களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?
February 26, 2013
(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?
ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?
அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி, அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —
… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?
-0-0-0-0-0-
எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.
… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…
விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’…)
மன்னிப்பீர்களா? B-)
-0-0-0-0-0-

விஜய் டிவியில் ‘ நீயா நானா’ எனும் ஃபிப்ரவரி 3 அல்லது 10 அன்று ஒளிபரப்பப் பட்ட நிகழ்ச்சியில் – வெகுளியான, பெரும்பாலும் மந்தமான (முட்டாள்களல்ல, ஒப்புக் கொள்கிறேன்) கல்லூரி மாணவி-மாணவர்களுடன் மல்லுக்கட்டி தன் போராளித்தனத்தை, தன் ஆழ்ந்த படிப்பறிவை, வருத்தங்களை, வாழ்வனுபவங்களை, முஸ்லீம்களின் அவல நிலையை, அறிவுரைகளாக உதிர்த்த இளைஞர்.
1) இவருக்கு இப்போது வயது 30 – 16 வயதிலிருந்து தொடர்ந்து களப்பணி ஆற்றிவருவதாகச் சொன்னார். (பாவம், அவர் 16 வயதுடன் படிப்பதை நிறுத்தி, தாடியைக் கூடச் சிரைத்துக்கொள்ள நேரமில்லாமல், மெய் வருத்தம் பாராமல் பொய் பல பேசி, களப்பிணி மட்டுமே செய்து வருவதால், அவருக்கு மிகப்பல விஷயங்கள் பற்றிய ஞானம் இல்லாததற்கு அவரா பொறுப்பு? இப்படியே இருந்தாலும் கற்பனைச் சதிக்குதிரையையோ, அது கிடைக்காவிட்டால் ஒரு சதிக்கழுதையையோ, தட்டி விட்டால் என்ன வேண்டுமானாலும் சகட்டுமேனிக்கு அடித்து விடலாமல்லவா??)
2) யாருக்காக எழுதுகிறோம் என்றே புரியவில்லை எனவும் சொன்னார்.
ஆக, இவர் சொன்னவைகளில் மேற்கண்ட இந்த இரண்டு விவரங்கள் தான் உண்மையானவையாக, நேர்மையான அனுபவம் சார்ந்தவையாக இருக்கலாம் என நினைக்கிறேன். இவர் யாரென்று எனக்குத் தெரியாது, இவருடன் பிணக்கு ஒன்றும் இல்லை எனக்கு. படித்த(!) இளைஞர் போலத்தான் தெரிகிறார், இவர் கூடிய சீக்கிரம் சீரிய கல்வியறிவு பெற, வாழ்க்கை பொலிய, சுயானுபவங்கள் மிளிர, போலிமனிதவுரிமை மாயையிலிருந்து விடுபட, களப்பிணிகளை விட்டுவிட்டுக் களப்பணி புரிய, என் மனமார்ந்த ஆசிகள் / வாழ்த்துக்கள்.
இவர் பகர்ந்தவைகளில், பார்வைகளில் சில (பொய்கள்)::
- இந்தக் கல்லூரி மாணவர்கள் மேலோட்டமான பார்வையோடு இருக்கிறார்கள்.
- பெயரை மட்டும் வைத்துக் கொண்டு முஸ்லீம் சமூகத்துக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் –
- அவர்கள் பேர் சொன்னாலே முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது இல்லை.
- பெரு நிறுவனங்களில் முஸ்லீம்களுக்கு வேலை கிடைப்பதே இல்லை. முஸ்லீம்கள கேட்லயே வெளீல தள்ளிட்றாங்க! பேரைப்பார்த்தவுடனேயே வெளியில் தள்ளி விடுகிறார்கள்.
இவரும் மேலோட்டமாகத்தான் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். கையை ஆட்டி ஆட்டி, ஒங்களுக்கு என்னடா தெரியும் அரைடவுசர் அரைகுறைப் பசங்களா என்பது போல. (நாம் அனைவரும் கூடச் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு மேலோட்டமாகச் சிந்தித்து வெற்றிவேல் வீரவேல் என்கிறோம் – ஆனால் தொழில்முறையாக இதனைச் செய்வது கிடையாது)
நாங்க பொறுப்புணர்ச்சியோட எவ்ளோ பணி செய்றோம் இந்தச் சமூகத்திற்கு, ஆனா நீங்க இந்த விவரங்களக் கூடத் தெரிஞ்சுட்டு கூட இல்லயே – என்ற பாவத்துடன் பிலாக்கணம் வைக்கிறார்.
நான் எவ்ளோ நாளா ஒங்களுக்காக எழுதறேன், நீங்க யாருமே அத படிக்கறதேயில்லயா – போன்ற ஒரு சுயபச்சாத்தாபக் கழிவிரக்க ரசத்துடன் ஒப்பாரி வைக்கிறார் கூட!
மேம்போக்காகப் பார்த்தால், இவர் சொல்வதில் என்ன பெரிய தவறென்று தோன்றும், பொய்யாகத்தான் இருக்கட்டுமே அவருக்கு அதைச் சொல்ல உரிமை இல்லையா எனத் தோன்றும் – அரைகுறை ராய் என்று ஒருவர் வழக்கமாக எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளின் சாரமற்ற சாரம் போல.
ஆனால், இம்மாதிரித் திரைகளுக்குப் பின்னால், இந்திய ஒருமைப்பாட்டை ஒழிக்க முனையும் – ஆங்கிலேயர்கள் முன்னே செய்தது போல, பிரித்தாளும், அடுத்துக் கெடுக்கும் அபத்தவாத அயோக்கிய அரசியல் இருப்பதும் இதில் குளிர்காய ஒரு கும்பலே இருப்பதும் தெரியவராது.
