the faking of news

April 7, 2013

One of the nice things that we get to enjoy in our rural hinterlandish life is that, there is no constant invasion of our minds by TV channels and their screaming anchors & other such asinine louse souls, no offense meant at my dear donkeys, of course.

However, one does get to ‘see’ some bits of TV here and there, especially when visiting other folks’ homes  – and sometimes I do get to occasionally discuss some excesses of the TV reportage with our impressionable adolescents at the school – now,  hold your breadth, we discussed the voyeuristic coverage (and self-righteous condemnations) of the invasions into the privacy of  ’alleged’ young Nithyananda (who was perhaps merely affected by hormones, like it happens to the rest of us) and it was interesting to listen to the views of the adolescents. Many of them had either seen (!) the footage or had heard (!!) the details of the frames from others – and, more importantly, had their individual opinionsRead the rest of this entry »

அப்பால, வொலகத்துக் குப்பைங்கள போராடி அகத்தறத யோசிக்கலாம்… புர்ஞ்சுதா ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்டடிச்சான் குஞ்சுகளா?

 நெல்ஸன் மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் - குத்துச் சண்டைப் பயிற்சி -

ரோலிஹ்லஹ்லா ‘நெல்ஸன்’ மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் – தென் ஆஃப்ரிக செய்தித்தாள் குழும அலுவலக மாடியில், இளம்வயதுக் குத்துச் சண்டைப் பயிற்சி – ’ட்ரம்’ பத்திரிக்கைகாக எடுத்தது – ஆனால் பதிப்பிக்கப் படாதது. ( நான் எல்லெக் பீமர் எழுதிய நெல்ஸன் மன் டேலா புத்தகத்தில் இருந்து இந்தப் படத்தை ஸ்கேன் செய்தேன்)

பாவப்பட்டு, மறுபடியும் என் பதிவைப் படிக்க வந்திருப்பவர்களே! திரும்பவும் திட்டலா என்று வருத்தப் படாதீர்கள்.  என்னுடைய முந்தைய ஒரு பதிவிற்கு வந்த எதிர்வினை ஒன்றால்தான் இது. மன்னிக்கவும். செய்வினை என்பது இதுதானோ? (உங்களுக்கு வேறு உபயோககரமான வேலைவெட்டியிருந்தால், மேலே படிக்காதீர் – வொங்க நெல்த்துக்குத்தாம்பா ஸொல்றேன். பிர்ஞ்சிதா?)

… ஒரு நீள்நெடுநாள் ‘போராளி’(!) மிகவும் வருத்தப்பட்டு கொஞ்சம் கோபத்துடனேயே ஏகவசனத்தில் எழுதியிருக்கிறார்: (கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்) –

”உன்னைப் போன்ற அறிவுஜீவிகள், ஏதாவது பொது, மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றாலே நக்கல் செய்கிறீர்கள். இளைஞர்களின் போர்க்குணத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உனக்கு எவ்வளவு இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை தெரியும், இந்த மாதிரி பொத்தாம்பொதுவாக மட்டையடி அடிப்பதற்கு? நீ இந்த இளைஞர்கள் செய்வதை விட என்ன உபயோககரமாகச் செய்து கிழித்து விட்டாய்? … … அவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நீ தாங்க மாட்டாய் …  … உன்னைப் போன்ற தமிழினத் துரோகிகளின், பார்ப்பான்களின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.”

Read the rest of this entry »

a lesson in history…

April 4, 2013

… … or in sex education (oh no!), if you will…

I have the shared the following story many times over in the past, with groups of school-going children, fellow ‘teachers’ and sometimes in the random corporate ‘training’ sessions that I have conducted – all lost in the swirling mists of the past.

Ah, the memories, sweet dreams are of course made of these!

Anyway, over to the story.

=-=-=-=-=

Many years ago – two children, siblings actually – one a 8 year old, the other 6 years of age were living in a distant suburb of Chennai – this suburb was quite close to the Meenambakkam Airport – and was more like a sparsely populated village in those days.

These children went to a happy municipality school close-by and were enjoying open spaces, clean air, safe environments… Oh those begone halcyon days of the past… Read the rest of this entry »

(அல்லது) உற்சாக இளைஞர்களை எப்படி புனரமைப்புப் பணிகளுக்கு உபயோகிப்பது
(அல்லது) போங்கடா நீங்களும் ஒங்க போராட்டமும்
(அல்லது) ராஜபக்ஷ-வுக்கு ஜே!
(அல்லது) ஸ்ரீலங்கா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, இந்த மாணவர்கள் என்னதான்  செய்ய வேண்டும்?

