(அல்லது) “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”
ஆ! க ம் ப ன். % ^ # @ ! *& சும்பன்.
கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
என்ன பெரியதாகப் புடுங்கி விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் – இந்தக் கம்பன் எம்மாத்திரம்!
நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?
கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…
இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!
வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ?? Read the rest of this entry »
பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி
July 18, 2013
(அல்லது) லெமூரியாக் காலத்திலிருந்தே மறத் தமிழர்களின் செல்ல ஆயுதம் வாள் அல்ல, அல்ல, அல்ல – அது கத்தி, கத்தி, கத்திதான்!
எச்சரிக்கை: இது என்னோட சொந்த மீன்பாடி வண்டி ஃபிக்ஷன் (பயப்படாதீங்க – இது நம்ப ஆட்டோ ஃபிக்ஷனுடைய அத்தை பையன் தான்!)
பொதுவாக அறிவிலிகள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ் ஓங்கி வளர்ந்திருந்தது என்பார்கள். அவர்களைப் பாவம், மறட் டமிளர்களாகிய நாம், மறப்போம், மன்னித்தும் விடுவோம்.
உண்மையில் தமிழ் மொழி தோன்றியதற்கு முன்பாகவே தமிழ்க் கத்தி தோன்றி விட்டது என்பதை அவர்கள் அறியாதவர்கள். Read the rest of this entry »
போங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்…
July 14, 2013
பாகம் ஒன்று: ‘இவன் நானில்லை’
இரண்டாம் ராமசாமி எழுதுகிறார்: ஜாதி என்பது என்ன, சமூகத் தட்டுவாரிக் கட்டமைப்பு என்பது எப்படிப்பட்ட ஒரு சமூகக்கருவி என்றெல்லாம் புரிந்து கொண்டுதான் பேசுகிறோமா? அதில் ஒரு விஷயம் கூட உதவிகரமாக இல்லையா? காலங்காலமாக மனிதக் கூட்டங்கள், தங்கள் ஒருங்கிணைப்புத் தேவைகளுக்காகவும், சுய சார்புக்காகவும், சுயங்களைப் பண்பாட்டுப் பின்னணிகளில் பொருத்தி முன்னெடுத்துச் செல்வதற்குமான கருவிகள் இல்லையா அவை? உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், முக்கியமாக, மானுடப் பரிணாமத்தில் தட்டுவாரிக் கட்டமைப்புக்கள் அளிக்கும் சமூகவியல் பங்களிப்புகள் எப்படியானவை?
ஜாதி அபிமானம் என்றால் என்ன? ஜாதி வெறி என்றால் என்ன? ‘ஜாதி ஒழிப்பு’ என்பது சாத்தியமா? மேலும் முக்கியமாக, அது தேவையா? ஜாதிக்கு மாற்றாக எதனை முன்வைக்கிறோம்? திராவிட(!) இயக்கக்(!!) கருத்தாங்களையா(!!!)? கொம்மிஸார்களையா? மதகுரு-முல்லாக்களின் கட்டமைப்பையா? அல்லது நம்முடைய செல்லமான புறநானூற்று வஞ்சித்திணைகளுக்குள் புகுந்துகொண்டு ரத்தத்தில் நீந்தப் போகிறோமா? அல்லது வேறொரு கிரகத்திலிருந்து வேறு எதையாவது இறக்குமதி செய்யப் போகிறோமா?

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் – ஃபெப்ரவர் 2, 2004 அன்று ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது
அல்லது மாற்று என்பதையே பார்க்காமல், வன்முறையே அற்ற சுத்த சன்மார்க்க சத்திய சமூக உலகம் (utopia) ஒன்றை நிறுவப் போகிறோமா?
இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வோமானால், எப்படி அதனைச் சாதிக்கப் போகிறோம்? அந்த அதி உன்னத உலகத்தில் சமூகக் கட்டமைப்பு என்பது எப்படி எதை நோக்கியதாக இருக்கும்?
அல்லது, இவ்விரண்டும் இல்லாமல் பரிணாமப் பாதையில் பின்னோக்கி நகர்ந்து கல்லாய் பாம்பாகிப் பறவையாய்ப் பல் விருகமாகி மரமாகிப் புழுவாய் பூடாய்ப் புல்லாகிப் போய்ச்சேரப்போகிறோமா?