இவற்றின் பின்னால் காரணமற்ற வெறுப்பும், அசூயையும் இருப்பதும், வாய் கூசாமல் சொல்லும் பொய்கள் இருப்பதும் – இம்மாதிரிக் கருத்தியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள் மூலம் நம் மக்களின் பல்வேறு பார்வைகளின், கருத்துக்களின் சமரசத்துக்கு, தொடரும் உரையாடல்களுக்கு, முரணியக்கங்களுக்கு எதிராக – அறியா மந்தை மக்களை, யோசிக்காத அப்பாவி இளைஞர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதும், தெரிய வராது.
சமூக, மத நல்லிணக்கங்களுக்கான எத்தனிப்புகளை முளையிலேயே கிள்ளி, அதனைச் சுட்டுப்பொசுக்கி, அதன் மேல் அமிலம் விடும் காரியத்தை இந்தத் தொழில்முறை மனிதவுரிமைவாத சக்திகள், களப்பிணிகள் மூலம் செய்வதும் தெரியவராது.
-0-0-0-0-0-
ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – இந்த இளைஞரைப் போல அல்லாமல் – வேலை கொடுப்பதும் கொடுக்காததும், வீட்டினை வாடகைக்குக் கொடுப்பதும் கொடுக்காததும் – தனி நபர், நிறுவன உரிமை சம்பந்தப்பட்டது என்பதில் எனக்கு இரு கருத்து இல்லை.
ஆனால் ஒரு மனிதர் மற்றவரை (என்ன வலுவான காரணங்களிருந்தாலும்) வலுக்கட்டாயமாக, நேர்மையற்று இழிவு செய்வது, என்பது எனக்கு ஒவ்வாதது. சுத்த சமரச சன்மார்க்க சத்திய உலகை நோக்கிச் செல்ல எனக்கும் விருப்பம்தான்.
-0-0-0-0-0-
ஆக, இம்மாதிரி இளைஞர்களை, மனிதவுரிமையடிச்சான் குஞ்சுகளை, போலிச்சிறுபான்மைவாதிகளை, அரைவேக்காட்டுக் கருத்துடையவர்களை, அண்டப் புளுகுணி மாங்கொட்டைகளை நோக்கி, நான் சில கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கிறேன், நேரடி அனுபவங்களில் எனக்குத் தெரியவந்தவைகளைப் குறிப்புகளாகப் பகிர்கிறேன் :
- எவ்வளவு முஸ்லீம்களுக்கு இப்படி வாடகை வீடு மறுக்கப் பட்டிருக்கிறது? என்ன காரணங்களினால்? யாரால்? எந்த இடங்களில்? ஏதாவது பரிசோதனைக்குட்படுத்தக் தக்க, பொருட்படுத்தத்தக்க எண்ணிக்கையும், நிகழ்வுகளும் உள்ளனவா? (எனக்குத் தெரிந்து ஒரு திக சார்பினர், என்ன இவங்க மனுசங்களா. பாலைவனத்தல கத்தினா கேட்கும்னிட்டு அங்க ஓதிட்ருந்தவனுங்க, அது சரிதான், ஆனாக்க ஏன் நம்ப ஊர்ல இங்க தெனிக்கும் காலங்கார்த்தால ஸ்பீக்கர் வெச்சு கூத்தடிக்கறானுவ, மொதல்ல நீங்க அத்த கம்மி பண்ணச் சொல்லுங்க, அப்றம் ஒங்க பாய்க்கு வீடுண்றத பார்க்கலாம் – என்று (என்னிடம்) சொல்லி வீட்டை மறுத்திருக்கிறார். இவருடைய பிரச்சினையை ஒப்புக் கொள்கிறேன், நியாயமான விஷயம்தான், பாவம். வீட்டிலோ மனைவிக்குப் பார்கின்ஸன் நோய், படுக்கையுடன் இருக்கும் 90+ வயது அன்னை, குழந்தைகள் இல்லை – அவர் இருப்பிடமோ, மசூதியில் இருந்து இரண்டாம் வீடு, அங்கிருந்து, ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை, ம்யுஸ்ஸென் விசுவாசிகளை கடவுளைப் பிரார்த்திக்க, உரக்க அழைக்கிறார். )
- ஒன்றிரண்டு தவறான எடுத்துக்காட்டுகளை – பொதுவோபொது என்று பொதுமைப் படுத்தி, மற்றவர்களை நேர்மையற்று உசுப்பேற்றப் பேசப் படும் எண்ணிறந்த விஷயங்களில் ஒன்றுதானோ இது? (உதாரணத்திற்கு – என்னுடைய மேற்கண்ட எடுத்துக் காட்டின் ஒரு சிறிய பக்கத்தை, துணுக்கை மட்டும் எடுத்து, திராவிடர் கழகத்தினர் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால் என்ன நியாயம்?)
