… இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! &
October 6, 2012
(அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல்
இணையத்தில் உள்ள தகவல்களின், இடுகைகளில், கீச்கீச்களில், கிறுக்கல்களில் தலையாய பிரச்சினை என்னவென்றால், என்னவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வண்டை வண்டையாக எழுதலாம். (என்னைப் போல)
கொஞ்சம் கூட எந்த இழவைப் பற்றியும் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அறிவியலிலிருந்து அவியல் வரை, அறத்திலிருந்து முறம் வரை, அணுசக்தியிலிருந்து விந்துசக்தி வரை எழுதித் தள்ளலாம்; ஆக, ஒரு விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஒரு விதமான உழைப்பும் இல்லாமல், மிகவும் தைரியமாக, மகத்தான தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் யார் வேண்டுமானாலும் வாந்தியைப் பீறிட்டு அடிக்கலாம், (என்னைப் போல)
அதுவும் இந்த எழுத்தாளன் ஒரு தமிழனாக இருந்து விட்டால், அதற்கும் மேல் ஒரு இலக்கியவாதிபேதியாக இருந்தால், தன்னிச்சையாக ஒரு அசட்டுத் தனமும், தன் அசட்டு அசட்டை பற்றிய ஒரு அதி புளகாங்கிதமும், தன்னுடைய முட்டாள்தனத்தை, தடித்தனத்தை – ஒரு பெரிய பெருமையாகக் கருதும் ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ மனப்பான்மையும் இருக்கவேண்டிய அவசியம் வேறு. (என்னைப் போல)
ஏதோ இலக்கியம், கதை, கவிதை, தலைமுடி, மண்ணாங்கட்டி தெருப்புழுதி என்று இட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை – ஆனால் அணுசக்தி, ஹிக்ஸ்-போஸான் பற்றி எழுதவேண்டும், சினிமா விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வு, சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், திராவிட, அதிராவிட அரசியல், பாரம்பரியம் என்று பல தளங்களிலும் பணியாற்ற வேண்டும், கூடங்குளமா கொலைக்களமா என்று 2000000000 வார்த்தைக் கட்டுரையைக் கந்தல் ஆக்கி வடிக்க வேண்டும். மீந்த கஞ்சியை உலரவைத்து காகிதமாக்கி பிட் நோட்டீஸ் அடிக்க வேண்டும். அந்த பிட் நோட்டீஸ்களை ஒன்று சேர்த்துப் பின் அடித்து அடுத்த புத்தகக் கண்காட்சியில் மஹாதடிப் புத்தகம் வெளியிடவேண்டும். வேகமய்யா, வேகம்… (என்னைப் போல)
ஆக, ஆராய்ச்சி செய்து, யோசித்து, அறிந்து புரிந்து தெளிந்து கொண்டதைத்தான் அளவாக (மட்டுமே) எழுதவேண்டும் என்றால் எப்படி அய்யா முடியும்? எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமா இருக்கிறது? சுத்த குடாக்காக இருக்கிறீர்களே! (என்னைப் போல)
மரபணுவா, மைக்ரொஸாஃப்டா, மண்புழு உரமா, மனிதஉரிமையா – இணையத்துக்கு ஒடு, கூக்ள் பண்ணு, அவசரமாகப் படி, கூக்ள் ட்ரான்ஸ்லேட் பண்ணு, தப்பும்தவறுமாக பதிப்பி. வேகமய்யா வேகம்… (என்னைப் போல)
மழைக்கால மாலைகளில் கிளம்பும் புற்றீசல்களைப் போல, நிறைய மெத்தப் படித்த மேதாவிகள் பலர் இப்படிக் கிளம்பியிருக்கிறார்கள், இப்படி! (என்னைப் போல)
தகுதி கிகுதி விகுதி பற்றியெல்லாம் கவலையே படவேண்டாம். அரைகுறை அறிவை ஆபரணமாக அணிந்து மினுக்கிக் கொண்டு பவனி வரலாம். 0% கூடச் சிரத்தையில்லாமல் கண்டமேனிக்கும் உளறி, தான் செய்வது தான் சரி, தான் எழுதுவதுதான் எழுத்து, மற்றவர் எல்லோரையும் அழுத்து என அலையலாம். (என்னைப் போல)
WWhat? you sayin’ fools rush in where angels fear to tread? oh yeah?? you ain’t seen anything like us tamil writers, baby…
-0-0-0-0-
எதற்கு இப்படி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கிறேன் என்றால் ‘யுவகிருஷ்ணா’ என்பவரின் இடுகை (விஷ்டை, மன்னிக்கவும் – விட்டை – என்று சொன்னால், சரியாக இருக்கக்கூடுமோ?)