சரி, மேற்கண்ட அனைத்துக் கேள்விகளையும் விட முக்கியமானதொன்று: நாம், நம்முடைய தனிப்பட்ட முறையில், ஜாதி வெறி சார் பிரச்சினைகளை எப்படி அணுகப் போகிறோம்? Read the rest of this entry »
நேற்றைய முன்தினம் காலை உள்ளூர் மளிகைக் கடை ஒன்றுக்கு இரண்டு கோழிமுட்டைகள் வாங்கப் போயிருந்தேன். என் பிள்ளைகளுக்கு மதிப்பெண் போடுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ அல்ல – சில பரிசோதனைகளைச் செய்து காட்டுவதற்காக. முட்டைகளை உபயோகப் படுத்தி பல கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான விஷயங்களைத் தொட முடியும். இதைத் தவிர முட்டை ஏன் உருண்டையாக இல்லை என்பதிலிருந்து பல பொதுப்புத்தி சார்ந்த அற்புதமான வடிவாக்கப் புரிதல்கள் பற்றியும் பேச முடியும். ஏன், கணினியியல் அடிப்படைகள் பற்றிக் கூடப் பேச முடியும். கடந்த இரண்டு வாரங்களாக, என் குழந்தைகளை இந்தப் பரிசோதனைகளுக்குத் தயார்ப் படுத்தியிருக்கிறேன்.
ஆனால், இந்தப் பதிவு இந்த முட்டைகளைப் பற்றி மட்டும் அல்ல. Read the rest of this entry »
murder by mnemonic :-(
June 18, 2013
(OR) the mnemonic plague!
Oh well, (just in case you were wondering what the hell this is!) a mnemonic is a device or a clever way of memorizing or recollecting a set of facts; like, for example – we use the rather sad mnemonic VIBGYOR to ‘remember’ & ‘recollect’ the names of various colours that make up the visible light / spectrum – in terms of their increasing wavelengths – that is, Violet, Indigo … … Red. Read the rest of this entry »
வாடிக்கையாள வாலிப வயோதிக அன்பர்களுக்கு சில நற்செய்திகள்!
April 27, 2013
வேறு வழியில்லை, இவற்றைச் சொல்லியாக வேண்டும்:
“The time has come,” the Walrus said,
“To talk of many things:
Of shoes–and ships–and sealing-wax–
Of cabbages–and kings–
And why the sea is boiling hot–
And whether pigs have wings.”
— Lewis Carroll (from Through the Looking-Glass and What Alice Found There, 1872)
ஒத்திசைவைப் பொதுவாக அதிகம் பேர் படிப்பதில்லை – மின்னஞ்சல்களில் பதிவுகளைப் படிப்பவர்களைத் பெற்றுக்கொள்பவர்களைத் தவிர, தினம் சுமார் 500 பக்கப் பார்வைகள் (படிப்புக்கள் அல்ல) இதனைப் படித்தால் அது அதிகம். இதுதான், இந்த வெகு சாதாரணத் தளத்தின் பின்புலம்.
இருந்தாலும்… இந்தக் குறைந்த எண்ணிக்கை வாசகர்களிலும் கூட, பலர் இந்தப் பதிவுகளைப் படித்துக் கோபப்படுவதற்காகவே இங்கு வருகிறார்களோ என்பது என் தொடர்ந்த சந்தேகம்.
… எனக்கு வரும் ‘ஒன்ன ஒழிப்போண்டா’ வகையறா தட்டச்சு-வீர மின்னஞ்சல்கள் எனக்குப் பழக்கமே. என்னுடைய நகைச்சுவை உணர்ச்சியில்(/யிலும்) கர்வம் உடையவன் நான். முடிந்தால் அவற்றில் சிலவற்றைப் பார்த்துச் சிரித்து விட்டு அவற்றைச் செல்லமாக மண்டையில் தட்டி குப்பைத்தொட்டிக்கு அனுப்பி விடுவேன். பல மேற்படி மின்னஞ்சல்கள் பொதுவாக, நேரடியாகக் குறுக்கு வழியிலேயே குப்பைக்குப் போய்விடும். 2 வருடங்கள் முன் போல, தமிழக சட்டசபை தேர்தல் சமயம் நிறைய இம்மாதிரி வந்தன – ஒரளவு இவற்றை எதிர்பார்த்தேன் கூட – என்னுடைய கோபப் (polemic) பதிவுகளும் அவைகளை ஆகர்ஷித்திருக்க வேண்டும். எனது சக விசிலடிச்சான்குஞ்சப்ப வெறுப்பாளர்களுக்கும் வேறு வேலையேயில்லையா என்ன? Read the rest of this entry »
… அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!