- சைனீஸ் விஸ்பர் (Chinese Whisper – ‘Inaccurately transmitted gossip. ‘Chinese whispers’ refers to a sequence of repetitions of a story, each one differing slightly from the original, so that the final telling bears only a scant resemblance to the original’ – சீனக் குசுகுசுப்பு அல்லது கிசுகிசுப்பு எனச் சொல்லலாமா இதனை?) என்ற ஒரு விளையாட்டு, குழந்தைகளிடையே பிரசித்தமானது. நிறைய குழந்தைகள் ஒரு வட்டத்தில் உட்கார்ந்து கொண்டு – அதில் ஒரு குழந்தை பக்கத்திலிருக்கும் குழந்தையின் காதில் குசுகுசு என்று ஏதோ சொல்லும். அதனைக் கேட்ட குழந்தை தனக்குச் கேட்டதை அதற்கு அடுத்த குழந்தைக்கு… இப்படிச் சில தாண்டல்களுக்குப் பின் முதலில் சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி உருத் தெரியாமல் போய்விடும். முடிவாக, முதலில் குசுகுசு ஆரம்பித்த குழந்தைக்கே இந்த ஒரேயடியாக மாற்றப் பட்டவிஷயம் வந்துசேரும் போது, அதற்கு அதிர்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருக்கும். வதந்திகளை நம்புவது எவ்வளவு மோசம் என்பது குழந்தைகளுக்கு மறைமுகமாகத் தெளிவிக்க ஆசிரியர்கள் இம்மாதிரி விளையாட்டுக்களை அறிமுகப் படுத்துவர். இந்தக் குழந்தைகளுக்கு குயுக்தியாக நடுவில் தங்களுக்குத் தெரிந்தே விஷயத்தைத் திரிக்கும் கயமை இருக்காது. இருப்பினும் விஷயங்கள் சுற்றிக் கொண்டிருக்கும்போது அதன் நிலை மாற்றங்கள் நிகழும். ஆனால், வளர்ந்துவிட்ட மனிதர்களுக்கு, அதுவும் வெட்டிவதந்திக் கயமைப் பரப்பிகளுக்கு, அயோக்கியக் களப்பிணியாளர்களுக்கு, அடிப்படையில் மோசமான திரியாவரங்களுக்கு — ஒரு நல்ல விஷயம் நடந்தால் கூட அதில் அவர்களுடைய சொந்த அழுகுணி மசாலா சேர்த்து அதன் அலகைத் திருப்பிப் பரப்புதல் என்பது ஒரு அற்ப சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம். என்னைப் பொறுத்தவரை இப்படித்தான் இந்த விஷயமும் நடக்கிறது, என்ன சொல்கிறீர்கள்?
- முஸ்லீம்களே தங்களை விட ஜாதியில் கீழோராகக் கருதப் படும் சகோதர முஸ்லீம்களுக்கு வீடு கொடுப்பதில்லை என்பது தெரியுமா? (எனக்கு எடுத்துக்காட்டுக்கள் தெரியும்)
- இதைத் தவிர ஸுன்னிகள், ஷியாக்களுக்கு வீடு கொடுப்பதில்லை பொதுவாக – வெட்டுப்பழி குத்துப்பழிதான் (பாகிஸ்தானில் இருப்பதைச் சொல்லவில்லை, உங்களுடைய சென்னை மாநரகத்தில் தான் இந்த நிலைமை!)
- ஸுன்னிகள் – பஹாய்களுக்கு, அஹ்மதிய்யா, போஹ்ராக்களுக்கு (இஸ்மைலி ஷியாக்கள் இவர்கள்) நிச்சயம் வீடு கொடுப்பதில்லை தெரியுமா? (இந்த விஷயம் பெங்களூரில், ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்து நடந்திருக்கிறது, நடக்கிறது – இவர்கள் தனித்தனிக் குடியிருப்புகளில்தான் வாழ்கின்றனர் – இவர்களுக்கிடையே உரை யாடல்கள் இல்லை)
- பெங்களூரில் என் வீட்டருகே இருக்கும் தலித் முஸ்லீம்கள், ஆஃப்ரிக சூடான் – நைஜீரியாக்களிலிருந்து பாவப்பட்டு, இங்கேயுள்ள குப்பை மேனெஜ்மெண்ட் கல்லூரிகளில் குப்பைப் படிப்பை – படிக்க வந்திருக்கும் இளம் முஸ்லீம் கருப்பர்களுக்கு (பாவம் அவர்களுக்குத் தெரியாது இந்தப் படிப்புக்கள் உதவாக்கரைகள் என்று) வீடு வாடகைக்குக் கொடுக்க மறுக்கிறார்கள்.
- மேற்கண்ட அனைத்தையும் வைத்துக் கொண்டு, முஸ்லீம்களே முஸ்லீம்களுக்கு அவர்கள் வீட்டை வாடகைக்கு விடுவதில்லை என்று அபத்தமாகப் பேசலாமா? இதனை மனிதவுரிமைப் பிரச்சினையாக, சிறுபான்மையினரில் சிறுபான்மையினர் பிரச்சினையாக முன்னெடுத்துச் செல்லலாமா? அல்லது, இதற்கும் இந்துத்துவா, நடந்துவா, பேசிவா, ஆடிவா தான் காரணம் என ‘மாத்தி யோசிச்சு’ புதுக் குட்டையைக் குழப்பலாமா?
- எவ்வளவு க்றிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு வாடகைக்குச் சந்தோஷமாக தங்கள் வீட்டைக் கொடுக்கிறார்கள் அல்லது கொடுக்கவில்லை என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? (என்னிடம் சொந்த அனுபவ, நேரடிச் செய்திகள் இல்லை)
- எவ்வளவு திராவிடக்கழக பெரியார்வழித்தோன்றல்கள் சந்தோஷமாக முஸ்லீம்களுக்கு வாடகைக்கு தங்கள் வீட்டைக் கொடுத்திருக்கிறார்கள் எனவும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? (இதற்கும் என்னிடம் சொந்த அனுபவ, நேரடிச் செய்திகள் இல்லை – முதலில் குறிப்பிட்ட ஒரு அனுபவம் தவிர)
- இம்மாதிரி பாதிக்கப்பட்ட, அநீதியாகக் கேவலப்படுத்தப் பட்ட (அப்படி உண்மையிலேயே ஆகியிருக்கிறதென ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்) எவ்வளவு அபலை முஸ்லீம்களுக்கு நீங்கள் உதவி செய்து – உருட்டியோ, மிரட்டியோ, கோரிக்கை வைத்தோ, நைச்சியமாகவோ, – வீடுகளை வாடகைக்குக் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்?
