமெரிக்க நிபுணரும், திரைக்கதை வசனஅல்லாவுமான (கர்த்தா எல்லாம் பழைய யேஸ்ஸுக்கு முந்தின கதை, இவர் புத்சு, ஸெக்யூலர் சார்பினர்) சாருஹ் நிவேதிதாஹ் தன் வீட்டு மாடி விளிம்பில் உட்கார்ந்துகொண்டு ஆவேசத்துடன் சொன்னார் –

“தமிழ் எழுத்தாளன்  ஸ்விட்ஸர்லாந்து வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளக்கூட உரிமையில்லையா? லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை இப்படி யாராவது கேட்கிறார்களா? போர்ஹேஸ் கூட ஸ்விட்ஸர்லாந்து ஸோன்பப்டிஸோனா பேங்கில் கணக்கு வைத்திருக்கவில்லையா? மோதியை நம்பி நான் ஏமாந்துபோனேன்.  மோதிக்கு எஸ்ரா எழுத்துகளைப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் கைது அளவு இது போனதற்கு, ஆர்எஸ்எஸ் தான் காரணம்.

என் வங்கிக் கணக்கு விபரத்தை அடியில் குறித்திருக்கிறேன். பணம் அனுப்பவும். நாய்க்கு உணவுபோடக் கூட எனக்கு நாய்தியில்லை. என் செல்ல நாய் ஸொர்ரோ, பொரையில்லாமையால் வள்ளு வள்ளு என்று தெருக்குரலிடுகிறது. உதவவும். வறுத்த ஈசல்களைச் சாப்பிட்டால் ஈசனையே பார்த்தமாதிரி. நன்றி.

என்ன? அமெத்திஸ்ட் கடையை இடம் மாற்றி விட்டார்களா? ஃபிலிஸ்டைன்கள்! ஒட்டுமொத்தமாக அனைவருடனும் வெறுப்பில் இருக்கிறேன், ஆகவே படிங்கடா இந்த மனுஷ்யபுத்திரக் கட்டுரையை, சாவுங்கடா!”

உலக நாயக மய்ய நற்பண மன்றக் கமல்ஹாஸன் அறிக்கையில் இப்படிச் சொல்கிறார்:
“மய்யம் தோன்றுவது சுயம் மீதான அய்யம் மறைந்தபின். இலக்கின் இயம் மலர்ந்தபின். எஸ்ராமகிருஷ்ணனை நானறிவேன், நீயறிவாய், அவரறிவாரா?

நான் முதலமைச்சரானால் கையெழுத்துபோடும் முதல் கோப்பு எழுத்தாளக் காப்பு. எல்லோருக்கும் இலவச ஸ்விஸ்பேங்க் கணக்குகள் சுணக்கமில்லாத இணக்கத்துடன். அமைதி நிலவுமே சாந்தம் தவழுமே.

அலகிலா விளையாட்டுடையார் அலகைத் திருப்ப யார் முயற்சிப்பார், பார்த்துவிடுவோம். கூட ஓட வாருங்கள். நடைப் பயணம் செல்லலாம். பலவான் புத்திமானாவானா?”

எஸ்ரா கைது குறித்துக் கருத்து சொன்னபோது – நீங்கள் எஸ் ராமகிருஷ்ணன் கையால் விருது பெற்றிருக்கிறீர்களே என்று கேட்ட புதியதலைமசுர் நிருபருக்கு ரஜினி சொன்னது:
“இது ரொம்ப முக்யமா? வேற்ற ஏதாவது உர்ப்படியா கேள்வி இர்ந்தா கேள்ங்க, இல்லாட்டி தமிழ்னாட் மஷானம் போய்டும்.”
தொழில் நுட்ப விற்பன்னரும், அரசியல் நோக்கருமான பத்ரி சேஷாத்ரி சொன்னது:

“சாதா, அரசியல் சார்பற்ற, ஏழை மக்களுக்கு இந்த வங்கிக்கணக்கை சரிபார்ப்பதால் அல்லது முடக்குவதால் என்ன நன்மை? எஸ்ரா செய்தது ஊழலேயில்லை. இது வெறும் சர்ச்சைதான். 2ஜி சர்ச்சை போலவொன்றுதான். அவர் ஒற்றெழுத்துக்காகக் கடன் வாங்கினார். அதனைத் தொழில்ரீதியாக மறுமுதலீடு செய்தார். இருப்புகளை ஸ்விஸ் கிடங்குகளில் வைத்தார். இங்குதான் அமைப்பு சறுக்குகிறது.