April 20, 2013
(அல்லது) ”அட, எனக்கு இந்த மாதிரியெல்லாம் அர்ப்பணிப்புடன் அரசு வாத்யார்களெல்லாம் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.”
- ஆசிரியர்கள் அயோக்கியர்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் படு அயோக்கியர்கள்.
- ஆசிரியர்கள் முட்டாள்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் அதிமுட்டாள்கள்
- ஆசிரியர்கள் ஏதாவது உபதொழில் (’ஸைட் பிஸினெஸ்’) வைத்திருப்பார்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் படு அயோக்கியர்கள்.
- ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுப் படுத்துவதே இல்லை — அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள், மாணவர்களைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்!
- ஆசிரியர்கள் எத்தர்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் மகாமகோ எத்தர்கள்.
- ஆசிரியர்கள் மாணவர்களை மிகவும் துன்புறுத்துகிறார்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள், ’பிரம்பால’ மட்டும் தான் பேசுவார்கள்.
சரிதான். ஏனய்யா, நான் கேட்கிறேன் – உங்கள் ஊர் உலகத்தில் இல்லாத, உங்கள் தொழில் வட்டாரங்களில் இல்லாத, ஏன், உங்கள் குடும்பங்களிலேயே இல்லாத, – விகிதாச்சார / சதவிகித அயோக்கியர்கள், முட்டாள்கள், உபதொழில் வைத்திருப்பவர்கள், எத்தர்கள் இதில்தான் இருக்கிறார்களா? Read the rest of this entry »
மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா
April 6, 2013
… அப்பால, வொலகத்துக் குப்பைங்கள போராடி அகத்தறத யோசிக்கலாம்… புர்ஞ்சுதா ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்டடிச்சான் குஞ்சுகளா?

ரோலிஹ்லஹ்லா ‘நெல்ஸன்’ மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் – தென் ஆஃப்ரிக செய்தித்தாள் குழும அலுவலக மாடியில், இளம்வயதுக் குத்துச் சண்டைப் பயிற்சி – ’ட்ரம்’ பத்திரிக்கைகாக எடுத்தது – ஆனால் பதிப்பிக்கப் படாதது. ( நான் எல்லெக் பீமர் எழுதிய நெல்ஸன் மன் டேலா புத்தகத்தில் இருந்து இந்தப் படத்தை ஸ்கேன் செய்தேன்)
பாவப்பட்டு, மறுபடியும் என் பதிவைப் படிக்க வந்திருப்பவர்களே! திரும்பவும் திட்டலா என்று வருத்தப் படாதீர்கள். என்னுடைய முந்தைய ஒரு பதிவிற்கு வந்த எதிர்வினை ஒன்றால்தான் இது. மன்னிக்கவும். செய்வினை என்பது இதுதானோ? (உங்களுக்கு வேறு உபயோககரமான வேலைவெட்டியிருந்தால், மேலே படிக்காதீர் – வொங்க நெல்த்துக்குத்தாம்பா ஸொல்றேன். பிர்ஞ்சிதா?)
… ஒரு நீள்நெடுநாள் ‘போராளி’(!) மிகவும் வருத்தப்பட்டு கொஞ்சம் கோபத்துடனேயே ஏகவசனத்தில் எழுதியிருக்கிறார்: (கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்) –
”உன்னைப் போன்ற அறிவுஜீவிகள், ஏதாவது பொது, மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றாலே நக்கல் செய்கிறீர்கள். இளைஞர்களின் போர்க்குணத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உனக்கு எவ்வளவு இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை தெரியும், இந்த மாதிரி பொத்தாம்பொதுவாக மட்டையடி அடிப்பதற்கு? நீ இந்த இளைஞர்கள் செய்வதை விட என்ன உபயோககரமாகச் செய்து கிழித்து விட்டாய்? … … அவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நீ தாங்க மாட்டாய் … … உன்னைப் போன்ற தமிழினத் துரோகிகளின், பார்ப்பான்களின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.”