- எல்லாம் சரி, முஸ்லீம்களுக்கு நகரங்களில் ஒருவரும் வாடகைக்கு வீடு கொடுக்காததினால், அவர்களெல்லாரும் நகரத்தை விட்டு வெளியே போய்விட்டார்களா? அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்களா? அல்லது மசூதிகளில் தற்காலிகமாகத் தங்கி இருக்கிறார்களா? அல்லது ‘பெரியார் திடலில்’ திராவிடக் கழகத்தினர் பெரியமனது பண்ணிக் கட்டிக் கொடுத்திருக்கும் குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் குடியிருக்கிறார்களா? எங்கே இப்படி வீடு கிடைக்காமல் அல்லாடும், வீடு மறுக்கப் படும் பரிதாபமான முஸ்லீம்கள் இருக்கிறார்கள்? கொஞ்சம் இவர்களை, தயவுசெய்து அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கும் இடங்களில் இருந்து வெளியே வரச்சொல்ல முடியுமா?
- எவ்வளவு முஸ்லீம்கள் இந்துக்களுக்கு அல்லது பிற மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாடகைக்கு வீடு / கடை கொடுக்கிறார்கள்? உங்களுக்குக் தெரியுமா? அவர்களுடைய சொந்த சொத்துக்களை விடுங்கள் – அவர்களின் சமூக சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃப் போர்ட் மூலமாக எவ்வளவு பிற மதத்தினருக்கு வாடகைக்கு சொத்துக்களைக் கொடுக்கிறார்கள்? (எனக்குத் தெரிந்து இரண்டு நிகழ்வுகளில், முஸ்லீம் அல்லாதவருக்கு கடையை வாடகைக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்)
- எவ்வளவு முஸ்லீம்களுக்கு இப்படி ’அவர்கள் பெயரை வைத்து மட்டும்’ அநியாயமாக வேலை மறுக்கப் பட்டிருக்கிறது? என்ன காரணங்களினால்? யாரால்?எந்த இடங்களில்? ஏதாவது பரிசோதனைக்குட்படுத்தக் தக்க எண்ணிக்கையும், நிகழ்வுகள் சார் ஆவணங்களும், பொருட்படுத்தத்தக்க புள்ளியியல் விவரங்களும் உள்ளனவா?
- இந்தக் காலத்தில் உள்ள குப்பை கல்வித்திட்டங்களினால், குப்பைகள் தான் வெளியே வருகின்றன. ஆம். இப்படி மகாமகோப் பிழம்பாக எரிந்து நம் நாட்டையே ஒழித்துக் கொண்டிருக்கும் குப்பை ஜோதியில் புடம்(!) போடப் பட்டு வெளிவரும் பெரும்பாலான இளைஞர்களில் – அவர் எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும் சரி – அதாவது முஸ்லீம் அதில் ஸுன்னி – அதற்குள்ளே, உயர்ந்த ஜாதிப்-பிரிவு (லக்னவி / பஞ்சாபி ஜாட் – அதற்குள்ளே மேற்கு கிழக்கு அல்லது ஆஃப்கனி சையத் ஹுஸ்ஸைன் – அதற்குள்ளே தக்கணி, பூரபி எனப் பல உப உப உப ஜாதிகள் – என வைத்துக் கொள்ளலாம்) – ஆக இருந்தாலும் சரி – அந்த இளைஞர், சராசரித் திறனுக்கும் குறைந்தவரென்றால் வேலை கிடைப்பது கஷ்டம் தான். இதனால் பொத்தாம் பொதுவாக நாம்
சொல்லி விடபிதற்ற முடியாது – வணிக நிறுவனங்களில் முஸ்லீம்களுக்கு வேலை கொடுக்கவே மாட்டார்கள் என்று! என்ன சொல்கிறீர்கள்??
- எந்தப் பெரு நிறுவன ’கேட்’களில், விண்ணப்பதாரரின் பேரைக் கேட்டு, அந்தப் பையன் / பெண் முஸ்லீமாக இருந்தால் ‘அப்டியே வெளீல திருப்பி அனுப்சுடராங்க?’ என்ன உளறல் இது! எப்பொழுதாவது நீங்கள் அம்மாதிரிப் பெரிய நிறுவன கேட்களில் வேலை செய்திருக்கிறீர்களா? அல்லது விண்ணப்பம் தான் கொடுத்திருக்கிறீர்களா?