-0-0-0-0-0-0-

31.12.2011 மாலை 4 மணி: பள்ளி அறங்காவலரிடமிருந்து ஃபோன்: ஹேய், ராம் – மாலை வணக்கம். வேலைகளுக்கு ஆள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாயே – சென்னையிலிருந்து ஆறு உற்சாகமான வாலன்டியர்கள் வந்திருக்கிறார்கள், எஞ்சினீயரிங் கடைசி வருட மாணவர்கள். என் நண்பர்களின் சுபுத்திரர்கள். அவர்கள் என்ன வேலை செய்யவும் தயார் – எப்படியாவது புனரமைப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதில் ஒருவன் நீ படித்த கல்லூரி. காதில் விழுந்ததா? நீ படித்த கல்லூரி. அடுத்த அரைமணிக்குள் நீ அலுவலகம் வந்தால் உனக்குத்தான் அவர்கள் கொத்தாக! அவர்கள். பத்து நாள் போல இருப்பார்கள். என்ன?

மகாமகோ வேலைப்பளுவில் திணறிக் கொண்டிருந்த நான் — அய்யா, இதோ வருகிறேன் என்று சொல்லி, செய்து கொண்டிருந்த வேலையை அம்போ என்று விட்டுவிட்டு, பேய் மாதிரி சைக்கிளை மிதித்து அடுத்த பத்தே நிமிடங்களில் அலுவலகத்தில் இருந்தேன். Read the rest of this entry »

(அல்லது) மாணவர்களும் அரசியலும்

என்னுடைய, தற்போதைய புத்தம்புதிய  புதிய ஆத்திச்சூடியில்,

அ: அரசியல் பழகு.
ஆ: ஆற்றாமை தவிர்.
இ: இலத்தல் இகழ்ச்சியல்ல
ஈ: ஈடுபாடு கொள்.


(ரொம்ப அறிவொர மாரி இருக்குல்ல, மன்ச்சுக்குங்க; எனக்குந்தாங்க இந்த அறிவொர, சொறிவொரல்லாம், சரீங்க்ளா?)

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வாழ்க்கையில், சமூகத்தில், நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான, இன்றியமையாத அங்கம்.

மிகு பொது நலம் (’greater common good’) – மீதாகக் குவிந்த வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் விட்டுப் போனவற்றை / போனவர்களை / பாதிக்கப் பட்டவர்களை, தொடர்ந்து அரவணைத்து மேலெழுப்பிச் செல்வதும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியங்களாகவும் என்பதாகவே நான் அறிகிறேன்.

… பொதுவாக, நான் ஏற்றுக் கொண்ட தொழில், எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை அல்லது நான் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும்போது எனக்கு அவ்வேலைகளைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அவற்றுடைய இலக்குகளை அடைவது தான் முக்கியம். இந்த முனைவுகளில் இல்லாத அரசியலா! இதில் இல்லாத நடைமுறை தந்திரோபாயங்களா? இந்த முயற்சிகளில், தனிமனிதர்களின் தன்னல இச்சைகளையும் பொச்சரிப்புகளையும், மனமாச்சரியங்களையும் – அவை இலக்குகளை அடைவதற்கு உபயோகமாக இல்லாமலிருந்தால், அவற்றை மறித்தால், அந்த மனிதர்களையே கூட கடாசியே வந்திருக்கிறேன். நல்லிணக்கமா? க்கூட்டுறவா?? இன்னாங்கடா, இன்னாடா ஸொல்றீங்க?? இதெல்லாம் கிலோ என்ன விலை? Read the rest of this entry »

Transcript of an interview, conducted way back in 1995 – in which is described, the travails of an interviewer…

Version information:

Had posted this stuff to the USENET (soc.* groups) – may be some 18 years back (1995) – has anything changed at all in the past 18 years with these dingbat programmers??

umm.. I received some brickbats too for having mentioned some real names. So, the disclaimer is

‘all real names have been changed to fictional ones, except when they are real.’

… Onward to the text of that offending post…

Read the rest of this entry »

(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?

ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?

அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி,  அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —

… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?

-0-0-0-0-0-

எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.

… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…

விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா  டட்டடா  டட்டடா  டட்டடா’…)

மன்னிப்பீர்களா? B-)

Read the rest of this entry »

(அல்லது) மந்த மாணவர்களும் அரைகுறைக் களப்பணியாளர்களும்…

எச்சரிக்கை: இந்தப் பதிவு மிகவும் நீளம். பொறுமையாகப் படிக்கவும்.