(அல்லது) உற்சாக இளைஞர்களை எப்படி புனரமைப்புப் பணிகளுக்கு உபயோகிப்பது
(அல்லது) போங்கடா நீங்களும் ஒங்க போராட்டமும்
(அல்லது) ராஜபக்ஷ-வுக்கு ஜே!
(அல்லது) ஸ்ரீலங்கா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, இந்த மாணவர்கள் என்னதான் செய்ய வேண்டும்?
-0-0-0-0-0-0-
31.12.2011 மாலை 4 மணி: பள்ளி அறங்காவலரிடமிருந்து ஃபோன்: ஹேய், ராம் – மாலை வணக்கம். வேலைகளுக்கு ஆள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாயே – சென்னையிலிருந்து ஆறு உற்சாகமான வாலன்டியர்கள் வந்திருக்கிறார்கள், எஞ்சினீயரிங் கடைசி வருட மாணவர்கள். என் நண்பர்களின் சுபுத்திரர்கள். அவர்கள் என்ன வேலை செய்யவும் தயார் – எப்படியாவது புனரமைப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதில் ஒருவன் நீ படித்த கல்லூரி. காதில் விழுந்ததா? நீ படித்த கல்லூரி. அடுத்த அரைமணிக்குள் நீ அலுவலகம் வந்தால் உனக்குத்தான் அவர்கள் கொத்தாக! அவர்கள். பத்து நாள் போல இருப்பார்கள். என்ன?
மகாமகோ வேலைப்பளுவில் திணறிக் கொண்டிருந்த நான் — அய்யா, இதோ வருகிறேன் என்று சொல்லி, செய்து கொண்டிருந்த வேலையை அம்போ என்று விட்டுவிட்டு, பேய் மாதிரி சைக்கிளை மிதித்து அடுத்த பத்தே நிமிடங்களில் அலுவலகத்தில் இருந்தேன். Read the rest of this entry »
களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?
February 26, 2013
(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?
ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?
அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி, அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —
… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?
-0-0-0-0-0-
எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.
… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…
விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’…)
மன்னிப்பீர்களா? B-)
இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
February 24, 2013
(அல்லது) மந்த மாணவர்களும் அரைகுறைக் களப்பணியாளர்களும்…
எச்சரிக்கை: இந்தப் பதிவு மிகவும் நீளம். பொறுமையாகப் படிக்கவும்.
பத்ரி சேஷாத்ரி அவர்களின் ஒரு பதிவின் பரிந்துரைப்படி, ஒரு வழியாக, நானும் என் மனைவியும், விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ நிகழ்வை (கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்வு – ஆனால் யூட்யூப் தரவிரக்கம் – எங்கள் மடிக்கணினிக்கு முழுவதும் வந்து சேர நான்கு மணி நேரமாகிவிட்டது!) இன்று நேற்று பார்த்தோம். அவளும் சுற்று வட்டாரப் பள்ளிகளில் அறிவியல், கணிதத்தைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறாள்.
முதல் பத்து நிமிடம் பார்த்தவுடன் கொஞ்சம் நேர விரயமோ எனச் சந்தேகமாக இருந்தது – ஆனால் தொடர்ந்து பார்த்ததில் – இது நாங்கள் சில சுவையான படிப்பினைகள் பெற்ற அனுபவம், பல விதங்களில்; களப்பணியாளர்களில் ஒரு சாரார், அதாவது களப்பிணியாளர்கள், ஊடகங்களின் செல்லப் பிள்ளைகள், எப்படி இருக்கிறார்கள் என்பது தெரிய வருவது ஒரு முக்கியமான விஷயம்தானே?
இதுதாண்டா போராளி!
February 16, 2013
தமிழர்களின் பிரச்சினைகளில் எது தலையாய பிரச்சினை – என்பதை நான் பல வருடங்களாக ஆய்ந்து ஆய்ந்து, மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருக்கிறேன் – இந்தச் சீரிய ஆராய்ச்சியின் முடிவில் எனக்குத் தெள்ளெனத் தெரியவந்தது என்னவென்றால்… … …
பொறுத்திரு, தவித்திரு, நமைத்திரு – அவசரமே வேண்டாம். பொறுமையாக மேலேகீழே படிக்கவும்.
-0-0-0-0-0-
நம் தமிழகத்தின், தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகள் யாவை என்றால் அவை பல இருக்கின்றன.
1. ????