- அப்படிச் செய்திருந்தால் தான் தெரியும்: அந்த கேட்களில் வேலை செய்யும் பாதுகாவலர்களுக்கு கதவைத் திறந்து மூட, வாகனங்களைப் பரிசோதிக்க, உள்ளே வருபவர்களின் அடையாள முற்றொப்புமை (ID) சரிபார்க்க, சரக்குப் போக்குவரத்துகளைக் கவனிக்க, டெலிவரி தஸ்தாவேஜுகளைத் தயாரிக்க, சுற்று வட்டாரத்தை கவனிக்க மட்டுமே நேரமிருக்கும், இந்த அழகில் இந்த விசிலடிச்சான் குஞ்சிளைஞர்கள் படித்துக் கிழித்தவுடன் பெரிய்ய வேலை கிடைக்குமென்று, டை கட்டிக் கொண்டு ஆளாளுக்கு அரை ரீம்அளவு (பொய் சொல்லவில்லை) ரெஸ்யுமேக்களுடன் (= தற்குறிகளின் தற்குறிப்புகள் என அறிக) வந்து வேலை கேட்பார்கள். இவர்களைப் போல பொழுதுபோக்கிற்காக வேலை தேடுபவர்களை எல்லாம் நிறுவனங்களுக்கு உள்ளே விட்டால் நாறி விடும். மற்ற வேலை பார்க்கவே நேரம் இருக்காது. பாதுகாவலர்களுடைய வேலை இந்தக் காகிதங்களை வாங்கி ”ஹெச்ஆர் வில் கான்டாக்ட் யூ, இஃப் யு ஆர் ஃபௌண்ட் ஸூட்டபிள்” என்பது போலச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவது. விண்ணப்பதாரர் தலித்தாக இருந்தாலும் சரி, ஐயராக இருந்தாலும் சரி, வன்னியராக இருந்தாலும் சரி, ஸுன்னியாக இருந்தாலும் சரி – இப்படித்தான் நடக்கும். ஏனெனில் அரைகுறைகளுக்கு மோட்சமில்லை. பின் இந்தத் தற்குறிப்புக் காகிதக் கற்றைகளை அடுக்கி, மாலை மனிதவளமேம்பாட்டுத் துறையிடம் கொடுப்பதும் இந்தப் பரிதாபமான காவலர்களின் வேலை. அந்தத் துறையினர், அவசியமிருந்தால் மட்டுமே அந்தக் குஞ்சிளைஞர்களில் சிலரை அழைத்துப் பேசுவர். பெரும்பாலும் அது நடக்காது. காகிதக் கிழிப்பான்களுக்கு அல்லது பழைய காகித விற்பனையாளரிடம் போய்விடும் அவர்கள் குறிப்புகள். அல்லது என்னைப் போன்றவர்கள் அந்த ஒரு பக்கக் காகிதங்களைச் சேகரித்து அக்கம்பக்கத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளிப்பர்.
- இந்தப் பொதுவிதிக்கு விதிவிலக்காகச், சில இளைஞர்கள் (எதிர்கால நட்சத்திரங்கள் – நிஜமாலுமே அறிவு கூர்மையும் விடா உழைப்பும் உள்ளவர்கள். ஸ்ஸ்ஸ் அப்பாடா!!) இருப்பார்கள் – அவர்கள் செய்துள்ள வேலைகளின் விவரங்களை அரைப் பக்கத்தில் சுருக்கமாக எழுதி – மின்னஞ்சல் மூலம் மட்டுமாகவே அனுப்பி, அவர்களுடையச் செயல்பாடுகளின், நேரிடைத்தன்மையின் தரம் காரணமாகவே நேர்காணல் சுற்றுக்களுக்குச் சென்று விடுவர். கேட்டில் கிராதியைப் பிடித்துக் கொண்டு பாதுகாவலர் கிளம்பச்சொல்லும் வரை, குஞ்சாமணிகளைத் தேய்த்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். (இந்த எதிர்கால நட்சத்திரங்களிலும் தலித், ஐயர், வன்னியர், ஸுன்னிகள் உண்டு)
- தகுதியும் முனைப்பும் தன்னார்வமும் உள்ள இளைஞர்களுக்கு (அவர் எந்தப் பகுதியை, இனத்தை, மதத்தை, ஜாதியை சேர்ந்தவரானாலும் சரி) இந்தியாவில் ஏகத்துக்குக் கிராக்கிதான், எப்போதும். வேலையில்லாத் திண்டாட்டம், அதுவும் முஸ்லீம்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்பதெல்லாம் சரியில்லை, உண்மையேயில்லை. அவை தூக்கிக் கடாச வேண்டிய பொய்கள். எவ்வளவு விதமான வேலைகள் பணம் கொழிக்கும் தொழில்கள் காத்துக் கிடக்கின்றன இந்த நாட்டில். ஆனால் பெரும்பாலான இளைஞக் குஞ்சாமணிகளுக்கு – எடுத்த எடுப்பிலேயே டை கட்டிக் கொண்டு, விமானங்களில் பிஸினெஸ் க்லாஸ்-களில் பறந்து கொண்டு, கால்ஃப் ஆடிக் கொண்டு,பெண் செக்ரட்ரியைத் தொடையில் வைத்துக் கொண்டு கொஞ்சுவது போன்ற அபத்தச் சித்திரங்களால் ஆன வேலை தான் வேண்டும் அல்லது அரசு / IT / வங்கி இத்யாதி உத்யோகத்தில் அமர்ந்து குண்டியைத் தேய்த்துப் பளபளப்பாக ஆக்கிக் கொண்டு, மகாமகோ வரதட்சிணை வாங்க வேண்டும் – தகுதியா? உழைப்பா?? இன்னாடா சொல்ல வர்றீங்க?