தொழில் என்று வந்தால் சறுக்கலும் கிறுக்கலும் இருக்கத்தான் செய்யும். அதற்காகக் கிறுக்குபவர்கள் எல்லாம் கிறுக்கர்கள் அல்லர், சறுக்குபவர்கள் எல்லாம் சறுக்கஸில் வேலை செய்பவர்களும் அல்லர். வட்டார மக்களோடு தொடர்ந்து எல்லோரும் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. ஏதாவது பிற வேலை நடந்தால்தானே? சர்ச்சைகள் பிரச்சினைகளாக உருமாறாமல் இருக்க காத்திரமான யோசனைகளை உள்ளடக்கி –  தோழர்கள் மருதன், முல்லன், நெய்தன், குறிஞ்சன்,  பாலன் இணைந்து எழுதிய புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் நேற்றே ரிலீஸ் செய்துவிட்டது. கிண்டில் புத்தகமாகவும் ரிலீஸ் செய்யப்போகிறோம்; வாசகர்கள் வாங்கினால் நாங்கள் பயனுறுவோம், நன்றி!

மற்றபடி, எழுத்தாளர் கைது விசாரணை போன்றவை சரிபார்க்கப்பட்ட செய்திகள் அல்ல. எழுத்தாளர் குறித்த என் ஃபேஸ்புக் கருத்தை வெட்டியொட்டிதானே இந்த ராமசாமி இப்பதிவை ஆரம்பித்திருக்கிறார்? அவரை எனக்குப் பல நாட்களாகத் தெரியும். தவிர்க்கப் படவேண்டிய ஆசாமி.”

தொலைதூரத்திலிருந்து டெலஸ்கோப் வழியாக சதா இந்தியாவைப் பார்த்து அருள்வாக்குகளைப் பாலிக்கும் பராக்கிரமம் மிக்க அறிவுரைக்காரரும், எந்த பொந்தில் எந்த ஹிந்துத்துவா ஒளிந்துகொண்டு முகத்தைக்கோணி அழகு காண்பிக்கிறது என்பதைச் சூட்சுமமாக அறிந்தவருமான அருந்தவ அரவிந்தன் கண்ணையன் சொன்னார்:

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்தாலும் இந்தியா உருப்படவே உருப்படாது. அமெரிக்காவில் எப்போதிலிருந்தோ, இலக்கியக் காரர்களைக் கைது செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஜாக் லண்டன் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டது 18 வயதிலேயே. அதுவும் அதனை 1894லிலேயே செய்துவிட்டார்கள்! [1]

இந்தியா எதிலும் கடைசிதான். அய்ன் ரேண்ட் எழுத்துகளைப் ஒன்றாம் வகுப்புப் பாடபுத்தகங்களாக வைக்காத வரையில் தமிழ்நாடு உருப்படவே உருப்படாது. நேரு வாழ்க. நான் இந்தியாவுக்கு வரவே மாட்டேன்.

உலகப் புகழ் பெற்ற, பிரபல விமர்சகர் ‘ஒத்திசைவு’ வெ.ராமசாமி  அவர் வழக்கமேபோல காழ்ப்பும் வெறியும் கலந்தடித்து ஹிந்துத்துவாதனமாகச் சொன்னது:
“எஸ்ரா தமிழகத்துக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட படுமோசமான விபத்து எனத்தான், கழுதை கிடக்கிறது என விட்டுவிட்டேன். ஆனால் கழுதை கனைப்பது ஒட்டு மொத்த பாரதத்துக்கு எதிராகவும்தான் என அறிந்தபோது, ஆச்சரியப்பட்டேன்.

எஸ்ராவுக்கு – அவருக்குக் கமுக்கமாக அட்டைக்காப்பியும் டவுன்லோடும் மானோதேனோ நெகிழ்வாலஜி எழுத்தும் செய்யக்கூடிய அளவில் பேசுதமிழ் வராது என நினைத்தேன் – ஆனால் மிக அழகாகவும் கோர்வையாகவும் போராளித்தனமாகப் பொய் சொல்கிறார். பேடித்தனமாக – இந்த கச்சநத்தம் விவகார வன்முறைகளில் ஈடுபட்ட ஜாதியினரைக் குறிப்பிடவே குறிப்பிடாது வேறேதோ திசையில் திரும்பிக் குசு விட்டுக்கொண்டிருக்கிறார்.

உலகத் திரைப்பட எழவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதாது, மல்லாங்கிணறுகளின் மல்லாக்கொட்டைத் தவளைகள் மேலேறி வரவேண்டும். பார்வைகள் விசாலமாகவேண்டும். ஜாதி, பல்லாயிரம் வருடம், விஷக்கிருமி என்றெல்லாம் பொதுவாகப் பேத்திவிட்டு கைத்தட்டல் வாங்கும் சமயத்தில், சமீபத்து வன்முறைகளின் காரணமாக இருந்த ஜாதிகளின் பெயர்களை, பயம் காரணமாகக் குறிப்பிடாமல் இருப்பது எளிது. இதில் தான் எஸ்ரா, தன் தமிழ் இலக்கியப் பேடித்தனத்தை பிரத்நிதித்துவப் படுத்துகிறார்.