பத்ரி சேஷாத்ரி அவர்களின் ஒரு பதிவின் பரிந்துரைப்படி, ஒரு வழியாக, நானும் என் மனைவியும், விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா  டட்டடா  டட்டடா  டட்டடா’ நிகழ்வை (கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்வு – ஆனால் யூட்யூப் தரவிரக்கம் – எங்கள் மடிக்கணினிக்கு முழுவதும் வந்து சேர நான்கு மணி நேரமாகிவிட்டது!) இன்று நேற்று பார்த்தோம்.  அவளும் சுற்று வட்டாரப் பள்ளிகளில் அறிவியல், கணிதத்தைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறாள்.

முதல் பத்து நிமிடம் பார்த்தவுடன் கொஞ்சம் நேர விரயமோ எனச் சந்தேகமாக இருந்தது – ஆனால் தொடர்ந்து பார்த்ததில் – இது நாங்கள் சில சுவையான படிப்பினைகள் பெற்ற அனுபவம், பல விதங்களில்; களப்பணியாளர்களில் ஒரு சாரார், அதாவது களப்பிணியாளர்கள்,  ஊடகங்களின் செல்லப் பிள்ளைகள்,  எப்படி இருக்கிறார்கள் என்பது தெரிய வருவது ஒரு முக்கியமான விஷயம்தானே?

Read the rest of this entry »

இரண்டு வருடம் முன்னால் ஒரு வெள்ளைக்காரர் (அவர் பெயர் மறந்து விட்டது) நம் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என வந்தார். யாரையோ கேட்டிருக்கிறார் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா என்று – முன்னால் இம்மாதிரி ‘தமிழ் ஆபத்துதவிப் படை’ வேலைகள் செய்திருந்ததால், அவர்கள் என்னைப் போய் தமிழ் ஐயா என்று காட்டியிருக்கிறார்கள். ஆக, அவருக்கு நான் ஒரு தமிழ் ஐயோ என்று தெரியாத காரணத்தால், பாவம், வசமாக மாட்டிக் கொண்டார்.

பிரச்சினை என்னவென்றால் எனக்கு இத்தாலியன் என்றால் கிலோ என்ன விலை – அடிப்படையில் ஒரு அழகான க்ராஃபிக்ஸ் டிஸைனரான அவருக்கோ ஆங்கிலம் வராது. Read the rest of this entry »

ஆம்.

நான் எப்பொழுதுமே ஒரு பாக்கியசாலியாகத்தான் இருந்திருக்கிறேன், தொடர்ந்தும் அப்படியேதான் இருப்பேன். எனக்குக் கிடைத்த (தொடர்ந்து கிடைக்கும்) அருமையான அனுபவங்கள்,  நிகழ்வுகள், நட்புக்கள் – எனக்கு அவைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் அருகதை இருந்ததோ இல்லையோ, இருக்கிறதோ இல்லையோ – அவை அழகானவை, வாழ்வுக்குச் செறிவூட்டுபவை; நுட்பமும், ஆழமும், வீச்சும் மிக்கவை. அசை போட அசை போட, போதையும்,  சில சமயம் மாளா துக்கமும் தருபவை…

-0-0-0-0-

ஷங்கர்தா ((1943 – 91) என எங்களில் சிலரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஒரு மகத்தான மனிதநேயவாதி கொலை செய்யப்பட்டு 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று உயிருடன் அவர் இருந்திருந்தால் அவருக்கு 70 வயதாகியிருக்கும். ஃபெப்ரவரி 14 பிறந்தவர் அவர்.

ஹ்ம்ம்?  அவர் உயிருடன் இருந்திருந்தாலாவா??
Read the rest of this entry »

… அல்லது காந்தி எனும் செருப்புத் தைப்பவர்…

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்டு,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஆறாம் அத்தியாயம்: காப்ளர் (cobbler).

-0-0-0-0-0-

காந்திக்கு அப்போது வயது 63. வல்லபாய் படேல் அவர்களுடன் யெரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வல்லபாய்க்கு புதிய செருப்புகள் தேவைப்பட்டன. ஆனால், சிறையில் அந்த வருடம், நல்ல செருப்புத் தைப்பவர்கள் இல்லை.