- அப்படி இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு, ஒரு விதமான தகுதியும் உழைப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் – ஏன் மூளையும் கூடத் தேவை இல்லாமலேயே வேலை வேண்டுமென்றால் – இருக்கவே இருக்கிறதே, தொழில்முறை மனிதவுரிமைவாதம், தொழில்முறை களப்பிணியாளர் வேலை! எதிர்மறை எட்டுக்கட்டல்களுக்கு, மாபெரும் பொய்களுக்கு, கயமைத்தனமான பொதுமைப்படுத்தல்களுக்கு இவைதான் இருக்கின்றனவே – துர் செய்திகளுக்கு நாய் போல அலையும் டிவி அலைவரிசைகளும், பத்திரிக்கைகளும் கூடச் சுற்றிச் சுற்றிக் கும்மி அடிக்கின்றனவே…
- ஆக, “பெரு நிறுவனங்களில் வேலை கிடைப்பதே இல்லை. கேட்லயே வெளியில் தள்ளி விடுகிறார்கள். பேரைப் பார்த்தவுடனேயே வெளியில் தள்ளி விடுகிறார்கள்” – என்று சொல்வது எப்படிப்பட்ட கயமை வாய்ந்த, மனதாரச் சொல்லும் பொய்! (இது அறியாமையால் சொல்லப் பட்டது என்று என்னால் நம்ப முடியவில்லை)
- எனக்குத் தெரிந்து நிறைய முஸ்லீம் இளைஞர்கள் (நானாவித பிரிவுகளையும் ஜாதிகளையும் சேர்ந்தவர்கள்) பல விதமான பெரு நிறுவனங்களில் வேலையில் (பொறுப்பில், பல மட்டங்களில் – அலுவலக நேரத்தில் தொழுகை செய்து கொண்டும்) இருக்கிறார்கள். சிறு நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தங்களுடைய கை நிறையச் சம்பாதிக்கிறார்கள், சந்தோஷமாகக் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார்கள். களப்பிணியாளர்களுக்கு இதெல்லாம் பிடிப்பதே இல்லை என்றாலும்.
- ஆனால், ஆனால்… ஒருவேளை இவர்களெல்லாம் பெரு நிறுவனங்களின் கேட் வழியாகப் போகாமல் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து திருட்டுத்தனமாக நன்றாக வேலை செய்து, திருட்டுத்தனமாகப் பதவி உயர்வு பெற்று, திருட்டுத்தனமாகச் சம்பளம் வாங்குகிறார்களோ? டேய் பசங்களா! மனிதவுரிமை-சிறுபான்மையினர் உரிமை போராளிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். களப்பிணியாளர்களைப் பார்த்தால் எதிர்த் திசையில் ஓடி விடுங்கள். அவர்கள் உங்களைக் கொன்றே விடுவார்கள் – ஏனெனில் அவர்கள் கணக்கில் நீங்கள் இல்லவே இல்லை, ஜாக்கிரதை! நீங்கள் இருந்தால், இருப்பதாகத் தெரிந்தால், அவர்களுடைய வெறுப்பூட்டும் தொழில் போணி ஆகாது, தெரிந்ததா? என்னவோ ஸொல்றத ஸொல்லிப்டேன்பா – இனிமே ஒங்க பாடு.
- இல்லை, ஒருவேளை இவர்களெல்லாம் பெரு நிறுவனங்களின் கேட் வழியாகப் போகாமல், காம்பௌண்ட் சுவருக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டி, நேராக அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்குப் போகிறார்களோ?
- ஒருக்கால், இந்தப் பரிதாபத்துக்குரிய முஸ்லீம்கள் – பெரிய, சிறிய, நடுத்தர நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தவுடன், உடனே அவர்களை மதம் மாற்றி, அவர்களை ஹிந்துக்களாகவோ, க்றிஸ்தவர்களாகவோ, சீக்கியர்களாகவோ ஆக்கி விடுகிறார்களோ இந்தப் பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகள்? அமெரிக்க – வாடிகன் – ஹிந்துத்துவ – காலிஸ்தானியச் சதியான இதனை ஆய் ஆய் என்று ஆய உடனே ஒரு கமிட்டி போடுங்கப்பா!
- சரி, அப்படியே ”கேட்லயே வெளீல தள்ளி விடுகிறார்கள். பேரைப் பார்த்தவுடனேயே வெளியில் தள்ளி விடுகிறார்கள்” என ஒரு பேச்சுக்கு – கொஞ்சம் தமாஷாக இருக்கும், பரவாயில்லை – இருந்தாலும், வைத்துக் கொள்வோம். இந்த விஷயத்தை பெரிய அளவில் இந்த ஊடகங்களின் கண்மணிகளாக இருக்கும் தொழில்முறை மனிதவுரிமையாளர்களால், களப்பிணியாளர்களால் ஏன் கொண்டு போக முடியவில்லை? ‘அநீதியாக வேலை மறுக்கப் பட்ட’ முஸ்லீம் இளைஞர்களுக்கு ஏன் இவர்கள் வேலை வாங்கித் தரவில்லை?
- கடைசியாக… ஏனப்பா, குய்யோமுறையோ எனக் கூக்குரலிடுபவர்களே! ஏன் நீங்களே தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் தொடங்கி (குப்பைப் பல்கலைக் கழகங்களை அல்ல, குப்பைக் கல்லூரிகளை அல்ல) பாவப்பட்ட ‘அநீதியாக வேலை மறுக்கப் பட்ட’ முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலை தரலாமே!
-0-0-0-0-0-
பேசுவதற்கு மைக் கிடைத்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். எழுதுவதற்கு இடம் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அதற்கு உங்களுக்கும் உரிமை நிச்சயம் இருக்கிறது. ஆனால் உங்கள் அறைகூவல்களில் அதிக பட்சம் 1% நாணயம் இருந்தால் அது உங்களுக்கே கூட நல்ல விஷயம் தானே?