எப்படி இவ்வளவு கோர்வையாக அற்புத அபத்தமாக இவரால் எழுதமுடிகிறது என்று நினைத்தாலே என் மனம் பொறாமையால் வேகிறது, ச்ச. இதனைப் ’புதிய தலைவலி’ இதழ் அச்சேற்றியிருக்கிறதாம் வேறு, எனது வயிற்றெரிச்சலுக்குக் கேட்பானேன்!
எப்படித்தான் யுவகிருஷ்ணனார் அவர்கள் விலங்கியல், நரம்பியல். ஒலி-ஒளி இயற்பியல் பற்றிய அடிப்படைகளைக் கட்டுடைத்து, எப்படி ஒரு பேட்டியில் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற நியதிகளை உடைத்தெறிந்து புரட்சிகரமாக எழுதியிருக்கிறார் என நினைத்தாலே, ஐயகோ என் கையலாகாத்தனம் என்னை சித்ரவதை செய்கிறதே… தாங்கமுடியவில்லையே (இதனைச் சிவாஜி கணேசன் சொல்வது போல் நினைத்துக் கொள்ளவும்)
இதில் வேறு ஏதோ வெள்ளைக்காரர்களின் ஆராய்ச்சிகளை வேறு சுட்டியிருக்கிறார். ஒரு படமும் சொருகியிருக்கிறார். எனக்குப் புழுங்குகிறது.
இதனைப் பற்றி என் ஆழ்ந்த வருத்தங்களை, அடுத்த ‘இடுகை’யில் பார்க்கலாம்.
பின்குறிப்பு: என் பள்ளி மாணவர்களை, தமிழில் அறிவியல் இன்னபிற (என்னிடம் ‘கற்றுக்’ கொண்டவைகளில்) பற்றி வந்திருக்கும் இணையச் செய்திகளைப் படித்து அதன் மீதான அவர்கள் எதிர்வினைகளைக் கொடுக்கச் சொன்னேன். அவர்கள் சில ’மணி’களைக் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள் – அதில் ஒன்றுதான் இது!
நரஸூஸ் காப்பி விளம்பர உசிலைமணி போல, “பேஷ் பேஷ், ரொம்ம்ம்ம்ம்ப நன்னா இருக்கு” என்றுதான் சொல்ல வேண்டும், வேறு வழி?
October 6, 2012 at 22:53
The boy who sees without eyes http://www.youtube.com/watch?v=TB_yrWppP0c http://www.benunderwood.com/ http://www.youtube.com/watch?v=WNMMUFQztyQ http://www.discoveryuk.com/web/stan-lees-superhumans/videos/?video=stan-lees-superhuman-radar Human echolocation http://en.wikipedia.org/wiki/Human_echolocation
October 9, 2012 at 08:24
ஐயா,
திரு.யுவ கிருஷ்ணா அவர்கள் கட்டுரையை பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகிறீகள் ? சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.
October 23, 2012 at 12:26
இன்னும் இவர் எதுவும் சொல்லவில்லை. அடுத்த பதிவுல சொல்றேங்கறார்…
செந்தழல் ரவி
October 23, 2012 at 12:27
ஐயா,
திரு.யுவ கிருஷ்ணா அவர்கள் கட்டுரையை பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகிறீகள் ? சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.
October 23, 2012 at 13:26
சேஷகிரி, செந்தழல் ரவி, கவிதா – திரு யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை (!?) பற்றிய மதிப்பீட்டை (!!) ’யுவகிருஷ்ணா அவர்களும், பாவப்பட்ட வௌவால்களும் ’ https://othisaivu.wordpress.com/2012/10/22/post-135/ சுட்டியில் படிக்கவும்.
அன்புடன்,
ராமசாமி.
October 25, 2012 at 16:37
“எழுத்து என்பது தவம், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும் என்றெல்லாம் யாராவது கதை சொன்னால் நம்பாதீர்கள். அது மற்ற பணிகளைப் போலவே தொழில்நுட்பம்தான். தொழில் கற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் சிறப்பாக எழுதலாம். ஏற்கனவே நீங்கள் சிறப்பாகதான் எழுதுகிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்!”
என்று வலைப்பதிவுக் காட்டில் மோனத் தவம் நிகழ்த்தி தனியாளாக சாதனை படைத்து வரும் எங்கள் தமிழ் வலையுலகத் தலைவர் “பக்கிலுக்”கிடம் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத ஆயாசத்தில் ஏன் இப்படியெல்லாம் எழுதி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்?
July 3, 2018 at 20:04
[…] … இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! &06/10/2012 […]