அவர் மீது விசாரணை கைது என்பதெல்லாம் வதந்திகள். ஏனெனில் – எனக்குத் தெரிந்து, தமிழகத்தில் கோவேறு கழுதைகளுக்கான பிரத்யேகச் சிறைச்சாலைகள் என இல்லை.

மேலும், வாயால் திராவிடத் தொடர்க் குசுக்களை விடுவது கொஞ்சம் அசௌகர்யம் என்பதற்கு அப்பாற்பட்டு சட்டவிரோதச் செயலல்ல. நன்றி.”
அடுத்து எதற்காகப் போராடலாம், பனியனையும் கிழிந்த சட்டையும், ஏமாந்தால் மிச்சமிருக்கும் கோமணத்தையும் திறந்து வெற்றிடத்தைப் பகீரங்கப்படுத்தி உதார் காட்டலாம் எனக் கையலாகாத்தனத்துடன்  பரிதவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர திராவிட இளைஞ்ஜரான திருவாளர் 65வயது இசுடாலிர் ‘விட்ட’ அறிக்கை:
“உடன்பிறப்பு எஸ்ரா, என் உயிர். அவரை விடுவிக்காதவரை, நான் என் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி நடைப் பயணப் போராட்டத்தை நடாத்தப் போகிறேன். என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் துரைமுருகன் கொஞ்சம் குண்டானதால், பக்கத்துரூமில் அவரும் தன்னைத்தானே சுற்றிக்கொள்வார்.

மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் வட்டமடித்தவண்ணம் இருப்பார்கள். இதன்மூலமாக ஏதாவது மின்சாரம் உருவாக்கமுடியுமா என, அண்ணன் வைகோவுடன் தீவிர ஆலோசனையில் இருக்கும் அதே நேரத்தில், உடன்பிறப்புகள் அனைவரையும் க்றிஸ்துமஸ் ( 26 ஜனவரி ) வரையிலும் பின்னர்  அதனை நீட்டித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் (15 ஆகஸ்ட்) வரையிலும் அவர்கள் வீட்டிலேயே தினம் இரண்டு மணி நேரம், எஸ்ரா விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிடுகிறேன்.

அப்பா நாமம் வாழ்க. என் அண்ணனுக்கு அவர் போட்ட நாமமும் வாழ்க!”

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு: அய்யய்யோ! என்னருமை எஸ்ரா, சிறையிலிருந்தபடியே இனொரு படிம தடிம புதகதை எழுதிவிடாராமே!

தலைபு: மைய சிறை எனை பாகிறது, நா அதை ஓரமா பாகிறே.

எஸ்ரா பெரீய்ய போராளியாய்ட்டாரு, வளிய வுட்றா…

தேசாந்திரி ஆடுறாரு
ஒத்திக்கோ ஒத்திக்கோ
கோமணத்த உருவராரு
ஒத்திக்கோ ஒத்திக்கோ

….ங்கொம்மாள, பெரிஸ்ஸா ஓத்திசைவ பட்க்க வந்த்ட்டானுவ…

ஸிர்க்கறான்பாரு, வோத்தா, கோமணத்த இர்க்க பிட்ச்சிக்கினு ஓட்றாடேய்!  இல்லாட்டீ வொன் உஸுரே பூடும்…

அய்யா எசுரா, இந்து குசும பத்ரிகல எள்தப்போறாராண்டா!

அத்துக்கப்பால, அண்டப்புள்கு வெகடனுல இன்னொரு பத்தி எள்தப் போறாராம்… டமிள்னாடே பத்தீ எரியப்போதுடா பேமானி… ஓட்றா…

படபடக்ற வெய்யில்ல பட்க்க வந்த்ட்டானுவ… போயீ ஆவ்ற வேலையப் பாருங்கடா…

3 Responses to “வங்கி மோசடி! பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது!”


  1. அய்யா…! என் மனசில இருந்த பாரமெல்லாம் எறங்கிருச்சி. றொம்ப நண்றி…

  2. ஆனந்தம் Says:

    எஸ்ராவின் மீது ஒஸ்ராவை (ஒத்திஸைவு+ரா) ஏவி விடும் ஏசப்பா! என்று நேற்றிலிருந்து நான் வேண்டியதை கர்த்தரானவர் நிறைவேற்றிவிட்டார். பரலோக ராஜ்ஜியம் சமீபித்துவிட்டது. பிதாவே! ஒற்றறியாத எஸ்ராவை ஒற்றறிந்து எழுதிய ஒஸ்ராவின் கட்டுரையை ஆசீர்வதியும். ஆமென்!


  3. […] நெகிழ்வாலஜி உபநிஷதத்தின் முந்தைய  உபதேசத்தைப் (=Assistant Nation) படித்து உங்களால் உடனடியாக […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s