-0-0-0-0-0-
பாபுஜி ஒரு பதம் உபயோகித்திருக்கிறார் – ‘சாக்கடை ஆய்வாளர்கள்’ (gutter inspectors) என்று. இந்தப் பதம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
நம் சமூகத்தில் சரி செய்யப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உண்மைதான். எந்தச் சமூகத்திலும் அப்படித்தான். நம்முலகத்தில், ஒரு விதிவிலக்கு கூட இல்லை இதற்கு.
ஆக, நமக்கு இவற்றைக் களைய வேண்டிய, அடுத்தச் சுற்றுச் சமரசங்களுக்குச் செல்ல வேண்டிய, முன்னோக்கிச் செல்ல வேண்டிய கடமைகளும் இருக்கின்றன.
ஆனால் சில – இந்தச் ‘சாக்கடை ஆய்வாளர்கள்’ களுக்கு (இவர்களுக்கு ஏதோ இனம்புரியாத மனோவியாதி தான்) சமூகத்திலுள்ள சாக்கடைத்தனமான சில விஷயங்களை மட்டுமே பார்த்து, அவற்றைச் சரி செய்யத் துளிக்கூட முனையாமல், அவற்றை அலசி, ஊதி ஊதிப் பெரிதாக்கி, ஏதோ அந்தச் சமூகமே ஒரு சாக்கடை என உருவம் கொடுத்து, அலறிக் கூக்குரலிடுவர். இந்த உலகம் விசிலடிச்சான் குஞ்சுகளால் நிரம்பியதால், அதுவும் இந்தக் குஞ்சாமணிகளுக்கு எதிர்மறையான விஷயம் என்றால் ஒரே ஆர்வம் என்பதால் இம்மாதிரிச் செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனைக் கயமையாக உபயோகித்து, அதில் குளிர் காய்பவர்கள்தான் இந்தத் தொழில்முறை மனிதவுரிமைவாதிகளும், களப்பிணியாளர்களும், சிறுபான்மையினர் அதிஉரிமைவாதிகளும்.
இவர்கள் இனங்காணப்பட்டு, ஒதுக்கப் படவேண்டியவர்கள்.
-0-0-0-0-0-
எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றனர் (எப்படியென்று கேட்டு என் மானத்தை வாங்காதீர்கள், தயவுசெய்து). அதில் எண்ணிப் பார்த்தால் – நான் மிகவும் மதிக்கும், ஆப்த, நெடுநாள் நண்பர்கள் என, என் மனைவி உட்பட 18 பேர் இருக்கின்றனர். என்னை அக்குவேர் ஆணிவேராக அறிந்தவர்கள் இவர்கள் – பலதரப்பட்டவர்கள். கண்ணியம் மிகுந்தவர்கள். என் போலல்லாமல் அறிவாளிகள்.
இவர்களில் ஒருவர் அஸ்ஃபர் ஸையத் ஹுஸ்ஸைன் (அற்புதமான ஆசாமி, விருந்தோம்பல் திலகம், மூளையோதிமூளை, அழகுணர்ச்சி மிக்கவர்). இன்னொருவர் பக்கா திராவிடர் கழகம் – திருவாரூர் தங்கராசு கட்சி (பெயரை எழுதினால் உதைப்பேன் என்கிறார். சும்மா சண்டை வருகிறது என்பதால், எங்கள் உரையாடல்களில் நாங்களிருவரும் ’திராவிடம்’ என்கிற வார்த்தையையே உபயோகிப்பதில்லை எனச் சமாதான உடன்படிக்கை – இருவருக்கும் இருக்கும் உருக்குத்தொழில், கணிதப்புதிர் ஆர்வங்கள் பற்றித்தான் இப்போதெல்லாம் பேசுகிறோம்) – இந்த இருவருடன் நான் இந்தப் பிரச்சினை (இப்பதிவின் பாடுபொருள்) பற்றிப் பேசி எழுதத்தான் போகிறேன் என்றேன். ”உன்னைத் திருத்தவே முடியாது, எக்கேடோ கெட்டுப் போ!” என ஆசிர்வதித்திருக்கின்றனர் இருவரும். நன்றி நண்பர்களே.
… இவர்கள் அனைவருடனும் எனக்கு தொடர்ச்சியாக உரையாடலில் இருக்க விருப்பம் தான். ஆனால் முடிவதில்லை, இக்காலங்களில். ஹ்ம்ம்.
அஸ்ஃபரைத் தவிர பல தளங்களில் நான் முஸ்லீம்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். என்னுடைய மேலதிகாரிகளாகவும், கீழதிகாரிகளாகவும் இருந்த இச்சமுதாயத்தினரின் அற்புதமான மனிதர்களுடன் வேலை செய்யும் பாக்கியமும் பெற்றிருக்கிறேன். சில பொருளாதாரக் கீழ்தட்டுசார் தோட்டவேலையாட்களுடனும், மண்டித்தரகர்களுடனும் மாதக் கணக்காகத் தும்மிக் (திம்மி அல்ல) கொண்டே பழகியிருக்கிறேன்.
நான் கபீரின், அவர் பாடல்களின் அடிமை. கரைபுரண்டோடும், நுப்பும் நுரையுமான, இஸ்லாமியர்களின் இசை வெள்ளத்தை, மீர் முக்தியார் அலி ஆகட்டும், அம்ர் தியாப் ஆகட்டும், பர்வீன் ஸுல்தானாவாகட்டும் – ஆழ்ந்து ரசிப்பவன். இஸ்லாமிய கணித, அறிவியல் உச்சங்களை அண்ணாந்து பார்ப்பவன். கொர்ரான் உள்ளிட்ட பல இஸ்லாமியப் புத்தகங்களை, பாடப் புத்தகங்களைப் போல் குறிப்புகள் எழுதிப் படித்தவன். பல விஷயங்களைப் போல, நான் இதன் மாணவனும் கூட.