2. தொலைக்காட்சி மெகாசீரியல்கள்
3. இலக்கியவாதிகள்
4. பட்டி மன்றங்கள்
5. பேருரைகள்
6. சட்டை போடாமல், ஏன், ப்ராவும் கூடப் போடாமல் தங்கள் மார்பகங்களை முறுக்கிக் கொண்டு, மயக்கம் வரும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு வளைய வரும் சூர்யா, விக்ரம், விஜய் போன்ற இத்யாதி பிலிம் ஆணழகர்கள் (மூச்ச விட்டுத் தொலைங்கடா பாவிங்களா, செத்துக் கித்துப் போய்டப் போறீங்க! புள்ளகுட்டிகாரங்கதானடா நீங்க?)
“இன்டர்நெட்டுக்கு வயது முப்பது”
January 22, 2013
அப்படியானால், எனக்கு வயது ஒன்று. நம்பினால் நம்புங்கள் – மேலே படியுங்கள்.
நம்பாவிட்டால் எக்கேடோ கெட்டு (சுஜாதா (PBUH) அவர்களின் அங்கீகாரம் பெற்ற) யுவகிருஷ்ணா அவர்கள் மிக ஜனரஞ்சகமாக எழுதியிருக்கும் ’இண்டர்நெட்டுக்கு வயது முப்பது’ கட்டுரையைப் படித்துவிட்டு வாருங்கள்.
அப்போதுதான், எனக்கு ஒரு வயது என்று பொய் சொல்லியிருக்கிறேன் – ஆனால் நான் பிறக்கவேயில்லை – இருந்தாலும் நான் ஒரு தேவமைந்தனானதால், என்னால் இப்படி எழுதமுடிகிறது என ஒப்புக் கொள்வீர்கள். நான் என் கால்விரல்களால் தட்டச்சு செய்து மூக்கு நுனியால் என் வாலில்லாப்பூச்சியான செல்ல எலியின் கொட்டையைக் கசக்கி உருட்டி, கர்ஸரை நகர்த்தி, காதால் பார்த்து, கண்ணால் கேட்டு, வாயால் கொட்டாவி விடுவதையும் நீங்கள் வெகு இயல்பாகப் புரிந்து கொள்வீர்கள்.
Read the rest of this entry »
பேருரை (அய்யய்யோ!)
January 18, 2013
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருரை நிமித்தம் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.
உட்கார நிற்க, நம் தமிழர் பண்பாட்டில், அது படும் பாட்டில், எந்த ஒரு கருத்தார்ந்த, செறிவுமிக்க விஷயத்தைப் பற்றிய கூட்டமும், என்னதான் அதன் பாடுபொருள் மிகமிக முக்கியமாக இருந்தாலும், உரையாடலுக்கு மகாமகோ அவசியம் இருந்தாலும் – அதற்கு நூறு பேர் வந்தாலே மிக அதிகம் – கடந்த பல்லாயிரம் வருடங்களாக இதுதாம் நம் பண்டமிழ் முறை, தொல் மரபு. ஆனால் விதம் விதமான பட்டி விக்கிரமாதித்த மன்றங்களுக்கு, அல்லது வழக்காடும் கிழட்டு மன்றங்களுக்கு, இன்னல்பிற நிகழ்ச்சிகளுக்கு, கெக்கெக்கெ என்று சிரிக்க, கூட்டம் அலை மோதும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை என்றால் கேட்கவே வேண்டாம். நிரக்ஷரகுக்ஷிகளின், அரைகுறைகளின் சொர்க்கங்களல்லவா அவை? Read the rest of this entry »
சில தென்னிந்தியப் புல் வகைகள்: ஒரு கையேடு (1921)
December 10, 2012
எப்பொழுதெல்லாம், நம் பாரம்பரியப் புல் வகைகளைப் பற்றி அவை அரிசி போன்ற பெருதானியங்களாக இருந்தாலும் சரி, சிறுதானியங்களானாலும் சரி, மற்றபடி தீவனப் புல், மூங்கில் வகைகளானாலும் சரி – எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் (அவை, நிறையவே வருபவைதான்!) அதை நிவர்த்தி செய்து கொள்ள, தற்காலத்தில் நான் அணுகுவது இந்த புத்தகத்தைத்தான்.
ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!), விடுதலை (ஐயய்யோ!)
December 6, 2012
சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.
அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”
நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும் மிக்க, சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக் களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?” Read the rest of this entry »