Read the rest of this entry »

பத்மனாப ஐயர், சசீவன் கணேசநாதன், கோபினாத்  தில்லைநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி ஆகியோரால் தொடங்கப் பெற்று, அவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு, ஒரு சுயஅர்ப்பணிப்பு மிகுந்த குழுவினருடன், கடந்த எட்டு ஆண்டுகளாக, இலங்கையின் கொழும்புவிலிருந்து, பல தளங்களில், பல தடைகளையும் இன்னல்களையும் மீறி, மகத்தான பணியாற்றி வருகிறது நூலகம் அறக்கட்டளை (நூலகம் ஃபௌன்டேஷன்).

நம்மைப் போன்ற தமிழகம்சார்  நபும்சகத் தமிழர்கள், நம் தமிழக அரசு நிறுவனங்கள், தமிழர்(!) இயக்கங்கள்(!!), இலங்கைத் தமிழரைப் பற்றிக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொண்டு பசப்பும் நம் அரசியல்/பண்பாட்டு/திராவிட அயோக்கியர்கள் – இவர்கள் எல்லாம் செய்யாததை, செய்யக் கூட நினையாததை, நூலகம் தொடர்ந்து செய்வது – நமக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர அளிக்கும் விஷயம்.
Read the rest of this entry »

நாம் ஒரு கோளத்தை (sphere) ஒரு கனசதுரத்துக்குள் (cube), முன்னதை நசுக்காமல், பின்னதைப் பிதுக்காமல் – அடைக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு டென்னிஸ் பந்தை, அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சதுர டப்பியில் (டப்பாவின் பெண்பால்) வைக்கிறோம் எனவும் நினைத்துக் கொள்ளலாம்.

இப்போது,  கிட்டத்தட்ட அந்தக் கோளத்தின் விட்டம் = டப்பியின் ஒரு ஓரத்தின் நீளம்தானே?

மேலும், விகிதாச்சாரமாக (proportion) இதனைப் பார்க்கும்போது, அந்தக் கோளத்தின் கொள்ளளவு, அது இருக்கும் டப்பியின் கொள்ளளவில் மிகப்பெரிய பகுதியாகத்தானே இருக்க வேண்டும், அல்லவா?

ஃப்பூ! இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? என்ன கிழவா சொல்ல வருகிறாய் என்று கேட்பீர்கள் கூட! இருங்கள்…

Read the rest of this entry »

எப்பொழுதெல்லாம், நம் பாரம்பரியப் புல் வகைகளைப் பற்றி அவை அரிசி போன்ற பெருதானியங்களாக இருந்தாலும் சரி, சிறுதானியங்களானாலும் சரி, மற்றபடி தீவனப் புல், மூங்கில் வகைகளானாலும் சரி – எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் (அவை, நிறையவே வருபவைதான்!) அதை நிவர்த்தி செய்து கொள்ள, தற்காலத்தில் நான் அணுகுவது இந்த புத்தகத்தைத்தான்.

handbook_southindiangrasses Read the rest of this entry »

சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ  (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.

அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”

நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும்  மிக்க,  சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக்  களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?” Read the rest of this entry »

(அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல்

இணையத்தில் உள்ள தகவல்களின், இடுகைகளில்,  கீச்கீச்களில், கிறுக்கல்களில் தலையாய பிரச்சினை என்னவென்றால், என்னவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வண்டை வண்டையாக எழுதலாம். (என்னைப் போல)

கொஞ்சம் கூட எந்த இழவைப் பற்றியும் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அறிவியலிலிருந்து அவியல் வரை, அறத்திலிருந்து முறம் வரை, அணுசக்தியிலிருந்து விந்துசக்தி வரை எழுதித் தள்ளலாம்; ஆக, ஒரு விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஒரு விதமான உழைப்பும் இல்லாமல், மிகவும் தைரியமாக, மகத்தான தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் யார் வேண்டுமானாலும் வாந்தியைப் பீறிட்டு அடிக்கலாம், (என்னைப் போல)

அதுவும் இந்த எழுத்தாளன் ஒரு தமிழனாக இருந்து விட்டால், அதற்கும் மேல் ஒரு இலக்கியவாதிபேதியாக இருந்தால், தன்னிச்சையாக ஒரு அசட்டுத் தனமும், தன் அசட்டு அசட்டை பற்றிய ஒரு அதி புளகாங்கிதமும், தன்னுடைய முட்டாள்தனத்தை, தடித்தனத்தை – ஒரு பெரிய பெருமையாகக் கருதும் ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ மனப்பான்மையும் இருக்கவேண்டிய அவசியம் வேறு. (என்னைப் போல)

Read the rest of this entry »