ஆனால், முக்கியமாக, வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் – என் நண்பன் அஸ்ஃபர் சொல்வதைப் போல: Ram does not suffer fools, gladly. திருந்துவதாகவும் இல்லை.
எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை என்றால்: இந்த பின்புலத்தில் நான் என் அனுபவங்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென இருக்கிறேன். இதனால்தான் என்னுடைய இந்தப் பதிவும் இதற்கு முந்தையப் பதிவும்…
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
எச்சரிக்கை: நேரமிருக்கும்போது, இன்னும் சில பதிவுகளுக்கு இந்தக் கதை தொடரும் போலத் தெரிகிறது. பாவம்தான் நீங்கள். நான் எழுதுவதன்(!) நடையோ, உருவமோ, உள்ளடக்கமோ பிடிக்கவில்லையென்றால், தாராளமாகப் படிக்க வேண்டாம்.
You have been warned.
தொடர்புள்ள பதிவுகள்:
February 26, 2013 at 14:07
நான் உங்கள் பதிவில் இருந்த லிங்க்கில் சென்று நீயா நானா பார்த்தேன். இல்லை இல்லை தாங்கள் கூறிப்பிட்டு உள்ள ’கேட்’நண்பர் பேசும் வரை பார்த்து அதற்கு பிறகு பொறுமையில்லாமல் நிறுத்தி விட்டேன். நான் டிவியில் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை ஆங்கிலச் சேணல்கள் பார்ப்பதோடு சரி. எப்போதாவது பொதிகை பார்ப்பேன். அப்பப்ப சன் டீவி ஜெய டீவி செய்தி பார்ப்பேன். எதையும் முழுவதும் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. உங்கள் விசயமே வேறு.
உங்கள் பதிவைப் படித்துச் சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிட்டது. என் புத்தகத்தை படித்து எப்போது பீஸ் பீஸாகக் கிழிக்கப் போகிறீர்கள்? கொஞ்சம் முன்னுரிமை தரலாகாதா?
February 26, 2013 at 16:41
ஸுன்னிகள் – பஹாய்களுக்கு, அஹ்மதிய்யா, போஹ்ராக்களுக்கு (இஸ்மைலி ஷியாக்கள் இவர்கள்) நிச்சயம் வீடு கொடுப்பதில்லை தெரியுமா? —
ismailis(who follow AgaKhan) are differenent than ahmedias, bohras. azim premji is an ismaili.
-surya
February 27, 2013 at 02:46
வளர்ச்சியை நோக்கி நம் எண்ணங்கள் செல்வதாக. மதங்கள் மட்டித்தனத்திலிருந்து விடுபடுதல் இல்லத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் நல்லது. நல்லவைகளை போற்றாமல் கைநழுவ விட்டுவிடக்கூடாது. அதற்கு தாங்கள் கொள்ளும் தெய்வ ஆவேசம் வேண்டும். “சிறுமைகண்டு பொங்க”
February 27, 2013 at 08:29
முஸ்லிம் காழ்புணர்ச்சி தான் இந்த பதிவில் தெரிகிறது
.
March 1, 2013 at 21:32
கூர்மையான பார்வைதான், ஆனாலும் கொஞ்சம் குறைச்சல். இன்னும் உத்து உத்து பாத்தீங்கன்னா ஙாழ்புணர்ச்சி, சாழ்புணர்ச்சி, ஞாழ்புணர்ச்சி ….. இப்படி இன்னும் அனைத்து ‘ழ்ப்புணர்ச்சி’-யும் தெரியுமே !!
February 27, 2013 at 13:38
ஒரு ஆர்.எஸ்.எஸ். களப்பிணியாளரிடமிருந்து இந்த பதிவைத் தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.
February 27, 2013 at 20:10
Rajesh & Kadaiyan — Could you please expalin the reasons behind your conclusions. The articles clearly gives reasons for each of the point put forth. Since you have a different view, i would like to know your thoughts also.. So please explain me with valid backup data.
February 28, 2013 at 12:37
very good analysis……..
March 1, 2013 at 18:51
மிக நேர்மையாக தைரியமாக பொட்டில் அடித்தாற்போல் ஒரு பதிவு..சபாஷ்..உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை .நன்றி
August 22, 2013 at 13:28
நல்ல வ்யாசம். எனக்கும் மிக நல்ல நல்ல முஸல்மாணிய நண்பர்கள் உண்டு. இந்த வ்யாசத்தின் தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமிய சஹோதரர்களுக்கு நன்மை பயக்குமாறு எழுதும் தொடர்களை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்.
\\\ இஸ்லாமியர்களின் இசை வெள்ளத்தை, மீர் முக்தியார் அலி ஆகட்டும், அம்ர் தியாப் ஆகட்டும், பர்வீன் ஸுல்தானாவாகட்டும் – ஆழ்ந்து ரசிப்பவன். \\\
ம்……மோ(ஹ்)தர்மா பர்வீன் அவர்களது இசைக்கு மயங்காதாரும் இருக்கவியலும்?
முன்னர் சொல்லிய இருவரும் பரிச்சயமில்லை.
ஸூஃபியானா கலாம் என்றால் மனதில் உடன் நினைவுக்கு வருபவர் உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப். எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது. இவரது அல்லாஹு அல்லாஹு கலாம் (ofcourse, you have other different versions)……..Sir, Hope you would have listened to it. If not, a must to hear song. And please do not go for satyAnAsh remix versions……curse to the ears.